Tuesday, September 05, 2006

@ 7:08 PM எழுதியவர்: வரவனையான்

நேற்றைய பதிவு எழுதி தமிழ்மணத்தில் இணைத்த இரண்டாவது நிமிடம் அன்பு மாம்ஸ் பாலபாரதியிடமிருந்து போன்.அதை அப்படியே உங்களுக்காக இங்கு பதிவு செய்கிறேன். ;)

டிரிங் டிரிங்

வர: (சென்னை நம்பரா இருக்கு எவன் கூப்பிட்டு கழுத்தறுக்க போறானோ)

வர: ஹலோ. வரவனை ஹியர்

பால : யோவ் மாப்பிள்ளை இதல்லாம் நல்லா இருக்கா. இப்படியா பன்னுவ?

வர: ஏப்பா என்னாச்சு?

பால: எதை எழுதுறதுன்னு ஒரு விவஸ்தை வேணாமா? ச்சை

வர: மாம்ஸ் என்னா இப்ப நடந்துருச்சுன்னு இப்ப இப்படி குதிக்கிற?

பாலா: ஏற்கனவே நம்மளை எப்படி வம்பிழுக்குறதுன்னு அவேன் அவேன் ரூம் போட்டு டீப் டிஸ்கர்சன்ல இருக்காய்ங்க, இதுல நீ வேற ஒலப்பாய்ல ஒன்னுக்கு இருந்த மாதிரி எதையாவது எழுதிட்டு போய்டுற....

வர: யோவ் மாம்ஸு நான் என்னமோ போலி டோண்டு ரேஞ்சுக்கு எழுதி புட்ட மாதிரில்ல இப்படி சவுண்ட குடுக்குற.என்ன பிரச்சினைன்னு சொல்லுயா?

பால: நீ தானே எழுதுன உனக்கே தெரியலியா. நான் நிம்மதி இருக்குறது உனக்கு புடிக்கலியா. இதுதான் நீ ஆசைபடுறியா? ( குரல் தழுதழுத்தது)

வர: மாம்ஸ் பீலிங் ஆவாத. அப்புறம் நானும் அழுதுடுவேன். அடுத்தவுங்க அழுதா எனக்கு மனசு தாங்காது .......

மாம்ஸ் உனக்கே தெரியும் நான் உன்னை விட டூயுப் லைட்டு , கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கய்யா

பால: (லேசாக செருமிக்கொண்டு ) ம்ம்ம்... நான் கடலை போட்டத பாத்தேலே அதோட விட வேண்டியதுதானே அதப்போயி ஏன்யா பிளாக்ல போட்ட? நீ பாட்டுக்கு அனானி கமென்ன்ட்டு ஓவரா வருதுங்குற பகுமானத்துல நடந்த உண்மைய எழுதுறேன்னு என்னைய மாட்டிவிட்டுட்ட. இன்னும் கொஞ்ச நேரத்துல என் ஆளு அத படிச்சிடுவா, என் கதி
இன்னைக்கு கந்தல்தான்.

வர: மாம்ஸ் நீ பேசுனது மட்டும்தானே எழுதிருக்கேன். யாரு கூட கடலை ஒடைச்சேன்னா எழுதிருக்கேன்.

பாலா: மாப்பிள்ளை அன்னைக்கு ஏன் ஆளுகூட நான் பேசலப்பா....

வர: பின்னே யாரு கூட அப்படி ஜொள்ளுவிட்டுகிட்டு இருந்தீக

பாலா: இல்லப்பா நாந்தான் அவ ஆளு

வர: அப்போ அன்னைக்கு நீ பேசலைன்னு சொல்லுறது

பாலா: ஏய்ன் ஆளு

ஃபோன தூக்கி தண்ணிக்குள்ள போட்டுட்டேன். இப்பவே வீட்ல டவுட்ட பார்க்குறய்ங்க , அப்புறம் கன்பார்மே பன்னிடுவாய்ங்க. இதுக்கு மேல இவருகிட்ட பேசினா .... அது

சொந்த செலவுல சூனியம் வச்சுகிற மாதிரி

**************************************************************************************

27 மறுமொழிகள்:

 1. அண்ணாத்தே பிலிமுக்கு போய் இருப்பதால் , கும்மாங்குத்து வந்து குத்துவார்

 1. அருள்,we the people,
  கவனிங்க. கடந்த மூன்று பதிவுகளைப் பார்க்கையில், பாலபாரதி கலாய்ப்போர் சங்கத்துக்கு நிரந்தரத் தலைவர் முழுமையாகத் தயாராகிவிட்டது தெரியுதா? :)

 1. லொள்ளு தாங்கமுடியவில்லை. இனிமேல் சென்னை பக்கம் தலைகாட்டுவீரா?

  அது சரி, தலைக்கும், குஷ்புவுக்கும் என்ன சம்பந்தம். அத்த முதலில் சொல்லுங்கப்பா.

 1. ஐயோ! ஐயோ! பாலா இதுக்கு நம்ம பா.க.ச வே பரவாயில்லைபோல... இதுக்கு தான் அப்பவே சொன்னேன், தல தட்டிவையுன்னு... ஐயோ பாவம் (குஷி புகழ் மும்தாஜ் ஸ்டைலில் படிக்கவும்)

 1. 7:10 PM  
  Anonymous said...

  சேட்ஜி தான் நாளைக்கு ஊறுகாய் என்று அனானி கொ.ப.செ தெரிவித்துக்கொள்கிறார்.

  நாளை உமது பதிவின் டார்கெட் 100.

  அவ்ளோதான் சொல்லிப்புட்டேன்.

  அ.மு.க துணை நிறுவனம்,
  லிவர்பூல்,
  இங்கிலாந்து.

 1. பா.க.ச வில் என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா?

 1. //பாலா: இல்லப்பா நாந்தான் அவ ஆளு//
  ம்... இனிமே இதவேற கண்டுபிடிக்கணுமா?!!

  //கடந்த மூன்று பதிவுகளைப் பார்க்கையில், பாலபாரதி கலாய்ப்போர் சங்கத்துக்கு நிரந்தரத் தலைவர் முழுமையாகத் தயாராகிவிட்டது தெரியுதா? :)//

  ஆமா பொன்ஸ், நாம கூட பாலாவ இப்படி கலாய்ச்சதில்ல. பேசாம இவரையே தலைவரா போட்டுட வேண்டியதுதான். :)

  //பா.க.ச வில் என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா?//

  சிபி, இதுக்குன்னு விண்ணப்பங்கள் எதுவுமில்லை. எந்த பதிவிலாவது ஒரு முறை பாலாவை கலாய்த்திருந்தால் போதும். நீங்கள் பா.க.ச. வில சேர்ந்ததாக கருதப்படுவீர் :)

 1. //பாலா: இல்லப்பா நாந்தான் அவ ஆளு//
  ம்... இனிமே இதவேற கண்டுபிடிக்கணுமா?!!

  //கடந்த மூன்று பதிவுகளைப் பார்க்கையில், பாலபாரதி கலாய்ப்போர் சங்கத்துக்கு நிரந்தரத் தலைவர் முழுமையாகத் தயாராகிவிட்டது தெரியுதா? :)//

  ஆமா பொன்ஸ், நாம கூட பாலாவ இப்படி கலாய்ச்சதில்ல. பேசாம இவரையே தலைவரா போட்டுட வேண்டியதுதான். :)

  //பா.க.ச வில் என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா?//

  சிபி, இதுக்குன்னு விண்ணப்பங்கள் எதுவுமில்லை. எந்த பதிவிலாவது ஒரு முறை பாலாவை கலாய்த்திருந்தால் போதும். நீங்கள் பா.க.ச. வில சேர்ந்ததாக கருதப்படுவீர் :)

 1. அருள், பொன்ஸ் நம்ம சங்கத்துக்கு ஒரு நிரந்தர,சூப்பர் தலைவர் ரெடியாயிட்டாரு போல. பா.க.ச வரவனையானை வருக! வருக!! வரு(று)க்க!!! அழைக்கிறோம்.

 1. கைப்பேசியில் உள்ள பேலண்ஸை சும்ம உடாமா பா.க.ச தலைவர் வரவனையான் போன் செஞ்சு சொந்த செலவுல சூனியம் வச்சுகிட்டீங்களே பாலா!!!

 1. Very nice :)
  Maybe we exchange links?

  http://mragowskiemolo.blogspot.com - my blog.
  If so then write me on mail, or speak in comments.

 1. இல்லாதவற்றை எழுதி.. பா.க.ச-வை பரப்ப எழுதப்பட்ட இந்த பதிவை கண்டிக்கிறேன்.
  :-))))

 1. இப்படியெல்லாம் கருத்து வெளியிட்டால் பிறகு அன்று என்ன பேசினீர்கள் என்று நான் ஒட்டு கேட்டதையும் வெளிப்படுத்த நேரிடும் என்பதை குசும்புடன் தெரிவித்து கொள்கிறேன் ;)

 1. சரி..வுடு மாப்ள..,
  நாம ரகசியமா பேசி தீர்த்துக்குவோம்.... :-)))))

 1. நாமக்கல் சிபி @15516963

  // பா.க.ச வில் என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா? //

  please, please என்னையும் சேத்துங்கங்க...!!!

 1. //please, please என்னையும் சேத்துங்கங்க...!!!//

  ஸ்மைலி யூ டூ... :-((((

 1. ஐ டூ

 1. //வலைஞன் said...

  ஐ டூ //

  ஸ்..ஸ்... முடியலப்பா..முடியல..! :-(
  [வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்]

 1. ஏன் இந்த கொந்தளிப்பு?

 1. யெஸ்.பாலபாரதி said...
  //வலைஞன் said...

  ஐ டூ //

  ஸ்..ஸ்... முடியலப்பா..முடியல..! :-(
  [வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்]
  மாம்ஸ் ! நீங்க தும்முனா கூட நாங்க அத வடிவேலு ஸ்லாங்கில்தான் படிப்போம். கவலைப்படாதீங்க....

  :)))))

 1. அருள்,
  தன்னுடைய பதிவுக்குக் கூட இத்தனை சீரியஸா பின்னூட்டத்துக்கு மறுமொழி கொடுக்காத பாலா, இந்தப் பதிவில் இப்படி வருகைப்பதிவு செய்துகிட்டே இருக்கார் என்றால்,

  ////பாலா: இல்லப்பா நாந்தான் அவ ஆளு//
  ம்... இனிமே இதவேற கண்டுபிடிக்கணுமா?!!
  //
  இதுல ஏதோ உண்மை இருக்குன்னு தான் தோணுது.. சீக்கிரம் கண்டுபிடிக்கணும்.. :))

  வரவணை, அடுத்த பதிவில் பேசாமல் இதைப் பற்றி எழுதிடுங்களேன்..

 1. //At 11:20 PM , பொன்ஸ் மிரட்டுறார்...

  வரவணை, அடுத்த பதிவில் பேசாமல் இதைப் பற்றி எழுதிடுங்களேன்..//

  கண்டிப்பா , அதைக்காட்டிலும் வேறு என்ன தலையாயக்கடமை எனக்கு இருக்க போகிறது ;)

 1. /*பாயும் பாலபாரதி ! பதுங்கும் வரவனையான் */

  எனக்கு என்னமோ தலைப்பை இப்படி மாத்தனும் னு தோணுது

  பாயும் வரவனையான் ! பதுங்கும் பாலபாரதி

 1. ///
  /*பாயும் பாலபாரதி ! பதுங்கும் வரவனையான் */

  எனக்கு என்னமோ தலைப்பை இப்படி மாத்தனும் னு தோணுது

  பாயும் வரவனையான் ! பதுங்கும் பாலபாரதி
  ///

  :-))))

 1. இப்படியொரு பா.க.ச பதிவு ஓடிட்டிருக்கா.. தெரியாம போச்சே :)

 1. சொந்த ஃபோன்ல சூன்யம் வெச்சுகிட்ட கதை இதானா?

  அதான் உடனே நீங்க கூட தண்ணில போட்டுட்டீங்களா?

  உங்களுக்கும் இதுமாரி எதுனாச்சும்........பிரச்சினையா??!!

 1. மாப்ளே!
  இன்னும் நீயியு... இந்த்த கடைய மூடலியா? :((((