Saturday, February 17, 2007

@ 4:01 PM எழுதியவர்: வரவனையான்


விழியைத்திற - திறந்தேன்
என்னைத்தெரிகிறதா - இல்லை
நான் தான் காலதேவன் - சரி
உன்னை விசாரிக்க போகிறேன் - ஒத்துழைக்கிறேன்
உன் 5 வயதில் என்ன செய்தாய்- படிக்க துவங்கியிருந்தேன்
10ல் ? படித்துக்கொண்டிருந்தேன்
12 வயதில்? அப்பவும் படித்துக்கொண்டிருந்தேன் ஆனால்
உலகம் வண்ணமயமானதாய் தெரியத்துவங்கியது
சரி ! இந்த கண்ணாடி முன் வந்து நில்.
இதில் என்ன தெரிகிறது
நான் - என்ன செய்கிறாய்?
குடித்துக்கொண்டிருக்கிறேன் - வயதென்ன அப்போது
17 - சரி இப்போது பார்.
நான் தான், நினைவிருக்கிறது இது என் நண்பனின் திருமண விருந்து,வய்து 22
உன் நண்பன் வயதென்ன ? ம்ம்ம்ம்...... 31 என்று நினைவு
அவன் புருவம் நெரித்தான் '
நண்பன் தான் மது வாங்கி குடுப்பவன் நண்பன் தானே
ஒ! இப்போது பார்?
இதுவும் நான் தான் என் அறை
கையில் என்ன? "நன்மை தீமைகளூக்கு அப்பால்" நீட்ஷே புத்தகம்
எரிச்சல் மேலிட "நான் மற்றோன்றைக்கேட்டேன்" என்றான்
மதுக்குவளை - இது இல்லாமல் படித்தால் நீட்ஷே கோபம் கொள்வார் என்றேன்
சரி ! நாளைக்காலை உனக்கு தீர்ப்பு - ஆகட்டும்
இப்போ ! ரெண்டு பெப்சி கிளாஸ் கிடைக்குமா? என்றேன்
மறுநாள் அதே கண்ணாடி - கடவுள் கேட்டார்
என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? - இருவரும் சொன்னோம்
"குடித்துக்கொண்டிருக்கிறோம்"
பிறிதொரு நாள்
ஒரு மதுக்கூடத்தில் " ஒரு அவியல் முட்டை 5 ரூபாய் என்பது கொள்ளை" என
சண்டையிட்டு கொண்டிருந்தவனின் தோளை பிடித்து
உன் பெயரென்ன? என்றேன்
காலதேவன் என்றான்
மதுவாங்க பணமேது? என்றேன்
காலம் விற்று குடித்தலைகிறேன் என்றான்
இப்போது உன் முறை கேள் என்றான்.
என்னிடம் கேள்விகள் இல்லை - ஆனால்
இந்த மிடறும் அடுத்த மிடறும் உன் மகிழ்ச்சிக்காக
சியர்ஸ் என்றேன்...

( முன்பு எழுதியது - மீள்கவிதை ;) )

16 மறுமொழிகள்:

 1. 4:22 PM  
  Anonymous said...

  பின்னவீனத்துவம் ????

  செந்தழல் ரவி

 1. ஓய் வரவனை, எதுக்கு எங்க செந்தி கவிதைய எடுத்திங்க...வழக்கு போட போறேன்...

 1. உண்மை தான் நண்பா
  இது குடிக்கும் காலம்
  காலனே காலத்தை குடிக்க
  காலம் நம்மை குடிக்க
  நாமும் ஏதாவது குடிக்க
  குடித்துக் கொண்டிருக்கிறோம்

 1. //ஓய் வரவனை, எதுக்கு எங்க செந்தி கவிதைய எடுத்திங்க...வழக்கு போட போறேன்...//

  அவுஸ்திரேலிய கோர்ட்டுல வழக்கு போடுங்க தூயா...அப்படியாவது அந்தாளு இங்க வந்து சேரட்டும்

  :-))

 1. 5:19 PM  
  Anonymous said...

  வரவனை,

  மதிக்கா சொல்லுச்சின்னு கும்மி பதிவு பொம்மி பதிவுன்னு வேர்டுப்ரஸ்ல போட்டீங்க சரக்குல கோக் கலந்து கொடுத்துடுவேன்.

  ஒழுங்கா இவுத்தாண்டயே ஆட்டைய போடவும்.

 1. எப்பா! உங்க பின்நவீனத்துவ அக்கப்போரு தாங்கமுடியலைடா சாமீ

 1. மெஸ்மரிசம் செய்யும்போது டாக்டர்கள் கேட்கும் கேள்விகள் போல இருந்தது. பை தி பை பொட்டிக்கடையின் கவிதை (?) நல்லா இருந்தது.

 1. எக்ஸ்யூஸ்மி....ஓல்டுகாஸ்க் சரக்குக்கு ஏத்த மிக்ஸிங் எது...?

 1. ஆரப்பாளையம் எஸ்.ஐ கிட்ட சிக்கியும் திருந்தலையா?

 1. 8:01 PM  
  Anonymous said...

  ஓல்டுகாஸ்க் சரக்குக்கு ஏத்த மிக்ஸிங் எது...?//

  வாட்டர் பாக்கெட்டு கார்னர்ல ஓட்டைய போட்டு பிதுக்கி அடிச்சீங்கனா செம மிக்ஸிங் தானுங்கோ

 1. 8:03 PM  
  Anonymous said...

  //மெஸ்மரிசம் செய்யும்போது டாக்டர்கள் கேட்கும் கேள்விகள் போல இருந்தது.//

  அந்தாளூ மட்டும் கரீக்டா பிரிஞ்சிக்கிறான்யா

 1. //அவுஸ்திரேலிய கோர்ட்டுல வழக்கு போடுங்க தூயா...அப்படியாவது அந்தாளு இங்க வந்து சேரட்டும்
  //

  ம்ம் அப்பிடிங்கிறீங்களா? ஹிம்ம்ம்ம் எதுக்கும் கொஞ்சம் யோசிக்கனும்..இந்தாளு பயங்கர லொள்ளுபிடிச்ச ஆளாச்சே

 1. Hello!
  All good.
  Thank you

 1. 12:13 PM  
  வலைப்பூ சுனாமி லக்கியார் பாசறை said...

  பாலா அய்யாவின் பின்னூட்டங்கள் இல்லாத இந்த பதிவை எங்கள் சுனாமியார் பாசறை புறக்கணிக்கிறது.

 1. செந்தில் அய்யா,

  சங்கம் வைத்து என்னை ரீவிட் அடிக்கிறீங்க அய்யா
  அதான் பின்னுட்ட வாந்தி எடுக்கவில்லை அய்யா.
  குழந்தை லக்கிட்ட சொல்லுங்க அய்யா

  பாலா

 1. //வலைப்பூ சுனாமி லக்கியார் பாசறை பதிவது
  பாலா அய்யாவின் பின்னூட்டங்கள் இல்லாத இந்த பதிவை எங்கள் சுனாமியார் பாசறை புறக்கணிக்கிறது//

  வலைப்பூ சுனாமி லக்கியார் பாசறை அய்யா,

  புறக்கணிக்காதீங்கய்யா ப்ளீஸ்.இதோ வந்து விட்டேன்.

  செந்தில் அய்யா,

  கள் வாங்க வசதியில்லை என்றால் ஆந்தை மாதிரி சுடுகாட்டு மரத்துல குந்திகினு இருந்தா போணி ஆகாதய்யா.
  எப்ப குடிக்கணும்னு தோணுதோ ,ஜன்னலை திறந்து வைங்க; வெளியே மிதந்துகிட்டு ஒரு அய்யா வருவாரு.அவரும் கள் ஊத்தி கொடுப்பாரு.ஆனா கள்ளைக் குடித்து உங்களுக்கு முத்தம் கொடுப்பாரு.ஒரு பக்கம் தனிமையா ஆந்தையா,சினேகா சினேகான்னு புலம்பிக்கிட்டு உட்கார்ந்திருப்பது,இன்னோரு பக்கம் வெளியே மிதக்கும் அய்யாவின் முத்தம்+கள்;எது ரொம்ப கேவலம்னு முடிவு பண்ண வேண்டியது நீங்கள்தான்.
  இந்த ஐடியா உங்களுக்குப் பிடிக்கலைன்னா சொல்லுங்க.இன்னும் ஒரு ஐடியா கூட எங்கிட்ட இருக்கு.

  பாலா