Sunday, December 03, 2006

@ 3:21 PM எழுதியவர்: வரவனையான்





என்னாது அவரே சொன்னாரா என்னடா சொல்லுற, வெளியே போயி தனியா சரக்க ஏதும் போட்டு வந்துட்டியான்னு டென்சன் ஆனேன்.

இல்லடா இன்னும் நாலு நாள்ல நான் போய் சேர்ந்துடுவேன்னு சொன்னாருடா அன்னைகேன்னான்.

சரி ஆகவேண்டியத பார்ப்போம், தோழர் நீங்க போய் கட்சி ஆபிஸுல எழவு சொல்லிட்டு வாங்கன்னு கற்பனையரசுவை கிளப்பிவிட்டேன். அவருக்கு திடீருன்னு அவர "எழவு சொல்லி"யாக்குனத்துல கொஞ்சம் மனவருத்தம் அடைஞ்சமாதிரி தெரிஞ்சது. தோழர் ஒன்னும் பிரச்சினையில்லைல நீங்க போய் சொல்லுறதுலன்னு கேட்டேன், அதுக்கு அவரு "ச்சா எனக்கென்னங்க பிரச்சினை நீங்க போனாத்தான் எங்க ரெண்டு பேருக்குமே பிரச்சினை" ( என்னுடன் சேரக்கூடாதுன்னு அவய்ங்க ஆபிசில் சொல்லிவச்சுருக்கானுங்க)ன்னு சொல்லிட்டே கிளம்பி போனவரு டக்குன்னு திரும்பி வந்து "கணேசன் தோழர் உங்க தம்பிகளுக்கு சொல்லிட்டிங்களா"ன்னு கேட்டாரு. கணேசன் எதோ அவரு இவன பாத்து சுப்பிரமணிய சாமி கட்சியில சேரலாமான்னு கேட்ட மாதிரி திகிலாகி பார்த்தான். நான் உள்ள புகுந்து 'என்ன இருந்தாலும் கணேசா அவய்ங்களுக்கு சொல்லாம விட்டா நல்லாயிருக்காதுன்னு' சொன்னேன். அரை மனசா சரின்னு சொன்னவன். இருடா சொந்தகாரங்களுக்கு சொல்லிட்டு வந்திடுறேன் என்றபடி கீழே இறங்க போனவனின் ஓரக்கண் ட்க்கீலா பாட்டிலையும் கவனிக்க தவறவில்லை.





அவன் தம்பி இரண்டு பேரும் ரெண்டு மாதிரி கிறுக்கனுங்க, மூத்தவன் கஞ்சா இழுவை பார்ட்டி( அவன் பேரே ஏரியாக்குள்ள "சிவன் செல்வம்னு" மாறி போய்யிடுச்சு - மதுரையில டோப்பு, சிவன், சைலென்ஸ் என்கிற குறிச்சொற்கள் கஞ்சாவைக்குறிக்கும் )இன்னொருத்தேன் வேற மாதிரி மென்டலு, ஒரு பொம்பள புள்ளையை விட மாட்டான், வெரட்டி வெரட்டி "லவ் லெட்டரு கொடுத்து பொது மாத்து வாங்காம ஒரு மாசம் கூட கடந்ததில்லை. அவனுங்களை எகனை போட்டு பாத்தா கணேசன் எவ்வளவோ தேவலை, என்ன இவன் "புரட்சி வரும்"னு மட்டும்தான் நம்புவான். அதுக்கு கஞ்சாவே அடிச்சிட்டு போலாம்பேன். " u too an utopian assole " comrade, நான் அடிக்கடி சொல்லுற டயாலாக்கு கணேசன பார்த்து.

- To be concluded with in Two days

4 மறுமொழிகள்:

  1. எத்தன மாசத்துக்கு இதையே சொல்லுறதா உத்தேசம்?

    இதையெல்லாம் நா நம்பறதா இல்ல...அத்தால சீக்கிரமா மேட்டரை சொல்லும்...

  1. 10:39 AM  
    தெக்கீலாவை ஆட்டய போட விரும்பரவன் said...

    கனேசன் கற்பனைய கழட்டி வுடரதுக்கு தான் இவ்ளோ ப்லானும்னு சொல்லித்தான் தெரியனுமா?

  1. //- To be concluded with in Two days//
    என்னயிலர்ந்து இந்த கணக்குன்னு சொன்னா வசதியா இருக்கும்.

  1. Senthi
    I am teatotaller for the past 50 days you know.
    Hence I dont want to comment on this blog