Sunday, February 11, 2007

@ 5:07 PM எழுதியவர்: வரவனையான்


மெல்ல துவங்கிவிட்டது காதலர்தினக்கொண்டாட்டங்கள்.வழமைபோல் பழமைவாத எண்ணங்கள் கொண்ட சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிராய் தங்கள் அராஜகபோக்கை வழமைபோல் தொடருவதற்கு ஆயுத்தமாகிவிட்டது தெரிகிறது, இம்முறை அவர்களின் கன்சர்வேடிவ் அணியில் பாமக'வும் இணைந்திருப்பது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

வழமைபோலவே இந்த வருடமும் காதலி இல்லாமல் கடக்கப்போகிறேன். இதை நினைக்கையில் ஒரு மெல்லிய கழிவிரக்கம் நெஞ்சில் தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லைதான். சற்றேறக்குறைய 28 அகவையில் நின்றுகொண்டிருக்கிறேன். இதுவரை கடந்த வாழ்வையும் கடந்து வந்த பெண்களையும் யோசித்துபார்த்தால் ...ஹீம் என்கிற ஆற்றாவதனின் பெருமூச்சாய் நொடிப்பொழுதில் கரைகிறது. இது ஒரு தனிவாழ்வியல் துயரமா இல்லை சமூகத்தின் குற்றமா என்று புரியவில்லை. கிட்டதட்ட மனிதவாழ்வின் ஆகச்சரிபாதியை பெண் நட்பே இல்லாமல் கடந்து விட்ட ஒருவனை எப்படி பார்ப்பீர்களோ அது நான் தான். 25 வயதாகும் போதே வீட்டில் அழைத்துக்கேட்டார்கள் " யாரையாச்சும் காதலிக்கிறியாடா" என்னாதுன்னேன் இல்லடா எவ கூடவாவது சுத்துறீயான்னு கேட்டேன்?ன்னாங்க. அவ்வளவு நம்பிக்கை என் பேர்ல. அட நீங்க வேற சும்மான்னு இருங்க, உள்ள பொழப்புல சுத்தறது ஒன்னுதான் குறைச்சலாக்கும் என்றபடி மறுபடி ஊர்சுத்த கெளம்பிருவேன்.

இரண்டாண்டுகளில் சுத்தவில்லை என்று பயந்தார்கள், அப்படியே திருமண பேச்சை துவக்கினார்கள் இன்றுவரை ஜாவாப் சொல்லிவருகிறேன் :) . எனக்கோ முன்பின் அறிமுகமில்லாத, பழக்கமில்லாத பெண்ணை ஒரே பார்வையில் கட்டிக்கொள்கிறேன் என்று ஒப்புக்கொண்டு நிகழும் திருமணத்தில் துவக்கத்தில் இருந்தே நம்பிக்கையில்லை. இன்னும் கூடுதலாக பெண் நட்பு என்பதை கண்டறியா மனிதனாக இருப்பதும் இல்லை அதன் குறித்தான புரிதல் இல்லாமல் இருப்பதும் காரணியாக இருக்கலாம். " செட்டில் ஆகித்தான் கல்யாணம் செய்யனும்னு நெனைக்காதிங்க வரவணை , முடிச்சிடுங்க" என்றான் ரஜினி சரவணன் இரண்டு நாட்களுக்கு முன். 6 வருடம் காதலித்த பெண்ணை 4 மாதம் முன்பு மணந்து கொண்டவன் அவன்.

காதல் எங்கு துவங்கிறது என்பது விளங்கமுடியாத ஒரு நவீன ஓவியம் போல் குழப்பதிலேயே ஆழ்த்துகிறது. ஒரு ஆணாய் அதற்கு தகுதியேதும் இருக்கிறதா, பெருளாதாரபின்புலங்கள் நிர்னனையம் செய்கிறதா, அழகியல் வியப்புகள் உருவாக்குகிறதா ஏதும் புரியவில்லை எனக்கு. கண்ணும் கருத்துமே பெண்ணைக்கவர்ந்திடும் என்று எங்கோ ஒலிக்கும் பாடல் வரிகள் லேசாக என்னை கிண்டல் செய்வது போல் உணர்வேன் . என் வீட்டில் வளரும் பூனகளுக்கும், நாய்க்கும் வைத்தியம் பார்ப்பதும், 'ரெண்டு நாளா வீரா நொண்டுறான் பினாடி வீட்டு ஜோனி கூட சண்டை போட்டானா ? இந்த வாரம் ராபிஸ் போடனும் ' என்கிற அக்கறை மிகுந்த விசாரிப்புகளும், 'கனேஷ் அண்ணே மாமியாவுக்கு சுகர் இப்போ எப்படி இருக்கு பெரியம்மா?' என்று மனித உறவுகளின் நலம் கேட்டலுமா கண்ணும் கருத்தும், அப்படியானால் ஏன் அந்த பாடலை கிண்டலாய் உணர வேண்டும். " நீ எனக்கான ஆண்" என்று ஒரு பெண் சொல்கிறாளோ அப்போது நிறைவாகிறது ஒரு ஆணின் வாழ்க்கை. காதலிக்க தேவைப்படுகிற தைரியமும் மன உறுதியும் காதலை சொல்லுவதற்கு தேவை.என் 10 வருட இளமையை தின்றது அது போன்றதொரு தைரியமும் மன உறுதியும் இல்லாத காரணத்தால் இருக்கலாம். வரப்போகும் முழு ஆண்டு விடுமுறை நாட்களை ஏக்கத்துடன் எதிர் நோக்கி காத்திருக்கும் மாணவனைப்போல் நாட்களை காதலிக்காக காத்திருக்கிறேன். ஹோவர்டு ஃபாஸ்ட் எழுதிய ஸ்பார்ட்டகஸ் புதினத்தில் ஸ்பார்ட்டகஸ் ஒரு வாசகம் சொல்லுவான் புதிய அடிமையைப்பார்த்து, அந்த புதிய அடிமை சொல்லுவான் எனக்கு நிலம் இருந்தது , ஆடுமாடுகள் இருந்தது, இனிமையான வாழ்வு இருந்தது எல்லாம் இருந்தும் இப்படி அடிமையாகிவிட்டேன் ' எல்லாம் இப்போது கனவாகிவிட்டது என்பான். அதற்கு ஸ்பார்ட்டகஸ் சொல்லுவான் " உனக்காவது நினைத்துப்பார்க்க இனிமையான ஒரு கடந்தகாலம் இருந்தது' நானோ முன்றாவது தலைமுறை அடிமை. என் கனவுகள் எல்லாம் மரணம் குறித்து மட்டும்தான், ஆம் அது ஒன்றே கனவெனக்கு' என்பான். அதுபோல் தன் காதற்தோல்வி உட்செரித்து வாழ்த்து சொல்ல விழையும் தோழர்காள் எனக்கு நினைத்து பார்த்து ஏங்கிபோக கூட ஒரு பழைய காதல் இல்லையே...

என்றாலும் வழமைபோல் எனக்கு பிடித்த ஈழத்துகவிஞனொருவனின் வரிகள் சொல்லி வாழ்த்துகிறேன்.

"உன்னிடம் வருகையில்
நான் ஒரு சிறுவன்
கண் விடுக்காத
பூனைக்குட்டி போல்
உலகம் அறியா
ஒரு பாலகனாய்
உன்னிடம் வந்தேன்"

வாழ்க காதல், வாழ்க காதலர்

கொண்டாடுங்கள் காதலர் தினத்தை

19 மறுமொழிகள்:

 1. சோதனை வயிற்றெரிச்சல் சோதனை வயிற்றெரிச்சல் சோதனை வயிற்றெரிச்சல் சோதனை வயிற்றெரிச்சல்

 1. வரவனை,

  உங்கள் பதிவை வாசித்ததும், எஸ் ரா வின் எழுத்து ஒன்று நினைவுக்கு வந்தது.

  வாலிபத்தில் காதலை அனுபவிக்காதவர்கள் கூட இருக்கலாம்.. ஆனால் காதல் கவிதைகளை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது! காதல் ஏக்கங்களையே கவிதையாக வடிப்பவர்கள்தான் இங்கு பாதி பேர்! நீங்கள் கட்டுரை வடித்துவிட்டீர்கள்!

  உங்கள் வயிற்றெரிச்சல் [;-)] விரைவில் குணமடைய என் காதல்நாள் வாழ்த்துக்கள்!!!

 1. உங்களுக்கு 28 வயது தானா! அருமையாக எழுதுகிறீர்கள்!

 1. வரவனை,

  அடுத்த ஆண்டு காதலர் நாளில் இந்த கட்டுரையை உங்கள் காதலியிடமோ, மனைவியிடமோ படித்துக் காட்டுவீர்கள் என்று சாபம் இடுகிறேன்.

  :))))

 1. இதுவரை வராத காதல் வர வரவனையானுக்கு காதல் நாள் வாழ்த்துக்கள்........

 1. வரவனை :))
  காதலுக்கு வயது ஒரு தடையே அல்ல !!
  உங்களுக்கான்
  காதலும் காதலியும் இன்னும் காத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்!
  தயக்கங்களை உடைத்துக்கொண்டு சீறிப்பாய என் வாழ்த்துக்கள் !!:))))

 1. இதை நாங்க நம்பனுமா? ஹஹ ஹி ஹி...(நானும் கண்ணன் போல சாப்ம் போடுறேன்) :)
  வாழ்த்துக்கள்

 1. This comment has been removed by the author.
 1. தூயா, ஒரு மனிசன் நொந்து போய் வயிற்றெறிச்சல பதிவு எழுதினா இப்படியா கலாய்க்கிறது. விட்டா பாகாச மாதிரி வ.கா.ச ஆரம்பித்துவிடுவிங்க போல

 1. ஓடிப்போகலாமா

 1. 1:37 PM  
  பிச்சுப் போடுவன் said...

  அடப்பாவிகளா? இப்படியா அலைவது? ச்சா

 1. 2:00 PM  
  பொட்ட புள்ளைங்க பாவம் விட்டுடுங்க said...

  அப்டியே காதலு வந்துட்டாலும்...
  க்கும்...
  போங்கடா பொச கெட்ட பயலுவளா...

  வ.க.சா
  ரெண்டாம் கேட்
  டூட்டிகோரின்

 1. நாங்களெல்லாம் காதலித்த கதை எழுதி கண்ணீர் வடிக்க வைத்தால் நீங்கள் காதலிக்கவில்லையே என்று எழுதிக் கண்ணீர் வடிக்கவைக்கிறீர்கள். உண்மையில் பாவம் செய்தவர் நீங்கள். எப்படியாவது அடுத்த ஆண்டிற்குள் யாரையாவது காதலித்து திருமணத்திற்கு எங்களையெல்லாம் அழைக்க வேண்டும் என்று நானும் என் பங்குக்கு சாப.... மன்னிக்கவும் வாழ்த்துகிறேன். (கல்யாணம் என்றால் வாழ்த்துவது என்பதெல்லாம் இப்போது இல்லைப் போலிருக்கிறது. அவ்வளவு கசந்துவிட்டதா என்ன...)

 1. ஆரம்பிப்பதா...அது ஆரம்பித்து பல நாட்கள்..

 1. டோண்ட் வொரி Mr. வரவணையான், என்னையெல்லாம் ஒருவள் 30 வயதில்தான் காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கொண்டாள்.

 1. வரவனையான் அய்யா,

  உங்களுக்கு காதலி இல்லையா அய்யா? வெளியே மிதக்கும் அய்யாவிடம் கேட்டால் பின்நவீனத்துவ ஐடியா சொல்லுவாரே அய்யா.

 1. 5:52 PM  
  சௌமிகா said...

  // At 6:22 PM , தூயா பதிவது

  ஆரம்பிப்பதா...அது ஆரம்பித்து பல நாட்கள்..//

  அக்கா,
  எது என்று தெளிவாக சொல்லவும்...என்னை மாதிரி வாண்டுகளுக்கு ஒன்னுமே புரிய மாட்டேங்குது! :(

  - சௌமிகா

 1. செந்தில் அய்யா,

  மேலே என் பெயரில் இருக்கும் பின்னூட்டம் எவனோ போலி பாப்பார பண்டாரத்துடையது. தயவுசெய்து அதை நீக்கவும்.

 1. இதே விடயத்தை நானும் எழுதலாம் (என் கதையும் இதுதான் சற்றேறக்குறைய). என்ன, இவ்வளவு சுவையாக வந்திருக்காது.
  அது சரி, வயிற்றெரிச்சலில் கூட சுவை கேட்கிறது பாருங்களேன்! :)