Friday, January 19, 2007

@ 3:51 PM எழுதியவர்: வரவனையான்

ஒரு முழுமையான தமிழ்நாடே அங்கு இருப்பதுபோல் இருக்கும் . ஒரு பக்கம் சென்னை ராயபுரம் ராமனாதன் ( வைகோ ஜெயலலிதாவால் "பொடா" சட்டத்தில் உள்ளே வைக்கபட்டபோது அவர் வெளியே வரும் வரை கருப்புசட்டையும் தாடியுமாய் இருந்தார் ) " ங்கொத்தா இன்னா வெய்லு அடிக்குதுபா" அப்படின்னு டயலாக் விட்டுகிட்டு இருப்பார், இந்த பக்கம் "கட்டஞ்சாயா (பிளாக் டீ ) கொடுங்க மாஸ்டர்" ந்னு டீ கடைல கன்யாகுமரி மாவட்ட சந்தனகுமார் நிற்பார், ஏனுங்க இங்க பொம்பிளைங்க தங்குறதுக்கு எங்கங்க ஏற்பாடு பண்ணிருக்காங்க கோவை மாவட்ட மணியம்மாள் கேட்டுக்கொண்டு நிற்பார் . வடமாவட்ட தமிழும் நெல்லைத்தமிழும் , மதுரைத்தமிழும் தஞ்சைத்தமிழும் ஒன்றாய் கலந்து அங்கு புழங்கும்.
அதுல மதுரக்காரய்ங்க சேட்ட இருக்கே தாங்க முடியாது. தூத்துக்குடி,நெல்லை தோழர்கள் சண்டைன மொத ஆளா நிப்பாய்ங்க ஆன மதுரகாரய்ங்தான் சண்டைய இழுத்து விட்டு போய்ட்டே இருப்பாய்ங்க. அதுல போஸ்ன்னு ஒரு வார்டு செயளாலர் வந்து இருந்தாரு. அவருக்கு மதுரைக்கு வெளியே எல்லாரும் ஈளிச்சவாயனுங்கனு நெனைப்பு. " ஏலேய் அந்த டோரிக்கண்ணேன் என்ன மொறச்சுக்கே இருக்கான்டா" அப்படின்னு கூட இருக்கிற அல்ற சில்றைகட்ட சொல்லிட்டு போய்ட்டே இருப்பார். அவய்ங்க போயி அவன்ட்ட "என்ன மேட்டரு, எங்க மாம்ஸ மொறாய்க்கிறியாம்ல ( தமிழை கவனியுங்கள் ) மாணாம்ப்பா போட்டு போய்க்கே இருப்போம், அப்புறம் வீட்டுக்கு புள்ளையா போய் சேரமாட்ட " அப்படின்னு அந்த டோரி கண்ணன அம்பா சொல்லுவாய்ங்க . அவன் இவனுங்க எந்த மொழில பேசுறனங்கன்னு புரிஞ்சுகிக்றதுக்கே 10 நிமிசம் ஆகும். " அண்ணே என் கண்ணே அப்படித்தாண்ணே "னு சொன்ன பிறகு தான் உட்டு வருவானுங்க. அடிச்சா ஒரே அடில ஊருக்கே கெளம்பி போயிருவானுங அப்படி ஷோ காட்டுறது. அது மதுரகாரங்களுகே உரியது. வடிவேலு வேற எங்கும் கேரக்டர் பிடிக்கிறதில்ல அப்படியே மதுர மக்கள்தான். ஆனா இன்னொன்னு இவய்ங்கள்ள எவேன் கேடி எவன் டுபாக்கூர்னே தெரியாது. நம்ம போஸ் குரூப் மாதிரி நினைச்சு பாஸ்கர்சேதுபதி அண்ணன்ட வாங்கி கட்டுனவனும் உண்டு. பாஸ்கர் சேதுபதி மாநில தொண்டரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். வைகோவுடன் எல்லா நடைபயணத்திலும் கொஞ்சம் குண்டாய் மாநிறமாய் அவர் பின்னால் நிற்பார்.இது போக சாப்பாட்டு ராமனுங்க ஒரு குரூப்பு அதில இருப்பாய்ங்க. அவய்ங்க கரைச்சல் தனியா இருக்கும். "முந்தா நாளு கரிவலம்வந்த நல்லூர்ல போட்டாங்க பாரு ஒரு சாப்பாடு அதான் சூப்பர்". "ஏய் வெசயம் தெரியுமா திங்கள்சந்தைல கோழி பிரியாணி போட்டானுங்கல்ல நம்ம சேலம் ரங்கன் ரெண்டு பொட்டனம் வாங்கி சாப்பிட்டு புடுங்கிகிச்சிபா"ன்னு பேசி சிரிச்சுகுவானுங்க. அது போக சூதாடுபவர்கள் , கஞ்சா அடிப்பவர்கள் தண்ணி அடிப்பவர்கள் இவர்கள் எல்லாம் எப்படித்தான் மாவட்டம் எல்லை எல்லாம் கடந்து ஒன்றாவர்களென்பது எனக்கு பெரிய ஆச்சரியமளிக்கும். வைகோவிற்கோ பயணம் புறப்பட்ட 6 - 7 நாட்களில் பெரும் தலைவலியாய் உருவெடுத்தவர்களிவர்கள்தாம்.

( தொடருவேன்)

11 மறுமொழிகள்:

 1. pinutta kayamai allathu Test Message

 1. நடைபயணம் ஆரம்பிச்ச எடத்துலேயே நிக்குதே... கொஞ்சம் மூவ் பண்ணுங்க அண்ணாத்தே :-)

 1. நல்லாருக்கு....மேலும் எழுதுங்க...!!!!

 1. 6:12 PM  
  குள்ள டால்டன் said...

  மதுரக்காரய்ங்கள அசிங்கப் படுத்திட்டல்ல.யோவ் வரவண ஏங் கண்ணுல சிக்குன கொண்டே புடுவேன்.

 1. ஏப்பா ஏய் நாங்க என்ன கொண்டையம்பட்டிக்காரய்ங்கள... நாங்களும் அந்தூருக்காரய்ங்கதான் மாப்ளோய்...

  திண்டு வளந்ததே மருத மண்ணத்தானப்பு...

 1. தலைவர் கலைஞரால் புலிக்கதை சொல்லி வெளியேற்றப் பட்ட போது அவர் மீது அனுதாபம் பிறந்தது உண்மை.

  ஆனால் வைகோவின் நடவடிக்கைகள் அந்த கதை உண்மை தானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதும் மறுக்க முடியாத உண்மை.

 1. 5:39 AM  
  Anonymous said...

  ஏலேய் வரவனையா, மருதகாரனுக்குன்னு ஒரு கெத்து இருக்கு, நீபாட்டுக்கு இப்படி சொல்லிகிட்டே போனைனா எப்புடி. முழுசா அப்பனாத்தாவுக்கு புள்ளையா போய் சேரமுடியாதுடியேய். திருப்பாச்சேத்தி அருவாள தீட்டிட்டு இருக்கம்ல தெரியலயா?

  பட்ரைய கெளப்பிருவோம்ல.

 1. 7:52 AM  
  Anonymous said...

  /*
  ஏப்பா ஏய் நாங்க என்ன கொண்டையம்பட்டிக்காரய்ங்கள... நாங்களும் அந்தூருக்காரய்ங்கதான் மாப்ளோய்...
  */
  Just curious, where in madurai?

 1. நல்லா எழுதறீங்க!

  ஆனா எதிர் வெள்ளத்துல நீச்சல் அடிச்ச மாதிரி ஒரே இடத்துல இருக்கீங்களே!

 1. ஒரு விஷயம் கேக்க மறந்துட்டேன்!

  உங்க தலைவர் அதிமுக அவைத்தலைவர் ஆகப்போறாராமே!

 1. அப்புறமா என்னாச்சு???