Tuesday, January 30, 2007

@ 6:32 PM எழுதியவர்: வரவனையான்

மொகரம் பண்டிகை அதுவுமா கஸ்டம்ஸ் லீவு - அத சாக்கா வச்சு நானும் மதியம் அறைக்கு வந்து நிம்மதியா தூங்கிட்டு இருந்தா 4 .45 க்கு சொல்லி வச்சா மாதிரி மாம்ஸ்ட இருந்து போன். வழக்கமா யாராவது அனானியா வந்து கமென்ட் போட்டாகூட "ஏலே செத்த நேரம் செவனே இரு மாப்ளே"னு போன் போட்டு இம்சை பன்னுவாரு. இப்போ எவேன் செஞ்ச கொடுமைக்கு என்னைய இம்ச பன்னப்போறாறோன்னு போன எடுத்தா. அன்பொழுக ஏன் மாப்ள சென்னைக்கு வரென்னுட்டு வரல்லன்னு கேட்டாரு. யாரு சொன்னது வரலைனு நான் டிக்கட்ட 1 தேதிக்கு மாத்தி போட்டேன்ல 3 தேதி பாக்கலாம் மாம்ஸ்ன்னு சொன்னேன். அப்புறம் பேச்சு மலச்சிக்கல் பற்றி போச்சு " மாப்ள முடியல மாப்ள தம் இல்லாம போகவே மாட்டேங்குதுன்னு ஒரே பொலம்பல். அப்புறம் இன்னைக்கு மொகரம் ஏதும் வெசேசம் இல்லையான்னு கேட்டேன். அங்க ஆரம்பிச்சாரு பிளேட பக்கீர்ட பேசுன மாதிரி மொகரம் கண்டுபிடிச்சது யாருன்னு துவங்கி ஒவ்வொரு ஊருலையும் எப்படி கொண்டாடுவானுங்கனு பிச்சி பிடுங்கி போட்டாரு. அப்புறம் சென்னைக்கு வாரத பத்தி பதிவுல போட்டுரு மாப்ளன்னு சொன்னாரு அதான் இந்த பதிவு. எல்லாம் பேசி முடிக்கிறப்ப கேட்டேன் "இப்ப எங்க மாமா இருக்கிங்கனு டீ சாப்பிட்டேன் அப்படியே தம்மடிச்சிட்டிருந்தேன் உன் நெனைப்பு வந்துச்சு அதான் போன போட்டேன்னு சொன்னாரு. அடப்பாவி அப்போ இன்னும் நீ தம்ம விடலையா ?????

பின்குறிப்பு : சென்னை வாழ் மக்களே உங்களுக்கு நல்ல வாய்ப்பு. வரும் 3 ம் தேதி அனானிகுல தெய்வங்களை நேரில் காண. பெங்களுரூரில் இருந்தும் மிகமுக்கிய கொலசாமியும் கலந்து "கொல்கிறது".

7 மறுமொழிகள்:

  1. chuummaa

  1. :)))))))))))

    இந்த விஷயத்தில் ஜெயிச்சுட்டா முழுமையா விட்டுடலாம்....

    இந்த விஷயத்தில் கவுந்துட்டா பழைய குருடி கதவை தொறடிதான்...

  1. அந்த 8 பி.எம் புல்லு வாங்கிவர்றதை பற்றி ஏன் சொல்லலை ? ஆழியூரானும் கெளம்பி போட்டிக்கு வந்துருவாருன்னா ?

  1. \\"எல்லாம் பேசி முடிக்கிறப்ப கேட்டேன் "இப்ப எங்க மாமா இருக்கிங்கனு டீ சாப்பிட்டேன் அப்படியே தம்மடிச்சிட்டிருந்தேன் உன் நெனைப்பு வந்துச்சு அதான் போன போட்டேன்னு சொன்னாரு."//

    தம்மடிக்கும் போது கூப்பிட்டா அப்ப அவரு.....எங்கிருந்து கூப்பிடறாரு அய்யா?அங்கிருக்கும் போதுதான் உம்ம ஞாபகம் வருமோ?

  1. ஆக மொத்தம், ஒரு முடிவோட தான் சென்னை பயணமா?

  1. //மாப்ள முடியல மாப்ள தம் இல்லாம போகவே மாட்டேங்குதுன்னு ஒரே பொலம்பல்.//

    //டீ சாப்பிட்டேன் அப்படியே தம்மடிச்சிட்டிருந்தேன் உன் நெனைப்பு வந்துச்சு//

    அப்படின்னா எங்கே இருந்து போன் பண்ணார் ? :)

  1. 8:49 PM  
    Anonymous said...

    நாளை 7 அப் ரெடியா