Wednesday, March 28, 2007

@ 6:30 PM எழுதியவர்: வரவனையான் 28 மறுமொழிகள்

இந்த வியர்டு அது இதுன்னு ஆளாளுக்கு சும்மா இழுத்து வச்சு இம்ச பண்ணுறத கண்டிச்சித்தான் நானும் சுகுணாவும் "கொள்ளிக்கட்டை"னு ஒன்னு ஆரம்பிச்சுருக்கோம். என்ன இருந்தாலும் அமுக தலை சொல்லிட்டதால எழுதறேன். படிச்சு தொலையவேண்டியது உங்க தலைஎழுத்து.
இத எழுதப்போறேன்னு என் நண்பன் பிறேம்ட போன்ல சொன்னபோது, உன் டோட்டல் பர்சனாலிட்டியே வியர்டுதானே' பேசாம ஆட்டோ பயோகிராபி எழுதிடுன்னு சொல்லி சிரிக்கிறாரு. அப்படி இருக்கு நெலம.

உழைப்பு : எனக்கு ரொம்ப தொடர்பான விதயம் இந்த வார்த்தை. அனுபவமே இல்லாத துறைல கூட டக்குனு புரிஞ்சுகிட்டு கடுமையா உழைச்சு அது பயன் கொடுக்க துவங்கும்போது அதை தாண்டிய எதோ ஒன்னுக்கு ஆசைபட்டு இத விட்டுபுட்டு அத நோக்கி போற என் குணம் எனக்கே ஒரு வியர்டுதான்.

வாசிப்பு : ஒரு புத்தகம் படிக்க ஆரம்பிச்சிட்டா அதை முடிக்காம கீழ வைக்காத குணம் எனக்கு. அது எவ்வளவு பிளைடான புத்தகமானலும் சரி. ஒரு நாள் "கருனாமிர்த சாகரம்" படிச்சிகிட்டு திரிவேன்,அடுத்த நாள் தாஸ்துவோஸ்கியின் "வென்னிற இரவுகளுடன்" வலம் வருவேன். பல உறவு கெட்டு போயிருக்கு இதுனால. பைக்க அடுத்தவன ஓட்டவிட்டு பில்லியன்ல உக்காந்து படிச்சிட்டு போற யாரையாவது பார்த்திங்கன்ன கண்டிப்பா அது நானாக இருக்க வாய்ப்பு இருக்கு. பஸ் புட் போர்டுல தொங்கிட்டே படிச்சுகிட்டு போன அனுபவமும் இருக்கு.


உயிர் வதை : சின்னபிள்ளையா இருக்கும்போது வைகை ஆத்துல பிடிச்சிட்டு வந்த ஒரு மீன்குஞ்சு கொண்டு வந்த 1/2மணீ நேரத்தில என் அண்ணன் விளையாட்டாய் வெளியே எடுத்த போது செத்துபோக 2 நாள் அழுதேன். அப்படி பிற உயிர்களை நேசிக்கும் நான் ஒரு அசைவ உணவு பழக்கம் உள்ளவன் என்பதும் ஒரு நகைமுரண்தான். இப்பவும் தூத்துக்குடியில் என் தனி அறையின் பின்புறம் உள்ள சாலையில் எதாவது ஒரு தெருநாய் இரவில் லாரியில் அடிபட்டு வாள்வாளுன்னு கத்திகிட்டு கிடந்தா ராத்திரி என் நேரமானலும் வாரிச் சுருட்டி எழுந்து ஓடிப்போய் கால்நடை மருத்தவமனைல விட்டுட்டு திரும்பி வரும் போது லெக் பீஸுடன் சிக்கன் பிரியானி சாப்பிடுவதால் இந்த விஷயதிலும் நான் வியர்டுதான்.


தூக்கம் : எனக்கே புரியாத விஷயம் இது. இப்பதிவுல ஆரம்பதில் குறிப்பிடேனே நண்பர் பிறேம் அவரில்லாம் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்து தூங்குவாரு. எனக்கோ ராத்திரி 1 மணிக்கு படுத்து காலைல 7 மணீக்கு மேல எழுந்த பின் கெஞ்சினாக்கூட தூங்க மாட்டேன். "அட இன்னிக்கு ஞாயித்துகிழமைபா அப்படியே சில்லுன்னு ஒரு பீரை போட்டுட்டு வீட்டுக்கு போயி மீன் குழம்பை ஒரு கை பார்த்துட்டு படுத்து தூங்கனும்ப்பா" அப்படின்னு யாராவது அறிவுரை சொன்னாக்கூட கேக்காமா அல்லது தூக்கம் வராத காரணத்துனால ஞாயிறு கூட சின்சியரா ஆன்லைன்ல மொக்கை போட்டுகிட்டு திரிவதால் இந்த மேட்டர்லயும் நான் அதான் Weird


ஜோதிடம்: கண்ட விஷயத்த கத்துகிடனும் என்கிற ஆர்வக்கோளறு இருக்கே அது எனக்கு ரொம்ப அதிகம். இப்படித்தான் ஒரு தடவை புல்டோசர் ஓட்டி பழகனும்னு போயி அந்த டிரைவருக்கு லஞ்சமா தினம் 10 ரூவாய்க்கு கஞ்சா வாங்கிக்கொடுத்து கத்துகிட்டேன். ஜுஸ் போடுவேன், டீ போடுவேன், டிரைலர் லாரி வரைக்கும் எல்லா வண்டியும் ஓட்டுவேன். அது இதுன்னு ஒரு 100 விதயமாவது கத்து வச்சுருப்பேன் ஆன எல்லாம் அனுபவ பாடம் தான். ரொம்ப கஷ்ட பட்டு கத்துகிட்டது குவாரில குழி போட்டு அதுகுள்ள வெடிஉப்பும் கந்தகமும் போட்டு கிட்டிச்சு அதுக்கபுறம் திரில டெட்ட்னனேட்டர் மாட்டி ( மாட்டும்போது வெடிக்கும் அபாயம் நிறைய உண்டு) அதை ஒரு வேட்டுல சேர்த்து குழிக்குள்ள வச்சு மறுபடி அதுமேல கந்தகமும் உப்பும் போட்டு கிட்டிச்சி தியை வெளியே கொண்டுவந்து பத்த வைக்கிறது இருக்கே அது ஒரு கலை. அதையும் போய் கத்துகிட்டேன். இந்த வரிசைல இரவெல்லாம் உக்காந்து படிச்சி அது பற்றி பேசியும் கத்துகிட்டது ஜாதகம் பார்க்க. நம்பிக்கை, கொள்கை என்கிற விதயங்களை தாண்டி கத்துகிடனும் என்கிற ஆர்வமே கற்றுகொள்ளவைத்தது. ஆனால் அதிலும் லொள்ளு நானு எல்லா ஜோசியகாரர்களும் தக்ஷிணாமூர்த்தியை (தேவ குரு) மையமா வச்சு சொன்னா நானு அசுர குருதான் ( சுக்கிரன் - வீணஸ் ) பெரியாளுன்னு சம்மன் இல்லாம அவரு பக்கம் அஜராகிடுவேன். ஆனா யாருக்கும் பரிந்துரைக்கிறதுல்லை.பெண்கள் : இந்த பிரபஞ்சத்தின் அதி அற்புத சிருஷ்டி - பெண்கள்" அப்படின்னு சாரு நிவேதிதா ஒரு முறை சொன்னாரு அதை மறுக்கவே முடியாது. ஆன எனக்கு இருக்கும் பிரச்சினை என்னவென்றால் எந்த பெண்ணிடமும் நேரில் பேசினால் "பில்டிங் ஸ்டிராங், பேஸ்மட்டம் வீக்" பார்ட்டி ஆகிடுவதுதான். பல் எல்லாம் டைப் அடிக்கும் அழகை காணக்கண்கோடி வேண்டும். சும்மா அட்ரஸ் கேட்டாக்கூட பேபேன்னு முழிப்பேன். 100% இந்த விதயத்தில நான் ஒரு வியர்டுங்க
மெஸ்ல ஒரே நாற்காலியையே தினமும் உட்கார்வது, வீட்டுக்கு வந்தா 1000 நெளிசல் உள்ள நான் பிறந்த போது வாங்கின சொம்புலையே தண்ணி குடிப்பது( அதுல குடிச்சாதாங்க தாகம் அடங்குது ) அது இதுன்னு இன்னும் இருக்கு 100 வியர்டு காலம் வரும்போது பகிர்ந்து கொள்கிறேன்.
நான் யாரையும் எழுதுமாறு கட்டாயபடுத்த போவதில்லை.

Monday, March 26, 2007

@ 1:07 PM எழுதியவர்: வரவனையான் 6 மறுமொழிகள்

Photo Sharing and Video Hosting at Photobucket
இது நான் எடுத்த படம்.

கீழுள்ளது அனைத்தும் நண்பரின் கைவண்ணம். என்ன இருந்தாலும் கலைஞன் கலைஞந்தான்


படங்கள் : கல்யான்குமார்
கிட்டதட்ட 20 வருடம் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதில் வாழ்ந்தாலும் அந்த நிலப்பகுதி குறித்து முழுதான அறிதல் என்பது இயற்கையோடு இனைந்து வாழ்ந்தால்தான் பெறமுடியும். இங்கு படங்களில் உள்ள மலர் பாடல்களில் அதிகம் பாடப்பெற்ற ஆவாரம் பூ . இடன் பெயர் அறிய எனக்கு 23 ஆண்டுகள் ஆயிற்று.
மார்கழி கடைசியில் பூக்கத்துவங்கி பங்குனி சித்திரைவரை நெடுஞ்சாலையின் ஒருமருங்கிலும் பூத்துகுலுங்கும் ஆவாரம்பூ கண்கொள்ளாக்காட்சி.
இதை நானும் படம் பிடிக்க என் நண்பர் திரைக்கலைஞன் கல்யான்குமாரும் படம்பிடித்தார். இரு படங்களும் இனைத்துள்ளேன்

Sunday, March 25, 2007

@ 1:55 PM எழுதியவர்: வரவனையான் 14 மறுமொழிகள்

Photo Sharing and Video Hosting at Photobucket

@ 1:35 PM எழுதியவர்: வரவனையான் 15 மறுமொழிகள்


Saturday, March 17, 2007

@ 6:22 PM எழுதியவர்: வரவனையான் 6 மறுமொழிகள்

Photo Sharing and Video Hosting at Photobucket

மழை

அகதிகள் முகாம்
காற்றில் வருகிறது
மண்வாசனை
- அறிவுமதி

(இடம் - தோட்டணுத்து முகாம் 
திண்டுக்கல் மாவட்டம்)

Wednesday, March 14, 2007

@ 11:19 AM எழுதியவர்: வரவனையான் 15 மறுமொழிகள்

Tagged By Ram

ஒரு அப்பாவி HeHeHe ;) தம்பி மதுரைக்கார ராம் டாக் பன்னிப்பூட்டாரு. மதுரை ஸ்லாங்குல எழுதுங்கன்னு வேற சொல்லிட்டாரு. உண்மையான மதுரை ஸ்லாங்க்குறது இப்போ வடிவேலு பேசும் ஸ்லாங் இல்லை அது வேற மாதிரி கலந்துகட்டி இருக்கும். முடிஞ்ச வரைக்கும் அந்த ஸ்லாங்லையே இந்த பட்டியை ( அதாங்க டாக் ) எழுத பாக்குறேன்.


பார்த்தது : இதுக்கு என்னான்னு பதிலு சொல்லுறதுன்னு தெரியலை. பார்த்ததுன்னா முத்துபட்டி ராஜாவுல பார்த்ததா இல்லனாக்க சிடி சினிமா , போத்திராஜா, "எவர் புளு" ;) ரீகலை சொல்லுறதான்னு ஒரு எழவும் புரியலை. இல்லை மது தியேட்டரு கேண்டின்ல அகஸ்மாத்தா சந்தித்துக்கொண்ட என் தமிழய்யா பழனியப்பன் அதுக்கப்புறம் எப்பவுமே எனக்கு தமிழ்ல 100/110 மார்க்கு போட்ட கொடுமைய சொல்லவான்னு வெளங்கலை.

சரி பாத்ததுன்னாக்க சின்ன புள்ளைல 'புனியாத்' நாடகம் பாத்தே பெருசுக பூராம் கொலையாக்கொல்லுவாய்ங்க அப்போ கொஞ்சம் அந்த கொடுமையை குறைச்ச நாடகம்னா அது மனோரஞ்சனும், வாக்லே கா துனியாவும்தான்.

அப்புறம் மால்குடி டேஸ்.

தமிழில் நெரையா இருக்குப்பா, நம்ம ரகுவரன் ஒரு நாடகத்துல நடிச்சிருப்பாப்ல பேரு என்னவோ விமானங்கள்ன்னு வரும் அது நல்லாருக்கும். அப்புறம் ஸ்டாலின் நடிச்ச "குறிஞ்சிப்பூக்கள்" ரொம்ப பிடிக்கும். நகைச்சுவைன்னாக்க நான் கொஞ்சம் அசைவ பிரியங்கிறதால வென்னிறாடை மூர்த்தி (சத்தியமா அந்த மூர்த்தி இல்லைங்க ) மீண்டும் மீண்டும் சிரிப்பு பிடிக்கும். போதும்ம்ன்னு நெனைக்கிறேன்.

வென்னிறாடை அசைவத்தில் கொஞ்ச நாளைக்கு முன்னால வந்த ஒரு சோக்கு :

வென்னிற ஆடை மூர்த்தி : இவன பாத்தா ரொம்ப மோசமான ஆளா இருப்பான் போலிருக்கு

சக நடிகர் : மூஞ்சிய பாத்தா அப்படி ஒன்னும் தெரியலையே

வென்னிற.மூர்த்தி : யோவ் பரதேசி, எவனாவது மூஞ்சியை வச்சு தப்பு பண்ணுவானயா

( புரிஞ்சவுங்க சிரிச்சுக்குங்க )


சினிமா : இதுக்குதான் மெனகெட வேண்டிருக்கு

தமிழ்ல புடுச்ச படம்னாக்கா நிறைய கெடக்கு. நகைச்சுவைன்னா அது "காதலிக்க நேரமில்லை"தான் இது வரைக்கும் 150 தடவை பாத்துருக்கேன் இன்னும் போரடிக்காம இருக்கு

அதுபோல "வசந்தமாளிகை" கடசீ சீன்ல ஜிவாஜி சொல்லுவாருல்ல " அவ வரமாட்டா, எனக்கும் தெரியும். அவ அகம்பாவம் பிடிச்சவ" அவகிட்ட எனக்கு பிடிச்சதே அந்த அகம்பாவம்தான்"ன்னு அது ஒன்னுக்கே இன்னும் 4 தடவ பாக்கலாம்.
சமீப படங்கள்ல 7ஜி - ரெயின்போகாலனி, பிதாமகன், ராம், இப்படி நிறையா இருக்கு

ஆங்கிலம் : சொன்னாக்க இன்னைக்கு பூராம் சொல்லலாம். அதனால அது அப்புறம் சொல்லுறேன்.

பொதுவா பின் நவீனத்துவாதிகள்தான் கிண்டல் அடிப்பாங்க அதும் அடுத்தவன் நொந்து நூலாகுறமாதிரி ஆனா அவனுங்க டவுசர கிழிக்கிற மாதிரி கலாய்ச்சுருப்பாய்ங்க இந்த படத்துல.

இன்னோரு முக்கிய படம் As good As its get எப்பவுமே ஜாக் நிக்கல்சன் எனக்கு ரொம்ம்ப பிடித்த நடிகர் அதிலையும் இந்த படத்தில் தூள் கெளப்பிருப்பார். கூட ஹெலன் ஹன்ட் ஒரு இங்கிலிஷ் நாடக நடிகையான இவரின் நடிப்பு அற்புதம்.As Good as It Gets is a 1997 film which tells the story of an obsessive-compulsive, cantankerous, racist, homophobic writer named Melvin Udall (Jack Nicholson) who, because of his anxiety disorder, lives in a world that has shrunk to about the size of his apartment and the books he authors. Nevertheless, and despite himself, he befriends his regular waitress (Helen Hunt), a single mother, and his homosexual neighbour (Greg Kinnear). It is a romantic comedy played out among flawed people in an imperfect and postmodern world.கேட்டது : எங்க அம்மாச்சி பாடும் தாலாட்டு இன்னுமும் நெனைப்புல இருக்கு. ஒரு வாலியம் மாத்திரை போல் அது கொண்டு வரும் தூக்கம் ஒரு ஆச்சரியம்தான்.

இந்தியில் பப்பி லகிரி வெளிட்ட லவ் லெட்டர் ஆல்பம் பாடல்கள்.

தமிழில் எல்லாம் பாடலும் பிடிக்கும். ரொம்ப பிடிச்ச பழைய பாடல் " நதியில் விளையாடி கொடியில் தலை சீவி"


படித்தது : மொத மொதல்ல படிச்சது ராணி காமிக்ஸின் "தண்ணீர் தண்ணீர் "

சமீபத்தில் "புயலிலே ஒரு தோணி " மறுவாசிப்பு முன்றாம் முறையாக . எனக்கு தெரிந்த்து தமிழில் வந்துள்ள ஒரே நாவல் அதுதான் எங்கிற எல்லா இலக்கியவாதிகளின் சல்ஜாப்பில் நானும் பங்கேற்கிறேன்.

ஆங்கிலம் : டாவின்சி கோட், கடைசியாய் படிச்சது.

இப்போ : தி இன்னர் ஜேர்னி - ஒஷோ

போதும்னு நினைக்கிறேன் அப்படியே இந்த டாக்கை எங்க மருதக்கார "மாதவன்" ( அலைபாயுதே ) தருமி அய்யா கைல கட்டிவுடுறேன

Wednesday, March 07, 2007

@ 6:26 PM எழுதியவர்: வரவனையான் 5 மறுமொழிகள்


மரணங்கள் எப்போதும் என்னை ஆச்சரியபடுத்தியதில்லை. இவன் என்னோடிருப்பான் என்று நம்பிய நண்பன் விசமருந்தி செத்தபோதும். ' நமக்கென்ன சித்தப்பா இருக்காரு' என்று துள்ளித்திரிந்து கொண்டிருந்த 22 வயது இளைஞனை விட்டு அதர்சமாய் அம்மையாய் அப்பனாய் ஒப்பிலா மாமணியாய் வளர்த்து அழகு பார்த்த என்னருமை சித்தப்பா பட்டென ஒரு நாள் செத்துபோன போதும், பார்க்கும் போதெல்லாம் ஏசிக்கொண்டு , சிக்கினால் ரெண்டு மாத்து விடும் என் முதல் எதிரியாய் நான் முறைத்துக்கொண்டு அலைந்த அப்பா, நான் வேலைக்கு போன பின் ஒரு நள்ளிரவு அரவமில்லாமல் வீட்டின் வாசல் நிற்கும் என் காதில் விழுவது தெரியாமல் " சின்னவன் எப்படியும் நல்ல நெலைக்கு வந்துடுவான் " என்று என் குறித்து தளரா நம்பிக்கையை பகிர்ந்துகொண்டிருந்த எந்தை ஒரு கோடை அதிகாலை அமைதியாய் தூக்கத்தில் இறந்ததை போனில் அழைத்து சொன்னபோதிலும் இன்னும் இன்னும் தெரிந்த , பார்த்த, கேள்விபட்ட ஆட்கள் உயிரின்றி போன போதும் எப்போதும் ஆச்சரியபட வைத்ததில்லை. மாறாக ஒரு சிறு அதிர்ச்சி மட்டுமே ஏற்பட்டு விலகும்.


ஆனால் நேற்று இரவு எனக்கும் வேறு ஒரு நண்பன் வாயிலாக தெரியும் வரை மறைக்கபட்ட ஒரு மரணம் தெரிந்தபோது ஆச்சரியமளித்தது அவன் மரணம். சாகவே மாட்டான் என்று நான் நம்பிக்கொண்டிருந்த கவுண்டந்தான் அது. கொஞ்சம் கலங்கிப்போய்விட்டேன். சென்ற மாதம் 15 நாள் விடுப்பு எடுத்து ஊர்சுற்றி கிளம்பும்போது பார்த்தேன். என் கடையில் உட்கார்ந்துருந்தான் " ஏண்டா இப்படி பரதேசி மாதிரி இருக்கே' குளிச்சு தொலையவேண்டியதுதானே"ன்னு சத்தம் போட்டேன். "அவன் ஊரு பேரே பரதேசிப்பண்ணப்பட்டி' அப்புறம் எங்கிட்டு மைனர் மாதிரி இருக்கிறது" - பார் மாஸ்டர் அழகர் கிண்டலடிச்சாரு. சரி பைக்குல ஏறுன்னு ஏத்திகிட்டு வீட்ல போயி ஒரு கொஞ்சம் சாயம் போன சட்டையை எடுத்துகொடுத்தேன். 'வாடா, பஸ்ஸ்டாண்டு லாட்ஜுல சொல்லுறேன் குளிச்சிக்கன்னு சொல்லி வரும் போது கேட்டான். "ஏண்ணே , இந்த சட்டை எம்பூட்டு" 1300 ரூவாடான்னேன். 'போண்ணே பொய் சொல்லாத' எங்கூருல 1300 இருந்த ஒரு கல்யாணமே பன்னிரலாம்' ஓம்பாட்டுக்கு இவ்ளோ ரூவாய்க்கு சட்டைய வாங்கி போட்டுகிட்டு திருஞ்சிருக்கேன்னான். 'வாய மூடிகிட்டு உக்காந்து வாடா வெண்ணை"ன்னு சொல்லி இறக்கிவிட்டுட்டு. எங்கண்ணணை கூப்பிட்டு அவனக்கு எதாவது செலவுக்கு டெய்லி கொடு, அவனுக்குதக்கன வேல இருந்த செய்யச்சொல்லுன்னு சொல்லிட்டூ வேலைக்கு வந்துட்டேன்.


"ஏண்டா கோமுட்டித்தலையா. எப்ப பாத்தாலும் இப்படி எருமைச்சாணியை மொகத்துல அப்புன மாதிரியே திரியுற"ன்னு செந்திலை கவுண்டமணி கேப்பாரே அதே உருவமைப்பிலே ஒல்லியாய் இருப்பான் அதுதான் கவுண்டன். அவனை முதல் முதலாய் சந்தித்த அனுபவமே வித்தியாசமானது. ஒரு நாள் திண்டுக்கல் கடையில் பணத்தை வசூல் செய்து விட்டு மதுரைப்பேருந்துக்கு காத்துக்கொண்டிருந்தேன் நேரம் அப்போது நேரம் இரவு 2. திடுதிடு வென்று ஒருவன் ஓடிக்கொண்டிருந்தான் பின்னாடி விரட்டி வந்தவன் பிடி பிடி என்று அலறியவாறே விரட்டிவர. ஓடியவனை ஒரு ஹிரோ நினைப்பில் விரட்டி பிடித்து மூஞ்சியில் ரெண்டு பஞ்ச் வச்சேன். எங்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் மொத குத்தே மூக்குலதான் குத்துவேன். பாவம் பார்ட்டிக்கு சில்லுமூக்கு ஒடைஞ்சு ரத்தம் வடிய நின்றவனை கையில் பிடித்து விரட்டி வந்தவனிடம் ஒப்படைத்து எதோ சாதித்ததைப்போல் நினைத்து பேருந்து ஏறினேன்.

இரண்டு நாள் கழித்து கடையின் முன்னால் நின்று கொண்டிருந்தேன். கடையின் பக்கவாட்டு சுவரில் உக்காந்து பீடி குடித்துக்கொண்டிருந்தான். பார்த்த எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. பிளைடு கிளைடு ஏதும் போட்டுவிடுவானோ நம்ம மேலன்னு ஒரு பயம் வேற உள்ளுக்குள் வர கடையினுள் போய் அண்ணனிடம் சொன்னேன். அன்னைக்கு ராத்திரி ஒருத்தேன் திருடிட்டு ஓடிக்கிட்டுருந்தான் புடிச்சி மொகத்துல ரெண்டு இடி இடிச்சேன், அவன் இப்பா கடை சைடுலதான் உக்காந்துருக்கான்ன்னு சொன்னேன். எங்கண்ணன் வெளியே வந்து பார்த்துட்டு சிரிச்சார். இவனைப்போயி வெரட்டி புடிச்சு அடிச்சியாக்கும். கூப்பிட்டா வந்து அடிவாங்கிட்டு போவானாரு. அப்புறம் அவனை கூப்பிட்டாரு. வந்தான், அண்ணே அன்னைக்கி நீங்க அடிச்சதும் நல்லதாப்போச்சு. என்னை புடிச்சவன் மூக்குல வந்த ரத்தத்தை பாத்து பயந்துட்டான் ஹிஹிஹி போலிஸ் ஸ்டேஷ்னிலும் அவனுக்கு ரெண்டு மாத்து " திருட்டிட்டு ஒடுனா பிடிச்சு ஸ்டேசன் கொண்டு வரவேண்டியதுதானே' அத விட்டுட்டு அடிச்சுருக்க பெரிய ரௌடியா நீன்னு" சொல்லி எஸ்.ஐ போட்டாரு மாத்து. நல்லவேளை அன்னைகு மத்தியானாம்தான் இன்ஸ்பெக்டர் வீட்டுல தோட்ட வேலை பாத்துட்டு வந்தேன் அதனால கேஸ் போடாம வெரட்டி விட்டுட்டாருன்னான்.

அதுக்கபுறம் கொஞ்சம் கொஞ்சமா என்கிட்ட ஒட்டிகிட்டான். திருடினால் என் கடைபக்கம் வராதேன்னு சொன்னதால கொஞ்சம் கோவம் வேற. ஒரு நாள் திண்டுக்கல் பேருந்து நிலைய அனேக்ஸ் கட்டிடம் என் நண்பர்கள் ஒப்பந்த அடிப்படையில் எடுத்து கட்டிக்கொண்டிருந்தனர். அதன் மாடியில் விடியலில் வரும் வண்டியை எதிர் நோக்கி கயிற்றுக்கட்டிலில் படுத்து கிடந்தேன். இரவு இரண்டு மணி இருக்கும் லேசா அரவம் கேட்டது எழுந்து பார்த்தால் அருகில் கவுண்டன் படுத்துகிடந்தான். ஒரு உதைய விட்டு என்னடா இங்க வந்து படுத்துருக்கேன்னேன். "அண்ணே சத்தம் போடதிங்க அப்படியே அங்க மண்ணு கொட்டிருக்குல அதுல பாருங்க ஒருத்த படுத்துருக்கானா" அவன் இப்ப எந்திரிச்சு நிப்பான் பாருங்க " ஆமாம்டா என்றேன். அப்படியே சட்டை, டவுசரு பையெல்லாம் கையவிட்டு பார்ப்பான் பாருங்கன்னான். அட ஆமாம்டா என்றேன். வேற ஒன்னும் இல்ல மாப்பளை காச தேடுறான்ன்னான். திரும்பி அவன பாத்தேன் "அது இங்கேல்ல இருக்குன்னி கைய காமிச்சான். ஏண்டா களவாணி, நீ ஆட்டைய போட்டுட்டு நான் இருக்குற இடத்துக்கு வந்தா பாக்குறவன் என்னடா நினைப்பான்னு வெரட்டி விட்டேன். போகும் போது " அவன் நைட்டு கட்டிங் அடிக்க போன இடத்துல மாமு மாமுன்னு கூப்பிட்டான். சரி இன்னிக்கு உனக்கு தீவாளின்னு நெனச்சுகிட்டேன்"ன்னு சொல்லிகிட்டே போயிட்டான்.

சரி அதெல்லாம் பழைய கத இன்னோரு நாளைக்கு பேசுவோம். இப்ப கவுண்டன் இவ்வுலகில் இல்லை. அத விட முக்கியமான விசயம். அவன் கடைசியாய் நடந்த உள்ளாட்சித்தேர்தலில் அவங்க ஊரு கவுன்சிலராகிட்டான் அதுவும் அன்னாபோஸ்டா . இதக்கேள்விபட்ட போதே ரூம் போட்டு சிரிச்சேன்.

குடிச்சி குடிச்சி செத்த கவுண்டனுக்கு : உன் நினைவுகளில் வாழ்கிறாய் என்னை போன்ற அண்ணண்களிடம்

பிடித்த விளிம்புகள் :

கவுண்டன் - பஸ்ஸாண்டில் போதையில் கிடப்பவரை மாமன் மச்சான் என சொந்தம் கொண்டாடி அவரிடம் திருடுவது

Tuesday, March 06, 2007

@ 1:36 PM எழுதியவர்: வரவனையான் 20 மறுமொழிகள்

GERD : Gastro esophageal reflux disease


கொஞ்சம் உடல் மற்றும் மருந்துக்களின் பக்கவிளைவுகள் பற்றி பேசாலாம் என்பதற்காக இந்த பதிவு.


இப்போதிருக்கும் பணிக்கு முன் சொந்த தொழில் இருந்தது. அது கொஞ்சம் ஊர் சுற்றும் வேலை. காலை துவங்கி மாலை அல்லது இரவு வரை அருகிலிருக்கும் ஊர்களுக்கு பேருந்துகளில் சென்று பணம் வரவு வைத்து திரும்ப வேண்டும் உணவெல்லாம் ஆங்காங்கே தான். அப்போது ஒரு பழக்கம் வந்து விட்டது அதாவது இயற்கையின் அழைப்பை நிராகரித்து வருவது. காரணம் பொது இடங்களில் சிறுநீர்கழிக்க ஏற்படும் அய்யரவு தான். பொதுகழிப்பீடங்களுக்கு செல்லவே பயம் அவ்வளவு "சுத்தமாய்" இருக்கும். இப்படியே பழகி பழகி பகல் வேளைகளில் ஓரிரு முறை மட்டுமே இயற்கை அழைப்பை ஏற்குமாறு ஆகிவிட்டது. பின் இது குறித்து பயமாகி மருத்துவரிடம் போய் சொன்னேன். அவர்களும் சோதித்து பார்த்து ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டனர். எல்லோரும் போலில்லாமல் எனக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 முதல் 4 முறை மட்டுமே போகும் பழக்கம் இருந்தது.

பணி மாறி இப்போதிருக்கும் வேலைக்கு வந்த 3 மாதம் இரவு உணவு முடித்து உறங்க எத்தனித்த ஒரு நாள்லேசாக வலப்புற விலா எலும்பின் கீழ் வலி துவங்கியது, பின் கொஞ்சம் மேலேறி விலா எலும்புகள் கடந்து கீழ்முதுகு அப்புறம் வலப்புற இடுப்பு என்று ஒரு அரைக்கோள வடிவில் வலிக்கத்துவங்கியது. தாங்கமுடியாத வலி என்பதால் அறைத்தோழனை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்றேன். இரவுப்பணியில் இருந்த இளம் மருத்துவர் ஒவ்ரான் மருந்தினை ஊசியில் போட்டு அனுபினார் வலி பட்டென பறந்தது. கையில் டைகுளோஃபெனாக் இரண்டு மாத்திரை கொடுத்து வலி ஏற்படின் சாப்பிடுமாறு அறிவுறுத்தி அனுப்பினார்.

அடுத்த நாள் மதியமும் அக்கொடிய வலி வரவே ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டேன், என் குடும்ப மருத்துவரை காண. அங்கு போனவுடன் அவர் ஸ்கேன் செய்து பார்த்துவரும்படி பணித்தார்.


ஸ்கேன் செய்து பார்த்ததில் இடதுபுற சிறுநீரகத்தில் 8MM அளவிற்கு ஒரு கல்லும் இடது புறத்தில் 5 MM அளவிலும் 4 MM அளவிலும் கற்கள் இருந்தது. சிறுநீரக கற்களை அகற்ற இப்போதேல்லாம் குவாரிகளில் கையாளப்படும் முறைகள் வந்து விட்டது. உள்ளே இருக்கும் கல்லை உடைத்து ஜல்லியாகி எடுக்கும் முறையெல்லாம் வந்தாலும் டாக்டர்கள் பெரும்பாலும் பழைய முறையைத்தான் கையாளுகிறார்கள். அது தொடர்ந்து 4 போத்தல் சலைன் ஏற்றுவதாகும், அப்படி செய்யும் போது அதிகமாய் சிறுநீர் போகும் அப்போது கல் சிறுநீர் குழாய் வழியே வெளியே வந்து விடும். இதற்கு கையில் ஒரு சல்லடை யும் கொடுத்து ( என்ன மீனா பிடிக்க போறேந் இது நான் ) சலைன் ஏற்றினார்கள். இதனிடையே சலைனில் 500MG சிப்ரான்( சிப்ரோபிலாக்சின்) மருந்தும் ஏற்றவே நான் இது எதுக்கும் இவ்ளோ ஆண்டிபையோடிக் ஏத்துறிங்க என்று கேட்க "கல் சிறுநீர் பாதை வழியே வெளியேறும் போது அதன் சுவர்களை கிழித்து புண்ணாக்கிவிடும் அதான் அதை ஆற்றவதற்குதான்" என்று சொன்னார்கள். 15 நிமிடத்தில் சிறுநீர் வெளியெறத்துவங்கியது. நான் மீன் பிடிப்பவன் போல் சல்லடையுடன் கழிவறைக்கும் கட்டிலுக்கும் அலையலானேன்.

ம்ம்கூம் கல் வந்த பாடில்லை லேசான காய்ச்சல்தான் வந்தது சலைன் திடீரென்று ஏற்றினால் வரும் காய்ச்சல் அது. பின்பு மருத்துவர் சொன்னார் கல் கரைந்து வெளியெறியிருக்கும் என்று. வீடு திரும்பி இரண்டு தினம் கழித்து மீண்டும் வலி, மீண்டும் ஸ்கேன் பார்த்ததில் கல் அப்படியே ராமன் காலுக்கு காத்திருக்கும் அகலிகை போல் அங்கேயே இருந்தது.

என் அம்மா மருத்துவர்களை நம்பாமல் மறு நாள் காலையில் வாழைத்தண்டு சாறு ஒரு சொம்பில் கொடுத்தார். விளக்கெண்ணையை சாரயம் என்று குடித்து கழிவறையில் வாசம் செய்யும் கவுண்டமனி போல் நான் ஒரு 30 தடவை சிறுநீர் போனேன். ஒரு நாளால்ல இரண்டு நாள். பிறகு ரீபிட் ஸ்கேன் செய்து பார்த்தால் கல்லை காணாம் இரண்டு சிறுநீரகங்களிலும் . கொஞ்சம் அசுர வைத்தியம் என்றாலும் பக்கவிளைவுகள் இல்லாதது வாழைத்தண்டு சாறு.
அதுசரி அலோபதி வைத்தியம் பார்த்துள்ளோமே அதற்கு பக்கவிளைவு உண்டுதானே . அந்த கவலையெல்லாம் படாமல் பணி திரும்பினேன். வந்து ஒழுங்காய் போய்க்கொண்டிருந்தது வேலை சிலநாட்களில் வயிறு கோளாறு செய்யத்துவங்கியது, சாப்பிடும் முன் ஏப்பம், சாப்பிட்ட பின் ஏப்பம் வாயுப்பிடிப்பு என்று துவங்கியது கொஞ்சம் கொஞ்சமாய் மூச்சுதிணறல் வரை போனவுடன் பயமாகி ஊருக்கு புறப்பட்டுபோனேன் இம்முறை மரணபயத்துடன். வயிறு புண்ணாகிருக்கிறது என்று ஒம்மோப்ரோசொல் உடன் டொமிபெரிடொன் சஸ்டைன் ரிலிஸ் உள்ள மாத்திரைகளை கொடுத்தார்கள். இதற்கிடையே தொடர்ந்த மூச்சு திணறலினால் நான் ஆன்ஸைடி என்று சொல்லக்கூடிய மரணபய உணர்வின் ஆரம்ப கட்டத்துக்கு வந்துவிட்டேன். இரவு தூக்கம் பிடிக்காது, யாராகிலும் உடன் இருக்கவேண்டும் இப்படி .....


பொதுவாய் ஜீஈஆர்டி எனச்சொல்லக்கூடிய நோயின் துவக்கமே இது. இதற்கான அறிகுறியும் இதய நோய்க்கான அறிகுறியும் ஒன்றே ஆகும். ஆகவே தான் ஆன்ஸைடி நிலைக்கு நான் போனேன். இதயம் குறித்து முழு சோதனையும் செய்து பார்த்ததில் ஒன்றும் பிழையில்லை என்றும் மிக மிக ஆரோக்கியமான உடம்பு என்று அறிக்கை வந்தது. சாப்பிடும் முன் கொஞ்சம் ஆன்டாசிட் எனப்படும் (ஜெலுசில் வகையறா..) கொஞ்சம் குடிக்கவேண்டும் அதும் போக ரனிடிட்டீன் மாத்திரை ஏதாவது உர்கொள்ளவேண்டும். சாப்பிட்டபின் மீண்டும் கொஞ்சம் ஜெலுசில் அல்லது டபுள் ப்ரொடக்டட் ஆன்டாசிட் ஏதாவது குடித்து தொலைய வேண்டும் இரவும் காலையும் போன பத்தியில் சொன்ன மாத்திரை தின்ன வேண்டும். சரி அதோடு முடிந்ததா கதை.

ஒமோப்ரோசொல் மாத்திரையும் டொமிபெரிடோனும் இரு பக்கவிளைவுகள் கொடுக்ககூடியவை. ஒன்று உடலில் B12 சுரப்பை குறைப்பதனால் மூட்டுகளில் வலியும் , மற்றொன்று கண்டறியாக்காரணத்தினால் தலைசுற்றைலையும் கொடுக்ககூடியது. இவை எனக்கு இரண்டையும் கொடுத்தது. தடுமாறி தலை சுற்றி மாடிப்படிகளில் உருண்ட பிறகுதான் ஒரு முடிவுக்கு வந்தேன் இனி இந்த மாத்திரைகளை உண்பதில்லை என்று.

சிறுநீர் கல்லுக்கு ஏற்றிய சிப்ரோபிளாக்சினால் வயிறு புண்ணாகி, அதுக்கு உண்ட மாத்திரைகளால் பக்கவிளைவுகள் ஏற்பட்டதுதான் மிச்சம்.

சரி அலோபதிக்கு சரியான மாற்று பல நோய்களுக்கு இல்லை என்பதே இப்போதைய கொடிய நிலை நமக்கு.

எப்படி வருகிறது GERD :


நமது தொண்டைக்கு கீழே ஒரு பந்துக்கிண்ணம் போல் துவங்குகிறது உணவுக்குழாய், அதன் சற்று கீழே சீரணசக்திகளுக்காக உற்பத்தியாக பித்தப்பை இருக்கிறது அங்கு சுரக்கும் ஆசிட் மற்றும் வயிற்றுல் சுரக்கும் அமிலங்கள் அப்பந்து போன்ற அமைப்பில் ஏற்பட்டுள்ள புண்ணில் படிவதால் இந்நோய் வருகிறது. சரி அவ்விடத்தில் புண்ணாகும் காரணமென்ன, முறையே - காபி ( பாடுவதல்ல ;) ) கார உணவுகள், புகை பழக்கம், அதீத இனிப்புவகைகள் மற்றும் ஆல்ஹகால்.

அமெரிக்காவில் உலகில் அதிக அளவில் இந்நோயளிகள் உள்ளனர். இந்தியாவில் பெண்கள் அதிக அளவில் பாதிக்கபட்டுள்ளனர். தயிர்சாதத்தில் மற்றும் பால் பொருட்களில் உள்ள லாக்டொஜனும் ஒரு காரணியாக அமெரிக்க "விஞ்ஞானி முருகன்கள்" சொல்லுகிறார்கள் .

தங்கவேல் அவர்களுக்கு, நான் தெரிந்தே தான் சாப்பிட்டேன் தயிர் சாதத்தினை. தமிழ்நாட்டு உணவுகளில் அதை காட்டிலும் காரமற்ற உணவு இல்லையென்பதால். மேலும் எனக்கு இப்போது அந்நோய் இல்லை . ஒரு முன்னெச்சரிக்கைகாவே அப்படி :))))))))))

கண்மணியின் பின்னூட்டத்தின் பின் சேர்க்கபட்டதுWhat is GERD?

Your stomach is filled with acid. Its purpose is to help digest the food you eat. Believe it or not, this acid is the same acidity as battery acid. Your stomach is built to handle the acid it produces. However, your esophagus isn’t. So when acid backs up into your esophagus, it can cause the burning sensation known as heartburn.

Almost everyone has occasional heartburn. But if these symptoms occur two or more days a week for at least three months, you may have GERD, or acid reflux disease. Acid reflux occurs when the lower esophageal sphincter (the valve separating the esophagus and stomach) does not close properly, allowing acid to back up into the esophagus.

GERD is a chronic condition and may lead to more serious medical conditions, but is treatable. In this section, you’ll learn about the causes and common symptoms of GERD, a disease that is more common than you might think.

The most common symptom of GERD is heartburn, a burning pain that rises from the stomach or lower part of the chest towards the neck. Regurgitation , which occurs when stomach acid washes into the esophagus and up into the mouth, causing a bitter or sour taste, is another symptom of GERD.1 Another common symptom is difficulty swallowing, also called dysphagia.2

GERD has other, less common symptoms. Water brash is the sudden appearance in the mouth of slightly sour or salty fluid that happens when the salivary glands are stimulated by acid reflux.3 GERD has been associated with non-cardiac chest pain, asthma, hoarseness, and chronic cough.

Symptoms of GERD:
Heartburn
Regurgitation
Difficulty swallowing
Water brash
Some people who have GERD may not experience any symptoms. This may happen because these people are not very sensitive to the acid and do not experience pain even though they are having reflux.

How Common is GERD?
From time to time everyone has stomach acid that backs up into the esophagus. This flow is called gastroesophageal reflux, or acid reflux. It can cause a number of sensations. The most common of these is heartburn. Some acid reflux is common and normal.4 When this process occurs frequently and chronically, it is called gastroesophageal reflux disease (GERD). With GERD, acid reflux can become painful and may cause damage to the lining of the esophagus.

If you have persistent heartburn two or more days in the week, despite treatment and diet change, you may have GERD.6 Heartburn that does not go away can, over time, wear away the lining of your esophagus. This is true even if the heartburn is mild. Talking with your doctor about your symptoms can help your doctor determine if you have GERD.

GERD is a chronic, but treatable condition, and it is extremely common. Studies estimate that approximately 19 million people in the United States may have GERD. In fact, approximately 4.6 million doctor visits each year are made to discuss GERD symptoms. GERD can lead to serious problems.

@ 11:49 AM எழுதியவர்: வரவனையான் 17 மறுமொழிகள்

பாகச இன்று பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு முக்கிய பதார்த்தமாகும். பாகச முன்பு ராமேஸ்வரம் மற்றும் அதை ஒட்டிய கடலோரங்களில் கிடைத்து வந்தது. இது ஒரு கால நிலை உணவாகும். இதன் பொருளாதார நிலைக்கு ஏற்ற வகையில் பல்வேறு இடங்களில் மாறிய வண்ணமிருக்கும். மும்பை புறநகர் பகுதிகளிலும் கிடைத்தது. ஆனால் ஒரு ஓர உணவாக இருந்த பாகச வை மெயின் புட் ஆக மாற்றியது அருள்குமார், இடம் நடேசன் பார்க் (முதல முதல முதலியார் ) மாலை வேலையில் "விப்ரோ காண்டீனில்" போண்டாவுடன் தொட்டுக்கொள்ள பாகச சட்டினியும் பறிமாறப்படும் . பின்பு கனடா மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் கனஜோராய் விற்பனையாகியது. சரி இன்றைக்கு பாகச கேசரி செவது எப்படி என்று பார்க்கலாம். முதலில்

தேவையான பொருட்கள்:

500 கிராம பாலபாரதி
400 கிராம் கிண்டல் (கொழுப்பு கலந்தது)
1/2 தே.க கேசரி தூள்
1/2 தே. க கஞ்சா தூள்
1 கப் கோமியம்
2 கப் கழனி தண்ணீர்
இரக்கம் சுத்தமாக நீக்கபட்ட இதயம் 1

செய்முறை:

1. முதலில் வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் இரண்டு சொட்டு கோமியம் விட்டு பாலபாரதியை அதில் கொட்டி வறுத்துக்கொள்ளவும்

2. அதே சட்டியில் கோமியம்,கழனி தண்ணீர் & கஞ்சா தூளை போட்டு கொதிக்கவிடவும்.

3. கொதித்து வரும் போது அடுப்பை குறைக்கவும். பின்னர் சிறிது சிறிதாக வறுத்த பாலபாரதியை சேர்த்து நன்றாக கிளறவும். (கை வலிக்கும், சங்கத்து ஆட்கள் உடனிருந்தால் நல்லது )

4. வறுத்த பாலாவை போட்டதும் சிறிது சிறிதாக கிண்டலை சேர்க்கவும். உடனேயே கேசரி தூளையும் , கஞ்சா தூளையும் போட்டு நன்றாக கிளறிவிடவும்.

5. இடையிடையே கீழ்கானும் சாட்களை இணைத்து பாலபாரதியை நன்கு சிவக்கவிடவும்

// ( Status Msg )பால பாரதி :
புரையெறினால் தலையில் தட்டுகிறாய்.. அதற்காகவே அடிக்கடி புரையேறி விடுகிறது எனக்கு!


வரவனையான்: அடுத்த தடவ செவுல்ல அறைய சொல்லறேன் - புரை அதுக்கப்புறம் எங்க ஏறுதுன்னு பாப்போம்

பால: அடங்க மாட்டியா நீயு?
2:33 PM ஒரு முடிவோட தான் இருக்கியாடே?
பால : :)
அது சரி..
பொறமை பிடிச்ச பையண்டா நீ
2:36 PM வரவனை : ஆமாமா செவுள்ள வாங்குறது ஆஸ்கார் ஆவார்டு பாரு , எனக்கு பொறமை
பால: அடப்பாவி... நா அதைச்சொல்லலை.
நற..நர..
கவிஜ எழுதினா கொப்பளிக்கிரியே அதைச்சொன்னேன் //
5. சாணி பூசிய தட்டையான பாத்திரம் ஒன்றில் கலவையை கொட்டி பரப்பவும்.

6. விரும்பிய படி வெட்டி, ஒவ்வொரு துண்டிலும் பாகச என்று பதிக்கவும்.

என்ன நேயர்களே பாகச கேசரி எப்படி செய்வது என்று தெரிந்துகொண்டீர்களா, நாளை பாகசா பொங்கல் எப்படி வைப்பது என்று பார்ப்போம்.

Thursday, March 01, 2007

@ 6:36 PM எழுதியவர்: வரவனையான் 13 மறுமொழிகள்

சோதனைப்பதிவு

பிளாக் நல்லாருக்கா சொல்லுங்க அன்பர்களே

:))))))))))))))