Monday, June 11, 2007

@ 11:10 AM எழுதியவர்: வரவனையான்

அடடட'ட மண்டை காயுதுதப்பான்னு ஒரு நாளைக்கு குறைந்தது நாலஞ்சு தடவை சொல்லவச்சுபுடுறாங்க நம்ம மக்கள் ! இப்படி சொல்லுற சந்தர்ப்பத்தை ஒரு 10 எண்ணிக்கையில அடக்கி பார்த்த போது வந்ததுதான் கீழே யுள்ள பத்து'ம். (அடைப்பு குறிக்குள் வருவது என் உள்மன கமெண்ட்கள்)

1 ) எப்பாவாச்சும் ஒரு கடிதமோ இல்ல வேற எதோ ஒரு அவசர நிமித்தமாக போனேடுத்து "நண்பா ! ...... அவங்க (பெண்கவிஞர்கள்) நம்பர் இருக்கா ? இல்ல மின்னஞ்சல் முகரி சொல்லுப்பான்னு" கேட்டா " ஏன் கரக்ட் பண்ணபோறிங்களா' அதுக்கு வயசு 30 க்கு மேல ஆச்சே, வேணாம் பாவம் விட்டுடுங்கங்ன்னு" சொல்லி நான் என்னமோ சிவப்பு ரோஜாக்கள் கமலஹாசன் மாதிரி பெண்கவிஞர்களை கரக்ட் பண்ணி கவிஞர் சினேகனை விட்டு ( பெண் கவிகளை அண்ணாசாலையில் வைத்து கொளுத்த வேண்டும் என பேசிய காந்தியவாதி)குத்த சொல்லி "குத்துங்க எசமான் குத்துங்க" டயலாக் பேசிகிட்டு இருக்கிற மாதிரி என்னையே ஃபீல் பண்ன வைக்கிற சுகுணா திவாகரால் மண்டை காயும்.


2) ரொம்ப சீரியசா "சண்டையெல்லாம்" மறந்து சமாதானக்கொடி பறக்கவிட்டு 20 நாளைக்கு பிறகு சுவாரஸ்யமா தோழிகிட்ட பேசிட்டு இருக்கும் போது , "அப்புறம் சாப்டாச்சா'ன்னு ( அடப்பாவி உன்கூடத்தான்யா 2 மணீ நேரமா மொக்கை போட்டேன் போன்ல) ஆன்லைனில் பொட்"டீ"கடை வந்து கேட்க, பின்னாடியே முத்து(தமிழினி) வந்து "பொறுமை பொறுமை, நாம எப்பவும் ரொம்ப பொறுமையா போகோனும்"ன்னு புத்திமதி சொல்ல ஆரம்பிக்க ( தலை, ஒரு ஹாய்தானே சொன்னேன் அதுக்கே அட்வைசா ) இடையில பெ.மகேந்திரன் வந்து "நண்பா, ஒரு பண்ணாடை திட்டி திட்டி கமென்ட் போட்டுட்டு இருக்கு. ஐபி இருக்கு அனுப்பவா, யாருன்னு பார்த்து சொல்லுங்கன்னு கேட்டு "ரென்சன்" பண்ணி( நண்பா, நாம அவங்களை திட்டி "பதிவே" போடும் போது அவனுங்க நம்மள திட்டி கமென்ட் தானே போடுறாங்க , கண்டுக்காதிங்க) அதற்கிடையில் பாலா மாம்ஸ் வந்து ஸ்டேடஸ் மெசேஜில் ஒரு மொக்கை கவிதையை போட்டு கலவரபடுத்த ( அந்த கவிதையை வச்சு பாகச வுக்குகாக தனிபதிவு ஒன்னு போடனும்) கௌரவ வேட நடிகர் மாதிரி அப்பப்ப ஆன்லைன்ல வந்து படிச்சா பல்லை கடிக்கிற அளவுக்கு கோவம் வர பதிவை எங்கிருந்தாவது தூக்கிட்டு வந்து "இதுக்கு பதில் சொல்லியே ஆகனும்ங்க'ன்னு சொல்லி சூளுரைத்து காணாம போய்டுவார் லக்கி . அது வரைக்கும் நல்ல பிள்ளையா அமைதியா இருக்குற முத்துகுமரன் இவங்க எல்லாத்தையும் சமாளிச்சு முடிச்ச கணத்தில் "வணக்கம் தோழர்"ன்னு உள்ள வருவாரு இதுகிடையில் ஒரு மணீ நேரத்துகு முன்னாடி "சாப்பிட்டியாடா லூசு"ன்னு கேட்ட தோழி பதில் வரலைன்னு கோவிச்சுகிட்டு போயிடுவா அப்புறம் மண்டை காயமா என்னாங்க பண்ணும்.

3) சார் ! பார் குளோசிங் டைம் ஏதும் வேணும்னா இப்பவே சொல்லிடுங்கன்னு "பார் டெண்டர்" ( நிஜ டெண்டர்) கேட்க " கடைசியா எனக்கு ஒரு மக் பியர் உங்களுக்கு பிறேம்.. அப்படின்னு கேட்க எனக்கு ஒரு ஸ்மால் விஎஸொபி போதும்னு" சொல்லிட்டு பில் செட்டில் பண்ணிய பிறகு எனக்கு வாங்கிய மக் பியரையும் கடைலாம் அடைச்ச பிறகு எடுத்து குடிச்சிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி போலாமான்னு என் நண்பன் கேட்கும் போது "கிர்ர்ர்"ன்னு மண்டைகாயும்.

4) வாயிருக்க மாட்டாமே ஏதாவது ஒரு கமிட்மென்ட் கொடுத்துட்டு அத நிறைவேற்றவும் முடியாம, போனெடுத்து ஸாரி சொல்லவும் வெக்கபட்டுகிட்டு இருக்கும் போது தேடி பிடிச்சு கோபமா பேசுகிறேன் பேர்வழின்னு நினைச்சுகிட்டு போடுவாரு பாருங்க சோமி ஒரு மொக்கை "மண்டையே இல்லாதவனுக்கு கூட காய்ஞ்சிடும். ( சயந்தா, நீ தப்பிச்சுகிட்டப்பா. கொடுத்துவச்ச ஆளு )


5) சுகுணா திவாகரின் பள்ளித்தோழன் "பாலா" எனக்கும் நண்பந்தான். ஆபிசில் கொடுத்த ஓசி போனில் ராத்திரி 2 மணிக்கு போன் செய்து " அப்புறம் தூங்கிட்டிங்களா'ன்னு( இல்லடா தூக்கு போட்டு செத்து போயிட்டேன்) துவங்கி போடுவான் பாருங்க மொக்கை எல்லாம் போட்டு முடிச்சு சரி சரி மணீ 3.30 ஆகுது காலைல நான் வேலைக்கு போகனும் தூங்கறேன்னு சொல்லும் போது ஸ்னோபிளேக்ஸ் விழுந்துகிட்டு இருந்தாலும் மண்டை காய்ஞ்சு புகை வரும்.

ஒரு முறை போன் பண்ணி எங்க இருக்கிங்கன்னு கேட்க நானும் சுகுணாவும் மதுரையில இருந்தோம் அப்போ. சுகுணா பதிலுக்கு மதுரையிலடான்னு சொல்ல மதுரையில எங்கன்னு அவன் கேட்க . சரி பக்கத்துல எங்கையோதான் இருக்கான்னு நெனைச்சிகிட்டு அமெரிக்கன் காலேஜ் வாசல்ல நிறிகிறோம் ட நீ இங்க வந்துடுறியான்னு சொல்ல அதுகு அவன் "நான் இப்போ திருச்சில இருக்கேன்' சும்மா கேட்டேன் மதுரைல எங்க இருக்கிங்கன்னு'சொல்ல தம்மடிச்சா வரும்ல புகை அது மாதிரி ரெண்டு பேருக்கும் மண்டை காய்ஞ்சு வந்துச்சு. ( பாலாங்கிற பேருக்கும் எங்களுக்கும் "ரொம்ப " நெருக்கம் ஹிஹிஹி )

6) ஒரு காதல் கூட வாய்க்காத என்கிட்ட மொத லார்ஜ் உள்ளே போனவுடன் " 10த் படிக்கும் போது சித்ரான்னு ஒரு பொண்ண லவ் பண்ணினேன், மதியம் சாப்பிட போன போது கீரின் டாப்ஸ் வித் லாங் ரீங்கிள் ஸ்கர்ட் போட்டு போச்சுல்ல (ஆமா, தீ பிகர்ல அது) அது மாதிரிதான் இருப்பா. ப்ப்ச்சு பட் அது ஃகாப் லவ்'ன்னு பிறேம் சொல்லும் போது எனக்கு மண்டை காயுற சூட்ல அப்பளமே பொறிக்கலாம்.

7) சென்னை வந்து 2 மாசம் தங்கிருந்த மாடி ரூமின் காலியாக கிடந்த பக்கத்து அறைக்கு நாங்கள் காலி பண்ண இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் கேரள தேசம்தன்னிலிருந்து "டொக்டருக்கு" படிக்க ரெண்டு வல்லிய பெண்குட்டிகள் வந்து குடியேறினா மண்டை தந்துரி அடுப்பு மாதிரி காயாம என்ன செய்யும் மக்கா...

8) எம்.சி பிராண்டி ஒரு புல்லு குடுப்பா...

நாலு குவாட்டரா வாங்கிக்கோங்க ( நாலு குவாட்டர வாங்கி கயித்த கட்டியா கொண்டு போவேன்)

சரி வேற என்னாருக்கு..

பிளாக் ( உவ்வே )

நெப்போலியன் ( முணு நாளைக்கு தலை வலிக்கிறதுக்கா)

ஆபிஸர்ஸ் சாய்ஸ் ( ஹூ சேய்ஸ், இட்ஸ் சக்கர்ஸ் சாய்ஸ் )

எது வேணும்

இல்ல எனக்கு ஓல்டு காஸ்க் கொடுப்பா..

இல்லை..

செலிபிரேசன்.....

இல்லை..

சரி விஸ்கி என்னாயிருக்கு

சிவாஸ் மட்டும்தான் இருக்கு விஸ்கில ( டேய் அதுக்கு அரை லிட்டர் பெட்ரோல் வாங்கி ஸிப் பண்ணி மப் ஏத்திகிலாம்டா)

வோட்கா வேணுமா ( ஏன் எனக்கு பைல்ஸ் வர வைக்கனும்ன்னு உனக்கு வேண்டுதலா )

சரி உடு, பீர் கொடுப்பா

ம்ம் இருக்கு ஆனா கூலிங் இல்லை பரவாயில்லையா

பிரண்ட்ஸ் படத்தில அழுக்குத்தண்ணிய மேல ஊத்தினவுடன் ராதாரவி காட்டுவாரு பாருங்க ஒரு எக்ஸ்ப்ரசன் அது மாதுரி காட்டி வெளியே வந்தேன் ஒரு டாஸ்மாக்கிலிருந்து , மண்டை காய்ஞ்சதுன்னு தனி வேற சொல்லனுமா என்னா


பத்துப்பாட்டுக்கு திட்டம் போட்டேன் அது இப்போ எட்டுத்தொகையா வந்து நிற்குது.

வாங்க கும்மலாம்

20 மறுமொழிகள்:

 1. தும்பாகி துரும்பாகி தூசியாகி ஆவியாகாமல் இருந்தா சரிதான்.நொந்து நூலாகி காய்ஞ்சு கருவாடாகி இருக்கிறீங்க போல இருக்கே.

 1. வாங்க நளாயினி, என் பதிவுகளில் முதன் முதலில் பின்னுட்டமிட்டு வருகை புரிந்தற்கு மகிழ்ச்சி. நன்றி

  உங்களின் கவிதைகள் எனக்கு நன்கு பரிச்சியம்

 1. 1:32 PM  
  நியாயஸ்தன் said...

  இதப் படிச்சு இப்ப என் மண்டை காயுதே......

 1. 1:49 PM  
  மாகி said...

  ஆக மொத்தம் நீ எல்லார்ட்டயும் மொக்கை போடறத எல்லார்ட்டயும் சொல்லனும்னு நெனச்ச...அதையும் சொல்லிப்புட்ட...அப்புறம் எதுக்கு கலித்தொகை, குறுந்தொகைன்னு தமிழி"லக்கி"யத்த கொல்லற...

  :)))

  மூனு நாளா மெயிலு, போன் எல்லாம் மறந்து நிம்மதியா இருந்தேன்...வந்தவுடனே எவங்கிட்டயாவது கத்தனும் போல இருந்துச்சி நீ தான் மொத போனி...

  எஞ்சாய் மாடீஈஈஈஈஈஈஈஈஈ

 1. 1. உங்களுக்காச்சும் பரவாயில்லை.. போனை எடுத்து மண்டை காய வைக்கிறார். எனக்கு போனை எடுக்காமலேயே மண்டை காய வைக்குறார்.. மூணு நாளா போன் பண்ணி பண்ணி எனக்கு... அப்படி இருக்கு..

  2. ரொம்பத்தான் காய வைக்குறாங்களே சாமி.. இதுக்குத்தான் ஒரு ரெண்டு நாளா நான் google talk-ஐ off பண்ணி வைச்சிருக்கேன்.. நீங்களும் செஞ்சு பாருங்க.. ஆனா உங்களுக்கு இது ஒரு அன்புத்தொல்லைதான.. பொறுத்துக்கலாமே..

  3.இவர் சத்தியமா உங்கள் நண்பர் அல்ல.. இதுக்குத்தான் என்னை மாதிரி நல்ல புள்ளைங்களை கூட்டிக்கிட்டுப் போனீங்கனன்னா சைடீஸை மட்டும் தொட்டுக்கிட்டு உங்களுக்கு கம்பெனி தருவோம்.. எங்க நீங்க எங்களையெல்லாம் திரும்பிப் பார்க்குறீக..?

  4.ஸாரி நோ கமெண்ட்ஸ்.. சோமி ஸார்.. சயந்தன் ஸார்.. பத்தி எனக்குத் தெரியாது. அதுனால..

  5. //(பாலாங்கிற பேருக்கும் எங்களுக்கும் "ரொம்ப " நெருக்கம் ஹிஹிஹி)// அதான் 'அதோட' ஜாதகம் ஊர் பூரா நல்லாத் தெரியுமே.. அப்புறமெதுக்கு 'பாலா'ன்ற பேரையெல்லாம் மனசுல வைச்சிருக்கீங்க சாமி..

  6.நான் நம்பத் தயாரா இல்லே. இம்புட்டு அளப்பறை பண்றவருக்கு ஒரு பிகர்கூடவா கிடைச்சிருக்காது.. இது திண்டுக்கலையே கேவலப்படுத்துற மாதிரி இருக்கு..

  7.அச்சச்சோ.. மஞ்சள்காமாலை, அம்மை போட்டிருச்சுன்னு எதுனாச்சும் டகுல் வுட்டுட்டு இருந்திருக்கலாமே.. இந்த பீலிங் மனசை விட்டுப் போக எத்தனை டாஸ்மாக் ஏறி இறங்கினாலும் முடியாதே.. ச்ச்சோசோசோசோ..

  8.ஏன் டாஸ்மாக் கடைக்குப் போகாமயே இருக்க முடியாதா? போகணும்னு நினைக்கிற நேரம் நாலு புஸ்தகத்தை எடுத்து வைச்சிட்டு மனப்பாடம் பண்ணலாமே ஸார்..

  பின்னூட்டம் போடவே கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு உக்காந்திருந்தேன்.. இப்படி ஒரு பிட் சினிமாவைப் போட்டு என் மண்டையையும் காய வைச்சு பின்னூட்டம் போட வைச்சுட்டீகளே துரை..

  நீங்க ரொம்ப சுவாரசியமான ஆளுதான் சாமி..

  நூறு வயசு நல்லாயிருங்க..

 1. ரெகுலர் வாசகன் :-)

  இப்ப GERD தேவலையா?

 1. 4:59 PM  
  உங்கள் தமிழன் said...

  உங்க பிராண்டு M.C பிராந்தியா, பேசாம R.C GOLD போயிருங்க சூப்பரா இருக்கும்.

 1. //முபாரக் said...
  ரெகுலர் வாசகன் :-)

  இப்ப GERD தேவலையா? //

  அன்பிற்கு நன்றி முபாரக்,

  ஒரே நாளில் முடிவு செய்து ஜெலுசில், டபுள் ப்ரொடக்சன் ஆன்டாசிட் ரிப்ளெக்ஸ் போர்ட், ஃபென்டொம்ரொசோல் ,டொமிபெரிடொன் சஸ்டைன் ரிலிஸ் உள்ளீட்ட எல்லா கருமத்தையும் தூக்கி எறிந்த பின் பரவாயில்லை. எப்பாவச்சும் ஏப்பமோ இல்ல வாயு பிடிப்போ வந்தா வெந்தயம் ஊற வச்சு சாப்பிட்டா ஒகே ஆகிடுது.

 1. தொடர்பு கொள்ளுங்க; நிறையப் பேசுவோம்னு சொல்லி நம்பரையும் போட வேண்டியது!
  அப்பால, குத்துதே, குடையுதேன்னு அலற வேண்டியது!
  வர, வர, இதே வயக்கமப் பூடுச்சுப்பா, நாட்ல!
  :))

  ரொம்ப நல்லா இருக்குங்க!

 1. //கௌரவ வேட நடிகர் மாதிரி அப்பப்ப ஆன்லைன்ல வந்து படிச்சா பல்லை கடிக்கிற அளவுக்கு கோவம் வர பதிவை எங்கிருந்தாவது தூக்கிட்டு வந்து "இதுக்கு பதில் சொல்லியே ஆகனும்ங்க'ன்னு சொல்லி சூளுரைத்து காணாம போய்டுவார் லக்கி //

  உங்களையும் லக்கி விட்டு வைக்கறதில்லையா அது சரி இன்னும் எத்தனை பேரோ :)

 1. முத்துக்குமரன் அப்படித்தான் யாருகிட்டயும் பேச மாட்டாரு ஆனா திடீர்னு வந்து இது யாரு அதுயாருன்னு கேட்ட்டு மணடை காய வைப்பாரு :)

 1. 9:33 PM  
  Anonymous said...

  hi varavanaiyan
  keep itup

 1. 10:42 PM  
  வெயிலான் said...

  /////// ராத்திரி 2 மணிக்கு போன் செய்து " அப்புறம் தூங்கிட்டிங்களா'ன்னு( இல்லடா தூக்கு போட்டு செத்து போயிட்டேன்) ///////

  படித்துக் கொண்டிருக்கும் போதே, எனை மறந்து சத்தமாக சிரித்து விட்டேன்! சக ஊழியர்கள் என்னை ஒரு மாதிரி நான் அசடு வழிய.....

  மனம் விட்டு சிரிக்க வைத்ததற்க்கு நன்றி!

 1. இது பத்து பாட்டுகள் இல்லை.
  பத்து 'பாடு'கள்.

  படாத 'பாடு'பட்டிருக்கீங்க.

 1. அதாவது வனை( வரவனைதான் வேறென்ன), சமயத்துல தலைக்கு குளிச்சுட்டு காயவைக்க டைம் இல்லாம சடைய போட்டுட்டு வெளிய கெளம்பிருவேன்.

  but, தல காஞ்சாவுனேமே என்ன பண்றது. பாப்பேன். போன் பண்ணுங்க நிரம்ப பேசுவோம் சொல்வாரேன்னு உங்களுக்கும் பண்ணுவேன். இப்பிடிங்குறதுக்குள்ள மண்ட (I mean கூந்தல் )காய்ஞ்சிரும்ன பாருங்க!!

  ம்ஹூம் ஒவ்வொருத்தங்களுக்கும், ஒவ்வொரு அனுபவம், சிலருக்கு வேறவழியில்லாம, விரும்பியே

 1. நீண்ட நாளைக்கப்புறம் மனம்விட்டு சிரிக்கவைத்த பதிவு...

  சூப்பர்...!!!!!!!

 1. வரவனை, ரொம்ப பொறுமைசாலி தான் போங்க...படித்தேன், ரொம்ப சிரித்தேன்...அதற்கு நன்றி..

  //6.நான் நம்பத் தயாரா இல்லே. இம்புட்டு அளப்பறை பண்றவருக்கு ஒரு பிகர்கூடவா கிடைச்சிருக்காது.. இது திண்டுக்கலையே கேவலப்படுத்துற மாதிரி இருக்கு..//

  எனக்கும் இதே சந்தேகம் தான்...

 1. நீங்க எழுதுன பத்துப்பாட்டை படிச்சதுமே எனக்கு குத்துப் போடணும் மாதிரியிருக்கு!

 1. சோமி கொஞ்சம் போதை கூடப் போனா யாருக்கும் போன் பண்ணி பேசற ஒரே வாக்கியம், 'நீங்களெல்லாம் பெரிய ஆளுங்க. என்கூடல்லாம் பேசமாட்டீங்க.". இதை என்னிடம் 532.5 பேர் தலையிலடித்து சத்தியம் பண்ணியிருக்கிறார்கள். அப்புறம் பாலாவைச் சென்னையில் இருந்துக்கிட்டே திண்டுக்கல் பஸ்டாண்ட் பாருக்கு வரச்சொல்லிக் கலாய்க்கவில்லையா? (நான் வேண்டாம் வேண்டாமென்று சொல்லியும்)

 1. //(ஆமா, தீ பிகர்ல அது)//

  டீசண்டா எழுதுறீங்களாக்கும்.