Wednesday, February 07, 2007

@ 4:41 PM எழுதியவர்: வரவனையான்


இதற்கு முந்திய முறை போல் இல்லாமல் இம்முறை சென்னையில் போய் இறங்கியவுடன் அறை எடுத்து விட்டு குளித்த பின் முதல் வேலையாக ஞாயிறு மதியம் வைகைக்கு முன்பதிவு செய்துவிட்டேன். நல்லவேளை குளிரூட்டபட்ட இருக்கைகள் மட்டும் நிரம்பி இருந்தது.வழக்கமாய் பதிவு செய்யவேண்டிய இருக்கைகள் நிரம்பியும் குளிரூட்டபட்ட இருக்கைகள் காலியாகவும் இருக்கும் நானும் "அதர் ஆப்சன்"னை பயன் படுத்தி 160 ரூபாயில் ஊருக்கு போக வேண்டியவன் நொந்து கொண்டே 430 ரூபாயில் ஊருக்குப்போவேன்.இந்த தடவை எனக்கு ஒதுக்கபட்டு இருந்த ( என் இருக்கை அல்ல) இருக்கைக்கு அடியில் என் பயணப்பையை வைத்துவிட்டு வழியனுப்ப வரவழைக்கப்பட்டிருந்த உற்ற தோழன் சுகுணாவுடன் சைட் அடித்த படி நின்றிருந்தேன். என் இருக்கை அருகே ஒரு கிராமத்து தமிழன் தனது சுமைகளை இறக்கிவைத்துக்கொண்டிருந்தார் "அண்ணே என் பையின் மேல் சாப்பாடு இருக்கிறது உங்க பைய அது மேல வைச்சுடாதீங்க"என்றேன் சரி தம்பி என்றார். ரயில் புரப்பட்டது Feb 15 - 20 வாக்கில் மீண்டும் சென்னை வருவேன் என்று சுகுணா திவாகருக்கு பீதியை கிளப்பிவிட்டு வந்து எனக்கான இருக்கையில் அமர்ந்தேன். தாம்பரம் வந்ததுமொரு பெண்ணும் மூன்று குழந்தைகளும் ஏறி என் எதிரே வந்தமர்ந்தனர். ஆகா வாழ்வின் அதி அற்புத தருணங்களில் அதுவும் ஒன்று. என் அருகே அமர்ந்திருந்த அந்த கிராமத்து மனிதரின் மனைவியும் குழந்தைகளும் தான் அவர்கள். இதில் சிறப்பான விடயமென்னவென்றால் அந்த பெண் மத்திய ஆப்பிரிக்காவை சேர்ந்தவராம் சென்னைக்கு படிக்க வந்த இடத்தில் தன் கல்லூரிக்கு எதிரே உள்ள தேநீர்க்கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அந்த மனிதரை காதலித்து திருமணம் செய்துகொண்டாராம். அவர் அழகாய் தமிழ் பேசினார். அவர் தன் சுருள் கூந்தலை வகுப்பு எடுத்து வாரி மல்லிகை பூ வைத்திருந்தார். நெற்றியில் திலகம் வேறு. அவரை விட அந்த குழந்தைகள் அவ்வளவு அழகு சற்றேறக்குறைய 4 மணி நேரங்கள் அந்த குழந்தைகளோடு பேசியபடி வந்தேன். ஆப்பிரிக்க இன அடையாளங்களோடு வடமாவட்ட நாட்டுபுற வழக்கில் அவர்களின் உதட்டில் பிறந்த தமிழ் மேலும் அழகு பெற்று வெளிவந்தது. " கண்ணம்மாதான் தம்பி ஊருக்கு போய் வெவசாயம் பாக்கலாம்னு சொல்லுச்சு எனக்கு மெட்ராசை விட்டு வாரதுக்கு மனசில்ல" என்றார் அவரின் கணவர். கண்ணம்மா என்று பெயர் இவர் வைத்தாராம், அவரின் பெயர் "யே காபூ" . ஊருக்கு ஒரு முறை அழைத்து வந்த போது யே இங்க பாருடின்னு கிராமத்தில் சொன்ன போதெல்லாம் இவர் அங்கு போனாராம், அதான் தம்பி பெயர மாத்திட்டேன் 'யே" என்றால் அவங்க ஊரு பாசைல அழகிய கண்ணாம் அதான் கண்ணம்மானு மாத்தி வைச்சேன் அப்படி என்றார்

குழந்தைகள் ஒளிறும் கருப்பு நிறத்தில் அத்தனை அழகு. அவங்க ஊருக்கு போயிருக்கிங்களான்னு கேட்டேன். ம்ம் போயிருக்கேன் தம்பி, நம்மளமாதிரித்தான் நல்ல மனுசனுவ, என்ன மாட்டுக்கறி காவேக்காட திங்கிறனுவ என்றார். கண்ணம்மாவின் தமிழ்ச்சூழல் வாழ்க்கை பற்றிக்கேட்டேன். படித்த ஆங்கில இலக்கியம் தன் நாட்டில்தான் உதவும் என்றும் இங்கு ஒரு நல்ல குடும்ப தலைவியாக இருப்பது ரொம்ப பிடித்திருக்கிறது என்றார். தனக்கு தமிழ் மிக இயல்பாய்பேச வந்தது என்றும் தங்கள் இனகுழுவின் மொழியில் தமிழ்ச்சொற்களின் ஓசையில் ஒரே பொருளை குறிக்கும் சொற்கள் உண்டு என்றும் சொன்னார். அவர் சொன்ன சிலவிடயங்கள் ஆச்சரியளிமளித்தது. தமிழரிடையே உள்ள வழக்கமான பூப்புனித நீராடல் அல்லது மஞ்சள் நீராடல் தங்கள் நாட்டிலும் உண்டு என்றும் உலக்கை போட்டு படுக்க வைக்கும் வழக்கம் உண்டு என்றும் தெரிவித்தார். மடத்தனங்களுக்கு எல்லைகள் இருக்கிறதா என்னா? பெண்ணை கேவலப்படுத்தும் செயல் அது என்றேன். ஆமோதித்தார். உரலுக்கு உரல் என்றே பயன்படுத்துவார்களாம் அதும் போல் முறம் என்பதும் என்பதையும் இதே ஓசையில்தான் சொல்வார்களாம்.

ஆப்பிரிக்காவில் புலியில்லை என்பதும்,

"முறம் கொண்டு புலியடித்தாள்
புறநானுற்று தமிழச்சி- இன்று
புலியாகி வெடித்தாள் தமிழிழ தங்கச்சி "

என்கிற வரிகள் நினைவுக்கு வந்து போனது. விடை பெறும் போது அந்த குழந்தைகள் கைகாட்டி போனபோது நான் தொன்மங்களில் தொலைந்து போனேன் எங்கோ ஒரு நதிக்கரையில் கருப்பர்கள் ( அல்லது என் நிறத்தவர்கள்) கூட்டத்திலிருந்து குழந்தையாயிருக்கும் என்னை அழ அழ யாரோ தூக்கி வந்து இங்கு இறக்கிவிட்டதாய் விரிந்தது நினைவு . அவர் பாமக வேட்டி கட்டியிருந்தார் " அப்போ பெயர கண்டிப்பா மாத்தி வைப்பிங்க என்றேன். சிரித்தார், கண்ணம்மாவும் சிரித்த படிவிடை பெற்றார்.

சரி சென்னை சந்திப்பு மேட்டருக்கு வருகிறேன்

சந்திப்பு நடைபெற இருந்த பூங்காவிற்கு சுகுணா திவாகரோடு போலாம் என்று திட்டம். போனில் அவனை தி.நகர் ரத்னா கபேக்கு வரச்சொல்லிவிட்டு போனேன். ஆக்டிவா வண்டியில் ஒரு திரா'விட' ஆன்டியுடன் வந்திறங்கிய என்னை பார்த்து கொஞ்சம் ஜெர்க்கானவன் பின் சுதாரித்துக்கொண்டான். பின் காபி குடித்து ஆன்டீயை வழியனுப்பி வைத்துவிட்டு பூங்கா வழியாக வேறு ஒரு வேலையாக சுகுணா திவாகரின் "சொந்த" வண்டியில் போய்க்கொண்டிருந்தோம். அங்கே பார்த்தால் முத்து(தமிழினி) தன்னுடைய "சொந்த" பைக்கில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். ' ஹலோ மணி 3 தாங்க ஆகுது இதெல்லாம் ரொம்ப ஓவர் ' என்றார் சுகுணா திவாகர் உங்க ஆர்வக்கோளறுக்கு அலவேயில்லையா என்றேன் நான். ஏங்க நீங்கதாங்க 3 மணீக்கு வரச்சொன்னிங்கன்னார் என்னை பார்த்து. அடப்பாவி பொழுதுபோலைனா அவரை ஏண்டா இம்சை பண்ணுர என்றார் சுகுணா.


சரி வாங்க நம்ம அலுவலகம் போயிட்டு ஒரு சின்ன வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வந்திருலாம்னு சுகுணா திவாகர் அழைத்தார். சரின்னும் நானும் முத்தும் அவர் அலுவலகத்துக்கு போனோம். அங்க போன உடனே வேலை முடிஞ்சிடுச்சு. 'முத்து நானும் வரவனையானும் போய் இந்த சி.டியை நடிகை அஸ்வினி கணவரிடம் கொடுத்துட்டு வந்திறோம் . நீங்க பூங்கா போங்கன்னு' சொல்லி கீழே இறங்குனோம். ஒரு பிஎம்டபுள்யூ வந்து நின்னுச்சு, இவருதான் நாக்ரவி சினேகாவோட முன்னாள் காதலர்னு சுகுணா சொல்ல அவர பார்த்தோனே எனக்கு சினேகாவ பார்க்கனும் என்கிற நெடு நாள் அவா மீண்டும் பூதகரமா கிளம்பிருச்சு. டேய் நண்பா சினேகா வீடு இங்கதானே இருக்கு போலாம்டா என்றேன். வழக்கம் போல் அல்வா கிண்டி எனக்கு கொடுத்துவிட்டு அண்ணாசாலை சாந்தி தியேட்டர் நோக்கி போனோம். வழியில் ஒரு ஆல்டோ காரில் முன்னிருக்கையில் சினேகா உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டேன். டேய் வண்டியை நிப்பாட்டு "தலைவி" போறாங்க ந்னு ஒரே சவுண்டு நானு. அவனு சினிமா பத்திரிக்கை ஆசிரியர் மூளை உடனே வேலை செய்த்தது. நாக்ரவி இருக்கும் தெருவில் சினேகா போறாங்கள் என்றால் ஏதோ மேட்டர் இருக்கு என்றபடி வண்டியை திருப்பிஅந்த காரை பின் தொடர்ந்தோம் கார் நாக்ரவி காருக்கு சற்று முன்பாக நின்றது. இறங்கியது சினேகா இல்லை அது போல் சாயல்கொண்ட வேறு ஒரு பெண். "இவ விஜய் டிவீயில வேல பாக்குறா. எப்பவும் சினேகா நெனைப்பா இருந்தா இப்படித்தான் இந்த மாதிரி டப்பா பிகரு கூட சினேகா மாதிரி தெரியும்னு" சொன்னான். நொந்த படியே பூங்காவை நோக்கி கிளம்பினோம் . போகும் வழியில் நண்பா 'இப்படி ஒரு சந்திப்பு தேவையா நண்பா, பேசாம நேரா டாஸ்மாக்லையே கூட்டத்த வச்சுக்கலாம் என்று புலம்பியபடி வந்தார் சுகுணா. பூங்காவாசல் வரை வந்துவிட்டு நண்பா இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை லைட்டா ஆளுக்கு ஒரு கட்டிங் போட்டுட்டு உள்ள போயி உண்டு இல்லைனு ஆக்குவோம்னு என்னை கன்வீன்ஸ் செய்யும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது லக்கி,ரவி பாலா( ! ) கோஷ்டிகள் தம்மடிக்க வெளியில் வந்தது.

( இன்னும் கொஞ்ச நேரத்தில் தொடருவேன் )

20 மறுமொழிகள்:

 1. மகர நெடுங்குழைக்காதன், மகர நெடுங்குழைக்காதன் , மகர நெடுங்குழைக்காதன் ,மகர நெடுங்குழைக்காதன் ,மகர நெடுங்குழைக்காதன் ,மகர நெடுங்குழைக்காதன் ,மகர நெடுங்குழைக்காதன் ,மகர நெடுங்குழைக்காதன்

 1. மகர நெடுங்குழைக்காதன் அல்லது பின்னூட்ட கயமை அல்லது சவுண்டித்தனம்

 1. //( இன்னும் கொஞ்ச நேரத்தில் தொடருவேன் ) //

  ஒரு மணி நேரத்துக்கு ரெண்டு தம்மா?
  :))))


  சென்ஷி

 1. செந்தில் அய்யா,

  மீண்டும் ஒரு திகில் கதை(a joke) சீரியலோடு ஆஜராயிட்டீங்க.வாழ்த்துக்கள்.ம.தி.மு.கசீரியல் மாதிரி பாதியிலேயே நிப்பாட்டிடாதீங்கய்யா.அப்பறம் உங்க எடுபிடி பாக்டீரியா கும்பலயையும் வர சொல்லுங்கய்யா.நம்ம பேர்லையே எழுத சொல்லுங்க.களை கட்டட்டும்.

  பாலா

 1. செந்தில் அய்யா

  மேலே உள்ள பின்னுட்டம் எனது பின்னூட்டம் அல்ல
  உங்கள் பாக்டீரியா கும்பலின் வேலை என்று நினைகிறேன்


  பாலா

 1. செந்தில் அய்யா,

  மேலே உள்ள இரண்டு பின்னூட்டங்களும் என்னுடைய பின்னூட்டங்கள் இல்லை. இதுதான் ஒரிஜினல் பின்னூட்டம். உங்கள் திராவிட ராஸ்கல்கள் வேலை இது என்று நினைக்கிறேன்.

  இந்த பின்னூட்டத்தை கழிந்தது ஒரிஜினல் பாலா தான் என்பதற்கு அடையாளமாக டோண்டு ராகவன் அவர்களின் கக்கூஸிலும் இதே பின்னூட்டத்தை கழிந்து வைப்பேன்.

  பாலா

 1. செந்தில் அய்யா,

  மேலே உள்ள மூன்று பின்னூட்டங்களுமே என்னுடைய பின்னூட்டங்கள் இல்லை. உங்கள் பாக்டிரியாக்களின் வேலை போலிருக்கிறது. என் பின்னூட்டமாக இருந்தால் செம கப்பு அடிக்கும் என்று உங்களுக்கு தெரியாதா?

  பாலா

 1. செந்தில் அய்யா,

  என்னத்தை சொல்ல? மேலே உள்ள 4 பின்னூட்டங்களுமே எவனோ ஒரு போலியனுடையது. நான் எங்கே தான் போயி முட்டிக்கிறதோ தெரியலை. இனிமேல் உங்க வலைப்பூவுக்கே வரமாட்டேன். வெளியே மிதக்கும் அய்யாவோட வலைப்பூவுக்கு தாவிட வேண்டியது தான்.

  பாலா

 1. செந்தில் அய்யா,

  மகரநெடுங்குழைக்காதன் அய்யா தான் உங்களை காப்பாத்தணும். எவனோ ஒரு மொள்ளமாறி அய்யா மேலே உள்ள 5 பின்னூட்டங்களையும் என் பெயரில் போலியாக போட்டு உங்களை ஏமாற்றி விட்டிருக்கிறான்.

  என்னோட தரம் என்னன்னு உங்களுக்கு தெரியுமில்லே?

  பாலா

 1. Excuse me, May I come in?

 1. செந்தில் அய்யா,

  இது உங்களுக்கே நியாயமா அய்யா?

  பாலா

 1. சூப்பர்! பதிவும் பின்னூட்டங்களும்! ;))

 1. 4:49 PM  
  Anonymous said...

  பாலா அய்யா சார்பாக நான் போட்ட பின்னூட்டங்கள் எங்கே?

  அமுக
  அவுஸ்திரலேசிய தலைக் கிளை
  மைக்ரோனேசிய தீவுகள்
  நியூ காலிடோனியா
  பிஜி தீவுகள் சமீபம்

 1. //Excuse me, May I come in?//

  செந்தில் அய்யா,
  குழந்தை அதிர்ஷ்ட முழி லக்கி,இங்லிஷ் மழலை இன்னும் சூப்பரா பேசுதே?சகல கலா குழந்தை.

  பாலா

 1. ஹா ஹா ஹா ஹா ஹா

  பின்னூட்டங்களை படித்து வவுத்த நோவுதுபா

 1. செந்தில் அய்யா,

  ஃபோட்டோவுல,மூக்குல வெள்ளை பெயிண்ட் அடிச்சவரு நீங்க, சரி.இன்னும் ஒருத்தர் யாரு? வெளியே மிதக்கும் அய்யாவா?

  பாலா

 1. இரண்டு நாளைக்கு முன்பு டோண்டு மாட்டியதற்கு பார்ப்பனர்களே காரணம்!

  ஆமென்!

 1. செந்தில் அய்யா,

  ஃபோட்டோவுல,மூக்குல வெள்ளை பெயிண்ட் அடிச்சவரு நான், சரி.இன்னும் ஒருத்தர் யாரு? டோண்டு அய்யாவா?

  பாலா

 1. //ஆமென்! //

  கொசுபுடுங்கி அய்யா,

  நீங்கள் எதையாவது புடுங்குங்கள் அய்யா. எங்கள் பூணூல்களையும், புடுக்கைகளையும் விட்டு விடுங்கள்.

  பாலா

 1. டோண்டு பீரும் சிக்கனும் அடிச்சுட்டு சிகரெட்டும் ஊதியதைக் கேட்டதில் இருந்து எனக்கே என்னவோ போல் இருக்கிறது!

  ச்சே... இதெல்லாம் ஒரு ஜென்மம்!