Monday, December 18, 2006

@ 10:27 AM எழுதியவர்: வரவனையான்

முதலில் கவிதைகளில் துவங்குவோம், எனக்கு பிடித்த கவிதைகள் மட்டும். இதில் வரிசை படுத்த ஒன்றுமில்லை. நினைவு அடுக்குகளில் இருந்து துவங்குகிறேன். கவிதை எழுதிட்டு இருக்கும் போதே அப்படியே உருகி வழிஞ்சிட்டாருன்னா மீதி யாரு எழுதுறதுன்னு எனக்கு ஒரு கவலை வரும், அப்படி ஒரு கவலையை ஏற்படுத்தும் கவிஞர் பிரியனின் இந்த கவிதை

வித்தியாசமாகவும் புதிய பார்வையில் உவமை படுத்த யாகூவை பயன்படுத்தியது நன்றாகவே இருந்தது. இரண்டுக்கும் மேற்பட்ட தடவை

வாசித்த கவிதை


நானும் அவனும் சமவயது, இருவரும் நண்பர்கள், இருவருமே காதலுற வில்லை 7 கழுதை வயசாகியும் . எனக்கான கவிதையை அவன் எழுதியது போல் உணர்ந்தேன். அது இதுதான்


அப்புறம் நம்ம பொன்ஸ் அக்காவின் இந்த கவிதைகள் , ஒரு வரி கூட மறக்காமல் நினைவிலேயே இருக்கிறது.

//நானே ரசிக்காத
என் கவிதைகளை
எழுதிக் கொண்டே இருக்கிறேன்..

படிக்கவும்
ரசிக்கவும்
நிமிடங்கள் இல்லை என்னிடம்

புதுப் புதுக்
கவிக்கணங்கள் மட்டும்
கிடைத்து விடுகின்றன,
இடைவெளியில்லாத
நமது நட்பில்!//

//கவிதைக்குள்
மறைத்துக்
கொள்கிறேன் என்னை..

சொல்ல விரும்பாமல்,
தயங்கித் தயங்கி
மறைக்கும்
ரகசியங்களைக்
கண்டுபிடித்து விடுவாயோ என்று //

இன்னோரு கவிதை தமிழ்நதியின் கவிதை , அதை தேடிகிட்டு இருக்கேன். கிடைத்ததும் இணைக்கிறேன். என்ன இருந்தாலும் மண்டே மார்னிங் என்பதால் கொஞ்சம் வேலையும் இருக்கிறது. இப்போதைக்கு இவ்ளோதான்.

தமிழ்நதியின் அந்த கவிதை இதுதான் நீண்ட நாள் அதன் தாக்கம் இருந்தது, பெண்மொழி வெறும் துயர் மட்டுமா பேசும், இப்படியும் இருக்கும்


அதுபோல் சுகனின் அந்த "நாய்" கவிதைக்காக வெறுப்பில் இருந்த என்னை இந்த அரசியற்கவிதை வெகுவாக ஈர்த்தது.

7 மறுமொழிகள்:

 1. வரவனை,
  நல்ல பல கவிதைகளுக்கு இணைப்புக் தந்திருக்கிறீர்கள். இதில் பிரியன், மற்றும் நவீன் ஆகியோரின் கவிதையை ஏற்கனவே படித்திருந்தேன். குறிப்பாக நவீனின் கவிதை மிகவும் இரசித்துப் படித்த கவிதை. அவர் கவிதையில் சொன்ன படியான சில அனுபவங்கள் எனக்கும் உள்ளதாலோ என்னவோ அக் கவிதை மிகவும் பிடித்து விட்டது.
  நவீனின் கவிதைக்கு நான் எழுதிய பின்னூட்டத்தைத் தேவை கருதி இங்கும் தருகிறேன்.

  ----------------------------
  நவீன்,
  ஆகா! அருமை! அற்புதம்! பிரமாதம்!
  என்ன சொல்லிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. உணர்வுகளை யதார்த்தமாக மிகவும் அனுபவித்துக் கவியாக்கியுள்ளீர்கள். இக் கவிதையைப் படிக்கும் பலர், தமது அனுபவங்களை நீங்கள் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்களோ என வியக்கும் வண்ணம் அன்றாடம் பலரின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளைக் கவியாக்கியுள்ளீர்கள். அதிலும் பாருங்கள், இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன் எமது பூட்டன் வள்ளவர் சொன்ன அதே ஊடலை நீங்கள் இன்றைய காலத்திற்கு ஏற்றது போல் சொல்லியுள்ளது மிகவும் அழகு.

  /* கண்டவளோட ‘சாட்’
  பண்ணிட்டு இருக்கத்தான்
  எப்பவுமே நீ ‘ஆன்லைனில்’
  இருக்கிறாய் என ஏன்
  என்னிடம் சண்டை போடுகிறாய் ?*/

  இதே ஊடலை வள்ளுவர் 3000 ஆண்டுகளுக்கு முன் இப்படிச் சொல்கிறார்:

  வழுத்தினாள் தும்மினே னாக அழித்துஅழுதாள்
  யார்உள்ளித் தும்மினீர் என்று


  தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
  எம்மை மறைத்தீரோ என்று


  தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்
  இந்நீரர் ஆகுதீர் என்று  நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும்நீர்
  யார்உள்ளி நோக்கினீர் என்று


  நவீன், இன்னும் பல கவிதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

 1. updated

 1. தமிழ்நதியின் கவிதை அருமை.. இதுவரை படிக்காமல் விட்டுப் போனதைக் குறிப்பிட்டு தேடிக் கொடுத்தமைக்கு நன்றி :)

  பதிவுகள் வந்த போதே நான் படித்துவிட்ட மற்ற கவிதைகளும் நல்ல தேர்வு

  இந்த வரிசையில் அடுத்த பதிவிற்காக காத்திருக்கும்...

 1. நன்றி நண்பரே,
  கவிதையென ஒப்புக்கொண்டதற்கும் விருப்பத்தெரிவில் சேர்த்துக்கொண்டதற்கும். இதைப் பற்றி அஞ்சல் அனுப்பிய பொன்ஸ்க்கும் நன்றி. எனக்கு இது நட்புக்காலம் போலிருக்கிறது. என்னளவில் இது இளவேனில்… விசைப்பலகையூடாக மலர்களின் வாசனை.

 1. again updated
  :)

 1. நல்ல கவிதைகளின் இணைப்புக்கு நன்றி.

  அப்படியே மண்டைய கொடஞ்சு கொஞ்சம் யோசிச்சு, ஒரு 10 கவிஞர்கள் பேர சொன்னீங்கன்னா ஒரு சர்வே எடுத்து டாப்ப செலக்ட் பண்ணிடலாம் :)

 1. 9:48 AM  
  போலி டி.ஆர். said...

  தம்பீ வரவணை.[அன்ணா பாணியில்]


  அன்னைத் தமிழால் பெற்றாய்

  பெரும் பேறினை.


  தமிழ் கூறும் நல்லுலகில் காத்திருக்கிறது

  உனக்கோர் அரியனை.

  "வலைப்பூகலைவாணரே"

  . வாழ்த்துக்கள்