Tuesday, February 27, 2007

@ 5:06 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்மிகுந்த ஆவலாய் எதிர்பாத்துகிட்டு இருந்ததை வாங்கிட்டு வந்து கொண்டிருப்பதாக மியாமி ஏர்போர்ட்டிலிருந்து மயில் போன் செய்தவுடன் மனசு பரபரப்பாகி அதை எப்படி கொண்டாடுவது என யோசிப்பதிலேயே பொழப்பு பூராம் கெட்டு போச்சு. ஒரு ரெண்டுநாளு கழிச்சு மும்பை வந்திட்டேன் பங்காளின்னு திரும்பவும் போனு." ஏலே இவேன் ஒருத்தேன் ரயிலு கணக்க அங்க வந்துட்டேன், இங்க வந்துட்டேனுகிட்டு" வாரவேன் ஊருக்கு வந்துட்டு கூப்பிடவேண்டியதுதானே. அத விட்டுபோட்டு சும்ம இசுமைய கூட்றாய்ங்க " அப்படின்னு சொல்லி போன வச்சுட்டேன்.

அடுத்த நாளு மதுர வந்துட்டு கூப்பிட்டான் போயி நலம் விசாரிச்சுட்டு அப்படியே நான் சொல்லிவிட்டு அவன் வாங்கிட்டு வந்த மேட்டரை வாங்கிட்டு கெளம்பும்போது டேய் இந்த இதயும் எடுத்துட்டு போன்னு சொன்னான், என்னானு பாத்தா ஜானி வொக்கர் ரெட் லெபிள். இதல்லாம் இங்க விக்கிற சுப்பர் ஸ்டார் ரேஞ்சுப்பா . வேற என்னா வச்சுருக்கேன்னு கேட்டேன்.

திருதிருன்னு முழிச்சான் சரி இனி விடக்கூடாதுன்னு நோண்டி துருவுன, அப்புறம் சொல்றான் பக்கார்டி சூப்பிரீயர்னு ஒன்னு மட்டும் இருக்கு மத்ததெல்லாம் வேற பிரண்ட்ஸ்க்கு கொடுக்கனும்டான்னு சொல்லிட்டு அதையும் எடுத்து கொடுமையேன்னு கொடுத்துத்தொலைச்சான். வாங்கிட்டு ஊருக்கு வந்து பாத்தா அது "மெய்ட் இன் போர்ட் டோ ரிகா'ன்னு போட்டு இருந்துச்சு அத பார்க்கவும் நமக்கு மேலும் கிளுகிளுப்பா ஆகிபோச்சு ஆகாதா பின்ன. அதுதான் நம்ம J.LO ஊராச்சே . அந்த made in என்கிற வார்த்தை என் கண்ணுக்கு maid in manhattan ந்னு தான் தெரிஞ்சுச்சுனா பாத்துகோங்களேன்.


அன்னைக்கு சாயுங்காலமே அந்த பக்கார்டி சுப்பீரியருக்கு போத்தலில் இருந்து விடுதலைப்பெருவிழா நடத்தி முடிச்சு வாயெல்லாம் வாழைப்பழ மணம் கமழ வீட்டு போயி மாத்து வாங்கிட்டு படுத்தேன். ( .... எம்பூட்டு ஒசத்தி சரக்கடிச்சாலும் கண்டு பிடிச்சுப்புடுறாய்ங்கப்பா )

மறுநாள் மதியம் "வெட்டும்புலி" தீப்பட்டி படம் வச்சுருகிற பிரண்ட தேடிப்போயி கடன் கேப்போமே அது மாதிரி போண்டா கணேசன் , தோழர் கற்பனையரசு ரெண்டு பேரும் கணேசனின் டூபாக்குர் டிவிஎஸ் 50 ல வந்தாய்ங்க. வந்த உடனே எங்க வீட்ல ரெய்டு அவனுங்களுக்கு அதும் எப்படி " என் கூட சேர வேண்டாம்னு " அப்பப்ப எங்க வீட்ல இப்படித்தான் திகில கெளப்புவாய்ங்க. டயலாக்க கேளங்க உங்களுக்கே புரியும். " ஏண்டா கனேசா உனக்கென்ன வயசு,அரசு உனக்கும் அவனுக்கும் 15 வயசி வித்தியாசம், ஏண்டா அவன் பின்னாடி அலையிறிங்க, அவவேன் கூட சேர்ந்து எவனும் உருப்பிட்டதா சரித்திரமே கெடயாது" இம்பூட்டு பேச்சும் வாங்கியும் மழையில நிக்கிற எருமை கணக்க என் ரூமையே பார்த்துகிட்டு இருந்தாய்ங்க. அப்பதான் குளிச்சிட்டு வெளியே வந்தேன். " சமஸ்தானம் தூங்கி எந்திரிச்சு வர நேரத்த பாரு, இதல்லாம் வெளங்குமா" எங்க வீட்டின் தினமும் வரும் வசனமாகியதால் சாப்பிட உக்காந்தேன் .


டேய் டக்கீலா வச்சுருக்கியமே, எடுத்துட்டு வாடா போலாம்னு ஆரப்பிச்சான் கம்யூனிஸ்ட் கனேசன் ( எ) போண்டா. சாப்பிட்டு வீட்டருகே தம்மடிக்கும் போது.கூட தோழர். கற்பனையரசும் ஊம் கொட்டினார்.

"யோவ் நான் என்ன ரஷ்யன் ஓட்கா வா வச்சுருக்கேன், காம்ரேட் ரெண்டு பெரும் இப்படி அலையிறிங்கன்னு" கலாய்தேன்.

இல்லடா டக்கீலா இன்னும் அடிச்சதே இல்லப்பா அதான் கேட்டேன்'னான் கற்பனை.

நாங்க மட்டும் என்ன டெய்லி ரெண்டு "ஹாட் ஷாட் " அடிச்சுட்டுதான் வெளியேவே கிளப்புறேனாக்கும். நானே கொடைக்கானலில் அந்த பிரெசில்காரியோட அடிச்சது. அதுக்கபுறம் போன வருசம் மயிலை பிளைட் ஏத்தும்போது சொல்லிவிட்டு அது இப்பதான் வந்துருக்கு i am going to drink lonely என்றேன்.இந்த வாக்கியம் முடிக்கும் போது தோழர் கற்பனையரசுவின் கண்களில் ஒரு வெறி வந்து மறைந்தது. சரக்கு தரமாட்டேனு சொன்னதுக்கு அவரு கோபப்படலை, அந்த "பிரெசில்காரி" காரிங்கிற வார்த்தை அவர டென்சனாக்கியது . ( தூத்துக்குடி சிவாஜி ரசிகர் மேட்டர் மாதிரி பிரேசில்காரியும் மேட்டரும் ஒரு நல்ல மூடில்தான் எழுதனும் விரைவில் )

காரணம் அவரு பிரெசிலின் சகல வெளிப்பாடுகளுக்கும் ரசிகர், பிரேசில் புட்பால்,ரொனால்டொ,ரிவால்டொ,ரொமாரியோ என அவரின் கதாநாயகர்கள் மாறியபடியே இருப்பார்கள். அந்த கர்லி பிரெசிலியன் பொண்ணுகள் தான் அவரின் ஆதர்ச நாயகிகளே. இதுமில்லாம அப்பப்ப சம்பா,ஸல்சான்னு ஆடியோ சிடி வாங்கி வந்து இயக்கத்திக்கு (அவரின் மொழியில் - ஸ்தாபனம்) தெரியாமல் கேட்பார். என்கிட்ட அடிக்கடி அவரு மனம் நொந்து போய் சொல்லும் வார்த்தை. வீ மிஸ் காம்ரெட், லத்தின் அமெரிக்காவில் பிறக்காமல் போய்விட்டோம் என்று .

அங்க பிறந்தாலும் இப்ப இருக்கிற மாதிரி ஒரு வீணாப்போன இயக்கத்தில தான் நீங்க இருப்பீங்க தோழர்னு கிண்டலடிப்பேன் சரி மேட்டருக்கு வருவோம்

அழுது அடம் புடிச்சி டக்கீலாவை எடுத்துட்டு வர வச்சுட்டானுங்க. எங்கடா போறது குடிக்கன்னு கேட்டேன். அது நாங்க பாத்துகிறோம் அத எப்படி குடிக்கிறது அத சொல்லு,அதுவுமில்லாம இந்த டக்கீலாக்கு மட்டும் அப்படி என்ன தனி சிறப்பு அதையும் சொல்லுனான் கணேசன்.

அதாவது கணேசா, டக்கிலாங்கிறது மெக்ஸிக்கோவில் மட்டும் கிடைக்கும் சரக்கு எப்படி நம்ம வெள்ளோடு சாராயம் ( 150 ஆண்டுகளாக சாராயச்சாவே நடந்ததில்லை) வேற எங்கையும் கிடைக்காதோ அது மாதிரித்தான் அதுவும் அந்த நாட்டு அரசே உற்பத்தி செஞ்சுட்டு இருக்குது. ரெண்டு,முணு தனியார் கம்பெனிங்க மட்டுமே தனியாக உற்பத்தி செய்யுது.

"நீல அகேவ்" என்கிற கத்தாழைக்கிழங்கு வகையில் உற்பத்தி செய்யப்படும் சுத்தமான மெக்சிக்கோ நாட்டு சரக்கு இது. நாலு டேஸ்ட்தான் இதுல இருக்கு . பிளான்கா, கோல்ட், ரெஸ்பாடோ , ஆனெஜோ அப்படின்னு பேரு.இது இல்லாம 5 வதா ஒன்னு இருக்கு அது "ரிசேர்வ" அது 8 வருசம் ஊரல் போட்டு வாரது. கொஞ்சம் காஸ்ட்லி.


குடிக்கும் போது நவ்வாப்பழம் உப்பு போடாம சாப்பிட்டா ஒரு மாதிரி துவர்க்குமே அது போல இதுவும் துவர்க்கும். அதுனாலதான் ராவா டக்கீலா அடிச்சா கையில உப்ப வச்சுகிட்டு நக்குவானுங்க, அதுக்கு பேரு தான் "ஹாட் ஷாட்" . சொல்லி முடிக்கிறேன் போண்டா வீடு வந்துருச்சு. ஏண்டா நம்ம இங்கையா குடிக்கபோறோம்னேன். ஆமா இதுதான் செலவுமில்லா அப்படியே பிளாட் ஆனாலும் கவலையில்ல என்றார்கள் .

கணேசன் வீடு என்று சொன்னது தவறு அது ஒரு வணிகவளாகம். நகரின் இதய.... ம்கூம் அதையும் தாண்டி வென்டிரிக்கள் என்றுதான் சொல்லவேண்டும். அப்படி ஒரு சொத்து இருப்பதால்தான் அவனை மனிதனாக மதித்தார்கள்.அதன் பின்புறம் கிழே இரண்டு அறைகள் மேலே இரு அறை அதுதான் அவன் வீடு, கீழே கணேசனின் தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள் . தாத்தாவுக்கு 96, பாட்டிக்கு 84. அவர்களுக்கு யார் வருகிறார் போகிறார் என்றேல்லாம் தெரியாது. ஆனால் கணேசனின் வண்டி எழுப்பும் வினோத சத்தம் மட்டும் நன்கு கேட்க்கும். அவன் வண்டி ஓடத்துவங்கினால் தப்பு சத்தம் கேட்க்கும்.

மேலே போயி உக்காந்தோம், ஏண்டா வரவனை இந்த காக்டெய்ல்'னு சொல்லுறாய்ங்களே அது நீ செய்வியாடான்னு கேட்டார் தோழர் கற்பனையரசு. ஓ நிறைய படிச்சிருக்கேன் , குடிச்சும் இருக்கேன் ஆனா இந்த பிராண்ட்ல போட்டதில்ல. ஒரு டைப் இருக்கு இன்னைக்கு போடலாம்.


ஆனா அப்படி குடிச்சா கணேசனுகே இந்த புல் பத்தாவது அதை நம்ம ஸ்டைலில் மாத்திபோடுவோம். ஒகே.

சரி முதலில் போய் திராட்சையும்,ஆரஞ்சும் வாங்கிட்டு வா. அப்படியே கொறிக்க ஏதாவது வாங்கிட்டு வாடா, என்னாலைலாம் உன்ன மாதிரி கட்டிங்க ராவா அடிச்சிட்டு செவுத்த நக்கிட்டு போக முடியாதுன்னு சொல்லி அனுப்பினேன்.

போயி ஒரு 1 மணி நேரம் கழிச்சு வந்தான் சொல்லிவிட்ட மாதிரியே எல்லாம் வாங்கி வந்தவன். கொஞ்சம் டல்லா இருந்தான் என்னாடனு கேட்டேன்.


"தாத்தா செத்து போயிட்டாருடா"ன்னான்

உடனே பக்கதுல இருந்த தோழர் கற்பனைஅரசு முஷ்டி மடக்கி செவ்வணக்கம் வச்சாரு,

யோவ் நீ ஒருத்தேன் நேரங்கெட்ட நேரத்துல,அவங்க தாத்த காங்கிரசு காரருயா'ன்னு எரிச்சலா சொல்லிட்டு " கணேசா நீ பாத்தியா"ன்னு கேட்டேன்.

"பாத்தேண்டா அவரே சொன்னாருடா'ன்னான்.என்னாது அவரே சொன்னாரா என்னடா சொல்லுற, வெளியே போயி தனியா சரக்க ஏதும் போட்டு வந்துட்டியான்னு டென்சன் ஆனேன்.

இல்லடா இன்னும் நாலு நாள்ல நான் போய் சேர்ந்துடுவேன்னு சொன்னாருடா அன்னைகேன்னான்.

சரி ஆகவேண்டியத பார்ப்போம், தோழர் நீங்க போய் கட்சி ஆபிஸுல எழவு சொல்லிட்டு வாங்கன்னு கற்பனையரசுவை கிளப்பிவிட்டேன். அவருக்கு திடீருன்னு அவர "எழவு சொல்லி"யாக்குனத்துல கொஞ்சம் மனவருத்தம் அடைஞ்சமாதிரி தெரிஞ்சது. தோழர் ஒன்னும் பிரச்சினையில்லைல நீங்க போய் சொல்லுறதுலன்னு கேட்டேன், அதுக்கு அவரு "ச்சா எனக்கென்னங்க பிரச்சினை நீங்க போனாத்தான் எங்க ரெண்டு பேருக்குமே பிரச்சினை" ( என்னுடன் சேரக்கூடாதுன்னு அவய்ங்க ஆபிசில் சொல்லிவச்சுருக்கானுங்க)ன்னு சொல்லிட்டே கிளம்பி போனவரு டக்குன்னு திரும்பி வந்து "கணேசன் தோழர் உங்க தம்பிகளுக்கு சொல்லிட்டிங்களா"ன்னு கேட்டாரு. கணேசன் எதோ அவரு இவன பாத்து சுப்பிரமணிய சாமி கட்சியில சேரலாமான்னு கேட்ட மாதிரி திகிலாகி பார்த்தான். நான் உள்ள புகுந்து 'என்ன இருந்தாலும் கணேசா அவய்ங்களுக்கு சொல்லாம விட்டா நல்லாயிருக்காதுன்னு' சொன்னேன். அரை மனசா சரின்னு சொன்னவன். இருடா சொந்தகாரங்களுக்கு சொல்லிட்டு வந்திடுறேன் என்றபடி கீழே இறங்க போனவனின் ஓரக்கண் ட்க்கீலா பாட்டிலையும் கவனிக்க தவறவில்லை.

அவன் தம்பி இரண்டு பேரும் ரெண்டு மாதிரி கிறுக்கனுங்க, மூத்தவன் கஞ்சா இழுவை பார்ட்டி( அவன் பேரே ஏரியாக்குள்ள "சிவன் செல்வம்னு" மாறி போய்யிடுச்சு - மதுரையில டோப்பு, சிவன், சைலென்ஸ் என்கிற குறிச்சொற்கள் கஞ்சாவைக்குறிக்கும் )இன்னொருத்தேன் வேற மாதிரி மென்டலு, ஒரு பொம்பள புள்ளையை விட மாட்டான், வெரட்டி வெரட்டி "லவ் லெட்டரு கொடுத்து பொது மாத்து வாங்காம ஒரு மாசம் கூட கடந்ததில்லை. அவனுங்களை எகனை போட்டு பாத்தா கணேசன் எவ்வளவோ தேவலை, என்ன இவன் "புரட்சி வரும்"னு மட்டும்தான் நம்புவான். அதுக்கு கஞ்சாவே அடிச்சிட்டு போலாம்பேன். " u too an utopian assole " comrade, நான் அடிக்கடி சொல்லுற டயாலாக்கு கணேசன பார்த்து.


அப்புறம் போயி அவனுங்களை புடிச்சி "உங்க பெரிசு மட்டையாயிட்டாருடான்னு " சொல்லி கூட்டியாந்தேன்.வந்தவனுங்க ஏதோ வாழ்ற வயசுல்ல அவரு செத்து போனா மாதிரி அலாரம் வச்சு அழுதுகிட்டு இருந்தானுங்க. "ஏண்டா... வைகோ முரசொலி மாறன் செத்ததுக்கு அழத மாதிரி அழுது இருக்கிறனுவனுக்கு பூராம் திகில கெளப்புறீங்க" ந்னு சொல்லி சத்தம் போட்டு அந்த பக்கம் வெரட்டி விட்டு கணேசன கூப்பிட்டு கணேசா 5 மணீக்குத்தான் ஆம்புலன்ஸ் வருமாம் முனிசிபல் ஆபிசுக்கு பேசிட்டேன். சேர்மன் வருத்தபட்டாருன்னு சொல்லிட்டு ஒரு டர்க்கி துண்ட தோள்ல போட்டுகிட்டு எழவுக்கு வந்தவய்ங்களுக்கு கேன் டீ கொண்டுவர சொல்லிட்டு வர போயிட்டு வந்து பார்த்தா தெரு பூராம் போஸ்டர் ஒட்டிருக்கு. கணேசன் ஒரு டுபாக்கூர் ப்ரஸ் ஒன்னு வச்சுருந்தான் ஊருல இருக்கிற கேப்புமாறி மொள்ளமாறிக எல்லாம் அங்கதான் ருவா நோட்ட தவிர போலி ரேசன் கார்டுல இருந்து எல்லாமே அடிப்பானுங்க கணேசனுக்கு அது தெரியாது. இவந்தான் செவப்பு கலரா ரயில்வே டீடீஆர் கொடி ஆட்டினா கூட பின்னாடியே ஓடிருவானே. சரி அவனுங்க சங்கத்துல அடிச்சி ஒட்டிருந்துருப்பாய்ங்கன்னு நெனைச்சு போஸ்டர பார்த்தேன் கீழே " பாசமுள்ள பேரன் போண்டா கணேசன்"னு போட்டுருந்துச்சு. கணேசா போஸ்டர் நீதான் அடிச்சியான்னு கேட்டேன் "ஆமாண்டா வாழ்ந்து செத்தவரு இதுகூட செய்யலைனா எப்படி"னான். அப்புறம் கரகாட்டத்துக்கு சொல்லியாச்சு, சோலைஹால் லதா ஆடுது. சும்மா ஜேஜேன்னு பெருச தூக்கிட்டு போலாம்னான். அதுகு நானு " ஏலேய் லூசு லதா உங்க தாத்தா காலத்துல இருந்து ஆடுறா" பாக்குறன் வயித்துல புளியை கரைக்கலாம்னு நினைச்சிட்டியான்னு சொல்லிட்டே போஸ்டரை படிச்சேன். கணேசா போஸ்டர் வாசகம் நீதான் எழுதினியான்னு கேட்டேன். ஆமான்னான். சரி திரும்ப படின்னு சொன்னேன்

நினைத்தால் தானே மறப்பதற்கு


அப்படின்னு கொட்டை எழுத்தில் போட்டு துவங்குச்சு.

அவன் ரெண்டு முணுதடவை படிச்சும் அவனுக்கு ஏறலை. ஏலேய் கேண மறந்தால்தானே நினைப்பதற்குன்னுதானே போடுவாய்ங்க இப்படி போட்டுருக்க அடிச்சவன் தப்பாடன்னு கேட்டா "விடுவிடு எவனும் கவனிக்கலை , நான் எழுதிகொடுத்ததுதான் "ன்னான்.

பாடை கட்ட வேண்டாம்டா ஆம்புலன்ஸ் இருக்கு 5 நிமிசத்துல கொண்டு போயிறலாம் சொன்னா இல்ல தெரு முக்கு வரைக்கும் பாடையில கொண்டு போவோம் கட்டுன பாடையை என்ன செய்யுறதுன்னான். எனக்கும் சரியா பட்டுச்சு


அதுக்காக கெழவி சாகற வரையிலுமா பாடையை வச்சுருக்க முடியும்ன்னேன். டென்சனாகி உள்ளே போயி காரியம் எல்லாம் முடிச்சு வந்தான். ( இந்த விதயங்களில் கணேசன் ஒரு கருத்து முதல்வாதி ) பாடை தூக்கின ஆள்கள்ள நானும் ஒருத்தன் சரி தெரு முனை வரைக்கும் தானேன்னு தூக்கி நடக்க ஆரம்பிச்சோம் கணேசன் கொள்ளி சட்டியை கையில வச்சுகிட்டு போயிட்டுருந்தான் கொஞ்ச தூரம் நடந்தவன். "ம்ம் அப்படித்தான் இந்தா ம்ம் அஜக்கு குமுக்குன்னு" சவுண்ட கொடுக்க ஆரம்பிச்சான். என்னாடன்னு பார்த்தா கொள்ளி சட்டியை யார் கையிலையோ கொடுத்துட்டு கரகாட்டம் ஆடுறவளுக கூட குத்தாட்டம் போட்டுகிட்டு போயிட்டுருந்தான். நல்ல வேளை தெரு முக்கு வந்துச்சு. ஒரு வழியா அமுத்தி ஆம்புலன்ஸ்ல ஏத்தி சுடுகாட்டுக்கு கொண்டு போனோம். அங்க மின்மயானம் என்பதால் தாத்தா உடலை பர்னர் மேல வச்சுட்டு எவ்ளோ நேரங்க ஆகும்னு கேட்டா அவரு பெருசு உடம்ப பார்த்து மத்த பாடியில்லாம் 3- 4 மணி நேரம் ஆகும் இவருக்கு 45 நிமிசம் போதும்னாரு. அவங்க தாத்த பிதுக்குன பேஸ்ட் மாதிரி இருப்பாரு அதான் அப்படி.

வீட்டுக்கு வந்து அவனை விட்டுட்டு "சரி நான் மேல போயி சரக்க முடிச்ச்சிட்டு வந்துடுறேன்டான்னு சொன்னேன். அதுக்கு ஒரு புல் தானே கொண்டுவந்தோம் ஏது உனக்குன்னான். ஏன்டா அதான் ஒரு புல் டக்கீலா மேலதானே இருக்குன்னு சொன்னேன். அதுக்கு கோவிச்சுக்காதடா டான்ஸ் ஆடுன லதா கேட்டா அதான் நானும் அவளுமே அடிச்சிட்டோம்னான். வந்துச்சே கோவம் இப்போ வரைக்கும் பாக்கலை அவன

@ 11:46 AM Labels: எழுதியவர்: வரவனையான் 14 மறுமொழிகள்

இது ஒரு நல்ல முயற்சிதான், தூயாவிற்கு நன்றி. தருமி,லக்கி இருவருக்கும் வருத்தங்கள் ;)Tagged by : Thooya

Favorite Colors: White, Blue & Green shades
Favorite Food: I Like South Indian Food & Chinese
Favorite Month: April & July ( personal reasons )
Favorite Songs: Bryan Adams proposal songs :-*Tamil: Ilairaja songs & Birundhavanam ( Nithya sree album )

Movies: lots of movies more than 10 languages

Favorite Book:

English –Spartacus by Howard fast, the glimpses of golden childhood by osho
Tamil – 0 degree and the great Tamil Noval - புயலிலே ஒரு தோணி by pa. singaram

Favorite Sport: கபடி, பச்ச குதிரை ( :( க்கும்... வைகை ஆத்துல விளையாண்டது) கில்லி, கோலி, பம்பரம் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள். அவ்வப்போது கிரிக்கெட். கால்பந்து வெறியன் ( >-) என்கிற புனைப்பெயரும் உண்டு left outer player in football )
Favorite Season: மாரிக்காலம்தான், வங்காளவிரிகுடாவில் புயல் சின்னம் என்று செய்தி படித்தாலே குஜாலாகிடுற பார்ட்டி நான். பெய்யென பெய்யும் மழை வரம் மட்டுமே எனக்கும் எப்போதும் தேவை
Favorite Day Of the week: வெள்ளிக்கிழமைதான் (காரணம் தெரியவில்லையா அடுத்தநாள் சனி - வீகென்ட் மூட் துவங்கும் வெள்ளிமாலை எப்போதும் பிடிக்கும் <:-P )
Favorite Ice Cream Flavor: Chocolate & Kesar Pis ta
Favorite Time of Day: காலை 8.30 ( ச்சே இன்னேரம் மூனு பொம்பளை குளிச்சிருப்பாளுக , என்று பக்கத்து அறை வங்கி மேலாளர் ~x( புலம்பும் நேரம் அய்யா ஷவரில் "என்னை மறந்து குளியலில் சிரிப்பேன் " )8 CURRENTS


Current Mood: அமைதியான மனநிலை
Current Taste: :-s அலுவலக உதவியாளர் கொடுத்த பாடாவதி டீ ( ச்சே அந்த நாயரை ஏன் கேரளாவை விட்டு அனுப்பினாய்ங்ன்னு இப்பத்தான் தெரியுது )
Current Clothes: Formal ( Cool sky Blue shirt & dark blue trouser and shoes ;) new one )
Desktop: Baby pic ( it given by my Special Friend )
Current Toe nail Color: ...oops next
Current Time: 12.30pm
Current Surroundings: Sesu Anna Reading Osho Book
Current Thoughts:இன்னும் காணோமே நம்மாள... சொல்லாமா ஊருக்கு போனதால கோவமா இருப்பாளோ.... ஒரு போன் செய்யகூட உனக்கு நேரமில்லையாக்கும் அவ அப்படித்தான் கோவிப்பா :-ss6 FIRSTS


First Best Friend: Senthil ( he's in Colombo right now )
First Screen Name: senthil
First Pet: Veera


First Piercing: Forgotten
First Album: Blank
First Movie: அலைகள் ஓய்வதில்லை ( முன்று வயது - என்னே ஞாபக சக்தி )
6 LASTS


Last Cigarette: Wills Classic
Last Drink:

Alcoholic: Sikkim FireBall Brandy ( மச்சான்... அடுத்த நாளு கீய்ஞ்சுருச்சு ஃபயர் வேற பக்கம் வந்துருச்சு..... [-x )
Non-alcoholic: இளநீ அதிலும் பொள்ளாச்சிக்காய் ( மனசுக்குள் பொள்ளாச்சி எளனீரே பூஜா b-) )
Last Movie Seen: 83 தடவையாக நேற்று பேருந்தில் "பூவே உனக்காக" :-o
Last Phone Call: online அண்ணே ரெசுயூம் அனுப்பி வச்சுருக்கேன்ணே.... கொஞ்சம் பாருங்கன்ணே. ( ஒரு நண்பனின் தம்பி வேலைக்காய் தன் குறிப்புகள் அனுப்பி வேலை கேட்கிறான் )
Last Book Read:பேரழகிகளின் தேசம் - பிரெம்:ரமேஷ் (ஆனா இந்த பெயரை நான் ரொம்ப நாளாவே பயன் படுத்தி வருகிறேன். கேரளாவை குறிப்பிடுபோதேல்லாம் அவ்வாறே குறிப்பிடுவேன் :"> )
Have You Ever Broken the Law: ஒன்றா இரண்டா
Have You Ever Been Arrested: தனிப்பட்ட முறையில் இதுவரை இல்லை, அரசியற்காரணங்களுக்காக 20 முறைக்கு மேல்.
Have You Ever Been on TV:இல்லை
Have You Ever Lied:பொய்யற்ற வாழ்வு வெறும் கடல்நீர் ஆகவே அருவியாய் இருக்கிறேன் , உண்மையற்ற விடயங்களில்.

அது போல் நெருங்கிய நண்பரிடத்தில் ஒரு பொய்யும் சொன்னதில்லை. சமயத்தில் அதுதான் பிரச்சினையாகத்தெரிகிறது
Have You Ever Kissed Someone You Didn't Know: வேணாம்..... பிப்ரவரியில் அழுத அழுகையே போதும்னு நினைக்கிறேன்
( முத்தமிடுமளவிற்கு ஆள் இருந்தாள் இப்படி பொளொக் பக்கம் ஜல்லி அடிச்சிகிட்டு அலைவனா :((

5 THINGS


Thing You're Wearing: ஒரு வெள்ளி மோதிரம் ( சித்தப்பாவின் நினைவாக )
Thing You've Done Today:வழமையான வெறுமைகளால் சூழப்பட்ட நாள்

Thing You Can Hear Right Now: போக்குவரத்து சலசலப்புகள், மீன்காரியின் கூச்சல்.( மனதுக்குள் "காதலை யாரடி முதலில் சொல்வது நீயா இல்லை நானா" - பாடல் வரி )
Thing You Can't Live Without: காற்று ( நிச்சியம் அன்பின் மணம் அதில் இருக்கவேண்டும் )
Thing You Do When You're Bored: பொழுதுபோகலைனாலும் மனசு கவலையானலும் பைக் எடுத்து பீச் போகும் சாலையில் ஒரு சின்ன டிரைவ் - இருபக்கம் தெறிக்கும் கடல் நீர் நடுவே சாலை. மனம் இலகுவாகாமல் என்ன செய்யும்.
4 PLACES YOU'VE BEEN TODAY:

பிறேம் வீடு
அலுவலகம்
பார்வதி ஆப்பக்கடை ( சிம்ரன் அல்ல )
இறகுபந்து மைதானம்
அறை ( குப்பை கூடை - நண்பனின் விமர்சனம் )

3 PEOPLE YOU CAN TELL ANYTHING TO:

பிறேம், வாசு , வீனஸ்
2 CHOICES:

உன்னை நேசி , உலகை நேசி யார் மீதும் உன் மேலாண்மையை காட்டாதேTHING YOU WANT TO DO BEFORE YOU DIE:

வாழ்வது மட்டுமே இறப்பின் முன் செய்யவேண்டிய கடமை - அதும்போக சில பயணங்களும்

எனக்கென்னமோ இது கழுதை வாலில் கட்டும் சரவெடியை நினைவுக்கு கொண்டு வருகிறது .

பராவாயில்லை இதை மாம்ஸின் வாலில் ச்சா கையில் கட்டுகிறேன். அப்படியே நாமக்கல் சிபிக்கும் ஒரு கட்டு. எங்க ஜோரா எழுதுங்க பார்ப்போம்


@};- @};- @};- @};- @};- @};- @};- @};-

Saturday, February 24, 2007

@ 2:23 PM எழுதியவர்: வரவனையான் 5 மறுமொழிகள்


எங்கோ ஒர் கரையின் மடியில் -
நமக்கான
நாற்காலிகள் காத்திருக்கின்றன

எதோ ஒர் கடலின் அலைகள் -
நம்
வருகை எதிர் நோக்கி நிலம் தொடுகிறது

தனக்கான வேக விளிம்பைத்தாண்டி-
நம்
சந்திப்பின் காலம் நோக்கி - விரைகின்றன
கடிகார முட்கள்

இனி எப்போதுமே நாம் சந்திக்க -
போவதில்லையெனும் உண்மையறியாமல்* மீமீ ( மீண்டும் மீள்கவிதை ;) )

Friday, February 23, 2007

@ 12:42 PM எழுதியவர்: வரவனையான் 11 மறுமொழிகள்


எழுதப்போகும் கவிதையும்
எழுதிய கவிதையும் - கசந்து
தொலைக்கிறது
பிரபஞ்சத்தில் நான் விரும்பிய யாவும்
கசந்து போன ஒரு பொழுதில்
மெல்ல வந்து சொன்னாய் உன் காதலை
திரும்பிப்போகும் உன் தலை மறையும் முன்
காற்றள்ளி செல்கிறது
நீ கொடுத்த மலரை - பின்
மீண்டும் மலர்களற்ற
கல்லறையில் தனியனாய்
உறங்கலானேன்

Saturday, February 17, 2007

@ 4:01 PM எழுதியவர்: வரவனையான் 16 மறுமொழிகள்


விழியைத்திற - திறந்தேன்
என்னைத்தெரிகிறதா - இல்லை
நான் தான் காலதேவன் - சரி
உன்னை விசாரிக்க போகிறேன் - ஒத்துழைக்கிறேன்
உன் 5 வயதில் என்ன செய்தாய்- படிக்க துவங்கியிருந்தேன்
10ல் ? படித்துக்கொண்டிருந்தேன்
12 வயதில்? அப்பவும் படித்துக்கொண்டிருந்தேன் ஆனால்
உலகம் வண்ணமயமானதாய் தெரியத்துவங்கியது
சரி ! இந்த கண்ணாடி முன் வந்து நில்.
இதில் என்ன தெரிகிறது
நான் - என்ன செய்கிறாய்?
குடித்துக்கொண்டிருக்கிறேன் - வயதென்ன அப்போது
17 - சரி இப்போது பார்.
நான் தான், நினைவிருக்கிறது இது என் நண்பனின் திருமண விருந்து,வய்து 22
உன் நண்பன் வயதென்ன ? ம்ம்ம்ம்...... 31 என்று நினைவு
அவன் புருவம் நெரித்தான் '
நண்பன் தான் மது வாங்கி குடுப்பவன் நண்பன் தானே
ஒ! இப்போது பார்?
இதுவும் நான் தான் என் அறை
கையில் என்ன? "நன்மை தீமைகளூக்கு அப்பால்" நீட்ஷே புத்தகம்
எரிச்சல் மேலிட "நான் மற்றோன்றைக்கேட்டேன்" என்றான்
மதுக்குவளை - இது இல்லாமல் படித்தால் நீட்ஷே கோபம் கொள்வார் என்றேன்
சரி ! நாளைக்காலை உனக்கு தீர்ப்பு - ஆகட்டும்
இப்போ ! ரெண்டு பெப்சி கிளாஸ் கிடைக்குமா? என்றேன்
மறுநாள் அதே கண்ணாடி - கடவுள் கேட்டார்
என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? - இருவரும் சொன்னோம்
"குடித்துக்கொண்டிருக்கிறோம்"
பிறிதொரு நாள்
ஒரு மதுக்கூடத்தில் " ஒரு அவியல் முட்டை 5 ரூபாய் என்பது கொள்ளை" என
சண்டையிட்டு கொண்டிருந்தவனின் தோளை பிடித்து
உன் பெயரென்ன? என்றேன்
காலதேவன் என்றான்
மதுவாங்க பணமேது? என்றேன்
காலம் விற்று குடித்தலைகிறேன் என்றான்
இப்போது உன் முறை கேள் என்றான்.
என்னிடம் கேள்விகள் இல்லை - ஆனால்
இந்த மிடறும் அடுத்த மிடறும் உன் மகிழ்ச்சிக்காக
சியர்ஸ் என்றேன்...

( முன்பு எழுதியது - மீள்கவிதை ;) )

Thursday, February 15, 2007

@ 5:08 PM எழுதியவர்: வரவனையான் 25 மறுமொழிகள்

விசாகா பாரில் நானும் பிறேமும் மதுவின் "நன்மை தீமைகளுக்கு அப்பால்" என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து கொண்டிருந்த ஒரு அற்புதமான வேலையில் வந்தது ஒரு அழைப்பு. " வணக்கம் பாலபாரதி பேசுகிறேன் " " பேசுங்க" இது நான்.

இப்போதான் ஆழியூரான் சொன்னார் உங்கள் நண்பராமே அவர் - பாலபாரதி

ஆமா நண்பரே சொல்லுங்கள் - நான்

உங்க கவிதையெல்லாம் படிச்சேன் , ரொம்ப நல்லாயிருக்கு - பாலபாரதி

அப்படியா ரொம்ப நன்றிங்க ( அடப்பாவி இதுக்கு முன்னே கவிதையெல்லாம் படிச்சதில்லையா நீ ) - நான்

அப்புறம் ஒரு விடயம் , நான் தூத்துக்குடி வருகிறேன் . உங்களை பார்க்க முடியுமா? - பாலபாரதி

தராளமா வாங்க , எப்போ வர்ரீங்க - நான்

அடுத்த மாசம் வரலாம்னு எண்ணம் , ஒரு நாவல் எழுதிகிட்டு இருக்கேன் அது சம்பந்தமாத்தான் வருகிறேன் - பாலபாரதி

ஓ சரி, அப்புறம் இந்த வரவனையானு ஒருத்தன் எழுதிகிட்டு இருக்கானே தெரியுமா - நான்

ஆமா , படிச்சிருக்கேன் . அவருக்கென்னா ?- பாலபாரதி

அது நாந்தான் - நான்

.............. - பாலபாரதி

ஹலோ - நான்

ஹலோ - நான்

அடப்பாவி மாப்ளே நீதானா அது - பாலபாரதி

இப்படி துவங்கியது அன்பு மாம்ஸ் பாலபாரதியின் நட்பு. போனிலும் மட்டுமல்ல நேரிலும் எவ்வளவு கலாய்த்தாலும் தாங்கிக்கொள்ளும் இதயத்துக்கு சொந்தமானவர். அதன் பின் எப்போது என்னை சந்தித்தாலும் மடியில் நெருப்பை கட்டிக்கொண்டுதான் இருக்கிறார். நேற்று அவரை பார்க்க போயிருந்தேன் . அப்போதும் சங்கபணிகளை விடாது செய்தவாறே இருந்தேன்.

அப்புறம் மாம்ஸ் அடுத்து என்ன எழுத முடிவு என்றேன் ?

மராத்திய பாலியல் கதைகள் எழுத எண்ணம் என்றார்.

ஓ அப்போ நீங்கதான் போலியாருக்கு கதை எழுதி தருகிற ஆசாமியா ? -இது நான்

இன்னேரம் அந்த முயற்சியை கைவிட்டு இருப்பார் என்று நினைக்கிறேன்.

அப்புறம் பேசிக்கொண்டிருக்கும் போது புளியமரம் தங்கவேல் வந்து சேர்ந்தார். அவருடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட போனோம். நான் தயிர்சாதம் வாங்கிசாப்பிட்டேன். உடனே என்னை கலாய்க்கும் நோக்கில் அதை படம் பிடித்தார்.

Photobucket - Video and Image Hosting

மாப்ளேய் பார்ப்பனிய எதிர்ப்பு அது இதுன்னு பேசிட்டு தயிர் சாதமா சாப்பிடுற இரு நாளைக்கு இத ஒரு பதிவாய் போடப்போறேன் என்றார்.

இல்ல மாமா நேற்று ஊரில் பிரியாணி நிறைய சாப்பிட்டேன் அதான் என்றேன்.

உடனே "பாவி நீயாவது ஊருக்கு போயி பிரியாணியெல்லாம் சாப்பிடுற' நான் ஊருக்கு போயி மாமாங்கம் ஆகப்போகுது" என்று வயித்து எரிச்சல் பட்டார்

அப்போ சொன்னேன் "மாம்ஸு, ஊரில சின்ன புள்ளங்க கைய பிடிச்சு இழுத்த கல்யாணம் பண்ணி வைப்பாங்க. கிழவி கைய பிடிச்சு இழுத்தா இப்படித்தான்" ஊருபக்கமே தலை காட்ட முடியாதுன்னு நான் சொல்ல கொலைவெறி பார்வை "மாம்ஸ்" வீச கிளம்பினேன்.


வலைப்பதிவுலகத்தில் ஒரு மென்மையான இதயம் கொண்ட அன்பு மாம்ஸ் பாலபாரதிக்கு நட்சத்திர வார வாழ்த்துக்கள்

Tuesday, February 13, 2007

@ 3:38 PM Labels: எழுதியவர்: வரவனையான் 16 மறுமொழிகள்

எரியும் சுடரை எனக்களித்த தோழன்.சுகுணாவுக்கு நன்றி. அவரின் கேள்விகளுக்கு நன்றிகள் பல....Photobucket - Video and Image Hosting

1. இன்னமும் திராவிட இயக்கத்திற்கான தேவைகள் இருப்பதாக நினைக்கிறீர்களா?

நிச்சியமாக. திராவிட இயக்கத்தின் தேவைகள் இன்னும் இன்னும் இங்கு தேவைப்படுகிறது. அதே வேளை திமுக,மதிமுக , தேமுதிக போன்றவை திராவிட இயக்கத்தின் நீட்சி என்று யாரேனும் சொல்லுவார்கள் என்றால் அது பின்பொறியால் சிரிக்கவேண்டிய விடயம். தன்னை மறுக்கும் சிந்தனையாளர்களை தனக்கு பின் எதிர்பார்த்தார் பெரியார். இன்னும் பெரியாரையே முழுமையாக மறுவாசிப்புக்கு நாம் உட்படுத்தவில்லை.இதற்கு முந்திய முயற்சிகளும் பார்ப்பனியத்துக்கு முதுகு சொறியும் வேலையையே செய்தது நீங்கள் நன்கறிவீர்கள், அதற்கு எதிராய் களமிறங்கியவர்களில் ஒருவர் என்கிற வகையில். பார்ப்பனியமும் பாசிசமும் தன் அதிகார எல்லைகளை பன்னாட்டு நிறுவனங்கள் வரை விரிவு படுத்திவரும் இந்த காலகட்டத்தில் , மீண்டுமொரு திரிபு வரலாற்றை அடித்தட்டு மக்களுக்கு எதிராய் புனைந்து வரும் வேளையில் தமிழ்ச்சூழலில் திராவிட இயக்கத்தின் தேவையும் தோழர்.பெரியாரின் தேவையும் முன்னைவிட அதிகமாய் தேவைப்படுகிறது என்றே சொல்லலாம். எல்லாவித அதிகார மறுப்பு என்பது இன்றைய நிலையில் தமிழ்நாட்டிலும் இந்திய அரசியற்சூழலிலும் முன்வைக்க ஏற்ற நிலையிலேயே உள்ளது. அது பெரியாரின் பாதை . அந்த அதிகார மறுப்பை அடிப்படையாகக்கொண்ட திராவிட இயக்கத்தேவை தொடர்ந்துகொண்டே இருப்பதாக உணர்கிறேன்.

2. தமிழ்த்தேசியம், ஈழப்பிரச்சினை குறித்து உங்கள் நிலைப்பாடு...

முன்மொருமுறை தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்கள ராணுவ தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் என் தலைமையில் நடந்த போது நான் பிடித்து சென்ற பாதாகையில் கீழ்க்கண்ட கவிதைவரிகள் எழுதிப்போனேன்.

மலேயாவில் மாவுசாக்கு
பர்மாவில் கட்டாபாணி
ஈழத்தில் கள்ளத்தோணி
அகிலம் முழுதும் இன்று நாம்
அகதி
வாழவழியென கண்டிடவேண்டும்
வைகோ தலைமையில் வென்றிட வேண்டும்
- என்கிற கவிஞர் சரத்தின் வரிகளை ஏந்தி போராட்டகளத்தில் இருந்தோம். காலம் செல்ல செல்ல தமிழ்தேசியத்தின் அடிப்படையும் திராவிட இயக்கம் முன்வைக்கும் தேசிய இனப்பார்வையும் வேறாய் புலப்பட்டது. தமிழ்நாட்டு தமிழ்த்தேசியவாதிகள் முன்வைக்கும் தேசியவாதம் பெரியாரின் "தமிழ்நாடு தமிழர்க்கே" என்ன்னும் முழக்கத்தின்று வேறுபட்டது, அது தமிழ்நாடு தமிழர்க்கு மட்டுமே என்று ஒலிக்கிறது. இதை ஒரு சர்வதேசியவாத சிந்தனைகளை வாசித்தவன் என்கிற வகையில் எற்றுக்கொள்ள கொஞ்ச திகைப்பாக இருக்கிறது. அதே வேளையில் தமிழன் என்கிற ஒரே காரணத்துக்காக ஒருவன் ஒடுக்கபடுகிறான் என்றால் அவனுக்கு ஆதரவாய் களமிறங்க எப்போதும் நான் ஆயுத்தம் தான். இன்னும் தெளிவாய் சொல்வதானால் ஈரோடு தமிழன்பனின் வரிகள்தாம் உவமை - "நான் எப்படி பிரபஞ்சனோ, உலகனோ,இந்தியனோ அதைவிட கூடுதலாக தமிழன்" இவைதான் என் தமிழ்த்தேசிய நிலைப்பாடு.

ஈழப்பிரச்சினை என்று வருகிற போது இலக்கிய ஜல்லி அடிப்போரெல்லாம் புலி எதிர்ப்பு கருத்தாடினால் மட்டுமே அறிவுஜிவிகளின் ஏற்பை பெறமுடியும் என்றொரு மாயத்தோற்றமே இங்குள்ள பலரை அப்பிரச்சினையின் முழுமை தெரியாமல் குருட்டாம்போக்கில் எழுதியும் பேசியும் வர வைத்திருக்கிறது என்றே நினைக்கிறேன். அதே வேளை இன்றைய சூழலில் அங்கு தமிழ் மக்களின் பிரதிநிதியாய் இருப்பவர்கள் புலிகள்தாம் என்கிற கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். சிலரைப்போல் நான் ஈழத்தை ஆதரிக்கிறேன் புலிகளை அல்ல எனும் வெளக்கெண்ணையில் குண்டி கழுவும் வேலையை நானும் செய்யமுடியாதல்லவா ;)

பள்ளிக்காலம் தொட்டு மலரட்டும் மலரட்டும் தமிழீழம் மலரட்டும் என்று முழங்கி வந்த திராவிட பாசறையில் வளர்ந்தவன் என்கிற ஒற்றை காரணத்துக்காக மட்டுமே என் நிலைப்பாடு இப்படி ஆகிவிடவில்லை. அதே நேரத்தில் புலம்பெயர் ஈழச்சிந்தனையாளர்களின் மாற்றுக்குரல்களையும் அக்கறையுடன் உள்வாங்கியபடிதான் இருக்கிறேன். அங்கு தேவைப்படும் தமிழ்த்தேசியத்துக்கும் இங்கு பேசப்பட்டு வரும் தமிழ்த்தேசிய சொல்லாடல்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாகவே கொள்கிறேன்.

இது இருவேறு தேசிய இனங்களுக்குடையே நிகழும் ஆதிக்கவாத இனத்துக்கும் - ஒடுக்கபடுகிற இனத்துகுமான எதிர்வினைகளாகவே கொள்ளமுடியும் . ஆகவே தேசிய இனப்பாசங்களைத்தாண்டி ஒரு இடதாக என் நிலைப்பாடு ஈழத்தமிழ் மக்களின் தாகம் தமிழிழத்தாயகம் என்பதே ஆகும். இதில் ஈழத்தமிழ்மக்கள் என்பது புலிகளையும் சேர்த்துதான்.
3. காதல் வந்தால் சொல்லி அனுப்புவீர்களா?

கண்டிப்பாக, ஆனால் எது காதல் என்பதில் துவங்கி பல குழப்பங்களுடனே வாழ்கிறேன்.


4. வலையுலகின் இயங்குதளம் என்னவாய் இருப்பதாய் உணர்கிறீர்கள்?


நல்லதொரு கேள்வி சுகுணா, வலைப்பதிவுகள் என்பதை ஒரு கட்டுடைப்பு நிகழ்வாகவே நான் உள்வாங்கியிருக்கிறேன். முன்பெல்லாம் எது நல்ல ஒரு கவிதை,கட்டுரை என்பதை ஒரு பத்திரிக்கையின் ஆசிரியரோ அல்லது இணையதளத்தின் ஆசிரியரோ அவரது வாசிப்பு தன்மைக்கு ஏற்ப முடிவு செய்வார். இதை புரட்டி போட்ட ஒரு மாற்றமாக வலைப்பதிவுகளை கொள்ளலாம். வலுவுள்ளது பிழைத்துக்கொள்ளும் எனும் மொழி போல் நல்ல படைப்பை தேடிப்படிக்கவும் எனது போன்ற மொக்கை பதிவுகளை தவிர்த்து பயனுள்ள வேலைகள் செய்யவும் இது வழியமைத்து கொடுக்கிறது. இன்னும் அதிகமாய் சொல்ல வேண்டுமானால் "ஆசிரியன் செத்துவிட்டான்" என்பதில் நீங்கள் ஒப்புமை கொண்டவர் என்கிற காரணத்தால் சொல்கிறேன் , இவ்வலைப்பதிவுகளால் உண்மையில் "ஆசிரியன் செத்து விட்டார்" ஆம் எடிட்டர் என்கிற ஒரு அதிகாரமிக்க தொழில் மறைந்து விட்டதாகவே கொள்கிறேன். மையமற்ற பெருவெளியாய் வலையுலகம் ஆகிவிட்டதாகவே கொள்ளலாம்

5. பொதுவாக நீங்களும் நானும் பலசமயம் கொண்டாட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தியே வந்திருக்கிறோம். ஆனால் எதுவித வலியையோ அல்லது துயரத்தையோ எதிர்கொள்ளாத மேம்போக்கான மனம் மட்டும்தான் இதை வலியுறுத்துகிறு என்பதாக உணர்ந்திருக்கிறீர்களா?

ஆம் தோழா, வாழ்க்கை கொண்டாடக்கூடியது, கொண்டாடப்படவேண்டியது. எல்லாச்சூழலிலும் என்னால் ஒரு நகைச்சுவை துணுக்கு சொல்லமுடியும். நீங்களும் நானும் இடதின் பார்வையில் உலகை பார்த்தவர்கள், பார்த்துக்கொண்டிருப்பவர்கள் உலகம் துக்கங்ளின் போர்வையாலும் துயரங்களே கனவுகளாகவும் இருக்கிறது. இதில் பல்வேறு ஆதிக்கவாத செயல்களுக்கு எதிராய் நாம் அணி திரள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்நிலையில் ஒரு போர்ப்பாட்டு பாடியபடி நாம் எந்த கோட்டையும் தகர்க்கும் செயல் திட்டமில்லை. நமது எதிர்ப்பு என்பது அதிகாரங்களை நோக்கி எள்ளலும், கிண்டலுமே ஆகும். இதில் கொண்டாட்டம் என்பதும் ஒரு அதிகார எதிர்ப்பு செயற்பாடுதான். இதுவும் போக இது போன்ற ஒன்றை முன்வைப்பவன் வலியையும் துயரையும் எதிர்கொள்ளாதவன் என்று சொல்வது மடமையாகும், சாரு நிவேதா கூடத்தான் கார்னிவெல் மென்டாலிடியை ஒப்புக்கொள்கிறார் அதற்காய் அவர் அதையெல்லாம் பார்க்காதவரா என்ன, பாதிப்புனைவுகளாய் இருந்தாலும் பாதி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரின் வலி எவ்வளவு பெரிது. என் வாழ்வின் கடந்த 5 ஆண்டுகளாய் பார்த்துதானே வருகிறீர்கள் எவ்வளவு பாரிய தாக்கங்கள் இழப்புகள், இருந்தும் வெடிச்சிரிப்பும் கிண்டலும் கொண்டாட்ட மனோநிலையும் மாறி இருப்பதாக உணர்கிறீர்களா ? ஆகவே தனித்துயர் எவ்விதத்திலும் அரங்கிலேற முடியாது. சில இலக்கியவியாதிகள் வேண்டுமானால் அதை பொதுவில் சொல்லி காசு பறிக்க எத்தனிக்கலாம்.
இணையம் தந்த நல்ல நட்புக்களில் ஒன்றான தோழன். பொட்"டீ"கடை சத்தியாவின் கரங்களில் சுடரினை தருகிறேன்.

Photobucket - Video and Image Hosting

1. தமிழ்மண அரசியல் சர்ச்சைகளில் உங்கள் பெயர் தேவையின்றி பயன்படுத்தபடுவது குறித்து ?

2. "சட்டென வெளிச்சம்" இந்த வார்தைகளை கொண்டு துவங்கும் கவிதை ஒன்று

3. வலையுலக கொள்கை வகுப்பாளர்களால் முகச்சுழிக்கபடும் "கெட்டவார்த்தைகள்" பற்றி உங்களின் மதிப்பீடு ?

4. ஓஸ்திரேலிய மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளில் உள்ள தொல்மக்களின் நாட்டு சரக்குகள் பற்றிய குறிப்புகள்

5. பார்ப்பண எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு, வல்லாதிக்க எதிர்ப்பு என்பதில் உங்கள் நிலைப்பாடு இவ்வாறு இருப்பதின் பின்னணி ?

@ 2:59 PM எழுதியவர்: வரவனையான் 43 மறுமொழிகள்
கேட்கவும் உள்வாங்கவும்
எரிச்சலாய்த்தான் இருக்கும்
ஆயினும் இது எப்போவாவது
கேட்டுத்தொலைகிறது - ஆம்பிளை
சிங்கம்டா நீ எனும் சொல்லும்
தவளையினை முத்தமிட்டு இளவரசி
பெறும் கதையெல்லாம் பொய்யென
தெரிந்தும் - ஆட்டத்தின் போது
எதிராடுபவளை சரசத்துக்கு ஏகடியம்
பேசி அழைத்துவிட்டு - வீட்டுக்கு
போகுமுன் நாளை பார்க்கலாம் அக்கா'
என்று விடையிறுக்கும் கரகாட்டகாரனின்
வாழ்வாய் - தன் உள்ளும் புறமும் அறிந்த
ஆண்களின் ஒப்பாரி
கேக்கவும் உள்வாங்கவும்

Sunday, February 11, 2007

@ 5:07 PM எழுதியவர்: வரவனையான் 19 மறுமொழிகள்


மெல்ல துவங்கிவிட்டது காதலர்தினக்கொண்டாட்டங்கள்.வழமைபோல் பழமைவாத எண்ணங்கள் கொண்ட சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிராய் தங்கள் அராஜகபோக்கை வழமைபோல் தொடருவதற்கு ஆயுத்தமாகிவிட்டது தெரிகிறது, இம்முறை அவர்களின் கன்சர்வேடிவ் அணியில் பாமக'வும் இணைந்திருப்பது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

வழமைபோலவே இந்த வருடமும் காதலி இல்லாமல் கடக்கப்போகிறேன். இதை நினைக்கையில் ஒரு மெல்லிய கழிவிரக்கம் நெஞ்சில் தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லைதான். சற்றேறக்குறைய 28 அகவையில் நின்றுகொண்டிருக்கிறேன். இதுவரை கடந்த வாழ்வையும் கடந்து வந்த பெண்களையும் யோசித்துபார்த்தால் ...ஹீம் என்கிற ஆற்றாவதனின் பெருமூச்சாய் நொடிப்பொழுதில் கரைகிறது. இது ஒரு தனிவாழ்வியல் துயரமா இல்லை சமூகத்தின் குற்றமா என்று புரியவில்லை. கிட்டதட்ட மனிதவாழ்வின் ஆகச்சரிபாதியை பெண் நட்பே இல்லாமல் கடந்து விட்ட ஒருவனை எப்படி பார்ப்பீர்களோ அது நான் தான். 25 வயதாகும் போதே வீட்டில் அழைத்துக்கேட்டார்கள் " யாரையாச்சும் காதலிக்கிறியாடா" என்னாதுன்னேன் இல்லடா எவ கூடவாவது சுத்துறீயான்னு கேட்டேன்?ன்னாங்க. அவ்வளவு நம்பிக்கை என் பேர்ல. அட நீங்க வேற சும்மான்னு இருங்க, உள்ள பொழப்புல சுத்தறது ஒன்னுதான் குறைச்சலாக்கும் என்றபடி மறுபடி ஊர்சுத்த கெளம்பிருவேன்.

இரண்டாண்டுகளில் சுத்தவில்லை என்று பயந்தார்கள், அப்படியே திருமண பேச்சை துவக்கினார்கள் இன்றுவரை ஜாவாப் சொல்லிவருகிறேன் :) . எனக்கோ முன்பின் அறிமுகமில்லாத, பழக்கமில்லாத பெண்ணை ஒரே பார்வையில் கட்டிக்கொள்கிறேன் என்று ஒப்புக்கொண்டு நிகழும் திருமணத்தில் துவக்கத்தில் இருந்தே நம்பிக்கையில்லை. இன்னும் கூடுதலாக பெண் நட்பு என்பதை கண்டறியா மனிதனாக இருப்பதும் இல்லை அதன் குறித்தான புரிதல் இல்லாமல் இருப்பதும் காரணியாக இருக்கலாம். " செட்டில் ஆகித்தான் கல்யாணம் செய்யனும்னு நெனைக்காதிங்க வரவணை , முடிச்சிடுங்க" என்றான் ரஜினி சரவணன் இரண்டு நாட்களுக்கு முன். 6 வருடம் காதலித்த பெண்ணை 4 மாதம் முன்பு மணந்து கொண்டவன் அவன்.

காதல் எங்கு துவங்கிறது என்பது விளங்கமுடியாத ஒரு நவீன ஓவியம் போல் குழப்பதிலேயே ஆழ்த்துகிறது. ஒரு ஆணாய் அதற்கு தகுதியேதும் இருக்கிறதா, பெருளாதாரபின்புலங்கள் நிர்னனையம் செய்கிறதா, அழகியல் வியப்புகள் உருவாக்குகிறதா ஏதும் புரியவில்லை எனக்கு. கண்ணும் கருத்துமே பெண்ணைக்கவர்ந்திடும் என்று எங்கோ ஒலிக்கும் பாடல் வரிகள் லேசாக என்னை கிண்டல் செய்வது போல் உணர்வேன் . என் வீட்டில் வளரும் பூனகளுக்கும், நாய்க்கும் வைத்தியம் பார்ப்பதும், 'ரெண்டு நாளா வீரா நொண்டுறான் பினாடி வீட்டு ஜோனி கூட சண்டை போட்டானா ? இந்த வாரம் ராபிஸ் போடனும் ' என்கிற அக்கறை மிகுந்த விசாரிப்புகளும், 'கனேஷ் அண்ணே மாமியாவுக்கு சுகர் இப்போ எப்படி இருக்கு பெரியம்மா?' என்று மனித உறவுகளின் நலம் கேட்டலுமா கண்ணும் கருத்தும், அப்படியானால் ஏன் அந்த பாடலை கிண்டலாய் உணர வேண்டும். " நீ எனக்கான ஆண்" என்று ஒரு பெண் சொல்கிறாளோ அப்போது நிறைவாகிறது ஒரு ஆணின் வாழ்க்கை. காதலிக்க தேவைப்படுகிற தைரியமும் மன உறுதியும் காதலை சொல்லுவதற்கு தேவை.என் 10 வருட இளமையை தின்றது அது போன்றதொரு தைரியமும் மன உறுதியும் இல்லாத காரணத்தால் இருக்கலாம். வரப்போகும் முழு ஆண்டு விடுமுறை நாட்களை ஏக்கத்துடன் எதிர் நோக்கி காத்திருக்கும் மாணவனைப்போல் நாட்களை காதலிக்காக காத்திருக்கிறேன். ஹோவர்டு ஃபாஸ்ட் எழுதிய ஸ்பார்ட்டகஸ் புதினத்தில் ஸ்பார்ட்டகஸ் ஒரு வாசகம் சொல்லுவான் புதிய அடிமையைப்பார்த்து, அந்த புதிய அடிமை சொல்லுவான் எனக்கு நிலம் இருந்தது , ஆடுமாடுகள் இருந்தது, இனிமையான வாழ்வு இருந்தது எல்லாம் இருந்தும் இப்படி அடிமையாகிவிட்டேன் ' எல்லாம் இப்போது கனவாகிவிட்டது என்பான். அதற்கு ஸ்பார்ட்டகஸ் சொல்லுவான் " உனக்காவது நினைத்துப்பார்க்க இனிமையான ஒரு கடந்தகாலம் இருந்தது' நானோ முன்றாவது தலைமுறை அடிமை. என் கனவுகள் எல்லாம் மரணம் குறித்து மட்டும்தான், ஆம் அது ஒன்றே கனவெனக்கு' என்பான். அதுபோல் தன் காதற்தோல்வி உட்செரித்து வாழ்த்து சொல்ல விழையும் தோழர்காள் எனக்கு நினைத்து பார்த்து ஏங்கிபோக கூட ஒரு பழைய காதல் இல்லையே...

என்றாலும் வழமைபோல் எனக்கு பிடித்த ஈழத்துகவிஞனொருவனின் வரிகள் சொல்லி வாழ்த்துகிறேன்.

"உன்னிடம் வருகையில்
நான் ஒரு சிறுவன்
கண் விடுக்காத
பூனைக்குட்டி போல்
உலகம் அறியா
ஒரு பாலகனாய்
உன்னிடம் வந்தேன்"

வாழ்க காதல், வாழ்க காதலர்

கொண்டாடுங்கள் காதலர் தினத்தை

Saturday, February 10, 2007

@ 1:26 PM எழுதியவர்: வரவனையான் 21 மறுமொழிகள்

தமிழ்மண நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள் [-o< . ஒரு குறிப்பிட்ட பதிவரை பற்றி அளவுக்கு அதிகமாய் பதிவுகள் கடந்த ஒரு வாராமாய் வந்து கொண்டிருப்பதால் இந்த வார பூங்கா இதழுடன் இலவச இணைப்பாக டோண்டு சிறப்பிதழ் வெளியிட வேண்டிக்கொள்கிறேன். இதில் டோண்டு மாமாவுக்கும் உடன்பாடா என்று கேட்டு தெரிந்து கொள்ளவும்.


மேலும் ஒரு தகவல் என் கடந்த பதிவு படித்துவிட்டு என் மீது டோண்டு அவர்கள் வருத்ததில் இருப்பதாக அறிகிறேன். நான் அவரின் கருத்துகளைத்தான் எதிர்கிறேன் அவரையல்ல என்பதை அவர் அறிய வேண்டுகிறேன்.

எனது போன பதிவில் போலியாரை அவன் என்று ஒரு இடத்தில் விளித்தற்கு ஒருவர் போனில் அழைத்து கெட்டவார்த்தைகளால் அர்ச்சைனை செய்தார் நிச்சியம் அவர் தோழர் .போலியாராக இருக்க முடியாது. இருப்பினும் போன் செய்த நண்பருக்கு நன்றி.^:)^

"சமீபத்தில்" ஒரு பதிவில் என் நண்பர் இட்ட பின்னூட்டம் இன்னும் வரவில்லை அதை இங்கு இடுகிறேன்.

//ஜெய. சந்திரசேகரன் சைட்...
கவெ இட் இன் ணடெசன் Pஅர்க் ஒன்ல்ய். Tகெரெ அரெ cஇர்cஉலர் பென்செச் தெரெ//

. வயிற்றை காலியாக வைத்து கொண்டு வாருங்கள். ரத்னா கஃபேயா கண்ணதாசன் மெஸ்ஸா என்பதை பிறகு பார்த்து கொள்வோம்.//

பேதி மருந்து சாப்பிட்டு விட்டு வரலாமா. வயிற்றை சுத்தமாக காலியாக வைத்து கொள்ள உதவும். ( என்ன... ஓவர் டோஸாக போய்விட்டால் நடேசன் பூங்கா நாறிவிடும்)

Thursday, February 08, 2007

@ 12:40 PM எழுதியவர்: வரவனையான் 48 மறுமொழிகள்

Photobucket - Video and Image Hosting
பதிவர் சோமியுடன்


செந்தழல் ரவியை முதல் முதலாய் பார்க்கிறேன். நல்ல சினேகபூர்வமான மனிதர் (சினேகா அல்ல) பார்த்த உடன் ஒரு நட்பு மலர் சட்டென மலர்ந்தது. அப்புறம் கூட்டம் நடந்த இடத்துக்கு உள்ளே போனோம். வழக்கம் போல் சிவஞானம்ஜி இருந்தார் மற்றும் அனைவரும் நீங்கள் அறிந்தவர்கள் தான். கூட்டத்தின் போது கடல்கடந்த அமுக பெருந்தலையும் நல்ல நண்பரான பொட்டீகடை போன் செய்து எல்லாரிடமும் பேசினார். அந்த போன் ஒரு சுத்து சுத்தி சுகுணா திவாகரிடம் வந்தது அவர் பேசிய பின் டோண்டுட்ட பேசுறிங்களான்னு கேட்டுருக்காரு இல்ல பேசிட்டேனு அவரு சொல்ல "சரி அப்ப போலியாரிடம் பேசுறிங்களான்னு" கேட்க பொட்டீ கொடுங்க பேசுறேன்னு சொல்ல அந்த போன முத்து(தமிழினி)யிடம் சுகுணா கொடுத்தார். இதை அறியாத முத்து வெகு ஸீரியசாய் பேசிக்கொண்டிருந்தார். நான் புல் தரையில் உருண்டு உருண்டு சிரித்துக்கொண்டிருந்தேன். அப்புறம் சிவஞானமய்யாவுடன் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தேன். வயதுக்கு தகுந்த முதிர்ச்சியும் தன்மையும் அவர் மேல் மரியாதையும் அன்பையும் விளைவித்தது. அதன் பின் அமுக வின் லைவ் கிண்டல்கள் துவங்கின கூட்டம் முடியுமுன்
நான் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஓகை வந்து சேர்ந்தார். அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்றபடியே பேசிக்கொண்டிருக்கும் போது சரக்கு பார்ட்டிகள் விடை பெற துவங்கினர். அப்போது ஒரு குரல் "எல்லாரும் ஒரு நிமிடம் கவனிங்கள் " என்று மரபூர் சந்திரசேகர் தன் பங்கேற்று உள்ள சேவை நிறுவனம் பற்றி உரக்க பதிவர்களிடம் சொல்லி அதற்கு தகவல்கள் தந்து உதவுமாறு கேட்டுக்கொண்டிருந்தார். ரவி உடனே " என்னங்க பஸ்ல லேகியம் விக்கிற மாதிரி சவுண்ட கொடுக்குறாரு என்று சொல்ல நான் வழக்கம் போல் வெடிச்சிரிப்பு சிரித்தேன். அதன்பின் வழக்கம் போல் ஈகிள் பாருக்கு போனோம். ஓகை தன் காரில் வருமாறு கேட்டுக்கொண்டிருந்தார் நான் ரவியுடன் வருகிறேன் என்று சொல்லிகிளம்பிய போது ஓகை சரி நான் டோண்டுவை இந்திய மத்திய அரசுக்கு சொந்தமான ரயில்கள் வந்து நின்று செல்லும் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு ஸ்பாட்டுக்கு வருகிறேன் என்று சொல்லி காரைகிளப்பினார். அப்போது டோண்டு அவர்கள் "என்னா எல்லாம் விஸ்கிதானே சாப்பிட போறேள், நானும் வருகிறேன் என்றார். நான் அதற்கு " இல்லைங்க நாங்கள்ளாம் சுண்டக்கஞ்சி பார்ட்டிங்க என்றேன்.

அமுக
Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

கிட்டதட்ட முணுமணி நேரம் தம்மடிக்காத ஒரு நபர், தான் பாருக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டு திருட்டு தம் அடிக்க எஸ்கேப்பானார். பாருக்கு வந்த ரோசாவசந்த் தான் ரெண்டு லார்ஜ் மட்டும் சாப்பிட்டு உடனே கிளம்பிவிடுவதாக சொன்னார்.அதற்கு மேல் கட்டாயப்படுத்த கூடாது என்று உறுதிவாங்கினார். வழக்கம் போல் லக்கி 7 அப் அடிக்காமல் கே-எஃப் சூப்பர் ஸ்டராங் பீர் ஆர்டர் செய்தார். அப்போது டோண்டு ஓகையுடன் உள் நுழைந்தார் அவரின் வருகை குறித்து அறியாத ரீஜென்ட் பதிவர்கள் தங்கள் பீரை தியாகம் செய்துவிட்டு கிளம்புவதாக அவசர அறிவிப்பு செய்தனர். ஒருத்தர் ச்சை இங்கையும் இவரு இம்சையான்னு சொல்ல நானும் சுகுணாவும் ஏங்க வரட்டும்ங்க அவரு என்ன செய்ய போறாருன்னு சொன்னோம். அதன் பின் அது ஒரு நல்ல ஒரு மாலையாக மாறியது. டோண்டு ஒரு பீர் (105 ரூபாய்) அடித்துவிட்டு 40 தடவை உச்சா போனார், பாவமாக இருந்தது. அதன் பின் சிக்கன் பிரியாணி (120 ரூபாய்) வாங்கி சாப்ப்பிட்டார். அதன் பின் ஒரு கிங்ஸ் (5 ரூபாய்) பத்தவைத்து புகைத்தார். என்னிடம் நான் வருடம் ஒருமுறைதான் சிகரட் குடிப்பேன் அந்த நாள் இன்று என்றார். நான் மகிழ்ச்சி அப்படியொரு நாளில் உங்களுடன் இருப்பதில் என்று சொன்னேன். அப்புறம் நடந்த கூத்து கணக்கு சொல்லும் பதிவிலிடுகிறேன்.

திரு டோண்டு ராகவன் அவர்களே, எல்லா இடத்திலும் நான் சாப்பிட்டதற்கு காசு கொடுத்தேன் , கொடுத்தேன் என்கிறீர்களே முதலில் உங்கள் வருகை அறிவிக்க படாத ஒன்று உங்களை ஒரு புறக்கணிக்கபட வேண்டிய நபராக வலை நண்பர்கள் பார்ப்பது நீங்கள் சனாதான கோவனத்தை கையில் பிடித்து ஆட்டுவதால் மட்டுமன்று, வெகு இயல்பான விடயங்களில் கூட நான் நேர்மையானவன், சுத்தமானவன் சாப்பிடபோனால் காசுகொடுத்துவிடுவேன் என்கிற மொட்டை பகுமானத்தால்தான். உலகம் காசால் மட்டுமே தீர்மானிக்கும் என்கிற உண்மை எங்களைப்போன்ற இளையோரும் அறிவோம்.

அது எந்த பிரதிபலனும் எதிர்நோக்காத நண்பர்களின் சந்திப்பு. அங்கு வரும் எவனும் காசு எடுத்துதான் வரவேண்டும் என்பதிலில்லை அது போல் தன் உணவுக்கும் மதுவுக்கும் யாரும் அங்கு வரவில்லை. தமிழ்மணத்திலும் வலையுலகத்திலும் நிகழம் அனைத்துக்கும் மிகமுக்கிய காரணம் நீங்களும் போலியாரும்தான். அவர் சிலரின் முயற்சியால் தன் பாதையை மாற்றிக்கொள்வதாக சொன்னபின்னும் உங்களின் விளம்பர வெறி மேலும் மேலும் சனாதானக்காவலனாய் உங்களை ஆக்கியது. இப்போது நான் சொல்கிறேன் ****************Censored , எனக்கு தெரிந்த நண்பர்கள் சாதிய பற்றுடன் இருக்கிறார்கள் ஆனால் அது அவர்கள் நம்பும் சாதிக்கான பற்றாக இருக்குமே ஒழிய அதைக்கூட விளம்பரமாக மாற்றும் கேனபுத்தி இருக்காது. நீங்கள் ஆனந்தவிகடன் அலுவலகம் சென்று உங்களை பற்றிய செய்தி வெளியிட வேண்டியது தெரிந்து உங்களின் விளம்பர வெறி பார்த்து பரிதாபம் தான் ஏற்பட்டது. உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஒருவன் மிகக்கேவலமாக விமர்சனம் செய்துள்ள நிலையில் அந்த கேவலங்களை பத்திரிக்கையில் போட்டு வெளம்பரம் தேடிக்கொள்ளும் லூசுத்தனம் தேவையா என்று எண்ணிபாருங்கள். இவையெல்லாம் விட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு உங்களுக்கு வைக்கபட்ட ஆப்பு எங்கிருந்து அனுப்ப பட்டது தெரியுமா, அதுவும் பார்ப்பன சகோதரர்கள் தான் உம் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றியவர்கள்.உம் செயலால் வெறுப்புற்று இருப்பது பெரும்பாலும் பார்ப்பன நண்பர்கள்தாம். விவாதம் என்பதும் என்பதும் சொந்த கருத்து என்பதும் உரையாடல்களின் மூலம் மாற்றம் பெறும் ஆனால் நீங்கள் நடந்து கொள்ளும் முறை உங்களுடன் இருப்பவர்களேயே வெறுப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. நிச்சியமாய் நீங்கள் திருந்தமாட்டீர்கள் என்று தெரிந்த போதும் அனானிகள் சங்கத்தை பேமானிகள் என்று விமர்சனம் செய்த உங்கள் மீது கடும் கோபத்திலிருக்கும் சங்கத்து உறுப்பினர்கள் சார்பாய் வன்மையான கண்டனக்களை தெரிவித்து கொள்கிறேன்.

ஆனால் முறையாய் சங்கத்தில் சேராமலும் , உறுப்பினர் படிவத்தில் கையெப்பமிடாமலும், உறுதிமொழி எடுத்துக்கொள்ளாமலும் விதிமுறைகளை படித்து தேர்வெழுதி பாசாகமலும் நீங்களே சொந்த செலவில் பல்வேறு அனாமத்து அவதாரம் எடுத்ததினால்தான் மாட்டிக்கொண்டு இந்த நிலைமை ஆகவே பேராசிரியர்.சுனாமியாரிடம் ஒரு வாரம் மாலை வேளைகளில் டியூசன் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அப்புறம் ஊருக்கு வந்து டிரெய்ன்னை விட்டு இறங்கினா உடனே சுகுணாதிவாகரிடம் இருந்து போன், ஷோபா பேச வேண்டும் என்றாராம். பேசினேன். என்ன நண்பா உனனை பார்க்கலாம் என்றால் முடியவேயில்லை என்றார். நானும் அதையே சொன்னேன். அப்புறம் அவர் சொன்னதாக ஒரு வயது வந்தோருக்குகான நகைச்சுவை ஒன்றை சுகுணா சொன்னார் அதை சொல்லுமுன் கேட்டுட்டு திட்டகூடாதுன்னு முன் எச்சரிக்கை ஒன்றும் சொன்னார்( என் ஈழ ஆதரவு நிலைப்பாடு அப்படி அவரை சொல்லவத்திருக்கும் என்று நினைகிறேன்). ஜோக்கை கேட்டுவிட்டு நான் சிரித்த சிரிப்பில் அவரின் செவிப்பறை கிழிந்திருக்கும் - போன் செய்தால் உங்களுக்கும் சொல்லுவேன் அந்த துனுக்கின் கடைசி வரி " ஓ காசி ஆனந்தன் அன்னையும் வந்திருக்கிறாரா" விபரம் தெரிந்தவர்கள் சிரித்துக்கொள்ளுங்கள்

Wednesday, February 07, 2007

@ 4:41 PM எழுதியவர்: வரவனையான் 20 மறுமொழிகள்


இதற்கு முந்திய முறை போல் இல்லாமல் இம்முறை சென்னையில் போய் இறங்கியவுடன் அறை எடுத்து விட்டு குளித்த பின் முதல் வேலையாக ஞாயிறு மதியம் வைகைக்கு முன்பதிவு செய்துவிட்டேன். நல்லவேளை குளிரூட்டபட்ட இருக்கைகள் மட்டும் நிரம்பி இருந்தது.வழக்கமாய் பதிவு செய்யவேண்டிய இருக்கைகள் நிரம்பியும் குளிரூட்டபட்ட இருக்கைகள் காலியாகவும் இருக்கும் நானும் "அதர் ஆப்சன்"னை பயன் படுத்தி 160 ரூபாயில் ஊருக்கு போக வேண்டியவன் நொந்து கொண்டே 430 ரூபாயில் ஊருக்குப்போவேன்.இந்த தடவை எனக்கு ஒதுக்கபட்டு இருந்த ( என் இருக்கை அல்ல) இருக்கைக்கு அடியில் என் பயணப்பையை வைத்துவிட்டு வழியனுப்ப வரவழைக்கப்பட்டிருந்த உற்ற தோழன் சுகுணாவுடன் சைட் அடித்த படி நின்றிருந்தேன். என் இருக்கை அருகே ஒரு கிராமத்து தமிழன் தனது சுமைகளை இறக்கிவைத்துக்கொண்டிருந்தார் "அண்ணே என் பையின் மேல் சாப்பாடு இருக்கிறது உங்க பைய அது மேல வைச்சுடாதீங்க"என்றேன் சரி தம்பி என்றார். ரயில் புரப்பட்டது Feb 15 - 20 வாக்கில் மீண்டும் சென்னை வருவேன் என்று சுகுணா திவாகருக்கு பீதியை கிளப்பிவிட்டு வந்து எனக்கான இருக்கையில் அமர்ந்தேன். தாம்பரம் வந்ததுமொரு பெண்ணும் மூன்று குழந்தைகளும் ஏறி என் எதிரே வந்தமர்ந்தனர். ஆகா வாழ்வின் அதி அற்புத தருணங்களில் அதுவும் ஒன்று. என் அருகே அமர்ந்திருந்த அந்த கிராமத்து மனிதரின் மனைவியும் குழந்தைகளும் தான் அவர்கள். இதில் சிறப்பான விடயமென்னவென்றால் அந்த பெண் மத்திய ஆப்பிரிக்காவை சேர்ந்தவராம் சென்னைக்கு படிக்க வந்த இடத்தில் தன் கல்லூரிக்கு எதிரே உள்ள தேநீர்க்கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அந்த மனிதரை காதலித்து திருமணம் செய்துகொண்டாராம். அவர் அழகாய் தமிழ் பேசினார். அவர் தன் சுருள் கூந்தலை வகுப்பு எடுத்து வாரி மல்லிகை பூ வைத்திருந்தார். நெற்றியில் திலகம் வேறு. அவரை விட அந்த குழந்தைகள் அவ்வளவு அழகு சற்றேறக்குறைய 4 மணி நேரங்கள் அந்த குழந்தைகளோடு பேசியபடி வந்தேன். ஆப்பிரிக்க இன அடையாளங்களோடு வடமாவட்ட நாட்டுபுற வழக்கில் அவர்களின் உதட்டில் பிறந்த தமிழ் மேலும் அழகு பெற்று வெளிவந்தது. " கண்ணம்மாதான் தம்பி ஊருக்கு போய் வெவசாயம் பாக்கலாம்னு சொல்லுச்சு எனக்கு மெட்ராசை விட்டு வாரதுக்கு மனசில்ல" என்றார் அவரின் கணவர். கண்ணம்மா என்று பெயர் இவர் வைத்தாராம், அவரின் பெயர் "யே காபூ" . ஊருக்கு ஒரு முறை அழைத்து வந்த போது யே இங்க பாருடின்னு கிராமத்தில் சொன்ன போதெல்லாம் இவர் அங்கு போனாராம், அதான் தம்பி பெயர மாத்திட்டேன் 'யே" என்றால் அவங்க ஊரு பாசைல அழகிய கண்ணாம் அதான் கண்ணம்மானு மாத்தி வைச்சேன் அப்படி என்றார்

குழந்தைகள் ஒளிறும் கருப்பு நிறத்தில் அத்தனை அழகு. அவங்க ஊருக்கு போயிருக்கிங்களான்னு கேட்டேன். ம்ம் போயிருக்கேன் தம்பி, நம்மளமாதிரித்தான் நல்ல மனுசனுவ, என்ன மாட்டுக்கறி காவேக்காட திங்கிறனுவ என்றார். கண்ணம்மாவின் தமிழ்ச்சூழல் வாழ்க்கை பற்றிக்கேட்டேன். படித்த ஆங்கில இலக்கியம் தன் நாட்டில்தான் உதவும் என்றும் இங்கு ஒரு நல்ல குடும்ப தலைவியாக இருப்பது ரொம்ப பிடித்திருக்கிறது என்றார். தனக்கு தமிழ் மிக இயல்பாய்பேச வந்தது என்றும் தங்கள் இனகுழுவின் மொழியில் தமிழ்ச்சொற்களின் ஓசையில் ஒரே பொருளை குறிக்கும் சொற்கள் உண்டு என்றும் சொன்னார். அவர் சொன்ன சிலவிடயங்கள் ஆச்சரியளிமளித்தது. தமிழரிடையே உள்ள வழக்கமான பூப்புனித நீராடல் அல்லது மஞ்சள் நீராடல் தங்கள் நாட்டிலும் உண்டு என்றும் உலக்கை போட்டு படுக்க வைக்கும் வழக்கம் உண்டு என்றும் தெரிவித்தார். மடத்தனங்களுக்கு எல்லைகள் இருக்கிறதா என்னா? பெண்ணை கேவலப்படுத்தும் செயல் அது என்றேன். ஆமோதித்தார். உரலுக்கு உரல் என்றே பயன்படுத்துவார்களாம் அதும் போல் முறம் என்பதும் என்பதையும் இதே ஓசையில்தான் சொல்வார்களாம்.

ஆப்பிரிக்காவில் புலியில்லை என்பதும்,

"முறம் கொண்டு புலியடித்தாள்
புறநானுற்று தமிழச்சி- இன்று
புலியாகி வெடித்தாள் தமிழிழ தங்கச்சி "

என்கிற வரிகள் நினைவுக்கு வந்து போனது. விடை பெறும் போது அந்த குழந்தைகள் கைகாட்டி போனபோது நான் தொன்மங்களில் தொலைந்து போனேன் எங்கோ ஒரு நதிக்கரையில் கருப்பர்கள் ( அல்லது என் நிறத்தவர்கள்) கூட்டத்திலிருந்து குழந்தையாயிருக்கும் என்னை அழ அழ யாரோ தூக்கி வந்து இங்கு இறக்கிவிட்டதாய் விரிந்தது நினைவு . அவர் பாமக வேட்டி கட்டியிருந்தார் " அப்போ பெயர கண்டிப்பா மாத்தி வைப்பிங்க என்றேன். சிரித்தார், கண்ணம்மாவும் சிரித்த படிவிடை பெற்றார்.

சரி சென்னை சந்திப்பு மேட்டருக்கு வருகிறேன்

சந்திப்பு நடைபெற இருந்த பூங்காவிற்கு சுகுணா திவாகரோடு போலாம் என்று திட்டம். போனில் அவனை தி.நகர் ரத்னா கபேக்கு வரச்சொல்லிவிட்டு போனேன். ஆக்டிவா வண்டியில் ஒரு திரா'விட' ஆன்டியுடன் வந்திறங்கிய என்னை பார்த்து கொஞ்சம் ஜெர்க்கானவன் பின் சுதாரித்துக்கொண்டான். பின் காபி குடித்து ஆன்டீயை வழியனுப்பி வைத்துவிட்டு பூங்கா வழியாக வேறு ஒரு வேலையாக சுகுணா திவாகரின் "சொந்த" வண்டியில் போய்க்கொண்டிருந்தோம். அங்கே பார்த்தால் முத்து(தமிழினி) தன்னுடைய "சொந்த" பைக்கில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். ' ஹலோ மணி 3 தாங்க ஆகுது இதெல்லாம் ரொம்ப ஓவர் ' என்றார் சுகுணா திவாகர் உங்க ஆர்வக்கோளறுக்கு அலவேயில்லையா என்றேன் நான். ஏங்க நீங்கதாங்க 3 மணீக்கு வரச்சொன்னிங்கன்னார் என்னை பார்த்து. அடப்பாவி பொழுதுபோலைனா அவரை ஏண்டா இம்சை பண்ணுர என்றார் சுகுணா.


சரி வாங்க நம்ம அலுவலகம் போயிட்டு ஒரு சின்ன வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வந்திருலாம்னு சுகுணா திவாகர் அழைத்தார். சரின்னும் நானும் முத்தும் அவர் அலுவலகத்துக்கு போனோம். அங்க போன உடனே வேலை முடிஞ்சிடுச்சு. 'முத்து நானும் வரவனையானும் போய் இந்த சி.டியை நடிகை அஸ்வினி கணவரிடம் கொடுத்துட்டு வந்திறோம் . நீங்க பூங்கா போங்கன்னு' சொல்லி கீழே இறங்குனோம். ஒரு பிஎம்டபுள்யூ வந்து நின்னுச்சு, இவருதான் நாக்ரவி சினேகாவோட முன்னாள் காதலர்னு சுகுணா சொல்ல அவர பார்த்தோனே எனக்கு சினேகாவ பார்க்கனும் என்கிற நெடு நாள் அவா மீண்டும் பூதகரமா கிளம்பிருச்சு. டேய் நண்பா சினேகா வீடு இங்கதானே இருக்கு போலாம்டா என்றேன். வழக்கம் போல் அல்வா கிண்டி எனக்கு கொடுத்துவிட்டு அண்ணாசாலை சாந்தி தியேட்டர் நோக்கி போனோம். வழியில் ஒரு ஆல்டோ காரில் முன்னிருக்கையில் சினேகா உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டேன். டேய் வண்டியை நிப்பாட்டு "தலைவி" போறாங்க ந்னு ஒரே சவுண்டு நானு. அவனு சினிமா பத்திரிக்கை ஆசிரியர் மூளை உடனே வேலை செய்த்தது. நாக்ரவி இருக்கும் தெருவில் சினேகா போறாங்கள் என்றால் ஏதோ மேட்டர் இருக்கு என்றபடி வண்டியை திருப்பிஅந்த காரை பின் தொடர்ந்தோம் கார் நாக்ரவி காருக்கு சற்று முன்பாக நின்றது. இறங்கியது சினேகா இல்லை அது போல் சாயல்கொண்ட வேறு ஒரு பெண். "இவ விஜய் டிவீயில வேல பாக்குறா. எப்பவும் சினேகா நெனைப்பா இருந்தா இப்படித்தான் இந்த மாதிரி டப்பா பிகரு கூட சினேகா மாதிரி தெரியும்னு" சொன்னான். நொந்த படியே பூங்காவை நோக்கி கிளம்பினோம் . போகும் வழியில் நண்பா 'இப்படி ஒரு சந்திப்பு தேவையா நண்பா, பேசாம நேரா டாஸ்மாக்லையே கூட்டத்த வச்சுக்கலாம் என்று புலம்பியபடி வந்தார் சுகுணா. பூங்காவாசல் வரை வந்துவிட்டு நண்பா இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை லைட்டா ஆளுக்கு ஒரு கட்டிங் போட்டுட்டு உள்ள போயி உண்டு இல்லைனு ஆக்குவோம்னு என்னை கன்வீன்ஸ் செய்யும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது லக்கி,ரவி பாலா( ! ) கோஷ்டிகள் தம்மடிக்க வெளியில் வந்தது.

( இன்னும் கொஞ்ச நேரத்தில் தொடருவேன் )