Thursday, September 07, 2006

@ 1:41 PM எழுதியவர்: வரவனையான்

பின்நவினத்துவவாதி என்று அழைத்துக்கொள்வதுதான் இப்போ லேட்டஸ்ட் டிரண்ட். அதன் நீட்சியாக அதற்க்கான தகுதிகளை(!) வளர்த்து கொள்ள உதவும் குறிப்புகள் தான் அடியில் நீங்கள் காண்பது.

1) முதலில் உங்களை வீட்டில் தலையில் தண்ணிர் தெளித்து விட்டிருக்கவேண்டும். அல்லது சாணியை கரைத்து ஊற்றி விளக்குமாறு ( அ )துடைப்ப கட்டையால் அடித்து ஊர் எல்லைவரை உங்கள் குடும்பத்தினரோ அல்லது ஊர்ப்பெரியவர்களோ வந்து வழி (?) அனுப்பி வைத்திருக்கவேண்டும்.

2) ஓரளவுக்கு கல்வித்தகுதி இருக்கவேண்டும். குறைந்தது இளங்கலை.

3) சென்னையில் வீணாய் போன நாலு எழுத்தாளர்களையோ அல்லது கவிஞர்களையோ கண்டிப்பாய் அறிமுகம் இருக்கவேண்டும்

4)தனது காசானுலும் அடுத்தவன் காசானுலும் வஞ்சனையே இல்லாமல் குடிக்க பழகி இருக்கவேண்டும். குறைந்தது ஒரு ஆஃப்.

5) தமிழில் ஒரு முழுமையான நாவல் இன்னும் வரவில்லை என்கிற வார்த்தையை தினமும் படுக்க போகுமுன் 1000 முறை உச்சாடணம் செய்யவேண்டும் ( ஏற்கனவே மப்ஃபில் இருப்பதால் உளறுவதாக அருகே இருப்பவர் நினைத்துக்கொள்ளும் நன்மையும் இதில் உண்டு)

6) எவனோ ஒரு அரை லூசு எடுத்த 13 3/4 நிமிட குறும்படத்தை பற்றி 2 மணி நேரம் கட்டுரை வாசித்து பீதியைக்கிளப்ப வேண்டும்

7) அகிரோ மாதிரி இன்னோருத்தர் சான்ஸே இல்ல. மலையாள 11 மணிக்காட்சி வாசலில் நின்றாலும் கெத்து குறையாமல் டயலாக் உடனும்.

8)மார்க்சீய-லெனிய கம்முனிஸ்ட் இயக்கங்களில் சிறிதுகாலம் பணியாற்றி இருக்கவேண்டும்.

9)அந்த ஆபீஸுக்கு டீ கொண்டு குடுக்கும்போது அவய்ங்க தாடிய பார்த்து ஈர்க்கபட்டதை மறைத்து விட்டு. லெனின் தான் என்னை ஈத்தார் என்று பீலா விடவேண்டும்

10) "நானும் ஒரு காலத்தில் தனி நாடு கேட்டவன் தான் தோழர்" என்று அகஸ்த்மாத்தாக சிக்கிக்கொண்ட தோழரிடம் "கட்டிங்குக்கு" அடி போட வேண்டும்

( இன்னும் 100 குறிப்புகளுக்கு மேல் இருக்கு கண்டிப்பாய் தருகிறேன்)

15 மறுமொழிகள்:

 1. வயிறு குலுங்க சிரிக்க வைச்சிட்டீங்க...( சொந்த அனுபவம் ஏதும் இருக்கா தலை )

 1. 2:25 PM  
  Anonymous said...

  பொங்கலுக்கு கவர்மெண்டுல லீவ் விடுறாங்க இல்லையா ? அதே போல் இட்லி தோசைக்கும் வாங்கி குடுங்க. இல்லைன்னா ஸ்ட்ரைக் செய்யலாம்...

 1. தலைவரே இந்த 10 தகுதியும் உங்களுக்கே இருக்கே.... அப்புறமென்ன நீங்களும் பின்நவீனத்துவ இலக்கியவாதி தான்... :-)

 1. "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்று சொல்லற மாதிரி நீங்க இப்ப எதை எழுதினாலும் எனக்கு பாலாவை கலாக்கற மாதிரியே தெரியுதே ஏன் தலைவா!!

 1. 5:13 PM  
  அன்புடையோன் said...

  நல்ல நகைச்சுவை. மீதமுள்ள குறிப்புகளையும் பதியவும்.

 1. //தலைவரே இந்த 10 தகுதியும் உங்களுக்கே இருக்கே.... அப்புறமென்ன நீங்களும் பின்நவீனத்துவ இலக்கியவாதி தான்... :-) //  லக்கி, திண்டுக்கல்லுக்கே பூட்டா?

  வேணாம், அப்புறம் நீங்க செவன் அப்புக்கு ஊறுகாய் தொட்டுகிட்ட மேட்டர தனிப்பதிவா போட வேண்டிவரும்

 1. //3) சென்னையில் வீணாய் போன நாலு எழுத்தாளர்களையோ அல்லது கவிஞர்களையோ கண்டிப்பாய் அறிமுகம் இருக்கவேண்டும் //

  எனக்கு வனவராயன்னு ஒரே ஒரு எலக்கியவாதி(என்னத்த வாதி, பிரதிவாதின்னுட்டு)ய தெரியும். so, நான் பின்நவீனத்துவ வாதியா ஆகுறதுக்கு எதும் வாய்ப்பிருக்கா....?

  ஆனா ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிங்கன்னு மட்டும் தெரியுது...

  கெடக்கட்டும் நம்ப போண்டா கணேசன கேட்டேன்னு சொல்லுங்க..

  எப்பா பேட்டி எப்பத்தான் வரும்...?! காத்திருக்கம்லா..

 1. தல, அந்த மூணாம் நம்பரத்தவிர எல்லாமே "எனக்கும்" செட்டாவுது. அடுத்தமொற ஒங்க புண்ணியத்துல அதுவும் ஆயிடுச்சின்னு வெச்சிக்கோங்க நானும் அசால்டா பின்னவீனத்துவ "எலக்கியவாத்தி" ஆயிடுவேன். ஆனா நம்ம சேவிங் செட்டு பயலுவ எல்லாரும் அப்படியே ஆயிடுவானுவ இல்ல.

  //எப்பா பேட்டி எப்பத்தான் வரும்...?! காத்திருக்கம்லா..//

  waiting too...:-))

 1. 5:50 PM  
  Anonymous said...

  :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

 1. பத்துக்கே சிரிச்சு மாளால இதுல இன்னும் 100 ஆஆஆ தாங்க தாங்க

 1. இது போன்ற கோட்பாடுகள் வரையறைகள் எப்படி பின்னவீனத்துவத்ற்க்கு பொருந்தும்.

 1. 4:58 PM  
  vigivijayakumar@yahoo.co.in said...

  it is not joke but true. please wrote following 90 points. thanks poondiyan

 1. //"நானும் ஒரு காலத்தில் தனி நாடு கேட்டவன் தான் தோழர்" என்று அகஸ்த்மாத்தாக சிக்கிக்கொண்ட தோழரிடம் "கட்டிங்குக்கு" அடி போட வேண்டும்//

  சூப்பர்...எனக்கு பிடித்தது இது..

 1. // முத்து(தமிழினி) said...
  //"நானும் ஒரு காலத்தில் தனி நாடு கேட்டவன் தான் தோழர்" என்று அகஸ்த்மாத்தாக சிக்கிக்கொண்ட தோழரிடம் "கட்டிங்குக்கு" அடி போட வேண்டும்//

  சூப்பர்...எனக்கு பிடித்தது இது.. //  எங்கேயோ லேசா இடிக்கிற மாதிரி தெரியுதே !


  சரி சரி , அடுத்த பதிவு "தமிழ்த்தேசியவாதி ஆவதற்க்கான பயனற்ற குறிப்புகள்" போட்டுர வேண்டியதுதான் ;)

 1. 11:54 AM  
  Rajesh said...

  ஹஹஹா ச்சே இவ்ளோ நாலு படிக்காம இர்திருகேனே சூப்பர்ர்ர்ர்ர்ர்