Wednesday, October 25, 2006

@ 6:57 PM எழுதியவர்: வரவனையான்

தீவாளிக்கு அடிச்ச கூத்த எழுதலாம்னு உக்காந்தா போன் போட்டு போட்டோ என்னாச்சு ! வீடியோ என்னாச்சு'னு உசுர வாங்குன அன்பு வலைபதிவர்களே (வல்லினம் மிகவில்லைன்னு யாரும் அடிக்கவராதிங்கப்பா) ஒரு வழியா ஃப்லோக்குல ஏத்துதறுக்குள்ள நான் பட்டப்பாடு இருக்கே "டவுசர் கிழிஞ்சுருச்சு "அது இருக்கட்டும், இப்போ படம் போட்டாச்சு வீடியோவையும் தரவேற்றியாச்சு அதல்லாம் சரி இப்போ அந்த வீடியோவுல ஆடியோ கேக்குதா நான் வேல பார்த்த கணீணி'ல சன்டிவி வருது,சூரியன் FM எடுக்கலை. அதாங்க ஒலி வரவில்லை. இது என் நாதஸ்வரத்துல மட்டும்தானா இல்ல எல்லா நாதஸ்வரத்துலையுமான்னு கொஞ்சம் சொல்லுங்கப்ப

ரெடி ஜூட்......

இந்த பதிவுல கமென்ட் மட்டுமே, கலாய்த்தல் விரைவில். உள்ளார ரண்டி....


Photobucket - Video and Image Hosting

8 மணி பாஸஞ்சர பிடிக்க 7 மணிக்கே வந்தா அது 2மணி நேரம் லேட்டு'னு கேள்விப்பட்டு, பே'ன்னு உங்க்காந்து இருப்போமே , அது மாதிரி எல்லோரும் உக்காந்துருக்கிற இடம் அமெரிக்கன் காலேஜ் சிற்றுண்டிச்சாலையின் அருகே.

மருதைக்குள்ளையே 20 வருசம் இருந்தாலும் என் காலடி படாத புண்ணியபூமி.Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

இந்த ரயில்வேயே இப்படித்தான் என்றபடி கடைசி பஸ் பிடிக்க கிளம்புமும் கூட்டம்போல் கலைந்து கிளம்புவது வலைப்பதிவர் கூட்டம் முடிந்து கூட்டம் முடிந்து. ( அந்த அவசரத்திலும் பயன்படுத்தாத பெப்சி கிளாசை சேகரிக்கும் தருமியும் முத்து(தமிழினி)யும் ! எல்லாம் உடனே அப்படி கணக்கு :))))போட்டுராதிக எல்லாம் சூழலியல் நோக்கில்தான் )

தெளிவான சிந்தனை, இளமையான முற்போக்கு எண்ணம் கொண்ட தோழர் . முத்து(தமிழினி)யுடன் ( பழனிச்சாமியின் மொழியில் "கேரளாக்காரர்" (ஸ்பெசல் காரணம்- பின்னர் விளக்கப்படும் )


தலைக்கும் மீசைக்கு கருஞ்சாந்து இட்டு காலையில் காலையில் கோரிப்பாளையம் பேருந்து நிறுத்ததில் வந்து நின்றால், காலேஜ் பசங்களுக்கு இவர் எதிரியாகி போவார். பின்ன... லேடி டோக் காலேஜ்,மீனாட்சி காலேஜ் மெடிக்கல் காலேஜுன்னு கிராஸாகிற பொண்ணுங்களுக்கு இவர்தான் "ரெமொ". ( வாங்கிக்கொடுத்த ரெண்டு வில்ஸ்க்கு இவ்வளவுதான் பில்டப் குடுக்க முடியும் - வெரி ஸாரி :)))))) )

இவரின் நட்பு என்பது ஒரு இளைஞனின் அனுகுமுறையுடன் இருப்பது இன்னும் சிறப்பு.

பேராசிரியர். நண்பர் தருமியுடன் அடியேன் வரவனையான்


எனக்கு இடதில் சகோதரர் ராம், அவருக்கு இடதில் ஞானவெட்டியான் , அன்று அய்யா ஞானவெட்டியானை அதிகம் கலாய்த்தது நாந்தான் , ஆனால் அவரின் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன் என்கிற அதிர்ச்சியான செய்தியை அவருக்கு சொல்லவில்லை
தருமி நடுவிலிருக்க குறுந்தாடியுடன் வலதுப்பக்கம் முனைவர் சைலஸ் ( ப்ரொபோசர் ரமணா (விஜயகாந்து) அல்லது தாகூர் ( சிரஞ்சிவி) படங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருப்பார் போல் தெரிகிறது - இவருக்கும் தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு, விட்டால் அப்சலை கதற கதற கழுவில் ஏத்திவிடுவார் போலிருந்தது :))) ) இடப்பக்கம் என் தோழன் கவிஞன்.சுகுணாதிவாகர்.

"வந்து நின்னது குத்தமாடா" என்று சிந்திக்கிறாரோ என்னவோ தோழி.வித்யா (லிவிங்ஸ்மைல்)இனிமேல் ஆன்மீக பதிவு போட்டால் அவ்வளவுதான் ஆட்டோ வரும் என்று பதிவர் ஜி.ராகவனை மிரட்டுகிறார் வித்யாநம்ம வரவனையான் மிக்ஸிங்கு கரெக்ட்டா இருக்கும் நம்பி அடிங்க என்கிறார் ராம் பதிவர்.ராஜ்வனஜிடம்,

பக்கதுல ஒருத்தர் " ஒன்ஸ் மோர் ரவுண்டு போலாம முத்து" என்கிறார் அது ஞானவெட்டியான்Photobucket - Video and Image Hosting

பதிவர் வழக்கறிஞர். பிரபு ராஜதுரை ஒரு ரவுண்டுதான் அடிச்சாலும் நொம்ப நேரம் பேசினார்.

அவ்வளவும் பயனுள்ளதாய் இருந்ததுதான் சிறப்பே


ரவுண்டு, மிக்சிங்கு எல்லாம் ஒன்லி பவுண்டோ என்பதுதான் கொஞ்சம் வருத்தற்குரிய விஷயம் :(((

ஆனால் அதுக்கும் தீபாவளி பலகாரம் சைடு டிஸ் சப்ளை செய்த பதிவர் மகேஸ் என் கேமிராவில் சிக்காததுதான் வருத்தமே.இந்தளவிற்கு விரைவாய் படங்களை அப்லோட் செய்ய உதவிய பொன்ஸ்'க்கு நன்றி சொல்லாமல் இருக்கமுடியாது. கிட்டதட்ட மூன்று மணி நேரம் ஆன்லைனில் இருந்து உதவினார்.


13 மறுமொழிகள்:

 1. 11:58 PM  
  Anonymous said...

  Wowww, lucky people!
  Hope you had a very good time :)
  Hope to see you all when i visit india :)

 1. தலை,

  Bovonto Bottle, க்ளாஸ் எல்லாம் படத்துலே நல்லா தெரியுது. இதெல்லாம் சும்மா சைடு தானே? மெயின் மேட்டர் எங்கே? பாக்கெட்டுக்குள்ள ஒளிச்சு வெச்சுருக்கீங்களா?

 1. //மெயின் மேட்டர் எங்கே? பாக்கெட்டுக்குள்ள ஒளிச்சு வெச்சுருக்கீங்களா?//

  யோவ் லக்கி,

  ஏன்யா எப்பப் பாத்தாலும் 'தண்ணி' நெனப்பாவே கெடந்து சாகிறே?

  ரொம்ப அலையாதே, ஒடம்பு கெட்டுப் போவும்.

 1. மதுரை, சந்திப்பின்.

  ப்கைப்படங்கள், வீடியோ ஓக்கே.

  அங்கே, நடந்த விவாதங்களையும், பகிர்ந்திடலாமே. . . . . .

  (என்ன நான் சொல்றது).

 1. வரவணையானா கொக்கா?
  ச்சும்மா ஜோரா படங்காட்ரார்

 1. 2:21 PM  
  Anonymous said...

  Sound is coming. No problem :)

 1. படங்களும் வீடியோவும் நன்றாக இருந்தது, ஞானவெட்டியான் அய்யா குரல் கணீரென்றிருந்தது...

 1. good..expecting varavanaiyan special comments post

 1. //வாங்கிக்கொடுத்த ரெண்டு வில்ஸ்க்கு இவ்வளவுதான் பில்டப் குடுக்க முடியும் ..//

  அடடா, மொதல்லே தெரிஞ்சிருந்தா ரெண்டு என்ன, ரெண்டு கார்ட்டனே வாங்கித் தந்திருப்பேனே...சான்ஸை விட்டுட்டேன்...so sad! :(

 1. அன்பு வரவனையான்,

  தங்களுக்கு மிகவும் வேண்டியவர்களை மட்டும் FLASH போட்டுத் தெளிவாகப் படமெடுத்துவிட்டு, என்னை மட்டும் இருட்டில் படமெடுத்துப் படங்காட்டுவதை நான் வன்மையாகக் கண்டிக்க நினைத்தேன்.
  ம்ம்..ம்ம்..
  நம்ம ஊர் தம்பியாயிற்றேவென ஒருபக்கம் நினைவு வந்ததால் விட்டுவிட்டேன்.

 1. ஞானவெட்டியான் உங்கள் ஊர்காரர் என்பதால் அவருக்கு மட்டும், அவரை மட்டும் வீடியோவா?

  ம்ம்..ம்..ம்ம்

 1. நண்பர்களே !

  நானும் மதுரைதான் இந்த சந்திப்பு மேட்டர் தெரியாம போச்சே .
  எப்போ நடந்தது இது

  தியாகு

 1. முதற் சங்கம் இடைசங்கம் கடைசங்கம் ...தமிழ் வளர்த்த மதுரையிலே.... பதிவர் சந்திப்பு ஆகா... அருமை... இது தான் முதல் பதிவர்களின் சந்திப்பு நடந்திருந்தால் வீடியோ இணைப்பாக வருகுது என்று நினைக்கிறன்....வாழ்த்துக்கள்...பாராட்டுக்கள்