Friday, September 29, 2006

@ 5:21 PM எழுதியவர்: வரவனையான்


விழா ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் திரைக்கு பின் நடப்பவைகளை பார்ப்பதே ஒரு கிக்'தான். இதோ "எக்மோர் சியர்ஸ் பார்" வழங்கும் வலைப்பதிவர் விருது வழங்கும் நிகழ்ச்சியின் திரைக்கு பின்னால் . விழாவின் போது விருது பெற வந்திருந்த பதிவர்களின் சுவாரஸ்யமான சந்திப்பு.

மணி :05.48.45
வர: ஏய் எல்லாரும் வந்தாச்சா ? லக்கி வாசல்ல நிக்காதிங்க உள்ள வாங்க . இப்பதான் போன் வந்துச்சு "உங்கள தூக்கிட்டு போயி ஒரு வாரம் மூச்சு திணர திணர வெளுக்க" ஒரு குரூப் அலையுதாம்.

முத்து: அதாங்க நானும் சொல்றேன் ,

என்றதும் லக்கி அவரை கலவரமாக பார்க்கிறார்.

வர: என்ன தலைவா , நீங்களே "நம்ம" லக்கிய இப்படி சொல்லிட்டீங்க. "உள்குத்து"தான் குத்திட்டு இருந்திங்க, "இப்ப வெளிகுத்து குத்தவும் ஆள் செட் பண்ணிடிங்களா?

முத்: ஏய் ஏய் இல்லப்பா , நான் சொல்லவந்தது எனக்கும் போன் வந்துச்சு , அதான் உள்ள வர சொன்னேன்

வர: சரி நீங்க விழா ஏற்பாடெல்லாம் சரியான்னு பாருங்க . நான் இப்ப வந்துடுறேன்

முத்: வரவனை "அதுல்லாம்" ராத்திரி பாத்துக்குவோம் இப்பவே ஆரம்பிச்சுடாதிங்க , என பாரா உஷார் விசிலடித்தார்.அவர் சொன்ன பிறகுதான் எனக்கும் கட்டிங்போடும் மூடே வந்தது.வூடு ஜுட்

மணி: 06.12.31

முத்து : வரவனை எங்கய்ய போயி தொலைஞ்சிங்க , நீங்க பாட்டுக்கு விட்டுட்டு போயிட்டிங்க

வர : (பல்லை இளித்தபடி) சும்மாதான் அப்படியே வெளியே.......

முத்: என்ன சரக்கடிச்சிங்க ? இந்த நாத்தம் நாறுது

வர: அது வந்துங்க.....

முத்து: (மறித்து) வேணாம் இங்கையே ஒரு ஆறு பதிவு போட ஆரம்பிச்சுடுவிங்க விடுங்க அந்த மேட்டர, சரி போகும் போது டிரஸ்சிங் ரூமை பூட்டிட்டு போனிங்களா?

வர: ஆமா என் சூட்கேஸ் இருக்கு அதுனாலதான் பூட்டினேன்

முத்து: அது சரி, லைட்ட ஆஃப் பன்னிட்டுதானே போனிங்க ,ஆனா நீங்க பூட்டுனது பாத்ரூமை , உள்ள பாலா இருக்குறாரு . பார்க்காம பூட்டிட்டு போயிட்டிங்க. பாவங்க அவரு.

வர: (குஜாலாகி) மாம்ஸ் இங்கதான் இருக்காரா ஆஹா !

டாய்லட் வாசலில் லக்கி நிற்கிறார், ம்ம் ம்ம் என்று உம் கொட்டியபடியே நின்றவரிடம் யாரிடம் பேசிகிட்டு இருக்கிங்க என்றேன் . பாலாவிடம் என்றார். கையிலிருந்த சாவியால் கதவை திறந்து விட்டேன். வெளியே வந்த பாலா யாரையும் கண்டுகிடாமல் ஈசானிய மூலையில் நின்று கொண்டு வழக்கம் போல் "கடலை வறுவல் செய்வது எப்படி " என்று "யாரிடமோ" விளக்கிகொண்டிருந்தார்.

லக்கி : ச்சை நீங்க தாழ்ப்பாள் போட்டு போயிட்டிங்களா , சரி ஒரு கம்பெனிக்கு பேசிக்கிட்டு இருப்போம்ன்னு பேசிக்கிட்டு இருந்தேன் இப்பதான் தெரியுது, இவ்வளவு நேரம் வேற யார்கூடவோ பேசிகிட்டு இருந்திருக்காருன்னு, என லக்கி பாலாவை பார்த்து டென்சனானார்.

வர: வுடுங்க லக்கி மாம்ஸ் " எப்பவுமே இப்படித்தான்"

வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க வாசலுக்கு போனால், பொட்"டீ"க்கடை, குழலி உள்ளிட்ட கீழை மார்க்சீய ச்சை தூரக்கிழக்கு நண்பர்கள் விமானநிலையத்திலிருந்து வந்திறங்கினார்கள். கானா பிரபா, பேஃன்ட் போட்டிருந்தாலும் கையில் ஒரு சிறுபையில் திருநீறு வைத்துக்கொண்டு எதிர்வருபவர்களின் நெற்றியில் பூசிவிட்ட படி இருந்தார். பக்கத்தில் ஒருவர் குதிரையில் வந்து இறங்கினார் யார் என்று பார்த்தால் சின்னக்குட்டி. நட்சத்திர வாரம் கொண்டாடி கொஞ்சம் ஆள் பூரிப்பில் இருந்தார்.

முத்துக்குமரன்,பரஞ்ஜோதி எல்லாம் ஒரு கும்பலாய் கும்மி அடித்துகொண்டிருக்க, அவர்களுக்கு அனானி ஆஃப்சனின் நன்மை தீமைகளை விளக்கிகொண்டிருந்தார் லக்கி.

மாம்ஸ் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்

பாலா: மாப்ளை ஒரு நிமிசம் இங்க வா ,

வர: என்ன மாம்ஸ் பங்சன் ஆரம்பமாக போகுது மூணாவது ஆள் நீயிதான் இன்னும் இங்க திரியுற

பாலா : பவுடர் ஒகே யா, சொல்லு என்று கண்ணைமூடி முகம் காட்டினார்

வர : கன்னத்தில் திருஷ்டி பொட்டு ஒன்னுதான் பாக்கி. மாம்ஸு போயி மொகத்த கழுவிட்டு மேடைக்கு போங்க. இவ்வளவு பவுடரு அடிச்சுகிட்டு போனா நீதான் அனானி சங்க தலைவன்னு நினைச்சுக்க போறய்ங்க என்றேன்

பால: அப்ப பொட்டு வச்சுகிட்டு போகனுங்கிற ஒகே, என்றபடி நகல வரவனை தலையில் அடித்து கொள்கிறார்

வர: இன்னைக்கு எத்தனை பேருக்கு "இருள்" அடிக்க போகுதோ

டோண்டு மற்றும் குழுவினர் உள்நுழைய அவசரமாக யாரோ பின்வழியால் குதித்து ஓடுவது தெரிகிறது.

(இந்த டரியலும் தொடரும்)

20 மறுமொழிகள்:

 1. அய்யா....ஓகோ..

  ராசா....ஓகோ

  திருப்பதி எழுமலை வெங்கடேசா...

  பையனுங்கள விட்டுடுங்க லேசா

 1. "டோண்டு மற்றும் குழுவினர் உள்நுழைய அவசரமாக யாரோ பின்வழியால் குதித்து ஓடுவது தெரிகிறது."
  போண்டா கூட சாப்பிடாமலா?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 1. ஆசிய-பசிபிக் மக்களுக்கு மட்டும் "இன்விட்டேசன்" அனுப்பாம இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும் கதை...யோவ் நா வேலைவெட்டி இல்லாம இருக்கறத ஊர் முழுக்க சொல்றதுல என்ன சந்தோசம்??...இருந்தாலும் நாங்க இதுக்கெல்லாம் அசரமாட்டோம்ல...ஒழுங்கா ஒரு ஃபுல் ஓல்டு மான்க் வாங்கி வையும்...

 1. ஆசிய-பசிபிக் மக்களுக்கு மட்டும் "இன்விட்டேசன்" அனுப்பாம இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும் கதை...யோவ் நா வேலைவெட்டி இல்லாம இருக்கறத ஊர் முழுக்க சொல்றதுல என்ன சந்தோசம்??...இருந்தாலும் நாங்க இதுக்கெல்லாம் அசரமாட்டோம்ல...ஒழுங்கா ஒரு ஃபுல் ஓல்டு மான்க் வாங்கி வையும்...

 1. 6:11 AM  
  Anonymous said...

  பட்டமளிப்பு விழா முடிஞசு சனங்க இன்னும் வெளியே போகலே1
  அதுக்குள்ளார எக்மோர் சியர்ஸ் பார்ன்னா என்னப்பா நியாயம்?

  சின்னப்ப தாஸ்

 1. 11:17 AM  
  Anonymous said...

  //முத்துக்குமரன்,பரஞ்ஜோதி எல்லாம் ஒரு கும்பலாய் கும்மி அடித்துகொண்டிருக்க, அவர்களுக்கு அனானி ஆஃப்சனின் நன்மை தீமைகளை விளக்கிகொண்டிருந்தார் லக்கி.//


  super thala

 1. எப்பொழுது தொடர்ச்சி வரும்?
  காத்திருக்கின்றேன்..
  படித்தேன்..சிரித்தேன்..
  பாராட்டுக்கள் :)

 1. வணக்கம் தலீவா

  கடந்த 2 நாட்களாய் உங்கள் பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருக்கிறேன். பார்வையாளராக....

  இப்போது போட்டீங்களே ஒரு போடு:-))))

 1. 2:11 PM  
  Anonymous said...

  //"டோண்டு மற்றும் குழுவினர் உள்நுழைய அவசரமாக யாரோ பின்வழியால் குதித்து ஓடுவது தெரிகிறது."

  போண்டா கூட சாப்பிடாமலா?

  அன்புடன்,
  டோண்டு ராகவன் //


  bonda sapitaamal pona avarukku nandri

 1. வணக்கம் வரவனையான்..நன்றி.. எல்லாம் சரி... அந்த குதிரையை வெளியிலை கட்டிப்போட விழாவுக்கு வந்தவங்கள் ஆரோ.. சாய்ச்சுக் கொண்டு போயிட்டாங்கப்பா... அதை திருப்பி கொடு்த்திடுங்கப்பா... அது வந்தியத்தேவன் காலத்திலை பாவி்ச்ச குதிரை( என்ன மாஜிக் தெரியாது அப்படியே இளமையாக இருக்குது)

 1. எனக்கு முறையா அழைப்பிதழ் வரவில்லை!

 1. // விடாதுகருப்பு said...
  எனக்கு முறையா அழைப்பிதழ் வரவில்லை!//

  எனக்கும் வரலயே என்னப்பா..? எந்த கொரியர்ல அனுப்புனிங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க..

 1. // விடாதுகருப்பு said...
  எனக்கு முறையா அழைப்பிதழ் வரவில்லை!//

  எனக்கும் வரலயே என்னப்பா..? எந்த கொரியர்ல அனுப்புனிங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க..

 1. :-)))))))))

 1. //முத்துக்குமரன்,பரஞ்ஜோதி எல்லாம் ஒரு கும்பலாய் கும்மி அடித்துகொண்டிருக்க, அவர்களுக்கு அனானி ஆஃப்சனின் நன்மை தீமைகளை விளக்கிகொண்டிருந்தார் லக்கி.//

  எதுக்கு இவ்வளவு கொந்தளிப்பு?

 1. தலை!

  சீக்கிரமா அந்த தூத்துக்குடி சிவாஜி ரசிகர் மேட்டர எடுத்து வுடு தலை.... செம்ம ஜமா மேட்டர் ஆச்சே அது....

 1. ஆகா இதென்ன கலாட்டா? நல்லா இருக்கு, அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்.

  நன்றி

 1. ஏன்பா நம்ம லக்கியை இப்படி வறுக்கின்றீர்கள்??

 1. 12:05 PM  
  Anonymous said...

  தலைவர்களே,

  பட்டமளிப்பு விழாவுக்கு வாழ்த்துக்கள்...இனி நான் மத்த பின்னுட்டங்கள் இடலாம் தானே?...யாரும் திட்ட மாட்டீங்களே?

 1. கலக்கறே சந்துரூ...