Tuesday, September 12, 2006

@ 5:55 PM எழுதியவர்: வரவனையான்


"பொது மாத்து" என்று மதுரைப்பகுதில் பரவலாக வழங்கப்படுகிற சொல் தமிழ்கூறும் உலகெங்கும் " தர்ம அடி " என்னும் வடமொழி கலந்த சொல்லாக பயன்படுத்த படுகிறது. இதனை பெறுவதும் அல்லது வழங்குவதும் கொஞ்சம் கிளு கிளுப்பான விடயம் தான். பொதுவாய் பேருந்துகளில் பெண்களை உரசுவோர்,இருக்கையின் இடைப்பகுதில் கையைவிட்டு மாட்டிக்கொள்ளுபவர்கள் நையப்புடைக்கபடுவார்கள். அதுவும் அந்த பெண் கொஞ்சம் சுமாரான பிகராய் இருந்து மாட்டிக்கொள்ளுபவர்கள் நிலை பரிதாபம்தான். தனியாய் நிற்க முடியாத பெருசு கூட ஏறி ஏறி மிதிப்பார்.இது பற்றி ஆராய்ச்சி கட்டுரையே ( பஸ்+பெண்+தர்ம அடி ) எழுதும் அளவுக்கு "ஞானம்" இருந்தாலும் ( ஞானம் என்பது சொந்த அனுபவம் மட்டும் கிடையாது;) ) அதை பற்றி வேறு ஒரு கட்டுரை எழுதும் எண்ணம் இருப்பதால் இப்போதைக்கு நான் வாங்க போகிற பொது மாத்து குறித்து விளக்கிவிடுகிறேன் . எனது பதிவுகளில் நான் வழமையாக இலக்கியவாதிகளையும் மார்க்சீய தோழர்களையும் என்னாலான கிண்டல் தொனியில் எழுதுவதற்கான காரணம் அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் நம்பிக்கையும் ,மரியாதையும் தான் காரணம். அதே வேளை சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதை போல் வாழும் இந்த எளாக்கியவாதிகளையும் அவர்களுடனான எனது அனுபவங்களும் கிஞ்சித்தும் அவர்களை அறியாத பதிவர்களும் படிப்போருக்கும் வாழ்வின் சுவை கூட்டும் நம்பிக்கையென்றி வேறு ஏதும் கள்ள உணர்வு இல்லை. பொது மாத்து கட்டுரையினால் பாதிக்கப்படும் எளாக்கியவாதி ஏதோ பாரில் சந்தித்து எனக்கு வழங்குவார் என்கிற நம்பிக்கையுடன் முதல் பகுதியான நம் செல்ல டவுசர் பாண்டிகளின் ரவுசுகளுடன் துவங்குவோம்.


சியர்ஸ் வித் டவசர்ஸ்

அம்பேத்கர்2000 என்கிற நிகழ்ச்சி நண்பன் சிவா கட்டுரை வாசிக்கவிருக்கிறான் பல தாசப்தங்களுக்கு பிறகு, பரீட்ச்சைக்கு ரெடியாகிற பையனைப்போல் கட்டுரைய மொத நா சாயங்காலத்துல இருந்து மனப்பாடம் பன்ன வேண்டியது, அப்புறம் ஒப்புச்சு பார்க்கவேண்டியதுன்னு இப்படியே போச்சு ஒரு நாளு . நிகழ்ச்சி அன்னைக்கும் சும்மாதானே இருக்க நீயும் வாடா'ன்னு என்னையும் கூட்டிட்டு போனான் . போயி கொஞ்ச நேரம் உங்காந்து இருந்தேன். கரைக்ட்டா 7 மணி ஆச்சு மண்டைக்குள்ள குருவி கத்த ஆரம்பிச்சது "டைம் டூ டிரிங் " என்று . சிவாவை பார்த்தா இரட்டை வாக்குரிமை வாங்கிட்டுத்தான் மேடையை விட்டு வருவான் போலிருந்தது. நானும் கீழ நின்னு பிகர பிக்கப் பன்னுற மாதிரி மேடைய பார்த்து சைன(sign ) போட்டுகிட்டே இருக்கேன் அவேன் கவனிக்கவேயில்ல. அப்புறம் ஒரு வழிய தம்மடிக்க கீழே வந்தவன் கிட்ட போயி போலாம்பா "மண்டைக்குள்ள மணி அடிக்க" ஆரம்பிச்சுருச்சுன்னு சொன்னேன்
எனக்கும் தான் என்று சொன்னவன் " நம்ம " கடைய நோக்கி நடைய போட்டான். உள்ள போயி பாத்தாக்க,ஊரே இங்கதான் இருக்குங்கிற மாதிரி பயங்கர கூட்டம். அதுல நம்ம மக்களும் இருந்தாய்ங்க "சரி வாடா அந்த டேபிளுக்கு போவோம்னு" அவய்ங்களோட போயி உக்காந்து சரக்கு வாங்கறதுக்கு எங்க பங்கு காச கொடுத்தோம். சரக்கும் வந்துச்சு . டம்முளருல ஒரு டவுசரு ஊத்தினாரு , சோடா வாராதுக்கு முன்னாடி ஒரு தோழர் தன்னோட கிளாச மட்டும் எடுத்துகிட்டு ஓரமாய் போயிட்டு வந்தாரு(ஈழத்து father). இங்க இருந்த நம்மாளு அந்த தோழர கோவிச்சுகிட்டான் . எங்களுக்கு இன்னும் சோடா வரலை அதுக்கு முன்னாடி உங்களுக்கு மட்டும் என்ன அவசரம் தோழர்" அப்படின்னும் அதுக்கு அவரு சொன்னாரு ஒரு மருத்துவகுறிப்பு ' தோழர் நீங்க அடிக்கிற சரக்கு எவ்வளவு பாதிப்பு தெரியுமா? லிவர், கிட்னி, எல்லாம் வீக்காயிடும்" அதான் ஒரு மாற்று மருத்துவத்தையும் சேர்த்து நான் குடிப்பேன் நீங்க வேனும்னா முயற்சி செய்து பாருங்கள் என்றார்.

வாயி சும்மாருக்க மாட்டாமெ என்னான்னு நான் கேட்டுப்புட்டேன். அவரு சொன்னதுக்கப்புறம் யாரும் எங்களுக்குள்ள சியர்ஸ் சொல்லிக்கில்ல, அவ்வளவு ஏன், அதுக்கப்புறம் அவேன் அவேன் கிளாசைக்கூட கீழ வைக்கல.


மாறிகிச்சுனா என்ன பன்னறதுன்னுதான்.

வரு சொன்ன மருத்துவ குறிப்பு : முதல் கட்டிங்யுடன் கொஞ்சம் சிறுநீர் சேர்த்துக்கொண்டால் சாராயத்தின் தீங்குகள் அண்டாது என்பதாகும். அதுக்குத்தான் நான் ஓரமாய் போய் வந்தேன் என்பதாகும்

அதுக்கப்புறம் அந்த பாரில் எவனுமே கிளாச கீழ வைக்கல சியர்ஸ்சும் சொல்லிக்கல....


(சியர்ஸ், சீ யூ ஸார்ட்லீ)

11 மறுமொழிகள்:

 1. :-))))))))

  தலை இனிமே தண்ணி குடிக்க கிளாஸ எடுத்தாக் கூட இந்த கருமம் தான் நெனைவுக்கு வந்து தொலைக்கும். :-(

 1. lucky , we two enjoy this joke. can you remember

  :))))))))))

 1. //lucky , we two enjoy this joke. can you remember//

  yeah..

  நல்ல வேளை உங்க ஜோதியிலே நான் கலந்துக்கறதில்லே :-)

 1. 7:34 PM  
  Anonymous said...

  This is the 7-up you mentioned in the 'Bloggers meeting experience'

  Avara Ivaru? :-)))))

 1. no no he is not that guy

  nalla veelai anaaniyaay vanthiirkal ilaay lakki kadithu kothari itruppar

 1. no no he is not that guy

  nalla veelai anaaniyaay vanthiirkal ilaay lakki kadithu kothari itruppar

 1. :))

 1. மூத்திர சாஸ்திரம், பாரத மருத்துவ ஞான மரபில் ஒரு அங்கம்.

  முன்னாள் பாரத பிரதமர் ஒருத்தர் கூட தினம் இதை குடிச்சுட்டு தானே நாட்டை ஆண்டார்?

  இதை குடிக்கிறதை ஏளனம் செய்யும் உங்களை போன்ற, ..., பாரத பண்பாட்டை கேவலப்படுத்துவர்களுக்கான என் எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன்.

 1. // மூத்திர சாஸ்திரம், பாரத மருத்துவ ஞான மரபில் ஒரு அங்கம்.

  முன்னாள் பாரத பிரதமர் ஒருத்தர் கூட தினம் இதை குடிச்சுட்டு தானே நாட்டை ஆண்டார்?

  இதை குடிக்கிறதை ஏளனம் செய்யும் உங்களை போன்ற, ..., பாரத பண்பாட்டை கேவலப்படுத்துவர்களுக்கான என் எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன். //

  தொடங்கிட்டாங்கப்பா!! (இதைச் சொல்லும் போது இரண்டு கைகளையும் தலைமேல் வைத்துக் கொண்டு நான் பீல் பண்ணி சொல்வதைக் கற்பனை செய்து படிக்கவும்....

 1. உங்க பண்பாட நீங்களே வச்சுகுங்க ! :)))

  உவ்வே , அன்னைக்கு ரெண்டு மணி நேரம் கிளாச கையில வச்சுகிட்டு இருந்ததே கொடுமை......

  :))))))

 1. உங்க பண்பாட நீங்களே வச்சுகுங்க ! :)))

  உவ்வே , அன்னைக்கு ரெண்டு மணி நேரம் கிளாச கையில வச்சுகிட்டு இருந்ததே கொடுமை......

  :))))))