Wednesday, March 14, 2007

@ 11:19 AM எழுதியவர்: வரவனையான்

Tagged By Ram

ஒரு அப்பாவி HeHeHe ;) தம்பி மதுரைக்கார ராம் டாக் பன்னிப்பூட்டாரு. மதுரை ஸ்லாங்குல எழுதுங்கன்னு வேற சொல்லிட்டாரு. உண்மையான மதுரை ஸ்லாங்க்குறது இப்போ வடிவேலு பேசும் ஸ்லாங் இல்லை அது வேற மாதிரி கலந்துகட்டி இருக்கும். முடிஞ்ச வரைக்கும் அந்த ஸ்லாங்லையே இந்த பட்டியை ( அதாங்க டாக் ) எழுத பாக்குறேன்.


பார்த்தது : இதுக்கு என்னான்னு பதிலு சொல்லுறதுன்னு தெரியலை. பார்த்ததுன்னா முத்துபட்டி ராஜாவுல பார்த்ததா இல்லனாக்க சிடி சினிமா , போத்திராஜா, "எவர் புளு" ;) ரீகலை சொல்லுறதான்னு ஒரு எழவும் புரியலை. இல்லை மது தியேட்டரு கேண்டின்ல அகஸ்மாத்தா சந்தித்துக்கொண்ட என் தமிழய்யா பழனியப்பன் அதுக்கப்புறம் எப்பவுமே எனக்கு தமிழ்ல 100/110 மார்க்கு போட்ட கொடுமைய சொல்லவான்னு வெளங்கலை.

சரி பாத்ததுன்னாக்க சின்ன புள்ளைல 'புனியாத்' நாடகம் பாத்தே பெருசுக பூராம் கொலையாக்கொல்லுவாய்ங்க அப்போ கொஞ்சம் அந்த கொடுமையை குறைச்ச நாடகம்னா அது மனோரஞ்சனும், வாக்லே கா துனியாவும்தான்.

அப்புறம் மால்குடி டேஸ்.

தமிழில் நெரையா இருக்குப்பா, நம்ம ரகுவரன் ஒரு நாடகத்துல நடிச்சிருப்பாப்ல பேரு என்னவோ விமானங்கள்ன்னு வரும் அது நல்லாருக்கும். அப்புறம் ஸ்டாலின் நடிச்ச "குறிஞ்சிப்பூக்கள்" ரொம்ப பிடிக்கும். நகைச்சுவைன்னாக்க நான் கொஞ்சம் அசைவ பிரியங்கிறதால வென்னிறாடை மூர்த்தி (சத்தியமா அந்த மூர்த்தி இல்லைங்க ) மீண்டும் மீண்டும் சிரிப்பு பிடிக்கும். போதும்ம்ன்னு நெனைக்கிறேன்.

வென்னிறாடை அசைவத்தில் கொஞ்ச நாளைக்கு முன்னால வந்த ஒரு சோக்கு :

வென்னிற ஆடை மூர்த்தி : இவன பாத்தா ரொம்ப மோசமான ஆளா இருப்பான் போலிருக்கு

சக நடிகர் : மூஞ்சிய பாத்தா அப்படி ஒன்னும் தெரியலையே

வென்னிற.மூர்த்தி : யோவ் பரதேசி, எவனாவது மூஞ்சியை வச்சு தப்பு பண்ணுவானயா

( புரிஞ்சவுங்க சிரிச்சுக்குங்க )


சினிமா : இதுக்குதான் மெனகெட வேண்டிருக்கு

தமிழ்ல புடுச்ச படம்னாக்கா நிறைய கெடக்கு. நகைச்சுவைன்னா அது "காதலிக்க நேரமில்லை"தான் இது வரைக்கும் 150 தடவை பாத்துருக்கேன் இன்னும் போரடிக்காம இருக்கு

அதுபோல "வசந்தமாளிகை" கடசீ சீன்ல ஜிவாஜி சொல்லுவாருல்ல " அவ வரமாட்டா, எனக்கும் தெரியும். அவ அகம்பாவம் பிடிச்சவ" அவகிட்ட எனக்கு பிடிச்சதே அந்த அகம்பாவம்தான்"ன்னு அது ஒன்னுக்கே இன்னும் 4 தடவ பாக்கலாம்.
சமீப படங்கள்ல 7ஜி - ரெயின்போகாலனி, பிதாமகன், ராம், இப்படி நிறையா இருக்கு

ஆங்கிலம் : சொன்னாக்க இன்னைக்கு பூராம் சொல்லலாம். அதனால அது அப்புறம் சொல்லுறேன்.

பொதுவா பின் நவீனத்துவாதிகள்தான் கிண்டல் அடிப்பாங்க அதும் அடுத்தவன் நொந்து நூலாகுறமாதிரி ஆனா அவனுங்க டவுசர கிழிக்கிற மாதிரி கலாய்ச்சுருப்பாய்ங்க இந்த படத்துல.

இன்னோரு முக்கிய படம் As good As its get எப்பவுமே ஜாக் நிக்கல்சன் எனக்கு ரொம்ம்ப பிடித்த நடிகர் அதிலையும் இந்த படத்தில் தூள் கெளப்பிருப்பார். கூட ஹெலன் ஹன்ட் ஒரு இங்கிலிஷ் நாடக நடிகையான இவரின் நடிப்பு அற்புதம்.As Good as It Gets is a 1997 film which tells the story of an obsessive-compulsive, cantankerous, racist, homophobic writer named Melvin Udall (Jack Nicholson) who, because of his anxiety disorder, lives in a world that has shrunk to about the size of his apartment and the books he authors. Nevertheless, and despite himself, he befriends his regular waitress (Helen Hunt), a single mother, and his homosexual neighbour (Greg Kinnear). It is a romantic comedy played out among flawed people in an imperfect and postmodern world.கேட்டது : எங்க அம்மாச்சி பாடும் தாலாட்டு இன்னுமும் நெனைப்புல இருக்கு. ஒரு வாலியம் மாத்திரை போல் அது கொண்டு வரும் தூக்கம் ஒரு ஆச்சரியம்தான்.

இந்தியில் பப்பி லகிரி வெளிட்ட லவ் லெட்டர் ஆல்பம் பாடல்கள்.

தமிழில் எல்லாம் பாடலும் பிடிக்கும். ரொம்ப பிடிச்ச பழைய பாடல் " நதியில் விளையாடி கொடியில் தலை சீவி"


படித்தது : மொத மொதல்ல படிச்சது ராணி காமிக்ஸின் "தண்ணீர் தண்ணீர் "

சமீபத்தில் "புயலிலே ஒரு தோணி " மறுவாசிப்பு முன்றாம் முறையாக . எனக்கு தெரிந்த்து தமிழில் வந்துள்ள ஒரே நாவல் அதுதான் எங்கிற எல்லா இலக்கியவாதிகளின் சல்ஜாப்பில் நானும் பங்கேற்கிறேன்.

ஆங்கிலம் : டாவின்சி கோட், கடைசியாய் படிச்சது.

இப்போ : தி இன்னர் ஜேர்னி - ஒஷோ

போதும்னு நினைக்கிறேன் அப்படியே இந்த டாக்கை எங்க மருதக்கார "மாதவன்" ( அலைபாயுதே ) தருமி அய்யா கைல கட்டிவுடுறேன

15 மறுமொழிகள்:

 1. காத்தால விவரமா எழுதறேன்

 1. //எங்க மருதக்கார "மாதவன்" ( அலைபாயுதே ) தருமி அய்யா//
  :)))

 1. தல நீ எத எழுதுனாலும் படிச்சிடுதேன் பாத்துக்கோ. ஏன்னா நான் ஒன் ரசிகன்

 1. பார்த்தது...
  படித்தது....
  கேட்டது....எல்லாம் சரி
  மறந்தது?
  "ம.தி.மு.க.வும் நானும்"

 1. "தமிழில் நெரையா இருக்குப்பா, நம்ம ரகுவரன் ஒரு நாடகத்துல நடிச்சிருப்பாப்ல பேரு என்னவோ விமானங்கள்ன்னு வரும் அது நல்லாருக்கும். "

  அது தரையில் இறங்கும் விமானங்கள்னு நினைக்கிறென்

 1. அது தரையில் இறங்கும் விமானங்கள்னு நினைக்கிறென்
  சிவசங்கரி எழுதியதா ?

 1. ம்ம்ம் மாட்டியாச்சா?? அதுவும் ராம் அண்ணாகிட்டயாக்கும்?? ஹி ஹி ஹி

  இதை படித்ததில் இருந்து நானும் இங்கு மதுரை ஸ்லாங்க்ல பேச முயற்சித்தேன், அப்புறமா எதுக்கு வம்பென்று நிறுத்திவிட்டேன்!!

  முதலில் படித்த தண்ணி தண்ணியுமா நினைவில் இருக்கு??(எலே வரவனை நீரு சின்னனில இருந்து தண்ணி பார்ட்டி தானா??)

  ம்ம்ம் உங்க வீட்டில அப்பாச்சி மட்டுமா பாடுவாங்க? ;)

  நிற்க;
  ஏன்யா எல்லாயும் பாவம் தருமியையே டாக் பண்ணுறிங்க? :P

 1. 'தரையில் இறங்கும் விமானங்கள்',
  இந்துமதி எழுதியது என்று நினைவு.

 1. 3:50 PM  
  Anonymous said...

  //நிற்க;//

  எங்கே நிற்க வேண்டும்?
  பெஞ்சு மேலேயா?

 1. 1:00 PM  
  Anonymous said...

  என்னோட அந்த அண்ணா காமண்டு ஏன் ரிலிஸ் செய்யவில்லை?

  ரஜினியின் ஜிவாஜிய விட அந்த காமண்டு கேவலமா?

  ஜிவாஜியே ரிலிஸ் ஆக போவுது...
  என்னோட காமண்டு மட்டும், சென்ஸார்ல மாட்டிகிச்சு

  ஹூம் எல்லாத்துக்கும் ஸ்டார் வேலியூ இருக்கனும் போல :(

 1. உங்க பதிவுல பல்லைக்காட்டிக்கொண்டு நிற்கும் ஜந்து பதிவைப் படிக்கவிடாமல் செய்ய்து, ஏதாவது வழி செய்யக் கூடாதா?

 1. கானா ப்ரபா சொன்னது:
  "உங்க பதிவுல பல்லைக் காட்டிக் கொண்டிருக்கும் ஜந்து..."

  ஜந்து...?
  வலது புறம் இருப்பதா? இல்லே
  இடது புறம் இருப்பதா?

 1. சிவஞானமணி

  சிவனேன்னு போய்க்கிட்டிட்டிருந்த என்னைய வம்புக்குள்ள மாட்டிடாதீங்க ;-)

 1. //எங்க மருதக்கார "மாதவன்" ( அலைபாயுதே ) தருமி அய்யா//


  ஆமா பொன்ஸ் .. எனக்கும் புரியலை


  //ஏன்யா எல்லாயும் பாவம் தருமியையே டாக் பண்ணுறிங்க? :P //

  நல்லா கேளுங்க தூயா .. பாவம் அந்த மனுசன் ..தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருக்கிற ஆளைப் போய் இப்படி ஆளாளுக்கு வம்பு பண்றாங்க ...

 1. "அது தரையில் இறங்கும் விமானங்கள்னு நினைக்கிறென்
  'தரையில் இறங்கும் விமானங்கள்',
  இந்துமதி எழுதியது என்று நினைவு

  சந்தேகமே வேண்டாம் இந்துமதி எழுதிய தரையில் இறங்கும் விமானங்கள்.

  ஸ்டாலின் நடித்த குறிஞ்சி மலர் நா பா வினுடையது.

  சிவசங்கரியின் ஒரு மனிதனின் கதையும் நாடகமாக வந்தது