Monday, December 11, 2006

@ 11:29 AM எழுதியவர்: வரவனையான்

திண்டுக்கல்லில்

அய்யா சிலைக்கு சந்தனம் பூசி, குங்குமம் இட்டு முன்னோட்டம் பார்த்த கூட்டம், தற்போது திருவரங்கத்தில்... இடையில் 100 அடி இருக்கும்போதும் எங்கே அரங்கன் தீட்டுப்பட்டுவிடுவானோ என்ற ஐயத்தில் , அவரது சிலையை சேதப்படுத்தி இருக்கிறது . உச்சநீதி மன்றம் வரை குதித்துப் பார்த்தும் ஒன்றும் பலனில்லை எனவே உடைத்துப் பார்த்து பூரிக்கிறது . இந்த சமூக விரோதச் சக்திகள், மதத்தின் பெயரால் இப்படி சேட்டை செய்து சட்டம் , ஒழுங்கு சீர்குலைந்தால் கலையும் , கவிழும் திமுக ஆட்சியென கணக்குப்போடுகிறது ... பகுத்தறிவு பகலவனின் ஒளி பல்லாண்டு கடந்தும் பலரை பொசுக்கிக்கொண்டிருப்பதற்கான சான்றுகள் இவையெல்லாம்.


பெரியார்

சிலையை அமைப்பதற்கான இடம் கோவில் நிலம் போல் எந்த மன்னனிடம் இருந்தும் இனாமாகப் பெற்றதில்லை. திராவிடர் கழகம் விலை கொடுத்து வாங்கிய நிலம் . 1973 ஆம் ஆண்டு திருவரங்கத்தில் சிலை நிறுவ முயற்சி எடுக்கப்பட்டு , அரசு அனுமதி பெறப்பட்டது. ( இதே காலகட்டத்தில்தான் மதுரையில் நடைபெற்ற கருஞ்சட்டை மாநாட்டில் தந்தைப் பெரியாரின் சிலை திறக்கப்பட்டது.). பல தடைகள் தாண்டி, மீண்டும் 1996 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது . அனைத்து ஆதிக்க வழக்குகளையும் , எதிர்ப்புகளையும் மீறி, நவம்பர் மாதம் 23 ந்தேதி சிலை அமைப்பதற்கான பீடம் அமைக்கப்பட்டது. 29 ஆம் தேதி சிலை நிறுவப்பட்டது . டிசம்பர் 1 ஆம் நாள் திறப்பு விழாவென அறிவிக்கப்பட்டு, அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து சிலர் அதிகாரிகளை அணுகியதால் திறப்புவிழா டிசம்பர் 9 ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட நிலையில், சிலையை விஷமிகள் திட்டமிட்டுச் சேதப்படுத்தியதால் (சிலை அவமதிப் பிற்கு முன் இதனை தூண்டிவிட்டவர்களில் ஒருவரான தயானந்த சரஸ்வதி சொல்கிறார் " பெரியாருக்கு சீறீரங்கம் பாதுகாப்பான இடமில்லை " என்று.) 8 அடியில் நிறுவப்பட்ட சிமெண்ட் சிலை மாற்றப்பட்டு , லால்குடியில் நிறுவ வைக்கப்பட்ட 4 அடி வெண்கலச் சிலை மீண்டும் அவ்விடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. பலகாலம் இருந்த பண்பாட்டுச் சின்னம் பாபர் மசூதியை தகர்த்த கூட்டம் , அந்நினைவு நாளில் காவலர்களின் கவனம் வேறுவகையில் இருக்கும் என எண்ணி இதைச் செய்திருக்கிறார்கள் .
இந்நிகழ்வைத்

தொடர்ந்து நடந்துவரும் கலவரங்கள் , பல தலைவர்கள் அமைதி காக்க வலியுறுத்தியும், சமூக விரோத சக்திகளின் மனம் போலவே நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது . இந்நிகழ்விற்கு முன்னும் (மற்றும் இந்த மூன்று நாட்களுக்குள்) திருநாகேஷ்வரத் தேரோட்டம். அறவக்குறிச்சித் தேரோட்டம். நாமக்கல் ஆஞ்சினேயருக்கு வெள்ளிக் கவசம் சாத்தும் விழா , தலைமைத் தேர்தல் அதிகாரி கலந்துகொண்ட நீடாமாங்கலத்தில் நடந்த குடமுழுக்கு விழாவென நாளுக்கொரு தேரோட்டம், பொழுதுக்கொரு குடமுழுக்காகிய அனைத்து ஆன்மீகச் செயல்பாடுகளும் அமைதியாகத்தான் நடந்து வந்தன.
தனது

95 ஆவது வயதில், குடல் இறக்க நோயால் பதிக்கப்பட்டு, அத்தனை உடல் வேதனையிலும், அவர் மறைவதற்கு பதினாரே நாட்களுக்கு முன்னர், பெரியார் கூட்டிய இரு நாள் எழுச்சி மாநாட்டிற்குப் பெயர் "தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு", ஐந்து நாட்களுக்கு முன்னர் சென்னை தியாகராயநகரில் எப்போதும் போல் எவ்வித சமரசமும் இல்லாமல் அவர் ஆற்றிய பேருரை தமிழர் நலனுக்காக . வயோதிகம் எட்டிப் பார்த்தவுடன், கொள்கைகளை கொட்டிக் கவிழ்த்து அனைவருக்கும் உத்தமராய் நடந்து கொள்ளும் தலைவர்கள் பலர். நினைக்குபோதெல்லாம் சிலிர்ப்பூட்டும் , இறுதி வரை சமூக நீதியை எவ்வித சமரசமும் இன்றி வெளிப்படுத்திய அய்யாவின் கொள்கைகளின் மேல் சமூக மறுமலர்ச்சியின் பயனை அனுபவிப்பவர்கள் கொண்ட பற்று எந்த ஒரு மதவாதியும் அவர்களது மதத்தின் மேல் கொண்ட பற்றிற்குச் சற்றும் குறைவானதல்ல.... ஆனால் மதப்பற்றைப் போல் கண்மூடித்தனமாது அல்ல அவர் கொள்கைகளின் மேல் கொண்ட உறுதியான, எக்காலத்தும் உயிர்ப்பான பற்று. உடைத்தால் சிலைதான் உடையும்.

25 மறுமொழிகள்:

 1. விசித்திர ஜந்துக்களின் சிலைகளை வணங்குபவர்களுக்கு பெரியாரின் சிலையை கண்டால் கோபம் வருவதில் வியப்பேதுமில்லை.ஆனால் அதை தாக்கத்துணிந்த அளவுக்கு சென்றது எப்படி?

 1. உடைத்தவன் தமிழன்.
  உசுப்பியவன் தறுதலை!
  வெறியர்களே அடங்குங்கள்
  வேண்டாம் மோதல்
  தாங்க மாட்டீர்கள்!

 1. 12:05 PM  
  Anonymous said...

  //95 ஆவது வயதில், குடல் இறக்க நோயால் பதிக்கப்பட்டு, அத்தனை உடல் வேதனையிலும், அவர் மறைவதற்கு பதினாரே நாட்களுக்கு முன்னர், பெரியார் கூட்டிய இரு நாள் எழுச்சி மாநாட்டிற்குப் பெயர் "தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு", ஐந்து நாட்களுக்கு முன்னர் சென்னை தியாகராயநகரில் எப்போதும் போல் எவ்வித சமரசமும் இல்லாமல் அவர் ஆற்றிய பேருரை தமிழர் நலனுக்காக . வயோதிகம் எட்டிப் பார்த்தவுடன், கொள்கைகளை கொட்டிக் கவிழ்த்து அனைவருக்கும் உத்தமராய் நடந்து கொள்ளும் தலைவர்கள் பலர். நினைக்குபோதெல்லாம் சிலிர்ப்பூட்டும் , இறுதி வரை சமூக நீதியை எவ்வித சமரசமும் இன்றி வெளிப்படுத்திய அய்யாவின் கொள்கைகளின் மேல் சமூக மறுமலர்ச்சியின் பயனை அனுபவிப்பவர்கள் கொண்ட பற்று எந்த ஒரு மதவாதியும் அவர்களது மதத்தின் மேல் கொண்ட பற்றிற்குச் சற்றும் குறைவானதல்ல.... ஆனால் மதப்பற்றைப் போல் கண்மூடித்தனமாது அல்ல அவர் கொள்கைகளின் மேல் கொண்ட உறுதியான, எக்காலத்தும் உயிர்ப்பான பற்று. உடைத்தால் சிலைதான் உடையும்.
  // மெய்சிலிர்க்கிறது சகோதரரே!

 1. 1:05 PM  
  தீப்பொறி said...

  கொள்கை வியாபாரிகளால் ஏற்பட்ட
  திராவிடத்தின் வீழ்ச்சி இது.வாய் பேசா
  முண்டங்களுக்கு பள்ளி கொள்ள கருவறை,பகலவனுக்கு நடுத்தெருவில்
  கூட இடமில்லை.அரசியல் அதிகாரத்திற்காஅடிப்படைக் கொள்கைகளில் என்று சமரசம் செய்தார்களோ அன்றே ஆரம்பமாகி
  விட்டது அரூபத்தின் அற்புத வேலைகள்.

 1. //வயோதிகம் எட்டிப் பார்த்தவுடன், கொள்கைகளை கொட்டிக் கவிழ்த்து அனைவருக்கும் உத்தமராய் நடந்து கொள்ளும் தலைவர்கள் பலர். நினைக்குபோதெல்லாம் சிலிர்ப்பூட்டும் , இறுதி வரை சமூக நீதியை எவ்வித சமரசமும் இன்றி வெளிப்படுத்திய அய்யாவின் கொள்கைகளின் மேல் //

  75 வயசுல கல்யாணம் பண்ணுனது தப்புதான் ,ஆனா அதை நீங்க இப்படி கிண்டல் பண்ண கூடாது .

 1. 10:08 AM  
  வேங்கைமாறன் said...

  உடைந்தது சிலை அல்ல,தமிழர் மானம்.
  சிலையை உடைத்தவர்கள் சுயமரியாதைச்
  சிந்தனைகளையும் உடைப்பார்கள்.
  இனப்படுகொலை ஒன்றே இதற்கு தீர்வு.
  இல்லையென்றால் சோக்களும்
  வெங்கட்ராமன்களும்,செக்ஸ் சாமியார்
  ஜெயேந்திரனும் நம்மை சூத்தடித்துக்
  கொண்டே இருப்பர்கள்.

 1. 9:12 PM  
  அருள் said...

  மூர்த்தி என்ற அதிபுலுத்திசாலி பெரியாரின் திருமணத்தை கேலி செய்கிறார்.குமரி முதல் கிழவி வரை
  ஒருவரை விடாமல் சோலிபார்த்த
  காமவெறியன் ஜெயேந்திரனுக்கு
  லிங்க பூஜை செய்து ஜென்மசாபல்யம்
  அடையும் குருமூர்த்தி போன்றவர்களை
  என்ன செய்வது?பெரியாரியத்தின் வீழ்ச்சி
  சிந்தாந்தத்தின் வீழ்ச்சி அல்ல,தமிழ்ச்
  சமூகத்தின் வீழ்ச்சி.

 1. //உடைத்தால் சிலைதான் உடையும்//

  செந்தில் அய்யா,

  இல்லீங்கய்யா..சிலை உடைந்தால், கோவிலுக்கு வெளியே பூ வித்துக் கொண்டிருக்கும் தாத்தாக்களின் மண்டையும் உடையும் அய்யா.

  பாலா

 1. சகோதரரே நீங்கள் கூறுவது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. நீங்கள் சாமி சிலையை வெறும் கல் என்று சொல்கிறீர் அப்படிப் பார்த்தால் பெரியார் சிலையும் வெறும் கல் தானே கல் உடைந்ததற்கு ஏன் இப்படி கூச்சலிடுகிறீர்?? இதிலிருந்து தெரிகிறது நீங்களும் பகுத்தறிவு என்னும் பேரில் ஒரு மதத்தை உருவாக்கிவிட்டீர் என்று !!

 1. வரவனை,

  பிராமனர்களைத் தவிர்த்து பெரியாரை தூற்றும் மற்ற பெரும்புடுங்கிகளுக்குத் தெரியுமா ? கோவிலுக்குள் பெரும்புடுங்கிகள் நுழைய முடிந்ததற்கு பெரியாரின் போராடமே காரணம் என்று.

  அடிமைத்தனம் தான் அற்புத சுகமளிக்கிறது என்கிற மாசோகிஸ்டுகளை அவர்கள் போக்கில் விட்டுவிடுவோம் அள்ளிக் கொட்டிக் கொண்டு கிடக்கட்டும்.

 1. கோவி.கண்ணன் அவர்களே உங்களிடம் points இருந்தால் அதை எடுத்துக் கூறுங்கள் தேவை இல்லாமல் கெட்ட வார்த்தைகள் பேசாதீர். நான் சென்னைவாசி வாயைத் திறந்தால் சென்னை கெட்ட வார்த்தைகள் மள மளவென வரும். தேவை இல்லாமல் என் பேரைக் கெடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. இதுதான் உங்கள் பகுத்தறிவோ?? இவற்றைத் தான் உங்கள் அமைப்பு கற்றுத் தருகிறதோ?? முதலில் மற்றவரை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பகுத் தறிவைப் பிறகு பரப்பலாம் !!

 1. This comment has been removed by the author.
 1. //Senthil Alagu Perumal said...
  கோவி.கண்ணன் அவர்களே உங்களிடம் points இருந்தால் அதை எடுத்துக் கூறுங்கள் தேவை இல்லாமல் கெட்ட வார்த்தைகள் பேசாதீர். நான் சென்னைவாசி வாயைத் திறந்தால் சென்னை கெட்ட வார்த்தைகள் மள மளவென வரும். தேவை இல்லாமல் என் பேரைக் கெடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. இதுதான் உங்கள் பகுத்தறிவோ?? இவற்றைத் தான் உங்கள் அமைப்பு கற்றுத் தருகிறதோ?? முதலில் மற்றவரை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பகுத் தறிவைப் பிறகு பரப்பலாம் !!
  //

  தாரளமாக பேசலாம்,

  நான் பெரியாரை தூற்றூம் மதி ஈனர்களைத்தான் சொல்கிறேன். அந்த லிஸ்டில் நீங்கள் இருப்பதாக நீங்களே நினைத்தால் சென்னை பாசை என்ன சேரி பாசையில் கூட திட்டுங்கள். பெரியார் வாங்காத பேச்சுக்கள் இல்லை நண்பரே.

 1. // தாரளமாக பேசலாம் //

  நான் என்ன உங்களைப் போல மரியாதைக் கெட்டவன் என நினைத்தீர்களா? நான் இந்து மதத்தைப் பின் பற்றுபவன் எனவே இந்து மதத்தின் நெறியோடுதான் மக்களை மதித்து வாழ்வேன். உங்களை போன்று ஒரு மதத்தையும் பின் பற்றாதவன் இப்படித் தான் நெறி கெட்டு மக்களை மதிக்கத் தெரியாமல் ஒரு மிருகத்தைப் போல வாழ்வான் !! மதம் மனிதனை நெறி படுத்தும் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு !!

 1. வைதாரையும் வாழவைப்போன் என்றுதான் கடவுளைப் பற்றி அறிந்துள்ளோம். பெரியார் சிலை வைப்பதால் கடவுளுக்குத் தீட்டு வராது. நெருப்பைக் கரையான் உண்ணல் நகைச்சுவை என்பது போலத்தான் இதுவும். ஆனால் சிலைச்சேதம் என்பது வெறுப்பின் வெளிப்பாடாகப் பார்க்கிறேன்.

  பெரியாரின் சிலையை உடைத்தவர்களுக்குப் பெரியார் மீதிருக்கும் வெறுப்புதான் காரணம். தீட்டாவது. பூட்டாவது.

  பெரியார் சிலையைத் தாராளமாக வைக்கலாம். ஆனால் இந்த நேரத்தில் இஸ்லாம் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. பெரியாருக்குச் சிலை வைப்பதும்..மாலை வைப்பதும் தொடருமானால்...நாளை அவரும் கடவுளாக வாய்ப்பிருக்கிறதோ என்று. இது ஒரு சிந்தனைதான். பெரியாருக்குச் சிலை வைக்கக் கூடாது என்ற மறுப்பு இல்லை.

 1. //Senthil Alagu Perumal said...
  நான் என்ன உங்களைப் போல மரியாதைக் கெட்டவன் என நினைத்தீர்களா? நான் இந்து மதத்தைப் பின் பற்றுபவன் எனவே இந்து மதத்தின் நெறியோடுதான் மக்களை மதித்து வாழ்வேன். உங்களை போன்று ஒரு மதத்தையும் பின் பற்றாதவன் இப்படித் தான் நெறி கெட்டு மக்களை மதிக்கத் தெரியாமல் ஒரு மிருகத்தைப் போல வாழ்வான் !! மதம் மனிதனை நெறி படுத்தும் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு !!
  //
  நண்பரே நீர் யாரென்றே எனக்கு தெரியாது, என்னையும் உமக்கு தெரியாது மரியாதை எல்லாம் இங்கு எங்கே வந்தது ? நான் முதலில் குறிப்பிட்ட பின்னூட்டத்தை உம்மைக் குறித்துச் சொல்வதாக நீரே நினைத்துக் கொண்டு ஆவேசப்பட்டால் எனக்கு என்ன வந்தது ? இரண்டாவது பின்னூட்டத்திலும் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். தனிமனித தாக்குதல் நடத்தியது நீர் தான்.

  ஆண்குறி, பெண்குறி, உடலுறவு இவற்றை உறவுகளுடன் இணைத்து சென்னை பாசையில் புதிதாக எதும் வசசு சொல் இருக்கிறதா என்று அறிய எனக்கும் ஆசைதான். நான் 10 வருடங்கள் சென்னையில் இருந்திருக்கிறேன்.

  'மலத்தை எடுத்து மாற்றான் முகத்தில் வீசுவேன்' என்று சொல்பவன் கையில் தான் முதலில் மலம் இருக்கும்.

  உம்மை குறித்துச் சொல்வதாக நினைத்தால் வசை என்ன ? இசை அமைத்துக் கூட பாடுங்கள். எனக்கு ஒன்றும் இல்லை.

  நான் பின்னூட்டம் போட்டது வரவனையான் செந்தில் என்கிற எனது நண்பர் எழுதிய இடுகைக்கு. இதில் எவரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

  இதற்கு மேல் அபத்தமாக எதுவும் வந்தால் நான் பதில் சொல்லப் போவதில்லை.

  நன்றி.

 1. 9:06 PM  
  Anonymous said...

  கோவி.கண்ணன், வரவனையான் செந்தில் all are Hindu names....Specially கண்ணன் a brahmin god name......

  So what you say ...you hate this names?

  I hope you are giving respect to your parents and their believes.

  If you are why dont you given the same respect to others believes.

  You are all saying about Periyar EVR. He also done the same ......

  He was responsible for a murugan temple (he was a trustee till end of his life). FOr that he told that it was his duty.

  Now everyone thinks that they are equal to periyar to scold the hinduism.....No one can become periyar just scolding hinduism....

  One more thing all the Periyar followers did is.....scolding religion which given a huge pushup for Hinduism. Example how many people in each temple you can see in India....

  All Periyar followers barking in roads like anything.....

 1. இதென்ன கூத்து?

  இங்கே கும்மி அடிக்க அலவ்டா? பொட்டீ ரெடியா? நான் ரெடி!!!

 1. 2:52 PM  
  Anonymous said...

  கருத்தியல் கும்மி அடிக்க மட்டுமின்றி, கருத்தற்ற கும்மிக்கும் எப்போதும் இங்கு அலவ்டு. அல்கேட்ஸ் அவர்களே !


  சக அல்கேட்ஸ்

 1. //Anonymous On 9:06 PM Wrote
  கோவி.கண்ணன், வரவனையான் செந்தில் all are Hindu names....Specially கண்ணன் a brahmin god name......

  So what you say ...you hate this names?

  I hope you are giving respect to your parents and their believes.

  If you are why dont you given the same respect to others believes.

  You are all saying about Periyar EVR. He also done the same ......

  He was responsible for a murugan temple (he was a trustee till end of his life). FOr that he told that it was his duty.

  Now everyone thinks that they are equal to periyar to scold the hinduism.....No one can become periyar just scolding hinduism....

  One more thing all the Periyar followers did is.....scolding religion which given a huge pushup for Hinduism. Example how many people in each temple you can see in India....

  All Periyar followers barking in roads like anything.....
  //

  யார் இந்த அரைகுறை தகவலர்,
  ஹஹ்ஹா கண்ணன் ப்ராமண கடவுள் பெயரா ? யார் சொன்னது. சங்க இலக்கியம் தொட்டே மால் என்கிற திருமால் வழிபாடு தமிழகத்தில் இருக்கிறது நண்பரே, வேதகாலத்து பிராமனர்களுக்கு இந்திரன் தவிர வேறு சுந்தர கடவுள் இல்லை. பேச்சுக்கு கிருஷ்ணனும் கண்ணனும் ஒன்று என்றாலும் கிருஷ்ணன் என்பவன் கரிய நிறத்தோன் சமஸ்கிருதத்தில் சியாம் சுந்தர். ஆடுமேய்க்கும் ஆயர் குலத்தோன் கிருஷ்ணன் ஐயர் குலத்தோன் அல்ல. கண்ணன் என்பது தூய தமிழ் பெயர் அதை பக்தியாளர்களும் சூடிக் கொள்வார்கள். கேரள, தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கும் பெயர்.

  நல்லா எல்லாவற்றையும் படிச்சுட்டு வந்து சொல்லுங்க சாமி கும்பிடு போட்டுவிட்டு கேட்டுக் கொள்கிறேன்.

 1. 4:29 PM  
  Anonymous said...

  சிலை
  மலை
  கலை
  விலை

 1. // Now everyone thinks that they are equal to periyar to scold the hinduism.....No one can become periyar just scolding hinduism.... //

  மிகவும் சரி தோழரே !! எல்லாருக்கும் தந்தை பெரியார்னு நினைப்பு. பெரியாரின் கால் தூசி பெருவார்களா இவர்கள் !! உதாரணத்திற்கு நண்பர் கோ.வி. அவர்கள்
  // பெரியார் வாங்காத பேச்சுக்கள் இல்லை நண்பரே. //
  என்கிறார். என்னவோ அவருக்கு குட்டிப் பெரியார்னு நனப்பு (நனப்பு தான் பொழப்ப கெடுத்ததாம்).

 1. பெரியார் திரைப்படம் பார்த்தோமே; அதில் வருகின்ற "செருப்பு எறிகாட்சி" பாணியில், பெரியார் சிலைகளின் அருகே பெரிய கல் ஒன்றினையும் வைத்து அவற்றின் மீது பெரியார் என்று எழுதி வைத்து விடலாம். சிலையை உடைக்கின்ற மூர்க்கன் அதையும் உடைத்துவிட்டுப் போனால் உள்ளூர் கல்லுடைக்கும் தொழிலாளிக்குக் கொஞ்சம் உதவிய புண்ணியமாவது மிஞ்சும். கடவுள் தூணிலும் இருக்கிறார் கல்லிலும் இருக்கிறார் என்று ஏதோ பிரசங்கி சொன்னதைக் கேட்ட அதிபுத்திசாலி செய்த முயற்சியாக இருக்கும். கோவிலுக்குள் இருக்கும் சிலைகளைத் தான் இவனைத் தொட விட மாட்டார்களே. பாருங்களேன், அவனுக்கும் "உடைத்துப் பாரடா உள்ளே கடவுளும் கிடையாது ஒரு வெங்காயமும் கிடையாது" என்று உணர்த்த பெரியார் சிலை தேவைப்படுகிறது. "கடவுளை நம்புகிறவன் முட்டாள்" என்று சிலையின் கீழே பொறிக்கப்பட்டிருப்பதற்கு எழுதப்பட்ட பதவுரை தான் இடிப்பு.

  RATHNESH

 1. இங்கு கொமண்ட் மாடரேசன் செய்வது யார்?

 1. //இங்கு கொமண்ட் மாடரேசன் செய்வது யார்?//

  தெரிஞ்சுதுன்னா கும்மி அடிக்க வசதியா இருக்கும்!