Wednesday, May 23, 2007

@ 1:22 PM எழுதியவர்: வரவனையான் 13 மறுமொழிகள்

சமீபத்தில் ( அதாவது 4 நாளைக்கு முன்னாடி 40 வருசத்துக்கு முன்னாடி அல்ல ) ஒரு நண்பர் கடும்பனி பிரதேசமான சைபீரியவில் இருந்து எனக்கு போன் பன்னினார் பேசிகிட்டு இருக்கும் போது என்னாங்க இப்படி கிளம்பிட்டாங்க ஜூன் மாசம் நான் வரும் போது சென்னையில கண்ணகி செல இருக்குமாங்க ? ஒரே வருத்தமா இருக்குங்கன்னாரு...

அப்ப அவருக்கு ஒரு கதை சொன்னேன் சொல்லிட்டு இது மாதிரிதாங்க ஆகும் அதுனால கவலை படாதீங்கன்னு ஆறுதல் சொன்னேன்.

அந்த கதை இப்போ இங்க,

ஒரு லொள்ளு புடிச்ச ராசா ஒருத்தன் இருந்தான். அவனுக்கு அப்பப்போ எவனையாவது கதற கதற கலாய்க்கலைனா தூக்க வராது. அப்படியபட்ட ராசா ஒரு நாள் ஒரு அறிவிப்பு சொன்னாராம். இதுவரைக்கு நான் பார்க்காத பழத்தை யாரு கொண்டு வராங்களோ அவங்களுக்கு இந்த ராஜ்ஜியத்துல பாதின்னு. ஆனா ஒரு கொண்டுவருவது நான் பார்த்திருந்த பழமானால் அந்த பழத்தை அவங்க ஆசனவாய்ல திணிச்சு ( என்ன கொடுமை சார் ! ) அனுப்பிருவேன்னு சொன்னாரு ராஜ்ஜியத்துல பாதி வாங்கிற ஆசைல அடுத்தநாள் அரண்மனைல வரிசையா நிக்கிது கூட்டம் கையில பழத்தோட .

முதலில் ஒருத்தன் எழுமிச்சை பழத்தை கொண்டு வந்துருக்கான், ராஜா சொல்லிருகாரு இதை தேய்ச்சுத்தானே நான் தினமும் குளிக்கிறேன்னு . அவனுக்கு திணிச்சு அனுப்பினாய்ங்க, அடுத்தவன் மாதுளம் பழம் காட்ட ராஜா உதட்டை பிதுக்கி இது அரண்மனை தோட்டதில் பார்த்துருக்கேன்னு சொல்ல அவனுக்கும் ..த்த்திணிச்சு அனுப்பி வச்சானுங்க. இப்படியே ஆப்பிள், சாத்துகுடி, பேரிக்காய்ன்னு ராஜா பார்த்த பழமா கொண்டு வந்து பின்னாடி "சைஸ" பெரிசாக்கிட்டு போனாய்ங்க. அந்த வரிசைல ஒருத்தன் ரொம்ப தைரியமா நின்னுகிட்டு இருந்தான் . அவன் கைல அண்ணாச்சி பழம் வச்சுகிட்டு நின்னான். இந்த பழம் மலையாள தேசத்தில் வாங்கியது ராச பார்த்திருக்க வாய்ப்பில்லைன்னு நம்பிக்கையோட.

அவன் முறை வந்தது போய் ராஜகிட்ட காட்டினான். அவரு சேவகனை பார்த்து காலையில் என்ன பழச்சாறு குடித்தேன்னு கேட்டாரு . அண்ணாச்சிபழச்சாறு மன்னா"ன்னு அவன் சொல்ல இவனை குனியவச்சு திணிக்க ஆரம்பிச்சனுங்க அவனவன் ஆப்பிளுகே கதறிகிட்டு இருக்கும் போது இவன்அண்ணாச்சிபழம் திணிக்கும் போது சிரிச்சுருக்கான். அரசரக்கு சந்தேகம். டேய் உண்மையா வலிக்கலையா ஏண்டா சிரிக்குறன்னு கேட்டாரு.

அதுக்கு அவன் "அரசே, நானாவது அண்ணாச்சிபழம். எனக்கு பின்னாடி நின்னவன் பலாப்பழம் வச்சுகிட்டு இருக்கான்' அதை நினைச்சேன் என்னால சிரிக்காம இருக்க முடியலன்னு" சொன்னான்.


அதுமாதிரி கொஞ்ச நாளைக்கு முன்னாடி தமிழனை வைத்தே தமிழன் கண்ணைக்குத்தும் முயற்சியாய் சிறிரங்கம் பெரியார் சிலையை தகர்க்க முயன்றனர். ஆனால் தமிழ்ர்கள் விவரமானவர்கள் எங்க அடித்தால் வலிக்கும்னு அவர்களுக்கு தெரியும் ஆகவே "அங்கே" அடித்தார்கள்.

தமிழ்நாட்டில் ஆம்னி பஸ்ஸில் ஆள்பிடித்தால்கூட ரெண்டு சீட்டு குறைவாய் இருக்கும் ( 2.000674 % உள்ள பார்புகளீன் கருத்தின் படி ) பெரியாரியத்தோழர்களே இப்படி என்றால் ஒட்டுமொத்த தமிழர்களின் பண்பாட்டு சின்னமாக கருதப்படும் கண்ணகிக்கு எதாவது என்றால்.....

Monday, May 21, 2007

@ 11:19 AM எழுதியவர்: வரவனையான் 16 மறுமொழிகள்


நாசா'யில் வேலை செய்யுற பாப்பான் என்றாலும் பெருமாள் கோவில் மடப்பள்ளியில் பாத்திரம் கழுவி பொழப்பை ஓட்டுகிற பாப்பான் என்றாலும் ஒரே மாதிரி தான் சிந்திப்பார்கள், சிந்திக்கிறார்கள்,சிந்தித்தார்கள். ஆனால் அந்தச்சிந்தனை நிச்சியமாய் தன் ஆதிக்க பாதுகாப்புகாகவும் தனது மேலாண்மையின் இருத்தலை தக்கவைக்கும் செயலாகவுமே இருக்கும்.

1998ல் செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடந்த 'மதிமுக' மறுமலர்ச்சி பேரணியில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள் வைகோவின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவதற்காகவும் அதன் செலவு மதிப்பீட்டை நிர்னயம் செய்யவும் 5 கோடி ரூபாய் ஒதுக்கி அறிவித்தார். அதற்கு ஒரு குழுவையும் நிர்னயித்து அந்த குழு சேது சமுத்திர திட்டத்தை நனகு ஆரய்ந்து அளீத்த அறிக்கையின் படியே காங்கிரசு அரசாலும் கலைஞரின் பெருமுயற்சியாலும் இத்திட்டம் துவங்கப்பட்டது.

சேதுகால்வாய் சூயஸ் போலவோ , பனாமா கால்வாய் போலவோ செயற்கையான முறையில் அகழ்வு மேற்கொண்டு உருவாக்கவேண்டியதில்லை. ஏற்கனவே இருக்கும் நீரிணைப்பகுதியில் இருபக்கமும் கரையிருப்பதனால் அலைகளினால் நடுவில் உருவாகியுள்ள மணல்திட்டுக்களை அகற்றினாலே போதும் என்கிற நிலையிலே துவக்கப்பட்டது. இத்திட்டம் வந்தால் கொழும்பு துறைமுகத்தின் வருமானம் அடியோடு பாதிக்கும் என்பதாலும் இலங்கையின் அந்நியசெலாவனி அதலபதாளத்துக்கு போய்விடும் என்பதாலும் சந்திரிகா ஜெயலலிதாவை தூண்டிவிட அவரும் "சூழலியல்வாதி" அவதாரம் எடுத்து மீனவர்களிடையே தவறான தகவல்களை பரப்பி போராடவைத்தார். உலகில் 167 நாடுகளில் விரட்டபட்ட , இந்தியாவில் 6 மாநிலங்களில் விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் அனுமதித்து 5 மாவட்ட மக்களின் வாழ்க்கையில் மண்ணள்ளிப்போடும் செயலை செய்த ஜெயலலிதா "திடீர் சுற்றுசூழலியல்வாதி"யானது ஒரு அபத்த நகைச்சுவைதான்.


முதலில் சேது சமுத்திர திட்டத்தினால் என்னவித நன்மையென்று பார்த்தால் இந்திய அரசின் கப்பல்கள் அந்தமான் பகுதிகளில் இருக்கும் எண்ணைகிணறுகளில் இருந்து கொண்டுவரும் கச்சா எண்ணையை இலகுவாக தூத்துக்குடிக்கோ கொச்சினுகோ கொண்டு செல்லாலாம் , இது நாள் வரை ஒரு கடல் மைலுக்கு 7 லட்சம் ரூபாய் இலங்கை அரசுக்கு செலுத்திவரும் நில அகலும். இது மட்டுமில்லாமல் தமிழ்க அரசுக்கும் இந்திய அரசுக்கும் சொந்தமான கப்பல்கள் தூரக்கிழக்கிலிருந்து கொண்டுவரும் நிலக்கரியையும் தாவர எண்ணைகளையும் இன்னபிற பொருள்கள் கொண்ட கப்பல்களையும் பைசா செலவில்லாமால் கொண்டுவர ஏதுவாகும். இதற்கு நாம் கொடுத்து வரும் வாடகைத்தொகையைக்கொண்டு மட்டுமே 5 முதல் 8 ஆண்டுகளில் சேது சமுத்திரத்திற்கான செலவுத்தொகையை எடுத்துவிடலாம். சேது சமுத்திரத் திட்டத்தில் மற்றுமொரு முக்கிய விதயம் அதன் அகழ்வுப்பணிகள் முடிந்தாலும் இருபக்கமும் கரையிருப்பதானால் மீண்டும் நடுவில் ராமர் பாலம் என "டுபாக்கூர்களால்" அழைக்கப்படும் மணல் திட்டைகள் தோன்றும். ஆகவே அதை வருடம் ஒரு முறை உடைக்க வேண்டும் அல்லது அகற்றவேண்டும் ( ராமர் ஒடைக்க ஒடைக்க பாலம் கட்டிகிட்டு இருப்பார் போலும் ) இதற்காகாகும் செலவும் நாம் இலங்கை அரசுக்கு செலுத்தும் வாடகையை விட குறைவு.

ஆகவே இதுவரை சொல்லியுள்ளது இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் சொந்தமான படகுகள் பயன்படுத்தினால் மட்டுமே நாம் அதன் செலவுத்தொகையை எடுத்துவிடலாம். தனியாருக்கும் பன்னாட்டு கப்பல்களும் பயணித்தால் அரசுக்கு லாபம் தரும் விதயமாக மாறும்.

இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள கடல் பகுதி இருபக்கமும் அடிக்கும் அலைகளால் ஆங்காங்கே மணல்மேடுகள் தோன்றியிருக்கும் அது செயற்கோளில் இருந்து எடுத்த படத்தில் தோன்றியிருப்பது இயல்பான ஒன்றே. இப்போதைய நாசா அறிக்கையின் படி அந்த மணல்திட்டுகள் பாலம் என்று "லூசுத்தனமாய்" பேசுவோருக்கு ஒரு தகவல். இதே நாசா இன்னும் உபயோகமாய் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தகவலை வெளியிட்டது. அது தமிழகத்தின் மிச்சமிருக்கும் ஒரே ஜிவநதியான தாமிரபரணி பொதிகை மலையில் தோன்றி ஓடி கடலில் கலந்த இடம் இப்போதைய இலங்கையின் கிழக்கு பகுதியில் என்று. இதே செய்தியை அடிப்படையாக கொண்டு பார்த்தால் இலங்கையில் எந்த மலைப்பகுதிலும் தோன்றாமல் குறுக்குவெட்டாய் ஜிவனற்ற மணல் வெளியாய் உள்ள பகுதி உள்ளதாகவும் அதன் பெயர் "தம்ப பெரனா ஓயா" ( "கி" போட்டு படிக்க வேண்டாம் ;) ) என்பதாகும் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதற்குகான சான்று இப்போதில்லை என்றாலும் அதன் அடிப்படையில் பார்த்தால் இலங்கையும் இந்திய நிலப்பரப்பும் ஒரே நிலப்பரப்பாய் இருந்தாக தெரிகிறது. அப்படியான காலம் அதிகபட்சம் 3000 ஆண்டுகளைத்தாண்டாது. "கடலே இல்லாத பகுதியில்" எதற்கு ராமர் பாலம் கட்டினார் என்று தெரியவில்லை. ஒரு வேளை டிராபிக் அதிகமாய் இருந்தது என்று கட்டினாரோ. அப்படியானால் ராவணன் சப்வே கட்டி இருப்பாரோ.

எதை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாத பித்த மயக்கத்தில் சில லூசுகள் ராமர் பாலம் என்றும் லட்சுமணன் சிக்னல் என்றும் அளந்து விட்டதை இங்குள்ள சில பாப்ஸ்கள் உடனே ங்ஞ்ஞ்கியா ந்னு ஆரம்பிக்குதுகள்.

அதிலும் ஒருவர் இன்னும் ஒரு படி மேலே போய் ராமர் பாலத்தை இடித்தால் கண்ணகி சிலை தகர்க்கபட வேண்டும் என போர்ப்பிரகடணம் செய்திருகிறார்.

அது ஏன் கண்ணகி உங்களுக்கு சிலையான பின்னும் எலும்புகளில் காய்ச்சல் தருகிறாள். அவளை தமிழ்நாட்டிலிருந்து துடைத்தெறியும் நோக்கம் உங்கள் ஜீன்களில் வழி வ்ழியாய் வந்த படியாய் உள்ளதின் நோக்கம் பார்ப்பனியம் மின்றி வேறேன்ன.

சரியோ தவறோ கண்ணகி தமிழர்களின் கலாச்சார அடையாளம். அவளின் காப்பியம் ஒரு சமண ஆசிரியரால் எழதப்பெற்றது. அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்னாலே பார்ப்பனரை அம்பலப்படுதிய இளங்கோவடிகளினால். இதுதானே உங்கள் பொச்செரிச்சல். இன்னோரு முறை சிலை தொட நினைப்பார்களாயின் "கண்ணகி இருப்பாள் - நினைத்தவர்கள் தமிழ்நாட்டில் இருக்கமுடியாது"

ஆதிக்கவாதத்தின் பெயராலும் இல்லை உங்கள் பதவி வெறி அரசியல் பிறப்பித்த பிள்ளை "ராமர் பாலத்தின் " பெயராலும் கண்னகியை தொட நினைத்தால்கூட அநீதியாய் காதலனைக்கொன்ற பாண்டிய நாட்டை எரித்தது போக மிச்சமிருக்கும் முலை நினைத்தவர்களை எரிக்கும்.

Friday, May 18, 2007

@ 4:19 PM எழுதியவர்: வரவனையான் 18 மறுமொழிகள்

அது என்னாங்கண்ணா அவர சொன்னா இவரு "பைள்ஸ்" வந்தவரு போல அலாரம் அடிக்கிறாரு. "கழுதை"ப்பாலுத்தான் பேரு வைக்காத பிள்ளைகளுக்கு வாங்கி குடுப்பாங்க , பேசாத பிள்ளை கூட பேசும். இவரு அலறுவதை பார்த்தால் "கழுதை" மூத்திரம் குடிச்ச மாதிரியில்ல தெரியுது, சரி யாரு எத குடிச்சா என்னா அதவிடுங்கண்ணா...

அப்புறம் இந்த திராவிடக்குஞ்சு, திராவிடப்***டுக்கு எல்லாம்தான் இங்க குப்பைகொட்டிகிட்டு இருக்கோம்ண்ணா. இருக்குறது, எழுதறது புடுக்க ச்சா பிடிக்கலைன்னா ஒரு குறுவஞ்சல் போதும்ணா டக்குன்னு ஏரியாவை மாத்திகுவோம்னா. நீங்களும் ஒரு நிர்வாகியா இருந்துகிட்டு இப்படி ஒரு பதிவரை எழுதறது உங்க ஊருல ரைட்டுன்ன ஒகேங்ண்ணா. ஏற்கனவே பதிவுகளை சேர்க்க மறுத்து விலக்கபட்ட பதிவரை பத்தி நிர்வாகி ஒருவரே தவறாக வேறு ஒருவரை அடையாளப்படுத்டுவது போல் எழுதறது மட்டும் நியாயம்னா பொட்டீகடை எழுதறது மட்டும் என்னா தப்புங்ண்ணா .

நாளைக்கு உண்மையான இரவுக்கழுகை நான் அடையாளம் காட்டினா அதுக்கு பிறகு வெளக்கமாத்தால அடிச்சி வேற பேறு வைக்கலாமாண்ணா அந்த புரளி கிளப்பிய பெரிய மனிசனுக்கு . அண்ணா நீங்களே சொல்லுங்கண்ணா. ஆரபத்துல இருந்து என்ன மயித்துக்குன்னா அவரை மீட்டர் முருகேசன்ன்கிற பேருல எழுதின நிர்வாகி கலாச்சிகிட்டே இருந்தாரு. அந்தாளை பிடிக்கலைன்னா போடா வென்னைன்னு சொன்னா சரிடா வெண்ணைன்னு போகபோறாரு. அத விட்டு போட்டு தேவையில்லாமா வம்பிழுத்து இப்போ கழுதை பட்டம் வாங்கி நிக்கிறிங்கண்ணா

சூரமணி அண்ணா, இந்த பதிவை ஒரு கடிதமா அனுப்பி இருந்திங்கண்ணா நீங்க எதோ லோக்கல் எதிக்ஸ் உள்ளவருன்னு நம்பலாம். ஹிஹிஹி நான்லாம் ஒரு "வீக் டார்கெட்டுண்ணா" என்னை போயி ஹிஹி உங்களுக்கே அசிங்கமா இல்லை .

அப்புறம் என்னாங்கண்ணா.

" குப்பி கடித்த புலிப்பல்" அறிவுமதி கவிதை படிச்சிருக்கிங்களாண்ணா. அதுல வர தாயோருத்தி சொல்லுவா " மகனே 2 வயதில் என் முலைக்காம்பு கடித்தாய், நம் பிள்ளைக்கு பல் முளைத்து விட்டது என்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை" " நேற்று களத்திலிருந்து செய்தி வந்தது பகைவன் கையில் சிக்காமல் இருக்க, உயிருடன் கிடைத்தால் எங்கே நாட்டை காட்டிகொடுப்போமோ என்று "குப்பி கடித்தாயாமே" பிள்ளையாய் என் முலைகடித்த மகிழ்வை விட நீ குப்பிகடித்த செய்தி கேட்டு மகிழ்கிறேன் உன் தாயாகிய நான்" இப்படி காட்சி படுத்துகிறார் அறிவுமதி.

குப்பி கடிப்பது மானத்திற்காய் அல்ல அண்ணா அது களமாடி துவக்குகளால் சல்லடையாகி சாகும் சாவைவிட ஆயிரம் மடங்கு நெஞ்சுரம் அதற்கு வேண்டும். 'நான் இனிமே இங்க இருந்தேன்னா என்ன செருப்ப கழட்டியே அடிங்கன்னு சொல்லிட்டு' ராத்திரி சத்தமில்லாம மறுபடியும் "உள்ள" வந்தவுங்களூக்கு வன்னியிலிருந்து வாங்கி கொடுங்கண்ணா குப்பி.

அப்புறம் இந்த ஆக்களை வைத்து பதிவு எழுத விடுவது , அவர்தான் இவர் என்று சொல்லவைப்பதுலாம் நல்லாத்தான் இருக்கு. அதுக்குல்லாம் ஏண்ணா ஈழத்தமிழர்களை பயன்படுத்திக்கொள்ளுறிங்க. எல்லாம் " ஒரு நாட்டுபற்றுதான்"ன்னு சொல்லுறீங்களா... ஹிஹி நான் இதுவரை அப்படி பேதம் பிரிச்சு பார்த்து இல்லைங்கண்ணா. நல்லா இருங்கண்ணா.

இன்னோரு முக்கிய விதயம்ண்ணா நீங்களாம் "டொலர்"ல சம்பளம் வாங்கி "சௌகர்யமா உக்காந்துகிட்டு இருப்பதால வன்னியிலிருந்து என்னா எங்க இருந்து வேணுமின்னாலும் எடுத்து தருவிங்க குப்பி. நாங்க எங்க இனத்து மக்கள் என்கிற ஒரே காரணுத்துக்காக எந்த நேரமும் தெருவில் இறங்கி போரட ஆயுத்தமான ஆளுகங்கண்ணா. அப்படி நாங்க சிறையேகி மீண்டுவரும் போது எங்க காலில ஒட்டிருக்கும்லண்ணா தூசி அதுக்கு கூட உங்களுக்கு தகுதியில்லண்ணா.

இந்த பக்கம் "புலி வேஷம் " போட்டு படம் காட்டினா அது வேலைக்கு ஆவாதுண்ணா

Friday, May 11, 2007

@ 11:29 AM Labels: எழுதியவர்: வரவனையான் 38 மறுமொழிகள்

அது தமிழ்நாட்டில் காங்கிரசு இயக்கத்தின் இறுதிக்காலம் 1962 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் தஞ்சையில் பெரும் பணக்காரரும், நிலச்சுவாந்தாருமாகிய 'பரிசுத்த நாடாரை' எதிர்த்து திமுக'வின் சார்பில் அதன் பிரச்சாரகுழுத்தலைவர் மு.கருணாநிதி போட்டியிடுகிறார். தந்தை பெரியார் பச்சைத்தமிழன் காமராஜருக்காக காங்கிரசை ஆதரித்து தமிழ்நாடெங்கும் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் பிரச்சாரம் முடியும் கடைசி நாள் அவர் பரிசுத்த நாடாரை ஆதரித்து தஞ்சையில் பிரச்சாரம் செய்ய வந்திருந்தார். முதல் நாளிரவு அவரை நீடாமங்கலத்தில் சந்தித்து அழைத்து செல்கிறார் பரிசுத்தநாடார், இரவுணவுக்கு பின் பெரியாரிடம் அமர்ந்து அந்த மாவட்ட காங்கிரசாரும், திராவிடக்கழக தொண்டர்களும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் பெரியார் சொல்கிறார் "அண்ணத்துரை எப்படி உங்களூக்கு ( காங்கிரசு) பெரிய தொந்தரவா இருக்கிறாரோ அதைக்காட்டிலும் பத்து மடங்கு தொந்தரவு இந்த கருணாநிதி ஜெயிச்சு சட்டமன்றம் போனார் என்றால். எனவே இங்க 10 அண்ணாத்துரை நிக்கிறதா நெனச்சு தேர்தல் வேலை பாருங்க" என்று. மறுநாள் பெரியாரின் தலைமையில் பெரும் பேரணி தஞ்சை நகர் பகுதியில் நடக்கிறது. இதுவரை காணாத கூட்டம் . பத்திரிக்கையாளர்கள் முடிவே செய்துவிட்டனர் வெல்லப்போவது பரிசுத்தநாடார் தான் என்று. அடுத்தநாள் பிரச்சார ஓய்வு நாள் தன் செல்வச்செழிப்பையெல்லாம் கொட்டி ஓட்டுகளை விலைக்கும் வாங்கிக்கொண்டிருக்கிறார் பரிசுத்தநாடார். திமுகவினர் வெறும் தேனீர் மட்டும் பருகி வேலை செய்துகொண்டிருக்க காங்கிரசு பக்கம் பிரியாணியும் ஆட்டுக்கறியும் அளவில்லாமல் பறிமாறப்பட்டுகொண்டிருந்தது.

தேர்தல் நாள் அன்று காலை பெரும் பரபரப்பு தஞ்சையில் முக்கிய வீதியின் மத்தியில் காஞ்சி சங்கராச்சாரி (அக்குயூஸ்டு அல்ல, பழையவர்) படத்துக்கு செருப்பு மாலை போடப்பட்டு வைக்கபட்டு இருந்தது. பரிசுத்தநாடார்தான் வெல்லப்போகிறார் என்கிற செய்தி தமிழ்நாடு முழுவது தெரிந்த ஒன்றாய் இருந்த நிலை தேர்தல் நாளன்று காலை 7 மணிக்கு மாறிப்போனது. வென்றது கலைஞர். செய்தி கேள்விபட்டு பெரியார் சிரித்தாராம். " நாந்தான் சொன்னேன் அல்லவா, கருணாநிதி பத்து அண்ணத்துரைன்னு " என்று.

"பாராளுமன்ற போர் தந்திரம்" என்கிற சொல்லை அவ்வப்போது தங்கள் கொள்கையை குழிதோண்டி புதைக்கும் போது கம்யுனிஸ்ட் கட்சியினர் சொல்லுவார்கள். அது அது பொதுவுடைமை இயக்கத்தை நரவேட்டையாடிய காங்கிரசு அரசை ஆதரிக்கும் செயலானலும், இல்லை அடிப்படை மார்க்சியத்துக்கே எதிரான செயலானலும் சரி அது " பாராளுமன்ற போர்தந்திரம்" என்று சப்பைகட்டு கட்டப்படும்.ஆனால் ஒரு வகையில் அது சரியே, பொதுவுடைமை இயக்கங்கள் தேர்தல் பாதையை தேர்ந்தெடுத்தது வேண்டுமானால் தவறாய் இருக்கலாம். ஆனால் ஓட்டுபொறுக்கி அரசியலுக்கு "பாராளுமன்ற போர்த்தந்திரம்" நிச்சியம் வேண்டும். அது போன்ற போர்த்தந்திரத்தின் காரணமாகவே பரிசுத்த நாடார் தோற்றுபோனார் அல்லது கலைஞர் வென்றார்.

சூத்திரனுக்கும் சூழ்ச்சித்திறன் உண்டு என்கிற வரலாற்று வெளிப்பாடே கலைஞர். சூத்திரன் வேதம் படித்தால் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்று என்கிற மனுவின் விஷ விதிகளுக்கான திரவிடத்தின் பதிலே "கலைஞர்" .

சாணக்கியத்தனமும் சவுண்டித்தனுமுமே வேதபுரிகளின் அடிப்படை என்பதை புரிந்து அதனை அதனால் வென்றவர் கலைஞர்.5 ஆயிரம் ஆண்டு இந்திய வரலாறு ஆரிய திராவிட போர் மட்டுமே என்பர் வரலாற்றிஞர்கள். ஏடறிந்த தமிழ்நாட்டு வரலாற்றில் 60 ஆண்டுகாலம் இரண்டுவித அரசியல் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது அது கலைஞரை எதிர்த்து இல்லை ஆதரித்து. இதைத்தாண்டி வேறோன்றும் நிகழ்ந்ததில்லை. இந்த 60 ஆண்டுகளில் எத்தனை விபீடனர்கள், ராவணனுக்கோ ஒருவன் கலைஞருக்கோ நூற்றுக்கணக்கில். . அத்தனை வீபிடனர்களின் "காட்டி கொடுத்தலையும்" "தொப்பி மாத்தி"களையும் கடந்து 84-ம் அகவை நோக்கி வாழும் வேளையில் இதோ மீண்டும் ஒரு வீபிடனக்கூட்டம். அதிகாரமும் , பணமும் எப்போதும் போதை தருபவை. அதிலும் அதிகாரத்தின் மூலம் ஈட்டிய பணம் இன்னும் மோசம். அவைக்கு பிடித்த உணவு மேலும் அதிகாரமே.

கலைஞருக்கு பிறகு யார் ? இப்படி ஒரு கேள்வியை ஜெயலலிதா கூட எழுப்பவில்லை, அதிமுகவின் குரலை நாரச ஊளையாக ஒலிபரப்பும் ஜெயடீவீ எழுப்பவில்லை, பார்ப்பன பத்திரிக்கைகள் எழுப்பவில்லை மாறாய் இடதுபக்கமிருந்து ஒரு குரல் "கலைஞருக்கு பிறகு யார்" . உண்டவீடு என்கிற நிலைதாண்டி அவர்களின் சொந்தவீட்டின் மீதே புழுதிவாற புறப்பட்டு இருக்கும் சன் குழமத்திற்கு தேவையென்ன? பார்பனர்களின் கை எட்ட முடியாத இடத்தில் அரிப்பு ஏற்பட்டால் சொறிந்துவிட நீண்ட கை ஒரு திராவிடனின் கையாகவா இருக்கவேண்டும். சரி அப்படியென்ன கலைஞர் இயங்கமுடியாமல இருக்கிறார். மாறன் இயங்கமுடியாமல் நினைவுதவறி அப்பல்லொவில் இருந்த போது இது போன்ற ஒரு கருத்துகணிப்பை நிகழ்த்தி மக்களின் அரிப்பை அல்லது அவாள்களின் அரிப்பை போக்கி இருக்கலாமே. "மாறனுக்கு பிறகு யார்" என்று. இந்தகொழுப்பு ஊடுருவலின் பால் வந்தாகவே கொள்ளலாம். சன் டீவீ மீது எய்யபட்ட அத்துனை அம்புகளையும் தன்மேனியில் தாங்கியவர் கலைஞர். எத்தனை தமிழ்ச்சான்றோர் குற்றம் சாட்டினர், எத்தனை பொதுவுரிமைவாதிகள் வேதனைபட்டனர் சன் குழுமத்தின் பார்ப்பன ஆதரவு போக்கைபார்த்து, அத்தனையும் தன் மேல் தாங்கிக்கொண்டவர் கலைஞர்.

கலைஞரின் பிள்ளைகளில் தொண்டர்களிடம் அணுக்கமானவராக இருப்பவர் அழகிரி மட்டுமே. இன்றும் மிக எளிதாய் சந்திக்கவும், எதும் பிரச்சனையென்றால் அனுகவும் மிக மிக எளிதானவர். அரசு என்பவறையும் அதன் அதிகாரிகளின் போக்கையும் நன்கு அறிந்தவர் அழகிரி. கலைஞர் தடவிக்கொடுத்து வேலை வாங்குவார் என்றால் அழகிரி சாட்டை எடுப்பார். குதிரைகளிடமும், கழுதைகளிடமும் தடவிக்கொடுப்பதைக்காட்டிலும் சாட்டை என்பது வசதியானது என்பதை புரிந்தவர் அழகிரி. 80 களின் துவக்கத்தில் மதுரை வீதிகளீல் தன் லாம்பி ஸ்கூட்டரில் மிக எளீமையாய் சுற்றிக்கொண்டிருந்த ஒரு இளைஞர் இன்றும் அதே எளிமையோடுதான் அம்மக்களிடம் இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் கலைஞரின் தனிப்பட்ட வாழ்வின் தவறுகளைக்கூட இன்றும் தன் இதயத்தில் சுமந்து கொண்டிருக்கும் ஒரு அறம் சார்ந்த மனிதன் என்று சொல்லவேண்டும்.

உலகை வென்று எல்லா அதிகாரமும் கொண்ட ஒரு அரசன் தன் மகளையும் பெண்டாள நினைத்து அவளால் கொல்லப்பட்ட கதை கிழக்கில் உண்டு. அது போல் தன் அதிமேதவித்தனத்தையும் கற்ற இடத்தில் காட்டமுனைந்தது ஒரு அபத்தமே.எந்த பதவியும் வேண்டாமென்று இருக்கும் ஒரு நபரை, களத்திலேயே இல்லாத ஒரு நபரை தோற்றுபோனதாய் அறிவிப்பது போக்கிலித்தனமின்றி வேறென்ன.

தமிழகம் கலைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் மாநிலம்தான் அதற்காய் தானே எல்லாம் என்கிற சிந்தை வந்தபின் விஜயகாந்திற்கும், கலாநிதிமாறனுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. நடந்த அசம்பாவிததிற்கு கண்டனம் தெரிவித்திருப்பது யார் என்று பார்த்தால். பௌத்தரின் போதனைகளை ஆட்டோக்களின் மூலம் ஷேசனுக்கும்,பா.சிதம்பரத்திற்கும், வக்கில் விஜயனுக்கும் , மாவீரரின் "மகாநிர்வான" என்கிற தத்துவத்தை தன் கட்சி மகளிர் அணியின் மூலம் சுப்பிரமணியன்சாமிக்கும், பெரியாரின் பொதுவுரிமை சிந்தனையை மத்திய மந்திரி அருணாசலம் தலித் என்கிற காரணத்தால் விமானத்தை விட்டு வெளியே இறக்கிவிட்டு போதித்த, கற்றுக்கொடுத்த அம்மையார் ஜெயலலிதா.

மற்றொரு பக்கம் நந்திகிராமின் ரத்தம் வடியும் கையுடன் மார்க்சியர்களும், போலி என்கவுண்டரின் மூலம் சொந்த மக்களை கொன்று குவித்த "நரன்"திர மோடியின் தமிழக கூட்டாளிகள். இப்படியான நபர்களுக்கு இப்பிரச்சினையினை பற்றி வாய்திறக்க எந்த அருகதையும் கிடையாது. காங்கிரசுக்கோ இந்த பிரச்சினை குறித்து வாய் திறக்கக்கூட அறவியல் உரிமை இல்லை. அதன் சட்டையில் இடப்புறம் பதக்கங்களுக்கு பதிலாய் மண்டையோடுகளே அணியப்பட்டுள்ளது. காசுமீரம், வங்கம்,பஞ்சாப், ஈழம் என்று தேடித்தேடி சேகரிததது. எனவே இது பற்றி முணுமுணுக்ககூட தேவையில்லை.

இயேசுவின் மொழிகளில் சொன்னால் " உங்களில் யார் யோக்கியவானோ அவர் முதல் கல்லை எறியுங்கள்" என்பதே ஆகும்.

தமிழ்நாட்டு அரசியல் என்பது பேராயக்காலத்தில் ஆண்டைகளின் அரசாகவும், பின்னர் திராவிட முன்னேற்ற கழக காலத்தில் மக்களின் அரசாய் மலர்ந்து. எம்.ஜி.ஆர் ஆட்சியில் தலையெடுக்கத்துவங்கிய இந்த போக்கை திமுகவும் இதே வழியில் தீர்க்கவேண்டிய கட்டாயம் எற்பட்டது. அதன் பின் அராஜகத்தின் மூலம் தன் அரசியற்பாதையின் எதிரிகளை அப்புறப்படுத்தும் உத்தி அம்மையார் ஜயலலிதாவினால் வெகுவாக கட்டமைக்கபட்டது.

அதிலும் அவரின் கடந்த ஆட்சியில் செய்தவற்றை தமிழர்கள் வழமைபோல் மறந்திருப்பர். கலைஞர் அராஜகமுறையில் கைதான அன்று மட்டும் 40 பேர் மாநிலம் முழுதும் மாரடைப்பில் மாண்டனர். இவர்கள் அனைவரும் தொலைக்காட்சியில் கைதாகும் காட்சியை பார்த்தவர்கள். இது மட்டுமின்றி சென்னை கண்டன பேரணியில் மாற்றுகட்சி உறுப்பினர்களை அடியாட்கள் மூலம் வெட்டிக்கொலை செய்தது, பின்னர் அதன் ஒரே சாட்சியான வீரமணியை என்கவுண்டரில் போட்டது என இவரின் அட்டகாசம் எல்லை தாண்டியது. இந்நிலையில் மதுரை சம்பவத்திற்கு மத்திய புலனாய்வு விசாரனைக்கு உத்திரவிட்டுள்ளது சரியான நடவடிக்கை ஆகும். தீர்ப்போ விசாரனையோ எப்படியும் இருந்துவிட்டு போகட்டும். இனி வரும் காலத்தில் சன் குழுமம் குறித்து ஒரு எச்சரிக்கையுடந்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் சன்'க்கு பிரச்சினை என்றால் "இந்து"ராமுக்குவுக்கு எரிகிறது. இது பற்றி கலைஞர் முடிவெடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே தெரிகிறது.

Thursday, May 03, 2007

@ 12:31 PM எழுதியவர்: வரவனையான் 11 மறுமொழிகள்

டிரை சைக்கிள்காரன் நம்ம டவுசர்பாண்டியின் முப்பாட்டியின் அம்மாவின் கற்பையெல்லாம் கேள்விக்குள்ளாக்கி கொண்டிருந்தான். ஒரு வழியா அவன தாக்காட்டி மண்டபத்துக்கு போனோம். கருத்தரங்கம் நடத்துன டிரஸ்ட்காராரு தெரிஞ்சவன் சொந்தகாரய்ங்க, எதுத்தவீட்டுகாரய்ங்கனு அல்லாத்தையும் அள்ளி போட்டு வந்திருந்தாரு.

கருத்தரங்கம் துவங்கி பேசின மென்டல் டாக்டர் ஒருத்தர், இத எழுதறவைங்க எல்லாம் லூசுப்பயலுகங்கற மாறியே பேசி முடிச்சாரு. நம்மாளு கையை ஓங்கி முன்னாடி இருக்குறவேய்ங் சேருல குத்தி அந்த டாக்டர கொலைவெறியா பாத்துகிட்டே "வாடா தம் போட்டுட்டு வரலாம்ன்னு சொல்லி கிளம்ப நானும் பின்னடியே போனேன். நம்மாளு டென்சனாகிட்டா மட்டும் தான் தம் அடிக்க போயிடுவாரு. ஒரு நாளைக்கு இருவது தடவ டென்சனாவாரு. கக்குசு வரலைனா, அவங்கப்ப பாக்கெட்ல காசு ஆட்டைய போட கையவிட்டு அங்க காசில்லைனா, காது கொடைய எதுத்த கடை நாடாரு கடனுக்கு இயர் பட்ஸ் தரலைனா இப்படி அவரு டென்சனாக நிறைய காரணம் இருக்கும். இப்ப இந்த மென்டல் டாக்டரு காரணமாகிட்டாரு.

இவரு சாணிப்பேப்பரு ஒரு கட்டை கைல வச்சுகிட்டு என்னமோ The Brief History of Timeமை உலகத்துக்கு வாசிச்சு காட்டபோற மாதிரி தம்மடிக்கவும் , உள்ள வந்து உக்காரவும்னு பயங்கர படம் போட்டுட்டு இருந்தாரு. நான் அப்பன்னு பாத்து "ஆம்பளை கக்குசுலாதன் இப்படி எழுதி வைப்பானுகளா இல்ல பொம்பளைகளூம் எழுதுவாகலான்னு அசமம் தெரியாம கேட்டுவைக்க, டவுசரு யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு. கொஞ்ச நேரம் கழிச்சு நாயகன் கமல் மாதிரி "தெரியலைப்பா"ன்னு உணர்ச்சிவசப்பட இவர கட்டுரை வாசிக்க கூப்பிட்டானுங்க. சரி "சனியன் சடைபோட்டு பூ வச்சு போகுதுன்னு" நிம்மதியா டீ குடிக்க போயிட்டு 10 நிமிசம் கழிச்சு வந்து பாத்தா அப்பவும் பேச ஆரம்பிக்காம மைக்க சரி பண்ணிட்டு இருந்தவரு ஒரு செருமல் செருமி வாசிக்க துவங்கினார்,

" முதலில் கழிவறை எழுத்துகளென்பதை கழிவறை இலக்கியம் என்று உலகம் ஏற்றுக்கொண்டது. ஆகவே அதை ஒரு இலக்கியமாக பார்க்கவேண்டும். நாம் கிழக்கில் உறைந்து போயுள்ளோம். மேற்கின் அறிவே நமது திறவுகோல், அதைப்பற்றி பார்த்துவிட்டு கழிவறைக்குப்போவோம். ( இதுக்கே கடைசி ஒரு வரிசை காலி) தோழர்களே ! இலக்கியம் - தத்துவம் அல்லது தத்துவார்த்த இலக்கியம் அல்லது இலக்கியபூர்வமான தத்துவம் இப்படித்தான் அவைகளை பார்க்கவேண்டும். அதற்கு முன் ஹெய்டேக்கரை நீங்கள் படிக்கவேண்டும். ஹெய்டேக்கரை படிக்கவேண்டுமானால் அதற்கு முன் ஹெகலிடம் இருந்து துவங்கவேண்டும். ( இன்னைக்கு இவன் பேச்ச கேட்டா எப்படியும் ஒரு 5 பேரு மென்டாலாகிடுவானுக - நமக்கு பேஷன்டுக்கு பேஷென்டாச்சுன்னு ' மென்டல் டாக்டர் சந்தோஷமான மாதிரி தெரிஞ்சுது என் கண்ணுக்கு )

அந்த என்.ஜி.ஓ க்காரரு பின்னாடி வந்து சட்டைய புடுச்சு இழுத்தாரு என்னை, சொல்லுங்க அங்கிள், ( புது ஸ்கூட்டி ஓட்டித்திரியும் வினோதா அவரு மகள் என்று தெரிந்த பின் அவரை அண்ணேன்னா கூப்பிட முடியும் ) இங்க பாருப்பா, டிரஸ்ட் ஆரம்பிச்சவுடனே ஒரு ரத்ததான முகாம், அப்புறம் ஒரு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் , அதுக்கு பிறகு ஒரு கருத்தரங்கம் நடத்துனாத்தான் பண்டு அலாட் பண்ணுவேய்ன்னு கலக்டரு சொல்லிட்டாரு அந்த கருமத்துகாகத்தான் இந்த எழவெல்லாம் நடத்துறேன். தெரிஞ்ச பயலாச்சேன்னு கூப்பிட்டா இப்படியா கொல்லுறதுன்னு கண்ணீர் மல்க டவுசர்பாண்டி மேல புகார் வாசிச்சார். "ஒன்னும் பிரச்சினையில்ல நான் கொடுக்கிற துண்டு சீட்ட அவருட்ட கொடுங்க டக்க்ன்னு முடிச்சிட்டு வந்திடுவாருன்னு" சொல்லி ஒரு சீட்ல " ஜானி ஒயின்ஸ் மாடி , ஓல்டு டிராவன் ஃபுல் ரெண்டே பேர்"ன்னு எழுதி கொடுத்துவிட்டேன்.

அதுவரைக்கும் அவரு படிச்ச எல்லா கழிவறை எழுத்துகளுக்கு பூராம் தத்துவார்த்த விளக்கம் கொடுத்து அரங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி கொண்டிருந்தார் டவுசரு.

"இதோ சமீபத்தில் திருச்சியில் ஒரு இலவச கழிவறையில் பார்த்த பாலியல் கலப்பில்லாத வாசகம் " எரிக்காத சக்தியும் ' செரிக்காத உணவும் சுடுகாட்டு தேரின் சக்கரங்கள்" இத எதுக்கு எழுதிருக்கான் அவனுக்கு அஜிரனம், கூடவே மலச்சிக்கல் சோ தன் துயரை அங்கு வெளிக்காட்டியுள்ளான். இதைத்தாண்டி "இன்செஸ்ட்" என்கிற வகையில் உள்ள எழுத்தகளை பற்றியும் கண்டிப்பாக இங்கு சொல்லவேண்டும் என்று ஆரம்பிக்க .அய்யயோ இவன் கூட வந்த கொடுமைக்கு நம்மளையும்ல அடி வாஙவைப்பான் போலருக்குன்னு மேடைக்கு சீட்ட கொடுக்க அதை இடக்கையால் "இசுடைலாக" ( சுத்த தமிழாம், ஸ் வடமொழியென்பதால் ஸ்டைல் , இசுடைலாக மருவிகிறது ) வாங்கியவரின் முழி நட்டுகிட்டது. அடுத்த வார்த்தையே "ஆகவே கழிவறை எழுத்தக்கள் நம் சமுகத்தை பிரதிபலிக்கிற கண்ணாடி என்று சொல்லி முடிக்கிறேன் என்றார். பேசி முடித்தபின் டிரஸ்டுக்கார அங்கிள் வந்து ஒரு 500ரூவாய் நோட்ட இவரு பாக்கட்டுல சொருவி விட்டாரு "வேணாங்க வேணாங்க ந்னு சொல்லிட்டே எடுத்து உள்பாக்கட்டுல வச்சுகிட்டாரு. நான் எஸ்கேப்பு.

மறு நாள் காலையில பாஸ்கர் இட்லிக்கடைல டவுசர பாத்து ஒரு 50 குடுங்க தோழர் ரெண்டு நாளையில தாரேன்னு நான் கடன் கேக்க "காசு இருந்தா ஒரு வில்ஸ் வாங்கி பத்தவச்சு அடிச்சிட்டு பாதி கொடுன்னாரு" சரி ரவுண்டா 500 வச்சுருக்காரு 1.75 ( அப்போதைய விலை ) வில்ஸுக்கு போயி அத முறிக்க சங்கட படுறாறோன்னு தம்மை வாங்கி கொடுத்தேன்.

நேத்து கோரிப்பாளையம் கலா லாட்ஜுக்கு போனேன்னு சொன்னாரு. எனக்கு கொஞ்சம் எரொடிக் கதை கேக்கபோறோம்ன்னு உள்ளுக்குள்ள தோணவே ஹார்வி நகர் மொத தெருவுக்கு கூட்டிட்டு போயி யாருமில்ல இங்க , இப்ப சொல்லுங்கன்னு கேட்டேன்.

அவரும் அவரு கூட ஒரு வீணாப்போன கவிஞரும் கலா லாட்ஜுகு போயிருக்கானுங்க. கலா லாட்ஜு "அந்த" மாதிரி லாட்ஜு. டவுசருக்கும் அவர் நண்பருக்கும் பெண்வாசணை என்பது 7அ பஸுல காலேஜுக்கு போகும் பட்டதுதான் அதுக்குபிறகு வெறும் "வறட்டிழுப்பு"தான். கையில 500ரூவாய் இருக்கவும் பல பத்தாண்டுகளின் பேராவலை போக்க போயிருக்கிறார்கள். அங்க போனதும் தலைக்கு 200 வாங்கிட்டானுக, அப்புறம் "உள்ளபோகும் " போது 50 ரூவாய் டிப்சு கொடுங்க இல்ல கம்பெனி கிடைக்காதுன்னு "புத்தி" சொல்லி அனுப்பிருக்கானுங்க. மொதல்ல கவிஞரு போயிருக்காரு, அடுத்து டவுசர் உள்ளே போயிருக்காரு. கால் லேசாக நடுங்குகிறது. முதன் முதலில் ஒரு பெண்ணுடன் தனியே என்று இவரின் நடுக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது. விட்டால் தன் கால்சட்டையிலேயே ஒன்னுக்கு அடிக்கிற கண்டிசன்ல இவரு அந்த பெண் பாலியல் தொழிலாளியிடம் கேட்டிருக்கிறார் " டென்சனாய் இருக்கு ஒரு தம் அடிச்சிக்கவான்னு" அதுக்கு அந்த பெண் சொல்லியிருக்கா "ஏன்ய்யா நாங்க என்ன டீக்கடையா வச்சிருக்கோம்' இப்பத்தான் உனக்கு முன்னாடி வந்தவன் தம்மடிச்சிட்டு போன்னான்னு"

அன்னைல இருந்து தோழர் என்னை தம்மடிக்க கூப்பிடுறதே இல்லை

Wednesday, May 02, 2007

@ 4:57 PM எழுதியவர்: வரவனையான் 11 மறுமொழிகள்

நடந்துமுடிந்த கிரிக்கெட் போட்டிகள் எந்தவித எதிர்பார்ப்பையும் எனக்குள் கொண்டுவரவில்லை. அதே வேளை ஒன்றை மற்றும் இங்கு குறிப்பிட வேண்டும் அது, கனடிய தமிழரான மயூரன் இலங்கை - ஆஸ்திரிரேலியா போட்டியின் போது புலிக்கொடி பிடித்து மைதானத்துள் வலம் வந்து கைதாகியுள்ளார். அவரையும் அவரின் செயலையும் நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும். சர்வதேச பார்வையாளர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் ஈழப்பிரச்சினையின் தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் செயலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

வாழ்த்துகள் சகோதரா....

ஈழத் தமிழர் பிரச்சனையை அனைத்துலக சமூகத்துக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்துடனேயே நான் மைதானத்தில் உள்நுழைந்தேன் என்று அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடி ஏந்தி பரபரப்பை ஏற்படுத்திய கனேடிய இளைஞரான மயூரன் தெரிவித்துள்ளார்.
'தமிழ்நாதம்' இணையத்தளத்துக்கு மயூரன் அளித்த சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளதாவது:
தாயக மண்ணிலிருந்து நான்கரை வயதில் கனடிய நாட்டுக்கு நான் வந்தேன்.

பொதுவில் துடுப்பாட்டாப் போட்டிகளில் எனக்கு ஆர்வம் உண்டு. கனடாவில் நான் இருப்பதால் கூடைப்பந்தாட்டம் போன்ற போட்டிகளைத்தான் அதிகம் பார்ப்பதுண்டு. ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு துடுப்பெடுத்தாட்டப் போட்டிகளை பார்க்கச் சென்றது என்பது எம்முடைய பிரச்சினை எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான்.
இப்போதுதான் முதல் முறையாக துடுப்பாட்டப் போட்டியைப் பார்க்கச் சென்றேன்.
எங்களுடைய மக்கள் எல்லோருக்கும் எங்கள் நாட்டில் நடைபெறுவது என்ன என்று தெரியும். அனைத்துலக மன்னிப்புச் சபையும் உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியையொட்டி பரப்புரை மேற்கொண்டது. ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சியால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆகையால் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பரப்புரைக்கு ஆதரவாகவும் எமது பிரச்சனையை அனைத்துலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கருதி இந்த இளைஞராக இருப்பதால் நேரடி நடவடிக்கையை மேற்கொண்டேன்.
என்னுடைய நண்பர்களுடன் நான் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றேன்.
நாம் மேற்கொண்ட நடவடிக்கையானது முன்னரே திட்டமிட்டதுதான்.
அந்த மைதானத்தில் பல்வேறு நாடுகளின் கொடிகளெல்லாம் இருக்கின்றபோது எங்களுடைய நாட்டினது புலிக்கொடியும் அதாவது தமிழீழத் தேசியக் கொடியைக் கொண்டு போனால் என்ன மாதிரி விளைவை உண்டாக்கும்- பரபரப்பை ஏற்படுத்தும் என்று திட்டமிட்டுத்தான் இதனைச் செய்தோம்.அவுஸ்திரேலியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையேயான போட்டியைத் தெரிவு செய்யக் காரணம் உண்டு.
சிறிலங்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே நெருக்கமான உறவு உண்டு. சிறிலங்காவின் அமைச்சரான கேகலிய ரம்புக்வெல, அவுஸ்திரேலியாவுக்குச் சென்று எங்கள் மக்களின் செயற்பாடுகளைத் தடுக்கப் பார்க்கிறார். எங்களுடைய போராட்டத்தைத் தடை செய்ய அவர் முயற்சித்து வருகிறார். ஆகையால்தான் தற்போது இந்தப் போட்டியை நாம் தெரிவு செய்தோம்.
எங்களுக்கு மைதானத்தின் எந்தப் பகுதியைத் தெரிவு செய்ய வேண்டும் என்று வெளியிலிருந்து தெரியவில்லை. மைதானத்தின் பகுதியில் நகரக்கூடிய இடங்களும் இருந்தன.

மைதானத்தைச் சுற்றி மிகவும் வலுவான பாதுகாப்பாகத்தான் இருந்தது. ஆனால் சரியான நேரத்தையும் சரியான இடத்தையும் நாம் தெரிவு செய்தமையால்தான் எமது திட்டம் வெற்றி பெற்றது.
மைதானத்தில் சிறிலங்கா அணி நிற்க அவுஸ்திரேலிய அணி மட்டையெடுத்து ஆடும்போதுதான் இறங்க வேண்டும் என்று திட்டமிட்டேன். அதன்படி நான் மைதானத்தில் இறங்கி பிட்ச் பகுதிக்குச் செல்ல தீர்மானித்தேன்.
ஆனால் மைதானத்தில் நின்றிருந்த சிறிலங்கா அணியினரோ அச்சத்துடன் இருந்தனர். அந்தப் பாதிப்பைவிட வந்திருக்கும் பார்வையாளர்களுக்கு விடயத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கருதினேன். அதற்கேற்ப பார்வையாளர்களும் என்னை உற்சாகப்படுத்தினர். பார்வையாளர்கள் வரிசையில் இலங்கையர்களும் இருந்திருக்கக் கூடும். ஆனால் எந்தப் பகுதியிலிருந்து உற்சாகமளித்தனர் என்பது எனக்குத் தெரியவில்லை.நான் மைதானத்தில் இறங்கும் வரை திட்டமிட்டதனை சரியாக முடிக்க வேண்டும் என்று கருதிக் கொண்டிருந்தேன். மைதானத்தில் இறங்கிய பின்னர் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தேன்.
சிறிலங்கா அணியினர் அச்சத்துடனும் அவமானப்பட்ட நிலையிலுமாக அவர்கள் முகம் இருந்ததை நான் சரியாகப் பார்த்தேன்.
நான் மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடியுடன் இறங்கிய உடனே அங்கிருந்த காவல்துறையினர் என் பின்னால் வந்தனர். அவர்கள் என்னை நோக்கி வந்தபோது அவர்களுக்கு ஒத்துழைப்புத் தரும் விதத்தில் நான் எனது கையை உயர்த்தினேன்.
இதனை நான் விளையாட்டுக்குச் செய்யவில்லை. பரப்புரைக்காகத்தான் செய்கிறேன் என்பதனை அனைத்துலக துடுப்பாட்டச் சபையினரும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இடையூறு செய்யவில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நாம் அவர்களோடு ஒத்துழைத்தேன்.


நான் செய்தது ஒரு போராட்ட ரீதியான செயல்தான். விளையாட்டுக்காக பிழையாக நான் செயற்படவில்லை.
நான் மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டபோது, முதலில் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். எங்கள் நாட்டில் இப்படியான பிரச்சினைகள் நடைபெறுகின்றன. அதனை வெளிப்படுத்தவே இத்தகைய செயற்பாடு மேற்கொண்டோம் என்றும் விளக்கம் அளித்தேன்.
மைதானத்திலிருந்த போதுதான் அனைத்துலக துடுப்பாட்டச் சபையினர் விசாரித்தனர்.
எந்த ஒரு பார்வையாளரும் மைதானத்தில் இறங்கக் கூடாது என்பதுதான் அந்த அதிகாரிகளின் சட்டம். என்னிடம் விசாரணை செய்த ஒவ்வொரு உயர் அதிகாரியிடமும் என்னுடைய மன்னிப்பைக் கூறி அத்துடன் எமது அரசியல் பிரச்சினையையும் நான் விளங்கப்படுத்தினேன். எதற்காக இந்தச் செயலை செய்தேன் என்றும் விளக்கினேன்.
மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அங்கிருந்து புலனாய்வுத்துறை தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.

முதலில் என்னை குற்றவாளியாகக் கருதித்தான் 40 அல்லது 50 பேர் கொண்ட புலனாய்வுப் பிரிவினர் விசாரித்தனர். என் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத்தான் அவர்கள் முயற்சித்தனர்.
ஆனால் ஒவ்வொரு அதிகாரியும் என்னிடம் விசாரித்த போதும் விளக்கம் கூறினேன். அதன் பின்னர் எனது சார்பில் கதைக்கத் தொடங்கினர்.
அதன்பின்னர் அந்த நாட்டிலிருந்து வெளியேறுமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர். ஏனெனில் இன்னொரு போட்டிக்கு நான் திரும்பவும் போய் இப்படியான ஒரு சம்பவம் நடப்பதை அவர்கள் விரும்பவில்லை. அப்படி நடப்பதன் மூலமாக வெளிநாட்டினருக்கு மேற்கிந்திய தீவுகள் குறித்து பிழையான அபிப்பிராயம் வருமென கருதினர். ஆகையால் அதனை ஏற்று அந்நாட்டிலிருந்து வெளியேற இணங்கினேன்.
மேற்கிந்திய தீவுகள் நாட்டின் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேறினேன்.
கனடா நாட்டுக்கு நான் திரும்பியபோதும் இதுவரை எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. விசாரணைகள் வரலாம். அதனை எதிர்கொள்ளவும் நான் தயாராக உள்ளேன்.
ஆனால் கனடா நாட்டினது சட்டத்தை நாம் சரியான முறையில் கையாண்டால் எங்களுக்கு எதுவித பிரச்சனையும் வராது என்ற நம்பிக்கையுடன்தான் நான் மைதானத்திற்குச் சென்றேன்.
நான் மேற்கொண்ட நடவடிக்கையானது ஊடகங்களில் படங்களுடன் வெளியானதன் மூலம் எனது நோக்கம் நடந்தேறியிருப்பதால் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறேன். எமக்கு மட்டுமல்ல தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் என்று கருதுகிறேன்.
நான் மேற்கொண்ட செயற்பாடு சரியானது என்று இளைஞர்கள் பலரும் தொடர்பு கொண்டு தெரிவித்ததோடு தங்களை அழைத்துச் செல்லாதது குறித்து கோபமடைந்தும் உள்ளனர்.
நாம் வெற்றி கிடைக்கும்வரை சிந்திக்க வேண்டும். நாங்கள் பெருந்தொகையில் திரண்டு போராட்டம் நடத்திய போதும் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை. இத்தகைய புதிய வடிவங்களினூடே தொடர்ச்சியாக எமது செயற்பாடுகளை மேற்கொள்வோம்.
எங்களுடைய தேசியத் தலைவரின் விருப்பத்தின்படி அதாவது எமது தேசியத் தலைவர் அவர்கள் ஒருமுறை, வெளிநாட்டில் இருக்கும் தமிழ் இளைஞர்கள் அடுத்த கட்டப் போராட்டத்துக்கு முன்வர வேண்டும் என்று கூறியிருந்தார். நாங்கள் பீனிக்ஸ் பறவை போல் எழும்ப வேண்டும் என்றும் கூறினார்.
அதற்கேற்ப செயற்திட்டங்களையும் வடிவங்களையும் மாற்றி அனைத்து தமிழ் இளைஞர்களும் முன்வந்தால் நம் பிர்சினைக்கு விரைவில் நாம் தீர்வு காண்போம் என்றார் மயூரன்.
நன்றி : தமிழ் நாதம் இணையம்