Friday, April 20, 2007

@ 10:05 AM Labels: எழுதியவர்: வரவனையான்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதயம் அழகாய்த்தெரியும். சமயங்களில் எனக்கு இரவினில் தனியே ஒலமிடும் தெரு நாயின் குரல் கூட இனிதான ஒன்றாய்த்தோனும். துணையில்லாத ஏக்கத்தை அதன் மொழியில் அதைக்காட்டிலும் வேறு எப்படி வெளிப்படுத்த இயலும். பொதுவாய் கற்பிக்கப்பட்ட அழகியற்கோட்பாடுகளை தாண்டி நமக்கு நம் மனதுக்கு அழகாய் படும் விதயங்களே இங்கு எழுதப்போகிறேன். அதிலும் ஒரு 4 அல்லது 5 த்தாண்டி எழுதவும் விருப்பமில்லை. எதோ ஒரு கணத்தில் நம் மனதில் படிந்துபோன நிகழ்வு அல்லது காட்சி அழகான ஒன்றாய் மிளிர்ந்து கொண்டிருக்கும்.அம்மாச்சி : ஒரு அரசிக்கு நிகரான வாழ்வை தன் கணவன் இருக்கும் வரை வாழ்ந்தவர். அவரின் மரணத்திற்கு பின் தன் அதிகாரங்களை மருமகள்களிடம் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்த போதும் அதை ஒரு கழிவிரக்கமாய் கொள்ளாமல் ஏற்றுக்கொண்ட பக்குவம், அதன் பின் அவர் ஏற்படுத்திக்கொண்ட வாழ்க்கைமுறை யாவும் மிக அழகான ஒன்றாய் பதிந்துபோயுள்ளது என் மனதில் . யாரையும் எதற்காகவும் கடிந்துகொள்ளாமல் எல்லோர் மீதும் அன்பை செலுத்தி வாழ முடியும் என்கிற வாழ்வு நெறியை கண்முன் வாழ்ந்து காட்டியவர். என் மனதுள் பேரழகியாய் இருக்கிறார்.சித்தப்பா : தன் வாழ்வின் சிக்கலான ஒரு காலகட்டத்தில் துணை நின்றார்கள் எங்கிற ஒரே காரணத்துக்காய் தன் வாழ்க்கையே தனது அண்ணன் குடும்பத்திற்கு ஒப்படைத்து இறுதி வரை திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்ந்திறந்தவர். என் இமைப்போதும் மறவாத பேரருளாளன். அவரின் மன அழகு எவருக்குண்டுபெண்கள் : எல்லாருக்கும் மரியா ஷரபோவா பிடிக்கும் என்றால் எனக்கு செரினா பிடிக்கும். தமிழ் நடிகைகளில் கூட சினேகா, வினொதினி, கீது மோகன் என்று கருப்பழகிகளின் ரசிகன் நான். அதற்காய் நிறமாய் ஒரு பெண் கடந்து போனால் "சைட்" அடிக்கமாட்டேன் என்று உத்திரவாதமெல்லாம் அளிக்கமுடியாது ;) எனக்கென்னவோ இந்த கருப்பிகள் அழகாய்த்தெரிகிறார்கள். ஒரு சகோதரி கேட்டார், நீங்கள் கருப்பு' அப்படியாயின் எதிர் நிறத்தில் தானே ஈர்ப்பு இருக்கும் என்று. எப்படி யோசித்து பார்த்தாலும் கருப்பின் அழகும் கருப்பிகளின் அழகுக்கும் இணையில்லைதான்.
Photo Sharing and Video Hosting at Photobucketவீரா : என் இனிய தோழன், சகோதரன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அவன் ஜெர்மன் ஷெப்பர்ட் ரகமாம். எனக்கு சாதி நாயின் மீதெல்லாம் விருப்பமில்லை. அதற்கு முன் இரண்டு நாட்டு நாய்களே வளர்த்திருந்தோம். அவை ஓடிபோனது திரும்பவில்லை. வீட்டில் ஒருவருக்கும் சோறு இறங்கவில்லை. என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் தெருவில் அனாதையாக எதாவது குட்டி நாய் கீச்கீச் என்று கத்திக்கொண்டிருந்தால் கூட மனசு கேக்காமல் தூக்குவந்திடுவேன். பின் வீட்டில் வசவு மழைதான். " ஏற்கனவே 3 பொட்டை நாய் இருக்கு இதுல இவ வேறையா" இதென்ன வீடா இல்லை பிரசவ ஆஸ்பத்திரியா ' . திட்டிக்கொண்டே அம்மா அதற்கும் பால் கொணர்ந்து ஊற்றுவார்கள். ஏச்சு எனக்குத்தான் விழுமே அன்றி அவைகளுக்கு என்றும் விழுந்ததில்லை. இருந்த நாய்கள் காணாமல் போனதால் வீடே வெறிச்சென்று இருப்பதுபோல் தோற்றம் பெறவே. முதன் முதலாய் காசு கொடுத்து நாய் வாங்க போனேன் ஒரு பங்களாவில் தனியே ஒரு அறையில் நான்கு குட்டிகளுடன் அவனின் தாய் படுத்திருக்க இவன் மட்டும் அவனின் தாய் தட்டிலிருந்த தன்னினும் பெரிய எலும்புத்துண்டு ஒன்றை கவ்விக்கொண்டு ஓடினான். அவன் பிறந்த 22 ம் நாள் அது. பார்த்தவுடன் பிடித்துவிட அள்ளிக்கொண்டு வந்தேன். அதன் பின் அடுத்த 9 ஆண்டுகள் என்னை விட பாசம் அவனுக்கு போனது. 2004 செப்டம்பர் 11 திகதி என்னை விட்டு பிரிந்து இறந்து போனான். வேறு பேச்சு பேசிக்கொண்டிருக்கும் போதும் "வீரா"என்று ஒரு வார்த்தை'இடையில் வந்தால் கூட சட்டென காதுகளை விடைத்து தலைசாய்த்து பார்க்கும் அவனின் அழகே அழகு.


வெயில் : கொளுத்தும் வெயில் , குளிரூட்டபட்ட அறையில் நின்றால் கூட முதுகு தண்டுவடத்தில் ஒழுகிக்கொண்டிருக்கும் வேர்வை. சவரக்கன்னதின் எரிச்சல் என இவை போன்ற துன்பமும் எனக்கு அழகாய்ப்படும். தமிழ் நாட்டின் வெப்பம் ஆந்திரா போலவோ ,டில்லி போன்றோ இல்லை மத்திய கிழக்கு நாடுகளை போன்றோ கொடுமை மிகுந்தது இல்லை. அனுபவிக்க அழகான கோடைக்காலம் தமிழ்நாட்டில்தான். மத்திம வயது வரையோ அல்லது BB வரும் வரையோ வெயிற்காலத்தின் அழகை அனுபவிக்க தமிழ்நாடு உகந்த இடமாகும். அதிலும் அந்த கோடைக்கால விடியல் அழகானது.
:- எழுத பணித்த காட்டாற்றுக்கு நன்றி


12 மறுமொழிகள்:

 1. அரைமணி நேரத்தில் பதிவு எழுதியதால் இது " சாதனைப்பின்னூட்டம்"

  ஹிஹிஹி

 1. ////எனக்கு சாதி நாயின் மீதெல்லாம் விருப்பமில்லை.////


  இங்கதான்யா நீங்களும் என்னைப்போல் தனித்து நிக்கிறீரு!!!

  வாழ்த்துக்கள்.

 1. //கொஞ்சம் சுவாரசியமான ஆளுதான்//

  ஒத்துக்குறேன்.. உண்மைதான்.. ரொம்ப ஒத்துக்குறேன்.. 'வீரா' பற்றிய பதிவைப் படித்த பிறகு.. மிக சுவாரஸ்யம்.

  //அரை மணி நேரத்தில் எழுதியதால் இது சாதனைப் பின்னூட்டம்//

  ஒரு சாதனையைப் படைக்க வைத்ததற்காக காட்டாறு அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..

 1. 12:11 PM  
  மருத்துவர் said...

  கண்ணா அது BB அல்ல. BP. இதுவே நான் கண்டு பிடிக்கும் தப்பு...

 1. 3:43 PM  
  உண்மைத்தமிழன் ரசிகர் மன்றம் said...

  உண்மைத்தமிழன் அவர்களே உங்கள் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. உங்களுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமா?

 1. அம்மாச்சி, சித்தப்பான்னு அப்படியே கிராம உறவுகளோட அழகை நல்லாவே சொல்லியிருக்கீங்க வரவனையான்

 1. வந்துட்டேன்... வந்து வாசிச்சிட்டேன்... அரை மணி நேரத்தில் எழுதியதால் தான் அழகோ?

  அம்மாச்சி.... ம்ம்ம்ம்... எப்பவும் அழகுதான் இல்லையா?

  கருப்பு... அதற்கு இணை வேறுண்டோ? முடிந்தால் ஒரு நடை போய்ட்டு வாங்க இங்கே:
  http://kaattaaru.blogspot.com/2007/03/blog-post_8815.html
  கருப்பின் மேன்மையையை பறைசாற்றும் பகுதி.

  கொளுத்தும் வெயில் ---- இதத்தான் எப்படி எடுத்துக்குறதுன்னு தெரியல.... தூத்துக்குடில இருந்துட்டு வெயில் அழகுன்னு சொன்னது.... நக்கலா? இல்லை வெயிலில் ஏதாவது ஆகிவிட்டதா? :)

 1. ம்ம்ம் மேல் குறிப்பிட்ட அனைத்தும் எனக்கு தெரியும்..அழகு தான்..வெயில் மட்டும் ஒத்துக்க முடியலை வரவனை...

 1. சமீப காலமாக உங்கள் பதிவில் சுயபுராணங்கள் அதிகமாக இருப்பதால் "இண்டெலெக்சுவல் காமெடி மிஸ்ஸிங்"...

  ஸ்டாப் ரைட்டிங் சங்கிலி மேட்டர்ஸ்...

  மற்றபடி...உறவுகளால் பிண்ணிப் பினைந்திருந்தாலும் எனக்கு அம்மா தான் அழகுதேவதை அதற்கப்புறம் தான் மற்றவரெல்லாம்...பாட்டியும் அழகு தான் கொடுக்கும் வரை :))

  வெயில் பிடிக்கும் அதே அளவு வென்பனியும் பிடிக்கும்...எக்ஸ்ட்றீம் எல்லாமே பிடிக்கும்...கருப்பு, வெள்ளை...


  சமீப காலமாக எல்விஸ் (நம்மூட்டு நாய் தான் - ரேட் ஹண்ட்டர்) ரொம்ப அழகா தெரியரான்...

 1. Azagu Sundharam enkera Varavanankku Varakkam:)

  Well expressed your thoughts about beauty! You are a black admirer, great!!

  About veyyil in Tamil Nadu you are absolutely right, that too practicing the summer season veyyil with the southeast breeze is awesome. I am experiencing that here now.

 1. O dia 25 de Abril de 1974 foi o dia do derrube da ditadura fascista em Portugal, a chamada REVOLUÇÃO DOS CRAVOS, e a queda do (poder) dos inimigos do povo. 25 de Abril, sempre.

  Day 25 of April of 1974 was the day of it knocks down of the dictatorship fascist in Portugal, the call REVOLUTION OF the flowers, and the fall of the power of the enemies of the people. 25 of April, forever!
  يوم 25 نيسان 1974 كان يوم تقرع عليها من الديكتاتوريه الفاشيه في البرتغال والدعوة للثورة الزهور ، وسقوط سلطة أعداء الشعب. 25 نيسان ، الى الابد!


  День 25 апреля 1974 года, в день он постучит в воздухе фашистской диктатуры в Португалии слово О РЕВОЛЮЦИИ цветы, и падение власти враги народа. 25 апреля, навсегда!
  Le jour 25 d'avril de 1974 était le jour de lui frappe vers le bas du fasciste de dictature au Portugal, de la RÉVOLUTION d'appel des fleurs, et de la chute de la puissance des ennemis du peuple. 25 d'avril, pour toujours !
  Tag 25 von April von 1974 war der Tag von ihm klopft unten vom Diktaturfaschisten in Portugal, von der Anruf REVOLUTION der Blumen und vom Fall der Energie der Feinde von den Leuten. 25 von April, für immer
  25天41974年的一天,它拍下來的法西斯獨裁政權,葡萄牙 號召革命的鮮花,秋天的權力得到人民的敵人. 25日,永不停息

 1. //சமீப காலமாக எல்விஸ் (நம்மூட்டு நாய் தான் - ரேட் ஹண்ட்டர்) ரொம்ப அழகா தெரியரான்...//

  இதுக்கு மேல என்ன சொல்ல..
  உடனே ஒரு வைத்தியரை பார்ப்பது நல்லது..