Sunday, September 03, 2006

@ 1:20 PM எழுதியவர்: வரவனையான்

தலைப்பை பார்த்தே "தலை"க்கு வவுத்த கலக்குறது தெரியுது. ஆனா அதுக்கும் விஷயம் இருக்குல்ல, வாழ்க்கைல யாரவது கெடா வெட்டுக்கு கூப்பிட்டா எப்படி குளு குளுன்னு இருக்குமோ அது மாதிரி இருந்துச்சு முத்து சென்னைக்கு வாங்கன்னு கூப்பிட்டபொழுது. சென்னை மேல அப்படி ஒரு ஆச. ஒரு வேலையுமே இல்லாம இருந்தாலும் எவனாவது திருப்பிக்கேக்காத நண்பனா பார்த்து ஒரு 5000 ரூவா கடன் வாங்கிட்டு சென்னை வந்து ஒரு வாரம் கும்மி அடிச்சிட்டு போற என்னை மாதிரி ஆள சென்னைக்கு கூப்பிட்டா எப்படியிருக்கும். சரின்னு ஒத்துகிட்டாலும் தலை கால் புரியலை, ஆபீஸ்ல இருக்கிற மாடயெல்லாம் யாரு மேய்க்கிறதுன்னு சண்டை வந்து என் தலைல கட்ட பார்த்தாய்ங்க. சிக்குவனா நானு " சாரி பாஸ் பிளைட்ல டிக்கட்டு போட்டுட்டேன் சனிக்கிழமை காலை மொத பிளைட்ட பிடிச்சு வந்திடுறேன்னு அல்வா கிண்டி " ஆ சொல்லும்மா கண்ணுல "ன்னு கொஞ்சி பாஸ்'க்கு ஊட்டிவிட்டு கிளம்பினேன் .


சென்னைக்கு போயி இறங்கி வழக்கமா தங்குற மாஸா ஹோட்டலில் ரூம் கேட்டால் , நம்ம பரம்பரை வரலாற பூராம் கேக்குறாய்ங்க, 'பாய் தெரியலையா என்றேன் . வரவேற்பாளரிடம் . அவரும் சிம்பிளா "தெரியலைனு" முடிச்சுகிட்டாரு பேச்ச. "அண்ணே ஏண்ணே இப்பலாம் முன்ன மாறி வரதுதில" என்று கேட்டு என் வயிற்றில் பீரை வார்த்தான் ரூம்பாய் சலீம். கொஞ்சம் பிஸி'பா என்று பீலா விட்டு அறை எடுத்தேன். என் மீது என்ன கோபமோ அந்த வரவேற்பாள பாய்'க்கு. சேலம் ஜெயிலத்தான் பனிஷ்மன்ட் ஜெயில் என்று சொல்வார்கள், இந்த ரூமோ அதைவிட கொடியதாய் இருந்தது. சரி இங்கு வரும் நல்ல தண்ணீகாக பொறுத்துபோவோம் என்று தங்கி விட்டேன்.

மதியம் موثو (تاميليني) க்கு ( இது யார் பெயர் என்று சொல்பவர்களுக்கு இரண்டு பரிசுகள்) போன் செய்து என் வருகை அறிவித்தேன்.மிகவும் மகிழ்ந்தார்.இன்னும் என் சக கும்மியாளர்களுகும் என் வருகை அறிவித்தேன் .

முத்து(தமிழினி) மாலை 5 மணிக்கு ஆட்டோவில் வந்து சேர்ந்தார். இருவரும் கிளம்பினோம். இருவரும் அப்போதுதான் சந்தித்து இருந்தாலும். ஒரு பால்ய நண்பரை சந்தித்த உணர்வே ஏற்பட்டது.

பூங்காவை அடைந்ததும் ஒரு இன்ப அதிர்ச்சி, வாசலில் பர்தா அணிந்து நின்ற ஒரு பெண் சிரித்தாள். ஆகா ஒரு வலைப்பதிவாளர் நம்மை அடையாளம் கண்டுவிட்டார் என்று அருகில் போனேன்.முத்து 'மசால் வடை" ஆர்டர் செய்ய கடை தேடிக்கொண்டிருந்தார். அருகே போனதும் " ரூம் இருக்கு ஆளுக்கு 1000 ரூபாய் போலாமா என்றார்" .

பொதுவாக உலக இலக்கியம் பேசினாலும், நெட்டில் ஜல்லி அடித்து பிழைப்பை ஓட்டினாலும் இது போன்ற விடயங்களில் " நான் ஒரு கண்விடுக்காத பூனைக்குட்டி" கெண்டைக்கால் லேசாக நடுங்குவது உணர்ந்தேன். அபத்தமாக நாகேஸ்ராவ் பூங்கா இதுதானே என்றேன் அவளிடம் " இன்னாது" என்றாள். நல்லவேளையாக முத்து என்னை அழைத்தார் இல்லையென்றால் அன்று எனக்கு குளிர் காய்ச்சல் வந்து இருக்கும். சரி என்று உள்ளே நுழைந்தோம். நுழைவாயில் தாண்டியது ஒரு சிறு கும்பல் நின்று கொண்டிருந்தது. ஒருவர் கண்ணாடி போட்டு தோளில் லெதர் பேக் போட்டு செல்போன் "பில் கலெக்டர்" போல் நின்று கொண்டிருந்தார். அவர்களை தாண்டிப்போனோம். பின்னாடியே ஓடி வந்தார். நுழைவுக்கட்டணம் வசூலிப்பவர் போல என்று நினைத்து " டிக்கட் வாங்காம வந்திட்டோம்ல" என்றேன் முத்துவிடம். அவர் வந்து வாங்க வணக்கம் என்றார் .நீங்க என்றோம், பாலபாரதி என்றார் எனக்கோ ஆச்சர்யம். நான் எதிர்பார்த்திருந்தது " தாடியுடன், ஒரு ஜிப்பா, ஜோல்னா பை, சோமாலியா பஞ்சத்தில் அடிபட்ட மனிதனை" ஆனால் "லால் சேட்ஜியின் சோட்டா பச்சா" மாதிரி திம்முனு இருந்தார்.

பிரியன்,மற்றும் கவிதா இருந்தார்கள் அங்கே, அதன் பின் வலைப்பதிவளர்கள் பலரும் வந்து சேர. மொத பஞ்சாயத்தே அனானி பின்னூட்டங்களை பற்றியதாய் இருந்தது. நமக்கு வர கமெண்டே மொத்தம் நாலுதான் இதுல நம்ம என்னடா கருத்து சொல்லி கிழிக்க போறம்னு கம்முனு இருந்துட்டேன்


(மீதி கும்மியை நாளை கொட்டுறேன்)

34 மறுமொழிகள்:

 1. :-))))

  பர்தா பார்ட்டி எங்கே நின்னுக்கிட்டு இருந்திச்சின்னு கொஞ்சம் சொல்ல முடியுமா? இன்னைக்கு சாயங்காலம் அந்த பார்க் பக்கமா போகவேண்டிய வேலை இருக்கு....

 1. :-))))

  பர்தா பார்ட்டி எங்கே நின்னுக்கிட்டு இருந்திச்சின்னு கொஞ்சம் சொல்ல முடியுமா? இன்னைக்கு சாயங்காலம் அந்த பார்க் பக்கமா போகவேண்டிய வேலை இருக்கு....

 1. //ஆனால் "லால் சேட்ஜியின் சோட்டா பச்சா" மாதிரி திம்முனு இருந்தார்.
  // அவர மொத மொத பாத்தப்ப நானும் இதேத்தான் நினைச்சேன் :)

  //மீதி கும்மியை நாளை கொட்டுறேன்//
  கொட்டுங்க கொட்டுங்க... மொத்த ரிலேவையும் நீங்களே எழுதி அசத்துங்க :)

 1. நல்லாகீதுபா, நம்மள கனக்கிலெடுகாம விட்டியே நண்பா

 1. //நல்லாகீதுபா, நம்மள கனக்கிலெடுகாம விட்டியே நண்பா//

  யாருய்யா அது உதயசூரியனுக்கே டார்ச் லைட்டு அடிக்கிறது? :-)

 1. //ஆனால் "லால் சேட்ஜியின் சோட்டா பச்சா" மாதிரி திம்முனு இருந்தார்.
  //

  // அவர மொத மொத பாத்தப்ப நானும் இதேத்தான் நினைச்சேன் :)
  //
  - நானும் நானும்.. முதல் முதல் இல்லீங்க. இப்போ பார்க்கும் போது கூட, அப்பப்போ இவர் எப்படி இவ்வளவு நல்லா தமிழ் பேசறாருன்னு கூட தோணுறது உண்டு :) நடு நடுவில் இந்தியில் வேறு பேசிக் குழப்புவார் மனிதன்..

  என்னதான் பா.க.ச.வின் நிரந்தர அங்கத்தினரா இருந்தாலும், பாலாவை டிக்கெட் கலக்டர் ஆக்கியது கொஞ்சம் மனதுக்குக் கஷ்டமா இருக்கு..(அருள், இந்த யோசனை நமக்குத் தோணாம போச்சே!! )

 1. நண்பா..உங்களோட எழுத்து நடை நல்லாயிருக்கு.காமெடி நல்லா வரும்னி நெனைக்கேன்..

 1. 4:30 PM  
  உங்களுக்கும் போடுவோம் said...

  நீங்கள் பாசமாக அனானிகளை பற்றி கூறியதை அனானி சங்கம் ரசித்தது.

  ஆகவே, நீங்கள் எங்களை அழைத்து ஒரு பதிவு போட்டால், உங்களை முதல் முதலில் நூறடிக்க ( நாறடிக்க அல்ல) வைப்போம்.

 1. ஆமாம் லக்கி, இப்பதான் பார்த்தேன், ஆடி ஓடி ஆண்டவனேயே ஜோலி பாத்துபுட்டாய்ங்க போல :)))

 1. ரொம்ப்ப டாங்ஸுபா
  பாலா அண்ணாத்தே கிட்டே கேட்டதுக்கு பதிலே சொல்லாமவுட்டார். அவுருதான் ஏதோ வாய்ப்பூட்டு போட்டுக்னாரோன்னு கிலியாயிட்டேன்.

 1. அனைத்து அனானி முன்னேற்ற கழகங்களும் ஒருங்கினைக்கப்பட்டு, அவுஸ்திரேலியாவில் இருந்து ( ஆஸ்திரேலியான்னும் சொல்லலாம்) செயல்படும்.

  இதில்

  லக்கிலூக் ரசிகர் மன்றம்,
  செந்தழல் ரவி ரசிகர் மன்றம்,
  லொடுக்கு பாண்டி ரசிகர் மன்றம் அனைத்தும் செயல்படும்.

  ஆழியூரான், பாலபாரதி, மகேந்திரன் பெ, கோவிகண்ணன்(இப்போது அனானி ஆப்சனை நீக்கி விட்டதால் இவருக்கு ஆட்டத்தில் இடம் இல்லை) போன்ற அனானி ரசிகர்களுக்கு, பதிவுக்கு 50 பின்னூட்டம் போட்டு ஆதரவு தரப்படும். ( மொக்கை பதிவுகளுக்கு)

  பதிவு கொஞ்சம் தரமானதாக இருக்கும் பட்சத்தில் 100 சாதாரனம்.

  தங்கள் பதிவுகளில் அனானி ஆதரவு வேண்டுவோர், தாராளாமாக வாய்ப்பு கேட்கலாம்.

 1. 5:15 PM  
  mansoor said...

  //موثو (تاميليني) க்கு ( இது யார் பெயர் என்று சொல்பவர்களுக்கு இரண்டு பரிசுகள்) //

  That is Muthu Thamilini..

 1. /*ஆகா ஒரு வலைப்பதிவாளர் நம்மை அடையாளம் கண்டுவிட்டார் என்று அருகில் போனேன்.*/

  ஆகா இதெல்லாம் வேற நடந்துச்சா சொல்லவே இல்லே :)

  /*பொதுவாக உலக இலக்கியம் பேசினாலும், நெட்டில் ஜல்லி அடித்து பிழைப்பை ஓட்டினாலும்*/

  சிங்கிள் கேப் ல இலக்கவாதின்னு சொல்லிகிட்டீங்க நல்ல இருங்க

  /*"பில் கலெக்டர்"*/

  பாலா கவனீச்சீங்களா?

  /*" தாடியுடன், ஒரு ஜிப்பா, ஜோல்னா பை, சோமாலியா பஞ்சத்தில் அடிபட்ட மனிதனை" ஆனால் "லால் சேட்ஜியின் சோட்டா பச்சா" மாதிரி திம்முனு இருந்தார்.*/

  சொல்லிடீங்களா?நாளை யிருந்து நாலஞ்சு நாளைக்கு தொப்பை குறைக்கிறேன் ஆசாமின்னு சாப்பாட்டுக்கு பட்டினி போடபோறார் :)

  நகைச்சுவை இயல்பாய் இருக்கிறது :) அடுத்த பதிவு எப்போ :?

 1. அனானிகளுக்கு கும்மியடிக்கும் தொழிலை கற்றுக் கொடுத்தது எங்கள் வலைப்பூ சுனாமி லக்கியார் தான். எனவே எல்லா அனானிகளும் எங்கள் பாசறையில் இணைந்து அதர்-அனானி ஆப்ஷன் என்றாலே உச்சா போகும் கிழட்டுப் பதிவாளர்களை எதிர்த்து போரிட வேண்டும் என பாசறை சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

 1. நல்லா இருங்கப்பா...அடுத்ததையும் சீக்கிரம் போடுங்க...:( grrr

 1. This comment has been removed by a blog administrator.
 1. 5:53 PM  
  Anonymous said...

  அனானிகளுக்கு கும்மியடிக்கும் தொழிலை கற்றுக் கொடுத்தது எங்கள் வலைப்பூ சுனாமி லக்கியார் தான். எனவே எல்லா அனானிகளும் எங்கள் பாசறையில் இணைந்து அதர்-அனானி ஆப்ஷன் என்றாலே உச்சா போகும் கிழட்டுப் பதிவாளர்களை எதிர்த்து போரிட வேண்டும் என பாசறை சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.//

  மெம்பர்ஷிப் பைசா எம்புட்டு?.

 1. 5:54 PM  
  செந்தழல் ரவி ரசிகர் மன்றம said...

  சுனாமியார் பாசறை கூறியதை செந்தழல் ரவி ரசிகர் மன்றம் ஏற்றுக்கொள்கிறது. கிழபதிவாளர்கள் திருப்பி பார்ப்பது, திரும்பி பார்ப்பது என்று ஆயிரக்கனக்கான டரியல் பதிவுகளை எழுதுவதை நிறுத்தவேண்டும்.

  உங்கள் அலுவலகத்தில் தினம் நடந்ததை டைரி போட்டு வேலை வெட்டியில்லாமல் எழுதி வைத்துவிட்டு, இங்கே வந்து வாந்தி எடுப்பதை நிறுத்த வேண்டும். ( அப்பாடா, ஆழியூரானின் பத்து கட்டளைப்படி ஒருவரை கலாய்த்தாயிற்று )

  அனானி ஆப்ஷனில் உங்களை திட்டுறாங்க என்றால், அதே ஆப்சனில் நல்லது சொல்லவும் ஒருவன் வருவான் இல்லையா ? ஏன் கத்தி கதறி, அழுது, அரற்றி, நொந்து, நூலாகி, நூடுல்ஸ் ஆகுறீங்க ?

  வலைப்பதிவு நெப்டியூன் செந்தழல் ரவி ரசிகர் மன்றம்,
  கெலன ஜெயா,
  மலேசியா.

  ( ரேண்ட்விக் ஆஸ்திரேலிய மன்றத்துடன் இணைந்தது )

 1. அண்ணன் லக்கியார் ரத்த தான கழகத்தின் சார்பாக இன்று முதல் கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் இரவினில் உறங்கி ரத்ததானம் செய்வது என்று முடிவெடுக்கபட்டுள்ளது

 1. (சிவாஜி ஸ்லாங்கில் படிக்கவும்)

  எப்பா.... எப்பா.... தம்பிகளா ஒரு பேச்சுக்கு தானப்பா சொன்னேன் ,பின்னூட்டம் கம்மியா இருக்குன்னு. அதுக்கு இப்படியா

  என்னப்பா...... உங்க அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேனோ

 1. நல்லா சிப்பு வருதய்யா உம்ம பதிவு!!

 1. //நுழைவுக்கட்டணம் வசூலிப்பவர் போல என்று நினைத்து //

  பா.க.ச உறுப்பினர் கார்டு வாங்கிட்டு இந்த மாதிரி கலலாயிங்கோ ப்ளீஸ் ;) நாங்கயெல்லாம் அதுக்கு தானே சங்கம் ஆரம்பிச்சிருக்கோம்...

  பாலா உங்கள ரவுண்டு கட்ட நிறைய பேர் கிலம்பிட்டா மாதிரி தெரியுது :D

 1. யே!! யே!!

  எங்கள் தல வரவணையான் திரும்ப வந்துட்டாரு..

  யே!!

  ///*பொதுவாக உலக இலக்கியம் பேசினாலும், நெட்டில் ஜல்லி அடித்து பிழைப்பை ஓட்டினாலும்*/

  சிங்கிள் கேப் ல இலக்கவாதின்னு சொல்லிகிட்டீங்க நல்ல இருங்க//

  actually ப்ரியன், இந்த வரி படிச்சதும் எனக்கு ஸிரிப்ப அடக்கவே முடியலப்பா க்யா காமிடி ஹே!!....

  அப்புறம் தல(இங்கே, லால் சேட்ஜியின் சோட்டா பச்சாவைக் குறிக்கும்) எழுதின ஒரு கத போன வார குங்குமத்துல வந்துச்சே யாரும் படிச்சிங்களா..

  படிச்சவங்க இங்கயோ அல்லது அங்கயோ ஒரு ஓ!! போட்டுட்டு போய்டுங்கப்பா....

 1. ஆமா தலைப்புல குஷ்புன்னு பேர் கீதே... உள்ற ஒன்தயுமே கானொமே.. யின்னா மேட்ருன்னேன்...

 1. ஒரு எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டிய பொன்ஸ்'க்கு நன்றி,

  அந்த எழுத்து பிழைக்கு போனில் என்னையை மிரட்டிய எஸ்.பாலபாரதியை சகோதரர் லக்கிலுக் கவனித்து கொள்வார் என்றும் தெரிவித்துகொள்கிறேன்:)))

 1. //முத்து(தமிழினி) + குஷ்பு = சர்ச்சை//
  Please explain

 1. குப்பு, மதியம் வரை காத்திருங்களேன் பிளிஸ்

 1. 12:00 PM  
  Anonymous said...

  சர்ச்சை என்ன என்று சொல்லவில்லை என்றால் விண்ஸ்டன் சர்ச்சிலை அழைத்து சொல்லுவோம்..

 1. //நம்ம பரம்பரை வரலாற பூராம் கேக்குறாய்ங்க, 'பாய் தெரியலையா என்றேன் . வரவேற்பாளரிடம் . அவரும் சிம்பிளா "தெரியலைனு" முடிச்சுகிட்டாரு பேச்ச. "அண்ணே ஏண்ணே இப்பலாம் முன்ன மாறி வரதுதில" என்று கேட்டு என் வயிற்றில் பீரை வார்த்தான் ரூம்பாய் சலீம்//

  :)))))

  //பர்தா அணிந்து நின்ற ஒரு பெண் சிரித்தாள். ஆகா ஒரு வலைப்பதிவாளர் நம்மை அடையாளம் கண்டுவிட்டார் என்று அருகில் போனேன்//

  அட இதுதானே வேணாங்கறது யாருங்க பர்தாவ போட்டுகிட்டு வலை பதியரது ?? ;)))

  //தாடியுடன், ஒரு ஜிப்பா, ஜோல்னா பை, சோமாலியா பஞ்சத்தில் அடிபட்ட மனிதனை" ஆனால் "லால் சேட்ஜியின் சோட்டா பச்சா" மாதிரி..//

  ஆஹா யாருங்கண்ணா நீங்க நம்ம பாலாண்ணனை இப்படி போட்டு தாக்குறீயளே !!:)))


  // மொத பஞ்சாயத்தே அனானி பின்னூட்டங்களை //

  ஓ பஞ்சாயத்துவேறயா ஆமா ஆருங்க நாட்டாமை ?? ;)))))

 1. //நம்ம பரம்பரை வரலாற பூராம் கேக்குறாய்ங்க, 'பாய் தெரியலையா என்றேன் . வரவேற்பாளரிடம் . அவரும் சிம்பிளா "தெரியலைனு" முடிச்சுகிட்டாரு பேச்ச. "அண்ணே ஏண்ணே இப்பலாம் முன்ன மாறி வரதுதில" என்று கேட்டு என் வயிற்றில் பீரை வார்த்தான் ரூம்பாய் சலீம்//

  :)))))

  //பர்தா அணிந்து நின்ற ஒரு பெண் சிரித்தாள். ஆகா ஒரு வலைப்பதிவாளர் நம்மை அடையாளம் கண்டுவிட்டார் என்று அருகில் போனேன்//

  அட இதுதானே வேணாங்கறது யாருங்க பர்தாவ போட்டுகிட்டு வலை பதியரது ?? ;)))

  //தாடியுடன், ஒரு ஜிப்பா, ஜோல்னா பை, சோமாலியா பஞ்சத்தில் அடிபட்ட மனிதனை" ஆனால் "லால் சேட்ஜியின் சோட்டா பச்சா" மாதிரி..//

  ஆஹா யாருங்கண்ணா நீங்க நம்ம பாலாண்ணனை இப்படி போட்டு தாக்குறீயளே !!:)))


  // மொத பஞ்சாயத்தே அனானி பின்னூட்டங்களை //

  ஓ பஞ்சாயத்துவேறயா ஆமா ஆருங்க நாட்டாமை ?? ;)))))

 1. 7:22 PM  
  Anonymous said...

  //அட இதுதானே வேணாங்கறது யாருங்க பர்தாவ போட்டுகிட்டு வலை பதியரது ?? ;)))//

  அட நம்ம எக்ஸ்ப்ரஸூ.. ..

 1. //அட நம்ம எக்ஸ்ப்ரஸூ.. .//.


  என்ன விளையாட்டு இது ? நான் இல்லை என் ப்ரொபைல் பெண் அணிந்திருப்பது தாவனி யப்பா இதுக்கே ஒரு டிஸ்கிப்பதுவு போடனும் போல

 1. இந்தப் பதிவை வாசிச்சி..அப்படியே பின்னாஆஆஆலேயே போய் எல்லாத்தையும் வாசிச்சிட்டேன். ஏசுவின் கோபம் டாப்; மற்றதும் ஒண்ணும் குறைச்சலில்லை...

 1. நன்றி தருமி, மற்றும் அனைவருக்கும்.