Friday, February 23, 2007

@ 12:42 PM எழுதியவர்: வரவனையான்


எழுதப்போகும் கவிதையும்
எழுதிய கவிதையும் - கசந்து
தொலைக்கிறது
பிரபஞ்சத்தில் நான் விரும்பிய யாவும்
கசந்து போன ஒரு பொழுதில்
மெல்ல வந்து சொன்னாய் உன் காதலை
திரும்பிப்போகும் உன் தலை மறையும் முன்
காற்றள்ளி செல்கிறது
நீ கொடுத்த மலரை - பின்
மீண்டும் மலர்களற்ற
கல்லறையில் தனியனாய்
உறங்கலானேன்

11 மறுமொழிகள்:

  1. காற்று அடிச்சு செல்லும் வரை என்ன செய்திட்டு இருக்கிக வரவனை :P
    என்னமோ உங்க கவிதை எதுவுமெ எனக்கு இந்த ஜென்மத்தில் புரியும் என்று நினைக்கல...ஆனால் படிக்க நல்லா தான் இருக்கு..

  1. மலரள்ளிச்சென்ற காற்று மற்றுமொரு மலர் கொணராமலா போய்விடும்? மலரத்தான் மலர் ! :)))

  1. //கல்லறையில் தனியனாய்
    உறங்கலானேன் //

    வரவனையான் அய்யா,

    அப்போ நீங்க ஆவியா அய்யா? வெளியே மிதக்கும் அய்யாவும் சாத்தானா அய்யா?

    பாலா

  1. உங்கள் கவிதையெல்லாம் வாசித்திருக்கிறேன். நல்லாயிருக்கு!

  1. என்ன தூயா! துக்கத்திலை இருக்கிறவரைப் போய் நக்கல் அடிக்கிறீங்கள்...? பாவம்! காதலற்றுக் கழிகிறது நாட்கள் என்று அங்கு அவர் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

  1. /என்னமோ உங்க கவிதை எதுவுமெ எனக்கு இந்த ஜென்மத்தில் புரியும் என்று நினைக்கல.../
    ?

    /ஆனால் படிக்க நல்லா தான் இருக்கு..

    ??

  1. //அப்போ நீங்க ஆவியா அய்யா//

    பாலா அய்யா,

    தப்பா கேக்கறீங்க.அவர் ஆவி அல்ல.ஆந்தை.இப்பகூட ராத்திரி சுடுகாட்டுக்கு போனா "சினேகா,சினேகா"ன்னு அலறும் ஒரு ஆந்தையா இவரைப் பார்க்கலாம்.சரியான கூமுட்டையா இருக்கீங்களே.

    பாலா

  1. வரவனையான் அய்யா,

    திருந்தவே மாட்டீர்களா அய்யா. என்னை கூப்பிட்டு வைத்து கும்ம ஒரு அளவு இல்லையா அய்யா

    இதனால் பிற பதிவுகளில் பின்னூட்டமே போட இயலவில்லை அய்யா

    பரிதாபத்துடன்


    பாலா

  1. தூயா சொன்னது:உங்க கவிதை எதுவுமே எனக்கு.....புரியும் என்று
    நினைக்கலை...

    விடுங்க கவலையை....அவருக்கே
    புரியுமா ன்ற சந்ந்தேகத்திலே வாட்டர்
    பாக்கெட்டோட கன்ஸல்டேஷன்ல
    இருக்காரு......

  1. தமிழ்நதி,
    நக்கல் இல்லை...எரிச்சல்...எப்ப பார்த்தாலும் இப்படியே கல்லறை, காற்று என்று... ச்சா ஒரு சந்தோச கவிதை எழுதினா என்ன குறைஞ்சா போய்டுவாரு...என்ன சொல்றிங்க...

    மிதக்கும்வெளி, நீங்கள் மிதந்து மிதந்து நிறைய மிஸ் பண்ணிட்டிங்க போல ;) இதெல்லாம் சின்ன பிள்ளைங்க விசயம்..வெளிகளுக்கு புரியாது :P
    (உண்மையா சொல்றேன், வாசித்து பார்க்கும் போது நல்லாதான் இருக்கு (i mean the SOUND of it) ஆனால் புரியலை)

  1. //விடுங்க கவலையை....அவருக்கே
    புரியுமா ன்ற சந்ந்தேகத்திலே வாட்டர்
    பாக்கெட்டோட கன்ஸல்டேஷன்ல
    இருக்காரு......
    //

    அப்பிடிங்கிறிங்க?! அது தானே பார்த்தேன்..என்னடா எனக்கு எதுவுமே புரியமாட்டேங்குது என்று...