Saturday, February 24, 2007

@ 2:23 PM எழுதியவர்: வரவனையான்


எங்கோ ஒர் கரையின் மடியில் -
நமக்கான
நாற்காலிகள் காத்திருக்கின்றன

எதோ ஒர் கடலின் அலைகள் -
நம்
வருகை எதிர் நோக்கி நிலம் தொடுகிறது

தனக்கான வேக விளிம்பைத்தாண்டி-
நம்
சந்திப்பின் காலம் நோக்கி - விரைகின்றன
கடிகார முட்கள்

இனி எப்போதுமே நாம் சந்திக்க -
போவதில்லையெனும் உண்மையறியாமல்



* மீமீ ( மீண்டும் மீள்கவிதை ;) )

5 மறுமொழிகள்:

  1. ஹிஹிஹிஹி வேறென்ன பின்னூட்ட கயமைதான்

  1. ம்ம்ம் நீர் திருந்தவே மாட்டீரா? ;)
    இது கொஞ்சம் புரிகின்றது..ஆனால் இதே கவிதையை 1 வருடத்திற்கு முன்னர் படித்த போது புரியவில்லை..

  1. நண்பரே, இதில் பங்கேற்க வாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்:

    அன்புடன் கவிதைப் போட்டி
    ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்

    பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  1. பின்னூட்ட மொள்ளமாரித்தனம்

  1. நினைவூட்டல்: அன்புடன் கவிதைப் போட்டி - கடைசி நாள் ஏப்ரல் 14 இந்திய நேரப்படி இரவு 12 மணி!