Tuesday, March 06, 2007

@ 1:36 PM எழுதியவர்: வரவனையான்

GERD : Gastro esophageal reflux disease


கொஞ்சம் உடல் மற்றும் மருந்துக்களின் பக்கவிளைவுகள் பற்றி பேசாலாம் என்பதற்காக இந்த பதிவு.


இப்போதிருக்கும் பணிக்கு முன் சொந்த தொழில் இருந்தது. அது கொஞ்சம் ஊர் சுற்றும் வேலை. காலை துவங்கி மாலை அல்லது இரவு வரை அருகிலிருக்கும் ஊர்களுக்கு பேருந்துகளில் சென்று பணம் வரவு வைத்து திரும்ப வேண்டும் உணவெல்லாம் ஆங்காங்கே தான். அப்போது ஒரு பழக்கம் வந்து விட்டது அதாவது இயற்கையின் அழைப்பை நிராகரித்து வருவது. காரணம் பொது இடங்களில் சிறுநீர்கழிக்க ஏற்படும் அய்யரவு தான். பொதுகழிப்பீடங்களுக்கு செல்லவே பயம் அவ்வளவு "சுத்தமாய்" இருக்கும். இப்படியே பழகி பழகி பகல் வேளைகளில் ஓரிரு முறை மட்டுமே இயற்கை அழைப்பை ஏற்குமாறு ஆகிவிட்டது. பின் இது குறித்து பயமாகி மருத்துவரிடம் போய் சொன்னேன். அவர்களும் சோதித்து பார்த்து ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டனர். எல்லோரும் போலில்லாமல் எனக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 முதல் 4 முறை மட்டுமே போகும் பழக்கம் இருந்தது.

பணி மாறி இப்போதிருக்கும் வேலைக்கு வந்த 3 மாதம் இரவு உணவு முடித்து உறங்க எத்தனித்த ஒரு நாள்லேசாக வலப்புற விலா எலும்பின் கீழ் வலி துவங்கியது, பின் கொஞ்சம் மேலேறி விலா எலும்புகள் கடந்து கீழ்முதுகு அப்புறம் வலப்புற இடுப்பு என்று ஒரு அரைக்கோள வடிவில் வலிக்கத்துவங்கியது. தாங்கமுடியாத வலி என்பதால் அறைத்தோழனை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்றேன். இரவுப்பணியில் இருந்த இளம் மருத்துவர் ஒவ்ரான் மருந்தினை ஊசியில் போட்டு அனுபினார் வலி பட்டென பறந்தது. கையில் டைகுளோஃபெனாக் இரண்டு மாத்திரை கொடுத்து வலி ஏற்படின் சாப்பிடுமாறு அறிவுறுத்தி அனுப்பினார்.

அடுத்த நாள் மதியமும் அக்கொடிய வலி வரவே ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டேன், என் குடும்ப மருத்துவரை காண. அங்கு போனவுடன் அவர் ஸ்கேன் செய்து பார்த்துவரும்படி பணித்தார்.


ஸ்கேன் செய்து பார்த்ததில் இடதுபுற சிறுநீரகத்தில் 8MM அளவிற்கு ஒரு கல்லும் இடது புறத்தில் 5 MM அளவிலும் 4 MM அளவிலும் கற்கள் இருந்தது. சிறுநீரக கற்களை அகற்ற இப்போதேல்லாம் குவாரிகளில் கையாளப்படும் முறைகள் வந்து விட்டது. உள்ளே இருக்கும் கல்லை உடைத்து ஜல்லியாகி எடுக்கும் முறையெல்லாம் வந்தாலும் டாக்டர்கள் பெரும்பாலும் பழைய முறையைத்தான் கையாளுகிறார்கள். அது தொடர்ந்து 4 போத்தல் சலைன் ஏற்றுவதாகும், அப்படி செய்யும் போது அதிகமாய் சிறுநீர் போகும் அப்போது கல் சிறுநீர் குழாய் வழியே வெளியே வந்து விடும். இதற்கு கையில் ஒரு சல்லடை யும் கொடுத்து ( என்ன மீனா பிடிக்க போறேந் இது நான் ) சலைன் ஏற்றினார்கள். இதனிடையே சலைனில் 500MG சிப்ரான்( சிப்ரோபிலாக்சின்) மருந்தும் ஏற்றவே நான் இது எதுக்கும் இவ்ளோ ஆண்டிபையோடிக் ஏத்துறிங்க என்று கேட்க "கல் சிறுநீர் பாதை வழியே வெளியேறும் போது அதன் சுவர்களை கிழித்து புண்ணாக்கிவிடும் அதான் அதை ஆற்றவதற்குதான்" என்று சொன்னார்கள். 15 நிமிடத்தில் சிறுநீர் வெளியெறத்துவங்கியது. நான் மீன் பிடிப்பவன் போல் சல்லடையுடன் கழிவறைக்கும் கட்டிலுக்கும் அலையலானேன்.

ம்ம்கூம் கல் வந்த பாடில்லை லேசான காய்ச்சல்தான் வந்தது சலைன் திடீரென்று ஏற்றினால் வரும் காய்ச்சல் அது. பின்பு மருத்துவர் சொன்னார் கல் கரைந்து வெளியெறியிருக்கும் என்று. வீடு திரும்பி இரண்டு தினம் கழித்து மீண்டும் வலி, மீண்டும் ஸ்கேன் பார்த்ததில் கல் அப்படியே ராமன் காலுக்கு காத்திருக்கும் அகலிகை போல் அங்கேயே இருந்தது.

என் அம்மா மருத்துவர்களை நம்பாமல் மறு நாள் காலையில் வாழைத்தண்டு சாறு ஒரு சொம்பில் கொடுத்தார். விளக்கெண்ணையை சாரயம் என்று குடித்து கழிவறையில் வாசம் செய்யும் கவுண்டமனி போல் நான் ஒரு 30 தடவை சிறுநீர் போனேன். ஒரு நாளால்ல இரண்டு நாள். பிறகு ரீபிட் ஸ்கேன் செய்து பார்த்தால் கல்லை காணாம் இரண்டு சிறுநீரகங்களிலும் . கொஞ்சம் அசுர வைத்தியம் என்றாலும் பக்கவிளைவுகள் இல்லாதது வாழைத்தண்டு சாறு.
அதுசரி அலோபதி வைத்தியம் பார்த்துள்ளோமே அதற்கு பக்கவிளைவு உண்டுதானே . அந்த கவலையெல்லாம் படாமல் பணி திரும்பினேன். வந்து ஒழுங்காய் போய்க்கொண்டிருந்தது வேலை சிலநாட்களில் வயிறு கோளாறு செய்யத்துவங்கியது, சாப்பிடும் முன் ஏப்பம், சாப்பிட்ட பின் ஏப்பம் வாயுப்பிடிப்பு என்று துவங்கியது கொஞ்சம் கொஞ்சமாய் மூச்சுதிணறல் வரை போனவுடன் பயமாகி ஊருக்கு புறப்பட்டுபோனேன் இம்முறை மரணபயத்துடன். வயிறு புண்ணாகிருக்கிறது என்று ஒம்மோப்ரோசொல் உடன் டொமிபெரிடொன் சஸ்டைன் ரிலிஸ் உள்ள மாத்திரைகளை கொடுத்தார்கள். இதற்கிடையே தொடர்ந்த மூச்சு திணறலினால் நான் ஆன்ஸைடி என்று சொல்லக்கூடிய மரணபய உணர்வின் ஆரம்ப கட்டத்துக்கு வந்துவிட்டேன். இரவு தூக்கம் பிடிக்காது, யாராகிலும் உடன் இருக்கவேண்டும் இப்படி .....


பொதுவாய் ஜீஈஆர்டி எனச்சொல்லக்கூடிய நோயின் துவக்கமே இது. இதற்கான அறிகுறியும் இதய நோய்க்கான அறிகுறியும் ஒன்றே ஆகும். ஆகவே தான் ஆன்ஸைடி நிலைக்கு நான் போனேன். இதயம் குறித்து முழு சோதனையும் செய்து பார்த்ததில் ஒன்றும் பிழையில்லை என்றும் மிக மிக ஆரோக்கியமான உடம்பு என்று அறிக்கை வந்தது. சாப்பிடும் முன் கொஞ்சம் ஆன்டாசிட் எனப்படும் (ஜெலுசில் வகையறா..) கொஞ்சம் குடிக்கவேண்டும் அதும் போக ரனிடிட்டீன் மாத்திரை ஏதாவது உர்கொள்ளவேண்டும். சாப்பிட்டபின் மீண்டும் கொஞ்சம் ஜெலுசில் அல்லது டபுள் ப்ரொடக்டட் ஆன்டாசிட் ஏதாவது குடித்து தொலைய வேண்டும் இரவும் காலையும் போன பத்தியில் சொன்ன மாத்திரை தின்ன வேண்டும். சரி அதோடு முடிந்ததா கதை.

ஒமோப்ரோசொல் மாத்திரையும் டொமிபெரிடோனும் இரு பக்கவிளைவுகள் கொடுக்ககூடியவை. ஒன்று உடலில் B12 சுரப்பை குறைப்பதனால் மூட்டுகளில் வலியும் , மற்றொன்று கண்டறியாக்காரணத்தினால் தலைசுற்றைலையும் கொடுக்ககூடியது. இவை எனக்கு இரண்டையும் கொடுத்தது. தடுமாறி தலை சுற்றி மாடிப்படிகளில் உருண்ட பிறகுதான் ஒரு முடிவுக்கு வந்தேன் இனி இந்த மாத்திரைகளை உண்பதில்லை என்று.

சிறுநீர் கல்லுக்கு ஏற்றிய சிப்ரோபிளாக்சினால் வயிறு புண்ணாகி, அதுக்கு உண்ட மாத்திரைகளால் பக்கவிளைவுகள் ஏற்பட்டதுதான் மிச்சம்.

சரி அலோபதிக்கு சரியான மாற்று பல நோய்களுக்கு இல்லை என்பதே இப்போதைய கொடிய நிலை நமக்கு.

எப்படி வருகிறது GERD :


நமது தொண்டைக்கு கீழே ஒரு பந்துக்கிண்ணம் போல் துவங்குகிறது உணவுக்குழாய், அதன் சற்று கீழே சீரணசக்திகளுக்காக உற்பத்தியாக பித்தப்பை இருக்கிறது அங்கு சுரக்கும் ஆசிட் மற்றும் வயிற்றுல் சுரக்கும் அமிலங்கள் அப்பந்து போன்ற அமைப்பில் ஏற்பட்டுள்ள புண்ணில் படிவதால் இந்நோய் வருகிறது. சரி அவ்விடத்தில் புண்ணாகும் காரணமென்ன, முறையே - காபி ( பாடுவதல்ல ;) ) கார உணவுகள், புகை பழக்கம், அதீத இனிப்புவகைகள் மற்றும் ஆல்ஹகால்.

அமெரிக்காவில் உலகில் அதிக அளவில் இந்நோயளிகள் உள்ளனர். இந்தியாவில் பெண்கள் அதிக அளவில் பாதிக்கபட்டுள்ளனர். தயிர்சாதத்தில் மற்றும் பால் பொருட்களில் உள்ள லாக்டொஜனும் ஒரு காரணியாக அமெரிக்க "விஞ்ஞானி முருகன்கள்" சொல்லுகிறார்கள் .

தங்கவேல் அவர்களுக்கு, நான் தெரிந்தே தான் சாப்பிட்டேன் தயிர் சாதத்தினை. தமிழ்நாட்டு உணவுகளில் அதை காட்டிலும் காரமற்ற உணவு இல்லையென்பதால். மேலும் எனக்கு இப்போது அந்நோய் இல்லை . ஒரு முன்னெச்சரிக்கைகாவே அப்படி :))))))))))

கண்மணியின் பின்னூட்டத்தின் பின் சேர்க்கபட்டதுWhat is GERD?

Your stomach is filled with acid. Its purpose is to help digest the food you eat. Believe it or not, this acid is the same acidity as battery acid. Your stomach is built to handle the acid it produces. However, your esophagus isn’t. So when acid backs up into your esophagus, it can cause the burning sensation known as heartburn.

Almost everyone has occasional heartburn. But if these symptoms occur two or more days a week for at least three months, you may have GERD, or acid reflux disease. Acid reflux occurs when the lower esophageal sphincter (the valve separating the esophagus and stomach) does not close properly, allowing acid to back up into the esophagus.

GERD is a chronic condition and may lead to more serious medical conditions, but is treatable. In this section, you’ll learn about the causes and common symptoms of GERD, a disease that is more common than you might think.

The most common symptom of GERD is heartburn, a burning pain that rises from the stomach or lower part of the chest towards the neck. Regurgitation , which occurs when stomach acid washes into the esophagus and up into the mouth, causing a bitter or sour taste, is another symptom of GERD.1 Another common symptom is difficulty swallowing, also called dysphagia.2

GERD has other, less common symptoms. Water brash is the sudden appearance in the mouth of slightly sour or salty fluid that happens when the salivary glands are stimulated by acid reflux.3 GERD has been associated with non-cardiac chest pain, asthma, hoarseness, and chronic cough.

Symptoms of GERD:
Heartburn
Regurgitation
Difficulty swallowing
Water brash
Some people who have GERD may not experience any symptoms. This may happen because these people are not very sensitive to the acid and do not experience pain even though they are having reflux.

How Common is GERD?
From time to time everyone has stomach acid that backs up into the esophagus. This flow is called gastroesophageal reflux, or acid reflux. It can cause a number of sensations. The most common of these is heartburn. Some acid reflux is common and normal.4 When this process occurs frequently and chronically, it is called gastroesophageal reflux disease (GERD). With GERD, acid reflux can become painful and may cause damage to the lining of the esophagus.

If you have persistent heartburn two or more days in the week, despite treatment and diet change, you may have GERD.6 Heartburn that does not go away can, over time, wear away the lining of your esophagus. This is true even if the heartburn is mild. Talking with your doctor about your symptoms can help your doctor determine if you have GERD.

GERD is a chronic, but treatable condition, and it is extremely common. Studies estimate that approximately 19 million people in the United States may have GERD. In fact, approximately 4.6 million doctor visits each year are made to discuss GERD symptoms. GERD can lead to serious problems.

20 மறுமொழிகள்:

 1. வரவனையான்,
  வலதுபக்க படம் தான் மிரட்டுகிற மாதிரி கூடவே வருது என்றால்,உங்கள் அனுபவமும் மிரட்டுகிற மாதிரி இருக்கே?
  நோய் ,போன வரை சந்தோஷமே.

 1. புகைப்பழக்கம் இருக்கிறவர்களுக்கு (எனக்கில்லை) துப்பினால் எச்சிலோடு சில சமயம் ரத்தம் வருகிறதே, அது GERDயினால் தான் இருக்குமா?

 1. சரியாய் சொன்னீர்கள் லக்கி அதுவும் வரும். ஆனால் சமயங்களில் தொண்டை புண் கூட காரணமாய் இருக்கலாம். ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் மருத்துவரை அனுகுவது நன்று.


  புகை மிகமிக கொடியது இந்த பிரச்சினைக்கு அது போல் காபி

  ஆல்ஹகால் 5 இடம்தான் ;)

 1. முதல் கமெண்டு போட்டிருக்கும் வடுவூர் குமாரின் போட்டோ சூப்பர்.

  அவரைப் பார்க்க படையப்பா படத்தில் வரும் ரம்யாகிருஷ்ணனின் டிரைவர் மாதிரி இருக்கிறார்.

  "படையப்பரே! அந்த பாம்பு புத்துக்குள்ள கைய எப்படி உட்டீங்க"ன்னு கேப்பாரே அவரை மாதிரியே இல்லை?

 1. லக்கி உம்ம லொள்ளுக்கு அளவே இல்லையா.....

  சிரிச்ச சிரிப்புல ஆபிஸில எல்லாருக்கும் திகிலாயிருச்சு.....

  :)))))))))))))))))))))))))))))))))))))))))


  ( உங்களுக்கு தெரியும்தானே நான் எப்படி சிரிப்பேன்னு )

 1. //( உங்களுக்கு தெரியும்தானே நான் எப்படி சிரிப்பேன்னு ) //

  தெரியும். பொ.ப.து. அமைச்சர் துரைமுருகன் மாதிரி வெடிச்சிரிப்பு சிரிப்பது உங்க பாணி.

  இதுபோல சிரிப்பவர்கள் வெளிப்படையான மனம் கொண்டவர்கள் என்று ஒரு முறை வெற்றிகொண்டான் சொன்னார். வைகோ மாதிரி "போஸ்" கொடுத்து சிரிப்பவர்களை நம்பவே கூடாதுன்னு கூடுதலா ஒரு தகவலும் சொன்னார் :-)))))))

  அதிருக்கட்டும் வடுவூர் குமார் நான் சொன்னமாதிரி இருக்காரா? இல்லையா? - அதைச் சொல்லுங்க முதல்ல....

 1. பொதுவாக உங்க பிளாக் ஆண்களுக்கானது [கும்மியடிக்க]என்பதால் நான் வருவதில்லை.2 முறை படித்தேன்.GERD
  [GASTRO ENDOMOLOGICAL???DISEASE] க்கு விரிவாக்கம் இல்லை.எதையும் முழுசா சொல்லனும்மில்ல.
  சி.நீ.கல்லுக்கு கொள்ளு ரசமும் நல்ல மருந்து.புகை,மது காபி மட்டுமல்லாது எண்ணையில் பொரிக்கப் பட்டவை,மசாலா வகையும் இதற்குக் காரணங்கள்.
  மனக்கவலை,டென்ஷனும் காரணங்களாம்.

 1. //தெரியும். பொ.ப.து. அமைச்சர் துரைமுருகன் மாதிரி வெடிச்சிரிப்பு சிரிப்பது உங்க பாணி.

  இதுபோல சிரிப்பவர்கள் வெளிப்படையான மனம் கொண்டவர்கள் என்று ஒரு முறை வெற்றிகொண்டான் சொன்னார். வைகோ மாதிரி "போஸ்" கொடுத்து சிரிப்பவர்களை நம்பவே கூடாதுன்னு கூடுதலா ஒரு தகவலும் சொன்னார் :-)))))))//

  வெ.கொ, வைகோ என்று சமையல் குறிப்பு எழுதினால் கூட அதில் அரசியல் மசாலா கலந்து விடும் என் கழகக்கண்மணி. தளபதி பிறந்தநாள் விழாக்கு சென்றீர்களா ?

  ம்ம் ஆம் லக்கி வடுவூரார் அனுமோகன் போல்தான் இருக்கிறார்.

  கூடுதல் தகவல் அனுமோகன் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராய் பனியாற்றியவர். வி.ஐ.பி படத்தில் மணிவண்ணனின் இசுலாமிய மனைவியாய் வந்து கடைசிவரை முகம் காட்டாமல் இருந்த பாத்திரத்தில் நடித்தவர்.
  ( அது சரி சைடுல தெய்வமச்சான்'ன்கிற பெயரில ஸ்க்ரோளிங் ஓடுதே கவனிச்சிங்களா )

  :)))))))))

 1. //பொதுவாக உங்க பிளாக் ஆண்களுக்கானது [கும்மியடிக்க]என்பதால் நான் வருவதில்லை.//

  இங்கே சில வரவனை ரசிகைகளும் கும்மி அடிப்பதுண்டு :-)))))


  ஒரு முறை வைரமுத்து சொன்னார். "நாம் எந்த உறுப்புகளை எல்லாம் அச்சுறுத்துகிறோமோ, அந்த உறுப்புகள் நம்மை திரும்ப அச்சுறுத்தும்" என்று.

  புகை, கார உணவுகள் என்று தொண்டைக்குழியை நாம் அச்சுறுத்தினால், பதிலுக்கு தொண்டைக்குழியும் நம்மை "GERD, புற்றுநோய்" என்று அச்சுறுத்துகிறது போல....

  வரவனை நீங்க வில்ஸ் பில்டர் தானே? 25 காசு தான் ஏற்றியிருக்காங்க போல.... கிங்க்ஸ் அநியாயத்துக்கு 4 ரூபா ஆயிடுச்சி :-(((((

 1. //( அது சரி சைடுல தெய்வமச்சான்'ன்கிற பெயரில ஸ்க்ரோளிங் ஓடுதே கவனிச்சிங்களா )//

  கவனிக்காம இருப்போமா? கடும் கண்டனங்கள்.

  ஒரு நாத்திகனுக்கு "தெய்வ" பட்டம் கொடுப்பது எப்படிப்பட்ட குற்றம் தெரியுமா?

 1. //கண்மணி சைட்...
  பொதுவாக உங்க பிளாக் ஆண்களுக்கானது [கும்மியடிக்க]என்பதால் நான் வருவதில்லை//

  உண்மையில் அதிர்ச்சி அளிக்கிறது கண்மணி. நிச்சயமாய் என் வலைப்பக்கம் ஒரு குறிப்பிட்ட பாலருக்கானது அல்ல. என்ன என்னிடம் இருக்கும் குறை அல்லது நிறை என்றால் யார் வேண்டுமானாலும் கும்மி அடிக்கலாம் ஒரு முறை கூட கடிந்துகொண்டதில்லை. ஆபாசம் தவிர்த்து யார் பின்னூட்டமிட்டாலும் அது வெளியிடப்படும். அதும் போக எனக்கு இங்கு நிறைய அக்காமார்கள் தங்கைகள் , தோழியர் என்று உண்டு. உங்களையும் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்

 1. எனது மொக்கை பதிவு உங்களுக்கு ஒரு சற்று தீவிரமான பதிவு போடத்தூண்டியது குறித்து மகிழ்ச்சி. ஆயினும் செந்தில், உங்கள் இடுகையில் பல தகவல் பிழைகள் உள்ளன. குறிப்பாக GERD மற்றும் மனித உடற்கூறு குறித்து. இதுபற்றியும், GERD பற்றி மேலதிக தகவல்கள் குறிப்பாக, தற்போதைய மருத்துவ ஆராய்ச்சிகள் குறித்தும், நம் மரபுமுறை மருத்துவமான சித்த மருத்துவதிலுள்ள மருந்துகள் குறித்தும் விரைவில் தெளிவாக நான் ஒரு இடுகை இடுகிறேன். நன்றி.

  //GERD -[GASTRO ENDOMOLOGICAL???DISEASE]//

  கண்மணி GERD என்பது Gastro Esophageal Reflux Disease. அதாவது இரைப்பையிலிருக்கும் உணவு மீண்டும் உணவுக்குழாய்க்கு எதிக்களித்து வருவதால் உண்டாகும் ஒருவித எரிச்சல், மற்றும் புளித்த ஏப்பம். உணவுக்குழாயிலிருந்து உணவு பொதுவாக மீண்டும் மேலே வராது. அது ஒரு வழிப்பாதை.

 1. //அப்போது ஒரு பழக்கம் வந்து விட்டது அதாவது இயற்கையின் அழைப்பை நிராகரித்து வருவது. காரணம் பொது இடங்களில் சிறுநீர்கழிக்க ஏற்படும் அய்யரவு தான். பொதுகழிப்பீடங்களுக்கு செல்லவே பயம் அவ்வளவு "சுத்தமாய்" இருக்கும். இப்படியே பழகி பழகி பகல் வேளைகளில் ஓரிரு முறை மட்டுமே இயற்கை அழைப்பை ஏற்குமாறு ஆகிவிட்டது.//
  இம்மாதிரி நடப்பது ரொம்பவே அதிகமாகி விட்டது. சாதாரணமாக பெண்களுக்கு இந்த தொந்திரவு அதிகமே. ஆண்களை விட அவர்களுக்கு இதனால் வரும் காம்ப்ளிகேஷன்ஸ் மிக மிக அதிகம். கருப்பை நோய் தொற்று வரை கொண்டு போய் விட்டு விடும் என்று படித்திருக்கிறேன்.

  இது ஒரு சங்கிலி எதிர்வினை. சிறுநீர் வந்து விடாமல் இருக்க தண்ணீர் அருந்துவது குறைப்பார்கள். அதன் காம்ப்ளிகேஷன்ஸ் வேறு. சிறு நீர் என்பது கழிவுப் பொருள். அதை உள்ளடக்கி வைத்து கொள்வது வம்பை விலைக்கு வாங்குவதாகும்.

  ஒரு நாளைக்கு 'இரு மலம் அறு நீர்' என்ற சொலவடையே உண்டு. இம்மாதிரி சிறுநீர்ப் பையில் கல் பற்றி அமெரிக்க எழுத்தாளர் இஸாக் அசிமோவ் விவரமாக எழுதியுள்ளார். அவ்ரே அவதிப்பட்டு டாக்டரிட்ம் சிகிச்சை பெற்றவர்.

  தண்ணீர் அதிகம் குடீக வேண்டும். இயற்கை அழைப்பை அலட்சியம் செய்யலாகாது. அதை செய்ய விடாது என்ன கூச்சம் வேண்டியிருக்கிறது? ஆனால் ஒன்று பார்த்திருக்கலாம். யாரேனும் ஒருவர் துணிந்து கிளம்பினால் கூடவே நாலைந்து பேர் வருவர்ர்கள்.

  நான் இதற்கெல்லாம் கவலைப் படுவதேயில்லை. நம் உடல் நமக்கு முக்கியம். அடிக்கடி பாத்ரூம் சென்று வந்தார் என்று யாராவது பதிவில் போட்டு விடுவார்களோ என்றெல்லாம் நான் கவலைப்படுவதேயில்லை. வேண்டாதச் விருந்தாளி வந்தாலும் கஷ்டம், வெளியே போக வேண்டும் என்று நச்சரிக்கும் விருந்தாளியை கட்டாயப்படுத்தி தங்கவைப்பதும் கஷ்டம். :)))

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 1. This comment has been removed by the author.
 1. இன்று காலை என்னை துயில் எழுப்பியது அண்ணன் வடுவூரார். வணக்கம் சொல்லி பேசியவர் இந்த பின்னூட்ட வரிசையில் தன்னை கிண்டல் செய்திருப்பதாகவும் , பிடிக்கவில்லை என்றால் உங்கள் பிளாக் பக்கம் வரவில்லை என்றார். தூக்கம் கலையாமல் இருந்த நான் மன்னித்துக்கொள்ளுங்கள் என்றேன் இரண்டு முறை. ஆனால் இங்கு ஒன்றும் தரம் தாழ்ந்து அண்ணன் அவர்களை விமர்சிக்கவில்லை என்றே கருதுகிறேன். என் அன்பிற்குரிய லக்கி வடுவூர் குமார் பார்ப்பதற்கு இயக்குநர் அனுமோகன் போல் உள்ளார் என்றுதான் குறிப்பிட்டுள்ளார். இதை கிண்டலாக அவர் எடுத்துக்கொண்டது துரதிஷ்டமே. இப்போது கொடுத்த விளக்கத்திற்கு பின்னாலும் அண்ணன் அவர்கள் மேற்கண்ட பின்னூட்டங்களை நீக்குமாறு கோரினால் அதை நீக்கிவிட ஆயுத்தமாகவே உள்ளேன்.

  அன்பின் குமார் அண்ணன் அவர்களுக்கு, இவ்வலையுலகம் கொடுத்த வாய்ப்பின் படி நாம் அறிமுகமாயுள்ளோம் அதன் நீட்சியாய் வலைப்பதிவ்ர் சந்திப்புகளின் மூலம் பல நல்ல நட்புகள் மலர்ந்துள்ளது. விரைவில் உங்களையும் சந்தித்து உரையாடும் வாய்ப்பு ஏற்படும் என்று கருதுகிறேன். ஆகவே உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மறுபடியும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

 1. வடுவூர் குமார் அவர்கள் எனக்கும் பின்னூட்டம் போட்டிருந்தார்.

  ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொள்ளுதல் என்பது நட்பில் ஒரு வகை.

  நம் வலையுலக சகாவாயிற்றே என்ற உரிமையில் சும்மா ஜாலியாக கலாய்த்தேன்.

  அது அண்ணன் அவர்களை புண்படுத்துமேயானால் பின்னூட்டத்தை வாபஸ் பெற தயாராகவே இருக்கிறேன்.

  குறிப்பு : இதற்கு முன்பு டோண்டு சார், செந்தழல் ரவி போன்றவர்களையும் ரொம்ப ஜாலியாக கலாய்த்திருக்கிறேன். அவர்கள் அதை ஸ்போர்ட்டிவ் ஆக எடுத்துக் கொண்டு என்னை பாராட்டினார்கள்.

 1. செந்தில்,

  நல்ல தகவல்கள், நல்ல நடை !

  உங்களை யாரும் இனி கல்லு மாதிரி இருக்கேன்னு சொல்ல மாட்டாங்க !
  :)

 1. உபயோகமான தகவல்களைப் பயனுள்ள விதத்தில் சொல்லியிருக்கிறீர்கள், திரு. செந்தில்.

  இது போன்ற பதிவுகளில் எழுத்துப்பிழை வராமல் பார்த்துக் கொள்ளல் நலம்.

  கண்டபடி மாத்திரைகள் சாப்பிட்டு சொ.செ.சூ. வைத்துக்கொண்டதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறீகள்!

 1. எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும். ஆனால் என் எல்லா பதிவுகளிலும் இருக்கும் அது.

  கண்டபடி மாத்திரை சாப்பிடவில்லை எஸ்.கே அய்யா மருத்துவர்கள் சொன்னபடி சாப்பிட்டதனால் வந்த விணை ;)

 1. வரவனையான்,லக்கிலுக்
  என்னை கலாய்த்தற்கு நன்றி.கொஞ்சம் ஹிண்டாவது கொடுங்க மக்களே!!
  புரிந்துகொண்டேன்.
  பொதுவில் உள்ளது பொதுமக்களுக்கே,எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
  உங்களை (வரவனையான்) தூக்கத்தில் எழுப்பியதற்கு மன்னிக்கவும்.
  தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.