Sunday, January 07, 2007

@ 12:36 PM எழுதியவர்: வரவனையான்அவ்வளவு நிறைவான ஏற்பாடு செய்யபட்டிருக்கும் என்று முதல் நாள் மதியம் வரை நான் நம்பவில்லை.காலை கிளம்பி மதிய உணவுக்கு சுசிந்திரத்தை அடைவதாக பயணதிட்டம். அதன் படியே அடைந்தோம். மதிய உணவுக்கு பின் 4 மணிக்கு புறப்பட்டு இரவு நாகர்கோவிலை அடைய திட்டம்.பொதுவாக வெயிலுக்கு முன் புறப்பட்டு நன்பகலுக்கு முன் தங்கும் இடத்தை அடைவதும், மாலை வெயில் தணியும் நேரமான 4 மணிக்கு இரவு அடையவேண்டிய ஊரை அடையும்படி அந்த நடைபயணம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. சுசிந்திரத்தில் உணவுக்கு பின் கன்யாகுமரி மாவட்ட அழகினை ( ! ) ரசித்துக்கொண்டிருந்த என்னை சௌரி அண்ணா அழைத்தார். அன்றே என் நடைபயண வாழ்க்கை முடிவுக்கு வருமென்று தெரியவில்லை. :)))

அவர் அழைத்து சென்ற இடத்தில் மூன்று லாரிகள் நின்றிருந்தது. அதில் இருந்த ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் அடுத்த 27 நாட்களில் நடைபயணத்தில் அவர் இருக்கும் போதே புலிகளுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாக "தடா" எனும் கருப்பு சட்டத்தில் கைதாகப்போகும் ஓ.சுந்தரம் என தெரியாது. சுந்தரம் அண்ணன் பார்க்க பேங்க் ஆபிஸர் போல் இருந்தார். ஒரு லாரி நடமாடும் அலுவலகமாகவும் ஒரு லாரி நடந்துவருபவர்களின் உடமைகளை சுமக்கவும் , மற்றோரு லாரி தேவை யான பொருட்கள் சுமக்கவும் கொண்டு வரப்பட்டிருந்தன. என்னை அலுவலக லாரியில் ஏற்றி சுந்தரம் அண்ணன் பொறுப்பில் விட்டு, "தம்பியை கூட துணைக்கு வச்சுகுங்க சுந்தரம். கவனமில்லாமல் பணத்தையெல்லாம் தொலைக்கிறார் " என்று சொல்லி என்னை அங்கு பணித்தார்.

அலுவலகம் என்றால் நடந்துவருபவர்களின் பெயர், விலாசம் , அவர் பற்றிய தகவல்கள், மற்றும் அவர்களுக்கு மருத்துவ தேவையென்றால் அதற்கு தேவையான குறிப்புகள். நடப்பவர்களுக்கு செருப்பு தேவைகள், மாத்திரை உட்கொள்பவர்களாயின் அந்த மாத்திரை. அதை வேளைக்கு உட்கொள்ள அறிவுறுத்தல். அடுத்த வாரங்களுக்கு தேவையானவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை வரப்போகும் ஊர்பொறுப்பாளர்களுக்கு தெரிவித்தல் ஆகியவையே. இவையில்லாமல் நடந்துவருபவர்களுக்கு வழங்கபட்டுள்ள அடையாள அட்டையை வாரம் தோறும் வைகோ கையெழுத்து முத்திரை பதித்து தருவது முக்கிய பணி. அந்த அட்டைக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. ( நாளைக்கு ஆட்சிக்கு வந்தால் அட்டை உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கபடும் என்று எவனோ ஒரு வதந்தி பரப்பிவிட்டதால் ). கள்ளத்தனமாய் முத்திரை குத்தி ஒரு அடையாள அட்டை கொக்கிரகுளத்தில் ஒரு பெருசு கேட்டது 11 வருசமாகியும் இன்னும் நினைவில் இருக்கிறது.

வைகோ சில விடயங்களை மிகநேர்மையாக கையாண்டார். தொண்டர்களுக்கு என்ன உணவு போடப்பட்டதோ அதையே தானும் உட்கொண்டார். தொண்டர்களுடனே உறங்கினார்.தமிழ்நாட்டு தலைவர்களிடையே மிக அரிதாய் இருக்கும் இந்த பழக்கம் அவரிடம் எனக்கு வியப்பையும் அன்பையும் உண்டாக்கியது. முன்னால் ஒரு பிக்-அப்பில் ஈட்டிமுனை இளமாறன் முழங்க பின்னால் நடந்தார் வைகோ. எனக்கு தெரிந்து மாநிலம் முழுக்க தன் கால்களால் அளந்த தலைவன் என்றால் அது வைகோவாகத்தான் இருக்க முடியும்

( வரும் நாட்களில் )

17 மறுமொழிகள்:

 1. >> எனக்கு தெரிந்து மாநிலம் முழுக்க தன் கால்களால் அளந்த தலைவன் என்றால் அது வைகோவாகத்தான் இருக்க முடியும் >>

  மன்னிக்க வேண்டும் நண்பரே! வெளிநாட்டுத்தயாரிப்பு ஸ்போர்ட்ஸ் ஷூ போடாமலேயே - பின்புலத்தில் நீங்கள் குறிப்பிடும் "லாரி வசதிகள்" இல்லாமலேயே - அதுவும் கூட்டம் போடும் இடமெல்லாம் அடி-உதை பட்டுக்கொண்டும், கல்லெறி வாங்கிக் கொண்டும் - மாநிலம் முழுதும் இயக்கம் வளர்த்த மறவர்கள் திராவிடர் கழகத்துக் காலத்தில் ஏராளம் - அதில் கலைஞரும் ஒருவர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

 1. நல்லா எழுதுறீங்க! மகிழ்ச்சி!

  படங்களுக்கான குறிப்புகளை (முடிந்தால் - ஞாபகத்தில் இருந்தால்)
  சேர்க்கலாமே!

 1. செந்தில் அய்யா,

  ம தி மு க விலும் கழக வழக்கப்படி தொண்டர்களுக்கு ,பிரியாணி/சாராயம் வழங்கப்படுகிறதா?

  பாலா

 1. எந்த அனுபவமும் வீணல்ல... இதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்...

  உணர்வுகளால் தொண்டர்களை கட்டிப்போட்ட தமிழகத் தலைவர்களுள் வைகோவும் ஒருவர்... அவருடனான உங்களது அனுபவங்கள் சுவையாக இருக்கிறது... தொடருங்கள்.....

 1. வரவனை,

  அப்ப நீங்க நடக்கலை போல!!! ;)

 1. செந்தில்,
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

 1. மிக அழகான ப்ளோவில் எழுதுறீங்க...அடுத்த தொடர் காண ஆவல்...!!!!

 1. 3:13 PM  
  Anonymous said...

  i am aasath

  why are describe the drama of Vaikko ...

  At 1st seen he had marched against his SISTER

  At next seen he joined with sister ..

  After their sorowful climaxe he need the turning-point with LG and Chenchi ...

  Do you justify any decision of your leader

 1. 4:16 PM  
  Anonymous said...

  //மன்னிக்க வேண்டும் நண்பரே! வெளிநாட்டுத்தயாரிப்பு ஸ்போர்ட்ஸ் ஷூ போடாமலேயே - பின்புலத்தில் நீங்கள் குறிப்பிடும் "லாரி வசதிகள்" இல்லாமலேயே - அதுவும் கூட்டம் போடும் இடமெல்லாம் அடி-உதை பட்டுக்கொண்டும், கல்லெறி வாங்கிக் கொண்டும் - மாநிலம் முழுதும் இயக்கம் வளர்த்த மறவர்கள் திராவிடர் கழகத்துக் காலத்தில் ஏராளம் - அதில் கலைஞரும் ஒருவர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.//

  கலைஞர் மாநிலம் முழுக்க நடந்திருக்க வாய்ப்பே இல்லை. சில போராட்டங்களுக்காக மாநிலத்தின் சில இடங்களுக்கு சென்றிருக்கலாம்.


  மறவர்கள் தான் நவீன திராவிடர்களா? அப்போ ஆதி திராவிடர்கள் என்ன "ஆதி" திராவிடர்களா?

 1. 4:20 PM  
  பீலா said...

  //ம தி மு க விலும் கழக வழக்கப்படி தொண்டர்களுக்கு ,பிரியாணி/சாராயம் வழங்கப்படுகிறதா?//

  அதெல்லாம் தருவாங்க. ஆனா சங்கரமடம் காமகேடிகள் பண்ணுற மாதிரி பொண்ணுங்களை எல்லாம் சப்ளை பண்ண மாட்டாங்க.

 1. >> கலைஞர் மாநிலம் முழுக்க நடந்திருக்க வாய்ப்பே இல்லை. சில போராட்டங்களுக்காக மாநிலத்தின் சில இடங்களுக்கு சென்றிருக்கலாம். >>

  ithukku pathil solla vEndiya avasiyam illai. :)

  >> மறவர்கள் தான் நவீன திராவிடர்களா? அப்போ ஆதி திராவிடர்கள் என்ன "ஆதி" திராவிடர்களா?

  "maRavar" is a sangath thamizh sol. Your 'sindu mudithal' is a vain attempt to distract from the issue.

 1. விளையாட்டுத்தனத்தையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு பொறுப்பா பதிவு எழுதுகிற மாதிரி தெரிகிறது...நடக்கட்டும் நடக்கட்டும், யாராவது பதிப்பாசிரியர் அகப்பட்டாரா? புத்தகமா போடுறதுக்கு...

 1. //விளையாட்டுத்தனத்தையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு பொறுப்பா பதிவு எழுதுகிற மாதிரி தெரிகிறது...நடக்கட்டும் நடக்கட்டும், யாராவது பதிப்பாசிரியர் அகப்பட்டாரா? புத்தகமா போடுறதுக்கு... //  நீங்கள் வக்கீலா இல்ல போலீசா ?

  எது செஞ்சாலும் கண்டுபிடிச்சிடிறீங்க

  :)))))))))))))))))))))))))))

 1. //அதெல்லாம் தருவாங்க. ஆனா சங்கரமடம் காமகேடிகள் பண்ணுற மாதிரி பொண்ணுங்களை எல்லாம் சப்ளை//

  பீலா அய்யா,
  என்ன சொல்றீங்க? கழகக் கண்மணிகள், காமகேடியாருக்கு பெண்கள் சப்ளை பண்றாங்களா,இல்லை காமகேடிகள் கழகக் கண்மணிகளுக்கு சப்ளை பண்றாங்களா?குவார்ட்டருக்கே இந்த லெவல் போதையா?

  பாலா

 1. இந்த மிலிட்டரி உடையில் ஜெ முன்னால் அணிவகுப்பு நடத்தினால் , ஆஹா சூப்பராக இருக்கும்.

 1. /ம தி மு க விலும் கழக வழக்கப்படி தொண்டர்களுக்கு ,பிரியாணி/சாராயம் வழங்கப்படுகிறதா?/

  ஏன் வழங்கினா அங்கபோய்ச் சேர்ந்துக்குவீங்களாக்கும். என்ன ஜென்மமய்யா நீர்!

  யாராவது பாலாவுக்கு பிரியாணியும் குவார்ட்டரும் வாங்கிக் கொடுங்களேன், அதே நினைப்பா அலையறாருல்ல, (கட்டிங் அடிக்காமலே பாலா உளறுவாள்ளே, அவாளுக்கு குவார்ட்டர் வாங்கி கொடுத்தா...- இது தண்டமும் கோமணமும் சுமந்த பாலாவின் மனசாட்சி)

 1. செந்தில்,
  மிக சுவாரஸ்யமான தொடர்..கலைஞர் அளவுக்கு இல்லையென்றாலும் சில கோணங்களில் வைகோ மேல் மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர்களில் நானும் ஒருவன் (இப்போது அது அதல பாதாளத்துக்கு சென்று விட்டதை ஜீரணிக்க முடியவில்லை) .நீங்கள் இன்னும் மதிமுக-வில் நீடிக்கவில்லை என்பதே என் அனுமானம் .

  பல்வேறு நிகழ்வுகளில் தொண்டர்களை ஓரளவு நல்ல பாதையில் செலுத்தியவர் வைகோ என்ற நன்மதிப்பு இன்னும் இருக்கிறது .ஆனால் அம்மாவுக்கு அவர் அடிக்கும் ஓவர் ஜால்ரா தான் இடிக்கிறது.