Thursday, April 19, 2007

@ 3:11 PM எழுதியவர்: வரவனையான்

பள்ளிவிடுமுறைக்காலம் என்பதால் பேருந்தில் முன்பதிவு கிடைக்காமல் அலைகிறாரோ, வெயில் காலமாகியதால் எங்கெங்கெல்லாம் வெப்பத்தில் மாட்டி தவிக்கிறாரோ என்கிற கவலை ஏற்படத்தான் செய்கிறது. சென்ற முறையைப்போல் ஊருக்கும் போக முடியாது, போனால் கட்டி வைத்துவிடுவார்கள். என்ன செய்வது ஆனாலும் இனி இங்கு இருக்க முடியாதே. என்று அவர் தவிக்கும் தவிப்பு தெரிகிறது. இருந்தாலும் என்ன செய்வது ஒரு "சனியின் இடப்பெயர்வை " அவரால் தாங்க முடியாதே.


Photo Sharing and Video Hosting at Photobucket


ஆம் மேற்படி வரிகள் பாலா மாம்ஸ் என் சென்னை இடப்பெயர்வுகுறித்து கேள்விப்பட்டு ஊரைவிட்டு கிளம்பலாம் என்று முடிவு செய்ததாக அறிகிறேன். அவர் சந்திர மண்டலத்திற்கு சென்றால்கூட அங்கும் பாகச தன் கொள்கையிலிருந்து விலகாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.


என் இனிய தூத்துக்குடி மக்களே, அழகிய கருவாச்சிகளே, எத்துபல்லு சைவகார பிகர்களே, ஒரு பொருளாதார அகதியின் புலப்பெயர்வு எவ்வித அதிர்வுகளையும் ஏற்படுத்தாது என்றாலும் உங்களையும் , பனிமய மாதாவையும், மகர நெடுங்குழைக்காதனையும், நுரை பொங்கும் கடலையும் , ஏலேய் சேம்சு எங்கலே உன் புள்ள " போன்ற முத்து நகர் தமிழையும் தவற விடுவேன் என்பது உறுதி . சந்திப்போம்.

27 மறுமொழிகள்:

 1. வாங்கோ...அட வாங்கோன்னா...

  எங்க தங்கப்போறேள்...ட்ரிப்ளிகேனா இல்ல வெஸ்ட் மாம்பழமா (சீசன் ஆரம்பிச்சாச்சு)

  :))))

 1. ஒருக்கா ஆத்தூர் வரைக்கும் வண்டி எடுத்துப் போய் தாமிரபரணியில்ல் இறங்கி நின்னு காலை நனைச்சுட்டு வாரும்வே.. வருக வருக சென்னைக்கு வருக....

 1. ஹிம்ம்ம் பாலாண்ணாக்கு ஜென்மத்து சனியா??

  மற்றபடி வரவனையில் தூத்துக்குடி ரசிகர்கள் பெரும் கவலையில் இருப்பதாக அறிய முடிகின்றது :P

 1. அடப்பாவிகளா...!

  :(((

 1. 4:28 PM  
  niyaayasthan said...

  xyz

 1. 4:32 PM  
  நியாயஸ்தன் said...

  தருமமிகு சென்னைக்கு

  வருக வருக

  ம்ம்ம்.....விதி யாரை விட்டது?

 1. வெல்கம் வரவனையான் ஸார்.. சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன்..

 1. 4:49 PM  
  Anonymous said...

  ஏம்பா ஒன்னுக்கு அடிக்க போவனும்னாலும் ஊரெல்லாம் சொல்லிபோட்டு தான் போவியா?

 1. 4:50 PM  
  Anonymous said...

  சென்னைக்கே புடிச்சது எமகண்டம்...

 1. 4:52 PM  
  Anonymous said...

  //அடப்பாவிகளா...!

  :(((//

  ரவுடி என்கிற அடியாள் பாலபாரதியை போண்டா சட்டத்தில் கைது செய்யுமாறு நாளை வின்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் மறியலில் ஈடுபடப்போவதாக எனக்கு தகவல் வந்துள்ளது

 1. 4:53 PM  
  Anonymous said...

  வின்வெளியில் எப்படிடா மறியல் செய்ய முடியும் மரமண்டை?

 1. 4:54 PM  
  Anonymous said...

  வின்வெளியில் மாரத்தான் ஓட முடியும் போது ஏன் மறியல் செய்ய முடியாது, என்று நான் கேட்கிறேன் நடுவர் அவர்களே...

 1. சிங்கை சக்கரவர்த்தி கிளப்பில் ஏப்ரல் 5 நள்ளிரவு கொண்டாடுவதற்காக வாங்கி வைத்திருந்த ஷிவாஸ் ரீகல் ஆவியாகிக்கொண்டிருக்கிறது.
  அதனால் இனி உனது பதிவிற்கு அமுக அவுசுதிரலாசிய கழகம் புறக்கணிக்க போவதாக கிசு கிசு வெளியாகியுள்ளது.

 1. சென்னை போடா வெண்ணை என்று சொல்லும்படிக்கு ஆயிடாமல் இருக்க என் வாழ்த்துக்கள்.. மற்றவற்றை பாபா பாத்துக்குவார்.


  நம்ப தலைக்கு சங்கத்துல்லயே எதிரிகள் மொளச்சுட்டதா கேள்விப்பட்டேன். நீங்க தான் கூட இருந்து பாத்துகிறனும்..


  கூடிய விரைவில் ஜோதியில் கலந்திட முயற்சிக்கிறேன்.

 1. //ஷிவாஸ் ரீகல//

  இதென்ன??

 1. 5:05 PM  
  Anonymous said...

  //ரவுடி என்கிற அடியாள் பாலபாரதியை //

  அது ரத்தம் பாஸ்,,,, அப்படித்தான் வளரும்.

 1. http://ini2006.blogspot.com/2007/04/blog-post.html

  படித்த பின் கருத்து சொல்லுங்கள்

 1. 5:08 PM  
  Anonymous said...

  இன்னா தல,
  இன்னும் 15 தாண்டல...

 1. 5:10 PM  
  Anonymous said...

  ஏப்பு, அவனவன் உங்கிட்ட லிங்க் கொடுத்து கருத்து கேக்கறானே நீயென்ன பெரிய நவொம் சாம்ஸ்கியா?

 1. ////ஷிவாஸ் ரீகல//

  இதென்ன?? //

  சிவன் தலையிலிருந்து ஊற்றெடுத்து ஓடும் கங்கையின் தீர்த்தம (thats y its s(c)hivas Regal) அப்படியே சாப்பிட்டா ஏழு ஜென்ம புண்ணியம் கிட்டும்.

 1. சென்னை உங்களை வாங்க அண்ணா என்கிறது!

 1. ஒரு அனானிகிட்ட போன்ல ஏசி மேன்சன் இருக்கான்னு கேட்டிங்களே.. கிடைச்சுடுச்சா...


  சென்ஷி

 1. //அவர் சந்திர மண்டலத்திற்கு சென்றால்கூட அங்கும் பாகச தன் கொள்கையிலிருந்து விலகாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.//

  too late

  ஏற்கனவே சந்திர மண்டலம் & மற்ற கிரங்கள் குத்தகைக்கு எடுத்து பாகசவ ஆரம்பிச்சாச்சு. :)

  தல பாடு உண்மையிலேயே கஷ்டம்தான்..

 1. இத்தன நாளா நீங்க சென்னையில இருக்கறதா நெனச்சிட்டு, அங்க வந்து சந்திக்கிற மாதிரி கற்பனை பண்ணிட்டு இருந்தேன்.

  //சிவன் தலையிலிருந்து ஊற்றெடுத்து ஓடும் கங்கையின் தீர்த்தம (thats y its s(c)hivas Regal) அப்படியே சாப்பிட்டா ஏழு ஜென்ம புண்ணியம் கிட்டும்.//

  :-)))

  வர வர உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாயிட்டே வருது தல :)

  அழகிய ராவணன்
  அமுக பஹ்ரைன் கிளை

 1. உங்க பக்கத்துக்குப் போனதும் யாரோ ஒர பொண்ணு உங்களை லவ்வுறதாச் சொல்லுறாங்க.. நேத்தும் சொன்னாங்க.. இன்னிக்கு கூட இரண்டு வாட்டி சொல்லிட்டாங்க.. பாவமய்யா.. கொஞ்சம் கண்டுக்குங்க..

 1. 2:57 PM  
  சென்னையிலிருந்து ட்ரான்ஸ்பர் கேட்டுக் கொண்டிருப்பவன்.. said...

  ஏற்கனவே இது குண்டர் கூட்டம் தான்.. நீயும் வந்தா வெளங்கினாப்புலதான்.. சென்னை ரவுடிகளின் கூடாரமாகிவிட்டது என்று அம்மையார் ஏற்கனவே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.. ம்ஹும்..

 1. 5:24 PM  
  ரவி சுப்ரமண்யன் said...

  //என் இனிய தூத்துக்குடி மக்களே, அழகிய கருவாச்சிகளே, எத்துபல்லு சைவகார பிகர்களே,//

  எங்கள் அக்ரஹாரத்து பிகர்களை தனியே குறிப்பிடாமல் மிகவும் கேவலமாக எத்துபல்லு சைவகார பிகர்கள் என்று குறிப்பிட்டமைக்கு எமது கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்(ல்)கிறோம்

  அஹ்ரஹாரத்து அம்பி
  அஹ்ரஹாரம்
  சிவன் கோயில் அருகே
  ரெண்டாம் கேட்
  டூட்டிக்கோரின்