Friday, May 11, 2007

@ 11:29 AM Labels: எழுதியவர்: வரவனையான்

அது தமிழ்நாட்டில் காங்கிரசு இயக்கத்தின் இறுதிக்காலம் 1962 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் தஞ்சையில் பெரும் பணக்காரரும், நிலச்சுவாந்தாருமாகிய 'பரிசுத்த நாடாரை' எதிர்த்து திமுக'வின் சார்பில் அதன் பிரச்சாரகுழுத்தலைவர் மு.கருணாநிதி போட்டியிடுகிறார். தந்தை பெரியார் பச்சைத்தமிழன் காமராஜருக்காக காங்கிரசை ஆதரித்து தமிழ்நாடெங்கும் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் பிரச்சாரம் முடியும் கடைசி நாள் அவர் பரிசுத்த நாடாரை ஆதரித்து தஞ்சையில் பிரச்சாரம் செய்ய வந்திருந்தார். முதல் நாளிரவு அவரை நீடாமங்கலத்தில் சந்தித்து அழைத்து செல்கிறார் பரிசுத்தநாடார், இரவுணவுக்கு பின் பெரியாரிடம் அமர்ந்து அந்த மாவட்ட காங்கிரசாரும், திராவிடக்கழக தொண்டர்களும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் பெரியார் சொல்கிறார் "அண்ணத்துரை எப்படி உங்களூக்கு ( காங்கிரசு) பெரிய தொந்தரவா இருக்கிறாரோ அதைக்காட்டிலும் பத்து மடங்கு தொந்தரவு இந்த கருணாநிதி ஜெயிச்சு சட்டமன்றம் போனார் என்றால். எனவே இங்க 10 அண்ணாத்துரை நிக்கிறதா நெனச்சு தேர்தல் வேலை பாருங்க" என்று. மறுநாள் பெரியாரின் தலைமையில் பெரும் பேரணி தஞ்சை நகர் பகுதியில் நடக்கிறது. இதுவரை காணாத கூட்டம் . பத்திரிக்கையாளர்கள் முடிவே செய்துவிட்டனர் வெல்லப்போவது பரிசுத்தநாடார் தான் என்று. அடுத்தநாள் பிரச்சார ஓய்வு நாள் தன் செல்வச்செழிப்பையெல்லாம் கொட்டி ஓட்டுகளை விலைக்கும் வாங்கிக்கொண்டிருக்கிறார் பரிசுத்தநாடார். திமுகவினர் வெறும் தேனீர் மட்டும் பருகி வேலை செய்துகொண்டிருக்க காங்கிரசு பக்கம் பிரியாணியும் ஆட்டுக்கறியும் அளவில்லாமல் பறிமாறப்பட்டுகொண்டிருந்தது.

தேர்தல் நாள் அன்று காலை பெரும் பரபரப்பு தஞ்சையில் முக்கிய வீதியின் மத்தியில் காஞ்சி சங்கராச்சாரி (அக்குயூஸ்டு அல்ல, பழையவர்) படத்துக்கு செருப்பு மாலை போடப்பட்டு வைக்கபட்டு இருந்தது. பரிசுத்தநாடார்தான் வெல்லப்போகிறார் என்கிற செய்தி தமிழ்நாடு முழுவது தெரிந்த ஒன்றாய் இருந்த நிலை தேர்தல் நாளன்று காலை 7 மணிக்கு மாறிப்போனது. வென்றது கலைஞர். செய்தி கேள்விபட்டு பெரியார் சிரித்தாராம். " நாந்தான் சொன்னேன் அல்லவா, கருணாநிதி பத்து அண்ணத்துரைன்னு " என்று.

"பாராளுமன்ற போர் தந்திரம்" என்கிற சொல்லை அவ்வப்போது தங்கள் கொள்கையை குழிதோண்டி புதைக்கும் போது கம்யுனிஸ்ட் கட்சியினர் சொல்லுவார்கள். அது அது பொதுவுடைமை இயக்கத்தை நரவேட்டையாடிய காங்கிரசு அரசை ஆதரிக்கும் செயலானலும், இல்லை அடிப்படை மார்க்சியத்துக்கே எதிரான செயலானலும் சரி அது " பாராளுமன்ற போர்தந்திரம்" என்று சப்பைகட்டு கட்டப்படும்.ஆனால் ஒரு வகையில் அது சரியே, பொதுவுடைமை இயக்கங்கள் தேர்தல் பாதையை தேர்ந்தெடுத்தது வேண்டுமானால் தவறாய் இருக்கலாம். ஆனால் ஓட்டுபொறுக்கி அரசியலுக்கு "பாராளுமன்ற போர்த்தந்திரம்" நிச்சியம் வேண்டும். அது போன்ற போர்த்தந்திரத்தின் காரணமாகவே பரிசுத்த நாடார் தோற்றுபோனார் அல்லது கலைஞர் வென்றார்.

சூத்திரனுக்கும் சூழ்ச்சித்திறன் உண்டு என்கிற வரலாற்று வெளிப்பாடே கலைஞர். சூத்திரன் வேதம் படித்தால் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்று என்கிற மனுவின் விஷ விதிகளுக்கான திரவிடத்தின் பதிலே "கலைஞர்" .

சாணக்கியத்தனமும் சவுண்டித்தனுமுமே வேதபுரிகளின் அடிப்படை என்பதை புரிந்து அதனை அதனால் வென்றவர் கலைஞர்.5 ஆயிரம் ஆண்டு இந்திய வரலாறு ஆரிய திராவிட போர் மட்டுமே என்பர் வரலாற்றிஞர்கள். ஏடறிந்த தமிழ்நாட்டு வரலாற்றில் 60 ஆண்டுகாலம் இரண்டுவித அரசியல் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது அது கலைஞரை எதிர்த்து இல்லை ஆதரித்து. இதைத்தாண்டி வேறோன்றும் நிகழ்ந்ததில்லை. இந்த 60 ஆண்டுகளில் எத்தனை விபீடனர்கள், ராவணனுக்கோ ஒருவன் கலைஞருக்கோ நூற்றுக்கணக்கில். . அத்தனை வீபிடனர்களின் "காட்டி கொடுத்தலையும்" "தொப்பி மாத்தி"களையும் கடந்து 84-ம் அகவை நோக்கி வாழும் வேளையில் இதோ மீண்டும் ஒரு வீபிடனக்கூட்டம். அதிகாரமும் , பணமும் எப்போதும் போதை தருபவை. அதிலும் அதிகாரத்தின் மூலம் ஈட்டிய பணம் இன்னும் மோசம். அவைக்கு பிடித்த உணவு மேலும் அதிகாரமே.

கலைஞருக்கு பிறகு யார் ? இப்படி ஒரு கேள்வியை ஜெயலலிதா கூட எழுப்பவில்லை, அதிமுகவின் குரலை நாரச ஊளையாக ஒலிபரப்பும் ஜெயடீவீ எழுப்பவில்லை, பார்ப்பன பத்திரிக்கைகள் எழுப்பவில்லை மாறாய் இடதுபக்கமிருந்து ஒரு குரல் "கலைஞருக்கு பிறகு யார்" . உண்டவீடு என்கிற நிலைதாண்டி அவர்களின் சொந்தவீட்டின் மீதே புழுதிவாற புறப்பட்டு இருக்கும் சன் குழமத்திற்கு தேவையென்ன? பார்பனர்களின் கை எட்ட முடியாத இடத்தில் அரிப்பு ஏற்பட்டால் சொறிந்துவிட நீண்ட கை ஒரு திராவிடனின் கையாகவா இருக்கவேண்டும். சரி அப்படியென்ன கலைஞர் இயங்கமுடியாமல இருக்கிறார். மாறன் இயங்கமுடியாமல் நினைவுதவறி அப்பல்லொவில் இருந்த போது இது போன்ற ஒரு கருத்துகணிப்பை நிகழ்த்தி மக்களின் அரிப்பை அல்லது அவாள்களின் அரிப்பை போக்கி இருக்கலாமே. "மாறனுக்கு பிறகு யார்" என்று. இந்தகொழுப்பு ஊடுருவலின் பால் வந்தாகவே கொள்ளலாம். சன் டீவீ மீது எய்யபட்ட அத்துனை அம்புகளையும் தன்மேனியில் தாங்கியவர் கலைஞர். எத்தனை தமிழ்ச்சான்றோர் குற்றம் சாட்டினர், எத்தனை பொதுவுரிமைவாதிகள் வேதனைபட்டனர் சன் குழுமத்தின் பார்ப்பன ஆதரவு போக்கைபார்த்து, அத்தனையும் தன் மேல் தாங்கிக்கொண்டவர் கலைஞர்.

கலைஞரின் பிள்ளைகளில் தொண்டர்களிடம் அணுக்கமானவராக இருப்பவர் அழகிரி மட்டுமே. இன்றும் மிக எளிதாய் சந்திக்கவும், எதும் பிரச்சனையென்றால் அனுகவும் மிக மிக எளிதானவர். அரசு என்பவறையும் அதன் அதிகாரிகளின் போக்கையும் நன்கு அறிந்தவர் அழகிரி. கலைஞர் தடவிக்கொடுத்து வேலை வாங்குவார் என்றால் அழகிரி சாட்டை எடுப்பார். குதிரைகளிடமும், கழுதைகளிடமும் தடவிக்கொடுப்பதைக்காட்டிலும் சாட்டை என்பது வசதியானது என்பதை புரிந்தவர் அழகிரி. 80 களின் துவக்கத்தில் மதுரை வீதிகளீல் தன் லாம்பி ஸ்கூட்டரில் மிக எளீமையாய் சுற்றிக்கொண்டிருந்த ஒரு இளைஞர் இன்றும் அதே எளிமையோடுதான் அம்மக்களிடம் இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் கலைஞரின் தனிப்பட்ட வாழ்வின் தவறுகளைக்கூட இன்றும் தன் இதயத்தில் சுமந்து கொண்டிருக்கும் ஒரு அறம் சார்ந்த மனிதன் என்று சொல்லவேண்டும்.

உலகை வென்று எல்லா அதிகாரமும் கொண்ட ஒரு அரசன் தன் மகளையும் பெண்டாள நினைத்து அவளால் கொல்லப்பட்ட கதை கிழக்கில் உண்டு. அது போல் தன் அதிமேதவித்தனத்தையும் கற்ற இடத்தில் காட்டமுனைந்தது ஒரு அபத்தமே.எந்த பதவியும் வேண்டாமென்று இருக்கும் ஒரு நபரை, களத்திலேயே இல்லாத ஒரு நபரை தோற்றுபோனதாய் அறிவிப்பது போக்கிலித்தனமின்றி வேறென்ன.

தமிழகம் கலைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் மாநிலம்தான் அதற்காய் தானே எல்லாம் என்கிற சிந்தை வந்தபின் விஜயகாந்திற்கும், கலாநிதிமாறனுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. நடந்த அசம்பாவிததிற்கு கண்டனம் தெரிவித்திருப்பது யார் என்று பார்த்தால். பௌத்தரின் போதனைகளை ஆட்டோக்களின் மூலம் ஷேசனுக்கும்,பா.சிதம்பரத்திற்கும், வக்கில் விஜயனுக்கும் , மாவீரரின் "மகாநிர்வான" என்கிற தத்துவத்தை தன் கட்சி மகளிர் அணியின் மூலம் சுப்பிரமணியன்சாமிக்கும், பெரியாரின் பொதுவுரிமை சிந்தனையை மத்திய மந்திரி அருணாசலம் தலித் என்கிற காரணத்தால் விமானத்தை விட்டு வெளியே இறக்கிவிட்டு போதித்த, கற்றுக்கொடுத்த அம்மையார் ஜெயலலிதா.

மற்றொரு பக்கம் நந்திகிராமின் ரத்தம் வடியும் கையுடன் மார்க்சியர்களும், போலி என்கவுண்டரின் மூலம் சொந்த மக்களை கொன்று குவித்த "நரன்"திர மோடியின் தமிழக கூட்டாளிகள். இப்படியான நபர்களுக்கு இப்பிரச்சினையினை பற்றி வாய்திறக்க எந்த அருகதையும் கிடையாது. காங்கிரசுக்கோ இந்த பிரச்சினை குறித்து வாய் திறக்கக்கூட அறவியல் உரிமை இல்லை. அதன் சட்டையில் இடப்புறம் பதக்கங்களுக்கு பதிலாய் மண்டையோடுகளே அணியப்பட்டுள்ளது. காசுமீரம், வங்கம்,பஞ்சாப், ஈழம் என்று தேடித்தேடி சேகரிததது. எனவே இது பற்றி முணுமுணுக்ககூட தேவையில்லை.

இயேசுவின் மொழிகளில் சொன்னால் " உங்களில் யார் யோக்கியவானோ அவர் முதல் கல்லை எறியுங்கள்" என்பதே ஆகும்.

தமிழ்நாட்டு அரசியல் என்பது பேராயக்காலத்தில் ஆண்டைகளின் அரசாகவும், பின்னர் திராவிட முன்னேற்ற கழக காலத்தில் மக்களின் அரசாய் மலர்ந்து. எம்.ஜி.ஆர் ஆட்சியில் தலையெடுக்கத்துவங்கிய இந்த போக்கை திமுகவும் இதே வழியில் தீர்க்கவேண்டிய கட்டாயம் எற்பட்டது. அதன் பின் அராஜகத்தின் மூலம் தன் அரசியற்பாதையின் எதிரிகளை அப்புறப்படுத்தும் உத்தி அம்மையார் ஜயலலிதாவினால் வெகுவாக கட்டமைக்கபட்டது.

அதிலும் அவரின் கடந்த ஆட்சியில் செய்தவற்றை தமிழர்கள் வழமைபோல் மறந்திருப்பர். கலைஞர் அராஜகமுறையில் கைதான அன்று மட்டும் 40 பேர் மாநிலம் முழுதும் மாரடைப்பில் மாண்டனர். இவர்கள் அனைவரும் தொலைக்காட்சியில் கைதாகும் காட்சியை பார்த்தவர்கள். இது மட்டுமின்றி சென்னை கண்டன பேரணியில் மாற்றுகட்சி உறுப்பினர்களை அடியாட்கள் மூலம் வெட்டிக்கொலை செய்தது, பின்னர் அதன் ஒரே சாட்சியான வீரமணியை என்கவுண்டரில் போட்டது என இவரின் அட்டகாசம் எல்லை தாண்டியது. இந்நிலையில் மதுரை சம்பவத்திற்கு மத்திய புலனாய்வு விசாரனைக்கு உத்திரவிட்டுள்ளது சரியான நடவடிக்கை ஆகும். தீர்ப்போ விசாரனையோ எப்படியும் இருந்துவிட்டு போகட்டும். இனி வரும் காலத்தில் சன் குழுமம் குறித்து ஒரு எச்சரிக்கையுடந்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் சன்'க்கு பிரச்சினை என்றால் "இந்து"ராமுக்குவுக்கு எரிகிறது. இது பற்றி கலைஞர் முடிவெடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே தெரிகிறது.

38 மறுமொழிகள்:

 1. 1:12 PM  
  Anonymous said...

  இந்த வியாக்கியானமான (திராவிடமான) பதிவெல்லாம் இருக்கட்டும்.

  நானும் மதுரைக்காரன் தான், அழகிரியின் போக்கிரித்தனங்களை (முருகன் இட்லிக்கடை, மற்றும் ராயல் வீடியோ விஷயத்தில் பக்கத்துக்கடைகளில் ரவுடியிசம்) நான் நேரில் கண்டிருக்கிறேன்.

  சும்மா படம் போடாதீர்களய்யா....

  நானும் திராவிட தமிழந்தான், உடனடியாக பார்பன கைக்கூலி என்பிர்கள் பரவாயில்லை. உங்களுக்கு அழகிரியால் என்ன லாபமோ யாருக்குத்தெரியும்.

 1. அருமை. அட்டகாசம். வேறொன்றும் சொல்வதற்கில்லை !

 1. வரவனையான்,

  திராவிடர்/தமிழர் நலனுக்காக உருவான கட்சியை வைத்துக் கொண்டு தனது குடும்பத்தை வளர்த்த கலைஞரின் முற்பகல் வினைகள் பிற்பகலில் வந்து நிற்கின்றன.

  முரசொலி மாறனை, தயாநிதி மாறனை, கலாநிதி மாறனை வளர்த்து விட்டது என்ன அவசியத்தால்!

  திமுக, ஏதோ தனது குடும்பச் சொத்து என்று நினைத்துக் கொண்டு செயல்படும் கலைஞரின் தவறுக்குத் தமிழகம் அதிமுக என்ற வடிவில் இத்தனை ஆண்டுகளாக அபராதம் கட்டிக் கொண்டிருக்கிறது.

  கலைஞர் மட்டும் தனது குடும்பப் பாசத்தை விட்டு இயக்கத்துக்காக மட்டும் செயல்பட்டிருந்தால் செயலலிதா போன்றோருக்கு அரசியலில் இடமே இல்லாமல் போயிருந்திருக்கும்.

  இந்த குளறுபடிக்கு முழுப்பொறுப்பும் கலைஞர் கருணாநிதிதான். திராவிட இயக்கத்துக்கு கல்லறை கட்டும் திருப்பணியை வெற்றிகரமாகச் செய்து வருகிறார் அவர்.

  பதவிக்காக பாரதீய ஜனதாவுடன் கூட கூட்டு வைத்த தலைமைதானே அவருடையது.

  இதைச் சாணக்கியம் என்று போற்றிக் கொண்டு அவர்து பிள்ளைகளில் உள்ளதில் நல்லதை ஏற்றுக் கொண்டு சமாதானப்பட்டுக் கொள்வது சரியில்லை.

  கலைஞர் காட்டிய பாதையை விடுத்து திமுகவின் இளைஞர்கள் தனிவழியை வகுத்துக் கொண்டால் 1967க்குப் பிறகு தமிழகத்தில் அடுத்த புரட்சி நடக்க முடியும்.

  ஏமாற்றத்துடனும் வருத்தத்துடனும்,

  மா சிவகுமார்

 1. செத்து போன நாலு பேரைப் பத்தி ஒரு அபிப்ராயமும் இல்லையா?

 1. பிரச்சினையின் மறுபக்கத்தை அழகாக விளக்கியுள்ளீர்கள்.கலைஞர் சன் டிவி மீது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது.

 1. 8:53 PM  
  Anonymous said...

  இது மாதிரி முட்டாள் விஸ்வசிகள் இருக்கற வரைக்கும் எத்தனை மதுரையை வேனும்னாலும் எரிப்பானுக.
  ஆனா நல்லா எழுதுறிங்க

  நல்ல சப்பகட்டும் கட்றிங்க

  தப்ப யாரு செஞ்சாலும் தப்பு தான் சொல்றவங்க அதிகமா இருந்திருந்தாதான் நாடு எப்பவோ வெளங்கியிருக்குமே

 1. 8:55 PM  
  Anonymous said...

  ஆமாங்க சூப்பர் உடன்பிறப்புன்ன இப்படித்தான இருக்கனும்

 1. 9:02 PM  
  Anonymous said...

  //கலைஞருக்கு பிறகு யார் ? இப்படி ஒரு கேள்வியை ஜெயலலிதா கூட எழுப்பவில்லை, அதிமுகவின் குரலை நாரச ஊளையாக ஒலிபரப்பும் ஜெயடீவீ எழுப்பவில்லை, பார்ப்பன பத்திரிக்கைகள் எழுப்பவில்லை மாறாய் இடதுபக்கமிருந்து ஒரு குரல் "கலைஞருக்கு பிறகு யார்" . உண்டவீடு என்கிற நிலைதாண்டி அவர்களின் சொந்தவீட்டின் மீதே புழுதிவாற புறப்பட்டு இருக்கும் சன் குழமத்திற்கு தேவையென்ன? //


  ஏப்பா அதுக்காக மூனு பேர கொளுத்துவிங்களா
  குடும்ப சண்டைக்கி ஊரைக் கொளுத்துவிங்களா நல்ல இருங்க

 1. 9:05 PM  
  Anonymous said...

  // அருமை. அட்டகாசம். வேறொன்றும் சொல்வதற்கில்லை ! //


  சூப்பர் உடன் பிறப்புன்னா நீதான் உடன்பிறப்பு

 1. 9:08 PM  
  Anonymous said...

  // உங்களுக்கு அழகிரியால் என்ன லாபமோ யாருக்குத்தெரியும்//


  அப்படி கொச்சைப்படுத்தாதிங்க என்னதான் இருந்தாலும் அவர் தலைவர்ர்ர்ர்ர்ர் மகனாச்சேங்குற விசுவாசம்தான் மாத்தபடி என்ன கிடைக்க போகுது தேர்தல் அப்ப பிரியாணிய தவிர

 1. 1:14 AM  
  சிவா said...

  அருமை, அட்டகாசம். 2 வருடங்களுக்கு முன்னமே மாறன் குடும்பதினர் கலைஞர் குடும்பத்தினரிடமிருந்த சன் டி.வி பங்குகளை வாங்கிக் கொண்டனர். அப்போதே கலைஞர் சுதாரிது இருந்தால் இந்த நிலை இன்று வந்திருக்காது. மாறனைப் போலவே அவரது பிள்ளைகளும் இருப்பார்கள் என்று எண்ணிவிட்டார்.

 1. வரவனை!

  என்ன நிகழ்கிறதென்பதையும், அதை எவ்வாறு விளங்கிக் கொள்வதென்பதையும் தெளிவாக எழுதிவிட்டீர்கள்.

  போர்க்களத்தில் தன் கையில் இருந்த ஒரே ஒரு வேலை எறிந்ததும் களிறு ஓடிவிட்டதாம் தப்பித்து..எறியப்பட்ட வேலைச் சுமந்து கொண்டு....

  ...போர்க்கள வீரன் வேறென்ன ஆயுதம் உள்ளதெனப் பார்க்கையில் - களத்திலே அவன் மீது எறியப்பட்ட வேலொன்று அவன் உடலில் குத்திட்டு நிற்க - அதைக் கண்டதும் இது போதும் இதையே பிடுங்கி தொடர்ந்து போராடுவேன் என்று சமர் புகுந்தானாம் அந்த மாவீரன்!..

  இதை உ.பி-யில் தேர்தலில் தோற்ற காங்கிரஸின் தலைவிக்கு இன்றைய கூட்டத்தில் ஆறுதலாய்ச் சொன்னார் கலைஞர் - ஆனால், தன உள்ளக்கிடக்கையை நெஞ்சுரத்தை இவ்வாறு வெளிப்படுத்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

  'எறிவேல் போனாலென்ன..தன் மீது எறியப்பட்ட வேலையே கைவேல் ஆகக் கொள்ளும் மாவீரன்' கலைஞர் வாழ்க!

  தமிழின்ம் உள்ளவரை கலைஞரின் பெயர் வாழும்!

  சில பார்ப்புகள் கலைஞரின் தாய்மொழி தெலுங்கு என்று குசு விடுவதும் - அதை 'நன்று' என்று சில போஸ்ட் மாடர்னிஸ்டுகள் ஆதரிப்பதும் - விபீடணர்களை மீண்டும் நினைவுபடுத்துகிறது!

 1. மதுசூத்தனன் பதிவில் இட்ட பின்னூட்டம்:-

  //பதிவையே படிக்காம அரை எதையாவது எழுதாம, படித்துவிட்டு அது சம்பந்தமாய் எழுதலாமே.///

  ஜெயலலிதா தப்பு செய்தபோது எழுதவில்லை.

  பாஜக புளு சிடி வெளியிட்டபோது நீ அதைப்பற்றி எழுதவில்லை.

  ஜெயராமன் ஒரு பெண்பதிவர் பெயரில் ஆபாசத் தளம் தொடங்கியபோது எழுதவில்லை.

  இப்போ கலைஞர் என்றதும் உனக்கு கோவணத்துக்குள் வேர்க்குது!

 1. தலைப்பும், ஆக்கமும், உட்கருத்தும் அருமை...

  அதற்காக பாராட்டலாம் ;)

  ஆனால் நீயும் மருதக்காரன் தான்னு ப்ரூவ் பண்ணிட்டியே மாமு...

  ***
  எந்த டாபரு தான் ரவுடித்தனம் பண்ணல...சாதாரண வட்டம், மாவட்டத்துக்கு பொறந்ததுகளே என்னா துள்ளு துள்ளுதுங்க...அழகிரி துள்ளுனா என்ன? ;)

  ஆனாலும் அழகிரி அவரோட கோவத்த ரெண்டு மாறன்ல ஒரு மாறனையாவது போட்டுத் தள்ளியிருந்தா தமிழ்நாட்டு அரசியல் இன்னும் சுவாரசியமா இருந்திருக்கும். செத்துப் போனது கூலிக்கு மாரடிக்கர அப்பாவி ஆட்கள் இல்லையா???

  ஆனாலும் தமிழக அரசியலில் அப்பாவிகள் கொல்லப்பட்டு சுயசெல்வாக்கை நிலைநிறுத்திக் கொல்(ள்)வதில் கருணாவுக்கு தான் முதலிடம்.அதன் பின்னர் தான் ஏனைய அரசியல்வாதிகள்.

  ****
  இட்லி வடையின் தமிழ்னாட்டு மேப்பில் வடதமிழ்நாடு முழுதையும் ஸ்டாலினுக்கு தாரை வார்த்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  பல வருடமாக தமிழகத்தை அதிகார ரீதியாகப் பிரிக்கக் கோரிய மருத்துவர் அய்யாவிற்கும் கொஞ்சம் பிரித்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.

 1. //நானும் திராவிட தமிழந்தான்//

  அஸ்கு புஸ்கு...கோட் வேர்டு தப்பு தப்பு...செல்லாது செல்லாது

  :))

 1. //Anonymous said...
  //கலைஞருக்கு பிறகு யார் ? இப்படி ஒரு கேள்வியை ஜெயலலிதா கூட எழுப்பவில்லை, அதிமுகவின் குரலை நாரச ஊளையாக ஒலிபரப்பும் ஜெயடீவீ எழுப்பவில்லை, பார்ப்பன பத்திரிக்கைகள் எழுப்பவில்லை மாறாய் இடதுபக்கமிருந்து ஒரு குரல் "கலைஞருக்கு பிறகு யார்" . உண்டவீடு என்கிற நிலைதாண்டி அவர்களின் சொந்தவீட்டின் மீதே புழுதிவாற புறப்பட்டு இருக்கும் சன் குழமத்திற்கு தேவையென்ன? //


  ஏப்பா அதுக்காக மூனு பேர கொளுத்துவிங்களா
  குடும்ப சண்டைக்கி ஊரைக் கொளுத்துவிங்களா நல்ல இருங்க//


  உண்மைத்தமிழன் உங்கள் சொந்த பெயரில் வந்து பின்னூட்டமிட்டுருக்கலாமே , ( கொண்டைய மறைக்கலையேடா ! காமெடிதான் நினைவுக்கு வருகிறது)

  :)))))))))))))

 1. ///Pot"tea" kadai said...
  //நானும் திராவிட தமிழந்தான்//

  அஸ்கு புஸ்கு...கோட் வேர்டு தப்பு தப்பு...செல்லாது செல்லாது

  :))///////


  hahahahahahha LOL

 1. 10:44 AM  
  பொய்த்தமிழன் said...

  வரவனையான் அண்ணாச்சி, நான் ஜெயாடிவீயில் சொம்புதூக்குவதால் கருணாநிதி என்று சொன்னாலே எனக்கு அரிக்கும், ஆகவே சோறு போடுமிடத்துக்கு வஞ்சகமில்லாமல் ஜால்ரா போட்டுகொள்கிறேன். இங்கையும் "கருணாநிதி ஒழிக"

 1. 'கிடக்குறது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி.. மனையில வை..' என்பது போன்ற வாதங்கள் வேண்டாம்.

  http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_14.html

  என் பதிவுக்கு பதில் சொல்லுங்கண்ணே..

 1. வரவனை, அதிகம் புரியாத அரசியல் எனினும்..உங்கள் பதிவும், பதிவுக்கு வரும் பின்னோட்டங்களும் சுவாரசியமானவை :)

 1. //ஏப்பா அதுக்காக மூனு பேர கொளுத்துவிங்களா
  குடும்ப சண்டைக்கி ஊரைக் கொளுத்துவிங்களா நல்ல இருங்க//

  உண்மைத்தமிழன் உங்கள் சொந்த பெயரில் வந்து பின்னூட்டமிட்டுருக்கலாமே , ( கொண்டைய மறைக்கலையேடா ! காமெடிதான் நினைவுக்கு வருகிறது)//

  வரவனையான் ஸார்.. இந்தப் பின்னூட்டமும் நான் போடவில்லை. நான்தான் உங்கள் பக்கமே வரப் போவதில்லை என்று விரதம் இருக்கிறேனே? ஹி..ஹி..

  நீங்க எதைப் பார்த்து, எந்த யூகத்துல நான்தான்னு முடிவு பண்ணிணீங்கன்னு எனக்குத் தெரியல ஸார்..

  ஆனா இதுக்காகவே காத்திருந்த ஒரு 'பொய்த்தமிழன்' உடனே வந்து கமெண்ட்ஸ் போட்டுட்டார் பாருங்க..

  எல்லாம் 'பொய்த்தமிழன்கள்' செய்யுற சதி வேலை..

 1. உங்களை மாதிரி உடன்பிறப்பு இருக்கும் வரை 3 என்ன 3000 பேரை கொன்று உவிக்கலாம், அப்பவும் இதே போல சப்பை கட்டு பதிவுகளும், மனுநீதி சோழன்.. அது இதுன்னு அள்ளிவீசி ஜல்லி அடிக்கலாம்.. ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை!!!!

  வருத்ததுடன்,

  நா ஜெயசங்கர்

 1. 6:50 PM  
  Anonymous said...

  //
  உண்மைத்தமிழன் உங்கள் சொந்த பெயரில் வந்து பின்னூட்டமிட்டுருக்கலாமே , ( கொண்டைய மறைக்கலையேடா ! காமெடிதான் நினைவுக்கு வருகிறது)

  :)))))))))))))

  //
  அட பாவி அந்த கமென்ட் எழுதுனது நானுங்க அவரை ஏங்க வம்பிக்கிழுக்குறிங்க

  பதில் தெரியாட்டியும் திசை திருப்பிவிடுறது எல்லாம் குறைச்சல் கிடையாது

 1. ஆனொன்ய்மொஉச் சைட்...
  //
  உண்மைத்தமிழன் உங்கள் சொந்த பெயரில் வந்து பின்னூட்டமிட்டுருக்கலாமே , ( கொண்டைய மறைக்கலையேடா ! காமெடிதான் நினைவுக்கு வருகிறது)

  :)))))))))))))

  //
  அட பாவி அந்த கமென்ட் எழுதுனது நானுங்க அவரை ஏங்க வம்பிக்கிழுக்குறிங்க

  பதில் தெரியாட்டியும் திசை திருப்பிவிடுறது எல்லாம் குறைச்சல் கிடையாது//  சரி அனாமத்து முண்டமே ! உனக்கே மூஞ்ச காட்ட துப்பில்லை அப்புறம் என்ன பில்டப்பு.


  ஹிஹி இப்பவும் பார்டர் மார்க்குல பெயிலாகிட்டா நண்பா

 1. 9:08 PM  
  சுப்பு said...

  //பதில் தெரியாட்டியும் திசை திருப்பிவிடுறது எல்லாம் குறைச்சல் கிடையாது//

  iஇதுக்கு பேசாம வரவனை ஒரு பார்ப்பான்னே கெளப்பிவிட்டிருக்கலாம்

 1. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said... //


  உண்மைத்தமிழன் உங்க பெயருக்கு பின்னாடி இருக்கிற எண் என்ன நியுமராலஜி படி போட்டுகிட்டதா ? கூட்டுத்தொகை நாலு வருதே, நாலு ராகுவின் எண் அதை வைத்துக்கொண்டால் வீண் வாக்குவாதம், தேவையில்லாமல் சந்தேக கேசில் நைட் எல்லாம் உள்ளே உக்கார வச்சு காலையில் அனுப்பிவைப்பார்களே அது போல சம்மந்தப்படாத விஷயங்களில் இழுத்து வச்சு லந்தை கொடுத்து மனபதட்டத்தை உருவாக்கும் நிலை ஏற்படும். ஆகவே உங்களுக்கு அந்த எண்ணை பரிந்துரைத்த " நங்கநல்லூர்" ஜோசியரிடம் வேறு நல்ல எண்னை கொடுக்கும் படி மாற்றிவாங்கிக்கொள்ளவும்.

 1. // ஏனென்றால் சன்'க்கு பிரச்சினை என்றால் "இந்து"ராமுக்குவுக்கு எரிகிறது. இது பற்றி கலைஞர் முடிவெடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே தெரிகிறது. //

  தம்பி, கலைஞர் வெளியிட வேண்டாம் சொல்லியும் முடிவுகளை அறிவித்திருக்கிறார்கள் என்றால் பின்னால் வேறு 'கை' இல்லாமல் இல்லை. கலவரம் நடந்தாலும் "பத்திரிக்கை சுதந்திரம்"னு ஊர்வலம் வாரோம் னு யாரோ தூண்டியிருக்க வாய்ப்பிருக்கிறதோ?.

  கணிப்பு முடிவுகளைப் பாருங்க., அப்படியே தந்திர ச்சத்... எழுதமுடியலை (எப்படிய்யா இவிங்க இப்படி சிந்திக்கிறாய்ங்க?)

  சென்னையில் ஸ்டாலினுக்கு செல்வாக்கு குறைவாக உள்ளது... (அப்ப யாருக்கு ஸ்டாலினோட மீதிச் செல்வாக்கு சென்று சேர்ந்தது? :). அழகிரிக்கு சென்னையில் ஆதரவே இல்லை. பதவியில் இருப்பதால் ஸ்டாலிக்கு ஆதரவுள்ளது... (ஸ்டாலினும், அழகிரியும் மோதிக்கணுமாம்).

  மதுரையில் அழகிரிக்கு வெறும் 6% சதவீதம்தான் மக்கள் ஆதரவு (அழகரியை அவர் மனசுடனும், மக்களுடனும் மோத வைக்க...)

  கனிமொழிக்கு மதுரையில் 5% மக்கள் ஆதரவு தருகின்றனர். (கனிமொழி + அழகிரி முட்டலுக்காக). இருவருமே தமிழகத்தில் 2% சதவீதம் பேரால் ஆதரிக்கப்பட்டுள்ளனராம். பாவம் அரசியல் பக்கமே தலைகாட்டமல் இவ்வளவு காலம் இருந்த கனிமொழிக்கும், தென்மாவட்ட திமுகவே நம்பியிருக்கும் அழகிரிக்கும் ஒரே மாதிரி 2 சதவீதமாம்.

  கணிப்பில் கலைஞரின் குடும்ப உறுப்பினர்களை மட்டும் எடுத்துக்கொண்டு, மத்த திமுகவினரை வயிறு எரியச் செய்தது... இப்படி பல காய்களை நோக்கியடிக்கப்பட்ட முடிவுகள்.

  சிறு வியாபாரிகளைக் கூட்டி, அம்பானியோட, நம்ம சிறு விவசாயிகளைப் போட்டி போடச் சொல்லும் "அறிவு" படைத்த தயாநிதியோ., வெறும் சினிமா, இல்லைன்னா சீரியல்... லொட்டு லொசுக்குன்னு பல எனிமாக்களை மட்டும் கொண்டு சானலை ஓட்டும் காலாநிதியோ இப்படி யோசித்திருக்க முடியுமாங்கிறது சந்தேகமாத்தான் இருக்கு :)).

  அப்பாவி உயிர்கள் போனதைக் கண்டு மிக்க வருத்தமே...

  மதுரை அரசியலில் ரவுடியிசம் இல்லாத காலம் எது?... இன்னும் மதுரைக்கு தெற்கே போய் பார்த்தம்னா., செய்தியாக் கூட வெளியே தெரியாமல் எத்தனை நடந்தது சில "புத்தர்" களின் ஆட்சியில்?.

  மற்றபடி, இந்திராகாந்தி கொலையின்போது, ராஜீவ்காந்தியோட வசனத்தை நினைச்சுப் பாருங்க. நீங்க சொன்னதுபோல் நரேந்திரமோடி போன்ற நரிகள் அத்தன பேர்களைக் கொன்றுவிட்டு மனம் அசையாமத்தான் இருக்கிறது... யார் பண்ணவில்லை... எல்லோரும் செய்கிறார்கள்., தண்டிக்கப்பட்டவர்கள்தான் இல்லை.

  //உங்களுக்கு அழகிரியால் என்ன லாபமோ யாருக்குத்தெரியும்.//
  அட இது வேறையா?., அனானி ஆசைய ஏன் கெடுக்கணும்?., ஆஸ்திரேலியாவுக்கும், திண்டுகல்லுக்கும் பாலம் போட்டுத்தரச் சொல்லலாமா?

 1. //அட இது வேறையா?., அனானி ஆசைய ஏன் கெடுக்கணும்?., ஆஸ்திரேலியாவுக்கும், திண்டுகல்லுக்கும் பாலம் போட்டுத்தரச் சொல்லலாமா?//

  அட! நல்லா இருக்கே.. இதை மாப்பின் எதிர்காலத்தை மனதில் கொண்டு நானும் வாழிமொழிகிறேன்.

  ;))))

 1. ///வரவனையான் said...
  //உண்மைத் தமிழன்(15270788164745573644) said... //
  உண்மைத்தமிழன் உங்க பெயருக்கு பின்னாடி இருக்கிற எண் என்ன நியுமராலஜி படி போட்டுகிட்டதா ? கூட்டுத்தொகை நாலு வருதே, நாலு ராகுவின் எண் அதை வைத்துக்கொண்டால் வீண் வாக்குவாதம், தேவையில்லாமல் சந்தேக கேசில் நைட் எல்லாம் உள்ளே உக்கார வச்சு காலையில் அனுப்பிவைப்பார்களே அது போல சம்மந்தப்படாத விஷயங்களில் இழுத்து வச்சு லந்தை கொடுத்து மனபதட்டத்தை உருவாக்கும் நிலை ஏற்படும். ஆகவே உங்களுக்கு அந்த எண்ணை பரிந்துரைத்த " நங்கநல்லூர்" ஜோசியரிடம் வேறு நல்ல எண்னை கொடுக்கும் படி மாற்றிவாங்கிக்கொள்ளவும்.///

  வரவனையான் ஸார்.. அவசரப்பட்டுட்டீகளே.. இப்ப நான் என்னத்த சொல்றது?

  நம்பரோட கூட்டு எண்ணிக்கை நாலுல இருந்தா நான் என்ன பண்றது? அது என்னோட டிஸ்பிளே நம்பராம். அதை யாரால மாத்த முடியும்..? ஒருவேளை என்னைப் பார்த்துட்டுத்தான் பொருத்தமா அந்த நம்பரை எனக்குக் கொடுத்திருக்காகளோ என்னவோ? சரி விடுங்க..

  சந்தேகக் கேஸ்ல உள்ள உட்கார வைக்கிறதெல்லாம் இப்ப கிடையாதுன்னு நினைக்கிறேன்.. இருந்தா என்ன? போயிட்டுத்தான் வருவோமே? ஒரு நாள் பதிவுக்கு மேட்டர் கிடைச்சா மாதிரியிருக்கும்.

  சம்பந்தப்படாத விஷயத்துல எல்லாம் இப்ப தலையிடுறதே இல்ல ஸார். அப்புறம் எவன் மாத்து வாங்குறது? அதுனால மாத்துக் கொடுக்காதவங்களா பார்த்துத்தான் இப்ப பேசிக்கிட்டிருக்கேன்.. இப்ப ரொம்ப உஷாராக்கும் நானு..

  'நங்கநல்லூர்' ஜோஸியர்னு யாரையும் எனக்குத் தெரியாதே ஸார்.. நம்பர் போட்டுக்கச் சொல்லி அட்வைஸ் செஞ்சது டோண்டு ஸார்தான்.. நம்பரை எடுத்துக் கொடுத்தது உங்க மாப்ளை 'தல'தான்.. அதுனால..?

 1. It places fhoto of Madeleine in your bloggue


  Missing Madeleine!
  Madeleine, MeCann was abduted from Praia da Luz, Portugal on 03/03/07.

  If you have any information about her whereabouts, please contact Crimestoppers on 0800555111 Please Help

 1. 1:48 AM  
  Anonymous said...

  ம். யாராவது மாறனை உசுப்பேத்தி விட்டிருக்கலாம்.
  தேர்தலுக்கு நிறைய செலவு செய்தார்கள் என்று கேள்வி.
  தங்களால்தான் ஆட்சி அமைந்தது என்று ஓவராக ஆடி
  முட்டி உடைந்திருக்கலாம்.உசுப்பேத்தி விட்டவர்கள் இப்பொழுது வேடிக்கை பார்ப்பார்கள்.

 1. வரவனையான் ஐயா.. கொண்டையோடு வந்திருக்கிறேன்.. என் பின்னூட்டத்தை தயைகூர்ந்து ஏற்று கொள்ளவும்..

 1. 4:17 PM  
  Anonymous said...

  //நம்பரை எடுத்துக் கொடுத்தது உங்க மாப்ளை 'தல'தான்.. அதுனால..? //

  தலய உதச்சா எல்லாம் சரியாயிடும்

  -தல ரசிகன்

 1. 11:37 AM  
  Anonymous said...

  கழுகு யாருங்கண்ணா? ஸ்கூப் மீட்டருங்கண்ணா!

  வலையுலக நைனாங்களுக்கு வணக்கம்!

  இப்போ ஒருத்தர் நான் புது கழுகு, பழைய கழுகு மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்ததுன்னு கெளம்பியிருக்காரே? அவ்ர பத்தின மேட்டர் தெரீமா?

  பேரே இல்லாம எழுதற ஆளு தான் பழைய கழுகும், புது கழுகும்! அவ்ரோட பழைய கழுகு அவதாரத்துலே உஷார்னு ஒரு பெண் பதிவர கொச்சை படுத்தி எழுதினாரு, மேஸ்திரின்னு ஒருத்தர மட்டமா எழுதினாரு. குழுகாரங்களை எல்லாம் கொடஞ்சு எடுத்தாரு. அதுமாரியே நெறைய பேரை கழுகா வந்து அலகுல குத்தி தள்ளிட்டாரு.

  அவங்கள்லாம் எங்கே பாய்ஞ்சி கொதறிடப் போறாங்களோன்னு புச்சு, பயசுன்னு டகால்ட்டி காட்டிக்கினு கீறாராம்.

  மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்தவரு தான் பழைய கழுகுன்னு சொல்றாரே? அப்போ அவரே இவரு மேல ஆசைப்பட்டு யூசர் நேம்மையும், பாஸ்வேர்டையும் இவருகிட்ட கொடுத்து கண்டினியூ பண்ண சொன்னாரா?

  யார்க்கு காது குத்தறாரு? முனியாண்டி கோயில்ல மூணு வயசு இருக்குறப்பவே எங்க நைனா எங்களுக்கு காது குத்திட்டாரு! நம்பளுக்கே மீட்டர் போடுறாரா இந்த முருகேசன்?

  கும்மாங்கோ. கொய்யாங்கோ.
  கோலாலம்பூர், கொழும்புவெல்லாம் போயிட்டு வந்தோங்கோ

 1. 6:56 PM  
  அப்பாவித்தமிழன் (000000000000) said...

  //வரவனையான் ஸார்.. இந்தப் பின்னூட்டமும் நான் போடவில்லை. நான்தான் உங்கள் பக்கமே வரப் போவதில்லை என்று விரதம் இருக்கிறேனே? ஹி..ஹி.. //

  அப்ப இங்க இருக்குற அத்தனியும் போலித்தமிழன் போட்டதா?

 1. வரவனை,
  உங்கள் நகைச் சுவைப் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பல தடவை சொல்லியிருக்கிறேன். ஆனால் இந்த 'நகைச் சுவைப் பதிவு' சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதுவும் அழகிரி புகழ்பாடும் பத்தி ... :)

 1. //david santos said...
  It places fhoto of Madeleine in your bloggue


  Missing Madeleine!
  Madeleine, MeCann was abduted from Praia da Luz, Portugal on 03/03/07.

  If you have any information about her whereabouts, please contact Crimestoppers on 0800555111 Please Help

  5:19 PM
  //

  வரவனை,

  மேற்கண்ட நபரை தெரியுமா ? எனக்கும் பின்னூட்டி இருக்கார்.
  :))))))

  அழகிரி புகழ்பாடுவதற்கு நானும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

  மூன்று கொலைகளுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என அழகிரி ஏன் அறிக்கை கொடுக்கவில்லை. ஆனால் மாறன் சன் டிவி மேல் வழக்கு தொடுப்பதாக சகோதர்களுக்கு எதிராக அவேசப்பட்டாரே ?

 1. தினகரன் எரிப்பு சம்பவம் பற்றி கேட்டபோது, அழகிரி கொடுத்த பேட்டியில் "நான் அமைதியாக இருக்கையில் என்னை ஏன் வம்பிலுக்கிறார்கள்??" என்றார். அரசியலிலேயே இல்லாத ஒருவரை, தேவையில்லாமல் கருத்துக் கணிப்பில் இழுத்ததே தவறு. சரி, அதுக்காக தினகரனை எரிப்பதா? தப்புதான். ஆனால், ஒரு அளவுக்கு மேல் அதிகாரம் வளரும் போது, நல்லவனாகவே இருந்தாலும், நம்மிடம் நல்ல பேர் வாங்குவதற்காக முட்டாள் வேலை செய்யும் அள்ளக்கைகளை அடக்க முடியாம் போவது இயல்பு. அப்படித்தான் அந்த அசம்பாவிதமும். அது தவறுதான். ஆனால் அதற்கான பொறுப்பு மாறன் சகோக்கள் தானே ஒழிய அழகிரி அல்ல. மேலும் நான் மதுரைக்காரன் தான். அழகிரி ஒன்றும் அங்கு ஆட்டம் போடவில்லை. அ.தி.மு.க ஒருக்காலும் நுழைய முடியாதபடி கவனித்துக் கொண்டிருக்கிறார். சோ மை டியர் ஆர்வக்கோளாறுகளா, அழகிரி ஆட்கள் பண்ணது தப்புதான், ஆனா அதன் பொறுப்பு முழுதாக மாறன் சகோதரர்களுடையது.