Monday, December 11, 2006

@ 1:31 PM எழுதியவர்: வரவனையான்

பேராசை பெருந்தகையே போற்றி !
பேசா நா இரண்டுடையாய் போற்றி !
பயங்கொள்ளி பரமா போற்றி !
படுமோசம் புரிவாய் போற்றி !
சிண்டு முடிந்திடுவாய் போற்றி !
சிரித்திடும் நரியே போற்றி !
தந்திர மூர்த்தியே போற்றி !
தாசர் தம் தலைவா போற்றி !
வஞ்சகவேந்தே போற்றி !
வன்கணநாதா போற்றி !அம்மன் கோவில் திருவிளக்கு பூசை பாடல் வரிகள் அல்ல, மேலுள்ளது. ஆயிரமாண்டுகளின் அடிமைத்தனத்தை தன் நெருப்பு வார்த்தைகளால் உடைத்தெறிந்த அறிவாசான் தந்தை பெரியாரின் தகைசால் மாணாக்கன் வாதக்களங்களில் இவனை மிஞ்சுவரில்லை எவரும் எதிர் நின்றால் என்கிற பெயரோடு பெரியாரியம் பரப்பிய அறிஞர் பெருந்தகை அண்ணா எழுதிய " ஆரியமாயை" எனும் வரலாற்றுச்சிறப்பு மிக்க புத்தகத்தின் துவக்கவரிகள் தாம் அவை.

அப்புத்தகத்தை கையில் வைத்திருந்தால் உடன் உங்கள் கைகளில் காப்பு நிச்சயம். எழுதிய அண்ணாவிற்கு 6 மாத கடுங்காவல். தடை தடை தடை. பேராய கட்சியால் திராவிட இயக்கம் வேட்டையாடபட்டது. அண்ணாவின் பேச்சுக்கு தடை, பெரியாரின் பேச்சுக்கு தடை , கலைஞரின் முழக்கத்துக்கு தடை என சூழ்ந்த தடைகளை தகர்த்தெறிந்து வீறுகொண்டெழுந்தது திராவிடப்பேரியக்கம். மனிதனை மனிதனாக மதிக்க வேண்டியது அது, வலதுசாரி ஆதிக்கபுரிகளின் கோட்டை கொத்தளங்கள் திராவிட அறிவியக்க கேள்விகளால் நொறுங்கிப்போனது. தன் அதிகாரம் பறிக்கப்படுவதை எந்த ஆதிக்கவாதியும் விரும்புவதில்லை, அதைப்போன்றே பார்ப்புகளூம் புழுங்கினர், "அது ஒரு நிரந்திர அரிப்பாகவே மாறிப்போனது" . இன்றும் அமெரிக்கவில் செட்டில் ஆன முணு தலைமுறைக்கு முந்திய பார்ப்புகளின் பிள்ளைகள் கூட சொல்கிறது திராவிடம் டௌன் டௌன், இடஒதுக்கீடு டௌன் டௌன் என்று.

ஆறா ரணமும் குறையா அரிப்பும் சொறிய சொறிய சுகமளிக்கிறது. அரிப்பை அடக்க துக்ளக்கும் தினமலரும் தேவைப்படுகிறது. எதெல்லாம் பார்த்து எரிச்சலுற முடியுமோ அதெல்லாம் பார்த்து இன்னும் அடங்கா அரிப்பாய் உரசி பார்க்க துணிந்து காந்தியைக்கொன்ற கூட்டம் , பச்சைத்தமிழன் காமராஜரை உயிரோடு எரிக்க முனைந்த கூட்டம் தன்னை எதிர்ப்போரின் ரத்தம் குடிக்க துடிக்கும் கூட்டம் இன்று வந்து நிற்பது பெரியார் முன். அது சிலையல்ல கந்தககோட்டை,தன்னை எரித்து தமிழர் தரணிக்கு வெளிச்சம்காட்டிய தலைவன் அவன். தன் நீண்ண்ண்ட நாள் அரிப்பை சொறிந்து கொள்ள இடம் தேடிய இந்த அக்கிரமகாரத்து "பசு மாடுகள்" நின்ற இடமே பெரியார் சிலை. இதில் ஒரு பருப்புக்கு***யின் கண்டுபிடிப்பு வேறு " திருவரங்கம் பெரியாருக்கு பாதுகாப்பில்லை" என்று திருவாய் மலருகிறது. இது போதாதா சொம்புதூக்கி "சற் சூத்திர்களுக்கு" ( சற் சூத்திர விளக்கம் பின்னர்) என்னாதான் ஓய் ஆகப்போகிறது இடித்துதான் பார்ப்போமே' என தொட்ட வேலை, இதை செய்வது சூத்திரன், இவர்களோடு பொருத போவதும் சூத்திரர்கள் நம் வேலை வழியும் ரத்தத்தினை நக்குவது மட்டுமே என்க்காத்திருந்த ஓநாய்கள் திடுக்கிடும் வகையில், " நீங்கள் எங்கள் வாலை மிதித்தால் நாங்கள் உங்கள் தலையை மிதிப்போம் " என்ற வார்த்தைகளை உண்மையாக்கி காட்டிவிட்டனர் கைதாகியுள்ள தோழர்கள். அலறுகிறது தினமலர், விஷமி என்கிறது அமைதியை விரும்பாத சக்திகள் என்கிறது. ஏனய்யா கைதாகியுள்ள குற்றவாளிகள் இந்துத்துவா வாதிகள் என்கிற உண்மையை ஏன் மறைக்கிறீர்கள் என்ன தயக்கம் ? ."பெரியாருக்கு சீறிரங்கம் பாதுகாப்பு இல்லை"னு எந்த வேலை அது சொல்லியதோ அதன் எதிர்வினைகள் பார்ப்பனருக்கு தமிழ்நாட்டில் எங்குமே பாதுகாப்புக்கு உறுதியளிக்க முடியாது என்கிற வருத்தமளிக்கும் நிலமை ஏற்பட்டது. இவை நாகரீகம் பெற்ற மனிதனாக இருந்து சிந்தித்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். எவனோ செய்த தவறுக்கு அப்பாவிகள் விலை கொடுக்கும் கொடுமையை மறுக்கமுடிவில்லைதான் அதே நேரத்தில் புரியும் மொழியில் பேசினால்தான் புரிந்து கொள்வேன் என்பவர்களுக்கு புரியவைக்க பட்டதாய் தான் இதை எடுத்துக்கொள்ளவேண்டுமா என்று தெரியவில்லை . மாநில அரசின் மீது கெட்ட எண்ணத்தை உருவாக்கும் இந்த முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது நன்மையே.


Dedicated To "பார்ப்பானை அய்யனெனும் காலமும் போச்சே" என பாடிய பாரதிக்கு*********************************************************
நான் எழுத துவங்கி சற்றேறக்குறைய 8 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை தனிபட்ட முறையில் யாரையும் திட்டியதில்லை கருத்தெழுதியவர்களை அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுதான் விமர்சனம் வைத்திருக்கிறேன். "விடாது கருப்பு" பஞ்சாயத்தில் எனது கருத்தை தமிழ்மண நிர்வாகத்திற்கு சொல்லியிருந்தேன்.அது என் உரிமையும் கடமையும் ஆகும். அதே பதிவில் பின் வந்த ஒரு அனானி ஒருவர் கீழ்க்கண்டவாறு எழுதினார். மிக்க மகிழ்ச்சி துவக்கத்தில் நான் குறிப்பிட்ட "ஆரியமாயை"யும் தடை செய்யப்பட்டது பின் அதுவே நாட்டுடைமையாக்கி போற்றப்படுகிறது. புரிந்தால் சரி. அது போல் நான் ஒரே பெயரில் மட்டுமே எழுதுகிறேன் என் இன்னொரு வலைப்பதிவைனை எழுதுவதில்லை அதன் பெயர் தம்பியுடையான். ஆகவே "கின்னர கிம்புருடர்கள் வரவேற்க வைகுந்த பிராப்தி" அடையும் காலத்தில் தவறுக்கு மேல் தவறு செய்து மகரநெடுங்குலைக்காதனின் பழியை தேடிக்கொள்ளவேண்டாமென்று மாறா கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அனானி
December 6th, 2006 | 2:32 am
வரவனையானே நீக்கப்பட வேண்டியவர்தான்….பார்த்தீர்களா அவரது சமிபத்திய பதிவினை….உணர்ச்சிபூர்வமான எழுதுவதாக நினைத்து அடுத்தவர்களை அடித்து நொறுக்கும் இவரது வாதத்தினை இங்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது எனது கோரிக்கை
.

.அது சரியா? வரவனையானன் என்ற நியோ அன்ற அயோக்கிய ராஸ்கல் ஒருவனின் அசிங்கமான பதிவு இன்று வரை அனுமதித்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள், இதற்கு மேலும் உங்களுக்கு மானம் மரியாதை இருக்குமானால் தமிழ்மணத்தில் ஒரு ஷண மேனும் இருப்பீர்களா? உங்கள் மனசாட்சியைக் கேட்டு பதில் சொல்லுங்கள். பின்னூட்டத்தை விட சோற்றிலே உப்புப் போட்டு சாப்பிடும் நமக்கெல்லாம் மானம்

12 மறுமொழிகள்:

 1. +

 1. 4:42 PM  
  Anonymous said...

  மகேந்திரன் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் பதிவிலே என்ன சொல்லிருக்காங்க பாருங்க. இதுலே உண்மை எத்தனை வீதம் பொய் எத்தனை வீதம். குட்டைய கொழப்புறானுய்ங்க. நியோ வெலத்தப்பட்டாரா? முத்து வெரட்டப்பட்டாரா?கணேசன் வெவரம் கெட்டாரா? அய்யா விடாது கருப்பு வெவகாரத்தோட திராவிட தமிழரை தமிழ்மணத்தோட சிண்டுமுடிஞ்சு வெய்ப்போமுன்னே கெளம்பியிருக்கான்ய்ங்க. இந்தப்பொறம் தமிழ்மணத்த திரா'விட'னூக்குச் சப்போர்ட்டின்னு அனானியா திட்டுவானுய்ங்க.அந்தப்பொறம் அதே தமிழ்மணத்த திராவிடனுக்கு அகய்ன்சுன்னு அனானியா திட்டுவானுய்ங்க. இந்த திண்ணைப்பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கனும் தெரிஞ்சுக்குய்ங்க.

  Your re-entry is a great thing. Please see my comments about this issue below. Unfortunately, I am not in a position to write with my identity here. That would send shockwaves and raise questions like 'you too?' about being politically incorrect

  அன்பான திராவிட உள்ளங்களே,

  விஷம் தோய்ந்த மேலாதிக்க உத்தி எவ்வளவு நளினமாக எல்லா இடங்களிலும் வேர் பரப்பி, தன்னுடைய நிலைப்பாட்டை உறுதி செய்து கொள்ளுகிறது என்பதனை இன்னும் ஒருமுறை பார்க்கிறோம்.

  இந்த உத்தி ஒரு நேர்க்கோடு போல செவ்வனே அமைந்திருப்பதை தமிழ்மண வரலாற்றை நெடுங்காலமாக அறிபவர்கள் உணர முடியும்.

  பெயர் குறிப்படுவது முறையல்ல என்றாலும், சில நேரங்களில், பெரிது வாய்ந்த நன்மையை கருதி அதை செய்ய வேண்டியிருக்கிறது.

  நண்பர் பாலசந்தர் கணேசன் அவமானப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தட்டார்.

  தோழர் நியோ திட்டமிட்டு கழிக்கப்பட்டார்.

  துடிப்பான தமிழர் நண்பர் முத்து (தமிழினி) விரட்டியடிக்கப்பட்டார் (இது குறித்து எனக்கு ஐயப்பாடு உண்டு. அவர் இன்னும் உணர்வோடு இருக்கிறார் என்று நம்புகிறேன்)

  இப்போது, செயலாற்றல் மிகுந்த விடாது கருப்பும் பலியாக்கப்பட்டு விட்டார்.

  உண்மையில் தமிழ்மணம் மேல் எனக்கு வருத்தமில்லை. விடாது கருப்பின் சமீப பதிலடிகளை வரன் கடந்த ஒன்று என பிண்ணனி காரணியாக தமிழ்மணம் நிறுத்தியிருப்பது மிக வலுவான தாங்கியாக இருப்பதால, மேலாதிக்க உத்தியின் நஞ்சு அவரை உசுப்பி விட்டது எனற உண்மை தொய்விழந்து விட்டது.

  ஆனாலும், இன்னும் ஒருமுறை மேலாதிக்க உத்தியிடைய கோரமுகமும், அதன் இருப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

  எஞ்சியுள்ள திராவிட உணர்வுகளுக்கு சுண்ணாம்பு தடவப்பட்டிருக்கிறது.

  அனுப்பியவர்அன்புடன் தமிழன் | Saturday, December 09, 2006 10:40:36 PM

 1. ALL THESE EXPRESSIONS ARE THE ONGOING BATTLE DESCRIBED BY PUNDIT JAWAHARLAL NEHRU IN HIS LETTERS TO HIS DAUGHTER"RAMAYANA IS AN EXPRESSION OF THE CLASS WAR ".What can you do?The class supression and all the other tricks of thousands of years are changing.One by one clan power is going.The seats of power becoming hot seats!The writing is on the wall.Just like you changed your dress and work try changing your thinking to become HUMAN!

 1. 8:29 PM  
  இம்சை அரசன் said...

  வரவனை, உம் வரவை எதிர்பார்த்து...
  http://24th-pulikesi.blogspot.com/2006/12/2006.html

 1. 7:58 AM  
  Anonymous said...

  // இந்த திண்ணைப்பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கனும் தெரிஞ்சுக்குய்ங்க.
  //

  அய்யோ ஒரே சஸ்பென்ஸா இருக்கே யாருங்க அந்த திண்ணைப்பேச்சு?

  அது கிடக்கட்டும், இதில் உண்மை பொய பார்க்கும் நீங்கள் மாயவரம் 'அவிழ்த்து' விட்டதில் இதே கேள்விய கேட்டீரா?

  மகரநெடுங்குழைவுநாதனுக்கே அடுக்காது

 1. 11:08 AM  
  Anonymous said...

  யப்பா இன்னும் திரா"விட" பெத்தடின் விக்கிறவரைக் காணோம்???!!!

 1. என்னய்யா...எல்லோரும் சிலேடையா பேசிகிட்டு இருக்கீங்க?

 1. எனக்கும் ஒன்னும் புரியவில்லை...அயோக்கிய ராஸ்கல்னு சொன்னது மட்டும் புரியுது:-)

 1. //பிரபு ராஜதுரை said...
  எனக்கும் ஒன்னும் புரியவில்லை...அயோக்கிய ராஸ்கல்னு சொன்னது மட்டும் புரியுது:-) //

  வக்கீல் இல்லையா அது மட்டும்தான் புரியும் :)))))))))

  அய்யா வழக்குரைஞ்ரே ஒரு ஃசூட் ஒன்னு பைல் பன்னிடலாமா?
  :P

 1. ஒரு விளக்கம்:

  ஒரு சிலர் நான்தான் 'வரவனையான்' என்ற பெயரில் எழுதுகிறேனோ என்கிற அய்யப்பாட்டை அல்லது குழப்பத்தை உண்டாக்க நினைப்பது போல் (இங்கோ அல்லது வேறு பதிவுகளிலோ) தெரிகிறது.

  வரவனையானின் மொழித்திறம் இன்னும் பட்டை தீட்டப்பட்டது; உயர்வானதாகத் தெரிகிறது.

  அவரை நான் என்று யாரும் நினைப்பது எனக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது :)

  ஆனால் அப்பெருமை எனக்கு உடையது அன்று என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். :)

 1. +

 1. 8:30 AM  
  Anonymous said...

  என்ன சொல்ல வருகிறீர்கள் புரியும்படி தெளிவாக சொல்லுங்கள். அங்கும் இங்கும் இல்லாமல் நீங்களும் ஜல்லி அடிப்பது போலத்தான் இருக்கிறது. அது குறித்து தெளிவாக சொல்லுங்கள்.