Sunday, September 10, 2006

@ 3:37 PM எழுதியவர்: வரவனையான்

11) அமைப்பாக்கம்,வன்முறை, அபத்தம், நிறுவனமயமாக்கல், கட்டமைப்பு , கட்டுடைத்தல்,முரண், நகைமுரண், விளிம்பு,தொல்லை, பெருங்கதையாடல், நுண் அரசியல், பேரரசியல், அதிகாரம், மாற்றுக்கான தேடல் போன்ற வார்த்தைகளை 4ஆம் வாய்ப்பாடு போல் மனப்பாடம் செய்து வைத்து கொள்ளவேண்டும்.( நடுவில் ஆங்காங்கே மானே, தேனே , பொன்மானே என்று போட்டுக்கொண்டாலும் ஒ.கே)

12) திருமண வயது தாண்டும் தருவாயில் கண்டிப்பாய் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும். மனைவி அரசுப்பணியில் இருப்பவராய் இருந்தால் நீங்கள் இலக்கியவாதியாய் தொடரலாம் இல்லையெனில் "இயல்பு வாழ்க்கைக்கு" திரும்பநேரிடும் அவலம் ஏற்படும்.

13)நல்ல மப்பில் தான் செய்யும் அனைத்து அட்டகாசங்களுக்கும் காலையில் தெகிரியமாய் விளக்கம் சொல்லும் திறமை வேண்டும். "யாரு ஒழுங்குன்னு சொல்லு நான் தப்பு பன்னினேனு ஒத்துக்கிறேன்"என்று கேள்வி கேட்டவரிடம் கடைசி ஆயுதத்தை பயன் படுத்தலாம்

14) 10 கிலே மீட்டர் பயணமானலும் கையில் குறைந்தது இரண்டு புத்தகம் எடுத்துச்செல்லவேண்டும். பக்கத்து சீட்டுகாரர் படிக்க கேட்டால் புன்சிரிப்புடன் கொடுத்துவிடவேண்டும்.தமிழ்புத்தகமாயினும் அதை இரண்டு பக்கங்கள் புரட்டிவிட்டு "இருள்" அடித்தது போல் அவர் திரும்பதரும் அழகை ரசிக்க கண்கோடி வேண்டும்.

15)குடியிருக்கும் தெருவில் பிச்சைகாரனிடம் கூட கடன் பாக்கிவைத்திருக்க வேண்டும். எ.க: என் நண்பரொருவர் காலையில் வீட்டை விட்டு கிளம்பி 50 மீற்றரில் இருக்கும் பேருந்து நிறுத்ததை அடைய 1 கிலோ மீற்றர் சுற்றி வருவார். எனக்கு விளங்காமல் ஒரு நாள் கேட்டே விட்டேன், " ஆமாங்க வீட்டுக்கு பக்கத்தில் பொட்டிகடையில் சிகரெட் பாக்கி கொஞ்சம் இருக்கு அந்த பக்கம் போனா தொல்லை அதான்" என்றார். குடுத்துவிடலாம் என்கிற எண்ணத்தில் எவ்வளவுங்க ஒரு 200 ரூபாய் இருக்குமா " நானே தந்துடுறேன்" என்றேன் . அதுக்கு அவரு சொன்னாரு 3800 ரூபாய் தரனும் என்று. அன்னையில இருந்து அவரை பார்ப்பதில்லைன்னு முடிவு செய்திட்டேன்.

16) கண்டிப்பாய் புலிகளை எதிர்க்க வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு புலி எதிர்ப்பாளராக நீங்கள் இருப்பது உங்களின் மேதைமைகு மெருகு சேர்க்கும். அரச பயங்கரவாதம் கோலோச்சிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில் அதை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்வது எப்படி என்று "பாதுகாப்பான சூழலில்" நல்ல பார்களில் உட்கார்ந்து நாலு லார்ஜ் போட்டுகொண்டு சாவுகாசமாய் விவாதிக்கவேண்டும்.

17) மார்க்சீயத்தை கடுமையாக விமர்சிக்கவேண்டும். "மார்க்ஸ் செத்து போனது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை மார்க்சீயம் செத்துப்போனதும் " என்று "கலகம்" செய்யவேண்டும்.

18) அதே நேரத்தில் பிரபாகரன் ஏன் ஒரு காஸ்ட்ரோ போல் இல்லை , அவர் கம்யூனிசத்தை பின்பற்ற வேண்டியதுதானே என்று அபத்த கருத்துகளையும் முன் வைக்க வேண்டும். அப்போதான் நீங்க இலக்கியவாதி குறிப்பா பின்நவீனத்துவவாதி

19) வெள்ளாள பாசிசம், கவுண்டர் பாசிசம், செட்டிமார் பாசிசம் என்று வர்த்தைகளை பேசாத நாள் ஒரு நாளா என்கிற கொள்கையுடன் இருக்க வேண்டும்

20) காஃப்கா, டெரித்தா, நீட்ஷே,ஹெய்டெக்கர், காண்ட்,பூக்கோ, துப்ரோவ்ஸ்கி, டிராட்ஸ்கி, நெருதா, மார்ட்டின் லூதர்,ஹெகல்,பிக்கேல் , சாண்டி ஸ்டோன்,எட்வர்டு செய்த், ல்க்கான்,ஃபிராய்ட், ஜங்,குபான்,ஹாரவே ,பிரெய்ன் ழாக்ஸ்,கிட்லர் , லாண்டான், எக்கோ,ஹாசன் , ஜாய்ஸ் , பெல் ஹுக்ஸ். இது போல இன்னும் ஒரு இருபது பெயர்கள் மனனம் செய்து கொண்டு நீங்கள் கந்த சஷ்டி கவசம் சொன்னால்கூட இந்த பெயர்களையும் சேர்த்து சொல்லிவிட்டீர்கள் ஆனால் கண்டிப்பாய் நீங்களும் இலக்கியவாதிதான்.(தொல்லை தொடரும்)

11 மறுமொழிகள்:

 1. //மனைவி அரசுப்பணியில் இருப்பவராய் இருந்தால் நீங்கள் இலக்கியவாதியாய் தொடரலாம் இல்லையெனில் "இயல்பு வாழ்க்கைக்கு" திரும்பநேரிடும் அவலம் ஏற்படும்.//

  //தமிழ்புத்தகமாயினும் அதை இரண்டு பக்கங்கள் புரட்டிவிட்டு "இருள்" அடித்தது போல் அவர் திரும்பதரும் அழகை ரசிக்க கண்கோடி வேண்டும்.//

  வாய் விட்டு சிரித்தேன்.:-O)

 1. 6:45 PM  
  Anonymous said...

  HeeHee...

  Unmaye cholreeenga....

 1. பின்நவீனத்துவவாதியின் பொழப்பு சிரிப்பா சிரிக்குது இங்க. :-))

 1. 9:28 PM  
  Anonymous said...

  dude,

  //வெள்ளாள பாசிசம், கவுண்டர் பாசிசம், செட்டிமார் பாசிசம் என்று வர்த்தைகளை பேசாத நாள் ஒரு நாளா என்கிற கொள்கையுடன் இருக்க வேண்டும்//

  இதெல்லாம் பேசாம பிராமணீய பாசிசம் மட்டும் பேசினா வரவணையான் தத்துவமா?

  //கண்டிப்பாய் புலிகளை எதிர்க்க வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு புலி எதிர்ப்பாளராக நீங்கள் இருப்பது உங்களின் மேதைமைகு மெருகு சேர்க்கும். அரச பயங்கரவாதம் கோலோச்சிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில் அதை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்வது எப்படி என்று "பாதுகாப்பான சூழலில்" நல்ல பார்களில் உட்கார்ந்து நாலு லார்ஜ் போட்டுகொண்டு சாவுகாசமாய் விவாதிக்கவேண்டும்//

  யுத்தம் நடக்கையில் தன் இடங்களில் தாக்குதல் நடந்தால் படுகொலை என விளம்பரம் தேடி கொள்வதும், பிறரை பொது இடங்களில் தாக்குகையில் அப்பாவிகள் இறந்தால் கொலாட்ரல் டேமேஜ் ஆவதற்கும் என்ன பெயர்?

  பிணங்கள் இடத்திற்கேற்ப பெயர் மாற்றிக் கொள்ளும் ரகசியம் போதிக்கும் செயலை என்ன சொல்றது?
  அதுவும் வரவணையான் தத்துவமா

  இந்த மாதிரி பேசினால் அதற்கும் ஒரு இசம் வைத்தீருப்பீர்கள். உங்களுக்கு மறந்து போவது பேசுபவன் ஒரு பிணத்துக்கு சொந்தகாரனாய் இருந்திருக்கலாம் என்பதை.

  நாங்கள் உங்களை எங்கள் வீட்டு எழவுக்கும் வலி உண்டு என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் என்பதை பணிவுடன் சொல்கிறோம்.

 1. நெருடா ரொம்பப் பழைய பேருங்க. யாராவது மொளிபேத்துப் போட்டாத்தான் அதயெல்லாம் பேசுறாங்க. அதுக்கு பதிலா காயத்ரி ஸ்பிவாக் வேணா சேத்துக்குங்க. உங்களோட மிக விரிவான பட்டியல்ல பின்காலனியம், காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மிஸ்ஸிங்! பின்நவீனக்காரங்களுக்கு மாஜிகல் ரியலிசம்னா உசுரு. மத்தபடி நீங்க எதையுமே விட்டுவெக்கல. இந்த ரெண்டு பதிவையும் நண்பர்களுக்கு பார்வர்டு பண்ணப் போறனே.

 1. உண்மைய சொல்லறீங்க... நல்லா சொல்லறீங்க...

 1. //திருமண வயது தாண்டும் தருவாயில் கண்டிப்பாய் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும். மனைவி அரசுப்பணியில் இருப்பவராய் இருந்தால் நீங்கள் இலக்கியவாதியாய் தொடரலாம் இல்லையெனில் "இயல்பு வாழ்க்கைக்கு" திரும்பநேரிடும் அவலம் ஏற்படும்.//

  அட்டகாசம்...

  இல்லையென்றால் நீங்களே அரசுப்பணியில் இருந்து கொண்டும் விடுப்பில் இலக்கியச் சேவை செய்யலாம்....


  //பிரபாகரன் ஏன் ஒரு காஸ்ட்ரோ போல் இல்லை , அவர் கம்யூனிசத்தை பின்பற்ற வேண்டியதுதானே என்று அபத்த கருத்துகளையும் முன் வைக்க வேண்டும்.///

  கண்டிப்பாக பிரபாகரன் காஸ்ட்ரோ இல்லை... அவர் சே குவாரா....


  //காஃப்கா, டெரித்தா, நீட்ஷே,ஹெய்டெக்கர், காண்ட்,பூக்கோ, துப்ரோவ்ஸ்கி, டிராட்ஸ்கி, நெருதா, மார்ட்டின் லூதர்,ஹெகல்,பிக்கேல் , சாண்டி ஸ்டோன்,எட்வர்டு செய்த், ல்க்கான்,ஃபிராய்ட், ஜங்,குபான்,ஹாரவே ,பிரெய்ன் ழாக்ஸ்,கிட்லர் , லாண்டான், எக்கோ,ஹாசன் , ஜாய்ஸ் , பெல் ஹுக்ஸ்///

  தலைவா தலை சுத்துது.... :-(

 1. 10:50 AM  
  Anonymous said...

  அருந்ததி ராய்., ஆட்டையாம்பட்டி ராய் ஏதாவது எழுதி இருந்தா அதை காப்பி அடிச்சி ஒரு பதிவு போடுவது பலனளிக்கும்.

  நான் யாரென தெரியவேண்டுமா ?

  எனக்கு பிடித்தது வவ்வால். நான் ஒரு ஆம்பள.

 1. முக்கியமான ஒன்னு விட்டுப்போச்சி " விலைமாதர் வீடு சென்று அங்கே தான் (பென்சிலால்) எழுதிய கதைமேல் சிறு நீர் கழித்த கதை சொல்ல தெரியவேண்டும்" ( நன்றி: நம்ம சாரு நிவேதிதா)

 1. வனவராயன்.. //தமிழ்புத்தகமாயினும் அதை இரண்டு பக்கங்கள் புரட்டிவிட்டு "இருள்" அடித்தது போல் அவர் திரும்பதரும் அழகை ரசிக்க கண்கோடி வேண்டும்.//

  வாய் விட்டு சிரிச்சேன். கூட ஒர்க் பண்றவர் காரணம் கேக்குறார். நான் பின்னூட்டமடிச்சுட்டு இருக்கேன்..

  யாருப்பா அது சாத்தான்.. ரொம் சரியா சொல்றாரு... //நெருடா ரொம்பப் பழைய பேருங்க. யாராவது மொளிபேத்துப் போட்டாத்தான் அதயெல்லாம் பேசுறாங்க. அதுக்கு பதிலா காயத்ரி ஸ்பிவாக் வேணா சேத்துக்குங்க. உங்களோட மிக விரிவான பட்டியல்ல பின்காலனியம், காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மிஸ்ஸிங்! பின்நவீனக்காரங்களுக்கு மாஜிகல் ரியலிசம்னா உசுரு. //

  அப்புறம் "அண்ணன் இலக்கியத்தில ட்ராவல் பண்றாரு"! ஏதோ என்னோட பங்கு!!....

 1. வனவராயன்.. //தமிழ்புத்தகமாயினும் அதை இரண்டு பக்கங்கள் புரட்டிவிட்டு "இருள்" அடித்தது போல் அவர் திரும்பதரும் அழகை ரசிக்க கண்கோடி வேண்டும்.//

  வாய் விட்டு சிரிச்சேன். கூட ஒர்க் பண்றவர் காரணம் கேக்குறார். நான் பின்னூட்டமடிச்சுட்டு இருக்கேன்..

  யாருப்பா அது சாத்தான்.. ரொம் சரியா சொல்றாரு... //நெருடா ரொம்பப் பழைய பேருங்க. யாராவது மொளிபேத்துப் போட்டாத்தான் அதயெல்லாம் பேசுறாங்க. அதுக்கு பதிலா காயத்ரி ஸ்பிவாக் வேணா சேத்துக்குங்க. உங்களோட மிக விரிவான பட்டியல்ல பின்காலனியம், காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மிஸ்ஸிங்! பின்நவீனக்காரங்களுக்கு மாஜிகல் ரியலிசம்னா உசுரு. //

  அப்புறம் "அண்ணன் இலக்கியத்தில ட்ராவல் பண்றாரு"! ஏதோ என்னோட பங்கு!!....