Saturday, December 30, 2006

@ 4:42 PM எழுதியவர்: வரவனையான் 27 மறுமொழிகள்


சிவகாசி பயணியர் தங்கும் விடுதி, திமுக தொண்டர்களும் தி.க உள்ளிட்ட தோழமை இயக்க தோழர்களும் அயர்ச்சியாய் உட்கார்ந்து வானொலி கேட்டுக்கொண்டிருக்கின்றனர். தொலைபேசி ஒலிக்கிறது. தடா.ஓ. சுந்தரம் ஓடிச்சென்று எடுக்கிறார். எத்தனை ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என வினவுகிறது எதிர் முனை. "இல்லண்ணே , அண்ணே தோத்துட்டாரு" என்கிறார் சுந்தரம். "உந்த தமிழ்நாட்டு ஆக்களுக்கு எப்பவுமே அறிவு வாராது" என்று கோபமாய் சொல்லி தொலைபேசியை எறிகிறார். நிச்சயம் அது உடைந்திருக்கும் என்று ஒ.சுந்தரம் பின்னர் தெரிவித்தார். தொலைபேசியை உடைத்தவர் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம். தேர்தலில் தோற்றதாக சுந்தரம் அண்ணன் குறிப்பிட்டது வைகோ அவர்களை. திரு.பாலசிங்கம் அவர்களின் மறைவைத்தொடர்ந்து வைகோவின் மதிமுக விற்கும் எழுந்துள்ள சில பிரச்சினைகள் இயல்பானதொன்று என்றே கொள்ளலாம்.

வைகோ கொலைப்பழி சுமத்தி திமுக'வில் வெளியேற்றப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் நேரில் பார்த்தேன். மதுரை திமுக பவள விழா மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியாய் பேரணி வண்டியூர் தெப்பக்குளத்தில் துவங்கியது. அங்கு நான் படித்த பள்ளியின் முன் பேரணியில் கலந்து கொள்ள நானும் நின்றிருந்தேன். கருப்பு நிற அம்பாசிடர் காரில் மதிய உணவுக்கு பின் வெத்தலை போட்டிருந்த வாயுடன் வந்திறங்கினார் வைகோ.( அப்போது நான் பார்த்த மற்றோரு சம்பவம் ஒரு வரலாற்று நிகழ்வு) . என் பள்ளியின் அருகில் வக்கில் பாபு என்பவரின் வீட்டின் முன் இறங்கிய வைகோ ஒரு சொம்பில் தண்ணிர் வாங்கி வாய் கொப்பளித்தபடி தன் காரின் டிக்கியில் இருந்து ஒரு துணிப்பதாகையை எடுத்து சிலரிடம் கொடுத்து ஏதோ உத்தரவிட்டு கொண்டிருந்தார். வைகோ வைகோ என என்னுடன் இருந்தவர்கள் ஓட நானும் ஓடி கைகொடுத்து மகிழ்ந்தேன். அடுத்த பத்தாண்டுகள் நான் அதிகம் உச்சரிக்க போகும் பெயர் அது என அப்போது தெரியாது.

அவரின் பேச்சுக்கள் என் ரத்தத்தை திராவகமாய் மாற்றின, ஈழப்பிரச்சினையில் அவரின் உறுதி (இன்று வரை) இயல்பாய் அவரிடம் கொண்டு சேர்த்தது. ஸ்பார்ட்டகஸும் நெப்போலியனும் கிரேக்க வரலாறுகளும் அவரின் குரலில் மேலும் ஏகாந்தம் பூசிக்கொண்டு வெளிவந்தன. காளிமுத்து திமுக வை விட்டு வெளியேறிய போது கலைஞரை மேடையில் இருத்தி " ஒரு வீபிடனன் போனாலென்ன, ஓராயிரம் இந்திரஜித்துகள் இங்கே இருக்கிறோம்" என பேசிய அவரின் பேச்சு செவிபுலன் நன்கமையப்பட்ட எந்த தமிழனைத்தான் ஈர்க்காது. ராசிவ் கொலை காரணம் காட்டி ஈழவிடுதலை ஆதரவாளர்கள் மாநில மத்திய ஆள்தூக்கி சட்டங்களால் வேட்டையாடப்பட்ட போது பிரபாகரனும் புலிகள் இயக்கமுமே ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் என தமிழ்நாட்டு தெருக்களில் முழங்கித்திரிந்த வைகோ எப்படி என் போன்றவர்களுக்கு பிடிக்காமல் போகும் .


எல்லாம் முடிந்தது, வைகோ நீக்கபட்டார், தான் தான் உண்மையான திமுக என உரிமைகோரினார். திருச்சியிலே போட்டி பொதுக்குழு கூட்டினார். நானும் இருந்தேன் அங்கு. சரியாய் நினைவிருக்கிறது அந்த பொதுக்குழு முகப்பில் இருந்த வாசகம் " பாடி வீட்டில் கூடி நிற்கிறோம்' போர் நடத்த இது ஒத்திகை - பகைவருக்கு இனி ஏது நித்திரை" வாசலில் நாஞ்சில் சம்பதண்ணன் நின்று கொண்டு அனுமதி சீட்டு சரி பார்த்து உறுப்பினர்களை அனுமதித்துக்கொண்டிருந்தார். அதன் பின் ஏப்பிரல் 16- 1994 அன்று சென்னையில் பேரணி நடத்தி தனது வலிவை காட்ட முனைந்தார். தமிழகம் அது வரை கண்டிராத மாபெரும் பேரணி அது.

அந்த பேரணி முடிவில் துவங்கியது வைகோவின் ஊசலாட்ட அரசியல், அந்த பிராமாண்ட பேரணி முதல்நாள் மதியம் 2 மணிக்கு துவங்கி அடுத்தநாள் காலை 8 மணிவரை தொடர்ந்து கொண்டிருந்தது. வைகோ கூட அவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை என்பது அவரின் மறுநாள் காலை5.55 க்கு துவங்கிய உரையில் தெரிந்தது, அந்த கூட்டம் வைகோ எனும் தங்களின் ஆதர்ச தலைவனின் நீக்கத்துக்கு எதிராயும் அதற்கு புலிகளை குற்றம் சாட்டிய தங்கள் இயக்கத்துக்கு எதிராயும் திரண்டிருந்தது. தன் பேச்சின் இடையே கூட்டத்தினை பார்த்து கேட்டார் "நமது அரசியல் எதிரி யார்?" என்று. கூட்டம் கருணாநிதி என ஆர்ப்பரித்தது. அதற்கு வைகோ " இல்லை ஜெயலலிதா" என விடையுரைத்து தன் முதல் தவறினை அரங்கேற்றினார். அந்த பேரணிக்கு பிறகு மே மாதத்தில் புதிய இயக்கம் துவங்கினார். அன்றைய ஜெயலலிதா ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என சூளுரைத்து ஜூலை மாதத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபயணம் துவங்கினார். நானும் துவக்கம் முதல் நாள் இனைந்தேன் பயணத்தில்.
Photobucket - Video and Image Hosting
வைகோவுடன் 95 நடைபயணத்தில்


அடுத்த வருட ஏப்பிரலில் தேர்தல் வந்தது, திமுகவில் வைகோவின் பிளவை "செங்குத்தான பிளவு" என வர்னித்து சுய இன்பம் அனுபவித்து கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்ஸிட்) யுடன் மறுமலர்ச்சி திமுக கூட்டணி கண்டது. " தோற்பதற்கு இனி தொகுதிகள் இல்லை" என நாஞ்சில் சம்பத் அண்ணன் கிண்டலாய்ச்சொல்லுவார் அது போன்றதொரு தோல்வி கண்டது அக்கூட்டணி. மதிமுக தொண்டர்களை பற்றிய பெருமிதமான மதிப்பீடு ஒன்று எப்போதுமே ஒன்று எனக்குள் உண்டு,அது அவர்களின் தோல்விகளை தாங்கும் பக்குவம். இன்னும் இருபது தேர்தல்களை கூட சந்தித்து தோத்தாலும் அவர்கள் துவள மாட்டார்கள் என்பது திண்ணம்.
( தொடருவேன் )

Tuesday, December 19, 2006

@ 4:29 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்

Photobucket - Video and Image Hostingஎன் ஊரின் அருகே உள்ள சிறுமலைக்கு கடந்த வாரம் போயிருந்தேன். மொத்தம் 23 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட செங்குத்தான மலை அது. 10 வளைவுகளை தாண்டியதும்தான் 2 மணி நேரத்தில் ஆன் லைன் வருகிறேன் என்று தோழிக்கு உறுதியளித்தது நினைவுக்கு வந்தது. எது பெரிது என ஒரு நொடி சிந்தனை !!! சந்தேகமேயில்லை அவள்தான் என்று ஊர் திரும்பினேன். ஹிஹிஹி

போகும் வழியில் எடுத்த வீடியோ


விரைவில் நன்றாக எடுத்து போடுகிறேன்.

Monday, December 18, 2006

@ 10:27 AM எழுதியவர்: வரவனையான் 7 மறுமொழிகள்

முதலில் கவிதைகளில் துவங்குவோம், எனக்கு பிடித்த கவிதைகள் மட்டும். இதில் வரிசை படுத்த ஒன்றுமில்லை. நினைவு அடுக்குகளில் இருந்து துவங்குகிறேன். கவிதை எழுதிட்டு இருக்கும் போதே அப்படியே உருகி வழிஞ்சிட்டாருன்னா மீதி யாரு எழுதுறதுன்னு எனக்கு ஒரு கவலை வரும், அப்படி ஒரு கவலையை ஏற்படுத்தும் கவிஞர் பிரியனின் இந்த கவிதை

வித்தியாசமாகவும் புதிய பார்வையில் உவமை படுத்த யாகூவை பயன்படுத்தியது நன்றாகவே இருந்தது. இரண்டுக்கும் மேற்பட்ட தடவை

வாசித்த கவிதை


நானும் அவனும் சமவயது, இருவரும் நண்பர்கள், இருவருமே காதலுற வில்லை 7 கழுதை வயசாகியும் . எனக்கான கவிதையை அவன் எழுதியது போல் உணர்ந்தேன். அது இதுதான்


அப்புறம் நம்ம பொன்ஸ் அக்காவின் இந்த கவிதைகள் , ஒரு வரி கூட மறக்காமல் நினைவிலேயே இருக்கிறது.

//நானே ரசிக்காத
என் கவிதைகளை
எழுதிக் கொண்டே இருக்கிறேன்..

படிக்கவும்
ரசிக்கவும்
நிமிடங்கள் இல்லை என்னிடம்

புதுப் புதுக்
கவிக்கணங்கள் மட்டும்
கிடைத்து விடுகின்றன,
இடைவெளியில்லாத
நமது நட்பில்!//

//கவிதைக்குள்
மறைத்துக்
கொள்கிறேன் என்னை..

சொல்ல விரும்பாமல்,
தயங்கித் தயங்கி
மறைக்கும்
ரகசியங்களைக்
கண்டுபிடித்து விடுவாயோ என்று //

இன்னோரு கவிதை தமிழ்நதியின் கவிதை , அதை தேடிகிட்டு இருக்கேன். கிடைத்ததும் இணைக்கிறேன். என்ன இருந்தாலும் மண்டே மார்னிங் என்பதால் கொஞ்சம் வேலையும் இருக்கிறது. இப்போதைக்கு இவ்ளோதான்.

தமிழ்நதியின் அந்த கவிதை இதுதான் நீண்ட நாள் அதன் தாக்கம் இருந்தது, பெண்மொழி வெறும் துயர் மட்டுமா பேசும், இப்படியும் இருக்கும்


அதுபோல் சுகனின் அந்த "நாய்" கவிதைக்காக வெறுப்பில் இருந்த என்னை இந்த அரசியற்கவிதை வெகுவாக ஈர்த்தது.

Monday, December 11, 2006

@ 1:31 PM எழுதியவர்: வரவனையான் 12 மறுமொழிகள்

பேராசை பெருந்தகையே போற்றி !
பேசா நா இரண்டுடையாய் போற்றி !
பயங்கொள்ளி பரமா போற்றி !
படுமோசம் புரிவாய் போற்றி !
சிண்டு முடிந்திடுவாய் போற்றி !
சிரித்திடும் நரியே போற்றி !
தந்திர மூர்த்தியே போற்றி !
தாசர் தம் தலைவா போற்றி !
வஞ்சகவேந்தே போற்றி !
வன்கணநாதா போற்றி !அம்மன் கோவில் திருவிளக்கு பூசை பாடல் வரிகள் அல்ல, மேலுள்ளது. ஆயிரமாண்டுகளின் அடிமைத்தனத்தை தன் நெருப்பு வார்த்தைகளால் உடைத்தெறிந்த அறிவாசான் தந்தை பெரியாரின் தகைசால் மாணாக்கன் வாதக்களங்களில் இவனை மிஞ்சுவரில்லை எவரும் எதிர் நின்றால் என்கிற பெயரோடு பெரியாரியம் பரப்பிய அறிஞர் பெருந்தகை அண்ணா எழுதிய " ஆரியமாயை" எனும் வரலாற்றுச்சிறப்பு மிக்க புத்தகத்தின் துவக்கவரிகள் தாம் அவை.

அப்புத்தகத்தை கையில் வைத்திருந்தால் உடன் உங்கள் கைகளில் காப்பு நிச்சயம். எழுதிய அண்ணாவிற்கு 6 மாத கடுங்காவல். தடை தடை தடை. பேராய கட்சியால் திராவிட இயக்கம் வேட்டையாடபட்டது. அண்ணாவின் பேச்சுக்கு தடை, பெரியாரின் பேச்சுக்கு தடை , கலைஞரின் முழக்கத்துக்கு தடை என சூழ்ந்த தடைகளை தகர்த்தெறிந்து வீறுகொண்டெழுந்தது திராவிடப்பேரியக்கம். மனிதனை மனிதனாக மதிக்க வேண்டியது அது, வலதுசாரி ஆதிக்கபுரிகளின் கோட்டை கொத்தளங்கள் திராவிட அறிவியக்க கேள்விகளால் நொறுங்கிப்போனது. தன் அதிகாரம் பறிக்கப்படுவதை எந்த ஆதிக்கவாதியும் விரும்புவதில்லை, அதைப்போன்றே பார்ப்புகளூம் புழுங்கினர், "அது ஒரு நிரந்திர அரிப்பாகவே மாறிப்போனது" . இன்றும் அமெரிக்கவில் செட்டில் ஆன முணு தலைமுறைக்கு முந்திய பார்ப்புகளின் பிள்ளைகள் கூட சொல்கிறது திராவிடம் டௌன் டௌன், இடஒதுக்கீடு டௌன் டௌன் என்று.

ஆறா ரணமும் குறையா அரிப்பும் சொறிய சொறிய சுகமளிக்கிறது. அரிப்பை அடக்க துக்ளக்கும் தினமலரும் தேவைப்படுகிறது. எதெல்லாம் பார்த்து எரிச்சலுற முடியுமோ அதெல்லாம் பார்த்து இன்னும் அடங்கா அரிப்பாய் உரசி பார்க்க துணிந்து காந்தியைக்கொன்ற கூட்டம் , பச்சைத்தமிழன் காமராஜரை உயிரோடு எரிக்க முனைந்த கூட்டம் தன்னை எதிர்ப்போரின் ரத்தம் குடிக்க துடிக்கும் கூட்டம் இன்று வந்து நிற்பது பெரியார் முன். அது சிலையல்ல கந்தககோட்டை,தன்னை எரித்து தமிழர் தரணிக்கு வெளிச்சம்காட்டிய தலைவன் அவன். தன் நீண்ண்ண்ட நாள் அரிப்பை சொறிந்து கொள்ள இடம் தேடிய இந்த அக்கிரமகாரத்து "பசு மாடுகள்" நின்ற இடமே பெரியார் சிலை. இதில் ஒரு பருப்புக்கு***யின் கண்டுபிடிப்பு வேறு " திருவரங்கம் பெரியாருக்கு பாதுகாப்பில்லை" என்று திருவாய் மலருகிறது. இது போதாதா சொம்புதூக்கி "சற் சூத்திர்களுக்கு" ( சற் சூத்திர விளக்கம் பின்னர்) என்னாதான் ஓய் ஆகப்போகிறது இடித்துதான் பார்ப்போமே' என தொட்ட வேலை, இதை செய்வது சூத்திரன், இவர்களோடு பொருத போவதும் சூத்திரர்கள் நம் வேலை வழியும் ரத்தத்தினை நக்குவது மட்டுமே என்க்காத்திருந்த ஓநாய்கள் திடுக்கிடும் வகையில், " நீங்கள் எங்கள் வாலை மிதித்தால் நாங்கள் உங்கள் தலையை மிதிப்போம் " என்ற வார்த்தைகளை உண்மையாக்கி காட்டிவிட்டனர் கைதாகியுள்ள தோழர்கள். அலறுகிறது தினமலர், விஷமி என்கிறது அமைதியை விரும்பாத சக்திகள் என்கிறது. ஏனய்யா கைதாகியுள்ள குற்றவாளிகள் இந்துத்துவா வாதிகள் என்கிற உண்மையை ஏன் மறைக்கிறீர்கள் என்ன தயக்கம் ? ."பெரியாருக்கு சீறிரங்கம் பாதுகாப்பு இல்லை"னு எந்த வேலை அது சொல்லியதோ அதன் எதிர்வினைகள் பார்ப்பனருக்கு தமிழ்நாட்டில் எங்குமே பாதுகாப்புக்கு உறுதியளிக்க முடியாது என்கிற வருத்தமளிக்கும் நிலமை ஏற்பட்டது. இவை நாகரீகம் பெற்ற மனிதனாக இருந்து சிந்தித்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். எவனோ செய்த தவறுக்கு அப்பாவிகள் விலை கொடுக்கும் கொடுமையை மறுக்கமுடிவில்லைதான் அதே நேரத்தில் புரியும் மொழியில் பேசினால்தான் புரிந்து கொள்வேன் என்பவர்களுக்கு புரியவைக்க பட்டதாய் தான் இதை எடுத்துக்கொள்ளவேண்டுமா என்று தெரியவில்லை . மாநில அரசின் மீது கெட்ட எண்ணத்தை உருவாக்கும் இந்த முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது நன்மையே.


Dedicated To "பார்ப்பானை அய்யனெனும் காலமும் போச்சே" என பாடிய பாரதிக்கு*********************************************************
நான் எழுத துவங்கி சற்றேறக்குறைய 8 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை தனிபட்ட முறையில் யாரையும் திட்டியதில்லை கருத்தெழுதியவர்களை அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுதான் விமர்சனம் வைத்திருக்கிறேன். "விடாது கருப்பு" பஞ்சாயத்தில் எனது கருத்தை தமிழ்மண நிர்வாகத்திற்கு சொல்லியிருந்தேன்.அது என் உரிமையும் கடமையும் ஆகும். அதே பதிவில் பின் வந்த ஒரு அனானி ஒருவர் கீழ்க்கண்டவாறு எழுதினார். மிக்க மகிழ்ச்சி துவக்கத்தில் நான் குறிப்பிட்ட "ஆரியமாயை"யும் தடை செய்யப்பட்டது பின் அதுவே நாட்டுடைமையாக்கி போற்றப்படுகிறது. புரிந்தால் சரி. அது போல் நான் ஒரே பெயரில் மட்டுமே எழுதுகிறேன் என் இன்னொரு வலைப்பதிவைனை எழுதுவதில்லை அதன் பெயர் தம்பியுடையான். ஆகவே "கின்னர கிம்புருடர்கள் வரவேற்க வைகுந்த பிராப்தி" அடையும் காலத்தில் தவறுக்கு மேல் தவறு செய்து மகரநெடுங்குலைக்காதனின் பழியை தேடிக்கொள்ளவேண்டாமென்று மாறா கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அனானி
December 6th, 2006 | 2:32 am
வரவனையானே நீக்கப்பட வேண்டியவர்தான்….பார்த்தீர்களா அவரது சமிபத்திய பதிவினை….உணர்ச்சிபூர்வமான எழுதுவதாக நினைத்து அடுத்தவர்களை அடித்து நொறுக்கும் இவரது வாதத்தினை இங்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது எனது கோரிக்கை
.

.அது சரியா? வரவனையானன் என்ற நியோ அன்ற அயோக்கிய ராஸ்கல் ஒருவனின் அசிங்கமான பதிவு இன்று வரை அனுமதித்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள், இதற்கு மேலும் உங்களுக்கு மானம் மரியாதை இருக்குமானால் தமிழ்மணத்தில் ஒரு ஷண மேனும் இருப்பீர்களா? உங்கள் மனசாட்சியைக் கேட்டு பதில் சொல்லுங்கள். பின்னூட்டத்தை விட சோற்றிலே உப்புப் போட்டு சாப்பிடும் நமக்கெல்லாம் மானம்

@ 11:29 AM எழுதியவர்: வரவனையான் 25 மறுமொழிகள்

திண்டுக்கல்லில்

அய்யா சிலைக்கு சந்தனம் பூசி, குங்குமம் இட்டு முன்னோட்டம் பார்த்த கூட்டம், தற்போது திருவரங்கத்தில்... இடையில் 100 அடி இருக்கும்போதும் எங்கே அரங்கன் தீட்டுப்பட்டுவிடுவானோ என்ற ஐயத்தில் , அவரது சிலையை சேதப்படுத்தி இருக்கிறது . உச்சநீதி மன்றம் வரை குதித்துப் பார்த்தும் ஒன்றும் பலனில்லை எனவே உடைத்துப் பார்த்து பூரிக்கிறது . இந்த சமூக விரோதச் சக்திகள், மதத்தின் பெயரால் இப்படி சேட்டை செய்து சட்டம் , ஒழுங்கு சீர்குலைந்தால் கலையும் , கவிழும் திமுக ஆட்சியென கணக்குப்போடுகிறது ... பகுத்தறிவு பகலவனின் ஒளி பல்லாண்டு கடந்தும் பலரை பொசுக்கிக்கொண்டிருப்பதற்கான சான்றுகள் இவையெல்லாம்.


பெரியார்

சிலையை அமைப்பதற்கான இடம் கோவில் நிலம் போல் எந்த மன்னனிடம் இருந்தும் இனாமாகப் பெற்றதில்லை. திராவிடர் கழகம் விலை கொடுத்து வாங்கிய நிலம் . 1973 ஆம் ஆண்டு திருவரங்கத்தில் சிலை நிறுவ முயற்சி எடுக்கப்பட்டு , அரசு அனுமதி பெறப்பட்டது. ( இதே காலகட்டத்தில்தான் மதுரையில் நடைபெற்ற கருஞ்சட்டை மாநாட்டில் தந்தைப் பெரியாரின் சிலை திறக்கப்பட்டது.). பல தடைகள் தாண்டி, மீண்டும் 1996 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது . அனைத்து ஆதிக்க வழக்குகளையும் , எதிர்ப்புகளையும் மீறி, நவம்பர் மாதம் 23 ந்தேதி சிலை அமைப்பதற்கான பீடம் அமைக்கப்பட்டது. 29 ஆம் தேதி சிலை நிறுவப்பட்டது . டிசம்பர் 1 ஆம் நாள் திறப்பு விழாவென அறிவிக்கப்பட்டு, அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து சிலர் அதிகாரிகளை அணுகியதால் திறப்புவிழா டிசம்பர் 9 ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட நிலையில், சிலையை விஷமிகள் திட்டமிட்டுச் சேதப்படுத்தியதால் (சிலை அவமதிப் பிற்கு முன் இதனை தூண்டிவிட்டவர்களில் ஒருவரான தயானந்த சரஸ்வதி சொல்கிறார் " பெரியாருக்கு சீறீரங்கம் பாதுகாப்பான இடமில்லை " என்று.) 8 அடியில் நிறுவப்பட்ட சிமெண்ட் சிலை மாற்றப்பட்டு , லால்குடியில் நிறுவ வைக்கப்பட்ட 4 அடி வெண்கலச் சிலை மீண்டும் அவ்விடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. பலகாலம் இருந்த பண்பாட்டுச் சின்னம் பாபர் மசூதியை தகர்த்த கூட்டம் , அந்நினைவு நாளில் காவலர்களின் கவனம் வேறுவகையில் இருக்கும் என எண்ணி இதைச் செய்திருக்கிறார்கள் .
இந்நிகழ்வைத்

தொடர்ந்து நடந்துவரும் கலவரங்கள் , பல தலைவர்கள் அமைதி காக்க வலியுறுத்தியும், சமூக விரோத சக்திகளின் மனம் போலவே நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது . இந்நிகழ்விற்கு முன்னும் (மற்றும் இந்த மூன்று நாட்களுக்குள்) திருநாகேஷ்வரத் தேரோட்டம். அறவக்குறிச்சித் தேரோட்டம். நாமக்கல் ஆஞ்சினேயருக்கு வெள்ளிக் கவசம் சாத்தும் விழா , தலைமைத் தேர்தல் அதிகாரி கலந்துகொண்ட நீடாமாங்கலத்தில் நடந்த குடமுழுக்கு விழாவென நாளுக்கொரு தேரோட்டம், பொழுதுக்கொரு குடமுழுக்காகிய அனைத்து ஆன்மீகச் செயல்பாடுகளும் அமைதியாகத்தான் நடந்து வந்தன.
தனது

95 ஆவது வயதில், குடல் இறக்க நோயால் பதிக்கப்பட்டு, அத்தனை உடல் வேதனையிலும், அவர் மறைவதற்கு பதினாரே நாட்களுக்கு முன்னர், பெரியார் கூட்டிய இரு நாள் எழுச்சி மாநாட்டிற்குப் பெயர் "தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு", ஐந்து நாட்களுக்கு முன்னர் சென்னை தியாகராயநகரில் எப்போதும் போல் எவ்வித சமரசமும் இல்லாமல் அவர் ஆற்றிய பேருரை தமிழர் நலனுக்காக . வயோதிகம் எட்டிப் பார்த்தவுடன், கொள்கைகளை கொட்டிக் கவிழ்த்து அனைவருக்கும் உத்தமராய் நடந்து கொள்ளும் தலைவர்கள் பலர். நினைக்குபோதெல்லாம் சிலிர்ப்பூட்டும் , இறுதி வரை சமூக நீதியை எவ்வித சமரசமும் இன்றி வெளிப்படுத்திய அய்யாவின் கொள்கைகளின் மேல் சமூக மறுமலர்ச்சியின் பயனை அனுபவிப்பவர்கள் கொண்ட பற்று எந்த ஒரு மதவாதியும் அவர்களது மதத்தின் மேல் கொண்ட பற்றிற்குச் சற்றும் குறைவானதல்ல.... ஆனால் மதப்பற்றைப் போல் கண்மூடித்தனமாது அல்ல அவர் கொள்கைகளின் மேல் கொண்ட உறுதியான, எக்காலத்தும் உயிர்ப்பான பற்று. உடைத்தால் சிலைதான் உடையும்.

Tuesday, December 05, 2006

@ 5:47 PM எழுதியவர்: வரவனையான் 24 மறுமொழிகள்

ஒரு ஆராய்ச்சி குறிப்பொன்று சொல்கிறது கன்னட மொழி தமிழின் 69 விழுக்காடு வார்த்தைகளை கொண்டிருக்கிறது. தெலுங்கின் 63 விழுக்காடு சொற்கள் தமிழினுடையது என்றும் மலையாளத்தின் 91 விழுக்காடு தமிழ்தான் என்றும் துளுவின் 47விழுக்காடு, சிங்களத்திலும் வங்காளத்திலும் ஏன் சம்ஸ்கிருத்ததிலும் தமிழின் வேர்ச்சொற்கள் பெருந்தொகையில் உண்டு. துணைக்கண்டமெங்கும் வியாபித்திருக்கும் 100 க்கும் மேற்பட்ட பழங்குடிகளின் ஆதி மொழிகளில் தமிழை இலகுவாக கண்டறியலாம். மலையாளம் தோன்றி 700 முதல் 800 ஆண்டுக்குள்தான் இருக்கும் என்றும் கன்னடம் தோன்றி 800 முதல் 850 ஆண்டே இருக்கும் என்றும் தெலுங்கு தோன்றியது 900 ஆண்டுகளுக்கு முன் என்றும் கூறி செல்லும் அதன் பக்கங்களை தவிர்த்து நாம் சமகாலத்துக்கு வந்தோமானால் தமிழிசையும் கர்நாடக இசையும் சமகாலத்தவை என்னும் அபஸ்வரம் எழுவதைக்கேட்கலாம். சமகாலத்தைவை என்றால் ஒரே நேரத்தில் தோன்றியவை எனும் பொருளில் அந்த அபஸ்வரம் ஒலிக்கிறது. அது எப்படி தனக்கென ஒரு இலக்கன நூலையே 4000 வருடத்துக்கு முன் உருவாக்கிய சமூகம் தனக்கென ஒரு பண்பாட்டு இசை இல்லாமல் வரலாற்றை கடந்து வந்திருக்க முடியுமா ?

கர்நாடக இசை என்று பார்த்தால் அது கொண்டிருக்கும் அனைத்து விடயங்களும் தமிழிசையிலிருந்து திருடிக்கொண்டவையாகவே இருக்கிறது. அதன் ராகம் - பண் என்கிற தமிழ் பதத்திலிருந்து சுடப்பட்டு மறுபடியும் இங்கே விற்கபடுகிறது. தாளம், ஸ்வரம்,ஆரோகணமும்,அவரோகணமும் முறையே தாளம் , பதம், ஆரோசை அமரோசை என்று இங்கிருந்தே போனவையாகும் . அந்த ஆராய்ச்சியை இன்னும் கொஞ்சம் உட்சென்று பார்த்தோமானால் அவ்விசையின் அடிப்படையான ஸ்வரங்கள் ச , ரி,க,ம,ப,த,நி முறையே இளி ,விளரி,துத்தம் ,கைக்கிளை ,குரல் ,உழை, தாரம் என்கிற தமிழ் சுரங்கள்தானே.கொஞ்சம் செவிமடுத்தோமானால் அது சாம வேதத்திலிருந்து ( கவனிக்கவும் - ஷாமா அல்ல) வந்தது என்று சொல்கிறார்கள். ஷாமாக்கு ,ச்சா ... சாமவேத காலத்துக்கு முன்பே தமிழில் மூவகை உண்டு . இயல், இசை, நாடகத்தமிழ் என்று அதில் இசைக்கென்றே தனி தன் மொழியில் ஒரு பிரிவை ஏற்படுத்தியவன் இசை குறித்த அறிவு இல்லாமல் இருப்பானா? அதிலும் பிற இரு தமிழிலும் இசை உண்டு. இதை மேலும் கொஞ்சம் உள்ளாய்ந்து பார்த்தால் சிந்து சமவெளிப்பகுதியில் கிடைத்த இசைக்கருவிகள் அதன் சின்னங்களும் திராவிட நாகரீகம் இசையுடன் வாழ்ந்த உண்மையை உரைக்கின்றன. அதிலும் குறிப்பாய் தமிழரின் மற்றோரு அடையாளமாகி விட்ட " யாழ் " கிடைத்தது. தோற்பறைக்கருவிகள் கிடைத்தது. முழவு கிடைத்தது. இவை ஒன்றும் பிற நாடோடிக்கும்பல்களிடம் இருந்து ஒன்றும் பறிக்க படவில்லை. இசைக்கருவிகள் மட்டுமா கிடைத்தது நடனமாடும் பெண்ணின் சிலையும் கிடைத்தது. இசை இன்றி நடனம் வர வாய்ப்பு இல்லை.

சற்றேறக்குறைய (அன்மையில் !!! ) அதாவது 5000 வருடங்களுக்கு முன் முதலாம் தமிழ்ச்சங்கத்தில் "பெருநாரை" "பெருங்குருகு" போன்ற நூல்கள் இசைக்கென்றே இருந்தன. இவைகொண்டு இசை வளர்க்கபட்டது.2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் குழல் வருகிறது, ஆம் புல்லாங்குழல் வருகிறது. புல்லினால் ஆகும் குழல் என்று அந்த இசைக்கருவிக்கு பெயர். மூங்கில் லில் இருந்து வருபவை எப்படி புல்லினால் ஆகும் குழலாக முடியும், மூங்கில் மரமாக இருந்தாலும் அது ஒரு புல் வகையே ஆகும் என்பது தாவரவியலின் கூற்று. தமிழன் தாவரவியலும் கொஞ்சம் தெரிந்து இருந்தான் என்பது மகிழ்வே. இதனை சிலப்பதிகாரத்தின் மதுரைக்காண்டத்தில் - ஆய்ச்சியர் குரவையில் வரும் கீழ்கண்ட வரிகள் இன்னும் கொஞ்சம் சிறப்பானவை "கொன்றையன் தீங்குழல் கேளாமோ தோழி"
ஆம்பலென் தீங்குழல் கேளாமோ தோழி
முல்லைய்ந்தீங்குழல் கேளாமோ தோழி " என்கிற வரிகள் புல்லாங்குழலை தீங்குழல் என்கிறது. தீக்கொண்டு துளையிடுவதால் அதை தீங்குழல் என்று பாடுகிறார்கள்.


இதுவும் ரவி சாஸ்த்திரிய சங்கீதத்தோடு ஒன்றாக பிறந்ததா என்று அறிவீலிஜிவிகளீடம் கேட்கவேண்டும். "சுப்ரபாதம் முதல் சுப்புலட்சுமி" வரை எல்லாமும் இங்கிருந்து சுடப்பட்ட கதையை அடுத்த பதிவில் பார்ப்போம்

Monday, December 04, 2006

@ 3:30 PM எழுதியவர்: வரவனையான் 5 மறுமொழிகள்


Sunday, December 03, 2006

@ 3:21 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்

என்னாது அவரே சொன்னாரா என்னடா சொல்லுற, வெளியே போயி தனியா சரக்க ஏதும் போட்டு வந்துட்டியான்னு டென்சன் ஆனேன்.

இல்லடா இன்னும் நாலு நாள்ல நான் போய் சேர்ந்துடுவேன்னு சொன்னாருடா அன்னைகேன்னான்.

சரி ஆகவேண்டியத பார்ப்போம், தோழர் நீங்க போய் கட்சி ஆபிஸுல எழவு சொல்லிட்டு வாங்கன்னு கற்பனையரசுவை கிளப்பிவிட்டேன். அவருக்கு திடீருன்னு அவர "எழவு சொல்லி"யாக்குனத்துல கொஞ்சம் மனவருத்தம் அடைஞ்சமாதிரி தெரிஞ்சது. தோழர் ஒன்னும் பிரச்சினையில்லைல நீங்க போய் சொல்லுறதுலன்னு கேட்டேன், அதுக்கு அவரு "ச்சா எனக்கென்னங்க பிரச்சினை நீங்க போனாத்தான் எங்க ரெண்டு பேருக்குமே பிரச்சினை" ( என்னுடன் சேரக்கூடாதுன்னு அவய்ங்க ஆபிசில் சொல்லிவச்சுருக்கானுங்க)ன்னு சொல்லிட்டே கிளம்பி போனவரு டக்குன்னு திரும்பி வந்து "கணேசன் தோழர் உங்க தம்பிகளுக்கு சொல்லிட்டிங்களா"ன்னு கேட்டாரு. கணேசன் எதோ அவரு இவன பாத்து சுப்பிரமணிய சாமி கட்சியில சேரலாமான்னு கேட்ட மாதிரி திகிலாகி பார்த்தான். நான் உள்ள புகுந்து 'என்ன இருந்தாலும் கணேசா அவய்ங்களுக்கு சொல்லாம விட்டா நல்லாயிருக்காதுன்னு' சொன்னேன். அரை மனசா சரின்னு சொன்னவன். இருடா சொந்தகாரங்களுக்கு சொல்லிட்டு வந்திடுறேன் என்றபடி கீழே இறங்க போனவனின் ஓரக்கண் ட்க்கீலா பாட்டிலையும் கவனிக்க தவறவில்லை.

அவன் தம்பி இரண்டு பேரும் ரெண்டு மாதிரி கிறுக்கனுங்க, மூத்தவன் கஞ்சா இழுவை பார்ட்டி( அவன் பேரே ஏரியாக்குள்ள "சிவன் செல்வம்னு" மாறி போய்யிடுச்சு - மதுரையில டோப்பு, சிவன், சைலென்ஸ் என்கிற குறிச்சொற்கள் கஞ்சாவைக்குறிக்கும் )இன்னொருத்தேன் வேற மாதிரி மென்டலு, ஒரு பொம்பள புள்ளையை விட மாட்டான், வெரட்டி வெரட்டி "லவ் லெட்டரு கொடுத்து பொது மாத்து வாங்காம ஒரு மாசம் கூட கடந்ததில்லை. அவனுங்களை எகனை போட்டு பாத்தா கணேசன் எவ்வளவோ தேவலை, என்ன இவன் "புரட்சி வரும்"னு மட்டும்தான் நம்புவான். அதுக்கு கஞ்சாவே அடிச்சிட்டு போலாம்பேன். " u too an utopian assole " comrade, நான் அடிக்கடி சொல்லுற டயாலாக்கு கணேசன பார்த்து.

- To be concluded with in Two days