Friday, April 13, 2007

@ 12:57 AM எழுதியவர்: வரவனையான்

சற்றேறக்குறைய 300 முறைக்கும் மேல் சென்னை வந்து சென்றிருப்பேன். ஆனால் ஒரு முறை கூட அதற்கான வாய்ப்பு வந்ததில்லை. அதுபோல் எப்போதும் அது குறித்து சிந்தித்ததில்லை. மாறாக இம்முறை ஒரு நண்பர் அழைக்கவும் ஒப்புக்கொண்டேன். காரணம் படத்தின் பெயர், ஆம், படத்தின் தலைப்பின் காரணமாகவே ஒப்புக்கொண்டேன். முதன் முறையாய் சென்னையில் ஒரு திரைப்படத்திற்க்கு போக எத்தனித்த படம் "குப்பி" .

நானும் நண்பரும் சென்ற போது திரையரங்கு நிரம்பியதைப்போல் தோற்றமளித்தது. அவதி அவதியாய் சீட்டு பெற்று அவசரகதியில் இரவுணவை உண்டு அரங்கு போய்யமர்ந்தோம்.


அது குறித்து ஆயிரம் கேள்விகள் எமக்குண்டு, அந்த கொலையின் பின்புலங்கள் குறித்து எழுப்பபட்ட ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு விடையின்றி போன மர்மத்தை பற்றியும், அக்கொலை நிகழ்ந்த பொழுது என் குடும்பத்தை சார்ந்த கடை எரித்து சாம்பலாக்கபட்டபோதும் இதுக்கும் எங்கள் கடையை எரித்து எங்களை தெருவில் நிறுத்துவதின் மூலம் என்ன வகையான பரிகாரம் தேட விளைகிறார்கள் என்பதும் விளங்காத கேள்விகளாய் இன்னுமும் என்னுள் இருக்கிறது.

படம் பற்றியான தகவல்களும் செய்திகளும் முன்பே படித்திருந்த படியால் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றிதான் காத்திருந்தேன். படம் ஒரு கருநாடக மறுமொழியாக்கம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தாமல்தான் இருந்தது, ஆனாலும் ஒரு இந்திய விளக்கெண்ணை கழுவல் இல்லாமல் இல்லை. என்ன செய்வது அமெரிக்க சி.அய்.ஏ 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனக்கு தேவையில்லாத ரகசியங்களை வெளியிடுவது போல் இந்திய அரசு அவ்வரசியல் கொலை நிகழ்ந்த 15 ஆண்டுகாலம் கழித்து அது குறித்தான இரு படங்களை அனுமதித்து உள்ளது.

படம் இந்திய உளவுப்பிரிவு எப்படி அக்கொலை குறித்து நீதிமன்றில் என்ன சொன்னதோ அதை அப்படியே " நம்பி" எடுக்கபட்டுள்ளது. ரங்கநாத் பாத்திரமும் பொருத்தமற்ற தேர்வு. அவர் 5 அடி உயரம் மட்டுமே உள்ளவர் ஆனால் 6 அடியில் ஒரு சாம்பார் நபருக்கு அவ்வேடம்( ரங்கநாத்தை நேரிலும் பார்த்துள்ளேன்) . மேலும் அவரின் மனைவிக்கு அவர்கள் கைதாகும் வரை அவர்கள் குற்றவாளிகள் என்று தெரியாது என்றே நானறிந்திருந்த்தேன். படமோ வேறு மாதிரியாக "அல்வா" கிண்டிக்கொண்டிருத்தது

அடுத்து சிவராசன்,சுபா மற்றும் சுரேஷ் மாஸ்டர் பாத்திர தேர்வும் அவர்களின் உடல்மொழியும் குறித்து பேசியாகவே வேண்டும். சிவராசன் கிட்டதட்ட தன் உடல்மொழியாலும் விழியாலும் தமிழ்த்திரையின் வில்லன் நடிகரை போலவே இருக்கிறார். ஆனால் சிவராசன் பற்றியும்,அவர் ஈபிஆரெலெபின் முந்தைய உறுப்பினர் என்பதும் அவரின் குணநலண்கள் குறித்தான பல்வேறுபட்ட செய்திகள் புழங்கிய தமிழ்சூழலில் ஒரு அரைவேக்காட்டு கிராதகன் போல் இருக்கிறார் சிவராசன் பாத்திரம்.

சுபாவோ இன்னும் ஒரு படி மேலே ஒரு மனநலம் பாதிக்கபட்ட பாத்திரமாகவே இருக்கிறார். மாளவிகா நன்றாய் முழிப்பார் என்பதாலே அவரை ஒரு போராளியாக காட்டியிருப்பது இயக்குநர் குறித்தான பரிதாபமே ஏற்படுகிறது. அதேவேளை சுரேஷ் மாஸ்டர் நல்ல தேர்வு.

எல்லாம் சரிதான், காவல்துறை சுற்றிவளைத்த பின் அது வரை ஒற்றை ஒலியில் அது எந்த வாகனம் , சுமையுடனா இல்லை வெறும் வண்டியா என்றெல்லாம் டக்கென்று சொல்லி வந்த சிவராசன் மாஸ்டரை, தன் விழியசைவில் எவரையும் வாயடைக்கும் மாஸ்டர் சிவராசனை போராளிகள் சுற்றி நின்று அறிவுரைக்கும் நேரத்தில் சத்தியமாக ஸீரியசாக படம் பாத்துக்கொண்டிருந்த்த எனக்கு கையில் "குப்பி" இருந்திருந்த்தால் படத்தின் அபத்தம் தாங்காமல் கடித்திருப்பேன்.

இந்த நேரத்தில் "தெனாலி" பட வெற்றிவிழாவின் போது, வருங்கால தமிழக முதல்வர் சூப்பர் ஸ்டார். ரஜினி சொன்ன ஒரு வாசகமும் தேவையின்றி நினைவுக்கு வருவதையும் தவிர்க்க முடியவில்லை அவ்வாசகம் " தெனாலி படம் பார்த்தபின் தான் எனக்கு சிலோன் பிரச்சனை இவ்ளோ மோசம்னு தெரியும் " இதை கேட்ட போது மனதில் எழுந்த எண்ணம் " அடிச்செருப்பால"

31 மறுமொழிகள்:

 1. நன்றி நன்றி நன்றி

 1. லண்டனில் வெகுவாக தமிழ்த் தொலைக் காட்சிகளில் விளம்பரப் படுத்துகிறார்கள்.படம் இப்படியானது என்றால் ஏன் அப்படிச் செய்கிறர்கள் என்றும் புரியவில்லை.
  படத்தைப் புறக்கனிப்பதே அதன் வியாபார நோக்கத்தை இல்லாது செய்யும் என்பதால் பார்க்கப் போவதில்லை.

 1. கடைசி பாரா லேட்டா இருந்தாலும் லேட்டஸ்ட் செந்தில்!

 1. வரவனையான்!
  மிக்க நன்றி. எதிர்பார்த்துப்போய், ஏமாறாதிருக்க உதவிய பதிவுக்கு.

 1. சன் டி வி புண்ணியத்தில் திரை விமர்சனம், சினிமாப் பக்கம் வாயிலாகக் துண்டு துண்டாகப் பார்த்தேன், வீடியோவில் பதிவு பண்ணி வலையேற்றவும் இருந்தேன், தொழில் நுட்பம் தொந்தரவு கொடுத்ததால் விட்டு விட்டேன்.

  உங்கள் பார்வையில் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். நான் பார்த்தவரை சினிமா என்ற ஊடகத்துக்கான சில விட்டுக்கொடுப்புக்களோடு செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தாலும் பல இடங்களில் சமரசம் செய்யாமல் குறிப்பாக ஈழத்தமிழ் பேச்சு வழக்கு, பாடல் இன்மை போன்ற இடங்களில் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள் போலப்பட்டது.

  ரொம்ப நாளாய் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி, நிஜ ரங்கனாத் எங்கே இப்போது?

 1. yaaruku nanri solreengal :-))

 1. //சினேகிதி said...
  yaaruku nanri solreengal :-)) //

  பின்னூட்டம் போடப்போறவங்களுக்கு ;)

 1. nanum trailer parthen..padam parakanum endu ninachen parthidu solran..ethuku kathai pinaniya nalla therinjukondu padam parkirathu better pola iruku.

  \\பின்னூட்டம் போடப்போறவங்களுக்கு \

  nalla palakam....ungada kolakaila irunthu maaridathenga:-))))

 1. இது என் குத்து.. :)

  // G Gowtham said...
  கடைசி பாரா லேட்டா இருந்தாலும் லேட்டஸ்ட் செந்தில்! //

  ரிப்பீட்டே...

 1. //ஈழத்தமிழ் பேச்சு வழக்கு,//

  அதுவா..?

  அப்புறம் வரவனை உங்கள் 3 நன்றிகளுக்கும் எனது நன்றி

 1. இங்கே அழுத்தவும்

 1. ரொம்ப நாளாய் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி, நிஜ ரங்கனாத் எங்கே இப்போது?

 1. குப்பி பட விமர்சனம் வேறுமாதிரியாக சினிசௌத்தில் இருந்தது . பார்க்கலாமென்றிரிந்தேன். குப்பியெல்லாம் கடிக்கமுடியாதுப்பா!! ஆனால் செருப்பு வேண்டுமென்றால் சொல்லுங்கள் அனுப்பிவைக்கிறேன் ;)

 1. தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.
  http://www.desipundit.com/2007/04/13/kuppi/

 1. ஈழத்தமிழ் பேச்சு வழக்கு நன்றாக வந்திருப்பதாகவா சொல்கிறீர்கள் பிரபா...? நான் இந்தத் துண்டுக் காட்சிகளைப் பார்க்க நேர்ந்தபோது.. "நாங்கள் இப்பிடிக் கதைக்கிறேல்லையே... எங்கடை கதையை வைச்சுப் படமெடுக்கிறவை ஈழத்தமிழ் ஆக்கள் ஆரையேன் வைச்சு இது சரியா வந்திருக்குதா எண்டு ஏன் பார்க்கக்கூடாது...?"எண்டுதான் நினைச்சனான். இனி முழுப்படமும் பார்த்தால்தான் தெரியும் என்னுடைய கருத்து எந்தளவிற்கு உண்மை எண்டு.

 1. //எனக்கு கையில் "குப்பி" இருந்திருந்த்தால் படத்தின் அபத்தம் தாங்காமல் கடித்திருப்பேன்.//

  ஆகா உங்க கிட்ட கொஞ்சம் கவனமா தான் இருக்கனும் போல..

  அத்தனை மோசமா? நான் பார்க்கபோவதேயில்லை...

 1. //தமிழ்நதி said...
  ஈழத்தமிழ் பேச்சு வழக்கு நன்றாக வந்திருப்பதாகவா சொல்கிறீர்கள் பிரபா...? //

  முழுமையாக நான் படம் பார்க்கவில்லை. மாளவிகா பாத்திரம் ஈழத்தில் தாங்கள் இருந்த போது நடந்த நிகழ்வுகளைச் சொல்லும் காட்சி பார்த்தேன். அதில் வரும் வசனப் பயிற்சிசை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக எனக்கிருந்தது. அந்தக் காட்சியைத் தான் வலையிலும் போட முயற்சி செய்தேன்.

 1. tamilcinema.com இல் நல்லா எழுதியிருக்கு, பார்க்கலாம் என்று இருந்தேன். நீங்கள் இவ்வளவு மோசம் என்று சொல்கிறீர்கள். பாப்பம்.

 1. பிராண்டுகிற கமர்ஷியல் சினிமாக்களுக்கு மத்தியில் ஒரு ரியல் சினிமா! அதுவும் நிஜ சம்பவங்களின் பின்னணியோடு! கை வலிக்க எழுதி பாராட்டவும், வாய் வலிக்க பேசி சீராட்டவும் தகுதியானவர் இந்த படத்தின் இயக்குனர் ரமேஷ்!

  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தேடப்பட்ட சிவராசன், சுபா இருவரையும் தேடுகிற போலீஸ், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை புலனறிந்து கண்டு பிடிப்பதுதான் கதை. தன் நேர்த்தியான திரைக்கதையால் இருக்கையின் விளிம்புக்கே இழுத்து செல்கிறார் இயக்குனர்.

  முன்னாள் பிரதமரையோ, பிரமாண்ட கூட்டங்களையோ காண்பித்து நேரத்தையும் ரீலையும் வீணடிக்காமல் குற்றவாளிகள் பதுங்கியிருந்த பெங்களூரில் இருந்து கதையை ஆரம்பிக்கிறார்கள். முதலில் வீடு தேடுகிற படலம்.

  பெங்களூர் தரகர் ஒருவரை பிடித்து வீடு தேடுகிற சிவராசன் உள்ளிட்ட புலிகள் எப்படி வீடு பிடிக்கிறார்கள்? அவர்களிடம் சிக்கிக் கொண்டு அந்த தரகர் தம்பதி என்னென்ன பாடு படுகிறது என்பதையெல்லாம் பார்க்கிற போது மர்ம நாவல் படிக்கிற விறுவிறுப்பு! ரங்கன்னாவாக நடித்திருக்கும் ரங்கநாத்தும், அவரது மனைவியாக நடித்திருக்கும் தாராவும் இது கதையல்ல, நிஜம் என்று உணர்த்துகிறார்கள்.

  கடைசியாக சிவராசன் கும்பலை போலீஸ் சூழ்ந்திருக்கும் அசாதாரண நேரத்தில் கூட, தன் அம்மா கொடுத்த கேஸ் சிலிண்டருக்காக கவலைப்படும் அப்பாவி தாராவை ரசிக்கலாம்.

  சிவராசனாக ரவிகாளை! அப்படியே சிவராசன் முகத்தோடு ஒன்றிப்போகிறது அவரது முகம். பத்திரிகைகளில் தன்னை பற்றி வருகிற செய்திகளை படித்துவிட்டு நக்கல் சிரிப்பு சிரிக்கிற போதும், நூற்றுக்கணக்கான போலீஸார் சூழ்ந்திருப்பது தெரிந்தும் எதிர்த்து போராடி வீர மரணம் அடைய வேண்டும் என்று விரும்புவதும் திகைக்க வைக்கிறது. தப்பியோடுகிற அந்த நேரத்திலும் அவர்களிடம் இருக்கிற ராணுவ கட்டுப்பாடு அசர வைக்கிறது. உங்க தேசத்தில் உங்க தலைவரை கொன்னது தப்புதான் என்று அவர் கர்ஜிக்கிறாரே, அந்த ஒற்றை வரி உணர்த்துகிற சங்கதிகள் ஏராளம்!

  சுபாவாக மாளவிகா. கண்களில் ஏக்கமும் வெறியும் தெறிக்கிறது. பழகிய இரண்டாம் நாளே அக்கா, நான் உங்களுக்கு சமைத்து போட வேண்டும் என்று பாசத்தை வெளிப்படுத்துவது அழகு. புலிகளுக்கு கூட நிழல் சென்ட்டிமென்ட் உண்டு என்ற தகவல் புதிது. ஆச்சர்யம்!

  மிகையில்லாத வெளிச்சம், மிதமான இருட்டு இரண்டையும் குழைத்து ஜாலம் புரிந்திருக்கிறது ரத்னவேலுவின் கேமிரா! ஆளை மிரட்டுகிற சந்தீப் சௌதாவின் பின்னணி இசை! ரீல்களுக்கு சக்கரம் கட்டிய ஆன்ட்டனியின் எடிட்டிங்! எல்லாமே பிரமிப்பு!

  இன்னொரு படத்தை ஒப்பிடுவது விமர்சனத்திற்கு அழகல்ல. இருந்தாலும், குற்றப்பத்திரிகை என்ற படத்தை எடுத்தற்காக காலரை தூக்கிவிட்டு கொள்கிறவர்கள் குப்பியை பார்த்து வெட்கப்படலாம்! சரித்திர பதிவுகள் இப்படி இருக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் திருத்தமாக சொன்னால் இப்படித்தான் இருக்க

 1. 7:55 PM  
  Anonymous said...

  உன் கடையை ஏன் இடிச்சாங்கான்னு தெரியலையா? கிறுக்கா உன்னை மாதிரி அரைலூசுங்க இந்தியாவை திட்டி ஏதோ இலங்கை தமிழர்கள் தான் உலக உத்தமங்க போல பேசிகிட்டு பிரபாகரனை நக்கறதாலத்தான்.
  மலையக தமிழர்களை முதல்ல யாழ்பாண தமிழர்கள் மனுசங்களா மதிக்க சொல்லு ..வந்துட்டுடானுங்க

 1. ஹலோ சின்னக்குட்டி,
  நீங்க திருட்டு டிவிடில தானே படம் பாத்தீங்க?

  இல்லாட்டி இவ்ளோ ஜெனரஸா விமரிசனம் பண்ண முடியாதே?

  காசு கொடுத்து படம் பாத்தவர் குப்பி கடிக்க இருந்திருக்காரு..

 1. 9:47 PM  
  Anonymous said...

  யப்பா பொட்"டீ",

  சின்னக்குட்டியக்கா தாம்பா ப்ரடியூசரு...மொதலு போட்டவங்களுக்கு தானே அதனோட அருமை தெரியும்.

 1. வரவனையான், உங்க விமரிசனம் படித்ததும் படம் பார்க்கலாமா, வேண்டாமா என்ற எண்ணம் வந்துருச்சி.

 1. அழகு பத்தின தொடர் விளையாட்டுக்கு உங்களை அழைத்துள்ளேன்.
  http://kaattaaru.blogspot.com/2007/04/blog-post_11.html

  அழகை அழகா சொல்லுங்கள் பார்க்கலாம்.

 1. //ஹலோ சின்னக்குட்டி,
  நீங்க திருட்டு டிவிடில தானே படம் பாத்தீங்க?

  இல்லாட்டி இவ்ளோ ஜெனரஸா விமரிசனம் பண்ண முடியாதே?

  காசு கொடுத்து படம் பாத்தவர் குப்பி கடிக்க இருந்திருக்காரு//

  இது என்னுடைய சொந்த விமர்சனமல்ல இணைப்பு கொடுக்க மறந்திட்டேன மன்னிச்சுகுங்க..

  http://www.viduppu.com/index.php?subaction=showfull&id=1176320242&archive=&start_from=&ucat=1&

 1. நண்பர்களே, படம்குறித்தான என் கருத்தை மட்டுமே இங்கு பதிந்துள்ளேன்.ஆகவே இப்படத்திற்கு எதிராய் நான் கருத்துக்கொண்டிருப்பதாய் கொள்ளவேண்டாம்.

 1. //நண்பர்களே, படம்குறித்தான என் கருத்தை மட்டுமே இங்கு பதிந்துள்ளேன்.ஆகவே இப்படத்திற்கு எதிராய் நான் கருத்துக்கொண்டிருப்பதாய் கொள்ளவேண்டாம். //
  அதெல்லாம் சரி. அழகு பத்தின தொடர் விளையாட்டுக்கு உங்களை அழைத்துள்ளேன்.
  http://kaattaaru.blogspot.com/2007/04/blog-post_11.html

  அழகை அழகா எப்போ சொல்லப் போறீங்க?

 1. காட்டாறு, கொஞ்சம் வேலை மன்னிக்கவும் விரைவில் எழுதிவிடுகிறேன்

 1. நன்றி வரவனையான்... ஆமா இந்த பெயருக்கு அர்த்தம் என்ன?

 1. அண்ணாச்சி,

  இப்போதான் இந்த நிமிசம் தான் , படத்தை தரவிறக்கி முடித்தேன்...

  அடுத்து படிச்சது உங்க இந்த விமர்சனம்...

  படம் பாரக்கலாமா வேண்டாமா?

 1. இணையத்தில் கிடைத்தால் சொல்லுங்கள். பார்த்துவிட்டுச் சொல்லுகிறேன்.