Wednesday, June 13, 2007

@ 12:12 PM எழுதியவர்: வரவனையான்
அதியுயர் பாதுகாப்பு வலயமான செந்தழல் ரவியின் ஆயா வீடு, கூகுள் ஆகியவற்றில் இதுகாரும் ஊடுருவி வந்த புலிகள் தற்போது கடைசியாக நம்பகமான இடத்திலிருந்து வந்த தகவல்களின் படி ஐநா மன்றத்திலும் ஊடுருவி விட்டதாக தெரிகிறது. அதுவும் 30 ஆண்டுகளாக திட்டமிட்டு ஊடுருவி உள்ளதாக தெரிவிக்கபடுகிறது . (இயக்கம் துவங்கியவுடன் மொத வேலையா "தம்பி" ஐநா சபைக்கு ஊடுருவல் அணியை அனுப்பிட்டார் போலக்கிடக்கு ) ஒரு சாதரண ஐ.நா மன்றத்தில் ஊடுருவவே 30 ஆண்டு காலம் எடுத்துக்கொள்ளும் புலிகள், செந்தழல் ரவியின் ஆயா வீட்டில் நண்டுகுழம்பு வேண்டி நுழைய எவ்வளவு ஆண்டுகள் எடுத்துக்கொண்டிருப்பார்கள் என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. இது போல் இனி வரும் காலங்களில் எங்கிருந்தெல்லாம் இப்படியான புலம்பல்கள் வரும் என்று பார்த்தால் , பயம்ம்ம்ம்மாயிருக்கு நாளைக்கு ஒரு வேளை இப்படியும் சொல்லுவார்கள் ஐ நாவின் பாதிப்பிரதிநிதிகள் புலிகளே என்று.என்ன இருந்தாலும் கோத்தபாய'வை உப்படி அழ வைக்ககூடாது. ச்சா ரொம்ப மோசம் புலிகள்.அவரின் அதிகார பூர்வ செவ்வி :P
அதெல்லாம் இருக்கட்டும் இங்கு பாருங்க கொடுமைய, கொஞ்சமும் அச்சமின்றி வட சீன பனிபிரதேசத்தில் ஊடுருவிக்கொண்டிருக்கும் புலிகளை கூகுளின் செய்மதி (ஹிஹிஹி) படம் எடுத்துவிட்டது. ஆயா,கோத்தபாய, ஐநா என்றிருந்த புலிகள் சீனாவிற்குள்ளும் ஊடுருவியது இப்படத்தின் மூலம் தெளிவாகிறதல்லவா.

இதனிடையே புலிகளின் அடுத்த இலக்கு சந்திர மண்டலம் என்று ஒரு தகவல் உலவுகிறது. ம்ம்... என்ன நடக்கபோகுதோ
( ஸ்விஸ், நெதர்லாந்,பிரான்ஸிலிருந்து வரும் புலி எதிர்ப்பு கும்மிகள், "ஜனநாயகம் வேண்டுவோரின் " கேள்விகள் இங்கு அனுமதி இல்லை . றைப் செய்து ரைம் வேஸ்ட் செய்ய வேண்டாம் :P )

6 மறுமொழிகள்:

 1. யோவ் என்னமோ எதோன்னு வந்தா...

  உமக்கு இருக்கு ஒரு நாளைக்கு

  :))))))))))))))))))))))))

 1. ஹிஹிஹி தலைப்பைமட்டும் படித்துவிட்டு நாளை பிபிசியை அழைத்து "சீனாவில் புலிகள் அடாவடி" ஆதாரம் சிக்கியதுன்னு சொன்னாலும் சொல்வார் கோத்தபாய...

 1. 2:18 PM  
  Anonymous said...

  பாசிசபுலிகலின் அட்டகாசம் அதிகமாகிறது, உடனடியாக மக்கள் போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டும்.

  மக்கலே அனிதிரல்வீர்.

 1. Funny...god i had a good laugh after such a long time..

 1. 12:52 AM  
  Anonymous said...

  அமெரிக்காவில் கள்ள ஓட்டு போட்டு தமது ஆதரவாளரை பதவிக்கு கொண்டு வந்த புலிகளுக்கு இதொன்றும் பெரிய வேலையில்லை..
  ஐநாவில் மட்டுமல்ல.. பிரிட்டனைக் கூட புலிகள் மிரட்டி அரசுக்கு எதிராக அறிக்கை விட செய்கின்றனர்.
  உடனடியாக புதிய ஜனநாயக புரட்சியை ஏற்படுத்தி புலிகளை தோற்கடிக்காவிட்டால்.. நாளை முழு உலகையும் அவர்கள் தம் பாசிச பிடியில் கொண்டு வந்து சந்திர மண்டலத்திலும் தமது சர்வாதிகாரத்த பரப்பி விடுவர்.

 1. இந்த பாசிச புலிகளின் அட்டகாசம் என்று தணியுமோ அன்று தான் மட்டை களப்புக்கு விடிவுகாலம்..

  இனிஒரு புதிய நண்டு குழம்பு வைக்கவோ, பாசிப்பருப்பு துகையல் செய்யவோ ஆயா தயங்கும் என்பதில் ஐயமில்லை...

  ஆயாவின் செவ்வியை கொடுத்திருந்தால் நன்றாகத்தானிருந்திருக்கும், ஆனால் அது அதில் வண்ட வார்த்தைகளை வகைதொகையில்லாமல் அள்ளித்தெளித்து வைத்துள்ளது...

  ஹும்...