Wednesday, September 27, 2006

@ 1:03 PM எழுதியவர்: வரவனையான்

"தத்துவ தரிசனம்" என்பார்களே அது போல் வாசகர்களுக்கு படிக்கும் பொழுது உள்ளுக்குள் சில மாற்றங்கள் நிகழம்,அது எந்த எழுத்தாளர்களை படிக்கிறார்கள் என்பதை பொறுத்து மாறும். உதாரணமாய் எனக்கு எஸ்.ராமகிருஷ்னனை படிக்கும்போது முதுகில் வெயில் அடிப்பதை போல் உணர்வேன். அதுபோல் ஜெயமோகனை படித்தால் காட்டுக்குள் ஆந்தைகளின் அலறலோடு படிப்பதுபோலும் மை டியர் சாருநிவேதிதாவை படித்தால் ஒரு நல்ல டாஸ்மார்க் பாரில் உட்கார்ந்து இருப்பதை போன்றும் தோன்றும் இதே விடயத்தை நமது வலைப்பதிவர்களிடம் பொறுத்தி பார்க்கும் பொழுது நினைவுக்கு வருவது சினிமா நடிகர்கள். ஆகவே நம் பதிவர்களுக்கு ஆளுக்கு ஒரு பட்டபெயர் அளிக்கலாம் என்றும் இதில் நான் மட்டுமல்லாமல் அனைத்து வலைப்பதிவர்களும் பங்கு பெறலாம். ஆனால் தாங்கள் வைத்த பெயரையும் அதற்கான காரணத்தையும் சிறு அளவில் எனக்கு பின்னூட்டமிட்டால் உங்கள் பெயரில் ( அனானிகளும் வரவேற்க படுகிறார்கள்) எனது பதிவில் இனைப்பேன். முதல் கும்மாங்குத்தை ஆரம்பிக்கிறேன்.


முத்து(தமிழினி) - எஸ்.வி.ரங்காராவ் ( எல்லோருக்கும் நல்லவராய் இருப்பதால்,டோண்டுவிலிருந்து போலி டோண்டு வரை "எல்லாருக்கும் நல்லன்" அடுத்தவர்களின் கருத்துகளுக்கு இவர் மதிப்பளிக்கும் தன்மை மிகச்சிறந்த நற்பண்பு )

லக்கிலுக் - கமலஹாசன் (உபயம்: தம்பியுடையான்) இவருக்கு அவர் பெயர் சூட்டியது மிக பொருத்தமாய் உள்ளது(அடிக்கடி கெட்டப் மாற்றுவதாலும் ). வயது மூத்த வலைபதிவாளர்களின் சார்பாய் நான் கேட்க விரும்புவது "தம்பி நீங்க நல்லவரா கெட்டவரா?" லக்கியிடம் நான் வியக்கும் விடயம் அவரின் கருத்துகளுக்காக போராடும் குணம்.

எஸ்.பாலபாரதி - கலாபவன் மணி (சமயத்தில் வில்லனாகவும், ஹிரோ போல் பதிவிட்டாலும் பா.க.ச'வின் அட்டகாசத்தால் காமெடியனாக்கபடும் பரிதாபத்துக்குரிவர்) ஒருவரிடம் முதல் சந்திப்பிலேயே இவர் கொள்ளும் சினேகத்தன்மை வியக்கவைக்கிறது. எல்லாத்தளங்களிலும் இயங்குவதால் இவரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று.

பிரியன் - அமெரிக்க மாப்பிளை(தமிழ் சினிமா) பல்வேறு பணி நெருக்கடியிடையே இவரிடம் வெளிப்படும் கவிதைகள் அற்புதம். இயல்பான இந்த "கோவைத்தம்பி" என் அன்புக்குரியவர்.

செந்தழல் ரவி - மாதவன் ( கொஞ்சம் ஜொள்ளுப்பார்ட்டிதான் இருந்தாலும் என்னை போல் வெட்டி அரட்டை அடிக்காமல் உருப்படியான பதிவுபோடும் இவருக்கு நன்றிகள், கீப் இட் அப் யுவர் ஜொள்ளு & ஃபைன் ஆர்டிக்கல்ஸ் )

அனானிகளே & அன்பான பதிவர்களே இனி நீங்களே "வூடு கட்டி அடிங்கள்" இறுதிப்பட்டம் "காலாய்த்தல் கிங்" எனது கையால் வழங்கப்படும்.

( "கலக மொழி பேசும் ஸ்ஃபூபி சினிமாக்கள் " என்கிற சிரியஸ் கட்டுரை எழுதுவதால் கொஞ்சம் காமெடிக்கு இது )

42 மறுமொழிகள்:

 1. //முத்து(தமிழினி) - ஸ்.வி.ரங்காராவ் ( எல்லோருக்கும் நல்லவராய் இருப்பதால்,டோண்டுவிலிருந்து போலி டோண்டு வரை "எல்லாருக்கும் நல்லன்" அடுத்தவர்களின் கருத்துகளுக்கு இவர் மதிப்பளிக்கும் தன்மை மிகச்சிறந்த நற்பண்பு )//

  யாருய்யா ரங்காராவ்? நான் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கிறேன்.ஏய்யா என்னை போலியாரிடம் மாட்டி விடுகிறீர்? :))

  என்னை கண்ட இடத்தில் சுடுவதற்கு ஆள் இருக்கு.எல்லாருக்கும் நல்லானாமே?

 1. ஏங்க நீங்கதானே சொ.செ.சூ?

  அதுக்காக இப்படியா? :-))))

 1. நல்ல ஆட்டத்தை தொடங்கிவைத்திருக்கிறீர்கள்.

  பாலபாரதியை பற்றி சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.நானும் வியந்தேன். மகிழ்ந்தேன். ரசித்தேன். மொத்தத்தில் பாலபாரதி ஒரு தேனீ மனிதர்.

  //ஒருவரிடம் முதல் சந்திப்பிலேயே இவர் கொள்ளும் சினேகத்தன்மை வியக்கவைக்கிறது//

 1. //எஸ்.பாலபாரதி - கலாபவன் மணி //
  சங்கப் பணிகளை என்றுமே மறவாத பா.க.ச தலைவர் வரவணை வாழ்க!

 1. பாவம் முத்து ;-)))))))))))))))

 1. 4:46 PM  
  Anonymous said...

  டோண்டு : ஜெமினி கணேசன் (சாம்பார்)

  மார்கட்டு அவுட்டு ஆனாலும் கடசிவரை தொழிலில் இருதார் இல்லையா அது போல் இவரும்

 1. மேற்படி அனானி கொஞ்சம் விரிவாய் எழுதியிருந்தால் நன்றாய் இருக்கும். இனி கும்மியடிக்கும் அனானிகள் கொஞ்சம் விரிவாக கலாய்த்தால் நன்று

 1. 5:05 PM  
  Anonymous said...

  வரவனை : கவுண்டமணி

  இன்னார் என்றில்லாமல் எல்லாரையும் போட்டுத் தாக்கும் காரணத்தால்... இப்போதைக்கு லால் சேட்டும் தலைவரும் இவரிடம் வகையாக மாட்டி இருக்கிறார்கள்..

 1. 5:07 PM  
  Anonymous said...

  கால்கரி சிவா - பிரதாப் போத்தன்

 1. வரவனையான் = பாட்ஷா

 1. 5:21 PM  
  எவனா இருந்தா உனக்கென்ன? said...

  ம்யூஸை யாரோ கவுண்டமணி என்றார்கள். கவுண்டமணி அளவுக்கெல்லாம் ம்யூஸுக்கு அறிவில்லை என்பது என் கருத்து.

 1. யோவ் மத்தவைய்ன்ங்களுக்கு பேர வைங்கப்பா ! சும்மா எனக்கே பேரு வைக்க அலையிறிங்க

 1. 5:23 PM  
  Anonymous said...

  போலியார் = சகலகலா வல்லவன்

  -லக்கிலுக்

 1. //டோண்டு : ஜெமினி கணேசன் (சாம்பார்)//

  சாம்பார் என்பதை விட "போண்டா" என்பதே பொருத்தமாக இருக்கும்.

 1. மேலே லக்கிலுக் என்ற பெயரில் கமெண்டு போட்ட அனானி நான் அல்ல. இருந்தாலும் அவர் சொன்னது உண்மை தான் என்று நினைக்கிறேன்.

 1. 5:41 PM  
  Anonymous said...

  கோவி.கண்ணன் - சிவகுமார் ( ஓவியமாக படமும் போடுவார், கவிதைகளும் எழுதுவார்)
  ம்கேந்திரன்.பெ. - பிரகாஷ்ராஜ் (குணசித்திரமாகவும் பதிவு போடுவார் - சில நல்ல பதிவுகளும் தொனியால் வில்லத்தனமாகத் தோன்றும்)
  நாமக்கல் சிபி - டி.எஸ். பாலையா ( விவரமாகவும் பதிவு செய்வார் - கோமாளித்தனமாகவும் பதிவு போடுவார்).
  லிஸ்ட் தொடரும்
  சின்னா

 1. பெறுநர்

  திரு. வனவரயான் அவர்கள்,
  பா.க.ச.,
  திண்டுக்கல் கிளை,
  பிந்தினி ஒயின்ஸ் எதிரில்,
  திண்டுக்கல் பஸ் நிலையம்,
  திண்டுக்கல்-01.


  அனுப்புநர்

  பா.க.ச.,
  மதுரை கிளை-02,
  (பதிவு. எண்.0452/03/06),
  தமுக்கம் மைதானம் அருகில்,
  மதுரை.

  பொருள் : ஹி ஹி வெட்டியாத்தான்.

  தல,

  பா.க.ச. திண்டுக்கல் தலைவருக்கு என் வாழ்த்துக்கள்...

  தங்களது பதிவில் பின்வரும் இந்த பகுதியைக் கண்டோம்..

  // எஸ்.பாலபாரதி - கலாபவன் மணி (சமயத்தில் வில்லனாகவும், ஹிரோ போல் பதிவிட்டாலும் பா.க.ச'வின் அட்டகாசத்தால் காமெடியனாக்கபடும் பரிதாபத்துக்குரிவர்) //

  ஹி ஹி, மிகவும் ரசித்தோம்..

  நன்றி  இடம் : மதுரை
  நாள் : 27/09/2006

 1. 6:09 PM  
  Anonymous said...

  துளசி கோபால் அம்மையார் - எம்.வி.ராஜம்மா (சாத்வீகமான பதிவுகளையே போடுவதாலும் - தன் கணவரை விடாமல் பதிவிற்குள் கொண்டுவந்துவிடுவதாலும்)

  Chinna

 1. 6:28 PM  
  Anonymous said...

  ஞானவெட்டியான் - நாகையா ( பக்திப் பதிவுகளும், நெறிப்படுத்தும் பதிவுகளுமே போட்டுக்கொண்டிருபதால்)

  என்னார் - எஸ்.வி சுப்பையா ( விவசாயம், பழைய கால்ச் செய்திகள் என்று பதிவுகள் போடுவ்தால்)

  சந்திரவதனா அம்மையார் - சரோஜா தேவி ( மனதை மயக்கும் பாட்டுக்களைப் பதிவுகளாகப் பதிவதாலும் சில சம்யங்களில் நெஞ்சை உருக்கும் இலங்கை மக்களைப் பற்றிய கட்டுரைகளை பதிவு செய்வதாலும்)

  லிஸ்ட் தொடரும்
  Chinna

 1. 6:46 PM  
  Anonymous said...

  விடாது கருப்பு - பி.எஸ்.வீரப்பா ( சபாஷ் சரியான் போட்டி என்னும் அளவிற்குப் போட்டி கொடுக்கும் பதிவுகளாகப் போடுவதால்)

  விடாது சிகப்பு - எம்.என்.நம்பியார் (சரிக்குச் சரியாகக் கத்தி கம்பு என்று எதையாவது எடுத்துக்கொண்டு பதில் பதிவுகள் போடுவதால்)

  புதுக்கடவுள் செல்வன் - நெப்போலியன் ( கதாநாயகன் பதிவுகளும் போடுவார் - வில்லஙப் பதிவுகளும் போடுவார்)

  லிஸ்ட் தொடரும்
  Chinna

 1. 6:55 PM  
  Anonymous said...

  வாத்தியார் சுப்பையா - பாக்யராஜ் ( சில பதிவுகளில் நல்ல கதை கட்டுரைகள் நகைசுவை கலந்து எழுதுவதாலும், சில சமயம் தன் வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து கூத்தடிப்பதாலும்)

  லிஸ்ட் தொடரும்
  Chinna

 1. 7:08 PM  
  Anonymous said...

  பாஸ்டன் பாலா - அஜீத் குமார் (பாதிப் பதிவுகளை வெளிநாட்டு லொக்கேசனிலேயே எடுப்பதால்)

  கெளதம் - ஏ.வி.எம் சரவணன் ( பதிவுகள் போடுவதைவிடப் பரிசுகள் கொடுப்பது அதிகமாகிவிட்டதால்)

  வெட்டிப்பயல் - ரமேஷ் கண்ணா ( எந்தப் பதிவு என்றாலும் நகைசுவையைச் ஜோடி சேர்த்து எழுதுவதால்)

  லிஸ்ட் தொடரும்
  Chinna

 1. இதுவரை யாருக்கும் பெயர் வைக்காத காரணத்தால் வெறும் பார்வையாளனாக மட்டுமே ...;)

 1. 6:12 AM  
  Anonymous said...

  தமிழ்மணம் காசி - கே.பாலச்சந்தர் (நிறைய வலைஞர்களை உருவாக்கியவர்)

  வடுவூர் குமார் - ஆர்ட் டைரெக்டர் வைரா பாலு (கட்டிடக் கலையைப் பற்றியே பெரும்பாலும் பதிவுகள் போடுவதால்)

  அன்னா கண்ணன் - பாலு மகேந்திரா (படங்களை நிறையப் போடுவதாலும், அதே நேரத்தில் நல்ல பதிவுகளைக் கொடுப்பதாலும்)

  வெட்டிப்பயல்: - நாகேஷ் (எல்லாப் பதிவர்களுக்கும் , பதிவுகளுக்கும் தகுந்தவர், பிடித்தவர்)

  தமிழ் பார்டெண்டர் - விவேக் ( பெண்ணைப் பற்றியும், ஒயினைப் பற்றியுமே பதிவுகள் போடுவதால்)

  பொன்ஸ்' அம்மையார் - எம்.என்.ராஜம் (முன்னவருக்குப் படங்களில் உச்சரிப்பு திருத்தமாக இருப்பதைப்போல பொன்ஸ் அம்மையாரின் பதிவுகளில் கருத்துக்களும் வார்த்தைப் பிரயோகமும் திருத்தமாக இருக்கும்

  கேட்டால் தொடரும்
  சின்னா என்ற சின்னப்பதாஸ்

 1. பொன்ஸ்' அம்மையார் - சுத்தம்!

  எம்.என்.ராஜம் - இது அத விட சுத்தம்.. யாரோ வயசான நடிகைன்னு புரியுது.. யாருன்னு தான் தெரியலை :)

 1. //நாமக்கல் சிபி - டி.எஸ். பாலையா ( விவரமாகவும் பதிவு செய்வார் - கோமாளித்தனமாகவும் பதிவு போடுவார்).//

  சிரிக்காதே..சிரிக்காதே....
  (தில்லானா மோகனாம்பாள்...வசனம்)

 1. 11:21 AM  
  Anonymous said...

  //'பொன்ஸ்' அம்மையார் - சுத்தம்!
  எம்.என்.ராஜம் - இது அத விட சுத்தம்.. யாரோ வயசான நடிகைன்னு புரியுது.. யாருன்னு தான் தெரியலை :)//

  சாரி தப்பாக சொல்லாதீர்கள்.

  'பொன்ஸ்' பாட்டி - விடுகதைகள் போடுவதால்

 1. //கேட்டால் தொடரும்
  சின்னா என்ற சின்னப்பதாஸ்//

  தொடருங்கள் சின்னா :)

 1. 1:51 PM  
  Anonymous said...

  முத்து (தமிழினி) - எஸ்.எஸ்.ராஜேந்திரன் (சென்னைக்கு வருகிறேன், சிங்காரசசென்னை, சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு என்று இரண்டாம் நாயகன் பதிவுகளையே போடுவதால்)

  வரவனையான் - மணிவண்ணன் ( இயக்கவும் செய்வார் - எழுதவும் செய்வார் - கும்மாளம் அடிக்கவும் விடுவார் அதனால்)

  அருள் குமார் - டில்லி கணேஷ் (காதில் பூ வைப்பார் - அல்லது பூ வைக்கச் சொல்லி வேடிக்கைபார்ப்பார்)

  கைப்புள்ளை, இளா, பினாத்தல் கணேஷ் & கோஷ்டி
  - வடிவேலு, சார்லி ( அப்படியே ப்ரண்ட்ஸ் படக் காண்ட்ராக்டர் கோஷ்டியை நினைத்துக்கொள்ளுங்கள் அதைவிட அதிகமான லொல்லு பதிவுகளில் இருப்பதால்)

  கேட்டால் தொடரும்
  சின்னா என்ற சின்னப்ப்தாஸ்

 1. பா.க.ச சென்னை தலயைக் கலாய்த்த சின்னப்பதாஸ் வாழ்க..

 1. Me Me Me !!!!

 1. //கேட்டால் தொடரும்
  சின்னா என்ற சின்னப்பதாஸ்//  சின்னா, என்னா இது ஒவ்வொரு தடவையும் கேட்டால், கேட்டால் என்று கேட்டுக்கொண்டு . தொடருங்கள், என் கையால் "கலாய்த்தல் கிங்" பட்டம் வாங்க போவது நீங்கள் தானென்று நினைக்கிறேன். கண்டிப்பாக என்னுடன் கட்டிங் அடிக்கபோவது நீங்கள்தான்.

 1. என் பாராட்டு பத்திரங்கள் இதோ. இதையும் எல்லோரிடமும் வாசித்து கொடுத்துவிடுங்கள்.

  டோண்டு - சவாலேசமாளி
  ரவி - கரகாட்டக்காரன்
  SK - வருவான் வடிவேலன்
  GK - எங்க ஊரு பாட்டுக்காரன்
  ஜோசப் - ராஜபார்ட் ரங்கதுரை
  ம்யூஸ் - ஆளவந்தான்
  லக்கி - இதயக்கனி
  போலி - தசாவதாரம்
  கீழமுத்தூர் - படிக்காத மேதை
  ராகவன் - புன்னகை மன்னன்
  நல்லடியார் - மூன்றாம் பிறை
  பொன்ஸ் - ஆட்டுக்கார அலமேலு


  நன்றி

 1. 5:32 PM  
  Anonymous said...

  சகோதரி பொன்ஸ்
  அம்மையார் என்பதற்காக வருத்தப்பட்டிருந்ததோடு எம்.என்.ராஜத்தைத் தெரியாது என்றிருந்தார்
  ஆக்வே அவ்ருக்குத் தெரியும்படியாக மற்றப்பட்டுள்ளது

  பொன்ஸ் அக்கா - சித்தி புகழ் ராதிகா ( கண்டிப்பான பதிவுகளுக்காகவும், சக பதிவாளர்களோடு கைகுலுக்கிப் பாராட்டும் நல்ல பண்புகளுக்காகவும்)

  இப்போது ஓக்கேயா - அக்காவிடம் கேட்டு விடுங்கள்!

  ஜெயராமன் - டில்லி கணேஷ் ( அர்ச்சகர் பதிவுகளும் உண்டு - அடுத்த பதிவுகளுக்கு வந்து மேளமும் வாசிப்பார்

  சின்னா (ப்ப தாஸ்)

 1. ஜெயராமன்!

  கலக்கிட்டேள்.... போங்கோ..... அசத்தல்....

 1. 5:46 PM  
  Anonymous said...

  ஆசிப் மீரான் - எம்.ஆர்.ராதா ( மண் வாசனையாகவும் பதிவுகள் வரும் - நக்கலடித்தும் பதிவுகள் போடுவார்)

  குழலி - நாஸர் ( அவர் எல்லா ரோல்களுக்கும் சூட்டானவர் - இவர் எல்லாப் பதிவுகளுக்கும்
  சூட்டானவர்)

  கப்பி பய - சந்திரபாபு ( ஒரு பதிவில் உனக்காக எல்லாம் உனக்காக என்பார் - அடுத்த பதிவில்
  பிறக்கும் போது அழுகின்றாய் இறக்கும் போது அழுகின்றாய் என்று வாட்ட ஆரம்பித்து விடுவார்)

  செந்தழல் ரவி - ஜெய்சங்கர் ( மாடர்ன் தியேட்டர் படம் போல டப்பிங் பதிவுகளூம் போடுவார் - குதிரையில் போகும் துப்பறியும் பதிவுகளும் போடுவார்)

  மியூஸ் - கருணாஸ் ( அடித்துக் கலக்குவார் - இல்லை அள்ளிக்கொண்டுபோகும்படி பதிவுகள் போடுவார்)

  Chinna (ppa Doss)

 1. 5:51 PM  
  Anonymous said...

  எஸ்.கே - சோமயாஜுலு
  ( முதிர்ச்சியான ஆன்மிகப்
  பதிவுகளைப் போடுவதால்)
  சின்னா (ப்ப தாஸ்)

 1. சின்னப்பதாஸ்,
  ஆட்டுக்கார அலமேலுவை விட சித்தி ராதிகா ஓகே தான் நைனா..

  என்ன, அந்தம்மா அப்பப்போ வளி(வழி), களிச்சு(கழிச்சு)ன்னு தமிளைக் கொலைப் பண்ணுறதை நினைக்கும்போது தான்.. என் நிலை இப்படி ஆகணுமான்னு ஒரே பீலிங்க்ஸாக் கீதுப்பா!

  (பை த பை கண்டிப்பான பதிவுகள்? பொன்ஸ் பக்கங்களில்? :-D )

  இத்தோட என்னை விட்ருங்கப்பா..மத்தவங்களுக்கும் ச்சான்ஸ் கொடுங்க..

  கடைசியா சொன்ன எம்.ஆர் ராதா, நாஸர், சந்திரபாபு, ஜெய்சங்கர் எல்லாம் ரொம்ப ரொம்ப சரிங்கண்ணா..

 1. 5:59 PM  
  Anonymous said...

  ஓ மிஸ்டர் வரவனையான் - உங்களுக்கும் அலுவலம் விட்டு வீட்டிற்குப் போக வேண்டும் நேரமாகிறது.

  ஆக்வே இன்றைய பட்டமளிப்பு விழாவை இத்துடன் நிறைவு செய்து கொள்வோம் - முடிந்தால் நீங்கள் நாளையும் தொடருங்கள் நானும் வந்து தட்டில் வைத்து பட்டங்களுக்கு அடியெடுத்துக் கொடுக்கிறேன்

  இதுவரை அளித்த பட்டங்களில் நீங்கள் சிறந்ததாகவும் பொருத்தமுள்ளதாகவும் கருதுவது எவற்றை?

  அதை மட்டு சொல்லி வீட்டுக் கிளம்புங்கள்!

  அன்புடன்
  சின்னப்பதாஸ்

 1. சூப்பருங்ணா
  :))

 1. ////ரவி - கரகாட்டக்காரன்////

  Jay, what is this ? how u chose like that :)))

  any Way, Its Coooooool.

 1. ravi

  thanks for your magnamious acceptance. there are some special reasons for you to be this title. but, not good to reply here. anyway, pl take it in good spirit. all in the name of fun only. peace!!!

  Jayaraman