Tuesday, September 05, 2006

@ 1:54 PM எழுதியவர்: வரவனையான்

அப்புறோம் ஒரு தோழர் பேச ஆரம்பிச்சாரு. வலைத்தளத்தில் குழுமனப்பான்மை எழுந்துள்ளது வருத்ததிற்க்குரியது என்றார் . என்னை பொறுத்தவரை குழுவாதம் என்பதோ அல்லது குறுங்குழு வாதம்( உள்குத்தை புரிந்தவர்கள் சிரிக்கலாம்-விளக்கம் தரப்படமாட்டாது) அதன் தேவைகளை பொறுத்தே எழுகிறது அதை தவிர்ப்பது என்பது அதை வளர்க்கும் மற்றோரு செயலாகும். அதை எதிர்கொண்டு அதன் கருத்துக்களை உள்வாங்குவதும் , மதிப்பளிப்பதுமே நேர்மையான செயலாகும். பெரியாரையும் அண்ணாவையும், திராவிடத்தையும் எதிர்ப்பது மட்டுமே தங்கள் கடமையாக சிலர் செயல்படுவதுதான் குழுவாதத்தை தோற்றுவித்திருக்கிறது. என்பதுதான் உண்மை. என்னை பொறுத்தவரை நடுநிலை என்பது மோசடித்தனம். போர்வெறியன்"ஜார்ஜ் புஷ்" வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் 'எங்களோடு இருங்கள் ,இல்லையேனில் நீங்களெங்கள் எதிரியாக கருதப்படுவீர்கள்' .

அகவே தோழர் அவர்களே! அன்று நான் சொன்ன அதே கருத்தை மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன். என் அரசியல் எது என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.

முத்துக்குமரன் ராணுவமிடுக்கோடு இருக்கிறார் நான் எனது 20- 21 வயதில் எப்படி இருந்தேனோ அப்படியே அவர் இருக்கிறார்.

மதியம் நண்பர் ஒருவரிடம் கூட்டம் பற்றி சொல்லியிருந்தேன். மாலை அவர்களும் அவர்தம் சக பத்திரிக்கையாளர்களும் வந்து இருந்தார்கள். அவர்களில் நண்பர் வளர்மதியும் ஒருத்தர்.அவர் திராவிட ராஸ்கல் எனும் வார்த்தையில் ஈர்க்கபட்டு வந்திருந்தார். ஒரு சில வார்த்தை பேசுகிறேன் என்று அனுமதி கேட்டார்' அவரின் கண்ணிர்புகை பேச்சு பற்றி அறியாத வலைப்பதிவாளர்களும் பேசுங்கள் என்றார்கள்.கூட்டம் இனிதே கலைக்கபட்டது, ஆம் கண்ணீர்புகை போட்டால் கூட்டம் தொடருமா என்ன?

பொதுவாய் இலக்கிய கூட்டங்கலில் வளர்மதி பேச எழுந்தால் , ஒரு குரூப் தம்மடிக்க கிளம்பும். அவ்வளவு ராசி ஆனவரு. ஆனால் ஒன்றை மற்றும் இங்கு பதிய வைக்க விரும்புகிறேன். தமிழ் இலக்கிய சூழலில் தவிர்க்க முடியாத சிந்தனையாளன் அவர்.

கூட்டம் முடியும் முன் வந்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் நான் பேசிக்கொண்டிருந்த நேரத்திலேயே "மசால்வடை" சப்ளை துவக்கினார் பொன்ஸ். அவ்வளவு பிஸி-யிலும் எனக்கும் ஒரு வடை வைத்திருங்கள் என்று முன்பதிவு செய்தேன். பேசிவிட்டு வந்து பார்த்தால் ஆளையும் கானோம் வடையையும் கானோம்.

அப்புறம் டீ ரசிகர்கள் மற்றும் நண்பர்களும் தேனீர்கடையில் ஒரு கூட்டம் போட்டு அரட்டை ஆரம்பித்தனர்.

இதற்கிடயே ஒரு பதிவாளர் 'ஏய் 11 மணிக்கெல்லாம் பார் மூடிருவாய்ங்கப்பா சீக்கிரம் கிளப்பு" என்று துடித்து கொண்டிருந்தார். வீனையூக்கியை அழைத்துச்செல்லாம் என்று நான் காத்திருந்தேன், அவரு உஷார் பார்ட்டி போல எஸ்கேப் ஆகி ஆட்டோ பிடித்து தப்பினார்.

அதுக்கப்புறம் எங்கே போவது என்று ஒரு அரை மணி நேரம் டிஸ்கசன். நண்பர் வாட்ச்சை பார்க்க என்னைய பார்க்க என்று தவித்துக்கொண்டிருந்தார். ஒரு வழியாய் எக்மோர் சியர்ஸ் பார் என்று முடிவாகியது

அங்கே போயி அடிச்ச கூத்த கேளுங்க. நானும் தமிழினியும் குப்புசாமியும் போய் பார்வாசல்ல நிக்கிறோம். முத்து(தமிழினி)க்கு குப்புன்னு வேர்க்குது . என்ன மேட்டருன்னு பார்த்தா அவரு மனைவியோட எந்த விடுதியில் தங்கியிருக்கிறாரோ அதற்கு நேர் எதிரே இருந்தது பார். அதுவும் அவர் அறையில் இருந்து பார்த்தால் தெளிவாய் தெரியும். பாதி பேரக்காணாம்ம்னு தேடிகிட்டு வாசலேயே போச்சு ஒரு 10 நிமிஷம்.அந்தா இந்தா என்று 10.20க்கு உள்ளபோயி உக்காந்தா அவ்வளவு பேருக்கு இடம் இல்லைனு அதுல போச்சு ஒரு பத்து நிமிசம்.

கிழிஞ்சது போ ! இன்னைக்கு சரகடிச்சமாதிரித்தான்னு முடிவு பன்னி ,அப்பைனு வந்த ராங்கால் அழைப்பை ISD என்று பொய் சொல்லி வெளியே வந்து தம்மடிச்சுட்டு நின்னுகிட்டு இருந்தேனா. அந்த பக்கம் பாலபாரதி யாருகிட்டையோ கடலை போன்லெயே வறுத்துகிட்டு இருந்தாரு(நாராயனா).

சீக்கிரம் உள்ளவாங்கப்பான்னு அவ்வளவு நேரம் அமைதியா இருந்தவரு கூப்பிட்டாரு. ஆரம்பம் ஆச்சு ஜமா.

யாரு 8 மணியில இருந்து துடிச்சாரோ அவரு 1 பீர வாங்கிட்டு பேய் முழி முழிச்சுகிட்டு இருந்தாரு குடிக்க முடியாம.

எனக்கு ஒரு லார்ஜ் சொல்லி உங்காந்தேன். வந்துச்சு குடிச்சிட்டு "ரீபிட் திஸ்" என்றேன் ஸாரி டைம்ஸ் அப் என்றான்.வந்ததே கோவம். 'லக்கி வண்டி எடுங்க' என்றேன். வண்டி நிறுத்தம் அருகே வந்து வாந்திதான் எடுத்தார். என்னப்பா ஆச்சு என்றேன்.செவன் அப் ஒத்துக்கல என்றார் "அடப்பாவி நீ வெறும் செவன் அப்பே ஒத்துகாதா ஆளா" பிளாக்ல அந்த குதி குதிக்கிற. இரு உன்னை வச்சுகிறேன் என்றபடி வண்டி வழக்கம் போல் டாஸ்மாக் போனது.

(சத்தியமா நாளைக்கு முடிக்கிறேன்)

21 மறுமொழிகள்:

 1. ////'லக்கி வண்டி எடுங்க' என்றேன். வண்டி நிறுத்தம் அருகே வந்து வாந்திதான் எடுத்தார். என்னப்பா ஆச்சு என்றேன்.செவன் அப் ஒத்துக்கல என்றார் "அடப்பாவி நீ வெறும் செவன் அப்பே ஒத்துகாதா ஆளா" பிளாக்ல அந்த குதி குதிக்கிற. இரு உன்னை வச்சுகிறேன் என்றபடி வண்டி வழக்கம் போல் டாஸ்மாக் போனது./////

  பார்களில் பரிமாறப்படும் செவன் அப்பிலும் ஆல்கஹால் இருக்கும் என்பது கூட தெரியாத அப்பாவி நான் :-(

  அது சரி.... முத்து (தமிழினி)க்கும் குஷ்புவுக்கும் என்னா கனெக்ஷன்? மொதல்லே அதை சொல்லு தலை.....

 1. //அவரின் கண்ணிர்புகை பேச்சு பற்றி அறியாத வலைப்பதிவாளர்களும் பேசுங்கள் என்றார்கள்.கூட்டம் இனிதே கலைக்கபட்டது//

  :))))))))))) அய்ய்ய்யோ உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா ??:)))

  //அந்த பக்கம் பாலபாரதி யாருகிட்டையோ கடலை போன்லெயே வறுத்துகிட்டு இருந்தாரு(நாராயனா)//

  ஓஓ பாலா இந்த வேலையெல்லாம் வேற பண்ணுறாரா? :))) பாலாவை தாளிக்காம விடரதிலைன்னு முடிவு பண்ணீட்டீங்க போல !!:)))

  //'லக்கி வண்டி எடுங்க' என்றேன். வண்டி நிறுத்தம் அருகே வந்து வாந்திதான் எடுத்தார். என்னப்பா ஆச்சு என்றேன்.செவன் அப் ஒத்துக்கல என்றார் "அடப்பாவி நீ வெறும் செவன் அப்பே ஒத்துகாதா ஆளா"//

  :))))))))))))))))))))))))

  சிரிச்ச்சு சிரிச்சு வயிரே புண்ணாகிப் போச்சுங்கணா !! ஆமா நீங்க யாரு இங்கன வந்து அல்லாரையும் பொட்டு பின்னிப் பெடலெடுத்துகிட்டு இருக்கீங்க ?? :)) ரொம்ப ரசிச்சேன் !!!

 1. //வீனையூக்கியை அழைத்துச்செல்லாம் என்று நான் காத்திருந்தேன், அவரு உஷார் பார்ட்டி போல எஸ்கேப் ஆகி ஆட்டோ பிடித்து தப்பினார்.
  //

  ஹா ஹா...

 1. //வீனையூக்கியை அழைத்துச்செல்லாம் என்று நான் காத்திருந்தேன், அவரு உஷார் பார்ட்டி போல எஸ்கேப் ஆகி ஆட்டோ பிடித்து தப்பினார்.
  //

  ஹா ஹா...

 1. இன்னும் குஷ்பு வரல!!!! நாளைக்குத்தானா

 1. // பெரியாரையும் அண்ணாவையும், திராவிடத்தையும் எதிர்ப்பது மட்டுமே தங்கள் கடமையாக சிலர் செயல்படுவதுதான் குழுவாதத்தை தோற்றுவித்திருக்கிறது. என்பதுதான் உண்மை. //

  ம்ஹூம்...பாதி உண்மை.

 1. இப்ப்ப புரியுது. ஏன் ரொம்ப பேரு மீட்டிங் பத்தி மூச்சே விடலைன்னு. பாலா கிட்ட சென்னைத் தமிழில் கேட்ட கேள்விக்கு பதிலே வரலியேன்னு பாத்தேன்.

 1. ///லக்கி வண்டி எடுங்க' என்றேன். வண்டி நிறுத்தம் அருகே வந்து வாந்திதான் எடுத்தார். என்னப்பா ஆச்சு என்றேன்.செவன் அப் ஒத்துக்கல என்றார் "அடப்பாவி நீ வெறும் செவன் அப்பே ஒத்துகாதா ஆளா"///

  சிரிச்சு சிரிச்சு வயிறு புன்னாகிப்போச்சு..

  ///பிளாக்ல அந்த குதி குதிக்கிற. இரு உன்னை வச்சுகிறேன் என்றபடி வண்டி வழக்கம் போல் டாஸ்மாக் போனது.///

  எந்த டாஸ்மார்க் ?

  எந்த டாஸ்மார்க் ? உங்க லேண்ட் மார்க் ?

 1. //பெரியாரையும் அண்ணாவையும், திராவிடத்தையும் எதிர்ப்பது மட்டுமே தங்கள் கடமையாக சிலர் செயல்படுவதுதான் குழுவாதத்தை தோற்றுவித்திருக்கிறது. என்பதுதான் உண்மை.//

  உண்மையே.... பெரியார் சொன்னதை எடிட் செய்து அவர் மீது தவறான ஒரு பிம்பத்தை தோற்றுவிக்க ஒரு குழு முயற்சி செய்வது தெரிந்ததே.... சமீபத்தில் கூட தோழர் குழலி இதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்...

  திராவிடக் கொள்கைகளில் குற்றம் காண அதன் கொள்கைகளில் ஒன்றான நாத்திகத்தையே ZOOM செய்து மற்ற கொள்கைகள் குறித்த தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்யவும் அதே குழு முனைகிறது.....

 1. பாடம் 1. வலைப்பதிவாளர்கள் சந்திப்புக்கு வெளி ஆட்களை கூட்டி வரக்கூடாது.

  பாடம் 2. தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு எதிர் பாரில் தண்ணியடிக்கக் கூடாது.

  பாடம் 3. மசால் வடையை பங்கிட்டுக் கொண்டிருக்கும் போதே கேட்டு வாங்கி(ப்பறித்து) விட வேண்டும்.

  பாடம் 4. பாருக்குள் செவன் அப் குடிக்கலாகாது.

 1. Enjoyed very well... :-))) Thanks...

 1. //உண்மையே.... பெரியார் சொன்னதை எடிட் செய்து அவர் மீது தவறான ஒரு பிம்பத்தை தோற்றுவிக்க ஒரு குழு முயற்சி செய்வது தெரிந்ததே.... சமீபத்தில் கூட தோழர் குழலி இதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்...//

  அப்படியா? அந்த ஆதாரத்தை கொஞ்சம் காட்டமுடியுமா? 'ஆதாரத்துடன் நிருபிக்கிறேன்' என்று வெறும் வார்த்தையில் சொன்னால் போதும், அதுதான் ஆதாரம் என்று நினைத்தால் சொல்ல எதுவும் இல்லை. மற்றபதி இந்த விஷயத்தில் குழலிதான் சொதப்புகிறார். பெரியார் பேசியதற்கான ஆதாரங்த்களை நானே தர முதியும் - விரும்பினால்!

 1. //உண்மையே.... பெரியார் சொன்னதை எடிட் செய்து அவர் மீது தவறான ஒரு பிம்பத்தை தோற்றுவிக்க ஒரு குழு முயற்சி செய்வது தெரிந்ததே.... சமீபத்தில் கூட தோழர் குழலி இதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்...//

  அப்படியா? அந்த ஆதாரத்தை கொஞ்சம் காட்டமுடியுமா? 'ஆதாரத்துடன் நிருபிக்கிறேன்' என்று வெறும் வார்த்தையில் சொன்னால் போதும், அதுதான் ஆதாரம் என்று நினைத்தால் சொல்ல எதுவும் இல்லை. மற்றபடி இந்த விஷயத்தில் குழலிதான் சொதப்புகிறார். என் கேள்விக்கு அவர் வசதியாய் பதில் சொல்லவில்லை. பெரியார் பேசியதற்கான ஆதாரங்த்களை நானே தர முடியும் - விரும்பினால்!

 1. //பாடம் 4. பாருக்குள் செவன் அப் குடிக்கலாகாது. //

  பாடம் 5. அப்படியே குடித்தாலும் டாஸ்மார்க் பார்ட்டிகளின் முன் வாந்தி எடுக்கக் கூடாது.

 1. ///அந்த பக்கம் பாலபாரதி யாருகிட்டையோ கடலை போன்லெயே வறுத்துகிட்டு இருந்தாரு(நாராயனா).///

  அதானே பார்த்தேன், தாடி வைத்துக்கொண்டு கவிதை எழுதி திரிந்தவர் - எப்படிடா சேட்ஜி ஆனார் என்று...இதுதான் காரணமா ?

 1. தல கலாய்க்கிறது பற்றி நீங்க தனி கிளாஸே எடுக்கலாம் போல அந்த அளவுக்கு எல்லோரையும் காலாய்ச்சுடீங்க போங்க

 1. 10:35 AM  
  Anonymous said...

  அருந்ததி ராய்., ஆட்டையாம்பட்டி ராய் ஏதாவது எழுதி இருந்தா அதை காப்பி அடிச்சி ஒரு பதிவு போடுவது பலனளிக்கும்.

 1. நண்பர் ரோசா வசந்துக்கு!

  சமீபத்தில் இட்லிவடை பெரியாரின் கருத்துக்களை எடிட் செய்து அவர்மீது மற்றவர்களுக்கு ஒரு வெறுப்புணர்ச்சி வரும் வகையில் பதிந்த பதிவின் சுட்டி : http://idlyvadai.blogspot.com/2006/09/8.html(பின்னூட்டங்களையும் இந்தப் பதிவில் கவனிக்கவும்)

  அந்தக் கருத்துக்கள் தந்திரமான முறையில் எடிட் செய்யப்பட்டவை என்பதை நிரூபிக்கும் குழலி அவர்களின் சுட்டி : http://kuzhali.blogspot.com/2006/06/blog-post_27.html

  பெரியாரின் கருத்துக்களை வெட்டி ஒட்டி நீங்கள் பதிவிடுகிறீர்களா என்று எனக்குத் தெரியாது... ஆனாலும் பெரியாரின் கருத்துக்களை வேறு வண்ணம் கொடுத்து நடுநிலையாளர்களை ஏமாற்றும் போக்கு தமிழ்மணத்தில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.....