Sunday, October 29, 2006

@ 10:20 PM எழுதியவர்: வரவனையான் 16 மறுமொழிகள்



மிகுந்த ஆவலாய் எதிர்பாத்துகிட்டு இருந்ததை வாங்கிட்டு வந்து கொண்டிருப்பதாக மியாமி ஏர்போர்ட்டிலிருந்து மயில் போன் செய்தவுடன் மனசு பரபரப்பாகி அதை எப்படி கொண்டாடுவது என யோசிப்பதிலேயே பொழப்பு பூராம் கெட்டு போச்சு. ஒரு ரெண்டுநாளு கழிச்சு மும்பை வந்திட்டேன் பங்காளின்னு திரும்பவும் போனு." ஏலே இவேன் ஒருத்தேன் ரயிலு கணக்க அங்க வந்துட்டேன், இங்க வந்துட்டேனுகிட்டு" வாரவேன் ஊருக்கு வந்துட்டு கூப்பிடவேண்டியதுதானே. அத விட்டுபோட்டு சும்ம இசுமைய கூட்றாய்ங்க " அப்படின்னு சொல்லி போன வச்சுட்டேன்.

அடுத்த நாளு மதுர வந்துட்டு கூப்பிட்டான் போயி நலம் விசாரிச்சுட்டு அப்படியே நான் சொல்லிவிட்டு அவன் வாங்கிட்டு வந்த மேட்டரை வாங்கிட்டு கெளம்பும்போது டேய் இந்த இதயும் எடுத்துட்டு போன்னு சொன்னான், என்னானு பாத்தா ஜானி வொக்கர் ரெட் லெபிள். இதல்லாம் இங்க விக்கிற சுப்பர் ஸ்டார் ரேஞ்சுப்பா . வேற என்னா வச்சுருக்கேன்னு கேட்டேன்.

திருதிருன்னு முழிச்சான் சரி இனி விடக்கூடாதுன்னு நோண்டி துருவுன, அப்புறம் சொல்றான் பக்கார்டி சூப்பிரீயர்னு ஒன்னு மட்டும் இருக்கு மத்ததெல்லாம் வேற பிரண்ட்ஸ்க்கு கொடுக்கனும்டான்னு சொல்லிட்டு அதையும் எடுத்து கொடுமையேன்னு கொடுத்துத்தொலைச்சான். வாங்கிட்டு ஊருக்கு வந்து பாத்தா அது "மெய்ட் இன் போர்ட் டோ ரிகா'ன்னு போட்டு இருந்துச்சு அத பார்க்கவும் நமக்கு மேலும் கிளுகிளுப்பா ஆகிபோச்சு ஆகாதா பின்ன. அதுதான் நம்ம J.LO ஊராச்சே . அந்த made in என்கிற வார்த்தை என் கண்ணுக்கு maid in manhattan ந்னு தான் தெரிஞ்சுச்சுனா பாத்துகோங்களேன்.


அன்னைக்கு சாயுங்காலமே அந்த பக்கார்டி சுப்பீரியருக்கு போத்தலில் இருந்து விடுதலைப்பெருவிழா நடத்தி முடிச்சு வாயெல்லாம் வாழைப்பழ மணம் கமழ வீட்டு போயி மாத்து வாங்கிட்டு படுத்தேன். ( .... எம்பூட்டு ஒசத்தி சரக்கடிச்சாலும் கண்டு பிடிச்சுப்புடுறாய்ங்கப்பா )

மறுநாள் மதியம் "வெட்டும்புலி" தீப்பட்டி படம் வச்சுருகிற பிரண்ட தேடிப்போயி கடன் கேப்போமே அது மாதிரி போண்டா கணேசன் , தோழர் கற்பனையரசு ரெண்டு பேரும் கணேசனின் டூபாக்குர் டிவிஎஸ் 50 ல வந்தாய்ங்க. வந்த உடனே எங்க வீட்ல ரெய்டு அவனுங்களுக்கு அதும் எப்படி " என் கூட சேர வேண்டாம்னு " அப்பப்ப எங்க வீட்ல இப்படித்தான் திகில கெளப்புவாய்ங்க. டயலாக்க கேளங்க உங்களுக்கே புரியும். " ஏண்டா கனேசா உனக்கென்ன வயசு,அரசு உனக்கும் அவனுக்கும் 15 வயசி வித்தியாசம், ஏண்டா அவன் பின்னாடி அலையிறிங்க, அவவேன் கூட சேர்ந்து எவனும் உருப்பிட்டதா சரித்திரமே கெடயாது" இம்பூட்டு பேச்சும் வாங்கியும் மழையில நிக்கிற எருமை கணக்க என் ரூமையே பார்த்துகிட்டு இருந்தாய்ங்க. அப்பதான் குளிச்சிட்டு வெளியே வந்தேன். " சமஸ்தானம் தூங்கி எந்திரிச்சு வர நேரத்த பாரு, இதல்லாம் வெளங்குமா" எங்க வீட்டின் தினமும் வரும் வசனமாகியதால் சாப்பிட உக்காந்தேன் .


டேய் டக்கீலா வச்சுருக்கியமே, எடுத்துட்டு வாடா போலாம்னு ஆரப்பிச்சான் கம்யூனிஸ்ட் கனேசன் ( எ) போண்டா. சாப்பிட்டு வீட்டருகே தம்மடிக்கும் போது.கூட தோழர். கற்பனையரசும் ஊம் கொட்டினார்.

"யோவ் நான் என்ன ரஷ்யன் ஓட்கா வா வச்சுருக்கேன், காம்ரேட் ரெண்டு பெரும் இப்படி அலையிறிங்கன்னு" கலாய்தேன்.

இல்லடா டக்கீலா இன்னும் அடிச்சதே இல்லப்பா அதான் கேட்டேன்'னான் கற்பனை.

நாங்க மட்டும் என்ன டெய்லி ரெண்டு "ஹாட் ஷாட் " அடிச்சுட்டுதான் வெளியேவே கிளப்புறேனாக்கும். நானே கொடைக்கானலில் அந்த பிரெசில்காரியோட அடிச்சது. அதுக்கபுறம் போன வருசம் மயிலை பிளைட் ஏத்தும்போது சொல்லிவிட்டு அது இப்பதான் வந்துருக்கு i am going to drink lonely என்றேன்.



இந்த வாக்கியம் முடிக்கும் போது தோழர் கற்பனையரசுவின் கண்களில் ஒரு வெறி வந்து மறைந்தது. சரக்கு தரமாட்டேனு சொன்னதுக்கு அவரு கோபப்படலை, அந்த "பிரெசில்காரி" காரிங்கிற வார்த்தை அவர டென்சனாக்கியது . ( தூத்துக்குடி சிவாஜி ரசிகர் மேட்டர் மாதிரி பிரேசில்காரியும் மேட்டரும் ஒரு நல்ல மூடில்தான் எழுதனும் விரைவில் )

காரணம் அவரு பிரெசிலின் சகல வெளிப்பாடுகளுக்கும் ரசிகர், பிரேசில் புட்பால்,ரொனால்டொ,ரிவால்டொ,ரொமாரியோ என அவரின் கதாநாயகர்கள் மாறியபடியே இருப்பார்கள். அந்த கர்லி பிரெசிலியன் பொண்ணுகள் தான் அவரின் ஆதர்ச நாயகிகளே. இதுமில்லாம அப்பப்ப சம்பா,ஸல்சான்னு ஆடியோ சிடி வாங்கி வந்து இயக்கத்திக்கு (அவரின் மொழியில் - ஸ்தாபனம்) தெரியாமல் கேட்பார். என்கிட்ட அடிக்கடி அவரு மனம் நொந்து போய் சொல்லும் வார்த்தை. வீ மிஸ் காம்ரெட், லத்தின் அமெரிக்காவில் பிறக்காமல் போய்விட்டோம் என்று .

அங்க பிறந்தாலும் இப்ப இருக்கிற மாதிரி ஒரு வீணாப்போன இயக்கத்தில தான் நீங்க இருப்பீங்க தோழர்னு கிண்டலடிப்பேன் சரி மேட்டருக்கு வருவோம்

அழுது அடம் புடிச்சி டக்கீலாவை எடுத்துட்டு வர வச்சுட்டானுங்க. எங்கடா போறது குடிக்கன்னு கேட்டேன். அது நாங்க பாத்துகிறோம் அத எப்படி குடிக்கிறது அத சொல்லு,அதுவுமில்லாம இந்த டக்கீலாக்கு மட்டும் அப்படி என்ன தனி சிறப்பு அதையும் சொல்லுனான் கணேசன்.

அதாவது கணேசா, டக்கிலாங்கிறது மெக்ஸிக்கோவில் மட்டும் கிடைக்கும் சரக்கு எப்படி நம்ம வெள்ளோடு சாராயம் ( 150 ஆண்டுகளாக சாராயச்சாவே நடந்ததில்லை) வேற எங்கையும் கிடைக்காதோ அது மாதிரித்தான் அதுவும் அந்த நாட்டு அரசே உற்பத்தி செஞ்சுட்டு இருக்குது. ரெண்டு,முணு தனியார் கம்பெனிங்க மட்டுமே தனியாக உற்பத்தி செய்யுது.

"நீல அகேவ்" என்கிற கத்தாழைக்கிழங்கு வகையில் உற்பத்தி செய்யப்படும் சுத்தமான மெக்சிக்கோ நாட்டு சரக்கு இது. நாலு டேஸ்ட்தான் இதுல இருக்கு . பிளான்கா, கோல்ட், ரெஸ்பாடோ , ஆனெஜோ அப்படின்னு பேரு.இது இல்லாம 5 வதா ஒன்னு இருக்கு அது "ரிசேர்வ" அது 8 வருசம் ஊரல் போட்டு வாரது. கொஞ்சம் காஸ்ட்லி.


குடிக்கும் போது நவ்வாப்பழம் உப்பு போடாம சாப்பிட்டா ஒரு மாதிரி துவர்க்குமே அது போல இதுவும் துவர்க்கும். அதுனாலதான் ராவா டக்கீலா அடிச்சா கையில உப்ப வச்சுகிட்டு நக்குவானுங்க, அதுக்கு பேரு தான் "ஹாட் ஷாட்" . சொல்லி முடிக்கிறேன் போண்டா வீடு வந்துருச்சு. ஏண்டா நம்ம இங்கையா குடிக்கபோறோம்னேன். ஆமா இதுதான் செலவுமில்லா அப்படியே பிளாட் ஆனாலும் கவலையில்ல என்றார்கள் .

கணேசன் வீடு என்று சொன்னது தவறு அது ஒரு வணிகவளாகம். நகரின் இதய.... ம்கூம் அதையும் தாண்டி வென்டிரிக்கள் என்றுதான் சொல்லவேண்டும். அப்படி ஒரு சொத்து இருப்பதால்தான் அவனை மனிதனாக மதித்தார்கள்.அதன் பின்புறம் கிழே இரண்டு அறைகள் மேலே இரு அறை அதுதான் அவன் வீடு, கீழே கணேசனின் தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள் . தாத்தாவுக்கு 96, பாட்டிக்கு 84. அவர்களுக்கு யார் வருகிறார் போகிறார் என்றேல்லாம் தெரியாது. ஆனால் கணேசனின் வண்டி எழுப்பும் வினோத சத்தம் மட்டும் நன்கு கேட்க்கும். அவன் வண்டி ஓடத்துவங்கினால் தப்பு சத்தம் கேட்க்கும்.

மேலே போயி உக்காந்தோம், ஏண்டா வரவனை இந்த காக்டெய்ல்'னு சொல்லுறாய்ங்களே அது நீ செய்வியாடான்னு கேட்டார் தோழர் கற்பனையரசு. ஓ நிறைய படிச்சிருக்கேன் , குடிச்சும் இருக்கேன் ஆனா இந்த பிராண்ட்ல போட்டதில்ல. ஒரு டைப் இருக்கு இன்னைக்கு போடலாம்.


ஆனா அப்படி குடிச்சா கணேசனுகே இந்த புல் பத்தாவது அதை நம்ம ஸ்டைலில் மாத்திபோடுவோம். ஒகே.

சரி முதலில் போய் திராட்சையும்,ஆரஞ்சும் வாங்கிட்டு வா. அப்படியே கொறிக்க ஏதாவது வாங்கிட்டு வாடா, என்னாலைலாம் உன்ன மாதிரி கட்டிங்க ராவா அடிச்சிட்டு செவுத்த நக்கிட்டு போக முடியாதுன்னு சொல்லி அனுப்பினேன்.

போயி ஒரு 1 மணி நேரம் கழிச்சு வந்தான் சொல்லிவிட்ட மாதிரியே எல்லாம் வாங்கி வந்தவன். கொஞ்சம் டல்லா இருந்தான் என்னாடனு கேட்டேன்.


"தாத்தா செத்து போயிட்டாருடா"ன்னான்

உடனே பக்கதுல இருந்த தோழர் கற்பனைஅரசு முஷ்டி மடக்கி செவ்வணக்கம் வச்சாரு,

யோவ் நீ ஒருத்தேன் நேரங்கெட்ட நேரத்துல,அவங்க தாத்த காங்கிரசு காரருயா'ன்னு எரிச்சலா சொல்லிட்டு " கணேசா நீ பாத்தியா"ன்னு கேட்டேன்.

"பாத்தேண்டா அவரே சொன்னாருடா'ன்னான்.


( விரைவில் முடிக்கிறேன் )

இனிமேல் குடித்ததை எழுத போவதில்லைனு நண்பர்களுகு கொடுத்த உறுதி வன்மையாக மீறப்பட்ட பதிவு இது. நண்பர்கள் மன்னிக்கவும்.

Friday, October 27, 2006

@ 4:51 PM எழுதியவர்: வரவனையான் 9 மறுமொழிகள்

2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 இல் இந்திய நாடாளுமன்ற கட்டடத்தின் மீது காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த வழக்கில் ஜெய்ஸ்-இ-முகமது என்னும் அமைப்பைச் சேர்ந்த முகமது அப்சல் குரு என்கிற இளைஞர் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அக்டோபர் 20 ஆம் நாள் அப்சலைத் தூக்கி லிடுமாறு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றமும் உத்தரவிட்டது.

அப்சலுக்கு மரண தண்டனை என்ற செய்தி பரவியதுமே காஷ்மீர் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பு நிலவுகிறது. பிரிவினைவாத அமைப்புகள், ஆளும் கூட்டணிக் கட்சிகள், கம்யூனிஸ்ட்டுகள், பெண்கள், மாணவர்கள் - அனைவருமே அப்சலுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.

கடையடைப்பு, பேரணி, போலீசாருடன் மோதல் என்று ஒவ்வொரு நாளும் வேகம் பரவி வருகிறது. காஷ்மீர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட முதல்வர் குலாம் நபி ஆசாத்தும் “முகமது அப்சலுக்கு குடியரசுத் தலைவரின் மன்னிப்பைப் பெற்றுத் தருவதன் மூலம் மரண தண்டனையிலிருந்து அவரைக் காப்பாற்ற முடியும். பிரதமர் மன்மோகன் இதற்கு உதவ வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஜம்மு காஷ்மீர் மாநிலச் செயலாளரும் சட்டப் பேரவை உறுப்பினருமான தாரிகமி “அப்சலுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மறுபரிசீலலை செய்து அவருக்குக் கருணை காட்டலாம். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டால் ஜம்மு காஷ்மீரில் அமைதி முயற்சிகள் எதிர் மறையாகச் செல்லவும் வழி வகுக்கும்” என்று கூறியிருக்கிறார்.

மார்க்சியர்கள் பிரிவினைவாதிகளோ, பலாத்கார நடவடிக்கைகளில் நம்பிக்கையுள்ளவர்களோ அல்லர். மத நல்லிணக்கத்திலும், தேச ஒற்றுமையிலும் பற்றுறுதி வாய்ந்தவர்கள் என்பதால் தாரிகமியின் ஆலோசனை ஆழ்ந்த அக்கறையுடன் கவனிக்கத் தக்கது. காஷ்மீரில் கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகியுள்ள நேரத்தில் அப்சலின் குடும்பத்தினர் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுவும் அளித்திருக்கிறார்கள்.

அப்சலைத் தூக்கிலிடக் கூடாது என்று போராட்டங்களும் கருத்துருவாக்கங்களும் நடந்து கொண்டிருக்கும் அதே சமயம் அப்சலைத் தூக்கிலிட்டே தீர வேண்டும். கருணை காட்டக் கூடாது. நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயிலைப் போன்றது. அதன்மீது தாக்குதல் என்பது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை. அந்தக் கொடுமையைச் செய்தவனை மன்னிப்பது தேச விரோத நடவடிக்கை என்று பா.ஜ.க.வும், சங்கப் பரிவாரங்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.

“நாடாளுமன்றத் தாக்குதலின்போது எங்கள் கணவரைத் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றார்கள். கணவரை இழந்து வாடும் எங்கள் கண்ணீருக்கு என்ன பதில்?” என்று தாக்குதலின்போது இறந்த காவலர்களின் மனைவியரும் அப்சலுக்குக் கருணை காட்டக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். இவர்களைத் தயார்படுத்தி முன்னிறுத்துகிறவர்கள் பரிவாரங்களே என்பது ரகசியமல்ல.

“உணர்ச்சி வேகத்தில் கொலைகளைச் செய்த ஒருவன் அந்த உணர்ச்சி நீர்த்துப் போனதும் வருத்தம் கொள்கிறான் மனச்சோர்வு அடைகிறான்.

ஒரு தீவிரவாதியோ, குறிப்பிட்ட பயங்கரவாத இயக்கத்தின் நோக்கத்துக்காக நாட்டின் பொது அமைதியைச் சீர்குலைக்கும் கொலைத் தொழிலைச் செய்து முடித்த பின்னர் அங்கே உயிரிழப்பு பற்றிய வருத்தங்கள் இருப்பதில்லை. மாறாக அச்செயல் கொண்டாடப்படும் வெற்றியாக அமைகிறது.

உணர்ச்சி வேகத்தால் கொலை செய்த மனிதனின் தண்டனையைக் குறைத்தாலோ அல்லது அவனை விடுதலையே செய்தாலும் அதனால் சமூகத்தில் யாருக்கும் ஒன்றும் ஆகிவிடாது.

ஆனால், ஒரு தீவிரவாதியின் மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றினால் சிறைக்கூடத்தில் இருந்தபடி தன் அடுத்த திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் தொடர்கதைதான் நிகழும்.” என்று சில சங்கப் பரிவார ஆதரவு ஏடுகளும் எழுதுகின்றன.

மேலோட்டமாகப் பார்க்கும்போது குறிக்கோள், இலட்சியம், அரசியல்சார்பு எதுவும் இல்லாத ஒரு தனிமனிதனுக்குக் கருணை காட்டுவதும், ஓர் இயக்கத்துக்காக, அதன் இலட்சியங்களுக்காகச் செயல்படும் தீவிரவாதி ஒருவனுக்குக் கருணை காட்டுவதும் வெவ்வேறு தன்மையுடையவை என்று தோன்றலாம். ஆனால், உணர்ச்சி வேகத்தில் கொலை செய்தவனைத் தூக்கிலிடுவதால் அந்தக் குற்றவாளியின் குடும்பத்தார்க்கு மட்டுமே இழப்பும் துயரும் நேரும்.

தீவிரவாதியைத் தூக்கிலிடும்போது அவருடைய குடும்பத்தினர்கூடச் சமயங்களில் வருந்தமாட்டார்கள். ஏடுகள் குறிப்பிடுவதுபோல் அது ஒரு வெற்றியாக - வீரவணக்கத்துக்குரியதாகவும் மாறலாம். தேசத் தந்தை என்று போற்றப்படும் காந்தியடிகளைக் கொன்றதற்காக கோட்சேயும் வருந்தவில்லை. அவனைத் தூக்கிலிட்டதற்காக அவன் குடும்பத்தாரும் வருந்தவில்லை. மாறாக அவனை வீரன் என்றும், எதிர்காலம் கொண்டாடும் என்றும் அவனது சகோதரர் கோபால் வெற்றிக் களிப்புடன் பேசினார்; எழுதினார். இதுவரை கோட்சேயைக் கண்டித்து எந்த அத்வானியும், வாஜ்பேயியும், சோவும், குருமூர்த்தியும் பேசவில்லை; எழுதவில்லை.

கோட்சேக்கு மரண தண்டனை வழங்கிவிட்டதால், சாதுக்களும், சங்கப் பரிவாரங்களும், அத்வானிகளும் தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்திவிடவில்லை. அதுபோலவே அப்சலின் மரணத்தால் அவன் சார்ந்த இயக்கமும் முடங்கிப் போய் விடப் போவதில்லை. தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை அளிப்பதால் தீவிரவாதம் குறைவதில்லை. ஆனால், அதனால் ஏற்படும் துயரங்கள் தேசத்தையே உலுக்கி விடுகின்றன.

அப்சலின் நடவடிக்கை நியாயமானது என்று யாரும் வாதிட முடியாது. ஆனால், நாடாளுமன்றத் தாக்குதல் என்கிற குற்றச் செயல், இருவேறு மதங்களின், இருவேறு கருத்துக்களின், தொடர் நிகழ்ச்சி என்பதை மறுத்துவிட முடியாது. காஷ்மீருக்குள் மாத்திரமே ‘சுதந்திரப் போராட்டம்’ என்கிற முறையில் நடந்து கொண்டிருந்த வன்முறைச் சம்பவங்கள் நாடு முழுவதும் இழுத்து விடப்பட்டது எப்படி? சங்கப் பரிவாரங்களின் தீவிரவாதத்துக்கு இதில் பொறுப்பில்லையா?

இஸ்லாமியத் தீவிரவாதத்தைக் கண்டிக்கிற உரிமை அதாவனிக்கோ, குருமூர்த்திக்கோ இல்லை. பாபர் மசூதி தகர்க்கப்பட்ட பிறகுதான் கோவையிலே குண்டு வெடித்தது. மும்பையிலே குண்டு வெடித்தது. அப்சலைத் தூக்கிலிடு என்று ஆர்ப்பாட்டம் நடத்தினால், அதன் அருகிலேயே அத்வானியைத் தூக்கிலிடு என்று ஆர்ப்பாட்டம் நடத்துவதும் சரியானதே! ஆனால், தூக்குத் தண்டனை வழங்குவதால் மக்கள் தொகை குறையலாமே தவிர, இங்கே எரியும் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்து விடாது.

‘சிறுபான்மை’ மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ‘பெரும்பான்மை’யினர் நிம்மதியாக உறங்கிவிட முடியாது. இந்தியாவில் ‘பெரும்பான்மை’ என்கிற பேரிரைச்சலுக்குள் புகுந்திருப்போர் உண்மையில் மிகமிகச் சிறுபான்மையினரான பார்ப்பனர்களே! பார்ப்பன வெறியர்களின் நலன்களே, ஆதாயங்களே இங்கே இந்திய நலன்களாகச் சித்திரிக்கப்படுகின்றன.

உண்மையிலேயே இந்திய நலனில், சமூக ஒற்றுமையில் அக்கறை உண்டென்றால், முதலில் இங்கே சங்கப் பரிவாரங்கள் தடை செய்யப்பட வேண்டும். பாபர் மசூதியைத் தகர்த்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். புதிதாய் அந்த மசூதி கட்டப்பட வேண்டும். இம்மாதிரியான நடவடிக்கைகளே இஸ்லாமியரின் அச்சங்களையும் ஆவேசங்களையும் குறைக்கும். இந்தியாவைப் போல் நமக்குப் பாதுகாப்பான நாடு எங்கும் இல்லை என்று இஸ்லாமியர்கள், அல்லது அசாமியர்கள், மணிப்பூரிகள், தெலுங்கானா மக்கள், தமிழர்கள், நக்சலைட்டுகள் என அனைத்துப் பிரிவினரும் நம்பும் போதுதான், தீவிரவாத தேவையற்று உதிரும்.

‘காரணம்’ அறியாமல், ‘காரியத்தை’ நிறுத்த முடியாது. தீவிரவாதம் ஏன் தொடங்குகிறது என்று யோசிக்க மறுத்தால், மரண தண்டனைகளை வழங்கிக் கொண்டே இருக்கலாம்.

அப்சலுக்குக் கருணை காட்டக் கூடாது. ஏனென்றால் அவன் தனி மனிதனல்ல. ஒரு தீவிரவாதியின் மரண தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றினால், சிறைக் கூடத்தில் இருந்தபடியே தன் அடுத்த திட்டத்தை நடத்துவது எப்படி என்று சிந்திக்கத் தொடங்குவான் என்று வாதிடுவோர் வசதியாக ஒன்றை மறந்து விடுகிறார்கள்.

தீவிரவாதியின் மரண தண்டனையை ரத்து செய்தால் ‘அடுத்து என்ன’ என்று அவன் சிந்திப்பான். அவனை தூக்கிலிட்டு விட்டால் ‘அடுத்து என்ன’ என்று மற்றவர்கள் சிந்திப்பார்கள். “அப்சல் விவகாரத்தைப் பொறுத்தவரை, ‘தகுந்த சாட்சி, ஆதாரத்தின் அடிப்படையில்தான் தண்டனை அளிக்கப்பட வேண்டும்’ என்று கேட்பது மட்டுமே நியாயமான வாதமாக இருக்க முடியும்” என்று எழுதுகிற ஏடுகளும் உண்டு.

அதாவது ‘தூக்கிலிடுங்கள். ஆனால், அதை நியாயப்படுத்துங்கள்” என்பதுதான் அவர்கள் தரப்பு வாதம்.
ஆதிக்க சக்திகள் நினைத்தால், அரசுகள் விரும்பினால், எதையும் எப்படியும் நியாயப்படுத்த முடியும்.
நியாயப்படுத்தப்பட்ட தீர்ப்புகள் எல்லாமே வரலாற்றில் ஏற்கப்பட்ட தீர்ப்புகளாகி விடுவதில்லை.

அப்சலுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்வது, தீவிரவாதத்துக்கு முன் ஓர் அரசு பணிந்துவிட்டதாக மக்கள் எண்ண மாட்டார்களா? - கேட்கலாம். ஆனால், “தூக்குத் தண்டனை வழங்கிய அரசுகள் நிமிர்ந்துதான் நிற்கின்றனவா?” - இப்படியும் மக்கள் கேட்பார்கள்.


: தோழர் இளவேனில் செய்திமடலில் எழுதியது

Wednesday, October 25, 2006

@ 6:57 PM எழுதியவர்: வரவனையான் 13 மறுமொழிகள்

தீவாளிக்கு அடிச்ச கூத்த எழுதலாம்னு உக்காந்தா போன் போட்டு போட்டோ என்னாச்சு ! வீடியோ என்னாச்சு'னு உசுர வாங்குன அன்பு வலைபதிவர்களே (வல்லினம் மிகவில்லைன்னு யாரும் அடிக்கவராதிங்கப்பா) ஒரு வழியா ஃப்லோக்குல ஏத்துதறுக்குள்ள நான் பட்டப்பாடு இருக்கே "டவுசர் கிழிஞ்சுருச்சு "



அது இருக்கட்டும், இப்போ படம் போட்டாச்சு வீடியோவையும் தரவேற்றியாச்சு அதல்லாம் சரி இப்போ அந்த வீடியோவுல ஆடியோ கேக்குதா நான் வேல பார்த்த கணீணி'ல சன்டிவி வருது,சூரியன் FM எடுக்கலை. அதாங்க ஒலி வரவில்லை. இது என் நாதஸ்வரத்துல மட்டும்தானா இல்ல எல்லா நாதஸ்வரத்துலையுமான்னு கொஞ்சம் சொல்லுங்கப்ப

ரெடி ஜூட்......

இந்த பதிவுல கமென்ட் மட்டுமே, கலாய்த்தல் விரைவில். உள்ளார ரண்டி....










Photobucket - Video and Image Hosting

8 மணி பாஸஞ்சர பிடிக்க 7 மணிக்கே வந்தா அது 2மணி நேரம் லேட்டு'னு கேள்விப்பட்டு, பே'ன்னு உங்க்காந்து இருப்போமே , அது மாதிரி எல்லோரும் உக்காந்துருக்கிற இடம் அமெரிக்கன் காலேஜ் சிற்றுண்டிச்சாலையின் அருகே.

மருதைக்குள்ளையே 20 வருசம் இருந்தாலும் என் காலடி படாத புண்ணியபூமி.



Photobucket - Video and Image Hosting









Photobucket - Video and Image Hosting

இந்த ரயில்வேயே இப்படித்தான் என்றபடி கடைசி பஸ் பிடிக்க கிளம்புமும் கூட்டம்போல் கலைந்து கிளம்புவது வலைப்பதிவர் கூட்டம் முடிந்து கூட்டம் முடிந்து. ( அந்த அவசரத்திலும் பயன்படுத்தாத பெப்சி கிளாசை சேகரிக்கும் தருமியும் முத்து(தமிழினி)யும் ! எல்லாம் உடனே அப்படி கணக்கு :))))போட்டுராதிக எல்லாம் சூழலியல் நோக்கில்தான் )





தெளிவான சிந்தனை, இளமையான முற்போக்கு எண்ணம் கொண்ட தோழர் . முத்து(தமிழினி)யுடன் ( பழனிச்சாமியின் மொழியில் "கேரளாக்காரர்" (ஸ்பெசல் காரணம்- பின்னர் விளக்கப்படும் )


தலைக்கும் மீசைக்கு கருஞ்சாந்து இட்டு காலையில் காலையில் கோரிப்பாளையம் பேருந்து நிறுத்ததில் வந்து நின்றால், காலேஜ் பசங்களுக்கு இவர் எதிரியாகி போவார். பின்ன... லேடி டோக் காலேஜ்,மீனாட்சி காலேஜ் மெடிக்கல் காலேஜுன்னு கிராஸாகிற பொண்ணுங்களுக்கு இவர்தான் "ரெமொ". ( வாங்கிக்கொடுத்த ரெண்டு வில்ஸ்க்கு இவ்வளவுதான் பில்டப் குடுக்க முடியும் - வெரி ஸாரி :)))))) )

இவரின் நட்பு என்பது ஒரு இளைஞனின் அனுகுமுறையுடன் இருப்பது இன்னும் சிறப்பு.

பேராசிரியர். நண்பர் தருமியுடன் அடியேன் வரவனையான்






எனக்கு இடதில் சகோதரர் ராம், அவருக்கு இடதில் ஞானவெட்டியான் , அன்று அய்யா ஞானவெட்டியானை அதிகம் கலாய்த்தது நாந்தான் , ஆனால் அவரின் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன் என்கிற அதிர்ச்சியான செய்தியை அவருக்கு சொல்லவில்லை




தருமி நடுவிலிருக்க குறுந்தாடியுடன் வலதுப்பக்கம் முனைவர் சைலஸ் ( ப்ரொபோசர் ரமணா (விஜயகாந்து) அல்லது தாகூர் ( சிரஞ்சிவி) படங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருப்பார் போல் தெரிகிறது - இவருக்கும் தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு, விட்டால் அப்சலை கதற கதற கழுவில் ஏத்திவிடுவார் போலிருந்தது :))) ) இடப்பக்கம் என் தோழன் கவிஞன்.சுகுணாதிவாகர்.





"வந்து நின்னது குத்தமாடா" என்று சிந்திக்கிறாரோ என்னவோ தோழி.வித்யா (லிவிங்ஸ்மைல்)



இனிமேல் ஆன்மீக பதிவு போட்டால் அவ்வளவுதான் ஆட்டோ வரும் என்று பதிவர் ஜி.ராகவனை மிரட்டுகிறார் வித்யா



நம்ம வரவனையான் மிக்ஸிங்கு கரெக்ட்டா இருக்கும் நம்பி அடிங்க என்கிறார் ராம் பதிவர்.ராஜ்வனஜிடம்,

பக்கதுல ஒருத்தர் " ஒன்ஸ் மோர் ரவுண்டு போலாம முத்து" என்கிறார் அது ஞானவெட்டியான்



Photobucket - Video and Image Hosting

பதிவர் வழக்கறிஞர். பிரபு ராஜதுரை ஒரு ரவுண்டுதான் அடிச்சாலும் நொம்ப நேரம் பேசினார்.

அவ்வளவும் பயனுள்ளதாய் இருந்ததுதான் சிறப்பே


ரவுண்டு, மிக்சிங்கு எல்லாம் ஒன்லி பவுண்டோ என்பதுதான் கொஞ்சம் வருத்தற்குரிய விஷயம் :(((

ஆனால் அதுக்கும் தீபாவளி பலகாரம் சைடு டிஸ் சப்ளை செய்த பதிவர் மகேஸ் என் கேமிராவில் சிக்காததுதான் வருத்தமே.



இந்தளவிற்கு விரைவாய் படங்களை அப்லோட் செய்ய உதவிய பொன்ஸ்'க்கு நன்றி சொல்லாமல் இருக்கமுடியாது. கிட்டதட்ட மூன்று மணி நேரம் ஆன்லைனில் இருந்து உதவினார்.


















Sunday, October 15, 2006

@ 3:13 AM எழுதியவர்: வரவனையான் 5 மறுமொழிகள்

ஜெயகாந்தனுக்கு 10 நாவல் எழுதுனபிறகுதான்ய ஞானச்செறுக்கு வந்துச்சு, இப்ப என்னடான்னு பார்த்தா, முணு சும்மாகாஞ்சி பதிவு போட்டு தமிழ்மணத்துல தன்னோட ப்லோக்கை இணைச்சவுடன் தாந்தான் "சோ" " கஞ்சாகுடிக்கி ஜெயகாந்தன் " ( அவனுங்க ஒன்னும் பெரிய டுபுக்குக இல்லையென்றாலும் ) என்றேல்லாம் மல்லாக்க படுத்துக்கொண்டே முடிவு பன்னிக்கிறாங்க. பொதுவாய் வலையுலகில் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனபடுத்த முயன்றதில்லை, அது எனக்கு பிடித்த வேலையுமல்ல. அதே நேரத்தில் பொதுக்கருத்தெழுதுகிறேன் பேர்வழி என்று ஜல்லி அடிப்பதை பார்த்துக்கொண்டும் இருக்கமுடியவில்லை. வலைப்பதிவர் செல்வன் உள்ளாட்சித்தேர்தலில் நடைபெற்ற கலவரங்களை முன்வைத்து பொங்கியெழுந்து ஒரு பதிவு போட்டிருந்ததை படிக்க நேர்ந்தது ( ஆம் நேர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும்) அதற்க்கான எதிர்வினை என்றே இப்பதிவை முன்வைக்கிறேன். கொஞ்சம் வாத முறையிலான பதிவாக .


"செல்வன்"
//
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பெரும் வன்முறையிலும், கலாட்டாவிலும் முடிந்திருக்கிறது. குறிப்பாக சென்னை ஒரு பீகாராகவே ஆக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். சிறையிலிருந்த குண்டர்களையும், ரவுடிகளையும் பரோலில் கொண்டுவந்து ஓட்டுசாவடிகளை காலையிலேயே கைப்பற்றி அதிமுகவினரை அடித்து, விரட்டி போலிஸ் உதவியுடன் மானாவாரியாக கள்ள ஓட்டுக்களை போட்டு தள்ளியிருக்கின்றனர்.

இந்த கேவலமான கலாச்சாரத்தை உள்ளாட்சி தேர்தலில் ஆரம்பித்து வைத்த முழு பெருமையும் ஜெயலலிதாவையெ சேரும். 2001 உள்ளாட்சி தேர்தலில் ஸ்டாலினை தோற்கடிக்க சகல அஸ்திரங்களையும் பிரயோகித்து தோற்றது அதிமுக. இப்போது மகத்தான கூட்டணியுடன் ஆட்சிக்கு வந்திருக்கும் திமுகவும் அந்த வழியையே பின்பற்றுவது கேவலத்திலும் கடைந்தெடுத்த கேவலம் என்று தான் சொல்ல முடியும்.//

செல்வன் முதலில் தமிழகத்தில் என்கிற வார்த்தையை "சென்னையில் நடந்த" என்று மாற்றுங்கள் ;) . ஏனெனில் சென்னை தவிர வேறு எங்கும் பெருத்த வன்முறை நிகழவில்லை என்பது செய்தி. ம்ம்... அப்புறம் இந்த பீகார், பீகார் என்கிறீர்களே அது கேள்வி ஞானத்தின் அடிப்படையில் என்றுதான் நினைக்கிறேன். பீகாரில் மாநிலத்தின் நகரம் தவிர்த்த ஊரக பகுதியிலேதான் நீங்கள் குறிப்பிட்ட "மாதிரி " தேர்தல் முறைகள் கையாளப்படும். பாட்னாவில் அல்ல ( பாட்னா தேர்தல் முறையை பிறகு விளக்குகிறேன் ).
அதுவும் அந்த பகுதில் மிகுந்துள்ள மேற்சாதியினர் சொல்லும் நபருக்கு வாக்களிக்கவேண்டும், அந்த மேற்சாதியினருக்குள் நிகழும் யார் பெரியவன் என்கிற மோதலே இங்குள்ள ஊடகங்களால் வன்முறை என்று பெரிது படுத்தப்படுகிறது. மற்றபடி அங்குள்ள தலித் மக்கள் தங்கள் நிலத்தின் பண்ணையார் யாரைச்சொல்கிறாரோ
அவருக்கே வாக்களித்து விடவேண்டியதுதான் இதுதான் பீகார் பாணி தேர்தல். அடுத்ததாக ஜெயலலிதா ஆரம்பித்து வைத்தார் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளீர். நன்றி.

அம்பிகள் எல்லாம் " அதாவது கீர்த்தனராரம்பத்திலே கருணாநிதி ஆரம்பித்து வைத்ததாக" என்று புலம்பிக்கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் சிம்பிளாக ஜெ'விலிருந்து துவங்கியுள்ளீர்கள் நன்றி. அதே வேளை கடைந்து எடுத்த கேவலமாக நீங்கள் முன்வைப்பது குறித்து உங்கள் பதிவில் ஜால்ரா அடித்துள்ள அம்பிகள்
மற்றும் அதன் உப பருப்புகள் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இதைப்பற்றி வாயேஏஏஏஏஎ திறக்கவில்லையே ஏன் ?




"செல்வன்"
//
83 வயதான தமிழகத்தின் மூத்த தலைவர் கருணாநிதி ஆட்சியில் போலிஸ் இந்த அளவுக்கு வன்முறை வெறியாட்டம் நடத்தியிருப்பது மிகுந்த கேவலமான செயலாகும்.//

அப்போ 78 வயதான ஒரு கிழவனை , தமிழரின் கடைசிக்கும் கடைசி கையிறுப்பை தெரு நாய் போல் அடித்து இழுத்து சென்றார்களே அப்ப இந்த ஜனநாயக காவல் நாய்கள் வீதிக்கு வந்து நீதி கேட்டனரா? தினம் மலம் திங்கும் தினமலர் முதலாளி அப்போதும் தின்று கொண்டிருந்தானா மலத்தை. அப்ப எங்க போச்சு உங்க கேவலம்.



// கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் போன்ற அரசியல் முதிர்ச்சியுள்ள தலைவர்கள் இருக்கும் கூட்டணியே இப்படிப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினால் அப்புறம் இவர்களுக்கும் அதிமுகவுக்கும் என்ன வித்யாசம்? இரண்டும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள், எந்த வித்யாசமுமில்லாத வன்முறை கும்பல்கள் என்று தான் சொல்ல முடியும்.//

"வன்முறை என்பது மக்களின் நீதி" என்பது நீட்சே ரசிகரான உங்களுக்கு தெரியவில்லையா செல்வன். வன்முறைகும்பல்கள் இல்லாத தேர்தலை இந்தியா போன்ற அரைகுறை ஜனநாயக நாட்டில் எதிர்பார்ப்பது அபத்தமாக இல்லையா. ;))))))))))))))))


//ஓட்டு போட மக்கள் வருவதே அருகி வரும் இந்த சூழலில் ஓட்டுசாவடியை கைபற்றி இந்த குண்டர்கள் ஆட்டம் போட்டால் இனி பொது மக்கள் வரும் காலங்களில் ஓட்டு போடவே அஞ்சும் சூழ்நிலை தான் உருவாகும். தமிழ்நாட்டுக்கு பழக்கமில்லாத தேர்தல் வன்முறையை அறிமுகப்படுத்தியதே திராவிட கட்சிகள் தான்.//

யார் சொன்னது தமிழ்நாட்டில் ஓட்டுப்போடும் வழக்கம் அருகி வருகிறது என்று அதெல்லாம் 45% கிழே போனால் விட வேண்டிய டயலாக்கு நண்பா.

என்னாது தமிழ்நாட்டுக்கு பழக்கமில்லாத தேர்தல் வன்முறையா? இந்த "உட்டாலக்கடி கிரி கிரி" வேலைதானே வேணாங்கிறது. 1952 ல திமுக தேர்தல் பாதைக்கு வந்த நாள் முதல் 67 வரை பேராயக்கட்சியிடம் (congress) வாங்கின மாத்து பற்றி அண்ணா உங்களூக்கு தெரியுமாங்ணா.........




//
அதை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றவர் ஜெயலலிதா. அதை பீகார் லெவலுக்கு கொண்டு சென்று காட்டு மிராண்டித்தனமான உள்ளாட்சி தேர்தல் கலாச்சாரத்தையும், பிகார் பாணி வெறியாட்டத்தையும் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது திமுக.//

"பீகார், பீகார் , பீகார்" வைகோ மாதிரியே நீங்களும் கொஞ்சம் படம் போடுறிங்கண்ணா


//ஒழுங்காக தேர்தல் நடந்திருந்தால் கூட்டணி பலத்திலேயே திமுக ஜெயித்திருக்கும் என நம்பியிருந்தேன். ஆனால் இந்த வெறியாட்டம் ஆடியதை கண்ட பின் இப்படி ஒரு பெரும் கூட்டணியை வைத்திருந்தும் இவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது.//


ஏன் ராசா, திமுக 100 நாள் ஆட்சிக்கு பிறகுமா உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வரனும். வெறியாட்டம் என்பதல்லாம் ஓவர் பாபுகாரு ! 2001 t0 2006 உள்ளார இருந்தீகளா.......



//இந்த தேர்தலை போல் சாதகமான சூழல் திமுகவுக்கு எந்த காலத்திலும் நிலவவில்லை. சட்டமன்ற தேர்தலில் கிடைத்த அடியிலிருந்து அதிமுக இன்னும் மீளவில்லை. மாபெரும் கூட்டணி பலம், மக்கள் நல திட்டங்கள், மத்திய, மாநில ஆட்சி என அனைத்து அதிகாரமும் திமுக கையில். போதா குறைக்கு திருமாவளவன் வேறு கடைசி நேர ஜம்ப் செய்து திமுகவுக்கு வலு சேர்த்தார்.//



உஷ்ஷ்ஸ் இப்பவே கண்ணை கட்டுதே.......

உங்க வார்த்தைபடியே பார்த்தாலும் திமுக மிக வலுவாகவே உள்ளது அப்புறம் ஏன் பிரச்சினை செய்யவேண்டும். தேர்தல் சமயத்தில் தோல்வி அடைந்துவிடுவோம் என்று எண்னும் பிரிவே பிரச்சினை ஏற்படுத்தும் என்பது உண்மையாகும் பட்சத்தில் ஏன் பாபுகாரு அ.தி.மு.க செய்திருக்ககூடாது, அதுவும் திருமா வேற கடைசி நேர ஜம்ப் செய்திருக்கும்போது.






//
மேயரை மகக்ள் தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றி ஜனநாயக ப்டுகொலை செய்தது, அதிமுக வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகளை சுழற்சி முறையில் பெண்கள் தொகுதியாக திட்டமிட்டு ஒதுக்கியது, இதுவரை தமிழகத்தில் நடக்காத கொடுமையாக ரவுடிகளையும், கொலைகார சிறை கைதிகளை பரோலில் கொண்டு வந்து தேர்தல் சாவடிகளை கைப்பற்றியது என மடை திறந்த வெள்ளம் போல் அராஜகத்தை அவிழ்த்து விட்டுள்ளது.//

அது எப்படிங்க , மேயர மக்கள் தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றி ஜனநாயகபடுகொலையா ........ சும்மா இருங்க நண்பா கேக்குறவன் வாயில சிரிக்கமாட்டான். மக்களால மட்டும் தேர்ந்தெடுக்கபட்ட ஆள விட்டிங்களா? அப்ப மயிறு புடுங்கிட்டு இருந்தானா இந்த தினமலம்.

சரி தங்கம் , பெண்கள் தொகுதியா மாத்தினா அதிமுக வெற்றி பெறாதா?

எப்ப இருந்து இப்படி கிளம்பிட்டிங்க. கலைஞர் கேட்ட துரைமுருகன விட்டுதான் சிரிக்கவுடுவார். (அவ்வளவு பெரிய வாய் அவருக்குதான் இருக்கு)

அந்த மூணாவது கருத்தை ஆதரிக்கிறேன், உங்க மறைமுக ஆதரவு கட்சி மேடம் "வெளியே" இருக்குற ரவுடிகளை வச்சுத்தான் ஆள வெட்டுவாங்க,ஆசிட் ஊத்துவாங்க........ எல்லாம் செய்வாங்க





//
சென்னையில் நடந்த இந்த கேவலத்தை மத்திய அரசு தட்டி கேட்காது என்பது உறுதி. சென்னை ஐகோர்ட்டு உடனே இந்த தேர்தலை தள்ளுபடி செய்து மாநில தேர்தல் கமிஷனரை டிஸ்மிஸ் செய்து புதிதாக மத்திய தேர்தல் கமிஷன் தலைமயில் தேர்தல் நடத்தவேண்டும். வெளி மாநில போலிஸ் அல்லது ராணுவ உதவியுடன் தேர்தல் நடக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்களுக்கு ஓட்டு போட துணிவே வரும்.

இந்த கேவலத்தை பற்றிய தினமலர் செய்தியை படியுங்கள். எந்த அளவு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என தெரியும்.//


இன்னும் நீங்க அந்த "லெட்டர் டூ தி எடிட்டர் " காலத்தை மறக்கல போல, அரசு என்ன முடிவெடுக்குனும் சொல்லற திமிர் எந்த ரத்ததுல வரும்னு எங்களுக்கு தெரியும் நண்பரே.

இதை கேவலம் சொல்லுற நீங்க அதை படிக்க சொல்லுறது, பார்ப்பனர் கு***டி தொடச்சி போட்ட பேப்பர .

மன்னிக்கவும் செல்வன்

த்தூ.......

Sunday, October 08, 2006

@ 12:58 PM எழுதியவர்: வரவனையான் 8 மறுமொழிகள்




In certain situations, there is a classical function and responsibility there that must not be avoided, even if it is just to appeal to good sense.
- Jacques Derrida



தலித் கலை விழாக்கு மதுரை இறையிறல் கல்லூரிக்கு போய் கலந்துகிட்டு திரும்பும் போது நடந்த மேட்டரு இது.

" டேய் இருக்குறது வெறும் முன்னூரு ரூபாதாண்டா, அளவா குடிங்கடா" சுகுணா பொலம்பிக்கொண்டிருந்தான். உட்காந்து குடித்து கொண்டிருந்தது "கபடி கருப்பையா ஒயின்ஸ்" ஆரப்பாளையம் பஸ்ஸாடண்டுக்கு பக்கத்துல. நானும் ,கண்ணீர் புகை இருவரும் "டெரித்தா"வின் டவுசரை நார் நாராய் கிழித்துகொண்டிருந்தோம் , அவன் குரலை காதுல வாங்காம. பொறுமை தாங்காம எந்துரிச்சு நிக்கறது, பெருமுச்சு விடுறதுன்னு டிராஹன் எபெக்ட் கொடுத்தவனை பார்த்து எரிச்சலாகி கன்ணீர் புகை எழுந்து போலாம் வரவனை என்றார். சரி என்று கிளம்பி வெளியே வந்தோம். வைகை இங்க தானே ஓடுது, பக்கத்துல என்றார் க.பு. ஆமாம் அதோ தெரியுது பாருங்க என்றேன். அப்போது மழை பெய்து தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அருகில் போய் பார்க்க ஆசைப்பட்டார். சரி வாங்க போகலாம் என்று அருகில் போனோம். நான் வாய் சும்மா இருக்க மாட்டாம, " அங்க தெரியுது பாருங்க ஒரு குடிசை, அங்கதான் இஞ்சி விப்பாங்க " நம்ம அடிக்கிறதுலாம் என்ன சரக்கு அது ஒரு லார்ஜ் அடிச்சா ஆஃப் அடிச்ச மப்பிருக்கும்"( பொட்"டீ"க்கடை note the point) அப்படின்னு சொல்லிப்புட்டேன். அத புடிச்சுகிட்டாரு க.பு, சரி வாங்க போலாம் நானும் ஸ்கூல்ல படிக்கும்போது அடிச்சதுன்னு சொல்லி நடையகட்டுனோம். டேய் காசில்லடான்னு சுகுணா பொலம்பல ஆரம்பிக்க." ராசா அங்க உட்கார்ந்த்து குடிச்சாலும் ஆளுக்கு 30 ரூவாய்க்கு மேல் குடிக்க முடியாது' பேசாம வா ன்னு சொல்லி போய் உட்காந்தோம்.

மல்லிகா அக்கா கிழவியாகி போயிருந்துச்சு, அப்பலாம் பாத்தா அவ்வளவு அலம்பல கொடுக்கும், மாமூல் வாங்க வர போலீசு கூட உடுப்பில் வரக்கூடாதுன்னு கண்டிசன் போட்டுரூக்குன்னு கோசிப் சொல்லுவாய்ங்க. சிங்காரவேலன் படம் மிட்லேண்ட் தியேட்டரில் ரீலிஸ் ஆனப்ப இது கடைக்கு சாராயம் , இஞ்சி, குடிக்க வந்தவங்கலாம் லைன்ல நின்னுதான் வாங்கிட்டு போகனும் சொல்லிடிச்சு. அப்ப ரெண்டு லைன் நிக்கும் ஒன்னுபடம் பாக்க , ஒன்னு இஞ்சி குடிக்க. நான் இஞ்சி குடிக்க லைன்ல நின்னு வீட்டுல யாரோ போட்டு குடுத்துட்டாய்ங்க. வீட்டுக்குபோனா செம பரைடு , படம் பாக்க போனேன் வரிசை மாறி நின்னுட்டேன்னு சொல்லி தப்பிச்சது தனிக்கதை.

ஆளுக்கு ரெண்டு கிளாஸ் அடிச்சோம் , சரி போலாம் மணீ 11 என்றான் சுகுணா , என் டிரசும் அவன் டிரசும் மழையில் நனைந்து பார்த்தவுடன் சந்தேக கேசுல கூட்டிட்டு போய் உக்கார வைக்கிற மாதிரி இருந்தோம். க.பு குறுந்தாடி, சங்கிலியுடன் கூடிய கண்ணாடி ,இன்ஷர்ட், பார்மல் ஷு என்று "விஞ்ஞானி முருகன்" கெட்டப்பில் இருந்தார். பொறமையாக அவரை பார்த்தபடி பஸ்ஸடாண்ட் வந்தோம். கூட இருந்த இன்னொரு நண்பர் டைட்டாகி படுக்க இடம் தேடினார். அவரை தாங்கிபிடித்த படி பேருந்துக்குள் ஏறினால் நடத்துனர் ஏற்றவில்லை. அவரிடம் பயணிகளுக்கான உரிமைகள் குறித்து பொங்கியெழுந்து கொண்டிருந்தார் க.பு , அப்போது அங்கு வந்த ரோந்து போலிசாரிடம் புகார் சொன்னார் நடத்துனர். எங்களுக்கு லேசா டர்ரு கிளம்பிச்சு. போலிசுகாரய்ங்க எங்கள பாத்து இங்க வாங்கடான்னு கூப்பிட்டாய்ங்க. நானும் சுகுணாவும் பக்கத்துல போயி என்ன சார்னோம்.
அந்த நடத்துனர் வந்து இவைங்க நல்லவனங்க சார் ! அங்க நிக்கிறானே கண்னாடி அவந்தான் ரூல்ஸ் பேசுறான். ரூல்ஸ் பேசுனானா " எவேய்ன் அவேன் " என்று லத்தியை வாகாய் எடுத்து க.பு'வின் கு***யில் நாலு இழுப்பு வைத்தார். தன் பேண்ட்'ன் பின்புறத்தை தடவி விட்டவாறே உட்டாரு ஒரு டயலாக்கு, ஊருக்கு வந்து ஒரு வாரம் சிரிச்சோம் நானும் சுகுணா திவாகரும்.

" இப்ப நீங்க யாரை அடிச்சிங்க தெரியுமா' தமிழ்நாட்டோட மிகமுக்கியமான எழுத்தாளர" என்றபடியே நீவிக்கொண்டிருந்தார் பின்புறத்தை. அந்த போலீஸ்காரன் பாவம் பயந்து போயி ஸாரி சார் ! உங்களை பார்க்கறப்பவே நினைச்சேன், இவர பாத்துதான் தப்ப கணக்கு போட்டுடேன் என்றான் எங்களைப்பார்த்து. அதைக்கேட்டு க.பு மேலும் டென்சனானார். சார் வாங்க ஒ.பி(புறக்காவல் நிலையம்) ஸ்டேசன் போயி முகத்த கழுவிட்டு போலாம் என்றபடி அழைத்து போனார். அங்கு சென்று லெமன் ஜூஸ் அந்நேரத்துக்கு எங்கிருந்தோ வாங்கி வந்து குடிக்கச்சொல்லி உபசரித்துக்கொண்டிருந்த போது உள் நுழைந்தார் அக்காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர். எங்க நேரம் அன்னைக்கு சாயுங்காலந்தான் அந்த எஸ்.ஐ பொண்டாட்டியை எவனோ தண்ணியைப்போட்டு லந்த(கிண்டல்) கொடுத்துருக்கான். உள்ள வந்தவரு எங்கள ஒரு மாதிரியா பாத்துட்டு அந்த போலீச்காரன் பக்கம் திரும்பி என்ன கேசு, இது ? உக்கார வச்சு கொஞ்சிகிட்டு இருக்கேன்னு எரிச்சலா கேட்டான். அதுக்கு அந்த போலீசு' எழுத்தாளர்களாம் சார், அரசரடி மாநாட்டுக்கு வந்துருக்காங்க கொஞ்சம் ஓவராச்சு போல அதான் உங்காந்துட்டு போங்கய்யான்னு உக்காரா வச்சுருக்கேன் என்றான்.





யோவ் பஸ்ல ஏத்தி வெரட்டி விடுயா, சாயுங்காலத்துல இருந்து குடிச்சவுனங்களை கண்டாலே வெறி வருது என்றபடி , க.பு'வை அழைத்து எந்த ஊருயா நீ ! என்றார் . சென்னை என்றார், சுகுணாவும் சென்னை என்றே சொல்ல நான் எனது ஊரைச்சொன்னேன்.

சென்னைல எங்க ? என்றார் . நம்பர் 117 , பெருமாள்கோவில் தெரு, சூளை என்று கண்ணீர்புகை சொல்ல. சுகுணாவும் தனது முகவரியாக , நம்பர் 118 , பெருமாள்கோவில் தெரு , சூளை என்று சொல்லி அந்த எஸ்.ஐ யிடமும் க.பு'க்கு கு***யில் மேலும் இரண்டு வாங்கித்தர முயற்சித்தார்.

சரி என்னா பொஸ்தகம்யா எழுதிருக்கே என்றார்? உழைப்பை ஒழிப்போம் என்கிற புத்தகத்தை ஜெர்மன் லருந்து மொழி பெயர்த்திருக்கேன் சார் என்றார் க.பு'

புத்தக தலைப்பைகேட்டு பொறுமையிழந்த எஸ்.ஐ. சுகுணா திவாகரை நீ என்ன எழுதிருக்கே என்றார். நான் கவிஞன் சார் என்றார். அப்போ ஒரு கவிதை சொல்லியிட்டு போ என்றார்.

*பறக்க இயலா சிறகுகளின் ஓலத்தை
மேலும் கேட்டபடி தொடர்கிறது பயணம்
மாட்டுவண்டிகளின் தடம் நம் வாழ்க்கை
போல் காய்ந்த தரையில் இருக்காது
விழிகள் மூடு செவிகள் திற...

அவரு அவனையே பாத்துகிட்டு இருந்தாரு. புரிஞ்சுச்சா புரியலையான்னே தெரியல. சரி ஒழுங்க ஊரு போயி சேருங்க என்றபடி அனுப்பி வைத்தார்.

என்ன ரொம்ப போரடிச்சிட்டேனா, இனிமேதான் இருக்கு நம்ம "பஞ்ச்"

நாங்க போயி அடுத்த பஸுக்கு காத்துகிட்டு இருந்தோமா, அப்போ ஒரு நாலு பேரு கடலைவண்டி காரனுடன் போதையில் வம்பிழுத்துக்கொண்டிருந்தனர். நம்ம எஸ்.ஐ அங்க வந்தவர் அவனுங்களை கூப்பிடு விசாரித்து கொண்டிருந்தார். எதோ ஓவியர் மாநாடுக்கு கோவில்பட்டி போயிட்டு ரிட்டர்ன் ஆயிருக்கானுங்க போல


எஸ்.ஐ நம்மள பாத்து சிரித்துக்கொண்டே என்னய்ய இன்னைக்கு பூராம் கலைஞர்களா வந்து நம்ம தாலிய அறுக்குறிங்க என்றபடி அவனுங்களை அழைத்து எச்சரித்து ஒழுங்காய் ஊர் போய் சேரும் படி சொல்லிவிட்டு அவனுங்களை ஒருத்தன கூப்பிட்டு ஓவியம் வரைஞ்சுகாமிச்சுட்டு போ என்று உத்தரவிட்டார்.

நான் சிகரட் வாங்க போயிட்டு வந்து பாக்கறேன் , அவன போட்டு வெளுத்துகிட்டு இருக்காரு. 'ஏது அம்மன படம் வரஞ்சிட்டான் போலன்னு பக்கத்துல போனா, " யாருகிட்டடா பொய் சொல்ற பிராடுகாரா என்றபடி திரும்பவும் அடிக்கிறாரு. அப்படி என்னாதான் வரஞ்சானு பாத்தா

பாவம்யா அவனுங்க நவீன ஓவியர்கள். அவனுக்கு தெரிஞ்சத வரைஞ்சுருக்கான். அதுக்கு இந்த எஸ்.ஐ அவனிடம் "ஏண்டா சாயத்தை பூராம் கரச்சு ஊத்திட்டு ஓவியம்னா சொல்றன்னு அடி பின்னிருக்காரு.

( சந்திப்போம்)

Wednesday, October 04, 2006

@ 6:24 PM எழுதியவர்: வரவனையான் 8 மறுமொழிகள்


ஒடுகிற ஆளைப்பார்த்து " பிடி, பிடி " என்றவாறே ஒரு கூட்டம் ஓடியது.
கடைசியில் அரங்கின் சுற்றுசுவர் அருகே அவரை பிடித்து உள்ளே இழுத்து வந்தனர்.

அருகில் போய் பார்த்தால் "மாம்ஸ்" .

என்ன மாம்ஸ் டோண்டுவ பார்த்து இந்த ஓட்டம் ஓடுற என்றேன்.

அப்பவும் கபடி கபடி சொல்லுற மாதிரி அவரும் "பிடி, பிடி"ன்னு சொல்லிகிட்டு இருந்தாரு .

மாம்ஸ் ஒடுனது நீங்க, நீங்களே பிடி, பிடின்னு சொல்லிகிட்டு இருந்தா எப்படி?ன்னு ஒரு செம கேள்வி கேட்டேன் ( விதி பட வாட்ச்மேன் ஸ்டைலில்).

அப்பவும் அவரு வாசல பாத்து "பிடி, பிடின்னு" சொல்லிகிட்டு இருந்தாரு. சரி அங்க திரும்பிபாத்தா டோண்டு குரூப்புக்கு பின்னால பொன்ஸ் தலைமைல பா.க.ச உறுப்பினர்கள் நின்று கொண்டிருந்தனர். போதா குறைக்கு மதுரை மாவட்ட செயலாளர் லீவிங் ஸ்மைல் வேறு பா.க.சங்க கொடியுடன் வந்திருந்தார்.

இப்ப புரியுதுங்க அவரு ஏன் "பிடி, பிடி" சொல்லிட்டு இருந்தாருன்னு என்றார் நா.கணேசன் . என்னானு சொல்லுப்பா" எனக்கேட்கவும் சொன்னார் .

" தலைவா, பிடி என்றால் பிடின்னு மட்டும் பொருள் இல்லை. தமிழ்ல பிடி என்றால் பெண்யானை என்றும் ஒரு பொருள் உண்டு" இப்போ வாசலை பாருங்க, இவரு ஓடினதுக்கும் ,பொலம்புனதுக்கும் அர்த்தம் விளங்கும்'ன்னாரு.

ஆக அப்ப பெண்யானை படம் வச்சுருக்கிறது பொன்ஸ்தான் ,சென்னை பாக.ச தலைவி. அதான் புள்ள பயந்திருக்கு...

மாம்ஸ் அது பா.க.ச தான். பா.வெ.ச ( பாலாவை வெளுப்போர் சங்கம்) இல்ல பயப்பிடாதேள்.

என்றபடி கேண்டீன் பக்கம் போனால். போண்டா வியாபாரம் தூள் பறக்குது, " நீங்க உடுப்பி ஹோட்டலுல போண்டா போட்டுகிட்டு இருந்தவரு தானே" என்று கேண்டீன் சமையல்காரரிடம் நலம் விசாரித்து கொண்டு இருந்தது டோண்டு டீம். நாமளும் ஒரு போண்டா சாப்பிடுவோமே , அப்படி என்னாதான் இருக்கு இதில அப்படின்னு ஒரு வாய் பிச்சு வாய்க்குள்ள போடப்போனேன். ஒரு கை தடுத்தது.

யாருடான்னு பாத்தா தல, சொல்லுங்க முத்து(தமிழினி) என்றேன் ,

இந்த கொடுமைய வந்து பாருங்க என்றார்.

என்ன மாம்ஸ் இன்னொரு தடவை ஓடியிருப்பார். அவ்வளவுதானே என்றபடி வாசலுக்கு போனா " கமலஹாசன் பட்டம் பெறப்போகும்" வலைப்பூ கமலஹாசன் லக்கியார் அவர்களே வருக வருக அப்படின்னு ஆளுயர ஹோல்டிங்ஸ் வச்சுட்டு போயிருக்காய்ங்க....

வழக்கம் போல் "அதர் ஆப்சன் இயக்கம்" இந்த சம்பவத்துக்கும் பொறுப்பேற்று கொள்வதாக துண்டறிக்கைகளை எறிந்து விட்டு போயிருந்தது.

என்னங்க இது உட்டா இன்னைக்கே கட்சி ஆரம்பிச்சுருவாய்ங்க போல தெரியுது, வழக்கமா ஓட்டு போடுறதுதான் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு சொல்லுவாய்ங்க. இவைங்க கட்சில உறுப்பினர இருந்தாக்கூட யாருக்கும் தெரியக்கூடாதுன்னு ஏதும் விதி வச்சுருப்பாய்ங்களோ என்றார் முத்து கவலையுடன்.

சரிங்க , நீங்க இங்கையே இருங்க நான், லக்கியை தேடி பிடிச்சு கூட்டிட்டு வாரேன் அவரையே கேட்போம் என்று முத்து(தமிழினி) கிளம்பி போனார்.

திரும்பி வருகையில் லக்கியிடம் வரவனை, மாம்ஸ் உள்ளிட்ட பார்ட்டிகள் எகிறி கொண்டிருந்தனர். முத்து வந்து விலக்கி விட்டார். விடுங்கப்பா நான் தான் கேக்குறேன்னு சொன்னேன்ல அதுக்குள்ள ஏன் தகறாறு பண்ணுறிங்க என்றார் பொறுமையாக.



அதுக்கு மாம்ஸ் சொன்னார் " தகராறுலாம் பண்ணலைங்க லக்கி எங்க பிரதர் மாதிரி, என்ற மாம்ஸை வரவனை இடைமறித்து "இல்லை லக்கி எனக்கு சகோதரர் மாதிரி அப்படின்ன மாம்ஸ்க்கு மாப்ளை மாதிரி " என்றார்.

லக்கி கண்கலங்குவதை பார்த்த முத்து(தமிழினி), தானும் நெகிழ்ந்து "லக்கி பாருங்க நம்ம எதோ மன்சுல தோனுனத எழுத வந்தோம், எப்படி உறவுகள் கிடச்சிருக்கு பார்த்திங்களா" என்றார்.

லக்கி டென்சனாகி " அதுக்கில்லைங்க நான் லீவிங் ஸ்மைல பற்றி ஒரு பதிவு போட்டேன் அதுக்கு இங்க வந்து ரெண்டு பேரும் மிரட்டுராங்க அதான் என்றார். முத்து திரும்பி முறைக்க ரெண்டு பேரும் வூடு ஜுட்.....

விழா துவங்கி விட்டதால் எல்லோரும் இந்நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கு கிளம்பலாம் என்று நினைக்கிறேன்.