Tuesday, February 13, 2007

@ 3:38 PM Labels: எழுதியவர்: வரவனையான்

எரியும் சுடரை எனக்களித்த தோழன்.சுகுணாவுக்கு நன்றி. அவரின் கேள்விகளுக்கு நன்றிகள் பல....Photobucket - Video and Image Hosting

1. இன்னமும் திராவிட இயக்கத்திற்கான தேவைகள் இருப்பதாக நினைக்கிறீர்களா?

நிச்சியமாக. திராவிட இயக்கத்தின் தேவைகள் இன்னும் இன்னும் இங்கு தேவைப்படுகிறது. அதே வேளை திமுக,மதிமுக , தேமுதிக போன்றவை திராவிட இயக்கத்தின் நீட்சி என்று யாரேனும் சொல்லுவார்கள் என்றால் அது பின்பொறியால் சிரிக்கவேண்டிய விடயம். தன்னை மறுக்கும் சிந்தனையாளர்களை தனக்கு பின் எதிர்பார்த்தார் பெரியார். இன்னும் பெரியாரையே முழுமையாக மறுவாசிப்புக்கு நாம் உட்படுத்தவில்லை.இதற்கு முந்திய முயற்சிகளும் பார்ப்பனியத்துக்கு முதுகு சொறியும் வேலையையே செய்தது நீங்கள் நன்கறிவீர்கள், அதற்கு எதிராய் களமிறங்கியவர்களில் ஒருவர் என்கிற வகையில். பார்ப்பனியமும் பாசிசமும் தன் அதிகார எல்லைகளை பன்னாட்டு நிறுவனங்கள் வரை விரிவு படுத்திவரும் இந்த காலகட்டத்தில் , மீண்டுமொரு திரிபு வரலாற்றை அடித்தட்டு மக்களுக்கு எதிராய் புனைந்து வரும் வேளையில் தமிழ்ச்சூழலில் திராவிட இயக்கத்தின் தேவையும் தோழர்.பெரியாரின் தேவையும் முன்னைவிட அதிகமாய் தேவைப்படுகிறது என்றே சொல்லலாம். எல்லாவித அதிகார மறுப்பு என்பது இன்றைய நிலையில் தமிழ்நாட்டிலும் இந்திய அரசியற்சூழலிலும் முன்வைக்க ஏற்ற நிலையிலேயே உள்ளது. அது பெரியாரின் பாதை . அந்த அதிகார மறுப்பை அடிப்படையாகக்கொண்ட திராவிட இயக்கத்தேவை தொடர்ந்துகொண்டே இருப்பதாக உணர்கிறேன்.

2. தமிழ்த்தேசியம், ஈழப்பிரச்சினை குறித்து உங்கள் நிலைப்பாடு...

முன்மொருமுறை தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்கள ராணுவ தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் என் தலைமையில் நடந்த போது நான் பிடித்து சென்ற பாதாகையில் கீழ்க்கண்ட கவிதைவரிகள் எழுதிப்போனேன்.

மலேயாவில் மாவுசாக்கு
பர்மாவில் கட்டாபாணி
ஈழத்தில் கள்ளத்தோணி
அகிலம் முழுதும் இன்று நாம்
அகதி
வாழவழியென கண்டிடவேண்டும்
வைகோ தலைமையில் வென்றிட வேண்டும்
- என்கிற கவிஞர் சரத்தின் வரிகளை ஏந்தி போராட்டகளத்தில் இருந்தோம். காலம் செல்ல செல்ல தமிழ்தேசியத்தின் அடிப்படையும் திராவிட இயக்கம் முன்வைக்கும் தேசிய இனப்பார்வையும் வேறாய் புலப்பட்டது. தமிழ்நாட்டு தமிழ்த்தேசியவாதிகள் முன்வைக்கும் தேசியவாதம் பெரியாரின் "தமிழ்நாடு தமிழர்க்கே" என்ன்னும் முழக்கத்தின்று வேறுபட்டது, அது தமிழ்நாடு தமிழர்க்கு மட்டுமே என்று ஒலிக்கிறது. இதை ஒரு சர்வதேசியவாத சிந்தனைகளை வாசித்தவன் என்கிற வகையில் எற்றுக்கொள்ள கொஞ்ச திகைப்பாக இருக்கிறது. அதே வேளையில் தமிழன் என்கிற ஒரே காரணத்துக்காக ஒருவன் ஒடுக்கபடுகிறான் என்றால் அவனுக்கு ஆதரவாய் களமிறங்க எப்போதும் நான் ஆயுத்தம் தான். இன்னும் தெளிவாய் சொல்வதானால் ஈரோடு தமிழன்பனின் வரிகள்தாம் உவமை - "நான் எப்படி பிரபஞ்சனோ, உலகனோ,இந்தியனோ அதைவிட கூடுதலாக தமிழன்" இவைதான் என் தமிழ்த்தேசிய நிலைப்பாடு.

ஈழப்பிரச்சினை என்று வருகிற போது இலக்கிய ஜல்லி அடிப்போரெல்லாம் புலி எதிர்ப்பு கருத்தாடினால் மட்டுமே அறிவுஜிவிகளின் ஏற்பை பெறமுடியும் என்றொரு மாயத்தோற்றமே இங்குள்ள பலரை அப்பிரச்சினையின் முழுமை தெரியாமல் குருட்டாம்போக்கில் எழுதியும் பேசியும் வர வைத்திருக்கிறது என்றே நினைக்கிறேன். அதே வேளை இன்றைய சூழலில் அங்கு தமிழ் மக்களின் பிரதிநிதியாய் இருப்பவர்கள் புலிகள்தாம் என்கிற கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். சிலரைப்போல் நான் ஈழத்தை ஆதரிக்கிறேன் புலிகளை அல்ல எனும் வெளக்கெண்ணையில் குண்டி கழுவும் வேலையை நானும் செய்யமுடியாதல்லவா ;)

பள்ளிக்காலம் தொட்டு மலரட்டும் மலரட்டும் தமிழீழம் மலரட்டும் என்று முழங்கி வந்த திராவிட பாசறையில் வளர்ந்தவன் என்கிற ஒற்றை காரணத்துக்காக மட்டுமே என் நிலைப்பாடு இப்படி ஆகிவிடவில்லை. அதே நேரத்தில் புலம்பெயர் ஈழச்சிந்தனையாளர்களின் மாற்றுக்குரல்களையும் அக்கறையுடன் உள்வாங்கியபடிதான் இருக்கிறேன். அங்கு தேவைப்படும் தமிழ்த்தேசியத்துக்கும் இங்கு பேசப்பட்டு வரும் தமிழ்த்தேசிய சொல்லாடல்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாகவே கொள்கிறேன்.

இது இருவேறு தேசிய இனங்களுக்குடையே நிகழும் ஆதிக்கவாத இனத்துக்கும் - ஒடுக்கபடுகிற இனத்துகுமான எதிர்வினைகளாகவே கொள்ளமுடியும் . ஆகவே தேசிய இனப்பாசங்களைத்தாண்டி ஒரு இடதாக என் நிலைப்பாடு ஈழத்தமிழ் மக்களின் தாகம் தமிழிழத்தாயகம் என்பதே ஆகும். இதில் ஈழத்தமிழ்மக்கள் என்பது புலிகளையும் சேர்த்துதான்.
3. காதல் வந்தால் சொல்லி அனுப்புவீர்களா?

கண்டிப்பாக, ஆனால் எது காதல் என்பதில் துவங்கி பல குழப்பங்களுடனே வாழ்கிறேன்.


4. வலையுலகின் இயங்குதளம் என்னவாய் இருப்பதாய் உணர்கிறீர்கள்?


நல்லதொரு கேள்வி சுகுணா, வலைப்பதிவுகள் என்பதை ஒரு கட்டுடைப்பு நிகழ்வாகவே நான் உள்வாங்கியிருக்கிறேன். முன்பெல்லாம் எது நல்ல ஒரு கவிதை,கட்டுரை என்பதை ஒரு பத்திரிக்கையின் ஆசிரியரோ அல்லது இணையதளத்தின் ஆசிரியரோ அவரது வாசிப்பு தன்மைக்கு ஏற்ப முடிவு செய்வார். இதை புரட்டி போட்ட ஒரு மாற்றமாக வலைப்பதிவுகளை கொள்ளலாம். வலுவுள்ளது பிழைத்துக்கொள்ளும் எனும் மொழி போல் நல்ல படைப்பை தேடிப்படிக்கவும் எனது போன்ற மொக்கை பதிவுகளை தவிர்த்து பயனுள்ள வேலைகள் செய்யவும் இது வழியமைத்து கொடுக்கிறது. இன்னும் அதிகமாய் சொல்ல வேண்டுமானால் "ஆசிரியன் செத்துவிட்டான்" என்பதில் நீங்கள் ஒப்புமை கொண்டவர் என்கிற காரணத்தால் சொல்கிறேன் , இவ்வலைப்பதிவுகளால் உண்மையில் "ஆசிரியன் செத்து விட்டார்" ஆம் எடிட்டர் என்கிற ஒரு அதிகாரமிக்க தொழில் மறைந்து விட்டதாகவே கொள்கிறேன். மையமற்ற பெருவெளியாய் வலையுலகம் ஆகிவிட்டதாகவே கொள்ளலாம்

5. பொதுவாக நீங்களும் நானும் பலசமயம் கொண்டாட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தியே வந்திருக்கிறோம். ஆனால் எதுவித வலியையோ அல்லது துயரத்தையோ எதிர்கொள்ளாத மேம்போக்கான மனம் மட்டும்தான் இதை வலியுறுத்துகிறு என்பதாக உணர்ந்திருக்கிறீர்களா?

ஆம் தோழா, வாழ்க்கை கொண்டாடக்கூடியது, கொண்டாடப்படவேண்டியது. எல்லாச்சூழலிலும் என்னால் ஒரு நகைச்சுவை துணுக்கு சொல்லமுடியும். நீங்களும் நானும் இடதின் பார்வையில் உலகை பார்த்தவர்கள், பார்த்துக்கொண்டிருப்பவர்கள் உலகம் துக்கங்ளின் போர்வையாலும் துயரங்களே கனவுகளாகவும் இருக்கிறது. இதில் பல்வேறு ஆதிக்கவாத செயல்களுக்கு எதிராய் நாம் அணி திரள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்நிலையில் ஒரு போர்ப்பாட்டு பாடியபடி நாம் எந்த கோட்டையும் தகர்க்கும் செயல் திட்டமில்லை. நமது எதிர்ப்பு என்பது அதிகாரங்களை நோக்கி எள்ளலும், கிண்டலுமே ஆகும். இதில் கொண்டாட்டம் என்பதும் ஒரு அதிகார எதிர்ப்பு செயற்பாடுதான். இதுவும் போக இது போன்ற ஒன்றை முன்வைப்பவன் வலியையும் துயரையும் எதிர்கொள்ளாதவன் என்று சொல்வது மடமையாகும், சாரு நிவேதா கூடத்தான் கார்னிவெல் மென்டாலிடியை ஒப்புக்கொள்கிறார் அதற்காய் அவர் அதையெல்லாம் பார்க்காதவரா என்ன, பாதிப்புனைவுகளாய் இருந்தாலும் பாதி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரின் வலி எவ்வளவு பெரிது. என் வாழ்வின் கடந்த 5 ஆண்டுகளாய் பார்த்துதானே வருகிறீர்கள் எவ்வளவு பாரிய தாக்கங்கள் இழப்புகள், இருந்தும் வெடிச்சிரிப்பும் கிண்டலும் கொண்டாட்ட மனோநிலையும் மாறி இருப்பதாக உணர்கிறீர்களா ? ஆகவே தனித்துயர் எவ்விதத்திலும் அரங்கிலேற முடியாது. சில இலக்கியவியாதிகள் வேண்டுமானால் அதை பொதுவில் சொல்லி காசு பறிக்க எத்தனிக்கலாம்.
இணையம் தந்த நல்ல நட்புக்களில் ஒன்றான தோழன். பொட்"டீ"கடை சத்தியாவின் கரங்களில் சுடரினை தருகிறேன்.

Photobucket - Video and Image Hosting

1. தமிழ்மண அரசியல் சர்ச்சைகளில் உங்கள் பெயர் தேவையின்றி பயன்படுத்தபடுவது குறித்து ?

2. "சட்டென வெளிச்சம்" இந்த வார்தைகளை கொண்டு துவங்கும் கவிதை ஒன்று

3. வலையுலக கொள்கை வகுப்பாளர்களால் முகச்சுழிக்கபடும் "கெட்டவார்த்தைகள்" பற்றி உங்களின் மதிப்பீடு ?

4. ஓஸ்திரேலிய மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளில் உள்ள தொல்மக்களின் நாட்டு சரக்குகள் பற்றிய குறிப்புகள்

5. பார்ப்பண எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு, வல்லாதிக்க எதிர்ப்பு என்பதில் உங்கள் நிலைப்பாடு இவ்வாறு இருப்பதின் பின்னணி ?

16 மறுமொழிகள்:

 1. //வலுவுள்ளது பிழைத்துக்கொள்ளும் எனும் மொழி போல் நல்ல படைப்பை தேடிப்படிக்கவும் மொக்கை பதிவுகளை தவிர்த்து பயனுள்ள வேலைகள் செய்யவும் இது வழியமைத்து கொடுக்கிறது. //

  செந்தில்,
  சுடர் நன்றாக ஒளிர்கிறது... அதே சமயத்தில் சூடாகவும் இருக்கு.

 1. 8:18 PM  
  Anonymous said...

  சட்டென வெளிச்சம் பரவும்
  சாலையில் உன்னைக் கண்டால்
  மொட்டென விரியும் இதழ்கள்
  உன் குரல் வாசல் கேட்டால்
  விட்டிடு நினைவை என்றால்
  விடுவேன் என்னுயிரை என்று
  பித்தென உளறும் மனதை
  பெயர்த்து நான் எங்கே போட…?

 1. செந்தில் அய்யா,
  திராவிட இயக்கத்தின் சேவை நாட்டுக்கு தேவை என்று சொல்வது அபத்தம்.திராவிட இயக்கம், அரைவேக்காட்டு அயோக்யர்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை நாட்டை கரையான் போல் கரைத்து வரும் இயக்கம்.திராவிட இயக்க தலைவர்களுக்கு இன்னும் நிறைய தேவைகள் இருக்குன்னு வேணா சொல்லலாம்.அந்த கும்பலுக்கு மேலும் மேலும் பணம் தேவை;வெறி பிடித்து ஆடும் அதிகாரம் தேவை.இத்யாதி.இந்த கும்பலால் என்றைக்குமே சமுதாயத்திற்க்கு நெகடிவ் கான்ட்ரிபியூஷன் தான்.மொத்தத்தில் குப்பை;தூக்கி எறிய வேண்டிய ஒன்று.

  பாலா

 1. வரவனை,

  சுடர், கருத்துக்களால் பிரகாசிக்கிறது...

  வாழ்த்துக்கள்!!!

 1. //எரியும் சுடரை எனக்களித்த தோழன்.சுகுணாவுக்கு நன்றி. அவரின் கேள்விகளுக்கு நன்றிகள் பல....//

  செந்தில் அய்யா,

  ஆமா பெரிய ஒலிம்பிக் டார்ச் கொடுத்துட்டாராம்,இவரும் தூக்கிகிட்டு ஓடுவாராம்,இன்னொருத்தர் கிட்ட குடுப்பாராம்.இந்த மாதிரி அசட்டு பிசட்டுன்னு பப்ளிக் ப்ளேசுல பண்ணறத்துக்கு வெக்கமா இல்லயா உங்களுக்கெல்லாம்.சொன்டி கும்பல்.

  பாலா

 1. வரவ்ஸ்,

  உங்களை பா.க.ச பதிவராகவே பார்த்த என்னை முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தோடு பார்க்க வைத்திருக்கிறது இந்த சுடர்.

  இது வரை உங்கள் பதிவுகளை அவ்வளவாய் படித்ததில்லை!

  இப்போது மலைப்பாய் இருக்கிறது.

 1. //கொண்டாட்டம் என்பதும் ஒரு அதிகார எதிர்ப்பு செயற்பாடுதான்..//

  கவனிக்கப்பட வேண்டிய வார்த்தைகள்..

 1. //வலைப்பதிவுகள் என்பதை ஒரு கட்டுடைப்பு நிகழ்வாகவே நான் உள்வாங்கியிருக்கிறேன். முன்பெல்லாம் எது நல்ல ஒரு கவிதை,கட்டுரை என்பதை ஒரு பத்திரிக்கையின் ஆசிரியரோ அல்லது இணையதளத்தின் ஆசிரியரோ அவரது வாசிப்பு தன்மைக்கு ஏற்ப முடிவு செய்வார். இதை புரட்டி போட்ட ஒரு மாற்றமாக வலைப்பதிவுகளை கொள்ளலாம். வலுவுள்ளது பிழைத்துக்கொள்ளும் எனும் மொழி போல் நல்ல படைப்பை தேடிப்படிக்கவும் எனது போன்ற மொக்கை பதிவுகளை தவிர்த்து பயனுள்ள வேலைகள் செய்யவும் இது வழியமைத்து கொடுக்கிறது. இன்னும் அதிகமாய் சொல்ல வேண்டுமானால் "ஆசிரியன் செத்துவிட்டான்" என்பதில் நீங்கள் ஒப்புமை கொண்டவர் என்கிற காரணத்தால் சொல்கிறேன் , இவ்வலைப்பதிவுகளால் உண்மையில் "ஆசிரியன் செத்து விட்டார்" ஆம் எடிட்டர் என்கிற ஒரு அதிகாரமிக்க தொழில் மறைந்து விட்டதாகவே கொள்கிறேன். மையமற்ற பெருவெளியாய் வலையுலகம் ஆகிவிட்டதாகவே கொள்ளலாம்//

  மறுமொழிகிறேன் செந்தில்.

 1. நல்ல கேள்விகளும் பதில்களும் வரவனையான். நன்றி!

 1. வரவனை..இது வேறயா? ஹி ஹி ஹி
  இருந்தாலும் சூப்பர்...நானும் என் ப்ளொக்காக உங்களை ஒரு பேட்டி எடுக்கனும்...நேரம், காலம் சொன்னால் நல்லது :)

 1. //இவ்வலைப்பதிவுகளால் உண்மையில் "ஆசிரியன் செத்து விட்டார்" ஆம் எடிட்டர் என்கிற ஒரு அதிகாரமிக்க தொழில் மறைந்து விட்டதாகவே கொள்கிறேன். மையமற்ற பெருவெளியாய் வலையுலகம் ஆகிவிட்டதாகவே கொள்ளலாம்
  //

  தரமான பதில்கள் . வாழ்த்துக்கள்

 1. /சட்டென வெளிச்சம் பரவும்
  சாலையில் உன்னைக் கண்டால்
  மொட்டென விரியும் இதழ்கள்
  உன் குரல் வாசல் கேட்டால்
  விட்டிடு நினைவை என்றால்
  விடுவேன் என்னுயிரை என்று
  பித்தென உளறும் மனதை
  பெயர்த்து நான் எங்கே போட…? /


  aahaa!

 1. 4:03 PM  
  Anonymous said...

  aahaa ன்னா... நல்லா இருக்கா இல்லையா... எனக்குக் கவிதை எழுதத் தெரியாதுன்னு சொல்லிட்டு இப்ப ஆஹான்னா...

 1. 6:09 PM  
  தம்பிதங்ககம்பி said...

  அய்யா,

  இந்த பாலான்ற பேர்ல ஏழுதற பாப்பார பன்னாடையை ஏன்யா ஊக்கப்படுத்தறீங்க?

  கண்ட இடத்தில் கக்கா போறானே?

  நல்ல பதிவு செந்தில்.

 1. வரவனையான் அய்யா,

  பொட்டீக்கடை அய்யா அவர்களிடம் சுடரை கொடுத்திருக்கிறீர்களா? இங்கே பேண்டது பத்தாது என்று அங்கேயும் போய் பேண்டு வைக்கிறேன்.

  பாலா

 1. சுடராய் வந்தது
  கொள்ளிக்கட்டையாய் எரிகிறது
  "அணைப்பார்" யார்மில்லை
  தானே அழியப்போகிறது

  அழிச்சிக்கிட்டவன்: பொட்"டீ"கடை