Friday, June 08, 2007

@ 11:50 AM எழுதியவர்: வரவனையான்

தங்களின் செயல்களின் மூலம் தாங்கள் ஒரு இன ஒடுக்குமுறை அரசு என்று சிறீலங்கா உணர்த்துகிறது, வழக்கம் போல் எம்.கே நாராயனன்களும் துக்ளக்களும் "இந்து" ராம்களும் தங்கள் தமிழ்விரோத ஊளையை இட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான தமிழர்களை கொழும்புவைவிட்டு பலவந்தமாக வெளியேற்றியுள்ளது ரஜபக்ஸே தலைமையிலான இனவெறி அரசு செஞ்சோலை வங்காலை என்று அதன் கொலைகரங்கள் நீண்டு தமிழரின் வாழ்வை பறிக்கும் வேலையில் ஒரு பக்கம் ஈடுபட்டுக்கொண்டு மறுபக்கம் இது போன்ற ஒடுக்குமுறை நடவடிக்கையிலும் ஈடுபடுவது சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு தெரிகிறதா இல்லை சர்வதேச சமூகம் என்று ஒன்று உள்ளதா என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை.

விரைவில் இன்னபிற சிங்கள பகுதிகளில் இருந்தும் தமிழர்கள் பலவந்தமாய் வெளியேற்றப்படும் காலம் அதிக தூரத்தில் இல்லை என்றே கருத வேண்டியுள்ளது. இதனிடையே சிங்கள அமைச்சர்கள் சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக அலுவலகம் வந்து கலந்துரையாடி சென்றுள்ளனர். பிரச்சினையின் போக்கையும் தமிழக தமிழர்களின் கவனத்தை வேறு திசையில் திருப்புவதற்கான முயற்சியாகவே இச்சந்திப்பை காணவேண்டியுள்ளது. தமுமுக திமுக அரசை ஆதரித்துக்கொண்டிருக்கும் கட்சி. பாகிஸ்தான் கொழும்பில் கால் வைத்துள்ளது என்கிற செய்திகள் எழும்பிக்கொண்டிருக்கும் நிலையில், மாநில அரசுக்கு ஆதரவான ஒரு சிறுபான்மை அமைப்பை சந்தித்து அமைதி முயற்சி குறித்து பேசிச்சென்றார்கள் என்று வெளியான செய்தி ஒரு கேள்வியையும் எழுப்புகிறது. இது போல அமைதி முயற்சிக்கு இங்கிருக்கும் எந்த ஒரு தமிழ் அமைப்பையும் சந்திக்க இது வரை முயலவில்லையே சிறீலங்காவை சேர்ந்த எந்த ஒரு அமைச்சரோ இல்லை பாராளுமன்ற உறுப்பினரோ.

கிடக்கிறது கிடக்க கிழவியை தூக்கி மனையில வை என்கிற கதையாய் இன்னமும் மீனவர்களை கொன்றது புலிகள்தான் என்றும் அவர்கள் விமானபடை வைத்திருப்பதை இந்தியா விரும்பவில்லை என்றும் பேட்டிகொடுத்துகொண்டு அலைகிறார்கள் அதிகாரிகள். தன் சொந்த சுய விருப்புவெறுப்புகளுக்காக ஒரு நாட்டின் கருத்தாய் தன் கருத்தை பேசி வருபவர்கள் நாட்டுக்கு பிடித்த புற்றுநோயே ஆகும். இந்தியா விரும்பவில்லை என்றால் தமிழ்நாட்டிலிருந்து மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினரை கலந்து எடுக்கபட்ட முடிவா அது. 30 வருடமாய் துருப்பிடித்து போன வெளியுறவுகொள்கையை வைத்துக்கொண்டு இந்த "கிராஸ் பெல்ட்" அதிகாரிகள் "இந்தியாவின் கருத்து" என்று இந்தியர்களுக்கே புதிதான செய்திகளை இந்தியர்கள் மீது கருத்து வாந்தி எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.


ஒடுக்குமுறையை கையாண்டு பலவந்தமாய் கொழும்புவிலிருந்து வெளியேற்றபட்ட தமிழர்களுக்கு ஆதரவாய் என் எதிர்ப்பை இப்பதிவின் வாயிலாய் பதிவு செய்து தேனிசை செல்லப்பா பாடிய பாடலின் வரிகள் கொண்டு முடிக்கிறேன்

" நாங்க வேற நாடையா ' நீங்க வேற நாடு"
நிறைய வேறுபாடையா' நிறைய வேறுபாடு"

"சிங்கக்கொடி உங்களுக்கு" "புலிக்கொடி எங்களுக்கு"
"நாங்க வேற நாடையா நீங்க வேற நாடு"

65 மறுமொழிகள்:

 1. arumaiyaana karuththukkaL senthil!

 1. //"சிங்கக்கொடி உங்களுக்கு" "புலிக்கொடி எங்களுக்கு"
  "நாங்க வேற நாடையா நீங்க வேற நாடு"//

  சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

 1. அய்யய்யோ... திரா"விட" பெத்தடின்கள் பிரிவினை வாதம் பேசுறாங்கோ.... தேசப்பிதாக்கள் எல்லாரும் ஓடியாங்கோ.... ஓடியாங்கோ....

 1. ஒரே தேசம் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களை இட்டம் நகர்த்தும் இலங்கையின் மனிதாபினம் அற்ற செயலை எந்ந ஒரு ஊடகமும் அரசும் கண்டிக்காதது பெரும் வருத்தம் தருகிறது...

 1. இன்னொரு வகையில் பார்த்தால் ...

  இந்த 'நாடு கடத்தலை' ஈழம் என்று ஒரு தனி நாடு உண்டு...அதனால் தமிழவர்கள் சிங்களநாட்டில் இருத்தல் கூடாது...தமிழரின் உறைவிடம் தமிழர் தாய் தேசமான ஈழம் என சிங்கள இன அரசு ஒப்புக் கொண்ட ஒரு செயலாகவேபடுகிறது...

 1. 100வது பதிவு போட்ட வலையுலக வள்ளுவன் வரவனைக்கு வலைப்பூ சுனாமியார் மன்றம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இன்னமும் ஆயிரம் பதிவுகள் போட்டு ஆதிக்கசக்திகளுக்கு ஆத்திரம் மூட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 1. 12:30 PM  
  திண்டுக்கல் தீரன் மன்றம் said...

  தமிழ் தொண்டாற்றும் எங்கள் தலை போட்ட செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள். தலையின் தலை தானைத்தலைவன் டாக்டர் கலைஞர் போடப்போகும் செஞ்சுரிக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

  -திண்டுக்கல் தீரன் வரவனை வெறியர் மன்றம்

 1. 12:31 PM  
  Anonymous said...

  எங்கே என்னுடைய பின்னூட்டம் ?

  செந்தழல் ரவி

 1. //எங்கே என்னுடைய பின்னூட்டம் ?

  செந்தழல் ரவி //


  போட்டாத்தானே வரும்


  :))))))))))

 1. 100 பதிவு போட்ட வரவனையாரையும், 100,000 பின்னூட்டங்கள் போட்ட செந்தழலாரையும் வாழ்த்துகிறோம்.

  செந்தழலார் கொலைவெறிப்படை
  மடிப்பாக்கம், சென்னை-600091.

 1. 100 பதிவுகள் போட்ட வரவனைக்கு பின்நவீனத்துவ வாழ்த்துக்கள்!

  இவன்
  பின்நவீனத்துவ பிடாரி சுகுணா திவாகர் சிந்தனை மன்றம், சென்னை-17.

 1. யோவ் நான் டோண்டு ராகவன் சத்தியமா பின்னூட்டம் போட்டேன்யா..

  தேடிப்பாருய்யா ப்ளீஸ்...

 1. 12:46 PM  
  கோபம் வராத குடுமி ஐய்யர் said...

  //ஆத்திரம் மூட்டுமாறு //

  அதென்னா அடுப்பா மூட்டறதுக்கு? எங்களுக்கெதுக்கு ஓய் ஆத்திரம் வருது?
  வந்தா .....ரம்தான் வரும் :

 1. எங்க ஏரியாவில கொசு மருந்து அடிக்க மாட்டேங்கிறாங்க. நீங்க கொஞ்சம் வந்து போராட்டம் செஞ்சு ஒரு இன்ஸ்பெக்குட்டர கொளுத்தரீங்களா ப்ளீஸ்

 1. 12:47 PM  
  செந்தழல் ரவியின் போலி said...

  இங்கே போலியாக வருவது ரவியின் போலி எண்பது உண்மை யில்லை

 1. புதிய வானம் புதிய பூமி
  எங்கும் பனிமழை பொழிகிறது
  நான் வருகையிலே என்னை வரவேற்க
  வண்ண பூ மழை பொழிகிறது.

  ஓ ஹொ ஹொ ஹூண்டாய் சாண்ட்ரோ எக்ஸல் புல்லீ டோடட் எவ்ளோ ஆவுது ?

 1. 12:48 PM  
  பின்னூட்ட முன்நவீனத்துவக் குழு said...

  முன்னனி வலைப்பதிவர் மன்றத்தின் சார்பில் 100க்கு வாழ்த்துக்கள்

 1. வரவணை அய்யா

  இப்படியாவது ஈழத்தமிழர் ஆதரவு பெற்று ஒரு கப்பல் வாங்கி உடலாம்னு பார்த்தீங்கன்னா அது நடக்காது.

  அன்புடன்
  பாலா

 1. 12:49 PM  
  Anonymous said...

  4.06 லேக்ஸா வெண்று

 1. ப்ளீஸ் என்னுடைய ப்ரொபைல் மேல க்ளிக் செய்யாதேள்.

 1. 12:50 PM  
  அம்மான்னா சும்மாவா said...

  எங்க ஏரியாவில கொசு மருந்து அடிக்க மாட்டேங்கிறாங்க. நீங்க கொஞ்சம் வந்து போராட்டம் செஞ்சு ஒரு இன்ஸ்பெக்குட்டர கொளுத்தரீங்களா ப்ளீஸ்

  இப் பின்னூட்டம் திமுக திம்மிகளின் வேலை எனவே திராவிடம் பேசும் பதிவர்களை கொளுத்துவோம்

 1. 12:51 PM  
  Anonymous said...

  //விரைவில் இன்னபிற சிங்கள பகுதிகளில் இருந்தும் தமிழர்கள் பலவந்தமாய் வெளியேற்றப்படும் காலம் அதிக தூரத்தில் இல்லை என்றே கருத வேண்டியுள்ளது.//

  தமிழர் பகுதிகளில் ஆக்கரமித்திருக்கும் தமிழரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சிங்கள இராணுவமும் விரைவில் பலவந்தமாக வெளியேற்றப்படும்.

 1. அடுப்புக்கரிக்கு ஆயாவோட சிறுவாட்டுக்காசுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு.

  அதே மாதிரி இந்த பதிவுக்கும் எனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு.

  கண்டுபிடி ?

 1. 12:52 PM  
  மசாபி மாபியா said...

  எங்கள் ப்ரவுசிங் சென் டரில் தமிழ்மணம் படித்தால் 3 மணிக்கு 1 மணி ப்ரீ

 1. 12:52 PM  
  Anonymous said...

  நானும் இருக்கேன்.

 1. 12:52 PM  
  Anonymous said...

  நானும் இருக்கேன்.

 1. 12:53 PM  
  Anonymous said...

  i am not kodanadu estate owner.

  Senthil,
  varavanai village.

 1. 12:54 PM  
  என்னான்னு தெரியலை said...

  00 00
  0000000
  00000
  000
  0

 1. 12:55 PM  
  Anonymous said...

  ரிலீஸ் பண்ணுவியா மாட்டியா

  நான் போறேன்.

 1. 12:56 PM  
  வரவணையான் எதிரி said...

  எனக்கும் வரவணைக்கும் சண்டை

  ஆனா பேசிக்குவோம்

 1. 12:57 PM  
  அகிம்சை ரவி அமைதிப் பேரவை அல்லூர் said...

  செந்தழலுக்கு சங்கம் கண்ட சிங்கங்கள் வாழ்க

 1. 12:58 PM  
  கால் வெந்த காவலர் said...

  உன்ன என்னா ஜெயில்லயா போட்ட்ருக்காங்க?
  ரிலீஸ் பன்றதுக்கு?

 1. 12:59 PM  
  பழனி முருகன் said...

  எம்.எல்.ஏ பதவி என் இடுப்பில் இருக்கும் கோவணம்

 1. 12:59 PM  
  தெக்கிக் காட்டான் ரசிகர் மன்றம் said...

  ஏன் இப்படி?

 1. பின்னூட்டக் கயமைக்கு வரவனையானை தூண்ட வேண்டாம் உள்ளே இழுத்துப் போடுங்கள்

 1. 1:02 PM  
  டைம் கீப்பர் said...

  நான் இருப்பேன் நீங்க எத்தனை மணிவரைக்கும் இருப்பீங்க?

 1. 1:04 PM  
  ஜெயா டிவி said...

  சன் டிவி இன்சாட்டுக்கு மாறிடிசாம்பா

 1. 1:06 PM  
  Anonymous said...

  //கொழும்புவை//

  கொழும்பை

  கொழும்பிலிருந்து

  கொழும்பில்

  இப்படி வரவேண்டும்.

  நல்லதொரு இடுகைக்கு நன்றி வரவனையான்.

  பி.கு.: wtf இங்கேயும் அனானி ஆட்டமா? மொக்கைப்பதிவுகளில் போய் ஆடுங்கய்யா

 1. 1:07 PM  
  அமுக அல்சூர் கிளை said...

  ஊருக்கு புறப்படும் எங்கள் கழகக் கண்மணிக்கு டாடா

 1. 1:09 PM  
  தபால்காரன் தங்கையா said...

  //இங்கேயும் அனானி ஆட்டமா? மொக்கைப்பதிவுகளில் போய் ஆடுங்கய்யா//

  ஏலா என்னலா பன்றே இங்க ? போ போய் எங்காவது மொக்கைல போய் வெலாடுலா

 1. //ஒடுக்குமுறையை கையாண்டு பலவந்தமாய் கொழும்புவிலிருந்து வெளியேற்றபட்ட தமிழர்களுக்கு ஆதரவாய் என் எதிர்ப்பை இப்பதிவின் வாயிலாய் பதிவு //

  உங்களின் பதிவின் வாயிலாக, பலவந்தமாய் கொழும்புவிலிருந்து வெளியேற்றபட்ட தமிழர்களுக்கு ஆதரவையும் ,சிங்கள அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்.


  ********

  இனி...மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் லட்சணம் குறித்து.....

  //இந்தியா விரும்பவில்லை என்றால் தமிழ்நாட்டிலிருந்து மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினரை கலந்து எடுக்கபட்ட முடிவா அது.//

  மாநில முதல்வர் "மத்திய அரசின் கொள்கைதான் எங்கள் கொள்கை" என்று அறிவிக்கும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அனைவரின் ஒப்புதல் பெற்றா அறிவித்தார்? அல்லது மக்களவை உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்தாரா?

  அப்படி நடந்திருக்குமேயானால் உங்களின் கேள்விக்கு விடை.... ஆமாம் இது கலந்து எடுக்கப்பட்ட முடிவுதான்..மாநில முதல்வரின் ஒப்புதலே அதற்கு சான்று.


  எதிர்ப்புகள் ஏதும் இல்லாதவரை மத்திய/மாநில கொள்கைகள் அதன் அதன் அரசுகளாலேயே (முதல்வர்/பிரதமர்) தீர்மானிக்கப்படுகிறது.அந்த அரசின் கொள்கைப்படியே அதிகாரிகள். தவறு எங்கே உள்ளது? உட்கட்சியிலேயே ஜனநாயகப் போக்கு இல்லாத போது அவர்கள் வழிநடத்தும் நாட்டில் எப்படி இருக்கும்?

  தவறான கொள்கைகள் என்றால் அதை இன்னும் வைத்து அழகுபார்க்கும் அரசியல் தலைகள்தான் முதல் குற்றவாளிகள்.

  ***

  1.மந்திரிகள்/அதிகாரிகள் கூறும் கருத்துக்கள் நாட்டின்(இந்தியாவின்) கருத்துதான். நானோ நீங்களோ அதை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும்கூட...

  2.ஒரு அதிகாரி/மந்திரி நாட்டின் கருத்தாக ஒன்றை அறிவிக்கும்போது அதில் தங்களுக்கு(ஏதேனும் ஒரு மாநிலத்துக்கு உ.ம்: தமிழ்நாடு) மாற்றுக் கருத்து இருக்குமானால் அவர்கள் அதை பராளுமன்றத்தில் எதிர்ப்பாக தங்களின் பிரதிநிதிகள் மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும் அதன் தீவிரம் கருதி மாநில முதல்வருடன் இவர்கள் கலந்து ஆலோசித்து ஜனநாயக வழியில் போராட வேண்டும்.


  என்றாவது இவர்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி ..

  *மாநில (தமிழக )அரசுக்கும் , மத்திய (இந்திய) அரசுக்கும் இடையில் உள்ள கொள்கை பிரசனைகள் என்ன? அதை எப்படி தீர்ப்பது

  *மாநில மக்கள் மத்திய அரசிடம் எதிர் நோக்கும் உடனடித்தேவை என்ன ..அதன் தீர்வாக நாம் என்ன திட்டங்கள் வைத்துள்ளோம்..அதை எவ்வாறு பாராளுமன்றத்தின் பார்வைக்கு கொண்டுவருவது

  *அண்டை மாநில உறவுகளை எப்படிப் பேணுவது
  *...,

  போன்ற பிரச்சனைகளைப் பேசி இருப்பார்களா?

  //30 வருடமாய் துருப்பிடித்து போன வெளியுறவுகொள்கையை வைத்துக்கொண்டு//

  இந்த 30 வருட காலங்களில் நீங்கள் சொல்லியுள்ள "தமிழ்நாட்டிலிருந்து மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள்" இதை மாற்ற என்ன செய்தார்கள் என்று சொல்ல முடியுமா?

  ****

  உடனடியாக கவனம் பெறும் பிரச்சனைகளின் பட்டியலில் நீங்கள் சொன்ன பிரச்சனை இல்லை..இதோ இவர்கள் உடனடியாக களமிறங்கும் நாட்டின் சில முக்கிய பிரச்சனைகள்...

  கட்சித்தலைகள்:
  ----------
  பேரன்களின் கேபிள் டிவிக்கு பிரச்சனை என்றால் உடனே ஆக்சன்

  அதே பேரன் தன் மகனைத் திட்டினால் உடனே ஆக்சன்

  எந்த துறை வேண்டும் மகனுக்கு அல்லது பேரனுக்கு..உடனே ஆக்சன்

  தோழிக்கு பிரச்சனை என்றால் உடனே கஞ்சா கேஸ்

  ஜாதகம் சொன்னால் அடுத்த கட்சி தலைவனை இரவில் உடனேயே பிடி

  சதிக் குரு சொன்னபடி கேட்கலையா தூக்கி எறி கேசு போடு

  தொண்டர்கள்:
  ---------
  தலைவனின் மகனை பேரன் மட்டம் தட்டுகிறானா கொழுத்து பேரனின் வேலையாட்களை.

  தலைவியின் சொத்து பற்றிய கேஸ்/குடிக்கும் பழக்கம் பற்றி கவிதையா கொளுத்து சில மாணவிகளை அல்லது போலீசை


  இப்படி கட்சிகளும் தொண்டர்களும் இருக்கும் ஊரில் இருந்து கொண்டு என்ன செய்வது?

 1. 1:29 PM  
  சின்னப்பொண்ணு said...

  //இப்படி கட்சிகளும் தொண்டர்களும் இருக்கும் ஊரில் இருந்து கொண்டு என்ன செய்வது?//

  அதனாலே தான் பாரினுக்கு போயிட்டு வக்கணை பேசுறீங்களா மாமா?

 1. அதுக்குள்ளே 40 ஆயிடிச்சா? :-(

 1. கல்வெட்டு உங்களின் தமிழக அரசியல் குறித்தான பெரும்பாலான கருத்துகளுடன் உடன் படுகிறேன் அதே வேளையில் பாரதீய ஜனதா அரசில் இதுபோன்று பாதுகாப்பு துறை அலோசகர் தன்னிச்சையாக பேட்டி கொடுத்துக்கொண்டு திரியவில்லை அதுபோல் இவர் தமிழின விரோதியென தமிழ்நாட்டின் அனைத்து அமைப்புகளாலும் குற்றஞ்சாட்டபடுபவர் அப்படியபட்டவர் குற்றஞ்சாட்டப்படுகிற காரணத்தால் அப்பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது வழமை ஆனால் இவரோ சுய வெறுப்பின் பால் தேவையில்லாமல் தலையை நீட்டி விவகாரம் இழுக்கிறார் என்றே உணரமுடிகிறது.

  இவர் கடந்த முறையும் இந்த முறையும் இதே அணுகுமுறையுடன் தான் நடந்துகொண்டிருக்கிறார் எனபது வருந்ததக்கவிடயம்

 1. நூறாவது பதிவில் நல்லதொரு கட்டுரை
  //"சிங்கக்கொடி உங்களுக்கு" "புலிக்கொடி எங்களுக்கு"
  "நாங்க வேற நாடையா நீங்க வேற நாடு"//
  நச்சென்ற வரிகள்.

  நூறு பதிவுகளில் என் முதல் பின்னூட்டம் என எண்ணுகிறேன்.

  வாழ்த்துக்கள்.

 1. சின்னப்பொண்ணு,

  //அதனாலே தான் பாரினுக்கு போயிட்டு வக்கணை பேசுறீங்களா மாமா?//

  :-)))

  நான் எங்கே இருகிறேன் அல்லது என்ன செய்து கொண்டு இருக்கிறேன் என்பதற்கு பதில்...

  என்னை உனக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லையெனில், நீ என்னைப்பற்றி என்ன தெரிந்துகொண்டாலும் புரிந்துகொண்டதாக நினைத்தாலும் அதுகுறித்த அக்கறையோ மரியாதையோ எனக்கில்லை என்பதே.

  (மேற்சொன்ன வாக்கியம் பதிவர் சன்னாசியின் மேற்கோளில் இருந்து)

 1. வரவனை/செந்தில்,

  //இவரோ சுய வெறுப்பின் பால் தேவையில்லாமல் தலையை நீட்டி விவகாரம் இழுக்கிறார் என்றே உணரமுடிகிறது. //

  அதிகாரிகளின் செயல்பாடுகள் எப்போதும் அரசாங்கத்தின் சட்டம்/கொள்கை + அவர்களின் சுயவிருப்பு வெறுப்பு என்றுதான் இருக்கும்.

  இதை நீங்கள் ஒரு பேங்க் குமாஸ்தா லோன் வழங்க கடைபிடிக்கும் நடைமுறைகளில் இருந்தே தெரியும்.

  இவர்களைக் கட்டுப்படுத்தும் லகான் துறை மந்திரிகளிடம் உள்ளது.மந்திரிகளின் லாகான் கட்சித் தலைமையிடம் உள்ளது. யார் குற்றவாளி சொல்லுங்கள்?

  ஒவ்வொரு அரசுக்கும் அதற்குத் தேவையான (அதாவது அவர்களின் விருப்பங்கள்/தேவைகளை நிறைவேறும்) அதிகாரிகளை அருகில் வைத்துக் கொள்ள அதிகாரம் இருக்கும்போது இது போன்ற அதிகாரிகள் தொடர்வது ஏன் என்று யோசித்தீர்களா?

  //இவர் கடந்த முறையும் இந்த முறையும் இதே அணுகுமுறையுடன் தான் நடந்துகொண்டிருக்கிறார் எனபது வருந்ததக்கவிடயம்//

  உண்மைதான்...

  By doing the same thing over and over again you can not expect different results.

  தமிழகத்தலைவர்கள் அவர்களின் பேரன்/மகன்/தோழி விசயத்தில் காட்டும் அக்கறையை இங்கேயும் காட்டினால் அன்றி, இந்தியாவின் ஈழம்சார்ந்த கொள்கைகளும்,அதை செயல்படுத்தும் அதிகாரிகளும் இப்படியே இருப்பார்கள்.

  இந்திய/தமிழக அரசியல் தொழில் என்ற அளவிற்கு ஆகிவிட்டது. யார் கொள்ளை அடிக்கிறார்கள் என்பதில்தான் மாற்றம் ஏற்படுமே தவிர கொள்கைகளில் மாற்றம் ஏற்படும் என்று எண்ணமுடியவில்லை.


  **

 1. அதென்ன, 'கொழும்புவிலிருந்து'...?
  கொழும்பிலிருந்து னு எழுதுவதுதான்
  சரி னு ஒரு பதிவில் வந்ததே; பார்க்கவில்லையா?

 1. எம் கே நாராயணன் என்ற தமிழினத் துரோகிக்கு என் கண்டனங்கள்.

 1. 5:33 PM  
  Anonymous said...

  தமிழ் நாட்டுக்குள்ளேயே ஒருத்தர ஒருத்தர் அடித்துக் கொலை செய்வதும், போலிசை எரித்துக் கொல்லவும் செய்யும் திரா'விட'ங்களே, முதலில் இதை நிறுத்திவிட்டு பின்னர் சிங்களத் தமிழருக்கு கவலைப்படுங்க....பிணந்தின்னி கழுகுகளா

 1. 8:21 PM  
  Anonymous said...

  தி ஹிண்டு, துக்ளக் போன்றவர்கள் இலங்கை உச்ச நீதி மன்றம் தானே வெளியேற்றலை (நாடு கடத்தலை?) தடை செய்துவிட்டதே என்று இலங்கைக்கு நற்சான்றிதழ் வழங்குவார்கள்!!!!!!

 1. சொற்கள் மாறிவர வேண்டும்.
  "நீங்க வேற நாடையா
  நாங்கள் வேற நாடு"

  இப்பாடலை என் வலைப்பதிவொன்றில் ஒலிவடிவில் பதிந்துள்ளேன்.
  கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

  நீங்கவேற நாடையா நாங்க வேறநாடு

 1. ///உங்களுக்கு கட்டிச் சம்பல் எங்களுக்கு ஒடியற் கூழ் நீங்கள் வேறு நாடையா நாங்கள் வேற நாடையா//

 1. 2:42 AM  
  mike said...

  very good article

 1. 9:27 AM  
  Anonymous said...

  என்னைக்கேட்டா நம்ம பழ நெடுமாறனை என் எஸ் ஏ வா போட்டா நல்லா யிருக்குமே.மஞ்ச துண்டு புது டில்லியில் ப்ளாக்மெயில் செய்து இதை சாதிக்கலாமே.செய்யுமா?

 1. வரவனை,
  மனதிற்கு சற்றே ஆறுதல் அளிக்கும் பதிவு.
  நன்றி

 1. 2:11 PM  
  Anonymous said...

  இந்த புலிப்பசங்க இசுலாமியரையெல்லாம் துரத்தினப்போ நீங்கள்ளாம் பிடுங்கப் போயிருந்தீங்களா?

  அப்துல் புகாரி

 1. 217-162-82-143.dclient.hispeed.ch என்கிற IP எண்ணில் வந்த அனானி சொந்த பெயரில் வந்து கருத்திட தயக்கமென்ன

 1. 3:50 PM  
  Anonymous said...

  //217-162-82-143.dclient.hispeed.ch என்கிற IP எண்ணில் வந்த அனானி சொந்த பெயரில் வந்து கருத்திட தயக்கமென்ன//
  எந்தப்பெயரா இருந்தா என்ன கருத்துக்கு பதில் தந்துட்டு போறதுதானே? அமுகவில இருந்துக்கிட்டு இதென்ன வெளக்கெண்ணைப் பேச்சு வரவனையான்?

  அப்துல் புகாரி

 1. உங்கள் கேள்வியால் வெட்கித்தலைகுனிகிறேன் புகாரி ! ஆனால் அந்த அனானி நீங்களல்ல .


  அமுக தொண்டர்களின் தொண்டன்
  வரவனையான்

 1. 7:31 AM  
  Anonymous said...

  //உங்கள் கேள்வியால் வெட்கித்தலைகுனிகிறேன் புகாரி !//
  என்னோட எந்தக் கேள்விக்கு இந்த பதில், வரவனையான்?

  அப்துல் புகாரி

 1. //என்னோட எந்தக் கேள்விக்கு இந்த பதில், வரவனையான்?

  அப்துல் புகாரி //


  அமுக விதிமுறைகுறித்து உணர்த்திய கேள்விக்கு. மற்றபடி "அந்த" கேள்வியெல்லாம் அரதப்பழசு. நிறைய பதில் சொல்லியாகிவிட்டது

 1. 7:57 PM  
  Anonymous said...

  //கேள்வியெல்லாம் அரதப்பழசு. நிறைய பதில் சொல்லியாகிவிட்டது//

  எந்த கேள்வியை அரதப் பழசுன்ன்னு சொல்ற வரவனை?ஆமாம்,அதுக்கு அந்த அரதப் பழசான பதிலையும் சொல்லிவிட்டு போவதானே?என்னமோ ரொம்ப பிஸி மாதிரி அலட்டிக்கிறீங்களே?

 1. 8:48 AM  
  Anonymous said...

  //மற்றபடி "அந்த" கேள்வியெல்லாம் அரதப்பழசு. நிறைய பதில் சொல்லியாகிவிட்டது..//
  இந்த நழுவல்கள் எல்லாம் வேண்டாம் வரவனையான். 2000 ஆண்டுக்கு முன்னால் நடந்ததை மறுபடி மறுபடி எழுதும் நீங்கல்லாம் இதை வெறுமனே அரதப் பழசுன்னு சொல்லிட்டு ஜமக்காளத்துக்கு கீழே குப்பைய ஒளிக்கறது ஏன்?

  புலிகள் செஞ்சது நியாயமா?
  அதை அப்ப நீங்க கண்டிச்சீங்களா? உண்டுன்னாக்க சுட்டி எங்கே?

  இல்ல, புலிங்க அம்மாதிரி செய்யவே இல்லை செஞ்சிருந்தாலும் நல்லா வேணும் இசுலாமியனுக்குன்னு சொல்றீங்கன்னாக்க அதையும் சொல்லி போடுங்க.

  அப்துல் புகாரி

 1. //

  Anonymous said...
  //கேள்வியெல்லாம் அரதப்பழசு. நிறைய பதில் சொல்லியாகிவிட்டது//

  எந்த கேள்வியை அரதப் பழசுன்ன்னு சொல்ற வரவனை?ஆமாம்,அதுக்கு அந்த அரதப் பழசான பதிலையும் சொல்லிவிட்டு போவதானே?என்னமோ ரொம்ப பிஸி மாதிரி அலட்டிக்கிறீங்களே?

  7:57 PM


  Anonymous said...
  //மற்றபடி "அந்த" கேள்வியெல்லாம் அரதப்பழசு. நிறைய பதில் சொல்லியாகிவிட்டது..//
  இந்த நழுவல்கள் எல்லாம் வேண்டாம் வரவனையான். 2000 ஆண்டுக்கு முன்னால் நடந்ததை மறுபடி மறுபடி எழுதும் நீங்கல்லாம் இதை வெறுமனே அரதப் பழசுன்னு சொல்லிட்டு ஜமக்காளத்துக்கு கீழே குப்பைய ஒளிக்கறது ஏன்?

  புலிகள் செஞ்சது நியாயமா?
  அதை அப்ப நீங்க கண்டிச்சீங்களா? உண்டுன்னாக்க சுட்டி எங்கே?

  இல்ல, புலிங்க அம்மாதிரி செய்யவே இல்லை செஞ்சிருந்தாலும் நல்லா வேணும் இசுலாமியனுக்குன்னு சொல்றீங்கன்னாக்க அதையும் சொல்லி போடுங்க.

  அப்துல் புகாரி

  8:48 AM //


  "திடீர்" புகாரிகளுக்கு, (ஆமா, ஒரு குரூப்பாத்தான்யா கிளம்பிருக்காய்ங்க)

  உங்களின் கேள்விகள் குறித்து எமது தலைமைபீடத்துக்கு தெரிவித்துள்ளோம். இன்ஷா அல்லா விரைவில் நல்ல பதில் வரும் என்று நம்புகிறோம்.

  :P