Thursday, January 11, 2007

@ 3:40 PM எழுதியவர்: வரவனையான்

கோட்டை நாற்காலியும் உண்டு ...
அங்கு கூட்டிட்டு போவான் அவன்
திராவிடக்காளை !
- பாவேந்தர்
எனக்கு வைகோ என்கிற மனிதனின் அருகேயே இருக்கலாம் என்கிற ஆசை இருந்த காரணத்தினால்தான் நடைபயணத்திற்கே வந்தேன். இங்கோ சௌரி அண்ணா கையில் மாட்டி லாரியில் ஏற்றப்பட்டு பணி வேறு அளிக்க பட்டுவிட்டது. என்னுடன் பீட்டர் என்கிற திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியை சேர்ந்த ஒரு உடன்பிறப்பும் வலிந்து வேலை செய்கிறேன் என்று லாரிக்கு வந்துவிட்டார்.அவரோ ஒரு பள்ளியில் அலவலக உதவியாளராய் பணி புரிந்த அனுபவம் உள்ளவர் அவருக்கு இந்த வேலைகள் எளிமையாய் இருந்தது. எனக்கோ ஒ.சுந்தரம் அண்ணன் இன்னின்ன வேலைகள் நீங்கள் மூவரும் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கொட்டாவி வந்துவிட்டது. உழைப்பை மறுக்கும் பின்நவீனத்துவ இயல்பு எனக்கு பிறப்பிலே உண்டு :)))) அண்ணே ஒரு ரெண்டு நாளு மட்டும் நடந்து வாறேன் அப்புறம் லாரில ஏறிக்கிறேன் என்றேன். லாரி நடைபயணம் கிளம்பிய சில நிமிடங்களில் அடுத்த தங்குமிடம் போய்விடும்.அங்கு போய் "சும்மா" உட்கார்ந்திருக்க எனக்கு பிடிக்கவில்லை.

ஒப்புதல் பெற்று நடந்து கிளம்பினேன் வைகோவுடனே. ஆரல்வாய்மொழியின் அழகை நடந்தே அனுபவித்த நான் கொஞ்சம் கொடுத்துவைத்தவன் தான். வைகோ வின் பேச்சால் கவரபட்டவன் அவருடன் நடந்துகொண்டே ஒவ்வொரு மணி நேரத்திலும் எதிர்வரும் கிராமங்களிலும் சிற்றூர்களிலும் பேசத்துவங்கினால் ஓடிப்போய் முன்வரிசை கூட்டத்தினை ஓழுங்குபடுத்திக்கொண்டே செவி மடுக்கதுவங்குவேன். அந்த நடைபயணம் இன்று திமுக, மதிமுக ஆகிய இரு கட்சிகளில் உள்ள பல இளம்பேச்சாளர்களை உருவாக்கியது. வைகோ உடன் இருந்தால் அவர் ஒவ்வொரு இடத்திலும் முன்னர் பேசிய விடயத்தை அறவே தவிர்த்து புதிதாய் வேறு விடயங்கள் பேசுவதை கவனிக்கமுடிந்தது. ஒரு நல்ல பேச்சாளராய் இருந்தாலும் இந்தளவு 3 கிலோ மீற்றருக்கு ஒரு முறை புதிய செய்திகளாக சொல்லிச்செல்வது அவருக்கே அமைந்த தனித்திறன் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு நாள் அவருடன் சென்றால் அடுத்த நாள் அவருக்கு முன்பாக சென்றேன். அதாவது அவர் ஒரு இடத்தை நடந்து அடைய 2 மணி நேரம் இருக்கும் தறுவாயில் நான் அந்த இடத்தில் இருப்பேன். இப்போது மதிமுக வில் இருந்து திமுகவில் இணைந்து விட்ட கரூர் முரளி அந்த நடைபயணத்தில்தான் பேச்சாளராக உருவாகினார். அந்த ஊர்கிளைகளில் ஏற்பாடு செய்யபட்டிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் இருக்கும் ஒலிவாங்கியில் "இதோ வருகிறார் , ஜயலைலிதாவின் அராஜக ஆட்சியைக்கண்டித்து தமிழகம் நெடுக்க நடந்தே மக்களை சந்திக்க வருகிறார் வைகோ " என்று துவங்கி ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சிக்க ஆரம்பிக்கவேண்டியதுதான். தப்பும்தவறுமாய் பேசினாலும் உள்ளுர் கட்சிக்காரர்கள் கண்டுக்கமாட்டார்கள் ,மேலும் தெரிந்தவர்கள் முன் தவறாக பேசி அவர்கள் "கொல்" என்று சிரித்தால் அதன் பின் பேசுவதற்கு மனம் வராது. இங்கோ அதற்கு இடமில்லை என்பதால் கிட்டதட்ட 100 பேச்சாளராவது உருவாக்கியது அந்த நடைபயணம்.

மேற்குறிப்பிட்டுள்ள பாவேந்தரின் வரிகளில் வரும் திராவிடக்காளையாக என் கண்களுக்கு அப்போது வைகோ தெரிந்தார்.

-தொடருவேன்

11 மறுமொழிகள்:

 1. 5:54 PM  
  mahendran said...

  ungal rasiganaagave ennai maatri vitteergal thozhar.

 1. இப்படிப்பட்ட வீரனுக்கு ஆப்பு விஜயகாந்த் ரூபத்திலா வரவேண்டும்.

  காலக்கொடுமை.

 1. 8:47 PM  
  அருள்.. said...

  ஒரு கூத்து காட்டியப்பத்தி இத்தனை
  பதிவு தேவையா நண்பா?

  இது நல்லாயில்ல,
  வேணாம்,
  வலிக்குது,
  அழுதுருவேன்,
  விட்டுரு.

 1. //மேற்குறிப்பிட்டுள்ள பாவேந்தரின் வரிகளில் வரும் திராவிடக்காளையாக என் கண்களுக்கு அப்போது வைகோ தெரிந்தார்.//

  செந்தில் அய்யா,

  அது எப்படி வைகோ அய்யா,முதலில் சிங்கக் குட்டி,பிறகு குள்ளநரி,அப்புறம் திராவிட காளை,அப்புறம் ஆரிய அடிவருடும் ஆடு என்று மாறி மாறி குஞ்சுகளுக்கு தரிசனம் தருகிறார்?
  இப்பொழுது அவர் உங்களுக்கு எந்த ரூபத்தில் காட்சி அளிக்கிறார் என்று சொல்ல முடியுமா?

  பாலா

 1. மிகவும் சுவாரசியமாக இருக்கு...அடுத்த பாகம் எப்போ??

 1. பாலா ! உண்மையிலே ரசிச்சு சிரிச்சேன்

  இந்த மாதிரி ஹாம்லெஸ் கமென்ட் ரொம்ப பிடிக்கும் எனக்கு

  ஹஹஹா

 1. செந்தில் அய்யா,

  எது எப்படியோ. வைகோ அய்யா இப்போது எங்கள் வசம். முடிந்தவரை அவரை பாராட்டியே எழுதுங்கள். வற்றாத சொம்பும், சுருட்டாத பாயுமே எங்கள் இனத்தின் வரலாற்று அடையாளங்கள். சொம்புக்கும், பாய்க்கும் ஆசைப்பட்டு எங்களிடம் முதலில் வந்தது எம்.ஜி.ஆர். இப்போது வைகோ. சொம்பும், பாயும் இருக்கும் வரை எங்கள் இனத்துக்கு ஏது கேடு?

  பீலா

 1. பீலா ! உண்மையிலே ரசிச்சு சிரிச்சேன்

  இந்த மாதிரி ஹாம்லெஸ் கமென்ட் ரொம்ப பிடிக்கும் எனக்கு

  ஹஹஹா

 1. லக்கி ! வேணாம் அப்புறம் சிரிச்சுறுவேன்.................

  ஹஹஹஹ்

 1. அதிருக்கட்டும்.... தோழர் ஜாலிஜம்பர் யாரு??????

 1. அன்பிற்குரிய லக்கி ,
  என் பெயர் ரவி.இருப்பது மதுரையில்.