Friday, September 08, 2006

@ 3:54 PM எழுதியவர்: வரவனையான்
நான் என்னமோ டாஸ்மாக் 5 கிலொ மீட்டரு தாண்டி இருக்குன்னு வண்டியெல்லாம் எடுத்து கிளம்பினா, அது இந்த பார்ல இருந்து வாக்கபிள் ஸாரி கிராவபிள் ( போகும் போதே போதையில் போனால் அது கிராவபிள் டிஸ்டர்ன்ஸ் தானே) டிஸ்டர்ன்ஸ்ல தான் இருந்தது. உள்ளே போயி எம்சி குவாட்டர் என்றேன். அவன் ஜானெக்க்ஷா தான் இருக்கு என்று கொடுத்தான். லக்கி இதையேல்லாம் திருவிளா பார்க்குற குழந்தை மாதிரி "பே"ன்னு பார்த்துக்கிட்டு இருந்தாரு. சரின்னு மேட்டர "அவசர அடி ரங்கா" மாதிரி டக்குன்னு முடிச்சிட்டு வாங்க அவங்க தேடிகிட்டு இருக்கபோறாங்கன்னு திரும்ப சியர்ஸ் பாருக்குள்ள போயி பாத்தா அப்பவும் சாயந்திரமே "அவசர" பட்ட பார்ட்டி இன்னும் அந்த ஒத்த பீர வச்சுக்கிட்டு முத்தம் கொஞ்சிகிட்டு இருந்தாரு. நாம வேற ஏற்கனவே கிச்ன்னு இருக்கமா , லக்கி' என்றேன். இப்போ எங்கே கூட்டிட்டு போயி கழுத்த அறுக்க போறனோன்னு நினைச்சுகிட்டே பரிதாபமாய் ,சொல்லுங்க என்றார்.

"பக்கத்துலுல எங்கையாவது ஜெனரல் ஸ்டோர் திறந்திருக்குமா" என்றேன். ஏங்க எதுனா வேனுமா எக்மோர் போனால் இருக்குங்க என்றார். 'ஆமா லக்கி , நிப்பிள் வாங்கனும்' என்றேன். லக்கிக்கு புரியவில்லை , அப்படின்னு புதுசா பாக்கு வந்திருக்கா என்று கேட்டார். இல்லப்பா இந்த குழந்தைங்க பீடிங் பாட்டிலில் மாட்டுவாங்களே அது வாங்கனும் என்றேன்.

'பால் ரப்பரா' அது கிடைக்குங்க வாங்கிறலாம் போகும் போது என்றார். இல்ல லக்கி அத வாங்கிட்டு வந்தாத்தான் நாம போகமுடியும் என்றேன். இதுக்கு மேலும் குழப்ப விரும்பாமல் விளக்கினேன்.

மொதல்ல அந்த நிப்பிளை வாங்கி அந்த பீர் பாட்டிலில் மாட்டிவிடுங்க அவரு சாவுகாசமா வீட்ல போயி தொட்டிலில் படுத்துக்கிட்டே குடிக்கட்டும் , பாத்தா இப்பைக்கு முடிக்கிறமாதிரி தெரியலைன்னேன். சிரிச்சு சிரிச்சு லக்கிக்கு வயித்த வலி வந்திருக்கும்.

பில்லு வந்துச்சு போயி எட்டிபார்த்தேன் தலை சுத்திருச்சு தொகைய பார்த்து இல்ல மொத்தமே நானும் அந்த பீர் பார்ட்டியும் தான் சரக்கடிச்சுருக்கோம் அடப்பாவி "திராவிட ராஸ்கல்லுகளா" எல்லாரும் தண்ணிய போட பாருக்கு போனா நீங்க சாப்பிட வந்திருக்கீங்களே இதுலாம் வெளங்குமா...........
**************************************************************************************


இதுக்கிடையில முத்து கூட பேசிகிட்டு இருக்கும் போது அவரு குஷ்பு-வோட தீவிர ர்ர்ர்ரசிகர்ன்னு தெரிஞ்சுக்கிட்டேன். பேச்சு அப்படியே கற்பு- பெரியார் - தமிழர் பண்பாடு என்று நீண்டு கொண்டே போனது. அப்பத்தான் ரொம்பநாளைக்கு முன்னால நடந்த சம்பவம் ஒன்னை சொன்னேன் மெய்சிலிர்த்துட்டாரு.

சென்னை லேண்ட்மார்க்கில் புத்தகம் வாங்க அ.மார்க்ஸும் வளர்மதியும், கூட அல்லக்கையா நானும் போயிருந்தோம் . அவங்க ரெண்டு பேரும் 2000 ரூவாய்க்கு குறைஞ்ச புத்தகத்த கையில கூட தொட மாட்டடோம்னு சத்தியம் செய்ஞ்சவுங்க மாதிரி அங்கேயே தேடிகிட்டு இருந்தாங்க. சின்ன பரபரப்பு எழுந்து அடங்குச்சு. என்னான்னு பாத்தா நம்ம குஷ்பு ' புத்தகம் வாங்க வந்திருக்காங்க. மனசுக்குள்ள எனக்கு "நாட்டிங்ஹாம் ஹில்" ஹு கிரான்ட்'னு நினைப்பு வந்துருச்சு போய் பக்கத்துல நின்னு ஸ்டீவ் மூர் எழுதிய ஜஸ்ட் கிஸ் புத்தகத்தை கொடுத்து படிங்க நல்லாயிருக்கும் என்று ஜொள்ளினேன். அவங்க அத பார்த்துட்டு ஸாரி படிச்சிட்டேன் என்றபடி நகர்ந்து போனார்.

இதப்போயி வளரிடமும் மார்க்ஸிடமும் சொன்னேன் ஃபயர் அலாரம் கேட்டதுபோல் ரெண்டு தடதடன்னு ஓடிப்போயி குஷ்பு விடம் இருவரும் கையெழுத்து வாங்கினார்கள், தங்கள் கையில் வைத்திருந்த புத்தகங்களில். இதைப்பார்த்து சிரித்துக்கொண்டேன். இரண்டு புத்தக ஆசிரியர்கள் தமிழ் இலக்கிய சூழலில் நன்கு இயங்குபவர்கள் இப்படி ஒரு செலிபிரட்டிக்கு ஆலாய் பறக்குகிறார்களே என்று.

இதைச்சொல்லி முடித்தபின் ஒரு ஏக்க பெருமூச்சு விட்டு முத்து(தமிழினி) சொன்னார் " ஹீம்ம்ம்ம்ம் கொடுத்து வைத்த புத்தகம்" என்று.

5 நிமிட ஆழ்ந்த மௌனத்திற்கு பிறகு நான் சொன்னேன் வளர்மதி கையெழுத்து வாங்கிய புத்தகத்தின் பெயர் என்ன தெரியுமா?
promiscuities தமிழில் "வரையற்ற பாலுறவுகள்" என்று அர்த்தம்.

9 மறுமொழிகள்:

 1. ////promiscuities தமிழில் "வரையற்ற பாலுறவுகள்" என்று அர்த்தம்.////

  ஹைலைட்டே இதுதான் தலைவரே. இதை எப்போ நெனைச்சாலும் எனக்கு பயங்கர சிரிப்பு வந்துடுது.....

 1. தல,
  கைய கொஞ்சம் காமிங்க...அந்த கையால ஒரு கட்டிங் அடிச்சாலே போதும்...வேறெதுவும் தேவயில்ல...

  // என்னான்னு பாத்தா நம்ம குஷ்பு ' புத்தகம் வாங்க வந்திருக்காங்க. மனசுக்குள்ள எனக்கு "நாட்டிங்ஹாம் ஹில்" ஹு கிரான்ட்'னு நினைப்பு வந்துருச்சு போய் பக்கத்துல நின்னு ஸ்டீவ் மூர் எழுதிய ஜஸ்ட் கிஸ் புத்தகத்தை கொடுத்து படிங்க நல்லாயிருக்கும் என்று ஜொள்ளினேன்//

  வாய் விட்டு சிரித்ததில் "லொ கொ பாசோ" சத்தத்தையும் மீறி பக்கத்து அறை நண்பர் வந்து நலம் விசாரித்துச் சென்றார்.

  நா என்னவோ குஷ்பு தான் மார்க்ஸிடமும், வளர்மதியிடமும் கையெழுத்து கேட்டிருப்பாங்கன்னு நெனச்சாக்கா ஒரு புல் ஸ்காட்ச் பாட்டிலை தரையில போட்டு ஒடச்ச "ஆன்ட்டிக் க்ளைமாக்ஸ்" மாதிரி இவங்க ரெண்டு பேருமில்ல ஓடியிருக்காங்க.

  அது சரி, குஷ்பு அவ்ளொ பெரிய செலிப்ரிட்டியா...இல்ல நாளைக்கு "மணியம்மை"யா நடிச்சி சரித்திரப் புகழ் பெற்றுவிடுவார் என்ற மாற்று சிந்தனையா?

  இல்ல அந்த புத்தகத்துக்கு ""வரையற்ற பாலுறவுகள்" அவர் தான் சரியானவர் என்ற குக்கிய எண்ணமா?

 1. தொடர் நல்லா வந்தது, ஆன்டி கிளைமாக்ஸ்...

 1. 1:39 PM  
  Anonymous said...

  //"பக்கத்துலுல எங்கையாவது ஜெனரல் ஸ்டோர் திறந்திருக்குமா" என்றேன். ஏங்க எதுனா வேனுமா எக்மோர் போனால் இருக்குங்க என்றார். 'ஆமா லக்கி , நிப்பிள் வாங்கனும்' என்றேன். லக்கிக்கு புரியவில்லை , அப்படின்னு புதுசா பாக்கு வந்திருக்கா என்று கேட்டார்.//


  :-)))))))

 1. 1:45 PM  
  Anonymous said...

  me siento culpable, porque biselo capaz de escribir tamil de i. pero puedo leer. tengo gusto de tus writtings. varavanaiyaan ir por favor a continuación.

  Nalini
  España

 1. என்னங்க இது 'இலக்கிய' வாதிகளை இப்படி வாரிட்டிங்களே.
  எப்படியோ தலைப்பை கொண்டு வந்து ஒப்புச்சிட்டிங்க...

 1. //இதப்போயி வளரிடமும் மார்க்ஸிடமும் சொன்னேன் ஃபயர் அலாரம் கேட்டதுபோல் ரெண்டு தடதடன்னு ஓடிப்போயி குஷ்பு விடம் இருவரும் கையெழுத்து வாங்கினார்கள்//


  இதுவே அந்த இடத்தில யாராவது எளக்கியவாதி வந்திருந்தா அந்த ஆட்டோகிராப் கேட்டுருப்பாங்களா?

 1. nalla pathivu !

  rasiththu siriththEn :)

  ////"பக்கத்துலுல எங்கையாவது ஜெனரல் ஸ்டோர் திறந்திருக்குமா" என்றேன். ஏங்க எதுனா வேனுமா எக்மோர் போனால் இருக்குங்க என்றார். 'ஆமா லக்கி , நிப்பிள் வாங்கனும்' என்றேன். லக்கிக்கு புரியவில்லை , அப்படின்னு புதுசா பாக்கு வந்திருக்கா என்று கேட்டார்.//
  //
  :))))))))))

 1. // இதப்போயி வளரிடமும் மார்க்ஸிடமும் சொன்னேன் ஃபயர் அலாரம் கேட்டதுபோல் ரெண்டு தடதடன்னு ஓடிப்போயி குஷ்பு விடம் இருவரும் கையெழுத்து வாங்கினார்கள், தங்கள் கையில் வைத்திருந்த புத்தகங்களில். //

  அய்ய... மெய்யாலுமா... யின்னாத்தான் கதயிது ஒன்னுமே பிரியமாட்டிகிதே....