Tuesday, December 05, 2006

@ 5:47 PM எழுதியவர்: வரவனையான்

ஒரு ஆராய்ச்சி குறிப்பொன்று சொல்கிறது கன்னட மொழி தமிழின் 69 விழுக்காடு வார்த்தைகளை கொண்டிருக்கிறது. தெலுங்கின் 63 விழுக்காடு சொற்கள் தமிழினுடையது என்றும் மலையாளத்தின் 91 விழுக்காடு தமிழ்தான் என்றும் துளுவின் 47விழுக்காடு, சிங்களத்திலும் வங்காளத்திலும் ஏன் சம்ஸ்கிருத்ததிலும் தமிழின் வேர்ச்சொற்கள் பெருந்தொகையில் உண்டு. துணைக்கண்டமெங்கும் வியாபித்திருக்கும் 100 க்கும் மேற்பட்ட பழங்குடிகளின் ஆதி மொழிகளில் தமிழை இலகுவாக கண்டறியலாம். மலையாளம் தோன்றி 700 முதல் 800 ஆண்டுக்குள்தான் இருக்கும் என்றும் கன்னடம் தோன்றி 800 முதல் 850 ஆண்டே இருக்கும் என்றும் தெலுங்கு தோன்றியது 900 ஆண்டுகளுக்கு முன் என்றும் கூறி செல்லும் அதன் பக்கங்களை தவிர்த்து நாம் சமகாலத்துக்கு வந்தோமானால் தமிழிசையும் கர்நாடக இசையும் சமகாலத்தவை என்னும் அபஸ்வரம் எழுவதைக்கேட்கலாம். சமகாலத்தைவை என்றால் ஒரே நேரத்தில் தோன்றியவை எனும் பொருளில் அந்த அபஸ்வரம் ஒலிக்கிறது. அது எப்படி தனக்கென ஒரு இலக்கன நூலையே 4000 வருடத்துக்கு முன் உருவாக்கிய சமூகம் தனக்கென ஒரு பண்பாட்டு இசை இல்லாமல் வரலாற்றை கடந்து வந்திருக்க முடியுமா ?

கர்நாடக இசை என்று பார்த்தால் அது கொண்டிருக்கும் அனைத்து விடயங்களும் தமிழிசையிலிருந்து திருடிக்கொண்டவையாகவே இருக்கிறது. அதன் ராகம் - பண் என்கிற தமிழ் பதத்திலிருந்து சுடப்பட்டு மறுபடியும் இங்கே விற்கபடுகிறது. தாளம், ஸ்வரம்,ஆரோகணமும்,அவரோகணமும் முறையே தாளம் , பதம், ஆரோசை அமரோசை என்று இங்கிருந்தே போனவையாகும் . அந்த ஆராய்ச்சியை இன்னும் கொஞ்சம் உட்சென்று பார்த்தோமானால் அவ்விசையின் அடிப்படையான ஸ்வரங்கள் ச , ரி,க,ம,ப,த,நி முறையே இளி ,விளரி,துத்தம் ,கைக்கிளை ,குரல் ,உழை, தாரம் என்கிற தமிழ் சுரங்கள்தானே.கொஞ்சம் செவிமடுத்தோமானால் அது சாம வேதத்திலிருந்து ( கவனிக்கவும் - ஷாமா அல்ல) வந்தது என்று சொல்கிறார்கள். ஷாமாக்கு ,ச்சா ... சாமவேத காலத்துக்கு முன்பே தமிழில் மூவகை உண்டு . இயல், இசை, நாடகத்தமிழ் என்று அதில் இசைக்கென்றே தனி தன் மொழியில் ஒரு பிரிவை ஏற்படுத்தியவன் இசை குறித்த அறிவு இல்லாமல் இருப்பானா? அதிலும் பிற இரு தமிழிலும் இசை உண்டு. இதை மேலும் கொஞ்சம் உள்ளாய்ந்து பார்த்தால் சிந்து சமவெளிப்பகுதியில் கிடைத்த இசைக்கருவிகள் அதன் சின்னங்களும் திராவிட நாகரீகம் இசையுடன் வாழ்ந்த உண்மையை உரைக்கின்றன. அதிலும் குறிப்பாய் தமிழரின் மற்றோரு அடையாளமாகி விட்ட " யாழ் " கிடைத்தது. தோற்பறைக்கருவிகள் கிடைத்தது. முழவு கிடைத்தது. இவை ஒன்றும் பிற நாடோடிக்கும்பல்களிடம் இருந்து ஒன்றும் பறிக்க படவில்லை. இசைக்கருவிகள் மட்டுமா கிடைத்தது நடனமாடும் பெண்ணின் சிலையும் கிடைத்தது. இசை இன்றி நடனம் வர வாய்ப்பு இல்லை.

சற்றேறக்குறைய (அன்மையில் !!! ) அதாவது 5000 வருடங்களுக்கு முன் முதலாம் தமிழ்ச்சங்கத்தில் "பெருநாரை" "பெருங்குருகு" போன்ற நூல்கள் இசைக்கென்றே இருந்தன. இவைகொண்டு இசை வளர்க்கபட்டது.2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் குழல் வருகிறது, ஆம் புல்லாங்குழல் வருகிறது. புல்லினால் ஆகும் குழல் என்று அந்த இசைக்கருவிக்கு பெயர். மூங்கில் லில் இருந்து வருபவை எப்படி புல்லினால் ஆகும் குழலாக முடியும், மூங்கில் மரமாக இருந்தாலும் அது ஒரு புல் வகையே ஆகும் என்பது தாவரவியலின் கூற்று. தமிழன் தாவரவியலும் கொஞ்சம் தெரிந்து இருந்தான் என்பது மகிழ்வே. இதனை சிலப்பதிகாரத்தின் மதுரைக்காண்டத்தில் - ஆய்ச்சியர் குரவையில் வரும் கீழ்கண்ட வரிகள் இன்னும் கொஞ்சம் சிறப்பானவை "கொன்றையன் தீங்குழல் கேளாமோ தோழி"
ஆம்பலென் தீங்குழல் கேளாமோ தோழி
முல்லைய்ந்தீங்குழல் கேளாமோ தோழி " என்கிற வரிகள் புல்லாங்குழலை தீங்குழல் என்கிறது. தீக்கொண்டு துளையிடுவதால் அதை தீங்குழல் என்று பாடுகிறார்கள்.


இதுவும் ரவி சாஸ்த்திரிய சங்கீதத்தோடு ஒன்றாக பிறந்ததா என்று அறிவீலிஜிவிகளீடம் கேட்கவேண்டும். "சுப்ரபாதம் முதல் சுப்புலட்சுமி" வரை எல்லாமும் இங்கிருந்து சுடப்பட்ட கதையை அடுத்த பதிவில் பார்ப்போம்

24 மறுமொழிகள்:

 1. 2:23 PM  
  ஏமாறாதவன் said...

  தொடர்ந்து காமெடி பதிவு வழங்கும் வரவனையானுக்கு நன்றி.

  கர்னாடக சங்கீதம் 5000 வருஷம் முன் தமிழிலிருந்து சுடப்பட்டதாம்.

  அதனால் என்ன. இஷ்டம் இருந்தா கேட்டுட்டு போங்க.

  எல்லா சங்கீதமும் 5000 வருஷம் முன்னாடி இருந்துதா. ஒருவேளை பிரிட்னி, மாடன்னா எல்லோரும் சுப்புலட்சுமி மாதிரி திருடிட்டாங்களா. ஒருவேளை அவிங்க "பாப்பாத்தி" இல்லையா. ஆனா, அம்சமா கீறாங்களே. இதை பற்றியும் கொஞ்சம் பதிவு போடுங்க. படிக்க எங்களுக்கு வேண்டியது கிரகம்தான். படிச்சா சுர்ர்ருன்னு ஏறனும். அதான் முக்கியம்.

 1. அதிக தகவல்கள் இருக்கின்றன பதிவில்...பல தகவல்கள் புதியதாகவும் புதிராகவும் உள்ளன...!!!!

  தொடர்ந்து எழுதுங்கள், காத்திருக்கிறேன்...!!!

 1. //அது எப்படி தனக்கென ஒரு இலக்கன நூலையே 4000 வருடத்துக்கு முன் உருவாக்கிய சமூகம் தனக்கென ஒரு பண்பாட்டு இசை இல்லாமல் வரலாற்றை கடந்து வந்திருக்க முடியுமா..?//

  இது ஒரு நல்ல கேள்வி.

  ஆழியூரான்(பீட்டா பிளாக்கர் கோளாறினால் பட்டிக்காட்டானாக..)

 1. //அடுத்த பதிவில் பார்ப்போம்//

  தீட்டாயிடுத்து-3..? அசத்துங்க ராசா அசத்துங்க..

  ஆழியூரான்,
  (பீட்டா பிளாக்கர் கோளாறினால் பட்டிக்காட்டானாக..)

 1. நல்லதொரு தொடர்.

 1. 3:02 PM  
  Anonymous said...

  //"சுப்ரபாதம் முதல் சுப்புலட்சுமி" வரை எல்லாமும் இங்கிருந்து சுடப்பட்ட "கதையை" அடுத்த பதிவில் பார்ப்போம்//

  சொல்வதெல்லாம் 'கதை' என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தமைக்கு நன்றி. நல்ல கதை. தொடரட்டும்.

 1. //தொடர்ந்து காமெடி பதிவு வழங்கும் வரவனையானுக்கு நன்றி.
  கர்னாடக சங்கீதம் 5000 வருஷம் முன் தமிழிலிருந்து சுடப்பட்டதாம்.
  அதனால் என்ன. இஷ்டம் இருந்தா கேட்டுட்டு போங்க.
  எல்லா சங்கீதமும் 5000 வருஷம் முன்னாடி இருந்துதா. ஒருவேளை பிரிட்னி, மாடன்னா எல்லோரும் சுப்புலட்சுமி மாதிரி திருடிட்டாங்களா. ஒருவேளை அவிங்க "பாப்பாத்தி" இல்லையா. ஆனா, அம்சமா கீறாங்களே. இதை பற்றியும் கொஞ்சம் பதிவு போடுங்க. படிக்க எங்களுக்கு வேண்டியது கிரகம்தான். படிச்சா சுர்ர்ருன்னு ஏறனும். அதான் முக்கியம்.//


  மேலே கருத்தெழுதிய "கொண்டைக் குடுமி" எந்த இடத்தில் நான் 5000 வருசத்துகு முன்னாடி கர்னாடக சங்கீதம் சுடப்படுன்னு சொல்லி இருகிறேன் என்று சுட்டிக் காட்டினால் நல்லாயிருக்கும். மேலும் இந்த பதிவு பாப்பாத்திகள் அம்சமா இல்லை பாப் கேர்ள்ஸ் அம்சமா என்று விவாதம் செய்யவில்லை, அப்படி செய்யவேண்டிய அரிப்பு ஏதும் இருந்தால் என்னுடைய போன பதிவில் "அனானி"யாக வந்து 20 காம்மென்ட் போட்ட "வயதில்" மட்டுமே மூத்த வலைபதிவாளரின் பதிவுக்கு போய் செய்யலாம் என பரிந்துரைக்கிறேன்.

 1. வரவனையான்...

  //2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் குழல் வருகிறது, .....//

  "குழலினிது யாழினிது என்பார்தம் மக்கள் மழலைச்சொல் கேளாதார்"

  என்ற அருமையான குறளில் குழல் யாழின் குறிப்பை விட்டு விட்டீர்களே...

  கதிரவன்.

 1. நல்ல பதிவு செந்தில்..தொடருங்கள்

 1. 4:06 PM  
  Anonymous said...

  //என்னுடைய போன பதிவில் "அனானி"யாக வந்து 20 காம்மென்ட் போட்ட "வயதில்" மட்டுமே மூத்த வலைபதிவாளரின் பதிவுக்கு போய் செய்யலாம் என பரிந்துரைக்கிறேன்.
  //
  அடுக்குமா பொய் பொய் ! எல்லாம் அந்த மகரநெடுங்குலைக்காதனுக்கே வெளிச்சம் :))

 1. பாப்பாத்திகள் அம்சமா இல்லை பாப் கேர்ள்ஸ் அம்சமா ?

  நல்ல தலைப்பாய் இருக்கிறதே? :))

  ***
  வரவணை,
  பல தகவல்களை அளித்திருக்கிறீர்கள். தொடருட்டும் உம் சிறப்பான பணி.

  அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.

 1. இங்கே ஷாமா என்று ஒரு பெயரினை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
  ஷாமா சாஸ்திரியை கேள்விப்பட்டிருந்தாலும், என்னுடைய தோழியின் பெயரும் ஷாமா தான். ஆதலால் உங்களது இந்தப் பதிவை தனிமனித தாக்குதலில் சேர்த்து தமிழ்மண நிர்வாகத்தாரிடம் முறையிடலாமா?

  இப்போதைக்கு இது தானே "ட்ரென்ட் செட்டர்"...:-)))))))))))))))))))

 1. 4:17 PM  
  Anonymous said...

  you have to understand that so much anger will not help sir. Your article is good, based on so many critical research. Please expand this research to so many areas and not just against a specific caste. Good luck and thank you.

 1. நல்ல பதிவு. தொடருங்கள்.

 1. //கர்நாடக இசை என்று பார்த்தால் அது கொண்டிருக்கும் அனைத்து விடயங்களும் தமிழிசையிலிருந்து திருடிக்கொண்டவையாகவே இருக்கிறது. அதன் ராகம் - பண் என்கிற தமிழ் பதத்திலிருந்து சுடப்பட்டு மறுபடியும் இங்கே விற்கபடுகிறது.//

  நம் இசையை மட்டுமா திருடினாரகள்?
  நம்மையே அல்லவா திருடிவிட்டார்கள்!

  நல்ல பதிவு.

  திருட்டு கும்பல்களின் முகத்திரையை கிழித்து தமிழ் உள்ளங்களின் சுயமரியாதையை நிலைநாட்ட நீங்கள் எடுத்து இருக்கும் முயற்சிக்கு எனது முழு ஆதரவும் பாராட்டும். தகுந்த ஆதாரங்களுடன் சீரிய
  ஆராய்ச்சிகளை முன் வைத்து கலை, கலாச்சார திருட்டு கும்பலை குற்றவாளி கூண்டில் ஏற்றுவோம்.
  தமிழர்கள் தலை நிமிர இது போன்ற போன்ற ஆராய்ச்சி கட்டுரைகள் அனைத்து துறைகளிலும் மிக அவசியம்.

  நன்றி.

 1. Vazhthukkal.
  What scholars like V.P.K.Sundaram and various others have established with facts you have explained in a simple effective way.What is important now is to sing Thirukkural,Neerarum.. in every function we have even in our house.Honestly I didnot know that Thirukkural is amusical literature until a student of Dhandapani Desikar sang it.I have heard many Thirukkurals in many ragas afterward.
  In all our functions we should have some time for classical Thamizh isai.A friend of mine a Prof. in USA had a Nattiya Arangetram in Mylapore all songs classical Thamizh isai for their twin daughters.Action should speak louder.

 1. 9:22 AM  
  மதன் said...

  வி.ஐ.பி. கேள்வி
  சுதா ரகுநாதன், சென்னை.

  கர்நாடக இசை ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றி வருகிறது! பெரும் பாலும் மேல்தட்டு மக்களை மட்டுமே சென்றடைகிறது! அதை இன்னும் எளிமையாக்கி எல்லோரிடமும் போய்ச் சேர என்ன வழி என்று பலரும் என் னிடம் கேட்கிறார்கள். அதையே உங்களிடம் நான் கேட்கிறேன்! பதில் என்ன?

  அதற்காக ரொம்ப வருத்தப்பட்டு அதீதமாக ‘காம்ப்ரமைஸ்’ செய்து கொள்ளத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்! மேலை நாடு களில் அன்டோன்யோ விவால்டியின் மென்மையான ‘வயலின் கான் ஸெர்ட்டோ’வுக்கும், வேக்னரின் ஆபேராவுக்கும் வருகிற அளவான கூட்டம் வேறு. ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ ராக் இசைக்கு அலைமோதும் கூட்டம் வேறு!

  நீங்கள் கேட்டதை ஒரு ஸிலீமீtஷீக்ஷீவீநீ விளைவாகவே எடுத்துக்கொண்டு நான் உங்கள் முன் சில கேள்விகளை வைக்கிறேன்!

  1. சிம்பொனி இசையின் பிரமாண்ட அழகுக்கு (நிக்ஷீணீஸீபீமீuக்ஷீ) ஏராளமான வாத்தியங்களும் காரணம். ஏன் கர்நாடக இசையில் நாலைந்து வாத்தியங்களை மட்டும் (நிஜமாகவே ஒரு வட்டத்துக்குள்!) பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்?

  2. நீங்கள் தியாகைய்யரின் கீர்த்தனையைப் பாடும்போது ராகத்தையும், உங்கள் குரலின் இனிமையையும் நான் ரசிக்கிறேன். அதன் அர்த்தம் புரியவில்லை. லிஹ்க்ஷீவீநீs&ம் முக்கியமில் லையா! ஏன், தமிழ் அர்த்தத்துடன் சிறு கையேடு தயாரித்து எல்லோருக்கும் தரக் கூடாது?

  3. சினிமா ஒரு பெரும் சக்தி! உங்கள் குரு எம்.எல்.வி. பாடியதில் பல வருடங்களுக்கு தமிழகமெங்கும் பிரபலமாக இருந்த பாடல் ‘எல்லாம் இன்பமயம்...’தான்! ஏன், இப்போது சினிமாவில் (பின்னணியில் மிதந்து வருவது போலவாவது) ஒரே ஒரு கீர்த்தனையைக்கூடப் பயன்படுத்த மாட் டேன் என்கிறார்கள்?

  எம்.எல்.வி. நம்மிடையே இல்லாத வெற்றிடத்தை நிரப்பிய நீங்கள்தான் சொல்ல வேண்டும்!

 1. //எம்.எல்.வி. நம்மிடையே இல்லாத வெற்றிடத்தை நிரப்பிய நீங்கள்தான் சொல்ல வேண்டும்//
  மதன் அய்யா,
  யாரை சொல்கிறீர்கள்? நம்ம செந்தில் அய்யாவையா? கடைசியில் அவர் ஒரு effeminate ஆசாமியா?
  அப்ப எம்.எல்.வி என்ன ,எம்.எஸ் இடத்தையும் நிரப்பட்டும்.

  பாலா

 1. "இயல், இசை, நாடகத்தமிழ் என்று அதில் இசைக்கென்றே தனி தன் மொழியில் ஒரு பிரிவை ஏற்படுத்தியவன் இசை குறித்த அறிவு இல்லாமல் இருப்பானா? "
  நிச்சயம் இது ஓர் ஆய்வுக்குரிய விடயமே!!!தொடரவும்
  யோகன் பாரிஸ்

 1. 2:43 PM  
  Anonymous said...

  //அதற்காக ரொம்ப வருத்தப்பட்டு அதீதமாக ‘காம்ப்ரமைஸ்’ செய்து கொள்ளத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்! //

  சஞ்சய் சுப்ரமண்யம் சொன்னமாதிரி பாப்பாத்திகள் பயத்தில் பாடமுன்வந்தாலும் பாப்பானுங்களே காம்ப்ரமைஸ் தேவையில்லைனு ஏத்தி விடுவாணுங்க. கெரகம் புடிச்சவனுங்க.

 1. ///
  கர்நாடக இசை என்று பார்த்தால் அது கொண்டிருக்கும் அனைத்து விடயங்களும் தமிழிசையிலிருந்து திருடிக்கொண்டவையாகவே இருக்கிறது. அதன் ராகம் - பண் என்கிற தமிழ் பதத்திலிருந்து சுடப்பட்டு மறுபடியும் இங்கே விற்கபடுகிறது. தாளம், ஸ்வரம்,ஆரோகணமும்,அவரோகணமும் முறையே தாளம் , பதம், ஆரோசை அமரோசை என்று இங்கிருந்தே போனவையாகும் . அந்த ஆராய்ச்சியை இன்னும் கொஞ்சம் உட்சென்று பார்த்தோமானால் அவ்விசையின் அடிப்படையான ஸ்வரங்கள் ச , ரி,க,ம,ப,த,நி முறையே இளி ,விளரி,துத்தம் ,கைக்கிளை ,குரல் ,உழை, தாரம் என்கிற தமிழ் சுரங்கள்தானே.
  ///

  அருமையான பதிவு....

  இதன் தொடர்ச்சியை எதிர்ப்பார்க்கிறேன்...

  தஞ்சையில் அடுத்த வருட ஆரம்பத்தில் நடக்க இருக்கும்(சரியான தேதி தெரியவில்லை) ம.க.இ.க தமிழ் மக்கள் இசை வழாவுக்கு முன்னதாக இந்த தொடர் பதிவு வருவது சிறப்பாக இருக்கிறது.

  அசுரன்

 1. //"சுப்ரபாதம் முதல் சுப்புலட்சுமி" வரை எல்லாமும் இங்கிருந்து சுடப்பட்ட "கதையை" அடுத்த பதிவில் பார்ப்போம்//

  first i like this statement. kudos to u. further i had replayed to ur previous post comment.. i luv to type in tamil as i tempated to cook computer based tamil typing mistake i am doing in tamil.

  good post comes up with a 3rd dimenision of tamil music.

  well music is an intergral part of any language , culture etc etc. since tamil is a mudhal mozhi and the kind of un-comparable books what we have always shows the richness of it. i agree that our ancestors adorned music( iyal, isai, nadakamm etc etc ). this is kind of culture oriented , un standarzied methodologies.

  means fishers mans has theiry own pattern of songs, joy, sarrow, approach , composition etc etc.
  ( I took fisherman as an example and its also there in the post )

  this kind of splited culture is not only in TN its across world. In those days education - ( in this context isai ) or knowledge management system tightly coupled with human to human there is not proper documentation. later oolai suvadi every thing came..

  In that chronicle arena isai also getting translated across ages, people without much taxnonmy. later to standarize that people are formalized certain protocals on top ragam, thalam etc .. this also has lot of version in it. intially people tempted to classfy moods/time based synergy( which is the primarly classifactio life line of hindustani ) etc etc.

  now we are seeing more matured , standarzied , virigin form a pure carnatic music with various krithis from variosu authors. yes kartanic is very much vrigin as it is glued with south-indian culture. if u take hindustani it has shades of sufi, afgant culture because of other country invasion.

  any proflic carntic( forget about half-baked asses ) will not tell carnatic music is best. because they know music is divine and its not donanated to karnatic.

  enna vo what ever i learnt what ever i wanted to share i told..by all means we( our people) are spoling the terminology of music by don;t seeing in a correct approach.

  I am not a grt8 musical person or music related personlitie. i listen to music thats it.

 1. 11:48 PM  
  Anonymous said...

  http://www.geocities.com/
  athens/5180/
  tnmusic1.html

  here is an article from a
  magazine. please note that
  the editors are brahmins and
  they are not trying to hide
  anything. I simply do not
  understand your anger.

 1. 2:21 AM  
  Anonymous said...

  //bala said...

  //எம்.எல்.வி. நம்மிடையே இல்லாத வெற்றிடத்தை நிரப்பிய நீங்கள்தான் சொல்ல வேண்டும்//
  மதன் அய்யா,
  யாரை சொல்கிறீர்கள்? நம்ம செந்தில் அய்யாவையா? கடைசியில் அவர் ஒரு effeminate ஆசாமியா?
  அப்ப எம்.எல்.வி என்ன ,எம்.எஸ் இடத்தையும் நிரப்பட்டும்.

  பாலா
  //

  வந்துட்டாருய்யா வாய்க்கால்திருப்பி வடிவேலு இம்சை அரசன் இருபத்தேழாம் புலிகேசி. எவன் என்ன சொன்னாலும் குறுக்க ஒரு கட்டையப் போட்டுத் திசைதிருப்பறதே இவுரு வேலையாப் போச்சு. ரோதனைடா சாமி, சொன்ன விசயத்துக்குப் பொருத்தமா எதையாவது சொல்லப் பாருங்க பாலாடிவேலு சார்.