Friday, April 27, 2007

@ 11:29 AM எழுதியவர்: வரவனையான் 9 மறுமொழிகள்


" கழிவறை எழுத்துக்கள் தவிர்க்கலாமா ? இல்லை, தலையெழுத்தா? " என்கிற தலைப்பில் ஞானஒளிபுரம் ( சின்னப்பிள்ளையில் ஒகாராத்தை ஓகாரமாய் சொல்லியும் சிறப்பு "ழ"கரம் போட்டும் முதுகில் அடிக்கடி வாங்கிக்கட்டிக்கொள்வேன் ) சமூகபணி மன்றத்தில் ஒரு வீணாய்ப்போன NGO கருத்தரங்கம் நடத்திக்கொண்டிருந்தது. நம்ம டவுசர்பாண்டிக்கும் கட்டுரை வாசிக்கும் வாய்ப்பு. சோலமலை தியேட்டரில் மட்ட மத்தியானம் வேகாத வெயிலில் எஸ்.ஜே. சூர்யாவின் "நியு"("ட்" சைலன்ஸ் போல ) எங்கிற புளுபிலிம் பார்க்க வரிசையில் நின்னுகிட்டு இருந்தவனை கூப்பிட, ஏஸ் வென்சுரா'வில் நெருப்புக்கோழியில் வந்திறங்கும் ஜிம் கேரி போல் ஒரு 350 CC யமகாவை கியர் மாத்துகிறேன் பேர்வழியென்று வதை செய்தவாரே வந்தான் "டேஞ்சர்" கிருட்டிணன். இவனும் ஒரு டவுசருபாண்டிதான், வயசு 40யை தொடப்போதுன்னு பேசிகிறாய்ங்க. கேட்டா "இளமையாய் சிந்திக்கும் இடத்தில் உறைந்து போனது வயது"ன்னு எதையாவது புரியாத மாறி சொல்லி கிறுக்குசுத்தி விட்டுடுவான்.

என்னய்யா கிருஷ்ணா ! படத்துக்கா இவ்வளவு மேக்கப்பு போட்டு வந்திருக்க. சரி வண்டியை ஸ்டாண்டுல விட்டுட்டு வா'ன்னு சொன்னேன்.

ஸ்ஸ்ஸ்... பேர மாத்தாதட என் பேரு கிருட்டிணன்'ன்னான்.

அட தமிழ்க்கிறுக்கா, அப்படின்னா உன் பேர கண்ணன்னு மாத்திக்க வேண்டியதுதானே . கிருட்டினன் உருட்டினன் மிரட்டினன் அப்படின்னு இருக்கவனுக்கு நாக்க சுளுக்கு விழ வைக்கிறிங்கடா'ன்னு டென்சன் ஆனேன்.

இந்த படம் பார்த்துதான் ஆகனுமான்னு கேட்டான், ஆமாம்டா "சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை - சிம்ரனுக்கு மிஞ்சிய பிகருமில்லை" மிஸ் பண்ண முடியுமா அப்படின்னு சொன்னேன்.

டேய் நான் கட்டுரை வாசிக்கபோறேன் வாடா'ன்னான்.எங்கடான்னு கேட்டா எங்க தெருவுக்கு எதித்தாப்ல இருக்கிற மண்டபம். வேணாம்ட அரியர் எக்ஸாம் பீஸ் கட்ட போறேன்னு சொல்லிட்டுதான் வந்திருக்கேன். என் ஜென்ம விரோதி எங்க அண்ணன் பார்த்தா நான் அவ்வளவுதான். வீட்ல தோடு ( பெந்தே கோஸ்தே) இல்லாதவைங்க கூட்டத்துல போய் உக்காந்துருக்கான்னு போட்டு கொடுத்திருவான், நான் வரலை தோழர்ன்னு சொன்னேன். இல்லட பின்னாடி வழியா ஏறிக்குதிச்சி போலாம்டான்னு சொல்ல தலையெழுத்தேன்னு கூட வண்டில ஏறி உக்காந்தேன். ஸ்டார்ட் பண்ணிட்டு கேட்டான். இந்த வண்டிக்கு விசை( கியராம்) எப்படி போடுறதுன்னு.

இந்த வண்டி யாருது தோழர்ன்னு கேட்டேன். நம்ம ரெட்டை மண்டை அப்பா இருக்காரலுல அவருதுதான்னான். "ரெட்டை மண்டை" செல்வி டவுசர்பாண்டியின் தங்கை முறை. இவருக்கும் அந்த பேரு வச்சு கூப்பிடுறது தெரியாது என்று நினைதிருந்தேன் . பரவாயில்ல தோழர் நெருங்கிட்டார்ன்னு நினைச்சு. தோழர் அவங்க அப்பாதான் இறந்திட்டாருல்ல அதுமில்லாம அவங்கப்பன் சாகுகிறவரைக்கும் டயர உருட்டிகூட பார்த்ததில்லையே அப்புறம் எப்படி 350 CC யமகா வந்ததுன்னு கேட்டேன்.


நீ யார சொல்லுற' நான் சொன்னது ரெட்டை மண்டை ஃபாதரைத்தான் தமிழில் ரெட்டை மண்டை அப்பான்னு சொன்னேன்னான்.


அட ஒந்தமிழ்ல தீயை வாரிக்கொட்டன்னு நான் சொல்லிக்கொண்டிருக்கும் போதே நேரா போய் ஒரு டிரை சைக்கிள்காரனை தூக்கிட்டாரு.


( நாளை முடிக்கிறேன்)

Friday, April 20, 2007

@ 10:05 AM Labels: எழுதியவர்: வரவனையான் 12 மறுமொழிகள்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதயம் அழகாய்த்தெரியும். சமயங்களில் எனக்கு இரவினில் தனியே ஒலமிடும் தெரு நாயின் குரல் கூட இனிதான ஒன்றாய்த்தோனும். துணையில்லாத ஏக்கத்தை அதன் மொழியில் அதைக்காட்டிலும் வேறு எப்படி வெளிப்படுத்த இயலும். பொதுவாய் கற்பிக்கப்பட்ட அழகியற்கோட்பாடுகளை தாண்டி நமக்கு நம் மனதுக்கு அழகாய் படும் விதயங்களே இங்கு எழுதப்போகிறேன். அதிலும் ஒரு 4 அல்லது 5 த்தாண்டி எழுதவும் விருப்பமில்லை. எதோ ஒரு கணத்தில் நம் மனதில் படிந்துபோன நிகழ்வு அல்லது காட்சி அழகான ஒன்றாய் மிளிர்ந்து கொண்டிருக்கும்.அம்மாச்சி : ஒரு அரசிக்கு நிகரான வாழ்வை தன் கணவன் இருக்கும் வரை வாழ்ந்தவர். அவரின் மரணத்திற்கு பின் தன் அதிகாரங்களை மருமகள்களிடம் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்த போதும் அதை ஒரு கழிவிரக்கமாய் கொள்ளாமல் ஏற்றுக்கொண்ட பக்குவம், அதன் பின் அவர் ஏற்படுத்திக்கொண்ட வாழ்க்கைமுறை யாவும் மிக அழகான ஒன்றாய் பதிந்துபோயுள்ளது என் மனதில் . யாரையும் எதற்காகவும் கடிந்துகொள்ளாமல் எல்லோர் மீதும் அன்பை செலுத்தி வாழ முடியும் என்கிற வாழ்வு நெறியை கண்முன் வாழ்ந்து காட்டியவர். என் மனதுள் பேரழகியாய் இருக்கிறார்.சித்தப்பா : தன் வாழ்வின் சிக்கலான ஒரு காலகட்டத்தில் துணை நின்றார்கள் எங்கிற ஒரே காரணத்துக்காய் தன் வாழ்க்கையே தனது அண்ணன் குடும்பத்திற்கு ஒப்படைத்து இறுதி வரை திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்ந்திறந்தவர். என் இமைப்போதும் மறவாத பேரருளாளன். அவரின் மன அழகு எவருக்குண்டுபெண்கள் : எல்லாருக்கும் மரியா ஷரபோவா பிடிக்கும் என்றால் எனக்கு செரினா பிடிக்கும். தமிழ் நடிகைகளில் கூட சினேகா, வினொதினி, கீது மோகன் என்று கருப்பழகிகளின் ரசிகன் நான். அதற்காய் நிறமாய் ஒரு பெண் கடந்து போனால் "சைட்" அடிக்கமாட்டேன் என்று உத்திரவாதமெல்லாம் அளிக்கமுடியாது ;) எனக்கென்னவோ இந்த கருப்பிகள் அழகாய்த்தெரிகிறார்கள். ஒரு சகோதரி கேட்டார், நீங்கள் கருப்பு' அப்படியாயின் எதிர் நிறத்தில் தானே ஈர்ப்பு இருக்கும் என்று. எப்படி யோசித்து பார்த்தாலும் கருப்பின் அழகும் கருப்பிகளின் அழகுக்கும் இணையில்லைதான்.
Photo Sharing and Video Hosting at Photobucketவீரா : என் இனிய தோழன், சகோதரன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அவன் ஜெர்மன் ஷெப்பர்ட் ரகமாம். எனக்கு சாதி நாயின் மீதெல்லாம் விருப்பமில்லை. அதற்கு முன் இரண்டு நாட்டு நாய்களே வளர்த்திருந்தோம். அவை ஓடிபோனது திரும்பவில்லை. வீட்டில் ஒருவருக்கும் சோறு இறங்கவில்லை. என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் தெருவில் அனாதையாக எதாவது குட்டி நாய் கீச்கீச் என்று கத்திக்கொண்டிருந்தால் கூட மனசு கேக்காமல் தூக்குவந்திடுவேன். பின் வீட்டில் வசவு மழைதான். " ஏற்கனவே 3 பொட்டை நாய் இருக்கு இதுல இவ வேறையா" இதென்ன வீடா இல்லை பிரசவ ஆஸ்பத்திரியா ' . திட்டிக்கொண்டே அம்மா அதற்கும் பால் கொணர்ந்து ஊற்றுவார்கள். ஏச்சு எனக்குத்தான் விழுமே அன்றி அவைகளுக்கு என்றும் விழுந்ததில்லை. இருந்த நாய்கள் காணாமல் போனதால் வீடே வெறிச்சென்று இருப்பதுபோல் தோற்றம் பெறவே. முதன் முதலாய் காசு கொடுத்து நாய் வாங்க போனேன் ஒரு பங்களாவில் தனியே ஒரு அறையில் நான்கு குட்டிகளுடன் அவனின் தாய் படுத்திருக்க இவன் மட்டும் அவனின் தாய் தட்டிலிருந்த தன்னினும் பெரிய எலும்புத்துண்டு ஒன்றை கவ்விக்கொண்டு ஓடினான். அவன் பிறந்த 22 ம் நாள் அது. பார்த்தவுடன் பிடித்துவிட அள்ளிக்கொண்டு வந்தேன். அதன் பின் அடுத்த 9 ஆண்டுகள் என்னை விட பாசம் அவனுக்கு போனது. 2004 செப்டம்பர் 11 திகதி என்னை விட்டு பிரிந்து இறந்து போனான். வேறு பேச்சு பேசிக்கொண்டிருக்கும் போதும் "வீரா"என்று ஒரு வார்த்தை'இடையில் வந்தால் கூட சட்டென காதுகளை விடைத்து தலைசாய்த்து பார்க்கும் அவனின் அழகே அழகு.


வெயில் : கொளுத்தும் வெயில் , குளிரூட்டபட்ட அறையில் நின்றால் கூட முதுகு தண்டுவடத்தில் ஒழுகிக்கொண்டிருக்கும் வேர்வை. சவரக்கன்னதின் எரிச்சல் என இவை போன்ற துன்பமும் எனக்கு அழகாய்ப்படும். தமிழ் நாட்டின் வெப்பம் ஆந்திரா போலவோ ,டில்லி போன்றோ இல்லை மத்திய கிழக்கு நாடுகளை போன்றோ கொடுமை மிகுந்தது இல்லை. அனுபவிக்க அழகான கோடைக்காலம் தமிழ்நாட்டில்தான். மத்திம வயது வரையோ அல்லது BB வரும் வரையோ வெயிற்காலத்தின் அழகை அனுபவிக்க தமிழ்நாடு உகந்த இடமாகும். அதிலும் அந்த கோடைக்கால விடியல் அழகானது.
:- எழுத பணித்த காட்டாற்றுக்கு நன்றி


Thursday, April 19, 2007

@ 3:11 PM எழுதியவர்: வரவனையான் 27 மறுமொழிகள்

பள்ளிவிடுமுறைக்காலம் என்பதால் பேருந்தில் முன்பதிவு கிடைக்காமல் அலைகிறாரோ, வெயில் காலமாகியதால் எங்கெங்கெல்லாம் வெப்பத்தில் மாட்டி தவிக்கிறாரோ என்கிற கவலை ஏற்படத்தான் செய்கிறது. சென்ற முறையைப்போல் ஊருக்கும் போக முடியாது, போனால் கட்டி வைத்துவிடுவார்கள். என்ன செய்வது ஆனாலும் இனி இங்கு இருக்க முடியாதே. என்று அவர் தவிக்கும் தவிப்பு தெரிகிறது. இருந்தாலும் என்ன செய்வது ஒரு "சனியின் இடப்பெயர்வை " அவரால் தாங்க முடியாதே.


Photo Sharing and Video Hosting at Photobucket


ஆம் மேற்படி வரிகள் பாலா மாம்ஸ் என் சென்னை இடப்பெயர்வுகுறித்து கேள்விப்பட்டு ஊரைவிட்டு கிளம்பலாம் என்று முடிவு செய்ததாக அறிகிறேன். அவர் சந்திர மண்டலத்திற்கு சென்றால்கூட அங்கும் பாகச தன் கொள்கையிலிருந்து விலகாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.


என் இனிய தூத்துக்குடி மக்களே, அழகிய கருவாச்சிகளே, எத்துபல்லு சைவகார பிகர்களே, ஒரு பொருளாதார அகதியின் புலப்பெயர்வு எவ்வித அதிர்வுகளையும் ஏற்படுத்தாது என்றாலும் உங்களையும் , பனிமய மாதாவையும், மகர நெடுங்குழைக்காதனையும், நுரை பொங்கும் கடலையும் , ஏலேய் சேம்சு எங்கலே உன் புள்ள " போன்ற முத்து நகர் தமிழையும் தவற விடுவேன் என்பது உறுதி . சந்திப்போம்.

Friday, April 13, 2007

@ 12:57 AM எழுதியவர்: வரவனையான் 31 மறுமொழிகள்

சற்றேறக்குறைய 300 முறைக்கும் மேல் சென்னை வந்து சென்றிருப்பேன். ஆனால் ஒரு முறை கூட அதற்கான வாய்ப்பு வந்ததில்லை. அதுபோல் எப்போதும் அது குறித்து சிந்தித்ததில்லை. மாறாக இம்முறை ஒரு நண்பர் அழைக்கவும் ஒப்புக்கொண்டேன். காரணம் படத்தின் பெயர், ஆம், படத்தின் தலைப்பின் காரணமாகவே ஒப்புக்கொண்டேன். முதன் முறையாய் சென்னையில் ஒரு திரைப்படத்திற்க்கு போக எத்தனித்த படம் "குப்பி" .

நானும் நண்பரும் சென்ற போது திரையரங்கு நிரம்பியதைப்போல் தோற்றமளித்தது. அவதி அவதியாய் சீட்டு பெற்று அவசரகதியில் இரவுணவை உண்டு அரங்கு போய்யமர்ந்தோம்.


அது குறித்து ஆயிரம் கேள்விகள் எமக்குண்டு, அந்த கொலையின் பின்புலங்கள் குறித்து எழுப்பபட்ட ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு விடையின்றி போன மர்மத்தை பற்றியும், அக்கொலை நிகழ்ந்த பொழுது என் குடும்பத்தை சார்ந்த கடை எரித்து சாம்பலாக்கபட்டபோதும் இதுக்கும் எங்கள் கடையை எரித்து எங்களை தெருவில் நிறுத்துவதின் மூலம் என்ன வகையான பரிகாரம் தேட விளைகிறார்கள் என்பதும் விளங்காத கேள்விகளாய் இன்னுமும் என்னுள் இருக்கிறது.

படம் பற்றியான தகவல்களும் செய்திகளும் முன்பே படித்திருந்த படியால் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றிதான் காத்திருந்தேன். படம் ஒரு கருநாடக மறுமொழியாக்கம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தாமல்தான் இருந்தது, ஆனாலும் ஒரு இந்திய விளக்கெண்ணை கழுவல் இல்லாமல் இல்லை. என்ன செய்வது அமெரிக்க சி.அய்.ஏ 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனக்கு தேவையில்லாத ரகசியங்களை வெளியிடுவது போல் இந்திய அரசு அவ்வரசியல் கொலை நிகழ்ந்த 15 ஆண்டுகாலம் கழித்து அது குறித்தான இரு படங்களை அனுமதித்து உள்ளது.

படம் இந்திய உளவுப்பிரிவு எப்படி அக்கொலை குறித்து நீதிமன்றில் என்ன சொன்னதோ அதை அப்படியே " நம்பி" எடுக்கபட்டுள்ளது. ரங்கநாத் பாத்திரமும் பொருத்தமற்ற தேர்வு. அவர் 5 அடி உயரம் மட்டுமே உள்ளவர் ஆனால் 6 அடியில் ஒரு சாம்பார் நபருக்கு அவ்வேடம்( ரங்கநாத்தை நேரிலும் பார்த்துள்ளேன்) . மேலும் அவரின் மனைவிக்கு அவர்கள் கைதாகும் வரை அவர்கள் குற்றவாளிகள் என்று தெரியாது என்றே நானறிந்திருந்த்தேன். படமோ வேறு மாதிரியாக "அல்வா" கிண்டிக்கொண்டிருத்தது

அடுத்து சிவராசன்,சுபா மற்றும் சுரேஷ் மாஸ்டர் பாத்திர தேர்வும் அவர்களின் உடல்மொழியும் குறித்து பேசியாகவே வேண்டும். சிவராசன் கிட்டதட்ட தன் உடல்மொழியாலும் விழியாலும் தமிழ்த்திரையின் வில்லன் நடிகரை போலவே இருக்கிறார். ஆனால் சிவராசன் பற்றியும்,அவர் ஈபிஆரெலெபின் முந்தைய உறுப்பினர் என்பதும் அவரின் குணநலண்கள் குறித்தான பல்வேறுபட்ட செய்திகள் புழங்கிய தமிழ்சூழலில் ஒரு அரைவேக்காட்டு கிராதகன் போல் இருக்கிறார் சிவராசன் பாத்திரம்.

சுபாவோ இன்னும் ஒரு படி மேலே ஒரு மனநலம் பாதிக்கபட்ட பாத்திரமாகவே இருக்கிறார். மாளவிகா நன்றாய் முழிப்பார் என்பதாலே அவரை ஒரு போராளியாக காட்டியிருப்பது இயக்குநர் குறித்தான பரிதாபமே ஏற்படுகிறது. அதேவேளை சுரேஷ் மாஸ்டர் நல்ல தேர்வு.

எல்லாம் சரிதான், காவல்துறை சுற்றிவளைத்த பின் அது வரை ஒற்றை ஒலியில் அது எந்த வாகனம் , சுமையுடனா இல்லை வெறும் வண்டியா என்றெல்லாம் டக்கென்று சொல்லி வந்த சிவராசன் மாஸ்டரை, தன் விழியசைவில் எவரையும் வாயடைக்கும் மாஸ்டர் சிவராசனை போராளிகள் சுற்றி நின்று அறிவுரைக்கும் நேரத்தில் சத்தியமாக ஸீரியசாக படம் பாத்துக்கொண்டிருந்த்த எனக்கு கையில் "குப்பி" இருந்திருந்த்தால் படத்தின் அபத்தம் தாங்காமல் கடித்திருப்பேன்.

இந்த நேரத்தில் "தெனாலி" பட வெற்றிவிழாவின் போது, வருங்கால தமிழக முதல்வர் சூப்பர் ஸ்டார். ரஜினி சொன்ன ஒரு வாசகமும் தேவையின்றி நினைவுக்கு வருவதையும் தவிர்க்க முடியவில்லை அவ்வாசகம் " தெனாலி படம் பார்த்தபின் தான் எனக்கு சிலோன் பிரச்சனை இவ்ளோ மோசம்னு தெரியும் " இதை கேட்ட போது மனதில் எழுந்த எண்ணம் " அடிச்செருப்பால"