Tuesday, November 28, 2006

@ 3:35 PM எழுதியவர்: வரவனையான்


அது ஒரு பத்திரிக்கை அலுவலகம், அவசர அவசரமாக அடுத்த நாளைக்கான தலையங்கத்தையும் , துணை தலையங்கத்தையும் அதன் ஆசிரியரும் துணை ஆசிரியரும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். துணை ஆசிரியர் தனது கட்டுரையை ஆசிரியரிடம் காட்டுகிறார். அவர் படித்துவிட்டு நல்ல எழுதிருக்கே அது மாதிரி நல்ல தலைப்பை எழுதிட்டு வா... இதையே தலையங்கமா போட்டுரலாம் என சொல்ல து.ஆசிரியர் மகிழ்ச்சியுடன் தலைப்பு எழுதி காட்டுகிறார். ஆசிரியர் அவரை அருகே அழைத்து ஒரு சின்ன கொட்டு ஒன்றை தலையில் இட்டு " இந்த ஆனாக்கு ஆனா போடுற வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம் ' ஒழுங்க வேற தலைப்பு எழுதிட்டு வா" என்கிறார்.

துணை ஆசிரியர் மாற்றி எழுதிய தலைப்பை பார்த்து 'சபாஷ்' என்ற படி அச்சேற்ற அனுப்புகிறார் அந்த கட்டுரையை. அக்கட்டுரைக்கு முதலில் வைத்த தலைப்பு " அண்ணாமலைக்கே அரோகரா " ஆசிரியர் மெச்சிய புதுதலைப்பு " தீட்டாயிடுத்து ". ஆசிரியர் பெரியார், துணை ஆசிரியர் கலைஞர் , நாளேடு குடியரசு வருடம் 1943

தண்டபாணி தேசிகர் தியாகய்யர் விழாவில் தமிழில் பாடியதால் அந்த மேடையை கழுவி விட்டு தீட்டு கழித்த பார்ப்புகளை கண்டித்து கலைஞர் எழுதிய அந்த கட்டுரை தமிழிசையின் தேவையையும் அதன் உரிமை ஆதிக்க வெறியோடு மறுக்கபடுவதையும் இந்த மண்ணின் இசையை கழிசடை போல் கருதுவதையும் வெளிச்சம் போட்டு காட்டியது.

"இசைக்கு மொழியேது ? எதற்கு ? " இப்படி ஒரு கேள்வி அடிக்கடி எழுப்பப்படும், இந்த டிசம்பரிலும் எழும்.இந்த கேள்விதான் பாரதிக்கெதிராய், பாரதிதாசனுக்கெதிராய் மானுடம் அழகு பெற விரும்பும் அனைவருக்கும் எதிராயும் எழுப்பப்படுகிறது. மொழியற்ற ஒரு இசைக்கு சரசரக்கும் பட்டு புடவையும் , ஜிமிக்கியும் வாய்கொள்ளாச்சிரிப்பும் போண்டா சாப்பிட மாமிகளும் எதற்கு ? ஒரு நல்ல கழுதை போதாதா?

"சரி பாடித்தான் தொலையறதுகள்" நமக்கென்ன என்று போகலாம் என்று பார்த்தால் பத்தாதற்கு பத்திரிக்கைகளில் பேட்டி வேறு "அதான் துக்கடா பாடறமொன்னோ அப்புறம் என்ன" என்று குந்தித் தின்ற கொழுப்பை குதப்பி துப்பும் திமிரோடு.

சில ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் ஒருத்தர் வயலின் இசைத்தே மழைவரச்செய்கிறேன் என்று சவால் விட்டு ஏரிக்குள் சென்றமர்ந்தார். மழையற்ற முன்றாம் உலக நடுகள் இவரே மீட்பர் என ஆச்சரியத்தில் ஆழ்ந்த படி நடக்கப்போகும் அதிசயத்தை காண காத்திருந்தன. வந்தது மழையல்ல கைவலி.தன் இசைத்திறமையை சல்பர் டைஆக்ஸடுடன் ஒப்பிட்டுக்கொண்ட அவரை கண்டு நாம் பரிதாபம்தான் பட முடிகிறது.

தான் சேன் தீபமேற்றினான் என்பது அவன் இசைத்திறமை குறித்து மிகைத்து சொல்லப்பட்ட வார்த்தை அவ்வளவே. நானும் மழை வரவைப்பேன் என்பது அவருக்கு வேதியல் குறித்து வகுப்பெடுக்கபட வேண்டிய அவசியத்தை மட்டுமே நமக்கு காட்டுகிறது.

இசையென்பது சிலருக்கு பொழுதழிக்கும் வேலை. உழைக்கும் மக்களுக்கோ அது வாழ்விலோர் அங்கம் . பிறப்பும் இறப்பும் உழைப்பும் இசையுடனே கலந்து நிற்கும் பாட்டாளி மீனவர்கள் துடுப்புவலிக்கும் ஏலோலோ ஐலசா வில் மொழியையும் பொருளையும் தேட வேண்டிய அவசியமில்லை. ஆனால் " கிருஷ்னா நு பாரோ" வின் அர்த்தம் எத்தனை மாமிகளுக்கு தெரியும் எத்தனை சிறுவர் சிறுமிகளுக்கு அவை விளக்கத்துடன் சொல்லிக்கொடுக்கப்படுகிறது.
"உன் கைகள் பட என் தனங்கள் ஏங்குகிறது" இது தெலுங்கு கீர்த்தனையில் வரும் வரி , மொழிதெரியாச்சிறுமிகளிடம் ( அவர்கள் யாராக இருந்தாலும்) அர்த்தம் விளங்காமல் சொல்லிக்கொடுப்பதும் அவர்களை சபையில் பாடச்சொல்வதும் ஒரு சமூக குற்றமில்லையா. தமிழில் பாடுவதற்கு என்ன பிரச்சினை ஜெயசிறீ யும் நித்தியசிறீயும் சினிமாவில் மட்டும்தான் தமிழில் ( ! ) பாடுவேன் என்பது திமிரில்லாமல் வேறு என்ன. பிருந்தாவனம் எனும் ஆல்பம் வெளியிட மட்டும் பாரதியின் பாட்டுத்தேவை ஆனால் சங்கீத விழாக்களில் 90 ஆண்டுக்கு முன் பாரதி கேட்ட தமிழ்ப்பாட்டுக்கு மட்டும் இன்னும் இடமில்லை.அப்படியன்ன கர்நாடக சங்கீதம் உய்ர்ந்தது, தமிழிசையை விட எவ்விதத்தில் உயர்ந்தது. எது தொன்மையும் பண்மையும் கொண்டது. அடுத்த தொடர்ச்சியில் பார்ப்போம்.

(தோழி ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தலைப்பை மாற்றியுள்ளேன் )

94 மறுமொழிகள்:

 1. 6:29 PM  
  Anonymous said...

  ஜெயசிறீ யும் நித்தியசிறீயும் சினிமாவில் மட்டும்தான் தமிழில் ( ! ) பாடுவேன் என்பது திமிரில்லாமல் வேறு என்ன.
  Pls go to Music World or Land Mark
  and find out for yourself.Both have sung Tamil songs including songs by Subramania Bharathi.
  You are arrogant and ignorant.

 1. //பிருந்தாவனம் எனும் ஆல்பம் வெளியிட மட்டும் பாரதியின் பாட்டுத்தேவை ஆனால் சங்கீத விழாக்களில் 90 ஆண்டுக்கு முன் பாரதி கேட்ட தமிழ்ப்பாட்டுக்கு மட்டும் இன்னும் இடமில்லை.//


  மேலே கருத்தெழுதிய முந்திரிக்"கொட்டை" அம்பிக்கு மேற்கண்ட வரிகள் பரிந்துரைக்கப்படுகிறது.

 1. சூடானது போதும் செந்தில்...தமிழ்மண நட்சத்திரத்துக்கு ஒரு பின்னூட்டம் போட்டு சூட்டை தணியுங்க ஜி

 1. 11:19 AM  
  Anonymous said...

  // மொழியற்ற ஒரு இசைக்கு சரசரக்கும் பட்டு புடவையும் , ஜிமிக்கியும் வாய்கொள்ளாச்சிரிப்பும் போண்டா சாப்பிட மாமிகளும் எதற்கு ? ஒரு நல்ல கழுதை போதாதா? //


  :-))))))

 1. டாக்டர் அய்யா இந்த தமிழெதிரிகளின் நோக்கத்தை முறியடிக்க டிசம்பர் மாதம் தமிழிசைப் பெருவிழாவை சென்னையில் சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

 1. 11:37 AM  
  அம்மாஞ்சி said...

  நன்னா சொன்னேள் போங்கோ!

 1. 11:51 AM  
  Anonymous said...

  இந்த டிசம்பர்-ஜனவரியில் எத்தனை கச்சேரிகளில் தமிழ் பாடல்கள் பாடப்படுகின்றன என்பதை
  விமர்சனங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.நீங்கள் குறிப்பிடும் பாடகர்கள் வெளி நாட்டில் கச்சேரி செய்யும் போதும் தமிழ் பாடல்கள் பாடுகிறார்கள்.

 1. லக்கி மாப்ளே, ஒரு சின்ன திருத்தம் மருத்துவர் அய்யாவிற்கு முன்பிருந்தே மானமிகு நந்தன் அருணாச்சலம் அவர்கள் "தந்தை பெரியார் தமிழிசை மன்றம்" என்கிற பெயரில் தைத்திங்களில் இந்த மண்ணின் இசையையும் இசைவாணர்களையும் மேடையேற்றி வருகிறார்

 1. நல்ல சூடு.

  ஆனால் உரைக்குமா என்பது சந்தேகம்தான்.

 1. 2:00 PM  
  Anonymous said...

  உங்க மருத்துவர் அய்யாவோட பேரப் புள்ளங்கள ஒழுங்கா தமிழ் படிக்க வைய்யப்பு. பொறவால கன்னாட முசிக்குள்ள முழுகி முத்தெடுக்கலாம். இவுரு தமிழ்ல பாடுனொன்ன சபாவுல எல்லாம் போயி கழகக் கண்மணிகள் காசு கொடுத்து தமிழ வளத்துருவாங்களாமா? அவுங்க பொளப்பு அவிங்களுக்கு. பொத்திட்டு போவியா..

 1. வாய்யா வா ! எப்படி எப்படி எங்க புள்ளைங்கள தமிழ்ல படிக்கவைக்கனுமா?

  ஆமா நாங்க தமிழ் மட்டும் படிப்போம், நீங்க இங்கிலிபீசு படிப்பிங்க, ஃபிரன்ச் படிப்பிங்க... கூடவே இந்தியும் படிச்சிட்டு அதிகாரியாகி வந்து ஏறி மேய்விங்க. அந்த காலமெல்லாம் மலையேறி போச்சு அனானி "பார்ப்ஸ்" அவர்களே...

  நாங்க இனி எந்த மொழியும் படிப்போம் கூடவே கண்டிப்பா தமிழையும் படிப்போம். எங்களுக்கு அடையாளம்ன்னு அது ஒன்னுதான் இருக்கு நிச்சியம் அதை இழக்க மாட்டோம்.

  அதே மாதிரி இனி ஏகலைவனின் கட்டைவிரல் வெட்டப்படாது, தூரோணச்சாரிகள் விரல்கள் வாங்கப்படும்

 1. /"சரி பாடித்தான் தொலையறதுகள்" நமக்கென்ன என்று போகலாம் என்று பார்த்தால் பத்தாதற்கு பத்திரிக்கைகளில் பேட்டி வேறு "அதான் துக்கடா பாடறமொன்னோ அப்புறம் என்ன" என்று குந்தித் தின்ற கொழுப்பை குதப்பி துப்பும் திமிரோடு.//

  நல்ல சூடு..தொடர்ச்சிக்கும் காத்திருக்கிறேன்.

 1. நன்று வரவனையான்!

  பதிவை விட பின்னூட்டத்தில் இருக்கும் இந்த வரிகள்

  //நாங்க இனி எந்த மொழியும் படிப்போம் கூடவே கண்டிப்பா தமிழையும் படிப்போம். எங்களுக்கு அடையாளம்ன்னு அது ஒன்னுதான் இருக்கு நிச்சியம் அதை இழக்க மாட்டோம்.//

  மிகவும் கவர்ந்தது. வாழ்த்துக்கள்!!

 1. ஓ, இந்தப் பதிவை பார்த்து தான் வலையுலக "தாம்ப்ராஸ்" தலைவர் வெகுண்டு எழுந்து? :-)) அவருடைய அல்லக்கை அம்பிகள் கூட சீந்தாததால் தனக்குத் தானே பின்னூட்டக் கயமை செய்து கொண்டு இருக்கிறாரோ?

  சுமார் 63 ஆண்டுகட்கு முன் எழுதிய விடயம் இன்றளவும் அப்படியே இருப்பது வேதனையான விடயம். தமிழிசையை பிரபலப்படுத்த அவாக்களின் சபாவை இழுத்து மூட "கருணா" என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.ஆத்தாவின் ஆட்சியில் தமிழிசையை பிரபலப்படுத்த தவறியதாக அவ்வாட்சியை குற்றம் சாட்டியதாக ஞாபகம்.

  //You are arrogant and ignorant.//
  பதிவைவிட முதல் பின்னூட்டத்தின் இந்த வரி தான் உன்னுடைய இருப்பு. மகிழ்ச்சியாக உள்ளது.

 1. //நானும் மழை வரவைப்பேன் என்பது அவருக்கு வேதியல் குறித்து வகுப்பெடுக்கபட வேண்டிய அவசியத்தை மட்டுமே நமக்கு காட்டுகிறது.//


  செந்தில், மிகவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த வரிகள். இசை குறித்த (இசை மட்டுமா?) இந்த மூடநம்பிக்கைகளை நமது வெகுசன ஊடகங்களும், சினிமாவும் தொடர்ந்து பரப்பிவருகின்றன. எனக்கு சட்டென்று ஞாபகம் வந்தது மிருதங்கச் சக்கரவர்த்தி என்ற படம்.

 1. 3:53 PM  
  Anonymous said...

  ஓ, இந்தப் பதிவை பார்த்து தான் வலையுலக "தாம்ப்ராஸ்" தலைவர் வெகுண்டு எழுந்து? :-))

  எந்த தாம்பிராஸ், ஐயர் தாம்பிராஸா, ஐயங்கார் தாம்பிரஸா இல்லை ராவ் தாம்பிரஸா :-))

 1. நித்தியசிறி 3 வருடங்களின் முன் யாழ்ப்பாணம் வந்து வைத்த கச்சேரியில் பெரும்பாலும் தமிழ்ப்பாடல்கள் பாடியதாகத்தான் ஞாபகமிருக்கிறது.

 1. நான் சமீபத்தில் ஒரு கச்சேரிக்கு சென்றிருந்தேன். அங்கு வங்க மொழியில், மராட்டியில், தெலுங்கில், கன்னடத்தில், சமஸ்கிருதத்தில், ஹிந்தியில் எல்லாம் பாடல்கள் பாடப்பட்டன. தமிழ் மட்டும் காணோம்.கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது

 1. // வசந்தன்(Vasanthan) said...
  நித்தியசிறி 3 வருடங்களின் முன் யாழ்ப்பாணம் வந்து வைத்த கச்சேரியில் பெரும்பாலும் தமிழ்ப்பாடல்கள் பாடியதாகத்தான் ஞாபகமிருக்கிறது.//


  அதைத்தான் வசந்தன் , இந்த பதிவின் வாயிலாக கேட்க விழைகிறேன். மற்ற இடங்களில் எல்லாம் தமிழை பாடுவதில் அவர்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லாத பொழுது ஏன் சங்கீத சீசன்களில் தமிழை துக்கடாவாகவும் கேண்டீனில் போண்டா சாப்பிட போன மாமாக்கள் வரும் வரை இடைவேளையில் பாடவும் மட்டுமே செய்கிறார்கள் என்று...

 1. ஜம்பர் உன் முதலாளியைவிட லொள்ளு உமக்கு :))))))))))))

  இங்க வேணாம் , :))))))))))))))))

  இன்னோன்னு பிரசுரிக்கிறமாதிரி முயற்சி பண்ணுங்கள்

 1. 11:32 PM  
  Anonymous said...

  There are other artistes apart from singers.Do they all always play only Tamil songs. Did Rajarathinam Pillai play only Tamil
  songs. Did Sheik Chinna Moulana or Karukurici Arunachalam restrict themselves to Tamil songs only.
  Why are you targetting only Brahmin singers.

 1. 8:37 AM  
  Anonymous said...

  தமிழ் மீது கொண்ட பற்றால் வரும் உங்கள் மனக்கொதிப்பு நியாயம் தான். ஆனா அவாளுக்கு சல்லி தானே முக்கியம்.

 1. This comment has been removed by the author.
 1. 10:57 AM  
  Anonymous said...

  "டாக்டர் அய்யா இந்த தமிழெதிரிகளின் நோக்கத்தை முறியடிக்க டிசம்பர் மாதம் தமிழிசைப் பெருவிழாவை சென்னையில் சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார்."
  அந்தப் பெருவிழாவில் பார்ப்பனப் பாடகர்களை கூப்பிடவில்லை/கூப்பிட்டும் அவர்கள் பாட மறுத்தார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?

  தமிழிசை இயக்கம் 60 ஆண்டுகளுக்கு முன்னாலிலிருந்தே நடந்து வந்து கொண்டிருக்கிறது. இதில் முக்கியப் பங்காற்றியவர்களில் பேராசிரியர் கல்கியும் முக்கியமானவர். தமிழிசையையின் பெருமையை முன்னிறுத்தி சிந்து பைரவி என்னும் படம் எடுத்தவர் கே.பாலசந்தர். அவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்.

  இப்போது நமக்கு முக்கிய வேலை தமிழிசையை முன்னேற்றுவதுதான். இதில் தேவையற்று வேற்றுமை கொண்டு வராதீர்கள். மீதி உங்கள் விருப்பம்.

  பீட்டா பிளாக்கர் சாதா பிளாக்கரின் பின்னூட்டத்தை ஏற்க மறுப்பதால் இதை அனானியாக அனுப்புகிறேன்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 1. This comment has been removed by the author.
 1. "ஒரிஜினல்" டோண்டு அவர்களே

  //"டாக்டர் அய்யா இந்த தமிழெதிரிகளின் நோக்கத்தை முறியடிக்க டிசம்பர் மாதம் தமிழிசைப் பெருவிழாவை சென்னையில் சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார்."
  அந்தப் பெருவிழாவில் பார்ப்பனப் பாடகர்களை கூப்பிடவில்லை/கூப்பிட்டும் அவர்கள் பாட மறுத்தார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?//


  அழைப்பது மறுப்பது இங்கு பிரச்சினையில்லை அவர்கள் பாட மறுக்கிறார்கள் என்கிற காரணத்தினாலேதானே அதற்கு எதிர்வினையாக மருத்துவர் அய்யா அவர்கள், விழாவினை நடத்திவருகிறார்கள்.


  // தமிழிசை இயக்கம் 60 ஆண்டுகளுக்கு முன்னாலிலிருந்தே நடந்து வந்து கொண்டிருக்கிறது. இதில் முக்கியப் பங்காற்றியவர்களில் பேராசிரியர் கல்கியும் முக்கியமானவர். தமிழிசையையின் பெருமையை முன்னிறுத்தி சிந்து பைரவி என்னும் படம் எடுத்தவர் கே.பாலசந்தர். அவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்.//

  கட்டுரையின் மேற்பகுதியில் சொல்லப்பட்ட "அண்ணாமலைக்கே அரோகரா" என்கிற வார்த்தையே கலைஞர் தமிழிசை சங்கத்தை நிறுவிய ராஜா சர். அண்ணாமலை அவர்களை கிண்டலடித்துதானே எழுதினார். அதாவது அவர் தமிழிசை சங்கம் துவங்கியும் தண்டபாணி தேசிகர்களின் உரிமையும் தமிழின் உரிமையும் மறுக்கபடுகிறது என்பதுதானே.

  காலையிலே நல்ல மூடுக்கு வர வைத்து விட்டீர்கள், :-)))

  "சிந்து பைரவி" தமிழிசையை வலியுத்தும் பெண் அதைப்பாடுபவனுக்கு கீப்பாக (வைப்பாட்டி) மாறிப்போவதை போல் எடுக்கபட்ட படம். இங்குதான் நாங்கள் பாலச்சந்தர்களின் சூழ்ச்சிக(ள)லை மிகத்தெளிவாக புரிந்து கொள்வோம். ஒரு முற்போக்கு சிந்தையுடைய பெண் , தமிழிசையை வலியுறுத்துபவள் ஒழுக்கம் தவறிப்போவதை (கற்பொழுக்கத்தை நான் மறுத்தாலும்) போன்றே தானே காட்டியிருப்பார்.
  // இப்போது நமக்கு முக்கிய வேலை தமிழிசையை முன்னேற்றுவதுதான். இதில் தேவையற்று வேற்றுமை கொண்டு வராதீர்கள். மீதி உங்கள் விருப்பம்.//

  ஆம் தமிழிசையை முன்னேற்றுவது தலையாயப்பணிதான், அதை டிசம்பர் சபாக்களில் இருந்தே துவங்குவோம் என்பதுதான் எங்கள் விருப்பமும்.

  // பீட்டா பிளாக்கர் சாதா பிளாக்கரின் பின்னூட்டத்தை ஏற்க மறுப்பதால் இதை அனானியாக அனுப்புகிறேன்.//

  அமுக விண்ணப்பபடிவம் லக்கியாரிடம் உள்ளது வாங்கி பூர்த்தி செய்து அனுப்புங்கள்


  அன்புடன்,
  "வரவனையான்" செந்தில்

 1. //நாங்க இனி எந்த மொழியும் படிப்போம் கூடவே கண்டிப்பா தமிழையும் படிப்போம். எங்களுக்கு அடையாளம்ன்னு அது ஒன்னுதான் இருக்கு நிச்சியம் அதை இழக்க மாட்டோம்.//

  நெத்தியடி!

 1. 12:18 PM  
  Anonymous said...

  //தன் இசைத்திறமையை சல்பர் டைஆக்ஸடுடன் ஒப்பிட்டுக்கொண்ட அவரை கண்டு நாம் பரிதாபம்தான் பட முடிகிறது//

  Sulphur dioxide gives you 'saakkadai' smell, nitrous oxide only gives you rain.

  You also need some chemistry tuition Mr. Senthil.

 1. செந்தில்,

  பாபாநாசம் சிவம் போன்றோரின் நல்ல தமிழ் பாடல்கள் (சதாசிவனுக்கு வேறு தெய்வம் சமானமாகுமா ? போன்ற) நிறைய உள்ளன ... அதையெல்லாம் விட்டு தமிழில் பா(Ba) இல்லை அதனால் Baவம் இல்லை என்று சப்பைக் க்ட்டுகின்றனர். 'ழ' இல்லாத மொழிகல் குறித்து இவர்கள் வருத்தப்படுவது இல்லை.

 1. Mr.Anony "parps", thanks for your information.points you mentioned above is well noted.

 1. 2:18 PM  
  Anonymous said...

  பாபாநாசம் சிவம் போன்றோரின் நல்ல தமிழ் பாடல்கள் (சதாசிவனுக்கு வேறு தெய்வம் சமானமாகுமா ? போன்ற) நிறைய உள்ளன ... அதையெல்லாம் விட்டு தமிழில் பா(Ba) இல்லை அதனால் Baவம் இல்லை என்று சப்பைக் க்ட்டுகின்றனர். 'ழ' இல்லாத மொழிகல் குறித்து இவர்கள் வருத்தப்படுவது இல்லை

  Many singers do sing songs composed
  by Papanasam Sivan. If at all anything his songs are very popular with singers, listeners
  and dancers.He has written many
  songs for Tamil films also.Sivan,
  Bharathiyar, Gopalakrishna Bharathi
  are some of the composers whose Tamil songs are appreciated by singers and rasikas alike.

 1. முந்தைய தலைப்பை விட இந்த தலைப்பு சூப்பர்.

  டாக்டர் கலைஞர் வாழ்க!

 1. மேலே கருத்தெழுதியுள்ள அனானி ?? (எதுக்கு அனானி.. யுனானி என்றெல்லாம் ? சுனா. பானா என்று வைத்துக்கொள்வோம்)

  சுனா.பானா அவர்களே, இங்கே எழுத முனைந்துள்ளது சங்கீத சபாக்களில் குறிப்பாய் டிசம்பர் சங்கீத சீசன்களில் ( கார்த்தீகை வேறு ஒன்றுக்கு சீசன் :P ) தமிழை புறக்கணிப்பது பற்றித்தான். " பாபநாசம் சிவன், குத்தாலம் சீனுவாசன் " பற்றியெல்லாம் அப்புறம் பேசுவோம்.

  பாரதியார் தமிழிசை மேடைகளில் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து சுதேசி மித்திரனில் எழுதி 90 வருடமாகிறது அம்பி. அவரு செத்த பிறகுதான் அவர் எழுதியதையே கை கொண்டு தொட்டீர்கள்.அவ்வளவு அவரை கேவலம் ஒரு உயிரினமாகக்கூட மதிக்காதவா எல்லாம் " பாரதி மாதிரி வருமா" என்றேல்லாம் பேசுவது இன்னும் நீங்கள் அவருக்கு செய்யும் துரோகமே.

 1. // luckylook said...
  முந்தைய தலைப்பை விட இந்த தலைப்பு சூப்பர்.

  டாக்டர் கலைஞர் வாழ்க! //  அந்த தோழி யார்ன்னு கேட்காத "லக்கிலுக்" வாழ்க

 1. இங்கு எனக்கு பிடித்தது செந்தில் -ன் பின்னூட்டம் மட்டும் தான். அது ஏனென்று புரியவே இல்லை. நன்றி செந்தில் அவர்களே.

 1. /அந்த தோழி யார்ன்னு கேட்காத "லக்கிலுக்" வாழ்க//

  கண்டேன் சீதையை

 1. /அந்த தோழி யார்ன்னு கேட்காத "லக்கிலுக்" வாழ்க//

  கண்டேன் சீதையை //


  லக்கி மாப்ளே ! நீங்கள் சொல்லியுள்ள வார்த்தைதான் உலகின் முதல் SMS

 1. 3:36 PM  
  கொட்டாங்கச்சி said...

  ஏன் mores codeஆ இருக்கக்கூடாதா?

 1. 3:43 PM  
  Anonymous said...

  What was Karunanidhi and Co doing during freedom struggle. These traitors were with the British and Periyar was the leader of the traitors. Many brahmins supported Bharathiar and paid the price.Many brahmins were in the forefront of freedom movement. Those who adore the traitors and stooges who were licking the boots of colonial government have no business to talk about Bharathi or who supported him. Go and ask SUN TV to change its name in to Tamil.
  Tell it no to use Thanglish.
  Then you can talk of Jaysashris and Sowmyas. They sing in Tamil
  and do not mix Tamil with English
  while singing. You hate them because you hate brahmins. Your hatred is so obvious that one can laugh at the excuses you provide.

 1. 4:54 PM  
  Anonymous said...

  Kandippaga ovvaru(every) thamilanum thayaipol thamil mozhiyaiyum nesikkavendum - illai ental thamilan entu solvathil artham illai. Ungalai vazhthaamal irrukkamudiyathu - ungalaipol thamilpattulla ilanjarkal mun vara vendum - intaya soolnilaiyil athu avasiyamakirathu
  Ungal thondu vazhga - thamil vazha
  -yaaro

 1. 6:19 PM  
  Anonymous said...

  செந்தில் said...  மேலே கருத்தெழுதிய முந்திரிக்"கொட்டை" அம்பிக்கு மேற்கண்ட வரிகள் பரிந்துரைக்கப்படுகிறது.  :-)))))

 1. 8:05 AM  
  Anonymous said...
  This comment has been removed by a blog administrator.
 1. //Anonymous said...
  What was Karunanidhi and Co doing during freedom struggle. These traitors were with the British and Periyar was the leader of the traitors. Many brahmins supported Bharathiar and paid the price.Many brahmins were in the forefront of freedom movement. Those who adore the traitors and stooges who were licking the boots of colonial government have no business to talk about Bharathi or who supported him. Go and ask SUN TV to change its name in to Tamil.
  Tell it no to use Thanglish.
  Then you can talk of Jaysashris and Sowmyas. They sing in Tamil
  and do not mix Tamil with English
  while singing. You hate them because you hate brahmins. Your hatred is so obvious that one can laugh at the excuses you provide.//


  இந்த பதிவுக்கு சம்மந்தம் இல்லாமல் சொம்படிக்க விரும்பும் மேற்படி அனானி அவர்களுக்கு , மேற்கண்ட கேள்விகளுக்கும் இன்னும் சில கேள்விகளுக்கும் வேறு இடத்தில் பதிலளிக்கிறேன். இங்கு நான் கேட்பது ஏன் தமிழில் பாட மறுக்கிறார்கள் என்பதுதான். பெரியார் பிரிட்டிஷ் காரர்களை ஆதரித்ததினால்தான் என்பது போல் "கேணத்தனமாக" சொல்ல வருகிறீர்களா?

 1. கச்சேரிகளில் தமிழ்ப்பாட்டு நிறைய பாட வேண்டுமமென்பதும் பலருடைய விருப்பம். ஆனால் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை என்பதே உண்மை. அண்ணாமலையாரும் கல்க்கியும் பெரு முயற்சி எடுத்தார்கள். ஆனால் நிலமை இன்னும் மாற வேண்டும்.

  பாம்பே ஜெயஸ்ரீயின் கச்சேரி ஒன்று பெங்களூரில் கேட்க நேர்ந்தது. எல்லாம் தெலுங்கு கன்னட கீர்த்தனைகள். கர்நாடகத்தில் பாடுவதால் சரி. ஆனால் அருகிலிருந்த நண்பன் அவரது உச்சரிப்புப் பிழைகளை அடுக்கிக் கொண்டே வந்து....இந்தத் தமிழ்நாட்டுப் பாடகர்களே இப்படித்தான் என்று சலித்துக் கொண்டான். ஏன் ஒழுங்காகப் பாட மாட்டேன் என்கிறார்கள் என்று வருந்தினான். சஞ்சய் சுப்பிரமணியம் கச்சேரியிலும் இதே நிலை. தெலுங்கு கன்னட கீர்த்தனைகளிலும் உச்சரிப்புப் பிழை இருக்கிறது என்றே தெரிய வருகிறது. அதுதான் உண்மை நிலை போலும். ஜெயகாந்தனுடைய அகவை விழாவில்...அவர் பெயரென்ன...சுதா ரகுநாதன் கச்சேரி நடந்தது. அத்தனையும் தமிழ்ப்பாட்டுகள். நன்றாகப் பாடினார். மிகவும் ரசித்தேன். பாரதியார் பாடல்கள் மட்டுமல்ல. முத்துத்தாண்டவப் பிள்ளை, அண்ணாமலை ரெட்டியார் என்று கதம்பம். இதை அடிக்கடி பாடலாகாதா என்று ஏங்காமல் இருக்க முடியவில்லை.

  மீண்டும் ஒரு தமிழிசை எழுச்சி வேண்டும். அது நடுநிலையானவரிடம் இருந்து வர வேண்டும். வரும்.

 1. 11:30 AM  
  Anonymous said...

  இங்கு நான் கேட்பது ஏன் தமிழில் பாட மறுக்கிறார்கள் என்பதுதான்

  They do sing in Tamil in concerts.If you have any doubt refer to the most recent issue
  of Ananada Vikatan.
  There are compositions in Telugu
  and other languages and these cannot be ignored. When Sanjay Subramaniam sang recently in
  Bangalore he sang some compositions in Tamil.The same
  is true if he sings in Mumbai
  or Hyderabad.This what most singers
  do. If you want a proof attend
  some concerts in this season and
  decide for yourself.

 1. முதன்முறையாக "கன்னி" ஆஃப் செஞ்சுரியை நோக்கி வீறுநடை போடும் எங்கள் "இன்டெலெக்ச்சுவல்" நகைச்சுவை மன்னன் "வரவணையானே" உமக்கு தோள்கொடுத்து நிற்போம் என்றும்....  வலைப்பதிவு சாருநிவேதிதா பேரவை
  வார்ஃப் நெ. 3
  ஹோபர்ட் வாட்டர் ப்ரண்ட்
  டாஸ்மேனியா
  அவுஸ்த்ரேலியா

 1. "இங்கு நான் கேட்பது ஏன் தமிழில் பாட மறுக்கிறார்கள் என்பதுதான்."

  தமிழில் பாட யாரும் மறுப்பதில்லை. கச்சேரிகளை ஆர்கனைஸ் செய்யும் சபாக்கள் கூறுவது போலத்தான் பாட வேண்டும். இல்லாவிட்டால் சான்ஸ் கிடைக்காது. அவ்வளவே.

  தமிழிசை சங்கத்தில் போனால் அத்தனையும் தமிழில்தான் பாட வேண்டும்.

  உங்கள் பதிவின் தலைப்பு சற்று மாறியிருக்கலாம். வேண்டுமென்றே ஒரே சாதியைத் தாக்குவதுபோல இருப்பதால்தான் தேவையற்ற எதிர்வினைகள்.

  காருக்குறிச்சி, ஷேக் சின்னமௌலானா ஆகியோர் கச்சேரிகளின்போது என்ன செய்தார்கள் என்பது தெரியுமா?

  மருத்துவர் ராமதாஸ் கூப்பிடுகிறார், பணம் கொடுக்கிறார் பாடுகிறார்கள். மியூசிக் அகாடெமியில் தனித் தமிழ் கூடாது என்கிறார்கள். அங்கு சான்ஸ் வேண்டுபவர்கள் அதை நிறைவேற்ற வேண்டும். எம்.எஸ். அவர்கள் அங்கு பாட மறுத்தார்.

  மியூசிக் அகாடெமியில் பார்ப்பனர்கள் அல்லாத சங்கீதக்காரர்கள் யாருமே இதுவரை பாடவில்லை என்கிறீர்களா?

  உங்கள் கேள்விகளை சபாக்களிடம்தான் கேட்க வேண்டும்.

  ஒன்று செய்யலாம். நீங்கள் பாட்டு கற்று கொண்டு தமிழில் மட்டும் பாடுங்களேன், யார் தடுத்தார்கள்?

  தொழில் முறையில் பாடுபவர்கள் தங்களுக்கு எது சாதகமான பேரமோ அதைத்தான் எடுத்து கொள்வார்கள். உதாரணத்துக்கு போன மாதம் நடந்த வலைப்பதிவர் மீட்டிங்கில் என்னை பிரெஞ்சு ஜெர்மன் நாவல்களிலிருந்து தன்னிச்சையாக மொழிபெயர்க்கச் சொன்னார்கள். அதை நான் அடியோடு நிராகரித்தேன், ஏனெனில் நான் தொழில்முறை மொழிபெயர்ப்பாளன் ஓசி வேலை எல்லாம் செய்ய மாட்டேன், நன்றி.

  அது போலத்தான் பாடகர்களும்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 1. 12:39 PM  
  சைனிக்குடு said...

  தமிழில் பாடவேண்டும் என்ற கருத்தை நான் ஆதரிக்கிறேன். அதே சமயம், எதை எடுத்தாலும் அவன் பார்ப்பான், நான் பீ அள்பவன் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதால் யாருக்கும் எந்த பயனுமில்லை. சிந்துபைரவியில் நல்ல கருத்து சொல்லியிருந்தாலும், கடைசியில் அவள் வைப்பாட்டிதானே என்று கேட்பவர்களுக்கு எல்லாமே எதிர்மறையாகத்தான் தெரியும்.

  The glass is either half empty or half full to the eye of the beholder ;-D

 1. தமிழிசையை வளர்க்க நாம் தான் பாடுபட வேண்டும்.அதே நேரத்தில் கர்னாடக சங்கீதத்தை புறக்கணிக்க வேண்டும்.பெரியார் பிள்ளையாரை புறக்கணித்த அதே பாணியில்.

 1. apart from pure agmark brahmin hatered, do you have something else to offer to tamil blogsphere ?

 1. கேள்விகள் கேட்கும் முன்னர் பதிலைத் தேட முயற்சிக்கவேண்டும்.

  A little bit of humility in tone would have entirely changed the way this posting would have looked.

  பதிலைத் தெரிந்துகொள்ளும் ஆவல் உங்களுக்கு இருக்கிறது என்பதையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  மாறாக, உங்களுக்குத் தோன்றியுள்ள பிராமண வெறுப்பினால் கிடைக்கப் பெற்ற simplistic explanation ஐ பதிலாக கூறும் திராவிட ராஸ்கல்கள் பாராட்டை எதிர்பார்த்து எழுதப்பட்ட பதிவாகவே தோன்றுகிறது.

  If Ignorance is bliss. So be it.

  இருந்தாலும், Let me tell you what is the way you can find your answer, if at all you need to.

  1. கர்நாடக சங்கீதமோ, ஹிந்துஸ்தானி இசையினில் முதல் கட்ட அடிப்படை அறிவேனும் வேண்டும்.

  2. பிறகு கச்சேரிகளில் போய் கேட்டிருக்கவேண்டும்.

  3. கேட்டு ஏன் தியாகாராஜர் கீர்த்தனைகளைப் பாடுகிறார்கள் என்பதை ஆராயவேண்டும்.

  4. ஏன், முத்துசுவாமி தீக்ஷிதர் பாடல்கள், பாபநாசம் சிவன், பாரதியார் பாடல்கள் பாடுகிறார்கள் என்றும் பார்க்கவேண்டும்.

  5. பிறகு கச்சேரி நடத்தும் சபாக்கள் என்ன demand செய்க்றார்கள் என்று பார்க்கவேண்டும். பணம் கொடுப்பவர்கள் அவர்கள். அவர்கள் பேச்சைக் கேட்டுப் பாடவேண்டும்.


  எதுவுமே செய்யாமல், தெலுங்குப் பாடலைத்தான் பாடுகிறார்கள் தமிழை ஒதுக்குகிறார்கள் என்றால் என்ன அர்த்தம் ?

 1. //ஒன்று செய்யலாம். நீங்கள் பாட்டு கற்று கொண்டு தமிழில் மட்டும் பாடுங்களேன், யார் தடுத்தார்கள்?//
  இதத்தான் பார்ப்பனீயம் என்று சொல்கிறார்கள் போல...

  மையக் கருத்தைப் பற்றி பேசாமல் "நீங்களே பாடுங்கள்" என்று சஜ்ஜெஸ்ட் பன்னுவது. இன்னும் எத்தனை வருடத்திற்கு தான் இப்படியே பேசிக் கொண்டிருப்பீர்கள்?

  அது என்னங்க தமிழ்நாட்டில் தமிழிசை வளர்க்கப்படவில்லை என்று கூறினால் நீயே போயி வளர்க்க வேண்டியது தானே என்று சொல்லுவது?

  உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரே ஒரு நாள் நீங்கள் தூக்கி பிடிக்கும் தேவ பாடை "சமஸ்கிருதத்தை" வைத்து வாழ்ந்து காட்ட இயலுமா?...எனிவே, அது தான் செத்து தொலஞ்சிடுச்சே?...

  இங்கே ஒரே ஒரு சமுதாய மக்களால் திட்டமிடப்பட்டு ஒரு மொழியையும் கலாச்சாரத்தையும் அழிக்க முயற்சி நடக்கிறது என்றால் அதற்கு காரணம் ஆதி முதல் அவர்கள் கோலேச்சி வந்த அதிகாரத்திமிரும், தரகு மனோபாவமும் தானே காரணம்?

 1. "பெரியார் பிள்ளையாரை புறக்கணித்த அதே பாணியில்."

  எந்த வேளையில் ஈவேரா அவர்கள் பிள்ளையார் சிலைகளை உடைத்தாரோ, தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள். அவருடைய அத்யந்த சீடர்கள் அல்லது குறைந்தபட்சம் அவர்தம் வீட்டார்கள் பிரார்த்தனைகளை தீவிரமாக நிறைவேற்றி வருகின்றனர்.

  ஈவேரா அவர்கள் சமாதியிலேயே மொட்டை எல்லாம் போடுவதாகக் கேள்வி. இது உண்மையில்லை என்றால் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும், ஏனெனில் இது கண்டிப்பாக அவரது நினைவுக்கு செய்யப்படும் அவமரியாதைதான்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 1. "மையக் கருத்தைப் பற்றி பேசாமல் "நீங்களே பாடுங்கள்" என்று சஜ்ஜெஸ்ட் பன்னுவது. இன்னும் எத்தனை வருடத்திற்கு தான் இப்படியே பேசிக் கொண்டிருப்பீர்கள்?"

  அதுக்கென்ன செய்வது. பதிவு என்னவோ பார்ப்பனர்கள் மட்டும் கச்சேரிகள் செய்யும் தொனியில் அல்லவா எழுதப்பட்டுள்ளது.

  அல்லது ஏதாவது பார்ப்பனரல்லாத பாடகர்கள் இப்போதுள்ள சூழ்நிலையில் தெலுங்கு, வடமொழி கீர்த்தனைகளை பாட மறுக்கிறார்கள் என்றால் அதை உதாரணத்துடன் கூறுங்கள்.

  இப்படிப்பட்ட தொனிக்கு இதுதான் பதில்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 1. 5:23 PM  
  Anonymous said...

  காசைக்கொடுத்து, மரியாதை கொடுத்து பாடச்சொன்னால் பாடுவார்கள்..

  ஏன் பார்பனர்கள் மட்டுமே பாட வேண்டும்....மற்ற ஜாதிக்காரர்கள் ஏனையா கற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்...
  ஏன் ஒரு ஷேக் சின்ன மெளலானா, காருக்குறிச்சி அருணாசலம் போல பிற சாதியினர் 'பாட' வரவில்லை...ஜெசுதாஸ் கூட வந்தாரே கேரளத்திலிருந்து (அவருடைய குரு செம்பை ஒரு பார்பனர் தாம்)...மற்றும் பல கேரளத்தினர் பிராமணரல்லாதவர் அங்கு பாட, மற்றும் பல வாத்தியங்களை வாசிப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்களே ஏன்?....

  தமிழகத்தில் தங்களை போல் தொண்டை கிழிய கத்துபவர்கள் தாம் அதிகம்....பலர் மேலே கூறியது போல, ஒரு தமிழிசை சங்கம் நட்த்துவதோ, அல்லது (ராமதாசின் தற்போதைய மூயற்சி பாரட்டத்தக்கது) இந்த தமிழிசை கச்சேரிகளை கேட்பதோ எத்துணை திராவிடர்கள் செய்கிறீர்கள்...வரவணை நீங்கள் இன வெறி கோண்டே இந்த விஷயத்தினை அணுகுவது தவறு.....இதற்க்கும் என்னை பார்பான் - அது-இது என்று திட்டலாம்...ஆனால் இந்த திட்டல் மட்டுமே உங்களை உயர்த்தாது...உங்களுக்கு ஒன்றும் வயதாகிவில்லை...போய் யாராவது ஒரு பாடகரிடம் கற்றுக்கொள்ளுங்கள்...பின்னர் உணர்வீர்கள்.....

 1. அன்பின் "ஒரிஜினல்" டோண்டு , உங்கள் கருத்துக்கள் பிரசுரிக்கும் தன்மையிலில்லை. ஆ ஊ பெரியார் ஒழிக ! ஆட்டம் இங்கு செல்லாது. Better Luck Next Time

  :)))))))))))))))))))))))))

 1. தவறு செந்தில். பெரியார் ஒழிக என்று நான் கூறவேயில்லை. பெரியாரை நான் இங்கு குறிப்பிட்டதற்கு காரணமே, நீங்கள் அனுமதித்த இன்னொருவர் பின்னூட்டத்தில் அவரது பிள்ளையார் சிலை தகர்ப்பு பற்றி குறிப்பிட்டதாகும்.

  அதே போல நீங்கள் பார்ப்பனரை மட்டம் தட்டவே தயாரித்த இப்பதிவும் வெற்றி பெறவில்லை. பல எதிர்க்கருத்துகளுக்கு பதில் கூற பலமின்றி நீங்கள் வெறுமனே எரிச்சல்படுவதில் அர்த்தமே இல்லை. இன்று போய் நாளை வரவும். :))))

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 1. கர்நாடக சங்கீதம் என்று சொல்வதை விட 'சாஸ்த்ரீய சங்கீதம்' என்று சொல்வது தான் பொருத்தமாயிருக்கும். அந்த கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட பாடல்களைத் தான் சபாக்களில் பாடுகிறார்கள். மொழி வெறியினால் மக்கள் பிறிக்கப்படாமலிருந்த கால கட்டத்தில் மும்மூர்த்திகளால் அருளப்பெற்ற பாடல்களை அனைவருமே ரசித்து வந்துள்ளனர். எல்லாத் தமிழ் பாடல்களையும் இந்த கட்டமைப்பில் பொருத்தி இசையமைத்துப் பாடுவது என்பது இக்கால கட்டத்தில் இயலாதது. உன்னி கிருஷ்ணன், சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ, குன்னக்குடி போன்ற இன்னும் பலர் தமிழ்ப் பாடல்களை போற்றியே வந்துள்ளனர். அடிப்படையான சில கேள்விகள், ஆனால் உங்கள் பதிவின் நோக்கம் புரிந்து கொள்ளமுடியவில்லை:

  1. சாஸ்த்ரீய சங்கீததில் தமிழிலும் பாட வேண்டும் என்பதை யாரும் மறுக்கவில்லை. அவரவருக்கு எது சுலபமாக வருமோ அதை முன்னிருத்திப் பாடுவதில் தவறென்ன? இதில் பிறப்பால் வேறுபடுத்த என்ன் இருக்கிறது?
  2. வெவ்வேறு இசை வடிவங்களின் கட்டமைப்பு வித்யாசம் - ஏன் உங்களுக்கு புரியவில்லை? கானா பாடல்களையோ, நாட்டுப்புற பாடல்களையோ இவர்கள் பாடினால் நீங்கள் ரசிப்பீர்களா? அல்லது அந்த இசை வடிவங்களையும் தமிழில் இருந்தால் மட்டுமே ரசிப்பீர்களா?
  3. உண்மையில் சிந்திப்பீர்களானால், இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றுமே இன்று தமிழில் நசிந்து விட்டது. இதுமட்டுமே இன்றைய ஆட்சியாளர்களின் தமிழ் மொழித் தொண்டு. நல்ல தமிழ் நூல்கள் எவ்வாறு அறுகி விட்டனவோ, நல்ல தமிழ் நாடகங்கள் எவ்வாறு அழிந்து விட்டனவோ, அவ்வாறே நல்ல தமிழ் இசையும் அழிந்து விட்டது.

  விட்ட குறை, தொட்ட குறை என இம்மூன்றையும் சற்றேனும் ஏறப் பிடித்துள்ளவர்கள் இன்று யார், யார் என மனசாட்சிக்கு விரோதமில்லாமல் ஒரு பட்டியல் தயார் செய்து பார்த்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள் என்பது திண்ணம்.

 1. 5:46 PM  
  Anonymous said...
  This comment has been removed by a blog administrator.
 1. இவையனைத்தையும் விட "இசைக்கு மொழி ஒரு தடையாக" என்றுமே இருந்தது கிடையாது. இன்றைய தமிழகத்தைத் தவிர - வேறென்ன சொல்ல?

 1. நாளைக்கும் இங்கே ஆட்டை போட அனுமதி உண்டா?

  சென்னை அமுகவினர் அசுர வெறியோடு காத்திருக்கிறார்கள்....

 1. 6:06 PM  
  Anonymous said...

  தமிழில் பாடுவதும்,பாடாமல் போவதும் அவரவர் உரிமை.

  உனக்கு ஆசையிருந்தால் நீ பாடு, இல்ல உன் பொண்டாட்டி,அக்கா யாரையாவது கத்துக்கிட்டு பாடச்சொல்லு. இல்லாட்டி கத்தியாவது பாடச்சொல்லு.

  இதெற்கெல்லாம் ஒரு பதிவா?

  தனிமனித சுதந்திரம் பேசுவது தமிழனுக்கு மட்டும் தானா?

 1. This comment has been removed by the author.
 1. அனாமத்து அனானி !


  //Anonymous said...
  காசைக்கொடுத்து, மரியாதை கொடுத்து பாடச்சொன்னால் பாடுவார்கள்..//

  "காசைக்கொடுத்து" சரி :)))

  //ஏன் பார்பனர்கள் மட்டுமே பாட வேண்டும்....மற்ற ஜாதிக்காரர்கள் ஏனையா கற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்...
  ஏன் ஒரு ஷேக் சின்ன மெளலானா, காருக்குறிச்சி அருணாசலம் போல பிற சாதியினர் 'பாட' வரவில்லை...ஜெசுதாஸ் கூட வந்தாரே கேரளத்திலிருந்து (அவருடைய குரு செம்பை ஒரு பார்பனர் தாம்)...மற்றும் பல கேரளத்தினர் பிராமணரல்லாதவர் அங்கு பாட, மற்றும் பல வாத்தியங்களை வாசிப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்களே ஏன்?....//

  அட லூசு மாற்றிய தலைப்பும் உங்களுக்கு "ஆப்பு" வைச்ச தலைப்புதானே. பார்ப்புகள் தவிர பிறகலைஞர்கள் கத்துண்டு வந்து பாடிய பிறகுதானே மேடையைக்கழுவி தீட்டு கழிச்சேள். நான் கேட்குறது இந்த வருசம் தமிழ் பாடல்களை நிறையவும் தெலுங்கு கீர்த்தனையகளை துக்கடாவகவும் பாட எத்தனை பேர் அயுத்தம்


  //தமிழகத்தில் தங்களை போல் தொண்டை கிழிய கத்துபவர்கள் தாம் அதிகம்....பலர் மேலே கூறியது போல, ஒரு தமிழிசை சங்கம் நட்த்துவதோ, அல்லது (ராமதாசின் தற்போதைய மூயற்சி பாரட்டத்தக்கது) இந்த தமிழிசை கச்சேரிகளை கேட்பதோ எத்துணை திராவிடர்கள் செய்கிறீர்கள்...//

  பல்வேறு தமிழிசை விழாக்களை முன் நின்று நடத்தியவன் நான். இங்கும் மேலே கருத்தெழுதிய வஜ்ராவிற்கும் சொல்லிக்கொள்வது ஒரு விடயம் பற்றி பேசுவதாயின் அதை ஐய்யம் தெளிவுற கற்றவன் தான் பேசவேண்டுமாயின் யாரும் எதையும் பேசமுடியாது.  //வரவணை நீங்கள் இன வெறி கோண்டே இந்த விஷயத்தினை அணுகுவது தவறு.....இதற்க்கும் என்னை பார்பான் - அது-இது என்று திட்டலாம்...ஆனால் இந்த திட்டல் மட்டுமே உங்களை உயர்த்தாது...உங்களுக்கு ஒன்றும் வயதாகிவில்லை...போய் யாராவது ஒரு பாடகரிடம் கற்றுக்கொள்ளுங்கள்...பின்னர் உணர்வீர்கள்.....//

  நான் ஒன்று உறுதியாய் சொல்லிக்கொள்கிறேன் நிச்சியம் இனவெறி என்பது துளியும் இல்லை என்பதே. பார்ப்பான் என்று ஒருவனை திட்டுவது இனத்தால் அல்ல ஆதிக்கவெறியாலும் அதிகாரபசியாலும் செயல்படும் ஒருவனின் கருத்தே அவனை பார்ப்பான் என்று விமர்சிக்கவைக்கிறது. நானும் சில வாத்தியங்கள் கற்றுள்ளேன், பறை , தமுக்கு உருமி போன்றவை வந்தீர்களானால் கற்றுத்தர உத்வேகமாய் உள்ளேன். பார்ப்பனருக்கு 100% இலவசம்

 1. //ஆனொன்ய்மொஉச் சைட்...
  தமிழில் பாடுவதும்,பாடாமல் போவதும் அவரவர் உரிமை.

  உனக்கு ஆசையிருந்தால் நீ பாடு, இல்ல உன் பொண்டாட்டி,அக்கா யாரையாவது கத்துக்கிட்டு பாடச்சொல்லு. இல்லாட்டி கத்தியாவது பாடச்சொல்லு.

  இதெற்கெல்லாம் ஒரு பதிவா?

  தனிமனித சுதந்திரம் பேசுவது தமிழனுக்கு மட்டும் தானா?//

  இப்பவும் தோழர்.போலி டோண்டு போன்றோரின் வழிமுறையில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன்

 1. என்னய்யா போட்டு பின்னி எடுக்கிறீக, உங்க எxஉத்துக்கு இவ்வளவு வல்லமையா? வாந்த்துக்கள், தொடர்க உங்கள் பணி.:-)

 1. 100% ஒரிஜினல் டோண்டு ராகவன் அவர்களே !

  // தவறு செந்தில். பெரியார் ஒழிக என்று நான் கூறவேயில்ல... தவறு செந்தில். பெரியார் ஒழிக என்று நான் கூறவேயில்லை. பெரியாரை நான் இங்கு குறிப்பிட்டதற்கு காரணமே, நீங்கள் அனுமதித்த இன்னொருவர் பின்னூட்டத்தில் அவரது பிள்ளையார் சிலை தகர்ப்பு பற்றி குறிப்பிட்டதாகும்.//  உங்கள் மறுப்பு பின்னூட்டத்தின் பின் இப்போது அதையும் வெளியிட்டு விட்டேன். படிப்போருக்கு புரியும் நீங்கள் என்ன எழுதியுள்ளீர்கள் என்று.

  //அதே போல நீங்கள் பார்ப்பனரை மட்டம் தட்டவே தயாரித்த இப்பதிவும் வெற்றி பெறவில்லை. பல எதிர்க்கருத்துகளுக்கு பதில் கூற பலமின்றி நீங்கள் வெறுமனே எரிச்சல்படுவதில் அர்த்தமே இல்லை. இன்று போய் நாளை வரவும். :))))//

  வெற்றி என்னும் இலக்கை வைத்து பதிவு போடுபவன் நானல்ல. என் கருத்து என்பது மட்டுமே நோக்கம், எங்கும் நான் எரிச்சல் பட்டதாகவே தெரியவில்லையே. உங்களுக்கு அப்படி எதும் தெரியுதா :)))))

  ராகவன் சொன்னால் இந்த ராவணன் கேட்டுதானே ஆகனும். நாளையும் வருவேன் பொது உரிமையும், பொதுடைமையும் விரும்பும் பெரியாரின் தோழனாய்.

 1. 7:06 PM  
  Anonymous said...

  //ராகவன் சொன்னால் இந்த ராவணன் கேட்டுதானே ஆகனும். நாளையும் வருவேன் பொது உரிமையும், பொதுடைமையும் விரும்பும் பெரியாரின் தோழனாய்.//

  ஹிஹிஹி...

  நீங்கள் கூறியுள்ள பாடகர்கள் எல்லாம் பொது உடமையா?

  அல்லது

  அவர்கள் எல்லாம் தமிழில் தான் பாடவேண்டும் என்பது பொது உரிமையா?

  "சொல்லுக சொல்லைப் பிரிதோர் சொல்" என்று துவங்கும் வள்ளுவன் வாக்கு தான் நினைவிற்கு வருகிறது

 1. 11:40 PM  
  100% original popcorn said...

  //
  ெற்றி என்னும் இலக்கை வைத்து பதிவு போடுபவன் நானல்ல. என் கருத்து என்பது மட்டுமே நோக்கம், எங்கும் நான் எரிச்சல் பட்டதாகவே தெரியவில்லையே. உங்களுக்கு அப்படி எதும் தெரியுதா :)))))
  //

  குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலன்னா இது தான்ய்யா...

  எத நெனச்சிகிட்டு நீங்கள்ளாம் பதிவெழுதுறீங்களோ அத நெனக்கவே இல்லன்னு அப்பீட்டு ஆக வேண்டியது..

  உங்களுக்கெல்லாம் ஆப்பு எவனும் வைக்கவேண்டியது இல்ல. நீங்களே பதிவெழுதி வெச்சிகிறீங்க.

 1. இந்து சமூக மக்களை எந்த அளவு வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம் என்பதற்கு இந்த பதிவு எடுத்துக் காட்டு.

  இதுவே, யாராவது 'குண்டுகள் தயாரிக்கும் முஸ்லிம் குடும்பங்கள்' என்றோ, 'காம லீலை கன்னியாஸ்திரிகள்' என்றோ எழுதினால், தலையோடு உலாவ முடியுமா என்ற சிந்தனையை செந்தில் அய்யாவிடமே விட்டு விடுகின்றேன்.

  பரம்ஸ்.

  பி.கு: இஸ்லாமிய, கிருத்துவ அன்பர்கள் தவறாக எண்ண வேண்டாம். இது ஒரு analogy மட்டுமே. உங்களின் மேல் எந்த காழ்ப்புணர்வும் இல்லை

 1. பதிவர்களே ! இந்த பின்னூட்டங்களில் ஒரு அனானி பின்னூட்டம் திரு.டோண்டு அவர்களை பற்றியும் அவர்கள் குடும்பத்தாரை பற்றியும் தவறாகவும் தரக்குறைவாகவும், மிகக்கேவலமாகவும் விமர்சித்து வெளியாகி வந்திருந்தது. நான் மொத்தமாக வந்திருந்த பின்னூடங்களில் அதை கவனிக்காமல் வெளியிட்டுவிட்டேன். திரு.டோண்டு அவர்களே இது குறித்து என்னிடம் பேசியிருக்கலாம். என் கவனத்தையும் மீறி வெளியான அந்த பின்னூட்டத்திற்க்காக டோண்டுவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதை சுட்டிக்காட்டிய அந்த நண்பனுக்கும் நன்றி..

 1. //Vajra said...
  கேள்விகள் கேட்கும் முன்னர் பதிலைத் தேட முயற்சிக்கவேண்டும்.//

  சரி :)))

  A little bit of humility in tone would have entirely changed the way this posting would have looked.

  // பதிலைத் தெரிந்துகொள்ளும் ஆவல் உங்களுக்கு இருக்கிறது என்பதையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.//

  நான் என்ன கேட்டேன் என்றாவது புரிந்து கொண்டீர்களே

  // மாறாக, உங்களுக்குத் தோன்றியுள்ள பிராமண வெறுப்பினால் கிடைக்கப் பெற்ற simplistic explanation ஐ பதிலாக கூறும் திராவிட ராஸ்கல்கள் பாராட்டை எதிர்பார்த்து எழுதப்பட்ட பதிவாகவே தோன்றுகிறது.//

  ஹிஹி திராவிட ராஸ்கல்ஸ்ட பாராட்டா ... ம்ம் சரி

  //If Ignorance is bliss. So be it.

  இருந்தாலும், Let me tell you what is the way you can find your answer, if at all you need to.//

  "இதுக்கு பேரு என்னாங்க சொல்வோம் மை டியர் டிரவிடியன் ராஸ்கல்ஸ்"

  //1. கர்நாடக சங்கீதமோ, ஹிந்துஸ்தானி இசையினில் முதல் கட்ட அடிப்படை அறிவேனும் வேண்டும்./

  இல்லை .. இருக்கு இது மாதிரி ரெண்டு பதில் இருந்தா என்ன செய்யறது முதல்லயே சொல்லிடுங்க

  //2. பிறகு கச்சேரிகளில் போய் கேட்டிருக்கவேண்டும்.//

  கேட்டாச்சு

  //3. கேட்டு ஏன் தியாகாராஜர் கீர்த்தனைகளைப் பாடுகிறார்கள் என்பதை ஆராயவேண்டும்.//

  எங்கு திருவையாறிலா , மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸிலா

  //4. ஏன், முத்துசுவாமி தீக்ஷிதர் பாடல்கள், பாபநாசம் சிவன், பாரதியார் பாடல்கள் பாடுகிறார்கள் என்றும் பார்க்கவேண்டும்.//

  சரி பார்த்தா போகுது

  //5. பிறகு கச்சேரி நடத்தும் சபாக்கள் என்ன demand செய்க்றார்கள் என்று பார்க்கவேண்டும். பணம் கொடுப்பவர்கள் அவர்கள். அவர்கள் பேச்சைக் கேட்டுப் பாடவேண்டும்.//

  பணம் கொடுக்கும் சபாகாரர்கள் பூர்வீகம் ஆராயப்படும்


  //எதுவுமே செய்யாமல், தெலுங்குப் பாடலைத்தான் பாடுகிறார்கள் தமிழை ஒதுக்குகிறார்கள் என்றால் என்ன அர்த்தம் ? //

  அப்ப பணம் கொடுத்தால் ஆப்பிரிக்க பழங்குடி மொழியில் கூட மேற்கண்டவர்கள் பாடுவார்கள் என்று உங்கள் பதில் சொல்ல முற்படுகிறது . சரி இனிமே தியாகய்யர் பாடல்களை பாடவே கூடாதுன்னு யாராவது பணம் கொடுத்தால் என்ன செய்வார்கள்.

  என்ன வஜ்ரா ! ஒருத்தன் ஏன்யா பாடமாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டால் உடனே " நோக்கு என்னங்கானும் தெரியும்' அபிஸ்டு"ன்னு சொல்லுற மாதிரி ஆரம்பிச்சுடுறிங்க. ஹாஹஹஹா

  அதான் சொல்லுறேன்ல கேள்விகேட்ட பாரதியாரையே வெளியே தள்ளி கதவை சாத்துன கூட்டம் அது.

 1. 1:29 AM  
  Anonymous said...

  Paduvadhu avargal ishtam. Ketpadhum Ketkadhadhum Ungal Ishtam.
  Idharku edharkhu ithanai galaatta?

 1. Senthil,

  what Vajra said had some truth in it. May be thats not right, may be u were asking/suggesting a solution...but when I read it the first thing I could see was ur anger.

  Let me make myself clear here. You anger was right. Its justified. But, the moment you take it against a group of people this vehemently, it kind of looses perspective. The argument takes a new direction.

  Democracy is possible only with the freedom for individual opinion which doesn't butt into the basic ammendments of life. Thats why America is the world super power today. U asking a group of people to start singing in one language is not right. well let me put that in this way. U got ur rights to ask and they got their rights to deny. U can either boycott their programs or start ur own music academy or start learning music or help others good in music to become better etc..etc. They are a ton of productive things you can do

  I am an aethist. If I start writing a blog on how much I hate all those songs about God, what will happen. Zilch. Nothing. All I can do is avoid going to those concerts and do some thing productive instead on spewing my anger on all god fearing people.

  My point is anger is not healthy. Atleast not on a subject like this. Get angry on the condition of our slums, get angry on how many childs are on the street begging for money. Those things make sense.

  What about those anonymous users. MAN THEY IRRITATE ME. when they don't have the guts to put their name on print, why in the hell they even bother to post a comment. Thats the most cowardice act I have seen for a long time. Spineless bastards. I don't even know why u show their comments. What value can those comments can bring?

 1. forgot to mention one more thing. In my prev comment, I said vajra's comment has some truth in it. I accept his view on ur anger against brahmins kind of side steps the original issue "More songs in Tamil during december music season"

  I don't accept on his other views

 1. சில எருமைமாடுகள் உரசி அரிப்பை போக்கி கொள்ள இது தகுந்த இடமல்ல என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

  ;))))))))))))))

 1. //Parama Pitha said...
  இந்து சமூக மக்களை எந்த அளவு வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம் என்பதற்கு இந்த பதிவு எடுத்துக் காட்டு.

  இதுவே, யாராவது 'குண்டுகள் தயாரிக்கும் முஸ்லிம் குடும்பங்கள்' என்றோ, 'காம லீலை கன்னியாஸ்திரிகள்' என்றோ எழுதினால், தலையோடு உலாவ முடியுமா என்ற சிந்தனையை செந்தில் அய்யாவிடமே விட்டு விடுகின்றேன்.

  பரம்ஸ்.//

  மேற்கண்ட பதிவர் எங்கு இந்துக்கள் குறித்த தாக்குதலை இப்பதிவில் கண்டாரோ...:)))ஒரு வேளை பார்ப்புக்கள் மட்டுமே இந்துக்கள் எனும் "உண்மை" இவருக்கும் தெரியுமோ....

  அப்புறம் இன்னொரு நஞ்சு வேறு இஸ்லாம் , கிறுத்துவம் குறித்து விமர்சனம் செய்தால் "தலை"யுடன் அலைய முடியுமா? என்று. நரேந்த்திர மோடி போன்று நரமாமிச பட்சினிகள் உலவும் நாட்டில் குடும்பத்தையே எரித்துக்கொல்லும் ரண்வீர்சேனா உலவும் நாட்டில் தன்னை இன்ன மதத்தவன் என்று வெளிப்படுத்தவே அஞ்சும் நாட்டில் இவர்கள் விமர்சனம் செய்தால் தலையுடன் அலைய முடியாதாம். ஏன் ஏன் இந்த கொலைவெறி :))))))))))

  உங்களுக்கும் மேலும் ஒரு வாய்ப்பு வழங்கபடுகிறது ஹரிகரன் மன்னிக்கவும் பரம பிதா , ஆக்கபூர்வமான கருத்துடன் மீண்டும் வரவும்

 1. 9:16 AM  
  Anonymous said...

  அடுத்தது அவிங்க "ஹிந்தி படிக்க மறுக்கும் சூத்திர கம்மனாட்டிகள்" னு ஒரு பதிவு போடுவாய்ங்க. ரெண்டு கூட்டமும் சாக்கடையில் விழுந்து புரளுங்க. போய் வேலைய பாருங்கயா. பொளப்பத்த அம்பட்டன் பூனய புடிச்சு செரச்ச மாதிரி, இப்ப நாட்ல இதான் மிக முக்கிய பிரச்சனயா?

 1. Good Post..!!

 1. //உழைக்கும் மக்களுக்கோ அது வாழ்விலோர் அங்கம் . பிறப்பும் இறப்பும் உழைப்பும் இசையுடனே கலந்து நிற்கும் பாட்டாளி மீனவர்கள் துடுப்புவலிக்கும் ஏலோலோ ஐலசா வில் மொழியையும் பொருளையும் தேட வேண்டிய அவசியமில்லை. //


  கலை என்றைக்குமே உழைப்பின் ஊடாகத்தான் பண்பட்டு மேன்மையடைகிறது, அடுத்த கட்ட வளர்ச்சியடைகிறது. ஏனெனில், ஒரு சமூகத்தின் உற்பத்தி முறைதான் அதன் கலாச்சாரம் பண்பாடு முதலான அனைத்து கருத்தியல்களையும் தீர்மாணீக்கிறது. இதை ஜார்ஜ் தாம்சனின் 'மனித சமூக சாரம்' என்கிற ஒரு அருமையான புத்தகத்தில் பல அறிவியல் பரிசோதனைகளின் அடிப்படையில் விவரித்திருப்பார்.

  கர்நாடக் சங்கீதம் கூட உழைக்கும் மக்களிடம் இருந்து திருடி டாகுமெண்ட் செய்ததுதான். அதனால்தான் உழைக்கும் மக்களின் இசையை அடிப்படையாக கொண்டு இளையராஜாவின் இசை இன்றைய இசையாக இருப்பதும். இவர்களீன் இசை அதிகபட்சம் ஆனந்த விகடனின் அட்டைப் படத்தை தாண்டததும் நடக்கிறது.

  கலாச்சார ஆக்கிரமிப்பு என்பதுதான் அடிமைத்தனத்தின் முதல் நிலை. அதை தட்டிக் கேட்பது வீண் வேலை என்று சொல்வது பொறுப்பற்றது.

  கட்டுரைக்கு எனது பாராட்டுக்கள். இந்த கட்டுரை தமிழ் மொழியில் பாடவில்லை என்ற அடிப்படையில் மட்டுமே கர்நாடக் சங்கீதத்தின் மோசடியை கண்டிக்கிறது. ஆனால், அதன் வரலாறே மோசடியானது என்பதும், தமிழ் மொழியில் பாடினால் கூட அந்த கலாச்சாரம் என்பது மக்கள் விரோதமானது என்பதையும் கட்டுரை கடுமையாக சுட்ட தவறுகிறது,

  அந்த அம்சத்தையும் தெளிவாக சுட்டியிருந்தால் கட்டுரை இன்னும் சிற்ப்பானதாக இருந்திருக்கும்.

  உங்களது மொழி நடை நல்ல நக்கல் தொனியில் இயல்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  அசுரன்

 1. 12:49 PM  
  Anonymous said...

  // ஹரிகரன் மன்னிக்கவும் பரம பிதா//

  ஓ...அப்படிப் போகுதா கத??? ம்ம்ம் செரிச் செரி..

 1. //தமிழில் பாடவேண்டும் என்ற கருத்தை நான் ஆதரிக்கிறேன். அதே சமயம், எதை எடுத்தாலும் அவன் பார்ப்பான், நான் பீ அள்பவன் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதால் யாருக்கும் எந்த பயனுமில்லை//

  பிரச்னை இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்வீர்கள்.ஆனால் அதைப்பற்றி பேசினால் மட்டும் 'என்ன இப்படி பேசறேள்..?' என்று ஒதுங்குவீர்கள்.என்னங்கானும் உங்கள் சமூக கண்ணோட்டம்..?

 1. //" இந்த ஆனாக்கு ஆனா போடுற வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம் ' ஒழுங்க வேற தலைப்பு எழுதிட்டு வா"// இதை சொன்னது பெரியார்.அதை எழுதிய நீரே பானாவுக்கு பானா(பாட மறுக்கும் பாப்பாத்திகள்) போட்டு தலைப்பு வச்சு...அப்புறம் தோழி ஆப்பு வச்சவுடனே தலைப்பை மாத்தி.. என்னங்கானும் நடக்குது இங்குன...?

  ஆழியூரான்,(பட்டிக்காட்டான்)

 1. 4:09 PM  
  Anonymous said...

  your interest seems to be not in improving tamil in music but in criticising a definite caste which is not a healthy thing to do. You cannot bring developments based on hatred.

 1. 4:38 PM  
  டவுன்பஸ்ஸில் ஒரு வெத்துவேட்டு said...

  தல,

  அப்பப்போ சொம்புடன் கோலான்னு ஒருத்தர் பதுவு போடராரே அத்த படிச்சீங்களா

 1. //
  அதான் சொல்லுறேன்ல கேள்விகேட்ட பாரதியாரையே வெளியே தள்ளி கதவை சாத்துன கூட்டம் அது.
  //

  அப்ப கேள்வி கேட்டு பிரபலமாவது தான் உங்கள் குறிக்கோள், தமிழ் இசைக்கு உந்துதல் கொடுக்க எழுதிய பதிவு அல்ல என்பதை இப்படி ஓப்பனாக ஒத்துக் கொண்டதற்கு பாரட்டுக்கள்.

  இனி பேச ஒன்றுமில்லை.

 1. ushoo. very abstracted statements and i like the narration very much. doubt about ur argument and i tightly agree to ur point tamil is pushed down in terms of carnatic space.
  If you want to take it in a positivie fragrance then proceed.

  first ur post conveys split personality mood
  1. against tamil n
  2. against brahims.

  Point#2 got u so much of anon comments and u tempted to short cut them by saying point 1.

  well i am not going to debate agains Point#2 - as i am neither a B nor a SC.. as i all feel there is not caste thats it. lets forget that.

  coming to the Point 1. I tightly agree to ur point and fire ur trying to create. we need to have such medium, fire to promote our grt8 language.

  there is a insane part of it is. right from Trinity of music who born n brought in tamil nadu got their metric ceritification in telugu and wrote all krithis in telugu.
  Further present educational process of carnatic music is through such grt8 ( of-course undoubts its grt8 ) krithis. students of that without getting that feel mucking around the same and try to pod-cast the same across the medium.

  this crew extrapolated and driving the similar fashion till now. but if u could closely watch there are more singers who tempted to practice tamil songs and devote the same to the audience.

  Believe me whom ever( any human being ) attending to the kutchers only 30% of the people knows carnatic and 10% fully concentrating rest are all bandha people and just illtreating the music.

  by all means its a environment context rather than humanely act
  and here are the top rules to change the dynamics.
  1. request for most popular krithis
  2. singers need to put extra effort to learn new tamil songs and re-produce
  3. need to come up with differnet protocal to estabilsh tamil-songs
  4. singers are money minded ( to an extend )

 1. 10:17 AM  
  செண்டுக்கறி said...

  அறிவை விரிவு செய் அகண்டமாக்கு

  விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை.

 1. 5:34 AM  
  Anonymous said...

  //சில எருமைமாடுகள் உரசி அரிப்பை போக்கி கொள்ள இது தகுந்த இடமல்ல என்று தெரிவித்துக்கொள்கிறேன்.//
  அப்படீன்னு சொல்லிட்டு பதிவு முழுக்க அரிப்பை சொறிஞ்சிருக்கியேடா பன்னாடை

 1. 8:02 AM  
  அன்புடன் தமிழன் said...

  வரனை,

  இந்த பதிவை படித்திருக்கிறீர்களா? உங்கள் கருத்து என்ன?

  அன்புடன் தமிழன்

 1. 8:22 AM  
  Anonymous said...

  தலைவா பூனைக்கு உடம்புபூரா ரோமம், பாப்பாத்திகளுக்கு உடம்புபூரா கொழுப்பு. அதான்னோ என்ன துக்கடா படறோம்மெல்லோ:-))

 1. :)))

 1. 11:00 PM  
  Anonymous said...

  Good Points. I hope in future those singers would sing in Tamil.

 1. 10:19 AM  
  Anonymous said...

  aachi 94