Thursday, February 15, 2007

@ 5:08 PM எழுதியவர்: வரவனையான்

விசாகா பாரில் நானும் பிறேமும் மதுவின் "நன்மை தீமைகளுக்கு அப்பால்" என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து கொண்டிருந்த ஒரு அற்புதமான வேலையில் வந்தது ஒரு அழைப்பு. " வணக்கம் பாலபாரதி பேசுகிறேன் " " பேசுங்க" இது நான்.

இப்போதான் ஆழியூரான் சொன்னார் உங்கள் நண்பராமே அவர் - பாலபாரதி

ஆமா நண்பரே சொல்லுங்கள் - நான்

உங்க கவிதையெல்லாம் படிச்சேன் , ரொம்ப நல்லாயிருக்கு - பாலபாரதி

அப்படியா ரொம்ப நன்றிங்க ( அடப்பாவி இதுக்கு முன்னே கவிதையெல்லாம் படிச்சதில்லையா நீ ) - நான்

அப்புறம் ஒரு விடயம் , நான் தூத்துக்குடி வருகிறேன் . உங்களை பார்க்க முடியுமா? - பாலபாரதி

தராளமா வாங்க , எப்போ வர்ரீங்க - நான்

அடுத்த மாசம் வரலாம்னு எண்ணம் , ஒரு நாவல் எழுதிகிட்டு இருக்கேன் அது சம்பந்தமாத்தான் வருகிறேன் - பாலபாரதி

ஓ சரி, அப்புறம் இந்த வரவனையானு ஒருத்தன் எழுதிகிட்டு இருக்கானே தெரியுமா - நான்

ஆமா , படிச்சிருக்கேன் . அவருக்கென்னா ?- பாலபாரதி

அது நாந்தான் - நான்

.............. - பாலபாரதி

ஹலோ - நான்

ஹலோ - நான்

அடப்பாவி மாப்ளே நீதானா அது - பாலபாரதி

இப்படி துவங்கியது அன்பு மாம்ஸ் பாலபாரதியின் நட்பு. போனிலும் மட்டுமல்ல நேரிலும் எவ்வளவு கலாய்த்தாலும் தாங்கிக்கொள்ளும் இதயத்துக்கு சொந்தமானவர். அதன் பின் எப்போது என்னை சந்தித்தாலும் மடியில் நெருப்பை கட்டிக்கொண்டுதான் இருக்கிறார். நேற்று அவரை பார்க்க போயிருந்தேன் . அப்போதும் சங்கபணிகளை விடாது செய்தவாறே இருந்தேன்.

அப்புறம் மாம்ஸ் அடுத்து என்ன எழுத முடிவு என்றேன் ?

மராத்திய பாலியல் கதைகள் எழுத எண்ணம் என்றார்.

ஓ அப்போ நீங்கதான் போலியாருக்கு கதை எழுதி தருகிற ஆசாமியா ? -இது நான்

இன்னேரம் அந்த முயற்சியை கைவிட்டு இருப்பார் என்று நினைக்கிறேன்.

அப்புறம் பேசிக்கொண்டிருக்கும் போது புளியமரம் தங்கவேல் வந்து சேர்ந்தார். அவருடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட போனோம். நான் தயிர்சாதம் வாங்கிசாப்பிட்டேன். உடனே என்னை கலாய்க்கும் நோக்கில் அதை படம் பிடித்தார்.

Photobucket - Video and Image Hosting

மாப்ளேய் பார்ப்பனிய எதிர்ப்பு அது இதுன்னு பேசிட்டு தயிர் சாதமா சாப்பிடுற இரு நாளைக்கு இத ஒரு பதிவாய் போடப்போறேன் என்றார்.

இல்ல மாமா நேற்று ஊரில் பிரியாணி நிறைய சாப்பிட்டேன் அதான் என்றேன்.

உடனே "பாவி நீயாவது ஊருக்கு போயி பிரியாணியெல்லாம் சாப்பிடுற' நான் ஊருக்கு போயி மாமாங்கம் ஆகப்போகுது" என்று வயித்து எரிச்சல் பட்டார்

அப்போ சொன்னேன் "மாம்ஸு, ஊரில சின்ன புள்ளங்க கைய பிடிச்சு இழுத்த கல்யாணம் பண்ணி வைப்பாங்க. கிழவி கைய பிடிச்சு இழுத்தா இப்படித்தான்" ஊருபக்கமே தலை காட்ட முடியாதுன்னு நான் சொல்ல கொலைவெறி பார்வை "மாம்ஸ்" வீச கிளம்பினேன்.


வலைப்பதிவுலகத்தில் ஒரு மென்மையான இதயம் கொண்ட அன்பு மாம்ஸ் பாலபாரதிக்கு நட்சத்திர வார வாழ்த்துக்கள்

25 மறுமொழிகள்:

 1. பின்னூட்ட பேமானித்தனம் பின்னூட்ட பேமானித்தனம் பின்னூட்ட பேமானித்தனம்

  ;) ;) ;)

 1. சரியான நேரத்தில் அசாதாரண பாகச பதிவு அளித்த வரவனையான் - செந்திலுக்கு நன்றி....


  பாகச டெல்லி கிளை செயலாளர்
  சென்ஷி

 1. //ஓ அப்போ நீங்கதான் போலியாருக்கு கதை எழுதி தருகிற ஆசாமியா ? -இது நான்

  இன்னேரம் அந்த முயற்சியை கைவிட்டு இருப்பார் என்று நினைக்கிறேன்.//

  இத சொ.செ.சூ-ன்னும் சொல்வாங்க

  :)))))))))))))))))


  சென்ஷி

 1. அடப்பாவி.. அடங்க மாட்டியா நீயு!

 1. ஒரே நேரத்துல எத்தனை இடத்துல ? நான் சம்பளம் வாங்குறதே பின்னூட்டம் போடறதுக்குன்றமாதிரி ஆகிப்போச்சு..

  சே..சே...

  இன்னைக்கு கலாய்க்க ஆரம்பிச்சா வெள்ளிக்கிழமை வரைக்கும் நடத்தலாம்...

 1. வரவனை, எப்ப பார்த்தாலும் பார் தானா? சகிக்கல...கொடுமை...இருங்க கருப்பிட்ட பிடிச்சு குடுக்கிறேன்..

 1. மே ஐ கம் இன்?

 1. //அப்போ சொன்னேன் "மாம்ஸு, ஊரில சின்ன புள்ளங்க கைய பிடிச்சு இழுத்த கல்யாணம் பண்ணி வைப்பாங்க. கிழவி கைய பிடிச்சு இழுத்தா இப்படித்தான்" ஊருபக்கமே தலை காட்ட முடியாதுன்னு நான் சொல்ல கொலைவெறி பார்வை "மாம்ஸ்" வீச கிளம்பினேன்.//

  போட்டுத் தாக்கு :-)

  அமீரக கிளைத் தொண்டன்
  முத்துகுமரன்

 1. பாஸ், இப்படிப் பண்ணீட்டீங்களே, இது நியாயமா?

 1. 6:45 PM  
  ஜார்ஜ் புஷ் said...

  என் தலயையே நீ கலாய்க்கிறியா?இப்பவே என்னோட CIA Agent பாலாக்கிட்ட சொல்லி தயிர் சாதத்துல Bomp வைக்க சொல்ரேன்

 1. //மாம்ஸு, ஊரில சின்ன புள்ளங்க கைய பிடிச்சு இழுத்த கல்யாணம் பண்ணி வைப்பாங்க. கிழவி கைய பிடிச்சு இழுத்தா இப்படித்தான்//

  என்னங்க பண்றது... தன் வயசுக்கு ஏத்த பொண்ணா பாத்திருக்காரு நம்ம தல :)))

 1. பா. கா . முற்போக்கு . ச அவரை வாழ்த்துகிறது

 1. எப்படிங்க இப்படியெல்லாம்...???
  :-D
  யெஸ்.பா. பாவம்.

  -விழிப்பு!

 1. பின்னூட்ட காவாளித்தனம்-1

 1. பின்னூட்ட காவாளித்தனம்-2

 1. பின்னூட்ட காவாளித்தனம்-3

 1. பின்னூட்ட காவாளித்தனம்-4

 1. பின்னூட்ட காவாளித்தனம்-5

 1. பின்னூட்ட காவாளித்தனம்-6

 1. பின்னூட்ட காவாளித்தனம்-7

 1. பின்னூட்ட காவாளித்தனம்-8

 1. பின்னூட்ட காவாளித்தனம்-9

 1. பின்னூட்ட காவாளித்தனம்-10

 1. /அடப்பாவி இதுக்கு முன்னே கவிதையெல்லாம் படிச்சதில்லையா நீ ) -/
  இப்பவும் படிச்சதில்லை. நட்சத்திரவாரத்தில் போடும் மொக்கைக்கவிதைகளைப் படித்தீர்கள்தானே?

  /ஒரு நாவல் எழுதிகிட்டு இருக்கேன்/

  அய்யோ!

  /மராத்திய பாலியல் கதைகள் எழுத எண்ணம் என்றார்.

  /
  தமிழ்நாட்டுப்பாலியல் கதைகள் எல்லாம் எழுதிட்டாராமா? ஆமா பாலியலுக்கும் பாலபாரதிக்கும் என்ன சம்பந்தம்? அநியாயமாக பாலபாரதியை கோஸ்ட்ரைட்டர் என்று சொல்லி போலியாரைத் தற்கொலைக்குத் தூண்டவேண்டாம்.

 1. வோவ் சுகுணா, உனக்கே நாயமா ? மாம்ஸ் பாவம்யா விட்டுரு.