Monday, September 18, 2006

@ 6:01 PM எழுதியவர்: வரவனையான்

பல நாள் தேடுகைக்கு பின் , மிகுந்த சிரமத்திற்கு பிறகு மதுரை சென்ட்ரல் சினிமா தியேட்டருக்கு பின்னால் கஞ்சா வித்து கொண்டிருந்த வரவனையானை கண்டு பிடித்து நமது சிறப்பு நிருபர் பேட்டிக்கு நேரம் கேட்டார்.வியாபாரம் வெகு பிசியாக இருப்பதால் தன்னால் பேட்டிக்கு நேரம் ஒதுக்க முடியாது என்றும் வேண்டுமானால் லக்கிலுக்கின் முகவரி தருவதாகவும் சொன்னார். அவரை கண்டுபிடிக்க நாம் பட்ட சிரமங்களை சொன்னதும் ஒரு மினி பேட்டிக்கு மட்டும் ஒப்புதலளித்தார்.

குரங்கு : வணக்கம், வரவனையான்

வர : வணக்கம்

குர : நாங்கள் குரங்கிலிருந்து வருகிறோம்

வர: நாங்க மட்டும் என்ன கழுதையில இருந்தா வர்றோம், நாங்களும் குரங்குல இருந்து வந்தவைங்கதான்

குர: மன்னிச்சுக்குங்க, நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்கன்னு நெனைக்கிறேன். நாங்க "குரங்கு"கிற இலக்கிய பத்திரிக்கைல இருந்து வர்றோம்.

வர: என்னாது குரங்குன்னு ஒரு பத்திரிக்கையா? ஏன்யா வேற பேரு ஏதும் கிடைக்கலையா? உங்க பத்திரிக்கை வாங்க போறேன்னு சொல்லக்கூட முடியாதே,

இப்ப பேட்டி குடுத்துகிட்டு இருக்கேன், நாளைக்கி படிச்சிட்டு வேணுமுன்னே "போண்டா கனேசேன்" போன் போட்டு " நீ குரங்குக்கு குடுத்த பேட்டி சூப்பர்ன்னு" சொல்லுவான்.

குர: இல்லைங்க ரொம்ப நாளாவே வருது.

வர: என்னாது குரங்கா ? எங்கேருந்து.......


( பேட்டி தொடரும் )

4 மறுமொழிகள்:

  1. ஏங்க வரவனையான், குரங்குக்கு மட்டும்தான் பேட்டி கொசுப்பீங்களா?

    ஆவிக்கெல்லாம் கொடுக்க மாட்டீங்களா?

  1. //கொசுப்பீங்களா?//

    :))

  1. //உங்க பத்திரிக்கை வாங்க போறேன்னு சொல்லக்கூட முடியாதே//

    அடக் கொடுமையே!

    நான் பள்ளியில் படித்த காலத்தில் எங்க ஏரியா எலக்கியவாதி ஒருவர் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையின் பெயர் "மயிறு"

    அதில் நான் ஒரு முறை துணுக்கு ஒன்று எழுதி, மயிறில் எழுதியவன் என்று புகழ்பெற்றேன் :-)

  1. எது வேண்டுமானாலும் எழுதுங்கள். ஆனால் பின்னூட்டக் கயமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.