Thursday, November 30, 2006

@ 12:56 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்

சோதனைப் பதிவு

Tuesday, November 28, 2006

@ 3:35 PM எழுதியவர்: வரவனையான் 94 மறுமொழிகள்


அது ஒரு பத்திரிக்கை அலுவலகம், அவசர அவசரமாக அடுத்த நாளைக்கான தலையங்கத்தையும் , துணை தலையங்கத்தையும் அதன் ஆசிரியரும் துணை ஆசிரியரும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். துணை ஆசிரியர் தனது கட்டுரையை ஆசிரியரிடம் காட்டுகிறார். அவர் படித்துவிட்டு நல்ல எழுதிருக்கே அது மாதிரி நல்ல தலைப்பை எழுதிட்டு வா... இதையே தலையங்கமா போட்டுரலாம் என சொல்ல து.ஆசிரியர் மகிழ்ச்சியுடன் தலைப்பு எழுதி காட்டுகிறார். ஆசிரியர் அவரை அருகே அழைத்து ஒரு சின்ன கொட்டு ஒன்றை தலையில் இட்டு " இந்த ஆனாக்கு ஆனா போடுற வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம் ' ஒழுங்க வேற தலைப்பு எழுதிட்டு வா" என்கிறார்.

துணை ஆசிரியர் மாற்றி எழுதிய தலைப்பை பார்த்து 'சபாஷ்' என்ற படி அச்சேற்ற அனுப்புகிறார் அந்த கட்டுரையை. அக்கட்டுரைக்கு முதலில் வைத்த தலைப்பு " அண்ணாமலைக்கே அரோகரா " ஆசிரியர் மெச்சிய புதுதலைப்பு " தீட்டாயிடுத்து ". ஆசிரியர் பெரியார், துணை ஆசிரியர் கலைஞர் , நாளேடு குடியரசு வருடம் 1943

தண்டபாணி தேசிகர் தியாகய்யர் விழாவில் தமிழில் பாடியதால் அந்த மேடையை கழுவி விட்டு தீட்டு கழித்த பார்ப்புகளை கண்டித்து கலைஞர் எழுதிய அந்த கட்டுரை தமிழிசையின் தேவையையும் அதன் உரிமை ஆதிக்க வெறியோடு மறுக்கபடுவதையும் இந்த மண்ணின் இசையை கழிசடை போல் கருதுவதையும் வெளிச்சம் போட்டு காட்டியது.

"இசைக்கு மொழியேது ? எதற்கு ? " இப்படி ஒரு கேள்வி அடிக்கடி எழுப்பப்படும், இந்த டிசம்பரிலும் எழும்.இந்த கேள்விதான் பாரதிக்கெதிராய், பாரதிதாசனுக்கெதிராய் மானுடம் அழகு பெற விரும்பும் அனைவருக்கும் எதிராயும் எழுப்பப்படுகிறது. மொழியற்ற ஒரு இசைக்கு சரசரக்கும் பட்டு புடவையும் , ஜிமிக்கியும் வாய்கொள்ளாச்சிரிப்பும் போண்டா சாப்பிட மாமிகளும் எதற்கு ? ஒரு நல்ல கழுதை போதாதா?

"சரி பாடித்தான் தொலையறதுகள்" நமக்கென்ன என்று போகலாம் என்று பார்த்தால் பத்தாதற்கு பத்திரிக்கைகளில் பேட்டி வேறு "அதான் துக்கடா பாடறமொன்னோ அப்புறம் என்ன" என்று குந்தித் தின்ற கொழுப்பை குதப்பி துப்பும் திமிரோடு.

சில ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் ஒருத்தர் வயலின் இசைத்தே மழைவரச்செய்கிறேன் என்று சவால் விட்டு ஏரிக்குள் சென்றமர்ந்தார். மழையற்ற முன்றாம் உலக நடுகள் இவரே மீட்பர் என ஆச்சரியத்தில் ஆழ்ந்த படி நடக்கப்போகும் அதிசயத்தை காண காத்திருந்தன. வந்தது மழையல்ல கைவலி.தன் இசைத்திறமையை சல்பர் டைஆக்ஸடுடன் ஒப்பிட்டுக்கொண்ட அவரை கண்டு நாம் பரிதாபம்தான் பட முடிகிறது.

தான் சேன் தீபமேற்றினான் என்பது அவன் இசைத்திறமை குறித்து மிகைத்து சொல்லப்பட்ட வார்த்தை அவ்வளவே. நானும் மழை வரவைப்பேன் என்பது அவருக்கு வேதியல் குறித்து வகுப்பெடுக்கபட வேண்டிய அவசியத்தை மட்டுமே நமக்கு காட்டுகிறது.

இசையென்பது சிலருக்கு பொழுதழிக்கும் வேலை. உழைக்கும் மக்களுக்கோ அது வாழ்விலோர் அங்கம் . பிறப்பும் இறப்பும் உழைப்பும் இசையுடனே கலந்து நிற்கும் பாட்டாளி மீனவர்கள் துடுப்புவலிக்கும் ஏலோலோ ஐலசா வில் மொழியையும் பொருளையும் தேட வேண்டிய அவசியமில்லை. ஆனால் " கிருஷ்னா நு பாரோ" வின் அர்த்தம் எத்தனை மாமிகளுக்கு தெரியும் எத்தனை சிறுவர் சிறுமிகளுக்கு அவை விளக்கத்துடன் சொல்லிக்கொடுக்கப்படுகிறது.
"உன் கைகள் பட என் தனங்கள் ஏங்குகிறது" இது தெலுங்கு கீர்த்தனையில் வரும் வரி , மொழிதெரியாச்சிறுமிகளிடம் ( அவர்கள் யாராக இருந்தாலும்) அர்த்தம் விளங்காமல் சொல்லிக்கொடுப்பதும் அவர்களை சபையில் பாடச்சொல்வதும் ஒரு சமூக குற்றமில்லையா. தமிழில் பாடுவதற்கு என்ன பிரச்சினை ஜெயசிறீ யும் நித்தியசிறீயும் சினிமாவில் மட்டும்தான் தமிழில் ( ! ) பாடுவேன் என்பது திமிரில்லாமல் வேறு என்ன. பிருந்தாவனம் எனும் ஆல்பம் வெளியிட மட்டும் பாரதியின் பாட்டுத்தேவை ஆனால் சங்கீத விழாக்களில் 90 ஆண்டுக்கு முன் பாரதி கேட்ட தமிழ்ப்பாட்டுக்கு மட்டும் இன்னும் இடமில்லை.அப்படியன்ன கர்நாடக சங்கீதம் உய்ர்ந்தது, தமிழிசையை விட எவ்விதத்தில் உயர்ந்தது. எது தொன்மையும் பண்மையும் கொண்டது. அடுத்த தொடர்ச்சியில் பார்ப்போம்.

(தோழி ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தலைப்பை மாற்றியுள்ளேன் )

@ 2:24 PM எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்


முன்பொரு நாள் ஸ்பார்டகஸுவின் படையிலிருந்தேன்
இருவருக்குகொடுத்த இறைச்சி துண்டை - ஒருவனே உண்டேன்
தண்டித்தான் ; பின் கொல்லப்பட்டான் நானும்தான்
பின் ஏசுவுக்கு பரிந்து பேசி, கல்லால்
அடித்துக்கொன்றார்கள் , பாண்டியமன்னனுக்கு
எதிராய் கலகம் செய்தவன் எனச்சொல்லி
கழுவிலேற்றினர் ; ஒரு யூதனை காப்பாற்றப்போய்
500 யூதர்களுடன் புதைக்கப்பட்டேன் ஜேர்மனியில்
நல்ல நிலாக்காலத்தில் வட அமெரிக்க பாடலொன்றை
பாடி உளவாளி பட்டத்துடன் சுட்டுவீசப்பட்டேன்
கியூபாவில் ; உத்தமபாளையம் தாபாலபீஸ் மீது
தமிழ் வாழ்க எனச்சொல்லி தார் பூசும் போது
சுடுவேன் என்ற காவலன் முன் சட்டை கிழித்து காட்டி
செத்துப்போனேன் , வயது அப்போது 14
வெள்ளைக்காரனின் வண்டி மீது கல்லெறிந்தேன்
நாயைப்போல் சுட்டு போட்டனர் ,ஆப்பிரிக்க கிழக்கில்
Primary attack துவங்கினால் முதல் வீரமரணம்
எனக்குத்தான் தெரிந்தும் பாயிண்டில்
நிற்கிறேன் , யுத்த நிறுத்தகால முடிவுக்காக
நாளை இவனை எதிர்த்தும் களத்தில் நிற்பேன்
இவன் ஆதிக்கவாதியெனப்பட்டால்
என் பெயர் பெரியார்

Thursday, November 23, 2006

@ 2:34 PM எழுதியவர்: வரவனையான் 11 மறுமொழிகள்

ஓட்டல் அருணா- வில் நடைபெற்ற "திடீர்" சந்திப்பு வரவு செலவு அறிக்கை :

கலந்து கொண்டோர் - 10 நபர்கள்
வேடிக்கைப்பார்த்தோர் - 2 நபர்கள்

ஹோட்டல் பில் - ரூபாய் 2649.00

ஃபீடிங் நிப்பிள் (மாம்ஸுக்கு ) - ரூபாய் 5.00

வாகன நிறுத்த காவலாளிக்கு இனாம் - ரூபாய் 10.00

ஆக மொத்தம் - ரூபாய் 2664.00

மொய் எழுதியோர் :-

முத்து (தமிழினி) - ரூபாய் 2649.00

ஓகை - ரூபாய் 500.00
தங்கவேல் - ரூபாய் 500.00
வரவனையான் - ரூபாய் 15.00

மொத்த வரவு ரூபாய் 2664.00

செலவு போக மீதி கல்லா இருப்பு ரூபாய் 1000.00

மறுநாளும் தொடர்ந்த பார்ட்டியினால் கலாய்க்கப்ட்டோர், முத்து(தமிழினி) , ஓகை, யெஸ்.பாலபாரதி உள்ளிட்டோர்.

நீதி : கல்லாவில் இருப்புத்தொகை வைக்க கூடாது.