Wednesday, September 13, 2006

@ 12:43 PM எழுதியவர்: வரவனையான்


இதுவும் ரொம்ப நாளைக்கு முன்னால நடந்த கதை. நம்ம சியர்ஸ் ! பார்ட்டி ஊரில் கிறிஸ்த்துமஸ் விழா. நம்மாளுக்குத்தான் கடவுள் பிடிக்காதே தவிர கலை ஆர்வம் அதிகமாச்சே . கிறிஸ்த்துமஸ் விழாவில் நாடகம் நடத்த அழைக்கபட்ட அழைப்பை ஏற்று . யூப்ரிட்டிஸ் , சேக்ஸ்பியரை எல்லாம் ஒரு வாரமாய் கரைத்து குடித்து கொண்டிருந்தார்.

நவீன நாடகம் மீதான தனியாத ஆர்வத்திற்கு கிடைத்த பெருந்தீனியாய் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முனைந்து நிறைய ஹோம் ஒர்க்கெல்லாம் செய்து கொண்டிருந்தார். 'மெடியா' நாடகத்திற்கான ஒத்திகையும் தனியாக பார்த்துக்கொண்டிருந்தார். எல்லாம் முடிந்து ஆட்கள் தேர்வு செய்து தரும் படி சர்ச் நிர்வாகத்திடம் கேட்ட பொழுதுதான் தெரிந்தது நடக்கபோவது ஏசுவின் கடைசி விருந்து நாடகம் என்று. நம்மாளுக்கு கடும் அதிர்ச்சி.அதை விட அதிர்ச்சி அதில் இவருக்கு ஒரு சிறு வேடம் மட்டுமே. ஏசுவை சிலுவையில் அறைந்து விட்டு இறங்கி போகவேண்டும். இருந்தாலும் கொஞ்சம் மனதை தேற்றிக்கொண்டு நாடகம் நிகழும் நாளுக்கு காத்திருந்தார். இடையில் அவ்வப்போது ஒத்திகை வேறு .


நாடகத்திற்கான நாளும் வந்துச்சு, மனிதர்களின் பாவத்திற்கு சிலுவை சுமந்து கொண்டு ஏசு வருகிறார் அங்கு கூடியிருக்கும் மக்கள் கண்ணீர் வழிய ஏசுவை பின் தொடர்கின்றனர். பார்த்துக்கொண்டிருக்கும் மக்களும் கண்ணீர் வழிய காட்சிகளை உள்வாங்கி கொண்டிருந்தனர்

ஏசுவின் சிலுவை நடப்படுகிறது. ரோமானிய படைவீரன் வேடமிட்டு நமது டவுசர் ஆயுத்தமாயிருந்தார். இவர் நின்றிருந்த பக்கம் அதிவெளிச்ச விளக்கு போடப்பட்டதும் "நம்மாளு"க்குள் "சிவாஜி" உட்புகுந்து விட்டது போல் ஒரு ஃபீலிங். உண்மையாகவே ஏசுவை சிலுவையில் அடித்தவன் கூட அவ்வளவு நேர்த்தியாய் அடித்திருக்கமாட்டான். அந்தப்பக்கம் நின்றிருந்த இன்னொரு படைவீரன் தொடர்ந்து ஒரு வாரம் "வயித்தாலே" போனவன் மாதிரி இருந்தான். இதைப்பார்த்தும் நம்மாளுக்கு உள்ளுக்குள் லேசா ஒரு அல்ப சந்தோசம். நாம் எவ்வளவு மிடுக்காய் இருக்கிறோம் என்று.

ஏசு ஏற்றப்படுகிறார். இவரும் ஒரு ஸ்டூலில் ஏறி "சிவாஜி கனேசன் " போல் ஆணியின் கூர்மை எல்லாம் சரி பார்க்கிறார். இயேசுவின் தலைக்கு மேலிருந்து ஒரு மைக் தொங்குகிறது. இயேசு "ஏலீ ஏலீ லாமா சமக்தாமி" என்று முனகிக்கொண்டு இருக்கிறார். இயேசுவின் கை இருக்கும் இடம் நம்மாளுக்கு எட்டவில்லை,குதிகாலை தூக்கி அடிக்க துவங்குகிறார். அப்பவும் எட்டவில்லை .இவர் நின்றிருந்த இடத்துக்கு அருகே சிலுவை மரத்தில் இயேசுவைக்கட்டிய கயிற்றின் பின் பகுதில் கால்வைத்தார் அது கொஞ்சம் வாகாய் இருந்தது.

ஆனால் இவர் கயிறில் கால் வைக்கிறோம் என்று நினைத்து இயேசுவின் அரை முழ வேட்டியில் கால் வைத்து கொண்டிருந்தார். இயேசுவாக நடிப்பவரினால் சொல்லமுடியவில்லை . முன்னால் மைக் வேறு இருக்கிறது. காட்சியோ மிக முக்கியமானது.லேசாக முணு முணுக்கும் குரலில் இயேசு இவரிடம் சொல்லிபார்த்தார். ஆனால் இவர்தான் உண்மையில் ரோமானிய படைவீரனாக மாறி நெடு நேரமாகி இருந்ததே.

இரண்டு ,மூன்று முறை இயேசுவும் "கிசு கிசு"க்கும் மொழியில் சொல்லி பார்த்தும் இவர்காதில் ஏறவில்லை பொறுமை இழந்த இயேசுவாக நடிப்பவர் மைக்கில் அடுத்த ஊருக்கும் கேட்கும் டெசிபளில் சொன்னது

"வேட்டி அவுருதுடா தா............ழி"

அன்னைக்கு ஊரே சேர்ந்து இயேசுக்கும் இவருக்கும் கொடுத்த மாத்து இருக்கே அது ரெண்டு கிருத்துமஸுக்கு தாங்கும்( god bless them)

28 மறுமொழிகள்:

 1. //அன்னைக்கு ஊரே சேர்ந்து இயேசுக்கும் இவருக்கும் கொடுத்த மாத்து இருக்கே அது ரெண்டு கிருத்துமஸுக்கு தாங்கும்//

  யப்பா தாங்களடா சாமி!!!

 1. படிச்சிட்டு சிரிச்சேங்க நகைச்சுவையா இருக்கு.

 1. :-)))))))))))))))

 1. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

  வவுத்து வலி வந்திடுச்சுப்பா.

 1. :-)))) Ultimate Comedy :-))))

 1. :-D LOL

 1. 3:37 PM  
  Anonymous said...

  கலக்கல்ஸ்...மிக அறுமையான காமடி...

 1. இயேசுவின் இறுதிப்பாடுகளைச் சித்தரிக்கும் நாடகத்தை (பாஸ் என்று எங்களிடத்தில் சொல்வார்கள்) மையமாக வைத்து இப்படி சில நகைச்சுவைத் துணுக்குகளுள்ளன.

 1. 4:45 PM  
  Anonymous said...

  //god bless them//
  :-))))))))))))))))))

 1. 7:53 PM  
  Anonymous said...

  //இரண்டு ,மூன்று முறை இயேசுவும் "கிசு கிசு"க்கும் மொழியில் சொல்லி பார்த்தும் இவர்காதில் ஏறவில்லை பொறுமை இழந்த இயேசுவாக நடிப்பவர் மைக்கில் அடுத்த ஊருக்கும் கேட்கும் டெசிபளில் சொன்னது

  "வேட்டி அவுருதுடா தா............ழி"

  அன்னைக்கு ஊரே சேர்ந்து இயேசுக்கும் இவருக்கும் கொடுத்த மாத்து இருக்கே அது ரெண்டு கிருத்துமஸுக்கு தாங்கும்//

 1. :))

 1. :-))))))))))))))

 1. :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::-------------------------------------------------------------------------------------------------------------------------------------------)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

  இன்னும் எவ்வளவு நீட்ட முடியுமோ அவ்வளவு நீட்டிக்கொள்ளுங்கள் சகோதரரே!

 1. சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிடுச்சுப்பா.

 1. ;) ;) :)

 1. :)

 1. :-))))))))))))

 1. one word appreciation: fantastic !

 1. :-)

  சூப்பரப்பு!!!!!!

 1. இதனிடையே ஒரு தகவல், மேற்கண்ட பதிவை படித்த சம்பந்தப்பட்ட "ஈழத்து தந்தை" பெயரைக்கொண்ட டவுசர் நேற்று இரவு என்னை செல்லில் பிடித்து ஒரு விளக்கம் தந்தார். அதாவது நான் எழுதியுள்ள சம்பவம் அவரின் கல்லூரியின் முதலாமாண்டு படிக்கும் போது நடை பெற்றது என்றும் . சென்னைக்கு வந்த பின் வேறு சில சம்பவங்கள் ( உவ்வே தெரபி) மட்டும் உண்மை என்றும் . பதிவு நன்றாயிருப்பதாய் பாராட்டினார்.

 1. தலை!

  அந்த தூத்துக்குடி சிவாஜி ரசிகர் மேட்டர எப்ப அவுத்து உடப்போறே?

 1. எழுதிட்டு இருக்கேன் லக்கி, வேலை வேற பெண்ட கழட்டுது........

  :)

 1. பாவமா இல்லை!
  ஹி ஹி ஹி ஹி

 1. ஹா ஹா

 1. நல்ல டமாஸ்ங்க ஹி ஹி ஹி.....

 1. :)

 1. வரைவினையான்,
  நல்ல நகைச்சுவைப் பதிவு. ப

 1. nice comedy

  Sontha anupavamaa?

  Hehehehehehe