Wednesday, October 04, 2006

@ 6:24 PM எழுதியவர்: வரவனையான்


ஒடுகிற ஆளைப்பார்த்து " பிடி, பிடி " என்றவாறே ஒரு கூட்டம் ஓடியது.
கடைசியில் அரங்கின் சுற்றுசுவர் அருகே அவரை பிடித்து உள்ளே இழுத்து வந்தனர்.

அருகில் போய் பார்த்தால் "மாம்ஸ்" .

என்ன மாம்ஸ் டோண்டுவ பார்த்து இந்த ஓட்டம் ஓடுற என்றேன்.

அப்பவும் கபடி கபடி சொல்லுற மாதிரி அவரும் "பிடி, பிடி"ன்னு சொல்லிகிட்டு இருந்தாரு .

மாம்ஸ் ஒடுனது நீங்க, நீங்களே பிடி, பிடின்னு சொல்லிகிட்டு இருந்தா எப்படி?ன்னு ஒரு செம கேள்வி கேட்டேன் ( விதி பட வாட்ச்மேன் ஸ்டைலில்).

அப்பவும் அவரு வாசல பாத்து "பிடி, பிடின்னு" சொல்லிகிட்டு இருந்தாரு. சரி அங்க திரும்பிபாத்தா டோண்டு குரூப்புக்கு பின்னால பொன்ஸ் தலைமைல பா.க.ச உறுப்பினர்கள் நின்று கொண்டிருந்தனர். போதா குறைக்கு மதுரை மாவட்ட செயலாளர் லீவிங் ஸ்மைல் வேறு பா.க.சங்க கொடியுடன் வந்திருந்தார்.

இப்ப புரியுதுங்க அவரு ஏன் "பிடி, பிடி" சொல்லிட்டு இருந்தாருன்னு என்றார் நா.கணேசன் . என்னானு சொல்லுப்பா" எனக்கேட்கவும் சொன்னார் .

" தலைவா, பிடி என்றால் பிடின்னு மட்டும் பொருள் இல்லை. தமிழ்ல பிடி என்றால் பெண்யானை என்றும் ஒரு பொருள் உண்டு" இப்போ வாசலை பாருங்க, இவரு ஓடினதுக்கும் ,பொலம்புனதுக்கும் அர்த்தம் விளங்கும்'ன்னாரு.

ஆக அப்ப பெண்யானை படம் வச்சுருக்கிறது பொன்ஸ்தான் ,சென்னை பாக.ச தலைவி. அதான் புள்ள பயந்திருக்கு...

மாம்ஸ் அது பா.க.ச தான். பா.வெ.ச ( பாலாவை வெளுப்போர் சங்கம்) இல்ல பயப்பிடாதேள்.

என்றபடி கேண்டீன் பக்கம் போனால். போண்டா வியாபாரம் தூள் பறக்குது, " நீங்க உடுப்பி ஹோட்டலுல போண்டா போட்டுகிட்டு இருந்தவரு தானே" என்று கேண்டீன் சமையல்காரரிடம் நலம் விசாரித்து கொண்டு இருந்தது டோண்டு டீம். நாமளும் ஒரு போண்டா சாப்பிடுவோமே , அப்படி என்னாதான் இருக்கு இதில அப்படின்னு ஒரு வாய் பிச்சு வாய்க்குள்ள போடப்போனேன். ஒரு கை தடுத்தது.

யாருடான்னு பாத்தா தல, சொல்லுங்க முத்து(தமிழினி) என்றேன் ,

இந்த கொடுமைய வந்து பாருங்க என்றார்.

என்ன மாம்ஸ் இன்னொரு தடவை ஓடியிருப்பார். அவ்வளவுதானே என்றபடி வாசலுக்கு போனா " கமலஹாசன் பட்டம் பெறப்போகும்" வலைப்பூ கமலஹாசன் லக்கியார் அவர்களே வருக வருக அப்படின்னு ஆளுயர ஹோல்டிங்ஸ் வச்சுட்டு போயிருக்காய்ங்க....

வழக்கம் போல் "அதர் ஆப்சன் இயக்கம்" இந்த சம்பவத்துக்கும் பொறுப்பேற்று கொள்வதாக துண்டறிக்கைகளை எறிந்து விட்டு போயிருந்தது.

என்னங்க இது உட்டா இன்னைக்கே கட்சி ஆரம்பிச்சுருவாய்ங்க போல தெரியுது, வழக்கமா ஓட்டு போடுறதுதான் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு சொல்லுவாய்ங்க. இவைங்க கட்சில உறுப்பினர இருந்தாக்கூட யாருக்கும் தெரியக்கூடாதுன்னு ஏதும் விதி வச்சுருப்பாய்ங்களோ என்றார் முத்து கவலையுடன்.

சரிங்க , நீங்க இங்கையே இருங்க நான், லக்கியை தேடி பிடிச்சு கூட்டிட்டு வாரேன் அவரையே கேட்போம் என்று முத்து(தமிழினி) கிளம்பி போனார்.

திரும்பி வருகையில் லக்கியிடம் வரவனை, மாம்ஸ் உள்ளிட்ட பார்ட்டிகள் எகிறி கொண்டிருந்தனர். முத்து வந்து விலக்கி விட்டார். விடுங்கப்பா நான் தான் கேக்குறேன்னு சொன்னேன்ல அதுக்குள்ள ஏன் தகறாறு பண்ணுறிங்க என்றார் பொறுமையாக.அதுக்கு மாம்ஸ் சொன்னார் " தகராறுலாம் பண்ணலைங்க லக்கி எங்க பிரதர் மாதிரி, என்ற மாம்ஸை வரவனை இடைமறித்து "இல்லை லக்கி எனக்கு சகோதரர் மாதிரி அப்படின்ன மாம்ஸ்க்கு மாப்ளை மாதிரி " என்றார்.

லக்கி கண்கலங்குவதை பார்த்த முத்து(தமிழினி), தானும் நெகிழ்ந்து "லக்கி பாருங்க நம்ம எதோ மன்சுல தோனுனத எழுத வந்தோம், எப்படி உறவுகள் கிடச்சிருக்கு பார்த்திங்களா" என்றார்.

லக்கி டென்சனாகி " அதுக்கில்லைங்க நான் லீவிங் ஸ்மைல பற்றி ஒரு பதிவு போட்டேன் அதுக்கு இங்க வந்து ரெண்டு பேரும் மிரட்டுராங்க அதான் என்றார். முத்து திரும்பி முறைக்க ரெண்டு பேரும் வூடு ஜுட்.....

விழா துவங்கி விட்டதால் எல்லோரும் இந்நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கு கிளம்பலாம் என்று நினைக்கிறேன்.

8 மறுமொழிகள்:

 1. 10:09 AM  
  Anonymous said...

  //லக்கி டென்சனாகி " அதுக்கில்லைங்க நான் லீவிங் ஸ்மைல பற்றி ஒரு பதிவு போட்டேன் அதுக்கு இங்க வந்து ரெண்டு பேரும் மிரட்டுராங்க அதான் என்றார். முத்து திரும்பி முறைக்க ரெண்டு பேரும் வூடு ஜுட்.....//

  living style kolaiveri padai ivangathaana????

 1. //இவைங்க கட்சில உறுப்பினர இருந்தாக்கூட யாருக்கும் தெரியக்கூடாதுன்னு ஏதும் விதி வச்சுருப்பாய்ங்களோ //
  அட, இருந்துட்டுப் போகட்டுமேங்க.. அதான் அனானிகள் சங்கம்னே பேர் வச்சிருக்காங்க இல்ல :))

  //ஆக அப்ப பெண்யானை படம் வச்சுருக்கிறது பொன்ஸ்தான்//
  ஹலோ.. யானையைத் தான் இப்போ விடுதலை பண்ணிட்டம்ல!

 1. //ஆக அப்ப பெண்யானை படம் வச்சுருக்கிறது பொன்ஸ்தான்//
  ஹலோ.. யானையைத் தான் இப்போ விடுதலை பண்ணிட்டம்ல!


  அது இந்த மாசம் !

  நான் சொல்லுறது போன மாசம்

 1. பா.க.ச தென் மண்டல தளபதி வரவனை வாழ்க !

 1. //லக்கி கண்கலங்குவதை பார்த்த முத்து(தமிழினி), தானும் நெகிழ்ந்து "லக்கி பாருங்க நம்ம எதோ மன்சுல தோனுனத எழுத வந்தோம், எப்படி உறவுகள் கிடச்சிருக்கு பார்த்திங்களா" என்றார்//

  வரவணை,

  என்னை வைச்சி காமெடி கீமடி எதுவும் பண்ணலையே?:))

 1. வணக்கம்,

  எனது பெயர் லிவிங் ஸ்மைல்... புரியுதா, லி.. வி... ங்... ஸ்மைல்...

  ஆனால் பதிவில் லீவிங் ஸ்மைல் என நெடில் சேர்க்கப் பட்டிருப்பதைக் காண்கிறேன்.. எழுத்துப் பிழைதானா என தெரிவிக்கவும்..

  என்னய வச்சி காமிடி கீமிடி பண்ணலயா (லீவிங் ஸ்மைல் என போட்டதுக்கு மட்டும்)

  இங்ஙனம்,

  பா.கா.ச.,
  மதுரை கிளை -02,
  மதுரை.

 1. ஏங்க ஸ்மைலி, அவர் தான் குறிலை நெடிலாக்கிட்டாரு, அதுக்காக நீங்க இப்படி கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், நெடிலுக்கு நெடில்னு பா.க.சவின் பெயரில் கை வைத்ததை ச்சே, கால் வைத்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

 1. // அதுக்காக நீங்க இப்படி கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், நெடிலுக்கு நெடில்னு பா.க.சவின் பெயரில் கை வைத்ததை ச்சே, கால் வைத்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்! //

  சரி சரி சைலண்டா வுடுங்க... கட்சி உள்பூசல், மெழுகல் எல்லாம் இப்டி பப்ளிக்கா போட்டு ஒடைக்காதிங்க...