Wednesday, March 28, 2007

@ 6:30 PM எழுதியவர்: வரவனையான்

இந்த வியர்டு அது இதுன்னு ஆளாளுக்கு சும்மா இழுத்து வச்சு இம்ச பண்ணுறத கண்டிச்சித்தான் நானும் சுகுணாவும் "கொள்ளிக்கட்டை"னு ஒன்னு ஆரம்பிச்சுருக்கோம். என்ன இருந்தாலும் அமுக தலை சொல்லிட்டதால எழுதறேன். படிச்சு தொலையவேண்டியது உங்க தலைஎழுத்து.
இத எழுதப்போறேன்னு என் நண்பன் பிறேம்ட போன்ல சொன்னபோது, உன் டோட்டல் பர்சனாலிட்டியே வியர்டுதானே' பேசாம ஆட்டோ பயோகிராபி எழுதிடுன்னு சொல்லி சிரிக்கிறாரு. அப்படி இருக்கு நெலம.

உழைப்பு : எனக்கு ரொம்ப தொடர்பான விதயம் இந்த வார்த்தை. அனுபவமே இல்லாத துறைல கூட டக்குனு புரிஞ்சுகிட்டு கடுமையா உழைச்சு அது பயன் கொடுக்க துவங்கும்போது அதை தாண்டிய எதோ ஒன்னுக்கு ஆசைபட்டு இத விட்டுபுட்டு அத நோக்கி போற என் குணம் எனக்கே ஒரு வியர்டுதான்.

வாசிப்பு : ஒரு புத்தகம் படிக்க ஆரம்பிச்சிட்டா அதை முடிக்காம கீழ வைக்காத குணம் எனக்கு. அது எவ்வளவு பிளைடான புத்தகமானலும் சரி. ஒரு நாள் "கருனாமிர்த சாகரம்" படிச்சிகிட்டு திரிவேன்,அடுத்த நாள் தாஸ்துவோஸ்கியின் "வென்னிற இரவுகளுடன்" வலம் வருவேன். பல உறவு கெட்டு போயிருக்கு இதுனால. பைக்க அடுத்தவன ஓட்டவிட்டு பில்லியன்ல உக்காந்து படிச்சிட்டு போற யாரையாவது பார்த்திங்கன்ன கண்டிப்பா அது நானாக இருக்க வாய்ப்பு இருக்கு. பஸ் புட் போர்டுல தொங்கிட்டே படிச்சுகிட்டு போன அனுபவமும் இருக்கு.


உயிர் வதை : சின்னபிள்ளையா இருக்கும்போது வைகை ஆத்துல பிடிச்சிட்டு வந்த ஒரு மீன்குஞ்சு கொண்டு வந்த 1/2மணீ நேரத்தில என் அண்ணன் விளையாட்டாய் வெளியே எடுத்த போது செத்துபோக 2 நாள் அழுதேன். அப்படி பிற உயிர்களை நேசிக்கும் நான் ஒரு அசைவ உணவு பழக்கம் உள்ளவன் என்பதும் ஒரு நகைமுரண்தான். இப்பவும் தூத்துக்குடியில் என் தனி அறையின் பின்புறம் உள்ள சாலையில் எதாவது ஒரு தெருநாய் இரவில் லாரியில் அடிபட்டு வாள்வாளுன்னு கத்திகிட்டு கிடந்தா ராத்திரி என் நேரமானலும் வாரிச் சுருட்டி எழுந்து ஓடிப்போய் கால்நடை மருத்தவமனைல விட்டுட்டு திரும்பி வரும் போது லெக் பீஸுடன் சிக்கன் பிரியானி சாப்பிடுவதால் இந்த விஷயதிலும் நான் வியர்டுதான்.


தூக்கம் : எனக்கே புரியாத விஷயம் இது. இப்பதிவுல ஆரம்பதில் குறிப்பிடேனே நண்பர் பிறேம் அவரில்லாம் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்து தூங்குவாரு. எனக்கோ ராத்திரி 1 மணிக்கு படுத்து காலைல 7 மணீக்கு மேல எழுந்த பின் கெஞ்சினாக்கூட தூங்க மாட்டேன். "அட இன்னிக்கு ஞாயித்துகிழமைபா அப்படியே சில்லுன்னு ஒரு பீரை போட்டுட்டு வீட்டுக்கு போயி மீன் குழம்பை ஒரு கை பார்த்துட்டு படுத்து தூங்கனும்ப்பா" அப்படின்னு யாராவது அறிவுரை சொன்னாக்கூட கேக்காமா அல்லது தூக்கம் வராத காரணத்துனால ஞாயிறு கூட சின்சியரா ஆன்லைன்ல மொக்கை போட்டுகிட்டு திரிவதால் இந்த மேட்டர்லயும் நான் அதான் Weird


ஜோதிடம்: கண்ட விஷயத்த கத்துகிடனும் என்கிற ஆர்வக்கோளறு இருக்கே அது எனக்கு ரொம்ப அதிகம். இப்படித்தான் ஒரு தடவை புல்டோசர் ஓட்டி பழகனும்னு போயி அந்த டிரைவருக்கு லஞ்சமா தினம் 10 ரூவாய்க்கு கஞ்சா வாங்கிக்கொடுத்து கத்துகிட்டேன். ஜுஸ் போடுவேன், டீ போடுவேன், டிரைலர் லாரி வரைக்கும் எல்லா வண்டியும் ஓட்டுவேன். அது இதுன்னு ஒரு 100 விதயமாவது கத்து வச்சுருப்பேன் ஆன எல்லாம் அனுபவ பாடம் தான். ரொம்ப கஷ்ட பட்டு கத்துகிட்டது குவாரில குழி போட்டு அதுகுள்ள வெடிஉப்பும் கந்தகமும் போட்டு கிட்டிச்சு அதுக்கபுறம் திரில டெட்ட்னனேட்டர் மாட்டி ( மாட்டும்போது வெடிக்கும் அபாயம் நிறைய உண்டு) அதை ஒரு வேட்டுல சேர்த்து குழிக்குள்ள வச்சு மறுபடி அதுமேல கந்தகமும் உப்பும் போட்டு கிட்டிச்சி தியை வெளியே கொண்டுவந்து பத்த வைக்கிறது இருக்கே அது ஒரு கலை. அதையும் போய் கத்துகிட்டேன். இந்த வரிசைல இரவெல்லாம் உக்காந்து படிச்சி அது பற்றி பேசியும் கத்துகிட்டது ஜாதகம் பார்க்க. நம்பிக்கை, கொள்கை என்கிற விதயங்களை தாண்டி கத்துகிடனும் என்கிற ஆர்வமே கற்றுகொள்ளவைத்தது. ஆனால் அதிலும் லொள்ளு நானு எல்லா ஜோசியகாரர்களும் தக்ஷிணாமூர்த்தியை (தேவ குரு) மையமா வச்சு சொன்னா நானு அசுர குருதான் ( சுக்கிரன் - வீணஸ் ) பெரியாளுன்னு சம்மன் இல்லாம அவரு பக்கம் அஜராகிடுவேன். ஆனா யாருக்கும் பரிந்துரைக்கிறதுல்லை.பெண்கள் : இந்த பிரபஞ்சத்தின் அதி அற்புத சிருஷ்டி - பெண்கள்" அப்படின்னு சாரு நிவேதிதா ஒரு முறை சொன்னாரு அதை மறுக்கவே முடியாது. ஆன எனக்கு இருக்கும் பிரச்சினை என்னவென்றால் எந்த பெண்ணிடமும் நேரில் பேசினால் "பில்டிங் ஸ்டிராங், பேஸ்மட்டம் வீக்" பார்ட்டி ஆகிடுவதுதான். பல் எல்லாம் டைப் அடிக்கும் அழகை காணக்கண்கோடி வேண்டும். சும்மா அட்ரஸ் கேட்டாக்கூட பேபேன்னு முழிப்பேன். 100% இந்த விதயத்தில நான் ஒரு வியர்டுங்க
மெஸ்ல ஒரே நாற்காலியையே தினமும் உட்கார்வது, வீட்டுக்கு வந்தா 1000 நெளிசல் உள்ள நான் பிறந்த போது வாங்கின சொம்புலையே தண்ணி குடிப்பது( அதுல குடிச்சாதாங்க தாகம் அடங்குது ) அது இதுன்னு இன்னும் இருக்கு 100 வியர்டு காலம் வரும்போது பகிர்ந்து கொள்கிறேன்.
நான் யாரையும் எழுதுமாறு கட்டாயபடுத்த போவதில்லை.

28 மறுமொழிகள்:

 1. பின்னூட்ட பேமானித்தனம்

 1. செந்தில் ரெம்ப கரடுமுரடானா ஆசாமிதான் போல. உங்களை நேரில் சந்திருத்திருப்பதால் வியர்டை படிக்கும் போது சிரிப்புதான் வந்தது.

 1. வியர்டு படிச்சி ரொம்ப டயர்டு ஆயிட்டேன்.லேடிஸ் பத்தி சொன்னத நம்புகிறேன்[வைகோ சீடராச்சே]அப்படியே இந்த டெம்ப்ளேட்டு எங்க கிடைக்கும்னு சொல்லுங்க அண்ணாச்சி சூப்பருங்கோ

 1. உள்ளே மிதக்கும் அய்யா
  கொள்ளிக்கட்டைக்குப் பதில் எங்கே அய்யா?

 1. //உன் டோட்டல் பர்சனாலிட்டியே வியர்டுதானே' பேசாம ஆட்டோ பயோகிராபி எழுதிடுன்னு சொல்லி சிரிக்கிறாரு. ///


  இது நல்ல கூத்தா இருக்கே

 1. திராவிடப் பகுத்தறிவு வெங்காய வாசனை அடிக்கிறது பதிவில்!

 1. :-)))))))

 1. வழக்கம்போல பதிவை விட அண்ணன் ஆதிசேஷனின் பின்னூட்டம் சூப்பரோ சூப்பர் :-)))))

  உங்கள் பதிவுகளை படிக்க விரும்புவதை விட பதிவுக்கான பின்னூட்டங்களையே ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள்!!!

 1. 3:31 PM  
  CLEANA said...

  :-)

 1. 3:38 PM  
  Anonymous said...

  //இப்பவும் தூத்துக்குடியில் என் தனி அறையின் பின்புறம் உள்ள சாலையில் எதாவது ஒரு தெருநாய் இரவில் லாரியில் அடிபட்டு வாள்வாளுன்னு கத்திகிட்டு கிடந்தா ராத்திரி என் நேரமானலும் வாரிச் சுருட்டி எழுந்து ஓடிப்போய் கால்நடை மருத்தவமனைல விட்டுட்டு திரும்பி வரும் போது லெக் பீஸுடன் சிக்கன் பிரியானி சாப்பிடுவதால் இந்த விஷயதிலும் நான் வியர்டுதான்.//

  ஆமா.. அடிபட்ட நாய் ஆதிசேஷனா ச்சாரி அல்சேஷனா :)

 1. // பைக்க அடுத்தவன ஓட்டவிட்டு பில்லியன்ல உக்காந்து படிச்சிட்டு போற யாரையாவது பார்த்திங்கன்ன கண்டிப்பா அது நானாக இருக்க வாய்ப்பு இருக்கு. ///

  ஓ.கே. மன்னிச்சுடலாம்..

  /// பஸ் புட் போர்டுல தொங்கிட்டே படிச்சுகிட்டு போன அனுபவமும் இருக்கு. ///

  இது கொஞ்சம் ஓவரா தெரியல...?!

  வழக்கம் போல அசத்திட்டிங்க அம்மிணிய கேட்டேன்னு சொல்லுங்க...

 1. 4:21 PM  
  Anonymous said...

  பின்னூட்ட மொள்ளமாறித்தனம் பை பெங்களூர் அ.மு.க

 1. 4:22 PM  
  Anonymous said...

  பின்னூட்ட களவானித்தனம் பை பெங்களூர் அ.மு.க

 1. 4:22 PM  
  Anonymous said...

  பின்னூட்ட முடிச்சவிக்கித்தனம் பை பெங்களூர் அ.மு.க

 1. 4:23 PM  
  Anonymous said...

  பின்னூட்ட பித்துக்குளித்தனம் பை பெங்களூர் அ.மு.க

 1. 4:24 PM  
  Anonymous said...

  பின்னூட்ட வியர்டுத்தனம் பை பெங்களூர் அ.மு.க

 1. 4:24 PM  
  Anonymous said...

  பின்னூட்ட இடிச்சபுளித்தனம் பை பெங்களூர் அ.மு.க

 1. 4:24 PM  
  Anonymous said...

  பின்னூட்ட மொக்கைத்தனம் பை பெங்களூர் அ.மு.க

 1. 4:25 PM  
  Anonymous said...

  பின்னூட்ட லூசுத்தனம் பை பெங்களூர் அ.மு.க

 1. 4:25 PM  
  Anonymous said...

  ஆமாய்யா எல்லா பின்னூட்டமும் நான் தான் போட்டேன்..

  செந்தமிழ் மணி.

 1. 4:29 PM  
  Anonymous said...

  நல்லாச்சொன்னய்யா, நானும் ஒத்துக்கிறேன் நீ ஒரு வியர்டுதான்னு...

 1. நீங்க வியர்ட் என்பதை இப்படி எழுதினால் தான் தெரியுமாக்கும்!!!

 1. எல்லாப் பின்னூட்டமும் நீங்கதான் போட்டிங்களா தல :))

  சென்ஷி

 1. //எல்லாப் பின்னூட்டமும் நீங்கதான் போட்டிங்களா தல :))

  சென்ஷி //

  நீங்க ஒரு பின்னூட்டம் போட்டு இருக்கீங்களே :-)

 1. வரவனையான்!
  இப்பிடி எல்லாம் வியட் இருக்கா??சுவாரசியமாக இருந்தது.

 1. //முத்துகுமரன் said...
  //எல்லாப் பின்னூட்டமும் நீங்கதான் போட்டிங்களா தல :))

  சென்ஷி //

  நீங்க ஒரு பின்னூட்டம் போட்டு இருக்கீங்களே :-)//

  இல்ல நான் 2. இதையும் சேத்து :)

 1. 2:29 PM  
  Anonymous said...

  ஜடாயு புதிதாக எழுதி இருக்கும் பதிவின் குறிசொல்லைப் பாருங்கள்.

  பெயரிலியின் அம்மாவைப் பற்றி தவறாக எழுதி இருக்கிறான்.

  இதற்கும் மேலா அவன் தமிழ்மணத்தில் நீடிக்க வேண்டும்?

  http://jataayu.blogspot.com/2007/03/blog-post_1084.html

 1. //நான் யாரையும் எழுதுமாறு கட்டாயபடுத்த போவதில்லை//

  நீங்க சொன்னாலும் நாங்க எழுத மாட்டமே ;)