Friday, September 29, 2006

@ 12:41 PM எழுதியவர்: வரவனையான்

எதிர்பார்த்ததைவிட அதிக கும்மிகள் அடிக்கப்பட்டுள்ளதால் இது ஒரு வெற்றிகரமான பதிவு என்றே கொள்ளலாம். அதே வேளையில் நான் குறிப்பிட்டுள்ள பாலா,பிரியன், செந்தழல் ரவி ஆகியோர் எதிர்வினை ஆற்றாத காரணத்தால் வரும் பதிவுகளில் அவர்கள் மீதான காலய்த்தல் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன் ( இதில் பாலா எனது பதிவை படித்து விட்டு "வக்காலி மாப்ளே உனக்கு இருக்கு" என்று கறுவியதாகவும் ஒரு வதந்தி உலவுகிறது ) சரி இதையெல்லாம் கணக்கில் எடுத்தால் பா.க.ச அங்கத்துவராக முடியுமா?

போட்டி முடிவுகளுக்கு போவோமா........

1) முதன் முதலில் தனது எதிர்ப்பை பதிவு செய்து எஸ்.வி.ரங்காராவ் & எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகிய இரு பட்டங்களை தக்க வைக்கிறார் முத்து(தமிழினி)

2) லக்கிலுக் - தனக்கு வழங்கபட்ட கமலஹாசன் என்கிற பட்டத்தையும் இதயக்கனி என்கிற விருதையும் பெருமிதத்தோடு வாங்கி செல்கிறார்

3) எஸ்.பாலாபாரதி - (.......சிரிப்பை அடக்கமுடியவில்லை) "ஜெமினி" பட கலாபவன் மணி ஸ்டைலில் அனகோண்டா போல் வந்து விருது வாங்குகிறார்.

4) பிரியன் - தமிழ்படங்களில் வரும் அமெரிக்க மாப்பிள்ளை போல் கோட் சூட்டில் வந்து விருது வாங்கி பார்வையாளர்களை பார்த்து கை அசைத்து செல்கிறார்

5) செந்தழல் ரவி - MARRY ME என்கிற எழுத்துள்ள பனியன் போட்டு பெர்முடாஸுடன் மேடைக்கு வருகிறார். வருது ச்சை விருது வாங்கி "பெண்கள்" பக்கம் பார்த்து கையசைத்து, மாதவன் & "தென்னகத்து ஜேம்ஸ் பான்ட்" ஜெய்சங்கர் ஆகிய விருதுகளை வாங்கி செல்கிறார்

6) டோண்டு மெல்ல மேடையேறி வருகிறார். ஓம்காளி, ஜெய்க்காளி என்று "சாமி" வந்தவர் போல் ஒருவர் பார்வையாளர் வரிசையில் இருந்து கத்திக்கொண்டு குதிக்கிறார். SCREAM பட வில்லன் கெட்டப்பில் ஒருவர் அவரைனோக்கி ஓடிவருகிறார்.இருவரையும் அமரவைக்க காவலர்கள் படாத பாடு படுகின்றனர்.கடைசியில் அவர்கள் இருவரும் முறையே ம்யூஸ் மற்றும் விடாது கருப்பு என்று தெரியவருகிறது.ஜெமினி கணேசன் & சாவலே சமாளி பட்டங்களை பெற்று கேண்டின் நோக்கி மெல்ல நடை போடுகிறார்

( டரியல் தொடரும் )

13 மறுமொழிகள்:

 1. வரவணை... என்னய்யா இது.. சாப்புடுற நேரத்தில்... ஒரே சிரிப்பாணியாப் போச்சு.. ஆபீஸில் எல்லாம் ஒரு மாதிரி பார்க்குறாங்க..

  ஆனாலும் உள்ளூர்ல இல்லாதவரை ரொம்ப ஓவரா கலாய்க்கக் கூடாதுங்க.. பாருங்க, கூப்பிட்டு இப்படி டரியல் ஆக்கி இருக்கீங்கன்னு சொல்லக் கூட முடியலையே! :(

  (//என்று கறுவியதாகவும் ஒரு வதந்தி உலவுகிறது// - வதந்தி உண்மைதான். அவரது போனில் அவரே அவுட்கோயிங் பண்ண லைன் கிடைக்காத காரணத்தால், வதந்தி நிலையிலேயே நின்று விட்டது என்று நினைக்கிறேன் ;) )

 1. //ஓம்காளி, ஜெய்க்காளி என்று "சாமி" வந்தவர் போல் ஒருவர் பார்வையாளர் வரிசையில் இருந்து கத்திக்கொண்டு குதிக்கிறார்.//

  ஸாமி வந்தது போல் என்று திருத்தி படிக்கவும்ட:))(ம்யூஸ் கோபிக்க மாட்டார்)


  // ஜெமினி கணேசன் & சாவலே சமாளி பட்டங்களை பெற்று கேண்டின் நோக்கி மெல்ல நடை போடுகிறார்//

  :))

 1. 1:01 PM  
  Anonymous said...

  பொன்ஸ் அக்காவிற்கு சீக்கிரம் பட்டத்தைக் கொடுங்கள்
  நிறையப் பேர் அதைக் காணக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்!

  சின்னா

 1. 1:04 PM  
  Anonymous said...

  "SCREAM பட வில்லன் கெட்டப்பில் ஒருவர் அவரைனோக்கி ஓடிவருகிறார்.இருவரையும் அமரவைக்க காவலர்கள் படாத பாடு படுகின்றனர்.கடைசியில் அவர்கள் இருவரும் முறையே ம்யூஸ் மற்றும் விடாது கருப்பு என்று தெரியவருகிறது."
  ம்யூஸ் விஷயத்தில் குழப்பம் இல்லை. ஆனால் விடாது கருப்புவையும் போட்டதிலிருந்து அவர்தான் போலி டோண்டு என்று நீங்கள் கூற வருகிறீர்களா?

  அசுரன்

 1. //ம்யூஸ் விஷயத்தில் குழப்பம் இல்லை. ஆனால் விடாது கருப்புவையும் போட்டதிலிருந்து அவர்தான் போலி டோண்டு என்று நீங்கள் கூற வருகிறீர்களா?

  அசுரன்//


  அசுரன் அண்ணே ! நம்மளாம் ஒரு ஊரு காரய்ங்க வம்புல மாட்டிவிடாதிங்க !!!!!!!!

 1. //ம்யூஸ் விஷயத்தில் குழப்பம் இல்லை. ஆனால் விடாது கருப்புவையும் போட்டதிலிருந்து அவர்தான் போலி டோண்டு என்று நீங்கள் கூற வருகிறீர்களா?

  அசுரன்//


  அசுரன் அண்ணே ! நம்மளாம் ஒரு ஊரு காரய்ங்க வம்புல மாட்டிவிடாதிங்க !!!!!!!!

 1. மாவீரன் டோண்டு அவர்களுக்கு போண்டா ராகவன் பட்டம் அளிக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.

 1. கமல்ஹாசன் பட்டம் கொடுத்ததற்கு நன்றி....

  அதனால் இங்கே ஒரு இலவச விளம்பரம் கமல் ரசிகர்களுக்காக போட்டுக்கறேன்.....

  http://madippakkam.blogspot.com/2006/09/blog-post_115951854651297108.html

 1. /*( இதில் பாலா எனது பதிவை படித்து விட்டு "வக்காலி மாப்ளே உனக்கு இருக்கு" என்று கறுவியதாகவும் ஒரு வதந்தி உலவுகிறது )*/

  இதை நான் சொல்லலேதானே :)

 1. /*பிரியன், செந்தழல் ரவி ஆகியோர் எதிர்வினை ஆற்றாத காரணத்தால் வரும் பதிவுகளில் அவர்கள் மீதான காலய்த்தல் தொடரும் */

  ஆகா மக்கா கலாய்த்தலா?ஏதோ எம்மேல பாசம் கொண்டு பட்டம் கொடுத்ததா அல்ல நினைச்சு சும்மா விட்டுட்டேன்...

  இப்போ எதிர்வினை தரலாமா?

 1. //ஓம்காளி, ஜெய்க்காளி என்று "சாமி" வந்தவர் போல் ஒருவர் பார்வையாளர் வரிசையில் இருந்து கத்திக்கொண்டு குதிக்கிறார்.//

  ஸாமி வந்தது போல் என்று திருத்தி படிக்கவும்ட:))(ம்யூஸ் கோபிக்க மாட்டார்)//

  முத்து, அவங்களுக்கு எப்பங்க "ஸாமி" வந்துச்சு

 1. :)))))))))))))))))))))

 1. ஏன்பா இந்த வரவனையானுக்கு பட்டமே இல்லையா?