Tuesday, January 30, 2007

@ 6:32 PM எழுதியவர்: வரவனையான் 7 மறுமொழிகள்

மொகரம் பண்டிகை அதுவுமா கஸ்டம்ஸ் லீவு - அத சாக்கா வச்சு நானும் மதியம் அறைக்கு வந்து நிம்மதியா தூங்கிட்டு இருந்தா 4 .45 க்கு சொல்லி வச்சா மாதிரி மாம்ஸ்ட இருந்து போன். வழக்கமா யாராவது அனானியா வந்து கமென்ட் போட்டாகூட "ஏலே செத்த நேரம் செவனே இரு மாப்ளே"னு போன் போட்டு இம்சை பன்னுவாரு. இப்போ எவேன் செஞ்ச கொடுமைக்கு என்னைய இம்ச பன்னப்போறாறோன்னு போன எடுத்தா. அன்பொழுக ஏன் மாப்ள சென்னைக்கு வரென்னுட்டு வரல்லன்னு கேட்டாரு. யாரு சொன்னது வரலைனு நான் டிக்கட்ட 1 தேதிக்கு மாத்தி போட்டேன்ல 3 தேதி பாக்கலாம் மாம்ஸ்ன்னு சொன்னேன். அப்புறம் பேச்சு மலச்சிக்கல் பற்றி போச்சு " மாப்ள முடியல மாப்ள தம் இல்லாம போகவே மாட்டேங்குதுன்னு ஒரே பொலம்பல். அப்புறம் இன்னைக்கு மொகரம் ஏதும் வெசேசம் இல்லையான்னு கேட்டேன். அங்க ஆரம்பிச்சாரு பிளேட பக்கீர்ட பேசுன மாதிரி மொகரம் கண்டுபிடிச்சது யாருன்னு துவங்கி ஒவ்வொரு ஊருலையும் எப்படி கொண்டாடுவானுங்கனு பிச்சி பிடுங்கி போட்டாரு. அப்புறம் சென்னைக்கு வாரத பத்தி பதிவுல போட்டுரு மாப்ளன்னு சொன்னாரு அதான் இந்த பதிவு. எல்லாம் பேசி முடிக்கிறப்ப கேட்டேன் "இப்ப எங்க மாமா இருக்கிங்கனு டீ சாப்பிட்டேன் அப்படியே தம்மடிச்சிட்டிருந்தேன் உன் நெனைப்பு வந்துச்சு அதான் போன போட்டேன்னு சொன்னாரு. அடப்பாவி அப்போ இன்னும் நீ தம்ம விடலையா ?????

பின்குறிப்பு : சென்னை வாழ் மக்களே உங்களுக்கு நல்ல வாய்ப்பு. வரும் 3 ம் தேதி அனானிகுல தெய்வங்களை நேரில் காண. பெங்களுரூரில் இருந்தும் மிகமுக்கிய கொலசாமியும் கலந்து "கொல்கிறது".

Thursday, January 25, 2007

@ 2:59 PM எழுதியவர்: வரவனையான் 100 மறுமொழிகள்

வரலாறுகள் சொல்லப்பட்டவையாக இருந்து வந்திருக்கிறது தமிழ் மக்கள் மத்தியில், அதை கண்டுபிடிப்பாகவும் எழுதப்படவேண்டியவைகளாகவும் மாற்றியது ஆங்கிலேயரின் வருகை.வர்த்தகம் செய்யவே உண்மையில் அவர்கள் வந்தனர் ஆனால் இங்குள்ள நிலைமைகளை பார்த்தபின் தான் முடிவு செய்தனர் இந்த நாட்டையே நாம் எடுத்தாலும் கேட்பதற்கு நாதியில்லை அந்த அளவிற்கு மக்களை அடிமைபடுத்தி இருக்கின்றனர் ஒரு சிறு கும்பல்.

மாவீரர்களாக எமக்கு காட்டப்பட்டவர்களின் வரலாறு ஒரு ஒற்றை தன்மையிலிருந்து வெளியாகவில்லை என்பது மாறிக்கொண்டிருக்கும் காலம் உணர்த்துகிறது. இப்படித்தான் முன்பு ஞாயிறு மதியம் மட்டும் விருது பெற்ற படங்கள் அரசு தொலைக்காட்சியில் போடுவார்கள், அப்படி ஒரு நாள் "கப்பலோட்டிய தமிழன்" போட்டார்கள். அதில்தான் முதன் முதலில் வாஞ்சிநாதன் பற்றி அறிந்துகொண்டேன். அதில் கே.பாலாஜி நடித்திருப்பார்( சுஜாதா பிலிம்ஸ் பாலாஜி - சரியான தேர்வு ). வெள்ளைக்கார ஆஷ் துரையை சுட்டு கொன்று விட்டு தானும் தன் வாயினுள் துப்பாக்கியை வைத்து சுட்டு தற்கொலை செய்து கொள்வதை போல காட்சிஅமைக்க பட்டு இருக்கும். வெள்ளக்காரன் கொடுங்கோல் ஆட்சி செய்ததாக பள்ளிகள் எனக்கு கற்பித்தன. அரசியல் பயின்ற பிறகு அவனைவிட கொடுமை செய்தவர்கள் ஆயிரம் ஆண்டுகளை தாண்டியும் இன்னும் எம்மை அடக்கி ஆள்வோர்கள் , சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் எம்மை அடிமையாக்க முனைவோர் தம் குற்றத்தை பெருமையாக பீற்றித்திரியும் உண்மை விளங்கியது.


ஆஷ் துரை மாலை நேரத்தில் காலாற நடைபயிற்சி மேற்கொள்ளும் பழக்கம் உள்ளவர். அப்படி ஒருநாள் வழக்கமாக போகும் ராஜபாட்டைவிட்டு விலகி வேறு பாதையில் போகிறார். உடன் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தரை பின்னால் தனது சாரட்டை மெதுவாக குதிரைகளை நடத்தி கூட்டி வரச்சொல்லிவிட்டு நடந்துகொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் கேட்கிறது. நடைப்பயிற்சியில் இருந்தவர் ஓசை வந்த திசை நோக்கினார் . நாலைந்து குடிசைகள் கொண்ட குடியிருப்பு பகுதியில் இருந்து ஓசை வந்ததை உணர்ந்த ஆஷ் துரை அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் குதிரகளை நடத்தி அழைத்துவந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார். ஏன் என்று வினவிய துரைக்கு "அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை என்றும் நீங்கள் அங்கு போகக்கூடாது என்றும் சொல்லுகிறார். ஓரளவு தமிழ்நாட்டு ஜாதிய சூழல் விளங்கிய ஆஷ் துரை, ராவுத்தரை பார்த்து நீ போய் பார்த்து வருவாயா எனக்கேட்கிறார். "சரி துரை நான் போய் பார்க்கிறேன் என்றபடி சேரிக்குள் போன முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார் " மொத பிரசவம் துரை சின்ன பொண்ணு ரெண்டுநாள கத்திட்டு இருக்காளாம், பிள்ளை மாறிக்கிடக்காம்" எங்கிட்டு துரை பொழைக்கபோகுது என்றார். ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக்கேட்க , அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க அய்யா பின்ன எப்படி வண்டு கட்டி டவுணுக்கு கொண்டு போறது என்றார் முத்தா ரவுத்தர்.


இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி.ஆஷ் துரை இறங்கி அக்குடிசை நோக்கி போனார். அவரை தடுக்க முனைந்த ராவுத்தரின் முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. உள்ளே சென்று பார்த்து வந்த துரையின் மனைவி உடனே மருத்துவமனை கொண்டு சென்றால் ஒரு உயிரையெனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார். அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையொட்டியை பணித்தார் துரை. ஓடிப்போன ராவுத்தர் ஊரின் மேற்குபகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது துரையின் வண்டியொட்டி எனத்தெரிந்த ஒரு பார்ப்பணர் வழிமறிக்கிறார். என்ன விடயம் என்வென்று சொல்லி ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வந்தார். அந்த வழியாய் வண்டிப்பாதை அக்கிரஹாரத்தை தாண்டிதான் சென்றாகவேண்டும். சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டு மறிக்கப்படுகிறது. ஒரு சேரிப்பெண்ணை ஏற்றப்போகும் வண்டி இப்பாதை வழியே போகக்கூடாது என்று பார்ப்புகள் வழிமறித்து விடமறுக்கிறார்கள். வண்டி கொடுத்த குடியானவனையும் ஊர் நீக்கம் செய்துவிடுவோம் என எச்சரிக்கிறார்கள். வண்டி கொண்டு வர சொன்னது துரையும் அவரின் மனைவியும்தான் என்று விபரம் சொன்ன பிறகும் ஏற்க மறுக்கிறார்கள் . இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார் ராவுத்தர்.

இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள், தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார். குதிரையோட்டியின் பக்கதிலேறி அமர்ந்து கொண்டார். வண்டி அக்கிரஹாரம் நுழைகிறது. பார்ப்புகள் கூட்டமாய் வழிமறிக்கிறார்கள் "ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது"என்கிறார்கள். வழிவிட சொல்லிப்பார்த்தார் மறுக்கவே வண்டியைக்கிளப்பு என்று உத்தரவிடுகிறார். மீறி மறித்த பார்ப்புகளின் முதுகுத்தோல் துரை அவர்களின் குதிரைசவுக்கால் புண்ணாக்கபடுகிறது. அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு காப்பாற்றப்பட்டாள். ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான் அவன் பெயர் வாஞ்சிநாதன். அப்போது எடுத்த சபதம்தான் வாஞ்சிநாதனை கொலைசெய்ய தூண்டியது. சனாதான காவலனாக , மனித உயிரைவிட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு இன்று வரை மறைக்கபட்டு வருகிறது. இதுவும் ழான் வோனிஸ் எழுதிய Ash Official Notes எனும் குறிப்புகளில் அரசு ஆவனக்காப்பகங்களில் தெரிந்தே உறங்கிக்கொண்டிருக்கிறது இனி மறைந்திருக்கும் வரலாறுகள் ஒவ்வொன்றாய் வெளிக்கிளம்பும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

Monday, January 22, 2007

@ 2:38 PM எழுதியவர்: வரவனையான் 125 மறுமொழிகள்

8,4வது தெரு,கோபாலபுரம் என்கிற முகவரி 60 ஆண்டுகளாய் தமிழர்களின் முகவரியாய் இருந்து வருகிறது , சங்கரமடத்துக்கு எதிரான மாற்று அதிகார மையமாக 30 ஆண்டுகளாக இரும்புக்கோட்டையாக இயங்கிவருகிறது. எப்படி பார்ப்புகளின் அதிகார மையமான சங்கரமடத்துக்கு இந்தியாவின் முன்னோடிகளெல்லாம் வாராமல் இருப்பதில்லையோ அது போல கோபாலபுரத்தில் கால் வைக்காத தலைவர்களே இல்லை . பெரியாரில் துவங்கி அண்ணா எம்ஜியார் என்று அந்த பட்டியல் இன்னும் நீண்டுகொண்டே போகிறது. பலபத்தாண்டுகளாக ஒரு இனத்தின் செயலகமாக அது இயங்கி வருகிறது. சமயத்தில் பன்றிகளும் வரும், புலித்தோல் போர்த்திய நரிகளூம் வந்தழுது செல்லும். இப்படி ஒரு நபர் ஒரு வீட்டுக்கு வந்தால் அவர்களை வரவேற்பது தமிழர் பண்பு,திராவிடக்கலாச்சாரம். அது போல் பகுத்தறிவது என்பது சுயமாய் சிந்திப்பது , அடுத்தவனை நான் என்ன சிந்திக்கிறேனோ அது போக் சிந்தி அது போல் நட என்று எங்கும் அது அதிகாரம் செலுத்துவதில்லை. பகுத்தறிவிற்கும் பொது உரிமை சிந்தனைக்கும் மக்கள் பற்றி நலன் மட்டுமே அக்கறை. மக்கள் நலன் பற்றி ஒரு குழு சிந்தித்தால் அதிர்ச்சி அடைபவர்கள் தன்நலன் குறித்து மட்டும் சிந்திப்பவர்களாக மட்டுமே இருக்க முடியும் . அப்படி அடைந்த அதிர்ச்சி இன்னும் சிலருக்கு தீரவில்லை சும்மாவா 2000 வருசம் கைக்கொண்டிருந்த அதிகாரமாயிற்றே எப்படி போகும். அந்த மீளா அதிர்ச்சியை அங்கங்கே "மௌன குசுவாக " விட்டுக்கொண்டு அலைகிறதுகள். "அது ஆச்சே 40 வருசம் சூத்தரவாள் ஆட்சிக்கு வந்து " இது அதுகள் சமீபமாய் குசுவியது. தூக்கத்தில் கெட்ட சொப்பணம் கண்டு அலறி எழுவதுபோல் அவாள்களுக்கு இப்போ கெட்ட சொப்பணமாய் இருப்பது இந்த சூத்திர ஆட்சி. அலறி அலறி விழிக்கும் குழந்தைபோல் நாளும் ஒரு அதிகாரம் பறிபோவதை தாங்கமுடியாமல் தவித்துதிரியும் அதுகள். இவன் என்ன செய்தாலும் விமர்சித்தார்கள். தும்மினால் " இதோ தும்மிவிட்டான், அடுத்து சளி பிடிக்கும், அது சயரோகமாகும் அப்படியே செத்துபோய்விடுவான் " என்று ஒரு நாள், இதோ இப்போ அவன் கைகளை உயர்த்தி பேசுவது இயல்பில்லை அது எங்களை அடிக்க எடுக்க பட்ட முயற்சி என்று க்ய்யோ முறயோ என ஒரு நாடோடிக்கும்பலின் தொனியில் கூச்சலிடுகின்றன. ஒருவர் வீட்டுக்கு போவதானல் முன்கூட்டி தெரிவிப்பது ஒரு இயல்பானசெயல். அதுவே ஒரு தலைவரின் வீடென்றால் சந்திக்க நேரம் பெற்று செல்லுதல் தான் மிகச்சரி. அப்படி அனுமதி இல்லாமல் ஒருவன் வந்தானென்றால் அது பிச்சைக்காரனாகவோ பத்துவீட்டு சோத்து ருசிகண்ட பரதேசியாகவோதான் இருப்பான். அப்படி ஒரு பரதேசி இந்த கோபாலபுரக்கோட்டைக்கும் வந்தது. ஆரியக்கொழுப்பு அக்காளை வாடி, போடி என்று பேசவைக்கும் , எவன் வீட்டுக்குள்ளும் திறந்த வீட்டில் நாயென நுழையவைக்கும் அப்படி ஒரு நாள் அந்த தலைவன் வீட்டுக்கும் ஒரு நபர் நுழைந்தார் அனுமதி பெற்று அல்ல வழமையாய் திறந்த வீட்டில் நுழையும் ஒன்றைப்போல், பிறகு அந்த வீட்டை விட்டு வெளியே வந்த பின் அது சொன்னது "இனி கருணானிதி வீட்டில் கால்வைக்க மாட்டேன் " என்று. நடந்தது இதுதான்


அனுமதியிலாமல் வாசல் வந்து நின்ற அது அங்கு இருந்த வரவேற்பாளரிடம் சொல்லியுள்ளது " நான் அவருக்கு ஒரு புத்தகத்தை கொடுத்து விட்டு போய் விடுகிறேன்" என்று. உதவியாளர் மூலம் தகவலறிந்த கலைஞர் உள்ளே வரச்சொன்னார். உள்ளே போன அது தன் கையில் இருந்த "பகவத்கீதை" புத்தகத்தை வழங்கியது. முன்பே சொல்லி வைத்ததுபோல் அழைத்து வந்த பத்திரிக்கையாளர் படம் பிடித்தார். உடனே அது கிளம்பியது . கிளம்பிய அதுவை தடுத்து நிறுத்திய கலைஞர். பரிசு கொடுத்தீர்கள் நன்றி, அது போல் இதோ என் பரிசு என்று மானமிகு.ஆசிரியர் கி.வீரமணி எழுதிய "கீதையின் மறுபக்கம்" எனும் நூல் . "செருப்பாலடித்து கூட அனுப்பி இருக்கலாம் இப்படி செய்ஞ்சுட்டார் கருணாநிதி" " இனி இந்த பக்கம் வரவே மாட்டேன்" "அவமானப்படுத்திவிட்டார்" மறுநாள் எல்லா ஏடுகளிலும் அதன் ஊளை கேட்டது. அப்போதெல்லாம் அம்பிகள் "வாயிலும் அதிலும்" ( காதிலும் என்றும் படிக்கலாம்) கையை வைச்சுண்டு மூடிக்கொண்டிருந்தனர். இப்பவும் சொல்கிறோம் வந்தது யாராக இருந்தாலும் நட்பு நாடி வந்தால் நட்பும் பகை நாடி வந்தால் கோபாலன் பெற்ற "பரிசுகளும் " எப்போதும் அங்கு ஆயுத்தமாகவேயுள்ளது.

Friday, January 19, 2007

@ 3:51 PM எழுதியவர்: வரவனையான் 11 மறுமொழிகள்

ஒரு முழுமையான தமிழ்நாடே அங்கு இருப்பதுபோல் இருக்கும் . ஒரு பக்கம் சென்னை ராயபுரம் ராமனாதன் ( வைகோ ஜெயலலிதாவால் "பொடா" சட்டத்தில் உள்ளே வைக்கபட்டபோது அவர் வெளியே வரும் வரை கருப்புசட்டையும் தாடியுமாய் இருந்தார் ) " ங்கொத்தா இன்னா வெய்லு அடிக்குதுபா" அப்படின்னு டயலாக் விட்டுகிட்டு இருப்பார், இந்த பக்கம் "கட்டஞ்சாயா (பிளாக் டீ ) கொடுங்க மாஸ்டர்" ந்னு டீ கடைல கன்யாகுமரி மாவட்ட சந்தனகுமார் நிற்பார், ஏனுங்க இங்க பொம்பிளைங்க தங்குறதுக்கு எங்கங்க ஏற்பாடு பண்ணிருக்காங்க கோவை மாவட்ட மணியம்மாள் கேட்டுக்கொண்டு நிற்பார் . வடமாவட்ட தமிழும் நெல்லைத்தமிழும் , மதுரைத்தமிழும் தஞ்சைத்தமிழும் ஒன்றாய் கலந்து அங்கு புழங்கும்.
அதுல மதுரக்காரய்ங்க சேட்ட இருக்கே தாங்க முடியாது. தூத்துக்குடி,நெல்லை தோழர்கள் சண்டைன மொத ஆளா நிப்பாய்ங்க ஆன மதுரகாரய்ங்தான் சண்டைய இழுத்து விட்டு போய்ட்டே இருப்பாய்ங்க. அதுல போஸ்ன்னு ஒரு வார்டு செயளாலர் வந்து இருந்தாரு. அவருக்கு மதுரைக்கு வெளியே எல்லாரும் ஈளிச்சவாயனுங்கனு நெனைப்பு. " ஏலேய் அந்த டோரிக்கண்ணேன் என்ன மொறச்சுக்கே இருக்கான்டா" அப்படின்னு கூட இருக்கிற அல்ற சில்றைகட்ட சொல்லிட்டு போய்ட்டே இருப்பார். அவய்ங்க போயி அவன்ட்ட "என்ன மேட்டரு, எங்க மாம்ஸ மொறாய்க்கிறியாம்ல ( தமிழை கவனியுங்கள் ) மாணாம்ப்பா போட்டு போய்க்கே இருப்போம், அப்புறம் வீட்டுக்கு புள்ளையா போய் சேரமாட்ட " அப்படின்னு அந்த டோரி கண்ணன அம்பா சொல்லுவாய்ங்க . அவன் இவனுங்க எந்த மொழில பேசுறனங்கன்னு புரிஞ்சுகிக்றதுக்கே 10 நிமிசம் ஆகும். " அண்ணே என் கண்ணே அப்படித்தாண்ணே "னு சொன்ன பிறகு தான் உட்டு வருவானுங்க. அடிச்சா ஒரே அடில ஊருக்கே கெளம்பி போயிருவானுங அப்படி ஷோ காட்டுறது. அது மதுரகாரங்களுகே உரியது. வடிவேலு வேற எங்கும் கேரக்டர் பிடிக்கிறதில்ல அப்படியே மதுர மக்கள்தான். ஆனா இன்னொன்னு இவய்ங்கள்ள எவேன் கேடி எவன் டுபாக்கூர்னே தெரியாது. நம்ம போஸ் குரூப் மாதிரி நினைச்சு பாஸ்கர்சேதுபதி அண்ணன்ட வாங்கி கட்டுனவனும் உண்டு. பாஸ்கர் சேதுபதி மாநில தொண்டரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். வைகோவுடன் எல்லா நடைபயணத்திலும் கொஞ்சம் குண்டாய் மாநிறமாய் அவர் பின்னால் நிற்பார்.இது போக சாப்பாட்டு ராமனுங்க ஒரு குரூப்பு அதில இருப்பாய்ங்க. அவய்ங்க கரைச்சல் தனியா இருக்கும். "முந்தா நாளு கரிவலம்வந்த நல்லூர்ல போட்டாங்க பாரு ஒரு சாப்பாடு அதான் சூப்பர்". "ஏய் வெசயம் தெரியுமா திங்கள்சந்தைல கோழி பிரியாணி போட்டானுங்கல்ல நம்ம சேலம் ரங்கன் ரெண்டு பொட்டனம் வாங்கி சாப்பிட்டு புடுங்கிகிச்சிபா"ன்னு பேசி சிரிச்சுகுவானுங்க. அது போக சூதாடுபவர்கள் , கஞ்சா அடிப்பவர்கள் தண்ணி அடிப்பவர்கள் இவர்கள் எல்லாம் எப்படித்தான் மாவட்டம் எல்லை எல்லாம் கடந்து ஒன்றாவர்களென்பது எனக்கு பெரிய ஆச்சரியமளிக்கும். வைகோவிற்கோ பயணம் புறப்பட்ட 6 - 7 நாட்களில் பெரும் தலைவலியாய் உருவெடுத்தவர்களிவர்கள்தாம்.

( தொடருவேன்)

Sunday, January 14, 2007

@ 3:19 PM எழுதியவர்: வரவனையான் 8 மறுமொழிகள்


பதின்ம வயதுகளில் நண்பர்கள் சகமாணவிகளையோ அல்லது சமவயது பெண்களை டாவடித்து கொண்டு திரியும் பொழுதுகளில் நான் கொஞ்சம் வயதில் முதிர்ந்த பெண்களை சைட் அடிப்பேன். 19 வயதில் ஒரு 23- 24 வயதுள்ள பெண்களை டாவடிப்பது என் கூட்டாளிகளில் நான் மட்டுமே. இது நண்பர்கள் மத்தியில் ஒரு கேலிப்பொருளாய் ஆகியது. கிண்டலான கிண்டல் என் மீது. காலம் செல்ல செல்ல ஒன்று விளங்கியது . இது தகாச்சிந்தை என்று. பிராய்டை படித்த பின்னும் இன்னும் சுய மனவிசாரணை செய்து பார்த்த பின் கொஞ்சம் உண்மை விளங்கியது. 6 வயதில் UKG (upper kinder garden)படித்துக்கொண்டிருந்தேன். மதிய வேளை எல்லாக்குழந்தைகளும் கட்டாயம் உறங்க வேண்டும். அப்படி உறங்க வைப்பதே ஒரு ஆயாவின் ( இங்கு Baby sitter என்று வைத்துக்கொள்வோம் - ஆயா என்றால் கிழவிதான் எனக்கு நினைவுக்கு வருவதால் ) வேலை. அங்கு இருந்த பேபி சிட்டர் வயது 20 இருக்கும் ( எப்பவும் தாவணி போட்டு லேசான எத்துபல் கொண்ட அந்த உருவம் இன்னும் மனதில் ) . அது போன்ற ஒரு மதியம் அந்த பெண் என்னை தவறாக பயன்படுத்திக்கொண்டாள். என்ன நிகழ்கிறது என்று தெரியாத வயது, தூங்க வில்லை என்றால் ஆசிரியையிடம் சொல்லிடுவாள் எங்கிற பயம் மட்டுமே என்னிடம். பின் விடு திரும்பிய பிறகு இயற்கை அழைப்பை ஏற்க முடியாமல் தவித்த போது வீட்டில் கவனித்து மருத்துவரிடம் போய் ஊசி போட்டு வந்து எனக்கு முதுகில் ரெண்டு விழுந்தது. " எப்பவும் கையிலேயே பிடிச்சிகிட்டு திரிஞ்சா புண்ணாகாம என்ன செய்யும் " என்று ஏச்சு வேறு.


எனக்கறிந்த வகையில் இதுபோன்ற Child abuseகளை சந்திக்காமல் இருப்பவர்கள் மிகக்குறைவு. உங்கள் நினைவுகளை புரட்டிப்பார்த்தால் எங்கோ யாரோ தவறாக பயன்படுத்தி இருப்பார்கள். அப்படி வயதில் முதிர்ந்தவர்களால் பயன்படுத்த படாதவர்கள் பாக்கியவான்கள். கவர்ச்சி எங்கிற பெயரில் வக்கிரங்களும் செய்தி என்கிற பெயரில் உள்மன விகாரங்களாகவும் வெளிவரும் தமிழ்நாட்டு தினசரிகளில் எங்கோ ஒரு மூலையில் வரும் இது போன்ற செய்திகளை காண நேரிட்டால் லேசான பதைப்புடன் தாண்டிச்செல்வேன். ஆனால் நொய்டா படுகொலைகளை தவிர்க்க இயலா காரணத்துடன் அதன் செய்திகளையும் அதன் பின் ஏற்பட்டுள்ள நிலைமைகளை உள்வாங்கியே தீரவேண்டியுள்ளது. நெஞ்சம் உண்மையில் பதைக்கிறது , இத்தனை குழந்தைகள் கொடுரமாக பாலியல் ரீதியாக வதைக்குள்ளாக்கபட்டு பின் கொல்லபட்டுள்ளார்கள். இதை ஒரு இயற்கை பேரழிவாகவோ அல்லது அரசியற்காரணங்களால் ஒரு இனமக்களை கொன்று குவிக்கும் அரசின் இனஒழிப்பு நிகழ்வாக கருதி கண்டனங்களோ அல்லது எதிர்வினையோ பயன்படாது என்பதே என் கணிப்பு. மக்களையும் அரசையும் அதன் அதிகாரிகளையும் விழிப்புணர்வு அடையச்செய்வதே சரியான முடிவாக இருக்கும்.

இந்த நிலையில் மொனிந்தர் சிங்கும் அவனின் சக கொலையாளியான வேலைகாரனும் ஒரு விடயத்தை தெரிவித்ததாக செய்திகள் வருகின்றன. அது மனித மாமிசம் உண்ணவே கொலை செய்தோம் என்பதாகும். இந்திய சமூக அமைப்பியல் எங்கிற கருத்தியல் தளதத்தில் இருந்து பார்த்தால் ஒரு குழந்தையை கொன்று தின்பதை விட அவர்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவது அதிக குற்றமாகவும் தங்கள் குழந்தைகளுக்கு அது அவமானம் தேடித்தரும் விடயமாகவும் கருதப்படும். அவன் தன்னை ஒரு மனநோயாளியாக காட்டிக்கொள்ள விழைவது தெரிகிறது. இது பற்றி சகோதரி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த்த பொழுது கோபமாய் சொன்னார்கள் "அவனை எல்லாம் கறி கறியாய் வெட்டி போடனும்டா " என்று. இதே சகோதரி மரணதண்டனைக்கு எதிரான கருத்துக்கொண்டவர் என்பது இங்கு சொல்லிக்கொள்கிறேன். அதுவும் அங்கு குழந்தைகள் காணமல் போவது நீண்ட நாளாய் நடந்து வந்திருக்கிறது , பள்ளி பருவத்தில் நண்பன் ஒருவன் அடிக்கடி வீட்டை விட்டு ஓடிப்போவான். பிறகு அவன் அப்பா சித்தப்பா மாமா எல்லாம் தேடி ஒரு 50 கிலோ மீற்றர் ரேடியஸில் பிடித்து வருவார்கள் அல்லது கையில் வைத்திருந்த காசு செலவாகி தானே வீடு திரும்புவான் .இது ஒவ்வொரு தேர்வு முடிவின் போதும் நிகழும் , பின்னொரு நாள் தன் மிதிவண்டியுடன் காணமல் போனவன் நீண்ட நாளாய் வரவில்லை. ஆறு மாததிற்கு பின் தெரிந்தது அவன் யாராலோ இது போன்று வதைகுள்ளாக்கபட்டு கொலை செய்யபட்ட விதயம்.
குழந்தைகளை பெறுவது எவ்வளவு கடினம் என்பது சென்னை ஜீ.ஜீ மருத்துவமனையில் உள்ள கருத்தரித்தல் மையத்தில் சோதனைக்குழாயிலாவது தனக்கொரு கருவுண்டாகாதா என காத்திருக்கும் பெண்களின் முகங்களை பார்த்தால் தெரியும் . அதை விட கடினம் அவர்களை வளர்த்தெடுப்பது. இதில் அரசின் பங்கும் சரிபாதியாகும். இப்பிரச்சினை 9 மாதங்களுக்கு முன்னே எழுந்த்துள்ள போது இவனிடம் ஏதோ பெற்று இப்பிரச்சினையை மூடி மறைத்த அந்த காவல்துறை அதிகாரியும் இதே குற்றத்தின் அடிப்படையில் தண்டனை பெறவேண்டும். குழந்த்தைகள் காணாமல் போவதும் அது குறித்த புகார் செய்யபடுவதும் இந்தியா போன்ற நாடுகளில் மிக சாதாரண விதயம். காவல் நிலையத்தில் இது போன்ற காணாமல் போன விதயங்களுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை ரொம்ப கேவலமாய் இருக்கும். அது வண்டியானலும் குழந்தையானலும் , நாயாக இருந்தாலும் ஒரே சிந்தை நிலையாகத்தான் கையாளுவார்கள். அவர்களின் முதல் நோக்கம் சட்டம்& ஒழுங்கு இதில் கவனம் செலுத்தினால் போதும் ஊரின் அமைதியும் குற்ற எண்ணிக்கையும் கட்டுப்பாட்டில் இருந்தால் போதும் என்றுதான் இருக்கிறது. பாலியல் வல்லுறவுக்குப்பின் ஒரு பெண்ணாகும் பட்சத்தில் அது உயிர்க்கொலையில் முடிவதில்லை, அதுவே ஒரு சிறுமியாகவோ இல்லை சிறுவனாகவோ இருந்தால் பெரும்பாலும் கொலையில்தான் முடிகிறது. இதற்கான காரணம் சமூகம் , ஒருவன் இவ்வகை குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக்கொள்ள நேரிட்டால் அவனை மிககொடுமையான குற்றவாளியாக நடத்துவார்கள்- புறக்கணிப்பார்கள். இது இந்திய சமூகத்தில் மட்டுமல்ல எல்லாச்சமூகங்களிலும் உண்டு. அன்மையில் வெளிவந்த ஸ்பூபி மூவி ஒன்றில் மைக்கேல் ஜாக்சனின் உருவம் கொண்ட ஒரு நபர் குழந்தைகளை அழைப்பார் , அதைப்பார்த்த நாயகன் அப்பக்கம் போகதீர் என்று குழந்தைகளை தடுப்பார். இப்படி கேலிப்பொருளாகவும் ஒதுக்க பட வேண்டியவனாகவும் சித்தரிப்பதால் கொலையில் முடிகிறது என்றே கொள்கிறேன்.

நொய்டா சம்பவம் குறித்து நாளும் ஒரு தகவலும் புதிய செய்திகளும் வரும் இவ்வேளையில் புலம் பெயர் ஈழத்து எழுத்தாளரான ஷோபசக்தியின் நாவலான "ம்" ல் வரும் நேசக்குமார் எனும் பாத்திரம்


தன் பதின்ம வயது மகளின் கர்ப்பத்திற்கு காரணம் தான் எங்கிற பழியுடன் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு அலைவதாக முடிகிறது. நேசக்குமார் அமிர்தலிங்கம் எங்கிற அந்த பாத்திரம் ஈழப்போராட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு மௌன சாட்சியாயும் காட்டிகொடுத்து வாழ்வதை ஒரு பொருட்டாக மதிக்காத நபராகவும் அந்நாவலின் வாசிப்பனுபவம் எனக்குணர்த்தியது. அந்த நாவலின் முடிவை எப்படி நான் உள்வாங்கிக்கொண்டேன் என்றால்
சொந்த நாட்டில் இயக்கத்தால் தூரோகி எங்கிற முத்திரை குத்தபட்டு உயிர்காக்க ஓடி வந்தவன், வாழ்வின் துயர பக்கங்களை மட்டும் வாசித்தவன் , புலத்தில் வீட்டோரால் தகாப்புணர்ச்சியாளன் எங்கிற அவச்சொல்லை பெற்று தெருவில் அலைவதாக உள்வாங்கிக்கொண்டேன். நண்பனொருத்தனிடம் கேட்டேன் அவன் மூன்று விதமாய் உள்வாங்கியிருந்தான் அது சரி இனி அது வாசகரின் உரிமையல்லவா. . எனக்கோ கருக்கலைப்புக்கு காத்திருக்கும் அந்த "நிறமி"யின் கண்களும் அது வெளிப்படுத்தும் காதலும் நினைவில் அவ்வப்போது நினைவுக்கு வரும்

எப்படியாயினும் வாசிக்கவேண்டிய புத்தகம் "ம்" தவிர்க்கபடவேண்டியவகள் இது போன்ற கொலைகள்

Thursday, January 11, 2007

@ 3:40 PM எழுதியவர்: வரவனையான் 11 மறுமொழிகள்

கோட்டை நாற்காலியும் உண்டு ...
அங்கு கூட்டிட்டு போவான் அவன்
திராவிடக்காளை !
- பாவேந்தர்
எனக்கு வைகோ என்கிற மனிதனின் அருகேயே இருக்கலாம் என்கிற ஆசை இருந்த காரணத்தினால்தான் நடைபயணத்திற்கே வந்தேன். இங்கோ சௌரி அண்ணா கையில் மாட்டி லாரியில் ஏற்றப்பட்டு பணி வேறு அளிக்க பட்டுவிட்டது. என்னுடன் பீட்டர் என்கிற திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியை சேர்ந்த ஒரு உடன்பிறப்பும் வலிந்து வேலை செய்கிறேன் என்று லாரிக்கு வந்துவிட்டார்.அவரோ ஒரு பள்ளியில் அலவலக உதவியாளராய் பணி புரிந்த அனுபவம் உள்ளவர் அவருக்கு இந்த வேலைகள் எளிமையாய் இருந்தது. எனக்கோ ஒ.சுந்தரம் அண்ணன் இன்னின்ன வேலைகள் நீங்கள் மூவரும் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கொட்டாவி வந்துவிட்டது. உழைப்பை மறுக்கும் பின்நவீனத்துவ இயல்பு எனக்கு பிறப்பிலே உண்டு :)))) அண்ணே ஒரு ரெண்டு நாளு மட்டும் நடந்து வாறேன் அப்புறம் லாரில ஏறிக்கிறேன் என்றேன். லாரி நடைபயணம் கிளம்பிய சில நிமிடங்களில் அடுத்த தங்குமிடம் போய்விடும்.அங்கு போய் "சும்மா" உட்கார்ந்திருக்க எனக்கு பிடிக்கவில்லை.

ஒப்புதல் பெற்று நடந்து கிளம்பினேன் வைகோவுடனே. ஆரல்வாய்மொழியின் அழகை நடந்தே அனுபவித்த நான் கொஞ்சம் கொடுத்துவைத்தவன் தான். வைகோ வின் பேச்சால் கவரபட்டவன் அவருடன் நடந்துகொண்டே ஒவ்வொரு மணி நேரத்திலும் எதிர்வரும் கிராமங்களிலும் சிற்றூர்களிலும் பேசத்துவங்கினால் ஓடிப்போய் முன்வரிசை கூட்டத்தினை ஓழுங்குபடுத்திக்கொண்டே செவி மடுக்கதுவங்குவேன். அந்த நடைபயணம் இன்று திமுக, மதிமுக ஆகிய இரு கட்சிகளில் உள்ள பல இளம்பேச்சாளர்களை உருவாக்கியது. வைகோ உடன் இருந்தால் அவர் ஒவ்வொரு இடத்திலும் முன்னர் பேசிய விடயத்தை அறவே தவிர்த்து புதிதாய் வேறு விடயங்கள் பேசுவதை கவனிக்கமுடிந்தது. ஒரு நல்ல பேச்சாளராய் இருந்தாலும் இந்தளவு 3 கிலோ மீற்றருக்கு ஒரு முறை புதிய செய்திகளாக சொல்லிச்செல்வது அவருக்கே அமைந்த தனித்திறன் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு நாள் அவருடன் சென்றால் அடுத்த நாள் அவருக்கு முன்பாக சென்றேன். அதாவது அவர் ஒரு இடத்தை நடந்து அடைய 2 மணி நேரம் இருக்கும் தறுவாயில் நான் அந்த இடத்தில் இருப்பேன். இப்போது மதிமுக வில் இருந்து திமுகவில் இணைந்து விட்ட கரூர் முரளி அந்த நடைபயணத்தில்தான் பேச்சாளராக உருவாகினார். அந்த ஊர்கிளைகளில் ஏற்பாடு செய்யபட்டிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் இருக்கும் ஒலிவாங்கியில் "இதோ வருகிறார் , ஜயலைலிதாவின் அராஜக ஆட்சியைக்கண்டித்து தமிழகம் நெடுக்க நடந்தே மக்களை சந்திக்க வருகிறார் வைகோ " என்று துவங்கி ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சிக்க ஆரம்பிக்கவேண்டியதுதான். தப்பும்தவறுமாய் பேசினாலும் உள்ளுர் கட்சிக்காரர்கள் கண்டுக்கமாட்டார்கள் ,மேலும் தெரிந்தவர்கள் முன் தவறாக பேசி அவர்கள் "கொல்" என்று சிரித்தால் அதன் பின் பேசுவதற்கு மனம் வராது. இங்கோ அதற்கு இடமில்லை என்பதால் கிட்டதட்ட 100 பேச்சாளராவது உருவாக்கியது அந்த நடைபயணம்.

மேற்குறிப்பிட்டுள்ள பாவேந்தரின் வரிகளில் வரும் திராவிடக்காளையாக என் கண்களுக்கு அப்போது வைகோ தெரிந்தார்.

-தொடருவேன்

Wednesday, January 10, 2007

@ 5:24 PM எழுதியவர்: வரவனையான் 20 மறுமொழிகள்

அறிவைத் திரட்டும் ஆர்வத்தில் இந்தியாவுக்கு வந்த சீன யாத்ரிகன் ஹியூன் சாங் (Jஇஉஎன் Tசங்) ஒரு வேடிக்கையான காட்சியைக் கண்டதாக எழுதுகிறான்;

கர்ண சொர்ணம் என்னும்பட்டணத்துக்கு ஒருவன் வந்தான். அவன் தன் இடுப்பிலே செப்புத் தகடுகளைக் கட்டிக் கொண்டும், தலையிலே தீப்பந்தத்தை வைத்துக் கொண்டும், கையிலுள்ள கோலைப் பெருமிதத்துடன் ஊன்றியபடியும் திரிந்தான். ஏன் இந்தக் கோலம்? என்று கேட்டால், `என்னுடைய அறிவின் பெருக்கத்துக்கு அளவே கிடையாது. செப்புத்தகடுகளைக் கட்டிக் கொள்ளாவிட்டால் அறிவின் கொந்தளிப்பால் என் வயிறு வெடித்தே விடும். அறியாமை இருட்டிலே உழலும் அற்ப மனிதர்கள் மீது கொண்ட இரக்கத்தால் தலையில் ஒளியைத் தூக்கிச் சுமக்கிறேன் என்றானாம் அந்த விகித்திர மனிதன்.

ஹியூன் சாங் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த அறிவாளி வேடம்தரித்த கோமாளி நிச்சயமாய் ஓர் அக்கிரகாரத்து மன நோயாளியாகத்தான் இருக்க முடியும்.

தான் ஒரு பார்ப்பனனாகப் பிறந்து விட்ட ஒரே காரணத்துக்காகப் பார்ப்பனர்களே உயர்ந்தோர். அவர்கள் பிரம்மாவின் தலையில் பிறந்தவர்கள்; என்று பெருமையடித்துக் கொண்டவன் மனு.

அவ்வாறே, நானே அறிவாளி; அதனால் சாப்பாட்டில் எனக்கே முதலிடம் என்று நந்தர்களை வம்புச் சண்டைக்கிழுத்தவன் சாணக்கியன்.

இப்போதும் கூட ஓர் அக்கிரகாரத்துப் பெண், நான் ஆங்கிலம் படித்த அறிவாளி. நெப்போலியனைப்போல் நினைவாற்றல் உள்ளவள் என்று பெருமையடித்துக் கொண்டதில்லையா?

தன் பெயரையே "ஞாநி" என்று மாற்றிக் கொண்ட சங்கரனும் அக்கிரகாரத்துப் பிள்ளைதான்.

`ராஜாஜிக்கு உடம்பெல்லாம் மூளை; மூளை முழுவதும் சிந்தனை' என்று அவர்கள் பெருமையாகச் சொல்வார்கள். அந்தச் சொற்றொடரைக் குத்தூசி குருசாமி இவ்வாறு நிறைவு செய்தார்:

``ஆம்; அவருக்கு உடம்பெல்லாம் மூளை; மூளை முழுவதும் சிந்தனை; சிந்தனை முழுவதும் வஞ்சனை!''

பொதுவில் தாங்களே உலகின் மிகச் சிறந்த சிந்தனையாளர்கள். அவர்களே ஆளப்பிறந்தவர்கள் என்கிற ஆழமான சித்தப் பிரமை கொண்டவர் பார்ப்பனர்கள்.

வேத காலத்திலிருந்து வேதா காலம் வரை, இட்லரிலிருந்து உஞ்சவிருத்திவரை இந்தக் கர்வம் அவர்களுக்கு உண்டு.

சர்.சி.பி. ராமசாமி அய்யரும் சிங்கார வேலரும் சிறுவயதில் நன்கு அறிமுகமானவர்கள். சில ஆண்டுகளுக்குப் பின் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். சிங்கார வேலரின் கையில் அப்போது தடிமனான ஒரு புத்தகம் இருந்தது.

``என்ன சிங்காரம்; பெரிய பெரிய புத்தகமெல்லாம் படிக்கிறாய்ப் போலிருக்கு? இது என்ன புத்தகம்?'' என்று ராமசாமி அய்யர் கேட்டார்.

``சட்டப்புத்தகம்'' என்றார் சிங்கார வேலர்.

``மீன் பிடிக்கிறவனுக்குச் சட்டப்புத்தம் படிச்சு என்ன ஆகப்போறது?''

``தர்ப்பைப் புல் பிடிக்கிறவன்களே சட்டப் புத்தம்படிக்கிறபோது மீன் பிடிக்கிறவன் படிக்கக் கூடாதா என்ன?''
அகம்பாவத்தின் முகத்தில் ஓங்கி மிதித்தார் சிங்காரவேலர்.

குத்தூசி குருசாமியின் கல்லூரி நண்பர் ஒருவர் பார்ப்பனர். அவர் குத்தூசியாரிடம் ஒருநாள் சொன்னாராம்; ``குருசாமி, நாங்கள் பிரம்மாவின் தலையில் பிறந்தவர்கள். அதனால் சிந்திப்பது எங்களுக்கு இயல்பானது!''
சட்டென்று குத்தூசியார் சொன்னார்; ``உங்கள் கருத்துப்படி நாங்கள் காலில் பிறந்தவர்கள். தலைக்கனம் கொண்டவர்களை மிதிப்பதற்காகவே!''

எத்தனை மிதிபட்டாலும் சிலர் தங்களின் இயல்பை மாற்றிக் கொள்வதில்லை. அறிவாளி வேடம் கட்டிக்கொண்டு திரிகிறவர்களின் வரிசையில் வந்த சோவான வரும் நாட்டின் எந்தப் பிரச்னைக்கும் சர்வரோக நிவராணியாய்த் தன் மண்டைச் சுரப்பை அள்ளித் தெளிக்கத் தவறுவதில்லை.

நீண்ட வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழ் ஆரியச் சூழ்ச்சிகளாலும், ஆதிக்க சக்திகளாலும் வீழ்த்தப்பட்ட நிலையில், `தமிழ் நாட்டில் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை'' என்று கவிஞர் நெஞ்செலாம் தகித்த சூழலில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனும் முழக்கத்தை எழுப்பினார் கலைஞர்.

ஆட்சித் துறையில் தமிழ், ஆலயத்தில் தமிழ் கல்வியில் தமிழ், கலை இலக்கியத்தில் தமிழ் நீதி மன்றங்களில் தமிழ் வேண்டும்; வேண்டும் என்று தமிழ்ச் சான்றோர்கள் வெகுகாலமாய்ப் போராடி வந்தார்கள்.

தமிழர் வரலாற்றில் புதிய தொடக்கமாய், சென்னை மாகாணத்துக்கு `தமிழ்நாடு' என்று பெயர் சூட்டினார் அண்ணா இப்போது தமிழர்களின் கனவுகளுக்கும் ஏக்கங்களுக்கும் விடியலாக ஒவ்வொரு திட்டங்களாக அறிவித்துக் கொண்டிருக்கிறார் கலைஞர்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தொடரில் நீதிமன்றங்களில் தமிழ் எனும் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த அறிவிப்பை வெளியிட்டார் கலைஞர்.

உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உட்பட அனைவருமே இந்த அறிவிப்பை ஆர்வக் கிளர்ச்சியோடு வரவேற்றார்கள்.

சோவானவர்களுக்கு மாத்திரம் நீதிமன்றத்தில் தமிழ் என்கிற அறிவிப்பு, நெருப்பை மிதித்து விட்டது போன்ற தகிப்பு.

``தமிழனை ஒரு வழிசெய்து விடுவது என்று தீர்மானித்து விட்டார்கள் போலிருக்கிறது. `ஆங்கிலம்' அறிந்து கொள்வதே ஒரு இழிவான செயல் என்பதுபோல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததோடு திருப்தியடையவில்லை. மாணவர்கள் தமிழிலேயேதான் எல்லாவற்றையும் கற்கவேண்டும் என்று முழங்கி வந்ததும் கூட முழுத்திருப்தி அளிக்கவில்லை. இப்போது உயர் நீதிமன்றத்தில் இனி, தமிழ்தான் என்ற தீர்மானத்தை முதல்வர் அறிவித்து விட்டார்...

`நீதிமன்றத்தில் தமிழ்' என்ற கோஷத்திற்கு முன்பெல்லாம் ஒரு காரணம் கூறப்படும். `கட்சிக்காரருக்கு தன் வழக்கு எப்படி நடத்தப்படுகிறது என்பது தெரியவேண்டாமா? அதனால் எல்லாம் தமிழில்தான் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். சட்ட சம்பந்தமான எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்தினால் கட்சிக்காரருக்குக் குழப்பம்தான் மிஞ்சும். இப்போதுள்ள தெளிவு கூட இருக்காது.

சரி, சம்பந்தப்பட்டவருக்குப் புரிவதற்காகத் தமிழ் என்றால், மருத்துவ விஷயம் எப்படி? டாக்டர் சொல்வது எல்லாம் நோயாளிக்குப் புரிய வேண்டாமா? ஆங்கிலத்தில் சொன்னால் நோயாளிக்கு என்ன தெரியும்?... ஆகையால் மருத்துவப் படிப்பையும் தமிழிலேயே நடத்திவிட வேண்டியதுதானே?...

தமிழகத்தில் கல்வி பெறுகிறவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி தங்களுடைய எண்ணங்களைத் தெரிவிக்கிற திறன் குறைந்து வருகிறது என்ற புகார் இப்போதே பலமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இதை இன்னமும் கடுமையாக்கித் தமிழ் இளைஞர்களைக் கிணற்றுத் தவளைகளாக்கிவிட இந்த அரசு முனைந்து விடும் போலிருக்கிறது...''
(துக்ளக் 6௧2௨006)

சோவானவருக்குத்தான் தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து எத்தனை அக்கறை? சோ போன்றவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்! என்று மொழி குறித்து எழும் முழக்கங்கள்; தீர்மானங்கள், கனவுகள், நம்பிக்கைகள் எல்லாமே தமிழர்களின் பிரச்னைகள். தமிழனாய் இல்லாத ஒருவனால் தமிழர்களின் தவிப்பையும் துடிப்பையும் பெறவும் முடியாது; உணரவும் முடியாது.

தனக்கென்றொரு தேசம் இல்லை; தனக்கென்றொரு மொழி இல்லை. இனி அதற்கு வாய்ப்பும் இல்லை என்கிற எதார்த்தம் பலரை மனநோயாளிகளாகவும், சிலரை எதிர்வினை புரியும் வக்கிரபுத்தி கொண்டவர்களாகவும், இன்னும் சிலரைத் தாய்மொழி, தாய் நாடு என்று அன்பு செலுத்துகிறவர்களையே அழித்து விட வேண்டும் என்கிற குரூர வெறியர்களாகவும் மாற்றிவிடுகிறது.

சோ போன்றவர்கள் இன்னும் `வேதகாலத்திலேயே' வாழும் விசித்திரப் பிறவிகள் ஆன இவர்களுக்கென்றொரு மொழி இல்லை. தங்களை ஒரு தேசிய இனம் என்று சொல்லிக் கொள்ளவும் இவர்களால் முடியவில்லை. இந்த வரலாற்று உண்மை இரக்கத்துக்குரியதுதான். இரக்கத்துக்குரியவன் என்பதால் ஒருவன் பிறரை இழிவு செய்வதற்கு உரிமை பெற்றவனாகிவிட முடியுமா?

நாடற்றவர்களாய், அகதிகளாய், உலகில் எவ்வளவோபேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை ஒரு தேசிய இனம் என்றும், தங்களுக்கென்றொரு நாடுவேண்டும் என்றும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நாடோடிகள், நரிக்குறவர்கள், பழங்குடியினர் என்று ஏளனமாய்ப் பார்க்கப்படும் இனத்தார்கூட தங்களுக்கான உரிமைகளுக்காகச் போராடுகிறார்கள்.

உலகிலேயே தங்களை ஒருதேசிய இனம் என்று உணர முடியாதவர்களாய், தங்களுக்கென்றொரு நாடு வேண்டும். என்று போராட முடியாதவர்களாய் இருப்பவர்கள் சோவானவர்கள் மட்டுமே!

சுயத் தன்மைக்காகவும், சுய நிர்ணய உரிமைக்காகவும் உலகின் எல்லாத் தேசிய இனங்களும் இன்று போராடுகின்றன.

சுயமரியாதையும் போர்க்குணமும் பிரிக்க முடியாதவை. சுயமரியாதையும் மனிதாபிமானமும் இணை பிரியாதவை. சுயமரியாதை உள்ளவன் சகமனிதனை மதிக்கத் தெரிந்தவனாகவும் இருப்பான்.
சுயமரியாதைக்காரன் பிறருக்காகவும் போராடுகிறவனாக இருப்பான். சுயமரியாதை இல்லாதவன் சாகசக்காரனாக இருப்பான்.

சதிகாரனாக இருப்பான். குற்றங்களின் உறைவிடமாக இருப்பான். ஒரு சமூகத்தின் சுயமரியாதைப் பிரச்னைதான் தேசிய இனப் போராட்டங்களாக வடிவெடுக்கின்றன. சோ போன்றவர்கள் தங்களை ஒரு தேசிய இனம் என்று அறிவிக்க ஏலாதவர்களாய்.

தங்களுக்கென்று ஒரு நாடுவேண்டும் என்று போராட முடியாதவர்களாய் இருப்பதற்குக் காரணம்-
சுயமரியாதையின் இடத்தில் இவர்கள் `சுகஜீவனத்தை' வைக்கிறார்கள். போராட்டங்கள் இடத்தில் சாகசங்களையும் சூழ்ச்சிகளையும் வைக்கிறார்கள்.

மாதுவின் குரல் இவர்களை உற்சாகப் படுத்துகிறது. அறிவியல் வளர்ச்சியும் சூத்திர எழுச்சியும் இவர்களைக் கலக்கமுறச் செய்கின்றன. ஆற்றாமைக் குரூரம் அலைக்கழிக்கிறது. தமக்கொரு தாய்மொழி இல்லாததால் தாய்மொழி பற்றிப் பேசுகிறவர்கள் மீதெல்லாம் ஆத்திரம் வருகிறது.

தமக்கொரு தாய்நாடு இல்லாததால் தாய்நாடு பற்றிப் பேசுகிறவர்களெல்லாம் பயங்கரவாதிகளாகத் தெரிகிறார்கள். வெளியில் சொல்லமுடியாத இந்த மனோவியாதியின் குரூர வெளிப்பாடுதான் சோ போன்றவர்களின் தமிழ் எதிர்ப்பு வக்கிரங்கள்.

நீதிமன்றத்தில் தமிழ் என்று கலைஞர் அறிவித்ததும் சோபோன்றவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள்(!) அக்கறையுடன் பரிசீலிக்க அருகதையற்றவை என்ற போதிலும், இம்மாதிரியானவர்களை அறிவாளிகள் என்றே நம்பிவிடும் தமிழர்கள் இருப்பதால் அவர்களுக்குச் சில விளக்கங்கள்.

விடுதலைப் போர் என்பதும், மொழிவழி மாநிலங்களின் உதயம் என்பதும் தேசிய இனங்களின் வளர்ச்சிக்கும், தாய்மொழியின் மலர்ச்சிக்காவுமான செயல்திட்டங்களே.

இந்தியா விடுதலை பெற்று அறுபது ஆண்டுகளை நெருங்கிவிட்ட நிலையிலும், மொழிவழி மாநிலங்கள் அமைந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்து விட்ட போதிலும், தேசிய இனப்பிரச்னைகளுக்குத் தீர்வு எட்டப்படவில்லை என்பதும், தாய்மொழிக்கு உரிய இடம் தரப்படவில்லை என்பதுதான் வெட்கப்பட வேண்டிய விஷயம்!

தமிழரின் நூற்றாண்டுக் கனவைக் கலைஞர் மெய்ப்படுத்துகிறார் என்பதை மானமும் அறிவும் உள்ள எவரும் பாராட்டவே செய்வார். சோக்கள் சுருங்குவது பிறவிக் குணம்.

``தமிழகத்தில் கல்வி பெறுகிறவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசித் தங்களுடைய எண்ணங்களைத் தெரிவிக்கத் திறன் குறைந்து வருகிறது'' என்று கவலைப்படுகிறார் சோ. தமிழ் நாட்டில் தமிழில் தெளிவாகப் பேசுவும் எழுதவும் முடியாதவர்கள் இருக்கிறார்களே என்று நாம் கவலை கொள்ளும் நேரத்தில், இவர்கள் ஆங்கிலம் அழகாகப் பேசுவது குறித்துக் கவலைப்படுகிறார்கள்.

இவர்களுக்குத் தெரியுமா? இங்கிலாந்தில் பிறந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்தும் கூட ஆங்கிலத்தில் சரளமாகப் பேசமுடியாதவர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்திலோ, பிறமொழிகளிலோ சரளமாகப் பேசுதல் என்பது வேறு; அறிவுத் திறன் என்பது வேறு.

ஆங்கிலப் புலமையும் பேச்சாற்றலும்தான் நீதிமன்றங்களின் வெற்றிபெறும் என்றால் அங்கே நீதி செத்துவிடுகிறது என்று பொருள். இன்றைய சமூக அமைப்பில், எதார்த்த வாழ்வில் ஒரு வழக்கில் வெற்றிபெறச் சட்ட நுணுக்கங்களோ, மொழிப் புலமையோ, பேச்சாற்றலோ தேவை இல்லை. சில நீதிபதிகளுக்கு வாதம் செய்கிற வழக்கறிஞர்களையே பிடிக்காது. பணம் இருந்தால் நீதிமன்றத்தில் எதையும் சாதிக்கலாம்.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைக் கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதியைக் கூட நாடு கண்டிருக்கிறது. இதைச் சாதித்தது சரளமான ஆங்கிலப் பேச்சா? கைமாறிய லஞ்சப் பணமா? எனவே, நீதிமன்றத்தில் தமிழ் என்கிற முடிவு, சோ போன்ற ஆங்கிலப் புலமையும் சட்ட நுணுக்கங்களும் அறிந்த `மேதை'களுக்கு வேலை வாய்ப்புத் தருவதற்காக அல்ல; தமிழுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக.

நீதிமன்றத்தில் தமிழ் என்றால் ``மருத்துவ விஷயம் எப்படி?... மருத்துவப் படிப்பையும் தமிழிலேயே நடத்திவிட வேண்டியதுதானே? என்று வக்கணை பேசுகிறார்கள்.

மருத்துவப் படிப்பில் மாத்திரமல்ல அறிவில் துறை அனைத்திலும் தமிழ் என்பதுதான் எங்கள் இலட்சியம். சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்றால் அந்தமாணவருக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று கூட நடைமுறை இருந்தது? மருத்துவத்துக்கும் சமஸ்கிருதத்துக்கும் என்ன சம்பந்தம்? என்று எந்த சோவும் எப்போதும் கேள்வி எழுப்பியதில்லை. ஏனென்றால் சமஸ்கிருதத்தை முன்னிறுத்தும்போது பார்ப்பனர்களுக்கே அந்த உயர்கல்வி கிடைக்கிறது என்பதால்தான்.

நாங்கள் தமிழை முன்னிறுத்துவது தமிழர்களின் உயர்வுக்காகத்தான். தமிழர்கள் உயர்வது மனிதர்களுக்கு எதிரானதுதான். சோவானவர்களின் புலம்பல் புரிகிறது.

கலைஞர் தமிழை முன்னிறுத்துவதும் சோவானவர்களுக்குப் பிடிக்காது. தமிழர்களே, ஆங்கிலம் படியுங்கள் வீட்டிலே கூட ஆங்கிலத்திலேயே பேசிப் பழகுங்கள் என்று பெரியார் சொன்னதும் இவர்களுக்குப் பிடிக்காது.
``வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்'' என்று கலைஞர் சொல்வதும்,
ஆங்கிலம் படியுங்கள்; ஆங்கிலத்திலே பேசிப் பழகுங்கள் என்று பெரியார் சொன்னதும்,
ஒரே திசையில் எய்யப்படும் அம்புகளே!

பார்ப்பன பாசிசத்துக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் நாங்கள் எந்த ஆயுத்தையும் எடுப்போம்!

மற்றொரு செய்தியையும் தெரிவிப்போம்! எங்கள் தமிழ்ப்பற்று எந்தமொழிக்கும் எதிரானதல்ல. ஆங்கிலத்தை மாத்திரமல்ல, இந்தியைக் கூட நாங்கள் எதிர்ப்பதில்லை. உலகப் பார்வை, தேசிய ஒருமைப்பாடு என்கிற உச்சாடனங்களுடன் யாரும் ஆதிக்கம் செய்வதையே நாங்கள் எதிர்க்கிறோம்.

``ஒருமைப்பாடு என்பது சொர்க்கமாகக் கூட இருக்கலாம். ஆனால் சொர்க்கத்துக்கே ஆனாலும் சாட்டையால் அடித்து அனுப்புவதை எதிர்கிறோம்'' என்று லெனின் சொன்னாரே அதுதான் எங்கள் மொழிக் கொள்கை.

இன்னும் சொல்வோம்; `நீதிமன்றத்தில் தமிழ்' என்கிற நாங்கள், நீதிமன்றங்களுக்கே தேவையில்லாத ஒரு சமூகத்துக்காகவும் போராடுகிறோம்.

கடவுள்களோ, நீதிபதிகளோ, வழக்கறிஞர்களோ, மருத்துவர்களோ, பாவிகளோ, குற்றங்களோ, நோய்களோ இல்லாத ஒரு சமூகம் பற்றி நாங்கள் சிந்திக்கிறோம். அந்தப் புதிய சமூக மாற்றத்துக்கு இன்றைக்கு எமக்குத் தேவை எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்!


நன்றி - சான்றோர் பேரவை செய்தி மடல்

Sunday, January 07, 2007

@ 12:36 PM எழுதியவர்: வரவனையான் 17 மறுமொழிகள்அவ்வளவு நிறைவான ஏற்பாடு செய்யபட்டிருக்கும் என்று முதல் நாள் மதியம் வரை நான் நம்பவில்லை.காலை கிளம்பி மதிய உணவுக்கு சுசிந்திரத்தை அடைவதாக பயணதிட்டம். அதன் படியே அடைந்தோம். மதிய உணவுக்கு பின் 4 மணிக்கு புறப்பட்டு இரவு நாகர்கோவிலை அடைய திட்டம்.பொதுவாக வெயிலுக்கு முன் புறப்பட்டு நன்பகலுக்கு முன் தங்கும் இடத்தை அடைவதும், மாலை வெயில் தணியும் நேரமான 4 மணிக்கு இரவு அடையவேண்டிய ஊரை அடையும்படி அந்த நடைபயணம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. சுசிந்திரத்தில் உணவுக்கு பின் கன்யாகுமரி மாவட்ட அழகினை ( ! ) ரசித்துக்கொண்டிருந்த என்னை சௌரி அண்ணா அழைத்தார். அன்றே என் நடைபயண வாழ்க்கை முடிவுக்கு வருமென்று தெரியவில்லை. :)))

அவர் அழைத்து சென்ற இடத்தில் மூன்று லாரிகள் நின்றிருந்தது. அதில் இருந்த ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் அடுத்த 27 நாட்களில் நடைபயணத்தில் அவர் இருக்கும் போதே புலிகளுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாக "தடா" எனும் கருப்பு சட்டத்தில் கைதாகப்போகும் ஓ.சுந்தரம் என தெரியாது. சுந்தரம் அண்ணன் பார்க்க பேங்க் ஆபிஸர் போல் இருந்தார். ஒரு லாரி நடமாடும் அலுவலகமாகவும் ஒரு லாரி நடந்துவருபவர்களின் உடமைகளை சுமக்கவும் , மற்றோரு லாரி தேவை யான பொருட்கள் சுமக்கவும் கொண்டு வரப்பட்டிருந்தன. என்னை அலுவலக லாரியில் ஏற்றி சுந்தரம் அண்ணன் பொறுப்பில் விட்டு, "தம்பியை கூட துணைக்கு வச்சுகுங்க சுந்தரம். கவனமில்லாமல் பணத்தையெல்லாம் தொலைக்கிறார் " என்று சொல்லி என்னை அங்கு பணித்தார்.

அலுவலகம் என்றால் நடந்துவருபவர்களின் பெயர், விலாசம் , அவர் பற்றிய தகவல்கள், மற்றும் அவர்களுக்கு மருத்துவ தேவையென்றால் அதற்கு தேவையான குறிப்புகள். நடப்பவர்களுக்கு செருப்பு தேவைகள், மாத்திரை உட்கொள்பவர்களாயின் அந்த மாத்திரை. அதை வேளைக்கு உட்கொள்ள அறிவுறுத்தல். அடுத்த வாரங்களுக்கு தேவையானவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை வரப்போகும் ஊர்பொறுப்பாளர்களுக்கு தெரிவித்தல் ஆகியவையே. இவையில்லாமல் நடந்துவருபவர்களுக்கு வழங்கபட்டுள்ள அடையாள அட்டையை வாரம் தோறும் வைகோ கையெழுத்து முத்திரை பதித்து தருவது முக்கிய பணி. அந்த அட்டைக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. ( நாளைக்கு ஆட்சிக்கு வந்தால் அட்டை உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கபடும் என்று எவனோ ஒரு வதந்தி பரப்பிவிட்டதால் ). கள்ளத்தனமாய் முத்திரை குத்தி ஒரு அடையாள அட்டை கொக்கிரகுளத்தில் ஒரு பெருசு கேட்டது 11 வருசமாகியும் இன்னும் நினைவில் இருக்கிறது.

வைகோ சில விடயங்களை மிகநேர்மையாக கையாண்டார். தொண்டர்களுக்கு என்ன உணவு போடப்பட்டதோ அதையே தானும் உட்கொண்டார். தொண்டர்களுடனே உறங்கினார்.தமிழ்நாட்டு தலைவர்களிடையே மிக அரிதாய் இருக்கும் இந்த பழக்கம் அவரிடம் எனக்கு வியப்பையும் அன்பையும் உண்டாக்கியது. முன்னால் ஒரு பிக்-அப்பில் ஈட்டிமுனை இளமாறன் முழங்க பின்னால் நடந்தார் வைகோ. எனக்கு தெரிந்து மாநிலம் முழுக்க தன் கால்களால் அளந்த தலைவன் என்றால் அது வைகோவாகத்தான் இருக்க முடியும்

( வரும் நாட்களில் )

Friday, January 05, 2007

@ 1:56 PM எழுதியவர்: வரவனையான் 11 மறுமொழிகள்

அந்த நடைபயணம் மிக அற்புத அனுபவங்களையும் நண்பர்களையும் எனக்கு அளித்தது. ஜூலை 26 மதுரையில் இருந்து கன்யாகுமரிக்கு கிளம்பினேன்.சரியாச்சொன்னால் வயது 16 அப்போது. வாழ்க்கையில் தனியாக 300 கிலோ மீற்றர் பயணம் முதன் முதலில். நாகர்கோவில் தாண்டிய பிறகு லேசாக பயம் வந்தது. 51 நாள் நடக்கனுமா? எதுக்கு இந்த வேண்டாத வேலை என்கிற எண்ணம், நாகர்கோவிலில் இருந்து கன்யாகுமரி செல்லும் 16 கிலோ மீற்றர் தூரமும் இருந்தது. என் வீட்டில் நான் நடைபயணம் வைகோவுடன் செல்வதை ஊக்குவித்தனர்.ஒரு நாளைக்கு செலவுக்கு 100 ரூபாய் என்கிற வகையில் 10 நாட்களுக்கு பணம் கொடுத்து இருந்தார்கள். இரண்டு முறை தொலைபேசியில் அழைக்கவேண்டும் என்பது மட்டுமே நிபத்தனை. எதுவரை தொடரமுடியுதோ அது வரை நடந்து வா முடியலை என்றால் வீட்டுக்கு வந்துவிடு என்றே சொல்லி அனுப்பி இருந்தார்கள்.


கன்யாகுமரி போய் இறங்கி இங்க வைகோ கட்சிகாராங்க எங்க தங்கி இருக்காங்க என்றேன் ஒரு டீக்கடையில் நின்றிருந்தவரிடம். " எந்த ஊருப்பா தம்பி " என்றார் அவர். கேட்டவர் "வாலஜா" அசேன் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். வாலஜா அசேன் அவர்களை அதுவரை சந்தித்ததில்லையே தவிர நிரம்ப கேள்வி பட்டுள்ளேன். திமுக சீட்டு கொடுக்கவில்லை என்று சுயேச்சையாக நின்று வெற்றி பெற்று திமுக'வில் மீண்டும் இனைந்தவர். அரசினர் விடுதிக்கு அழைத்துப்போனார். அங்கு நெடு நெடுவென மிக இளைமையான தோற்றத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் என்னை அறிமுகபடுத்தினார். அவர் நான் அண்ணணாக வரித்துக்கொண்ட சௌரிராசன், மறுமலர்ச்சி திமுக'வின் தொண்டரணி பயிற்சியாளர். "நந்தன்"அருணாச்சலதின் மகன்.


பேரணீஈஈஈஈ..............

மெய்யடி சேர் (attetion)

பேரணீஈஈஈஈஈஈஈஈ ...........

இடதடி வை( stand at easy )

இடம் வலம் இடம்... இடம் வலம் இடம்...இடம் வலம் இடம்...இடம் வலம் இடம்...(left right left)


ஒரு சுவர்க்கோழி தன் உடம்பினை விட 80 மடங்கு அதிக சத்தம் எழுப்புமாம். சௌரி அண்ணா காலை கவாத்து பயிற்சிக்கு வந்து ஆணைகள் இட்டால் இந்த உடம்பிலிருந்து இவ்வளவு பெரிய ஒலி எழுப்பமுடியுமா? என்றே சந்தேகிப்பேன். மறுமலர்ச்சி திமுக தொண்டரனியில் அக்காலத்தில் பணியாற்றினால் ஒரு ராணுவ அமைப்பில் பணியாற்றிய அனுபவம் கிடைக்கும். அந்த அளவிற்கு சௌரி அண்ணாவின் பயிற்சி இருக்கும். திமுக தொண்டரணி போல் கதவு திறந்துவிடவும் , டீ வாங்கி கொடுக்கவும் அது இல்லை. வைகோவின் உள்மனதிலிருந்த சாகசவாத எண்ணங்களுக்கு வடிகாலாய் மதிமுக தொண்டரணி உருவாக்கபட்டது. எங்கும் எதிலும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கபட்டது. கவாத்து பயிற்சி ஆணைச்சொற்கள் முழுவதும் தமிழில் இருந்தது, கொஞ்சம் கவர்ச்சியாய் இருந்தது எனக்கு. எதோ ஒரு ரகசிய நடவடிக்கை மேற்கொள்ள உருவாக்கபட்ட அமைப்பாக நாங்கள் நம்பிக்கொண்டோம்.

Photobucket - Video and Image Hosting
வைகோ சொந்த ஊரான கலிங்கபட்டி அருகே, இரவு உணவு அருந்திக்கொண்டிருக்கிறார். அருகில் சு.குருநாதன், கூவாகம் மதியழகன். பின்னால் பச்சை நிற பனியன் அணிந்து பாதுகாப்பு பணியில் நானும் "உளறுவாய்" முருகனும்.


பொறுக்கிகள் , பெரியமனிதர்கள் , திருடர்கள் , இளைஞர்கள், வேசித்தனம் கொண்ட பெண்கள், சூதாடிகள், என ஒரு திருவிழாக்கூட்டதிற்கு ஒப்பான தன்மைகளோடு அந்த நடைபயணம் துவங்கியது. வைகோ கன்யாகுமரிக்கடலில் தன் கால்களை கழுவி புது ஷூ க்கள் அணிந்து புறப்பட்டார்.
அங்கு திருட வந்திருந்த ஒரு தோழரின் முதல் போணி நான் தான்.வைத்திருந்த பணம் எல்லாம் அவரின் திறமையால் அவருக்கு சொந்தமாகிவிட்டது

இனி வேறு வழியில்லை முடியாவிட்டாலும் நடந்துதான் ஆகவேண்டும் என்கிற நிலையில் நான். தேனீர் குடிக்ககூட காசில்லை. சோர்வாய் இருந்த என் முகம் பார்த்து சௌரி அண்ணா அழைத்து என்னவென்று கேட்டார் , சொன்னேன். இவ்வளவுதானா இந்த என்று 500 ரூபாய் கொடுத்து பத்திரமாய் வைத்துக்கொள், இனி உன் வேலை என்னுடன் இருப்பதுதான் என்று பணித்தார். அப்போது துவங்கியது மதிமுக மேல்மட்ட தலைவர்களின் உறவு.

@ 2:30 AM எழுதியவர்: வரவனையான் 43 மறுமொழிகள்
" வடவர்கள் நம்மவர்களும் அல்ல, நல்லவர்களும் அல்ல "
- பேரறிஞர் அண்ணா." அன்மையில்" ( இரண்டு நாட்களுக்கு முன் ) என் நண்பர்கள் சென்று பார்த்த ஒரு விதயத்தை எனக்கு அனுப்பி இருந்தார்கள். ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் ( கவனிக்கவும் ஆண் மட்டுமே - அவன் யார் என்பதெல்லாம் அப்புறம்) சாய்ந்திருப்பதை படமெடுத்து பரபரப்பு பரப்ப அல்ல இப்பதிவு, அதே வேளை தனது பணியிடத்தில், வேலை நேரத்தில் பாக்குற வேலையை விட்டுபுட்டு கீழ்கானும் பொழுதுபோக்குகளில் ஈடுபட்டுள்ளார். நான் அந்த நண்பரின் செயலில் எந்த குறையும் காணவில்லை. அதே வேளை பூசை புனஸ்காரங்களில் ஈடுபடும் பார்ப்புகள் சுத்தமாகத்தான் இருப்பார்கள் , அது போல தமிழக அரசின் " அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்" எங்கிற சட்டத்தின் மூலம் ஆகம விதிகளும், முறைகளும் பிற சாதியினரால் பாதிக்கப்படுமே என்கிற சில வெத்துவேட்டு டூபுக்களுக்கு இதை முன் வைக்கிறேன். இப்பதிவில் வரும் கபிலர் எங்கிற கவியும் ஒரு "பார்ப்புதான்" எங்கிற செய்தியையும் இங்கு சொல்லத்தான்வேண்டும்.
அந்த லீலைகளை பார்த்த நண்பர்களின் விமர்சனம் கீழே --

அய்யர் செய்த சில்மிஷம் -

விழுப்புரம் மாவட்டம்
திருக்கோயிலூருக்கு அருகே இருக்கும் பண்டையகால குன்று கபிலர் குன்று. சங்க
காலத்தில் மலையமான் குல மரபினர் இந்தப் பகுதியை ஆண்டு வந்ததாக இலக்கியங்கள்
கூறுகிறது. சங்ககால புலவரான கபிலர் வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர் ஆவார்.

பாரிக்கு கிடைத்த புகழைக் கொண்டு பொறாமையடைந்த மூவேந்தர்கள்
பாரியையும், பறம்ப நாட்டையும் முற்றுகையிட்டு அழித்து விட்டனர். தன் பெண்மக்கள்
இருவரையும் தன் உற்ற நண்பரான கபிலரிடம் அடைக்கலமாக தந்து விட்டு பாரி உயிரை
நீத்தார்.

நண்பரின் இழப்பை தாங்கமுடியாத கபிலர் அந்த இரு
குழந்தைகளையும் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியிடம் ஒப்படைத்து விட்டு ஒரு
குன்றின் மீது உயிர்விட்டதாக திருக்கோயிலூர் வீரட்டானத்தில் உள்ள இராசராசன்
கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. பெண்ணையாற்றின் நடுவே ஒரு பாறை மீது சிறுகோயிலாக
உருவெடுத்திருக்கும் இடமே கபிலர் குன்று என்று மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த
இடத்தின் தொன்மையை கருத்தில் கொண்டு தொல்லியல் துறை இவ்விடத்தை கையகப்படுத்தி
பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்திருக்கிறது.

இவ்விடத்தின் சரித்திர
முக்கியத்துவத்தை சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அந்த
இடத்துக்கு ஒரு சிற்றுலா போகலாம் என நானும் நண்பரும் முடிவெடுத்தோம். கடந்த ஞாயிறு
அன்று செல்வதாகத் திட்டமிட்டிருந்தப் போது வேறு ஒரு முக்கியமான வேலை எனக்கு
இருந்ததால் என்னால் செல்ல முடியவில்லை. நண்பர் வேறு சில நண்பர்களுடன்
சென்றிருந்தார்.

சென்ற இடத்தில் அவர் கண்ட கூத்தைத் தான் கீழ்க்கண்ட
படத்தில் பார்க்கிறீர்கள். அந்தக் கோயிலில் பூஜை செய்யும் அய்யர் ஒருவர் இரு
பெண்களுடன் (படத்தில் ஒரு பெண்ணைத் தான் பார்க்க முடியும், இன்னொரு பெண் அய்யரின்
இடபுறத்தில் இருக்கிறாள் அவள் புகைப்படத்தில் சரியாகத் தெரியவில்லை) கொட்டமடித்துக்
கொண்டிருந்தார். ஆளரவமற்றப் பகுதி என்பதால் அய்யருக்கு வசதியாகப் போய் விட்டது.

நம் நண்பர் கொஞ்சம் கோபக்காரர். சரித்திர முக்கியத்துவம் நிறைந்த
இடத்தில் நடந்த இந்த கேவலக் கூத்தைக் கண்டவர் அய்யருக்கும், அந்தப் பெண்களுக்கும்
(பாலியல் சேவகர்கள் மாதிரி தெரியவில்லை) "செம ட்ரீட்மெண்ட்" கொடுத்து
துரத்தியடித்து விட்டு வந்திருக்கிறார்.

ம்ம்ம்ம்... இந்த அய்யர்
செய்யும் அர்ச்சனைகளுக்கும், பூஜைக்கும் சக்தியுண்டு என்று நம்புகிற அப்பாவிகளை
நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது.