Friday, January 05, 2007

@ 1:56 PM எழுதியவர்: வரவனையான்

அந்த நடைபயணம் மிக அற்புத அனுபவங்களையும் நண்பர்களையும் எனக்கு அளித்தது. ஜூலை 26 மதுரையில் இருந்து கன்யாகுமரிக்கு கிளம்பினேன்.சரியாச்சொன்னால் வயது 16 அப்போது. வாழ்க்கையில் தனியாக 300 கிலோ மீற்றர் பயணம் முதன் முதலில். நாகர்கோவில் தாண்டிய பிறகு லேசாக பயம் வந்தது. 51 நாள் நடக்கனுமா? எதுக்கு இந்த வேண்டாத வேலை என்கிற எண்ணம், நாகர்கோவிலில் இருந்து கன்யாகுமரி செல்லும் 16 கிலோ மீற்றர் தூரமும் இருந்தது. என் வீட்டில் நான் நடைபயணம் வைகோவுடன் செல்வதை ஊக்குவித்தனர்.ஒரு நாளைக்கு செலவுக்கு 100 ரூபாய் என்கிற வகையில் 10 நாட்களுக்கு பணம் கொடுத்து இருந்தார்கள். இரண்டு முறை தொலைபேசியில் அழைக்கவேண்டும் என்பது மட்டுமே நிபத்தனை. எதுவரை தொடரமுடியுதோ அது வரை நடந்து வா முடியலை என்றால் வீட்டுக்கு வந்துவிடு என்றே சொல்லி அனுப்பி இருந்தார்கள்.


கன்யாகுமரி போய் இறங்கி இங்க வைகோ கட்சிகாராங்க எங்க தங்கி இருக்காங்க என்றேன் ஒரு டீக்கடையில் நின்றிருந்தவரிடம். " எந்த ஊருப்பா தம்பி " என்றார் அவர். கேட்டவர் "வாலஜா" அசேன் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். வாலஜா அசேன் அவர்களை அதுவரை சந்தித்ததில்லையே தவிர நிரம்ப கேள்வி பட்டுள்ளேன். திமுக சீட்டு கொடுக்கவில்லை என்று சுயேச்சையாக நின்று வெற்றி பெற்று திமுக'வில் மீண்டும் இனைந்தவர். அரசினர் விடுதிக்கு அழைத்துப்போனார். அங்கு நெடு நெடுவென மிக இளைமையான தோற்றத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் என்னை அறிமுகபடுத்தினார். அவர் நான் அண்ணணாக வரித்துக்கொண்ட சௌரிராசன், மறுமலர்ச்சி திமுக'வின் தொண்டரணி பயிற்சியாளர். "நந்தன்"அருணாச்சலதின் மகன்.


பேரணீஈஈஈஈ..............

மெய்யடி சேர் (attetion)

பேரணீஈஈஈஈஈஈஈஈ ...........

இடதடி வை( stand at easy )

இடம் வலம் இடம்... இடம் வலம் இடம்...இடம் வலம் இடம்...இடம் வலம் இடம்...(left right left)


ஒரு சுவர்க்கோழி தன் உடம்பினை விட 80 மடங்கு அதிக சத்தம் எழுப்புமாம். சௌரி அண்ணா காலை கவாத்து பயிற்சிக்கு வந்து ஆணைகள் இட்டால் இந்த உடம்பிலிருந்து இவ்வளவு பெரிய ஒலி எழுப்பமுடியுமா? என்றே சந்தேகிப்பேன். மறுமலர்ச்சி திமுக தொண்டரனியில் அக்காலத்தில் பணியாற்றினால் ஒரு ராணுவ அமைப்பில் பணியாற்றிய அனுபவம் கிடைக்கும். அந்த அளவிற்கு சௌரி அண்ணாவின் பயிற்சி இருக்கும். திமுக தொண்டரணி போல் கதவு திறந்துவிடவும் , டீ வாங்கி கொடுக்கவும் அது இல்லை. வைகோவின் உள்மனதிலிருந்த சாகசவாத எண்ணங்களுக்கு வடிகாலாய் மதிமுக தொண்டரணி உருவாக்கபட்டது. எங்கும் எதிலும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கபட்டது. கவாத்து பயிற்சி ஆணைச்சொற்கள் முழுவதும் தமிழில் இருந்தது, கொஞ்சம் கவர்ச்சியாய் இருந்தது எனக்கு. எதோ ஒரு ரகசிய நடவடிக்கை மேற்கொள்ள உருவாக்கபட்ட அமைப்பாக நாங்கள் நம்பிக்கொண்டோம்.

Photobucket - Video and Image Hosting
வைகோ சொந்த ஊரான கலிங்கபட்டி அருகே, இரவு உணவு அருந்திக்கொண்டிருக்கிறார். அருகில் சு.குருநாதன், கூவாகம் மதியழகன். பின்னால் பச்சை நிற பனியன் அணிந்து பாதுகாப்பு பணியில் நானும் "உளறுவாய்" முருகனும்.


பொறுக்கிகள் , பெரியமனிதர்கள் , திருடர்கள் , இளைஞர்கள், வேசித்தனம் கொண்ட பெண்கள், சூதாடிகள், என ஒரு திருவிழாக்கூட்டதிற்கு ஒப்பான தன்மைகளோடு அந்த நடைபயணம் துவங்கியது. வைகோ கன்யாகுமரிக்கடலில் தன் கால்களை கழுவி புது ஷூ க்கள் அணிந்து புறப்பட்டார்.
அங்கு திருட வந்திருந்த ஒரு தோழரின் முதல் போணி நான் தான்.வைத்திருந்த பணம் எல்லாம் அவரின் திறமையால் அவருக்கு சொந்தமாகிவிட்டது

இனி வேறு வழியில்லை முடியாவிட்டாலும் நடந்துதான் ஆகவேண்டும் என்கிற நிலையில் நான். தேனீர் குடிக்ககூட காசில்லை. சோர்வாய் இருந்த என் முகம் பார்த்து சௌரி அண்ணா அழைத்து என்னவென்று கேட்டார் , சொன்னேன். இவ்வளவுதானா இந்த என்று 500 ரூபாய் கொடுத்து பத்திரமாய் வைத்துக்கொள், இனி உன் வேலை என்னுடன் இருப்பதுதான் என்று பணித்தார். அப்போது துவங்கியது மதிமுக மேல்மட்ட தலைவர்களின் உறவு.

11 மறுமொழிகள்:

 1. உள்ளது உள்ளபடி,சார்புநிலை எடுக்காமல், ஆவணப்படுத்துவதற்கு
  வாழ்த்துகள்!

 1. வரவனை , கொஞ்சம் இல்லை நிறையவே சுவாரஸ்யமான ஆளு தான்.தொடருங்கள் காத்திருக்கிறோம்.

 1. வரவனை,
  என்ன சொல்லி வச்சு செய்றீங்களா?

  போன மாசம் போன்ஸ்
  இப்ப நீங்க...........

  சிவஞானம் என்பதில் சிவா மட்டும்
  தெரியுது....ஞானம் காணோம்!

  வேணாம் னு நினைப்பா? இல்லே
  இல்லை னு நினைப்பா?

 1. செந்தில், நாம் சந்தித்த வேளை இவ்வளவு அனுபவங்களையும் கேட்க நேரமில்லாமல் போயிற்றே என தவிக்கிறேன்!

  தொடருங்கள்!

 1. செந்தில்,
  சும்மா சொல்ல கூடாது, பெரிய ஆள் தான் நீங்க!!
  நடந்து முடித்தீர்களா??

 1. செந்தில்,
  நல்ல பதிவு.
  தொடருங்கள்.
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

  மிக்க நன்றி.

 1. உங்கள் தொடரை ஆவலோடு படித்து வருகிறேன்.

 1. மீட்டரை மீற்றர் என்று தவறாக எழுதியிருக்கிறீர்கள்.

 1. /நடந்து முடித்தீர்களா?? /


  ம். வைகோவுக்கு சுகர் கம்ப்ளெயிண்ட் சரியாகறவரைக்கும்

 1. 6:37 PM  
  ஓல்டுமங்க். said...

  "ம். வைகோவுக்கு சுகர் கம்ப்ளெயிண்ட் சரியாகறவரைக்கும்" சூப்பர் சுகுனா.

  நடைபயணம் என்கிற போராட்ட
  முறையையே கேவலப்படுத்திய ஜென்மம் இது.

  இந்த செத்த பொணத்த பத்தி எழுதறத
  விடமாட்டீங்களா தலைவா. மண்ட
  காயுது.

 1. //At 7:36 AM , மிதக்கும் வெளி பதிவது
  /நடந்து முடித்தீர்களா?? /


  ம். வைகோவுக்கு சுகர் கம்ப்ளெயிண்ட் சரியாகறவரைக்கும்//

  :))))